நபிக்கெதிராகப் பெருமையடிப்போர் நாசத்தைப் பயந்துகொள்ளட்டும்


        அஷ்ஷெய்க் ஸாஹிர் பின் அஷ்ஷஹ்ரீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “நபிக்கெதிராகப் பெருமையடித்தல் என்பது அறியாமை, பிடிவாதம், பெருமை போன்ற காரணங்களால் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காமலிருப்பதைக் குறிக்கும்.

         நபியின் சுன்னாவை நையாண்டி செய்து கேவலப்படுத்துதல், அதை, இக்காலத்தற்குப் பொருத்தமில்லாத அற்ப விடயம் எனக் கருதுதல், அத்தோடு  சிந்தனையைக்கொண்டு அதை மறுத்தல் என்ற அடிப்படையில் நாம் செவிமடுக்கின்ற, வாசிக்கின்ற இவையெல்லாமே நபிக்கெதிராகப் பெருமையடித்தல் விடயமாகவே இருக்கின்றது. உதாரணமாக, ஒருவரிடம் நீ போய், தாடியை வளர்த்து அதைத் தொங்க விடும்படியும், ஆடையை கரண்டைக் காலுக்குக் கீழ் இழுக்காதிருக்கும்படியும், வலது கையால் சாப்பிடும்படியும் நீ  கூறுகின்றபோது,   “இஸ்லாம் தாடியில் இல்லை; அது ஆடையிலும் இல்லை;  வலது கையால் சாப்பிடுவதிலும் அது இல்லை; இவையெல்லாம் சின்னச்சின்ன  அற்பமான விடயங்கள்!” என்ற மாதிரியான வார்த்தைகளை உன் முகத்தில் அவன் சத்தமிட்டுச் சொல்வான். இதைக் கூறுபவன் சிலவேளை இஸ்லாத்திலிருந்தே வெளியேறி விடுவான்.

           இவர்களிடமும், இவர்களைப் போன்றவர்களிடமும் நாம் கேட்கின்றோம்: 'பெருமைக்காரர்களே! கொஞ்சம் நில்லுங்கள்! தனது தந்தை தனக்குத் கூறியதாக சலமா பின் அல்அக்வஃ (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இச்செய்தியைக் கேளுங்கள்: “ஒரு மனிதர் நபியவர்களிடம்  வைத்து இடது கையால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். 'உமது வலது கையால் சாப்பிடும்!' என நபியவர்கள் அவரிடம் கூற, 'தனக்கு அப்படிச் செய்ய முடியாது!' என அவர் கூறினார். ' அந்தக் கையால் எதுவும் உமக்குச் செய்ய முடியாமல் போகட்டும்!' என்று நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) கூறினார்கள். பெருமைதான் அதைச் செய்ய விடாமல் அவரைத் தடுத்தது!”.

       இம்மனிதருக்குரிய கூலி என்னவாக இருந்தது? வலது கையால் உண்பதற்குத் தடையாக இருந்த அவரது பெருமையின் இறுதி முடிவு எப்படி இருந்தது? *“அதன் பிறகு, தனது வாய் வரைக்கும் அக்கையை அவருக்கு உயர்த்திக்கொள்ள முடியாதிருந்தது*”* என ஹதீஸின் அறிவிப்பாளர் கூறுகிறார்.

         ஒரேயொரு சுன்னத்தை விட்டதற்காக இயங்க முடியாதபடி அவரின் கை சூகையாகிப் போனது. அதுதான்,  வலது கையால் அவர் உண்ணாமல் இருந்தது! இதற்கே இப்படியான தண்டனை என்றால், அதிகமான சுன்னாக்களுக்கு மாற்றம் செய்து நடப்பவனின் தண்டனை எப்படி இருக்கும்? நாகரிகமும், முன்னேற்றமும் ஆதிக்கம் செலுத்துகின்ற இந்நூற்றாண்டு என்ற எண்ணத்தில் பெருமைக்காக மார்க்கக் கடமைகளை மறுப்பவனின் நிலையு எப்படி இருக்கும்?”.

( நூல்: 'அல்கிப்ர் ', பக்கம்: 16 - 18 )

         


          قال الشيخ زاهر بن الشهري حفظه الله تعالى:-

        { الكبر على الرّسول صلّى الله عليه وسلم بأن يمتنع من الإنقياد له تكبّرا وجهلا وعنادا.

         ومن الإستكبار على النّبي صلّى الله عليه وسلم ما نسمعه ونقرأه من الإستهانة بسنّته والزعم أنها قشور لا تناسب العصر، وردّها بالعقل. فعندما تأمر أحدهم بإعفاء لحيته، وعدم إسبال ثوبه، والأكل باليمين وغيرها، يصيح في وجهك قائلا: "الدّين ليس في اللحية والثوب والأكل باليمين، هذه أمور هينة.."   وغيرها من الكلمات التي قد تخرج قائلها من الإسلام.

          وإلى هؤلاء وأمثالهم نقول لهم: يا أيها المتكبّرون! قفوا؛ واستمعوا إلى إياس بن سلمة بن الأكوع يحدّثنا أن أباه حدّثه: أن رجلا أكل عند رسول الله صلّى الله عليه وسلم بشماله، فقال له صلّى الله عليه وسلم: *« كل بيمينك! »* قال: *« لا أستطيع »* قال؟ *« لا استطعت؟ »*، ما منعه إلا الكبر »

        فما كان جزاؤه؟ وما عاقبة استكباره عن الأكل باليمين؟

         قال الرّاوي: *« فما رفعها إلى فيه »*

         لقد شلّت يده لمخالفة سنّة واحدة فقط، وهي الأكل باليمين! فكيف بمن يخالف السّنن الكثيرة؟ بل ويردّ الواجبات الشرعية تكبّرا بزعمه أنها لا تناسب القرن الحالي والتّطوّر والتّقدّم !! }

[ المصدر: 'الكبر' ، ص : ١٦ - ١٨ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم