பயனுள்ள சிறிய துஆக்கள்

துஆ 1

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ أَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

யா ஹய்யூ யா கய்யூமு பிரஹ்மதிக அஸ்தகீஸு அஸ்லிஹ் லீ ஸஃனீ குல்லஹுவலா தகில்னீ இலா நஃப்ஸி தர்ஃபத அய்ன்.

என்றென்றும் வாழ்பவனே, நித்தியமான ஒருவனே, உன் கிருபையினால், என்னுடைய எல்லா காரியங்களையும் சரியான முறையில் அமைய நான் உன்னை அழைக்கிறேன். என் ஆத்மாவின் பொறுப்பை என்னிடம் கொடுத்துவிடாதே அது கண் சிமிட்டும் நொடியாக இருந்தாலும் சரி(அதாவது ..ஓர் நொடி)


துஆ 2

اَللّٰهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا ، وَزَكِّها أنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا ، أنْتَ وَلِيُّهَا وَمَوْلاَهَا

அல்லாஹூம்ம, ‘ஆத்தி நஃப்ஸி தக்வாஹா வஜக்கிஹா அன்த ஹைரு மன் ஜக்காஹா அன்த வலிய்யுஹா வ மெளலாஹா.

யா அல்லாஹ், என்னுடைய ஆன்மாவிற்கு புனித்தன்மையைத் தந்து அதனை சுத்தப்படுத்துவாயாக! நீயே ஆன்மாவை சுத்தப்படுத்துவதில் சிறந்தவன்! நீயே அதன் சிறந்த பாதுகாவலனும், பொறுப்பாளனும் ஆவாய்

 
துஆ 3

اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ مِنْ مُنْكَرَاتِ الْاَخْلَاقِ وَالْاَعْمَالِ وَالْاَھْوَاءِ

அல்லாஹும்ம இன்னி அஊதுபிக மின் முன்கராதில் ஆஹ்லாகி வல்அஃமாலி வா அல்அஹ்வா

யா அல்லாஹ்! தீய குணங்கள் , தீய செயல்கள் மற்றும் தீய ஆசைகளிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.


துஆ 4

اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ اَنْ اُشْرِكَ بِكَ وَ اَنَا اَعْلَمُ وَ اَسْتَغْفِرُكَ لِمَا لَا اَعْلَمُ

அல்லாஹும்ம இன்னி அஊதுபிக அன் உஷ்ரிக பிக வ அனா அஃலமு வ அஸ்தஃபிருக லிமா லா அஃலமு.

யா அல்லாஹ், நான் அறிந்தே உன்னுடன் எதனையும் இணைவைக்காமல் இருப்பதலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். மற்றும் நான் அறியாமல் செய்த பாவத்திலிருந்து உன்னிடம் மன்னிப்பு தேடுகிறேன்.
 

துஆ 5

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

பிஸ்மில்லாஹில்-லதி லா யதுர்ரு ம’அஸ்-மிஹி ஷய்உன் ஃபில்- அர்தி வலா ஃபிஸ்ஸமாயி வஹீவஸ் ஸமீ ‘உல்- ‘அலீம்.

அல்லாஹ்வின் திருப்பெயரால், எவரும் அவனுடைய பெயரால் பூமியிலோ அல்லது வானத்திலோ எந்தத் தீங்கும் செய்ய இயலாது,மேலும் அவனே யாவற்றையும் செவியுறுவோன், அனைத்தையும் நன்கறிபவன்
 

துஆ 6

اَللّٰهُمَّ فَقِّهْنِیْ فِی الدِّيْنِ

அல்லாஹும்ம ஃபக்கிஹ்னி ஃபித் தீன்

யா அல்லாஹ்! எனக்கு தீனை புரிந்து கொள்ளுதலை வழங்குவாயாக.


துஆ 7

اَللّٰهُمَّ اكْفِـني بِحَلالِـكَ عَنْ حَـرَامِـكَ، وَأَغْنِـني بِفَضْـلِكَ عَمَّـنْ سِـوَاك

அல்லாஹும்ம- க்ஃபினி பி ஹலாலிக ‘அன் ஹராமிக வஅஃனினி பி ஃபத்லிக ‘அம்மன் ஸிவாக்

யா அல்லாஹ்! என் தேவைக்கு சட்டத்திற்குப் புறம்பான (ஹராமானதிற்கு) பதிலாக சட்டப்படி (ஹலாலான) வாழ்வாதாரத்தை எனக்கு வழங்குவாயாக, என்னுடைய தேவைகளை போதுமானதாக்குவாயாக, மற்றும் வேறு எவரிடமும் எதுவும் எதிர்பார்க்காமல் உன்னுடைய அருளைக் கொண்டு என்னை போதுமானதாக்குவாயாக


துஆ 8

اَللّٰهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَّهُ وَجِلَّهُ، وَأَوَّلَهُ وَآخِرَهُ وَعَلَانِيَتَهُ وَسِرَّهُ

அல்லாஹீம்ம அஃபிர் லிதன்பீ குல்லஹு, திக்கஹு வ ஜில்லஹு, வ அவ்வலஹு வ ஆஹிரஹு வ ‘அலா நியதஹு வஸிர்ரஹு

யா அல்லாஹ்! என்னுடைய பெரிய மற்றும் சிறிய , முதல் மற்றும் கடைசி, அதில் வெளிப்படையான மற்றும் மறைமுகமாக செய்த பாவங்களையெல்லாம் மன்னித்து அருள்புரிவாயாக
 

துஆ 9

رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

ரப்பிஹ்ஃபிர் வர்ஹம் வ-அன்த ஹய்ருர் ராஹிமீன்

என் இரட்சகனே! என்னை மன்னித்து, இரக்கம் காட்டுவாயாக!, மேலும் இரக்கம் காட்டுபவர்களில் நீயே சிறந்தவன் !


துஆ 10

اَللّٰهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ

அல்லாஹும்ம இன்னீ அஸ்-அலுக அல்-ஜன்னா, வா மா கர்ரப இலைஹா மின் கவ்ல் அவ் அமல், வ அஊதுபிக மினன்னார் வமா கர்ரப இலைஹா மின் கவ்ல் அவ் ‘அமல்.

 யா அல்லாஹ், நான் உன்னிடம் சொர்க்கத்திற்காகவும் அதற்குரிய கூற்றுக்களையும், செயல்களையும் என்னிடம் நெருக்கமாக்குமாறும் கேட்கிறேன் மற்றும் நரகத்தில் இருந்தும் மேலும் அதற்குரிய கூற்றுக்களையும் செயல்களையும் விட்டு நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
 

துஆ 11

اَللَّهُمَّ إِنِّى أَعُوذُبِكَ مِنْ عِلْمٍِ لَّايَنْفَعُ وَمِنْ قَلْبٍِ لَّايَخْشَعُ وَمِنْ نَفْسٍِ لَّا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍِ لَّا يُسْتَجَابُ لَهَا

_அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் ‘இல்மின் லா யன்ஃப’உ வ மின் கல்பின் லா யஹ்ஷ’உ வ மின் நஃப்ஸின் லா தஸ்ப’உ வ மின் தஃவதின் லா யுஸ்தஜாபு லஹா._

யா அல்லாஹ்! நன்மையைப் பெறாத அறிவிலிருந்தும், உன்னை அஞ்சாத இதயத்திலிருந்தும், திருப்தியடையாத ஆசையிலிருந்தும் , பதில் அளிக்கப்படாத பிரார்த்தனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
 

துஆ 12

اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى

அல்லாஹும்ம இன்னீ அஸ் ‘அலுக்கல் ஹுதா வத்-துகா வல்’அஃபாஃப வல் கின

யா அல்லாஹ்! நான் உன்னிடம் நேர்வழி, பயபக்தி, பாதுகாப்பு, நல்வாழ்வு, திருப்தியையும் கேட்கிறேன்.
 

துஆ 13

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِى عَلَى دِينِكَ

யா முக்கல்லிபல் குலூபி ஸப்பித் கல்பி ‘அலா தீனிக்

இதயங்களை திருப்புபவனே (அல்லாஹ் மிக உயர்ந்தவன்), எங்கள் இதயம் உன் மார்க்கத்தின் மீது உறுதியாக இருக்க செய்வாயாக.
 

துஆ 14

رَبِّ هَبْ لِي مِنَ ٱلصَّـٰلِحِينَ

ரப்பி ஹப் லீ மினஸ் ஸாலிஹீன்.

என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக! .


துஆ 15

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

ரப்பிஜ்’அல்னீ முகீமஸ்-ஸலாதி வமின் துர்ரீயத்தீ ரப்பனா வதகப்பல் து’ஆ

(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!


துஆ16

رَبِّ ابْنِ لِي عِندَكَ بَيْتًا فِي الْجَنَّةِ

ரப்பி இப்னீ லீ ‘இன்தக பைத்தன் ஃபில் ஜன்னத்தி

இறைவனே! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!


துஆ 17
 
رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَاب

ரப்பனஹ்ஃபிர்லி வலிவாலிதய்ய வலில்முஃமினீன யவ்ம யகூமுல் ஹிஸாப்

எங்கள் இறைவா!என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக!


துஆ 18

رَبِّ نَجِّنِي مِنَ الْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ

ரப்பி நஜ்ஜினீ மினல் கவ்மி-தாலிமீன்.

என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!


துஆ 19

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

ரப்பி இன்னீ லிமா அன்ஸ(z)ல்த இல்லய்ய மின் ஹய்ரின் ஃப(f)கீர்

என் இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சயமாக நான் தேவையுள்ளவனாக இருக்கின்றேன்.
 

துஆ 20

اَللَّهُمَّ أَعِنِّيْ عَلَى ذِكْرِكَ وَشُكْرِكَ وَحُسْنِ عِبَادَتِكَ

அல்லாஹூம்ம அ’இன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக , வஹுஸ்னி இபாததிக்

யா அல்லாஹ், உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும் மேலும் மிகச் சிறந்த முறையில் உன்னை வணங்குவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக.
 

துஆ 21

اَللّٰهُمَّ اِنِّیْ اَسْئَلُکََ عِلْمًا نَّافِعًا وَرِزْقًا طَیِّبًا وَعَمَلًا مُّتَقَبَّلًا

அல்லாஹும்ம ‘இன்னீ ‘அஸ்அலுக்க இல்மன் நாஃபி ‘அன், வ ரிஜ்கன் தைய்யிபன், வ’அமலன் முத்தகப்பலன்.

யா அல்லாஹ்! பயன் தரக்கூடிய அறிவையும், சிறந்த வாழ்வாதாரத்தையும், சிறந்த அமல்களும் கிடைக்கச்செய்வாயாக
 

துஆ 22

اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَ فُجَائَةِ نِقْمَتِكَ وَجَمِيْعِ سَخَطِكَ

அல்லாஹும்ம இன்னி அ’ஊது பிக மின் ஜவாலி, நிஃமதிக்க, வ தஹவ்வுல்லி ‘ஆஃபியதிக, வ ஃபுஜாஅதி, நிக்மதிக, வ ஜமீ’இ ஸஹதிக.

யா அல்லாஹ்! நீ மறுக்கக்கூடிய விஷயங்களிலிருந்தும், பாதுகாப்பற்றதிலிருந்தும், திடீரென்று கிடைக்கக்கூடிய உன் தண்டனைகளிலிருந்தும், உனக்கு திருப்தி அளிக்காத எல்லாவற்றிலிருந்தும் பாதுகாவல் தந்தருள்வாயாக!
 

துஆ 23

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

ரப்பனா லா துஸிஃஹ் குலூபனா பஃத இத் ஹதய்தனா வஹப் லனா மில்லதுன்க ரஹ்மதன் இன்னக அன்தல் வஹ்ஹாப்.

(அன்றி அவர்கள்) “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!


துஆ 24

حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ ‘அலைஹி தவகல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அலீம்

எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை. அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி.
 

துஆ 25

رَّبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَل لِّي مِن لَّدُنكَ سُلْطَـٰنًا نَّصِيرًا

ரப்பி அத்ஹில்னி முத்ஹல சித்கின் வ அஹ்ரிஜ்னி முக்ரஜ சித்கின் வஜ்’அல் லீ மின் லதுன்க சுல்தானன்- நஸீரா.

என் இறைவனே! என்னை சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக! மேலும் சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக! மேலும் உன்புறத்திலிருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக! என்று கூறுவீராக.


துஆ 26

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

ரப்பனா ‘அலைக்க தவக்கல்னா வ இலைக்க அனப்னா வ இலைக்கல் மஸீர்

எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது.
 

துஆ 27

سُبْحَانَ ﷲ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضٰی نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَ مِدَادَ کَلِمَاتِهِ

 _ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி , ‘அதத ஹல்கிஹி, வரிதா நஃப்ஸிஹி , வஷினத அர்ஷிஹி , வமிதாத கலிமாத்திஹி_

அல்லாஹ் குறைபாடு இல்லாதவன், அவனின் புகழைக் கொண்டு தொடங்குகிறேன், அவனுடைய படைப்பினங்களின் எண்ணிக்கை அளவிற்கு, அவனது மனதின் திருப்தி அளவிற்கு, அவனது அர்ஷின் சுமை அளவிற்கு, அவனது வார்த்தைகள் பதிவு செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய மைக்கு சமமான அளவிற்கு ( அவனது புகழுக்காக).
 

துஆ 28

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَـٰسِرِينَ

ரப்பனா தலம்னா அன்ஃபுஸனா வ இன்லம் தஹ்ஃபிர்லனா வ தர்ஹம்னா லனகூனன்ன மினல் ஹாஸிரீன்

எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்.


துஆ 29

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ ٱلظَّـٰلِمِينَ

லா இலாஹா இல்லா அன்த ஸுப்ஹானக்க இன்னீ குன்த்து மினத்-தாலிமீன்

உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்.


துஆ 30
 
اَللّهُـمَّ لاَ سَـهْلَ إِلاَّ مَا جَعَلْـتَهُ سَهْـلاً، وَأَنْتَ تَجْـعَلُ الْحَزْنَ إِذَا شِـئْتَ سَهْـلاً

அல்லாஹும்ம லா ஸஹ்ல இல்லா மா ஜ’அல்தஹு ஸஹ்லன் வ அன்த தஜ்’அலுல்- ஹஸ்ன இதா ஷிஃத ஸஹ்லன்

யா அல்லாஹ் நீ லேசாக்குவதை தவிர வேறு எதுவும் லேசானது இல்லை, நீ விரும்பினால் துன்பங்களை லேசாக்கிவிடுவாய்.

அல்ஹம்துலில்லாஹ்! இதனை அனைவரும் படிக்கின்றீர்கள் என்று நம்புகிறோம், மனனம் செய்யக்கூடியவர்களுக்கு அல்லாஹ் இதனை எளிதாக்கி தருவானாக. ஆமின் 
Previous Post Next Post