மூன்று விடயங்களுடன் துர்ப்பாக்கியம் சேரமாட்டாது


*01)* தாய்க்கு உபகாரம் செய்யும்போது  துர்ப்பாக்கியம் அதனுடன்  சேரவேமாட்டாது. அல்லாஹ் கூறுகிறான்: *“எனது தாய்க்கு நன்மை செய்பவனாகவும் என்னை அவன் ஆக்கியுள்ளான். மேலும், கர்வம் கொண்டவனாகவும் துர்ப்பாக்கியமுடையவனாகவும் என்னை அவன் ஆக்கவில்லை (என்றும் இறைத்தூதர் ஈசா கூறினார்)”* (அல்குர்ஆன், 19:32)

*02)* பிரார்த்தனையுடனும் துர்ப்பாக்கியம் சேரமாட்டாது. அல்லாஹ் கூறுகிறான்: *“எனது இரட்சகனே! உன்னைப் பிரார்த்திப்பதால் நான் துர்ப்பாக்கியவானாக இருந்ததில்லை என ( இறைத்தூதர் ஸகரிய்யா ) கூறினார்”* (அல்குர்ஆன், 19:04)

        மேலும் அல்லாஹ் கூறுகிறான்: *“எனது இரட்சகனையே நான் பிரார்த்திப்பேன். என் இரட்சகனை நான் பிரார்த்திப்பதால் துர்ப்பாக்கியவானாக நான் இருக்கமாட்டேன் (என்றும் இறைத்தூதர் இப்ராஹீம் கூறினார்)”* (அல்குர்ஆன், 19:48)

*03)* அல்குர்ஆனுடனும் துர்ப்பாக்கியம் சேரமாட்டாது. அல்லாஹ் கூறுகிறான்: *“(நபியே!) நீர் துர்ப்பாக்கியமடைவதற்காக இக்குர்ஆனை உம்மீது நாம் இறக்கவில்லை”* (அல்குர்ஆன், 20:02)

         என் இரட்சகனே! துர்ப்பாக்கியவான்களில் எங்களை நீ ஆக்கிவிடாதே..

[ முகநூல்- جنات أم صهيب  ]


       لا يجتمع الشقاء بثلاث:

🔅لا يجتمع الشقاء مع برّ الوالدة. قال الله تعالى: *{ وبرّا بوالدتي ولم يجعلني جبّارا شقيّا }* « سورة مريم، الآية - ٣٢ » 

🔅ولا يجتمع الشّقاء مع الدعاء. قال الله تعالى: *{ ولم أكن بدعائك ربّ شقيّا }* « سورة مريم، الآية - ٤ »، وقال تعالى: *{وأدعو ربّي عسى ألّا أكون بدعاء ربّى شقيا}* . « سورة مريم، الآية - ٤٨ »

🔅ولا يجتمع الشّقاء مع القرآن. قال الله تعالى : *{ ما أنزلنا عليك القرآن لتشقى }* « سورة طه، الآية - ٢ ».

         ربّي لا تجعلنا من الأشقياء!

[ *فيس بوك:* جنات أم صهيب ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post