இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“ஹலாலாக்குதல் (ஆகுமாக்குதல்), ஹராமாக்குதல் (தடை செய்தல்), வாஜிபாக்குதல் (கட்டாயமாக்குதல்) ஆகிய விடயங்களிலே இஸ்லாமிய மார்க்கத்திற்கெதிராக பொதுமக்கள் மேற்கொள்ளும் துணிகர செயல் போன்றே அறிஞர்களின் தரத்தில் அரைவாசி நிலைக்கு வந்து படித்துக்கொண்டிருக்கும் சிலரும் செய்து வருகின்றனர். இதனால், மார்க்கத்தில் தாம் அறிந்திருக்காத விடயங்களிலெல்லாம் (அறிந்திருப்பது போன்று) இவர்கள் பேசுகின்றனர்; அல்லாஹ்வின் சட்டங்க(ளைத் தெரிந்து வைத்திருக்கின்ற விடயங்)ளில் மனிதர்களிலேயே மிகப்பெரும் அறிவீனர்களாக இவர்கள் இருந்துகொண்டு மார்க்கத்தில் மூடலாகச் சொல்லப்பட்டவைகள் என்றும் இவர்கள் பேசுகின்றனர்; விரிவாகக் கூறப்பட்டவைகள் என்றும் பேசி வருகின்றனர். இவர்களில் ஒருவன் பேசுவதை நீ கேட்டால்.... (ஆச்சரியமாக இருக்கும்!). இவன், பேணுதலின்றி உறுதிபடப் பேசும் குறித்ததொரு விடயத்தில் தனக்கு 'வஹி' (இறைச்செய்தி) இறங்கியது போலவே பேசுவான். *'எனக்குத் தெரியாது'* என்றெல்லாம் பேசுவதற்கு இவனுக்கு முடியாமலே இருக்கும். தன்னை இவன் அறிஞனாக நினைத்துக்கொண்டு, தனது அறியாமையில் நிலைத்திருப்பதன் மூலம் பாமர மக்களுக்கு இவன் தீங்கிழைக்கின்றான். ஏனெனில், மக்கள் சிலவேளை இவன் கூற்றில் உறுதிகொண்டு விடுகின்றார்கள்; இவன் மூலம் அவர்கள் ஏமாற்றப்பட்டும் விடுகின்றார்கள்.
அன்புள்ள சகோதரர்களே! ஒருவர் தனக்குத் தெரியாத ஒன்றை, *'எனக்குத் தெரியாது; இதை நான் அறியமாட்டேன்; வேறொருவரிடம் இதை நீ கேட்டுத் தெரிந்துகொள்!'* என்று கூறுவது புத்திசாலித்தனமும் இறை விசுவாசமிக்க செயலாகவும் இருக்கின்ற அதேநேரம் அல்லாஹ்வை அஞ்சி, அவனை கண்ணியப்படுத்துகின்ற விடயமாகவும் அது இருந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக இதுதான் பூரண புத்திசாலித்தனமிக்க செயலுமாகும். மேலும் இது ஒருவரது இறைநம்பிக்கையின் பூரணத்துவமிக்க செயலும், தனது இரட்சகனுக்கு முன் அவர் முந்திக்கொள்ளாத வகையில் அமைந்த அல்லாஹ்வைப் பற்றிய அவரின் அச்சமுமாகவும் இருந்துகொண்டிருக்கிறது. ஆதலால் அவர், தனக்குத் தெரியாத ஒன்றை அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் அவனுக்கெதிராகப் பேசமாட்டார்.
மனிதர்களிலேயே அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பற்றி அதிகம் அறிந்தவராக நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் இருந்தார்கள். இந்நிலையில், மார்க்க சட்டம் குறித்த இறைச்செய்தி அவர்களுக்கு இறங்கியிருக்காத விடயத்தில், அவர்களிடம் கேள்வி கேட்கப்பட்டால் அதில் இறைச்செய்தி தனக்கு இறங்கும் வரை அவர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அப்போது அல்லாஹ் தனது தூதரிடம் கேட்கப்பட்ட அந்தக் கேள்விக்கு பதிலளிப்பான். *“(நபியே!) 'தமக்கு அனுமதிக்கப்பட்டவை எவை?' என அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். (அதற்கு), 'தூய்மையானவைகள் உங்களுக்கு அனுமதிக்கட்டுள்ளன' என்று நீர் கூறுவீராக!”*. (அல்குர்ஆன், 05:04). *“(நல்லாட்சி புரிந்த அரசர்) 'துல்கர்னைன்' என்பவர் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். அவர் குறித்த செய்தியை உங்களுக்கு நான் கூறுவேன் என (நபியே) நீர் கூறுவீராக!”*. (அல்குர்ஆன், 18:83).
[ நூல்: 'கிதாபுல் இல்ம்' லில்உஸைமீன், பக்கம்: 78,79 ]
قال العلاّمة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
{ إن بعض المتعلمين أنصاف العلماء يقعون فيما يقع فيه العامة من الجرأة على الشريعة في التحليل والتحريم والإيجاب فيتكلمون فيما لا يعلمون، ويجملون في الشريعة ويفصلون وهم من أجهل الناس في أحكام الله. إذا سمعت الواحد منهم يتكلم فكأنما ينزل عليه الوحي فيما يقول من جزمه وعدم تورعه، لا يمكن أن ينطق ويقول: لا أدري، ومع ذلك يصر بناء على جهله على أنه عالم فيضرّ العامة؛ لأن الناس ربما يثقون بقوله ويغترون به.
أيها الإخوة! إن من العقل والإيمان ومن تقوى الله وتعظيمه أن يقول الرجل عمّا لا يعلم لا أعلم، لا أدري، إسأل غيري، فإن ذلك من تمام العقل؛ وإن ذلك أيضا من تمام الإيمان بالله وتقوى الله حيث لا يتقدم بين يدي ربّه ولا يقول عليه في دينه ما لا يعلم، ولقد كان رسول الله صلّى الله عليه وسلم وهو أعلم الخلق بدين الله كان يسأل عمّا لم ينزل عليه فيه الوحي فينتظر حتى ينزل عليه الوحي فيجيب الله سبحانه وتعالى عمّا سئل عنه نبيّه: *( يسئلونك ماذا أحلّ لهم قل أحلّ لكم الطّيّبات )* « سورة المائدة، الآية - ٤ »، وقوله: *( ويسئلونك عن ذي القرنين قل سأتلوا عليكم منه ذكرا )* « سورة الكهف، الآية - ٨٣
[ المصدر: 'كتاب العلم' للعثيمين، ص - ٧٧، ٧٨ ]
⭕➖➖➖➖➖➖➖➖⭕
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா