ரகசியம் பேணுவது அவசியமாகும்; அது அமானிதமுமாகும்


          “ரகசியம் பேணல் என்பது, கட்டாயம் பாதுகாக்க வேண்டிய விடயங்களில் ஒன்றாகும். ரகசியத்தை வெளிப்படுத்தாது அதை  மறைக்கின்ற விடயத்தைப் பொறுத்தளவில், சந்தேகமே இல்லாமல் அது செயல்களில் வெற்றியைப் பெறுவதற்கு உதவக்கூடிய ஒன்றாகும்; செல்பவனுக்கு அவன் செல்லும் பாதைகளில் காணப்படும் அபாயங்களிலிருந்து பாதுகாப்பையும் அது வழங்குவதோடு உள்ளத்திற்கு அது  நிம்மதியையும்  கொடுக்கும்.

         எனவே, இஸ்லாத்தில் ரகசியம்  காத்தல் கட்டாயக் கடமை என்று இருக்கின்ற காரணத்தினால் ரகசியத்தைப் பாதுகாக்காது அதைப்  பரப்புகின்ற விடயம்   ஹராமானதாகவே (தடைசெய்யப்பட்டதாகவே) இருந்துகொண்டிருக்கும். காரணம், இது தீங்குகளுக்கு இட்டுச் செல்கிறது. தீங்கிழைத்தல் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதாக இருக்கின்றது.  இவ்வாறே ரகசியம் காத்தல் அமானிதமாக (நம்பிக்கையைப் பாதுகாத்தலாக) இருப்பது போல், ரகசியத்தைப் பரப்புதல் மோசடியாகவே இருந்துகொண்டிருக்கிறது.

           ரகசியத்தைப் பாதுகாக்காது அதைப் பரப்புவது கல்நெஞ்சம் ஆக்கிவிடும் அளவுக்கு கடும் குரோதத்தை உண்டுபண்ணும்; கடும் நெருக்கடியிலும் பாவத்திலும் கொண்டுபோய் அது  தள்ளி விடும்; நேசத்திற்குரியவர்களுக்கிடையில் பிரிவை ஏற்படுத்தும்; குடும்பத்தையும் அது  நாசமாக்கி விடும்; பாதுகாப்புச் சீர்குலைவுக்கும்  காரணமாகி விடும்; அத்துடன் எதிரிக்கு தனிமனிதனிடமிருந்து, அல்லது கூட்டமைப்பிடமிருந்து சாதித்துக்கொள்ளவும் முடியுமாகி விடுகிறது. ரகசியங்களைப் பாதுகாக்காது அவற்றைப் பரப்பியமையால் எத்தனை மனைவிமார்கள் விவாகரத்துச் செய்யப்பட்டிருக்கின்றார்கள்! அன்பாக இருந்த எத்தனை பேர் எதிரிகளாகி இருக்கின்றார்கள்! எத்தனை நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன!!.

            இதன் காரணமாகத்தான் ரகசியத்தைப் பரப்புவது குறித்த கடுமையான எச்சரிக்கையும், அதைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற கட்டளையும் வந்திருக்கிறது. சூரியனும், (பதினொரு) நட்சத்திரங்களும் தனக்கு 'சுஜூது' செய்வதாக (சிரம்பணிவதாக) தான் கண்ட கனவு ஒன்றை  (சிறுவராக இருந்த) யூசுப்f அவர்கள் தனது தந்தையான இறைத்தூதர் யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களிடம் தெரிவித்தபோது தந்தை மகனுக்குக் கூறிய வார்த்தையாக பின்வருமாறு  அல்லாஹ் கூறுவதை நன்கு சிந்தித்துப் பாருங்கள். *“அதற்கவர், 'என் அருமை மகனே! உனது கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அப்படி நீ கூறினால்) அவர்கள் உனக்குக் கடுமையாக சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க விரோதியாவான்' எனக் கூறினார்”*. (அல்குர்ஆன், 12:05).

          ரகசியமாக இருக்க வேண்டும் என்று  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டதை பாதுகாக்க வேண்டியதும், எப்போதுமே அதைப் பகிரங்கப்படுத்தாதிருக்க வேண்டியதும் அவருக்கு அவசியமானதாகும். அப்படி அவர் செய்யாதுவிட்டால் மோசடிக்காரராகவே அவர் கருதப்படுவார்.  அத்தோடு நம்பிக்கையாக ஒன்று ஒப்படைக்கப்பட்டு அதற்கு மோசடி செய்த நயவஞ்சகனிடம் காணப்படுகின்ற ஒப்புவமயான பண்பும் இவனிடம் இருந்துகொண்டே இருக்கும். நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:  *“நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய  நயவஞ்சகன்  ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். 1-  நம்பினால் துரோகம் செய்வான்.  2-  பேசினால் பொய்யே பேசுவான். 3-  ஒப்பந்தம் செய்தால் அதை மீறுவான். 4- விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்”*. (புகாரி - 34).

[ சஊதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள 'அல்காசிம் பதிப்பகம்' தொகுத்து வெளியிட்ட 'ஹிfப்ழுல் அஸ்ரார்' (ரகசியம் காத்தல்) எனும் சிறு நூலிலிருந்து... ]


            { السّرّ من الأمور التي يجب الحفاظ عليها، وممّا لا شك فيه أن كتمان السّرّ يساعد على النجاح في الأعمال، ويؤمّن السالك من أخطار الطريق، ويريح الضمير.

            إذا كان الحفاظ على السّرّ واجبا فإن إفشاء السّرّ حرام لأنه يؤدي إلى ضرر، والضرر ممنوع شرعا. كما أن إفشاءه يكون خيانة حيث يكون السّرّ أمانة.

         وإفشاء السّرّ موجب للضغينة، موقع في الحرج، مفرق بين الأحبّة، مخرب للأسرة، مسبب في اضطراب الأمن، ممكّن للعدوّ من النيل من الإنسان أو الجماعة. فكم من زوجة طلّقت! وكم من حبيب أصبح عدوّا! وكم من خسائر وقعت بسبب إفشاء الأسرار وعدم المحافظة عليها!؟.

           ومن أجل ذلك جاء التحذير الشديد من إفشاء السّرّ، وجاء الأمر بحفظه وصيانته. وتأمل قوله تعالى على لسان يعقوب لابنه يوسف حينما قصّ عليه رؤياه بسجود الكواكب والشمس له: *( قال يا بنيّ لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدوّ مّبين )* « سورة يوسف، الآية - ٥ ».

        وعلى من أودع سرّا أن يحافظ عليه ولا يفشيه أبدا، وإلا أصبح خائنا، وهي صفة مشبهة للمنافق الذي إذا اؤتمن على شيئ خانه، كما في حديث عبدالله بن عمر رضي الله عنهما، أن النّبي صلّى الله عليه وسلم قال: *(أربع من كنّ فيه كان منافقا خالصا؛ ومن كانت فيه خصلة منهنّ كانت فيه خصلة من النفاق حتى يدعها: إذا اؤتمن خان، وإذا حدّث كذب، وإذا عاهد غدر، وإذا خاصم فجر )* « رواه البخاري... »

[ المصدر: رسالة 'حفظ الأسرار' بتصرف، إعداد دار القاسم للنشر والتوزيع بالرياض ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم