அஷ்ஷெய்க் அப்துர்ரஸ்ஸாக் பின் அப்துல் முஹ்சின் அல்அப்bபாத் அல்பத்ர் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“அல்லாஹ்வைப் பற்றி சரியாக அறிந்துகொள்ளாதிருக்கின்ற அறியாமை என்பது அபாயகரமான நோயொன்றாகும். இதுவொரு ஆட்கொல்லி நோயும் கூட! இது, இந்நோய்க்கு ஆட்பட்டவனை நிறையத் துன்பங்களுக்கும் இழிவான முடிவுகளுக்கும் கொண்டு போய்ச் சேர்க்கும். யாருக்கு இந்நோய் ஏற்பட்டு, அவன்மீது இது ஆதிக்கமும் செலுத்தி விடுகிறதோ அவனின் அழிவு குறித்து நீ கேட்டு விடாதே. இறைவனுக்கு மாறு செய்யும் விடயங்கள், பாவங்கள் என்ற அதள பாதாள இருளிலிலே இவன் போய் விழுந்து விடுகிறான்; அல்லாஹ்வின் நேரான பாதையை விட்டும் தடம்புரண்டு சென்று விடுகிறான்; சந்தேகங்கள் மற்றும் இச்சைகளின் உந்துதல்களுக்கு அடிபணிந்து விடுகிறான். எனினும் உள்ளங்களுக்கான மழையாக, பார்வைகளுக்கான ஒளியாக, நற்செயலுக்கான பலனைக் கொடுக்கும் பயன்மிகு அறிவு என்ற நன்மைக்கான திறப்பாக அல்லாஹ்வின் அருள் யாரை வந்தடைந்ததோ அவரைத் தவிர.
இந்த நோய்க்கு, அல்லாஹ்வை அறிந்துகொள்ளல் என்ற இந்த மருந்தைத் தவிர வேறு எந்த மருந்துமே இங்கு கிடையாது. எனவே, அறிவைக்கொண்டும் ஈமானைக்கொண்டும் எமது உள்ளங்களுக்கு உதவி புரியும்படியும், அறியாமை மற்றும் பகைமையிலிருந்து எம்மைப் பாதுகாக்கும்படியும் அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தித்துக் கேட்போமாக!”
{ நூல்: 'ஸியாததுல் ஈமான் வநுக்ஸானுஹு..' , பக்கம்: 238,239 }
قال الشيخ عبدالرازق بن عبدالمحسن العبّاد البدر حفظه الله تعالى:-
« الجهل بالله داء خطير ومرض فتّاك، يجرّ على صاحبه من الويلات والعواقب الوخيمة الشيئ الكثير. فمن تمكن منه هذا الداء وسيطر عليه، فلا تسأل عن هلكته. فهو هاو في ظلمة المعاصي والذنوب؛ متنكب عن صراط الله المستقيم؛ مستسلم لدواعي الشبهات والشهوات إلا أن تداركه رحمة الله بغياث القلوب ونور الأبصار ومفتاح الخير العلم النافع المثمر للعمل الصالح.
إذ ليس هناك دواء لهذا الداء غير العلم، والله المسؤول أن يغيث قلوبنا بالعلم والإيمان، ويعيذنا من الجهل والعدوان!! ».
[ المصدر: 'زيادة الإيمان ونقصانه وحكم الإستثناء فيه' ، ص - ٢٣٨،٢٣٩ ]
🌠➖➖➖➖➖➖➖➖🌠
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா