அல்லாஹ் தந்திருக்கும் அருட்கொடைகளில் கஞ்சத்தனம் காட்டாதீர்கள்


🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“தனது அருட்கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றில் கஞ்சத்தனம் செய்வோர் அது தங்களுக்கு நல்லது என்று எண்ணவே வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீயதேயாகும். எதை அவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவை அவர்களுக்கு மறுமை நாளில் கழுத்தில் வளையங்களாக மாட்டப்படும். வானங்கள், பூமி ஆகியவற்றின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியதாகும். நீங்கள் செய்பவை பற்றி அல்லாஹ் நன்கறிந்தவனாவான்”* (அல்குர்ஆன், 03:180)

          அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:-

          “அல்லாஹ்  வழங்கியிருக்கும் சொத்து செல்வம், பட்டம் பதவி, கல்வி ஆகியவற்றையும், அவன் வழங்கிய,  உபகாரமாகக் கொடுத்த ஏனையவற்றையும்   (நல்வழியில் செலவளிக்காது) தம்மிடம் தடுத்து வைத்துக்கொண்டு கஞ்சத்தனம் செய்வோர் இதை தமக்கு நல்லது என எண்ணிக்கொள்ள வேண்டாம் என்று அல்லாஹ் இங்கு குறிப்பிடுகிறான். மேலும், தான் அவர்களுக்கு வழங்கியதில் தன் அடியார்களுக்குத் தீங்கு ஏற்படாத வண்ணம் கொடுத்துதவுமாறும் அவர்களுக்கு அவன் ஏவுகிறான். ஆனால், அவர்களோ இதைக்கொண்டு கஞ்சத்தனப்பட்டுவிட்டார்கள்; கொடுக்காமல் அதைப் பிடித்து வைத்துக்கொண்டார்கள்; இதன்மூலம் அல்லாஹ்வின் அடியார்களிடம் கஞ்சத்தனம் காட்டினார்கள்; இப்படியெல்லாம் செய்துவிட்டு தமக்கு இது நல்லது என்றும் எண்ணிக்கொண்டார்கள். எனினும் இது அவர்களுக்கு அவர்களுடைய மார்க்கத்திலும், அவர்களுடைய உலக விவகாரங்களிலும், அவர்களுடைய இம்மை - மறுமை விடயத்திலும் தீங்காகவே இருக்கிறது.

*“எதை அவர்கள் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவை அவர்களுக்கு மறுமை நாளில் கழுத்தில் வளையங்களாக மாட்டப்படும்”:*

           அதாவது, (நல்வழியில் செலவழிக்காமல்) எதை அவர்கள் கஞ்சத்தனம் காட்டிார்களோ அது வளையமாக அவர்களின் கழுத்துகளில் மாட்டப்பட்டு அதைக்கொண்டு அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள். ஆதாரபூர்வமான நபிமொழியில் இவ்வாறு வந்திருக்கிறது: *“கஞ்சனின் சொத்து செல்வம் மறுமை நாளில் வழுக்கைத் தலைப் பாம்பின் உருவமாக மாற்றப்படும். அதன் கண்கள் இரண்டிற்கும் மேலால் பார்க்கப் பயங்கரமான மாதிரி இரு கறுப்பு நிற அடையாளங்கள் இருக்கும். தனது இரு கடவாய்களாலும் அவனை அது பிடித்துக்கொண்டு, 'நான்தான் உனது சொத்து செல்வம்; நான்தான் உனது புதையல்!' என்று கூறிக்கொண்டிருக்கும்.'* இதை உண்மைப்படுத்தும் முகமாக மேலே நாம் குறித்துக்காட்டிய (03:180) வசனத்தை நபியவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

      *தமது கஞ்சத்தனம் தமக்குப் பயனளிக்கும் என்றும், தமக்கு அது புகழாக இருக்கும் என்றும் அவர்கள் எண்ணிக்கொண்டார்கள். ஆனால், விடயம் அவர்கள் மீது தலைகீழாக மாறியது. அத்தோடு அது அவர்களுக்கு மிகப்பெரும் தீங்காகவும், அவர்களின் தண்டனைக்குரிய காரணியாகவும் மாறியது”.

[ நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான்..' லிஸ்ஸஃதீ, பக்கம்:141 ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               

                  

                     🎯 قال الله تعالى: *{ ولا يحسبنّ الّذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لّهم بل هو شرّ لّهم سيطوّقون ما بخلوا به يوم القيامة وللّه ميراث السّموات والأرض والّله بما تعملون خبير }* . « سورة آل عمران، الآية - ١٨٠ »

            قال العلاّمة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:-

            « أي: ولا يظنّ الّذين يبخلون، أي: يمنعون ما عندهم ممّا آتاهم الله من فضله من المال والجاه والعلم، وغير ذلك ممّا منحهم الله، وأحسن إليهم به، وأمرهم ببذل ما لا يضرّهم منه لعباده فبخلوا بذلك، وأمسكوه، وضنوا به على عباد الله، وظنّوا أنه خير لهم، بل هو شرّ لّهم في دينهم ودنياهم، وعاجلهم وآجلهم.

      *« سيطوّقون ما بخلوا به يوم القيامة »* : أي: يجعل ما بخلوا به طوقا في أعناقهم، يعذّبون به كما ورد في الحديث الصحيح: *« إن البخيل يمثّل له ماله يوم القيامة شجاعا أقرع، له زبيبتان، يأخذ بلهزمتيه يقول: أنا مالك، أنا كنزك »*، وتلا رسول الله صلّى الله عليه وسلم مصداق ذلك هذه الآية.

        فهؤلاء حسبوا أن بخلهم نافعهم، ومجد عليهم، فانقلب عليهم الأمر وصار من أعظم مضارّهم وسبب عقابهم ».

[ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسّعدي، ص - ١٤١ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

                     


Previous Post Next Post