🎯 அல்லாஹ் கூறுகிறான்: *“நிச்சயமாக நாம் மனிதனை அழகான அமைப்பில் படைத்தோம்.🔅பின்னர், தாழ்ந்தவர்களில் மிகத் தாழ்ந்தவனாக அவனை நாம் ஆக்கினோம்.🔅(எனினும்) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நல்லறங்களும் புரிந்தனரோ அவர்களைத் தவிர. அவர்களுக்கு முடிவுறாத கூலி உண்டு”.* (அல்குர்ஆன், 95: 04 - 06)
அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“உடலுறப்புக்கள் பொருத்தமானதாக, நேர்த்தியான அமைப்புடன், உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் தேவையாக இருந்த எந்தவொன்றும் விடுபடாத அளவுக்கு பூரணத்துவமான படைப்பாக மனிதனை அல்லாஹ் படைத்திருக்கின்றான் என்பதே இதன் விளக்கமாகும்.
எனவே, மகத்தான இந்த அருட்கொடைகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதன், அவற்றுக்கு நன்றி செலுத்தும் காரியத்தில் ஈடுபடுவது அவசியமாகும். இருப்பினும், நிறையபேர் அருட்கொடை வழங்கிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதை விட்டும் தடம்புரண்டு சென்றுவிட்டார்கள்; வீணிலும், விளையாட்டிலும் அவர்கள் ஈடுபட்டு விட்டார்கள்; அற்பத்தனமான விடயங்களுடனும், மோசமான பண்புகளுடனும் தம்மைத் திருப்திப்படுத்திக் கொண்டுவிட்டார்கள். இதனால் இவர்களை அல்லாஹ் தனக்கெதிராகப் பெருமையடித்து, அசத்தியத்தில் பிடிவாதமாக இருந்து மாறு செய்தோர் இருக்கும் இடமான நரகத்தின் கீழ்ப் பகுதியில் தாழ்ந்தவர்களிலும் மிகத் தாழ்ந்தவனில் இருக்கும்படியாக மாற்றிவிட்டான். எனினும் இறை நம்பிக்கை, நற்செயல், உயர்ந்த நற்குணங்கள் ஆகியவற்றைக்கொண்டு யாருக்கு அல்லாஹ் அருள்புரிந்தானோ அவர்கள் இதில் விதிவிலக்கானவர்களாக இருக்கின்றனர். இவ்வுயர் அந்தஸ்துகள் மூலம் இவர்களுக்கு முடுவுறாத கூலியும், நிறைவான இன்பங்களும், தொடரான சந்தோசங்களும், அதிகமான அருள்களும் உண்டு”.
{ நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான் fபீ தfப்சீரி கலாமில் மன்னான்', பக்கம் - 888 }
🎯 قال الله تبارك وتعالى: *{ لقد خلقنا الإنسان في أحسن تقويم🔅ثمّ رددناه أسفل سافلين🔅إلّا الّذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون }* « سورة التين، الآيات: ٤ - ٦ »
قال العلّامة المفسّر عبدالرحمن بن ناصر السعدي رحمه الله تعالى:-
« أي: تام الخلق، متناسب الأعضاء، منتصب القامة، لم يفقد ممّا يحتاج إليه ظاهرا أو باطنا شيئا.
ومع هذه النّعم العظيمة التي ينبغي منه القيام بشكرها. فأكثر الخلق منحرفون عن شكر المنعم، مشتغلون بالّلغو والّلعب، قد رضوا لأنفسهم بأسافل الأمور وسفساف الأخلاق. فردّهم الله في أسفل سافلين؛ أي: أسفل النار، موضع العصاة المتمرّدين على ربّهم، إلّا من منّ الله عليه بالإيمان، والعمل الصالح، والأخلاق الفاضلة العالية.
فلهم بذلك المنازل العالية أجر غير مقطوع. بل لذّات متوافرة، وأفراح متواترة، ونعم متكاثرة ».
[ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسعدي، ص - ٨٨٨ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா