🎯அல்லாஹ் கூறுகிறான்: *“நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூருங்கள்.🔅மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் தஸ்பீஹ் (துதி) செய்யுங்கள்”*.
(அல்குர்ஆன், 33: 41,42)
அல்குர்ஆன் விரிவுரையாளர் அல்லாமா அப்துர்ரஹ்மான் பின் நாஸிர் அஸ்ஸஃதீ ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்:-
“லா இலாஹ இல்லல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், சுப்ஹானழ்ழாஹ், அல்லாஹு அக்பர் போன்ற அல்லாஹ்வின் பக்கம் நெருக்கத்தை ஏற்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையைக்கொண்டும் தன்னை அதிகமதிகம் நினைவுகூரும்படி முஃமின்களுக்கு அல்லாஹ் இங்கு பணிக்கின்றான். இதில் ஆகக் குறைந்தது காலை - மாலை அவ்ராதுகள், ஐநேரத் தொழுகைகளுக்குப் பின் ஓத வேண்டிய அவ்ராதுகள், தேவைகளின் போதும் காரணிகளின் போதும் (ஓத வேண்டும் என பணிக்கப்பட்ட) துஆக்கள் ஆகியவற்றை ஓதுவதை இறைவிசுவாசியானவர் தொடர்ந்து கடைப்பிடித்து வர வேண்டும்.
அனைத்து நிலைகளிலுமுள்ள எல்லா நேரங்களிலும் இதைத் தொடராக ஓதி வர வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இது ஒரு வணக்கமாகும்; இதை ஓதி வருபவர் நிம்மதி பெறுகிறார்; இது அவரை அல்லாஹ்வின் நேசத்திற்கும், அவனை அறிந்து கொள்வதற்கும் அழைத்துச் செல்கிறது; அத்தோடு நன்மை செய்வதற்கும், அசிங்கமான பேச்சை விட்டும் நாவைத் தடுத்துக்கொள்வதற்கும் இது உதவியாக இருக்கிறது!”.
( நூல்: 'தய்சீருல் கரீமிர் ரஹ்மான்', பக்கம்: 667 )
🎯 قال الله تعالى: *« يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا 🔅وسبّحوه بكرة وأصيلا »* (سورة الأحزاب، الآية: ٤١،٤٢)
قال العلاّمة عبدالرحمن بن ناصر السعدي رحمه الله:-
« يأمر تعالى المؤمنين بذكره ذكرا كثيرا، من تهليل وتحميد وتسبيح وتكبير وغير ذلك من كلّ قول فيه قربة إلى الله. وأقل ذلك: أن يلازم الإنسان اوراد الصباح والمساء، ، وأدبار الصلوات الخمس، وعند العوارض والأسباب.
وينبغي مداومة ذلك في جميع الأوقات على جميع الأحوال؛ فإن ذلك عبادة ، وهو مستريح، وداع إلى محبة الله ومعرفته، وعون على الخير، وكفّ الّلسان عن الكلام القبيح ».
{ المصدر: ' تيسير الكريم الرحمن في تفسير كلام المنّان' للسعدي، ص - ٦٦٧ }
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா