குறைவாக இருப்பினும் தொடராகச் செய்யும் நற்செயலே அல்லாஹ்வுக்கு அதிக விருப்புக்குரியது


🔅ஆயிஷா (ரழியழ்ழாஹு அன்ஹா)  கூறுகின்றார்கள்:

          “அல்லாஹ்வின் தூதர் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடம் பாய் ஒன்று இருந்தது. அதை அவர்கள் இரவில் ஓர் அறை போன்று அமைத்துக்கொண்டு அதனுள் தொழுவார்கள். (அதில் அவர்கள் தொழும்போது) அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழலாயினர். பகலில் அந்தப் பாயை விரிப்பாக பயன்படுத்துவார்கள். ஓர் இரவில் மக்கள் கூடிவிட்டனர். அப்போது அவர்கள் "மக்களே! உங்களால் (நிரந்தரமாகச் செய்ய) முடிந்த நற்செயல்களையே கடைப்பிடித்து வாருங்கள். ஏனெனில், நீங்கள் சடையாதவரை அல்லாஹ்வும் சடைவதில்லை. *நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்!"* என்று கூறினார்கள்.

(முஸ்லிம் - 1433)

          இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

           “நற்செயலை நிலையாகவும் தொடர்ச்சியாகவும் செய்ய வேண்டும் என இந்த ஹதீஸ் தூண்டுகிறது. நிரந்தரமாகச் செய்யும் குறைவான (எண்ணிக்கையுடைய) செயல், விட்டு விட்டுச் செய்யப்படும் அதிகமான செயலை விடச் சிறந்ததாகும். ஏன் இது சிறப்புக்குரியதாக இருக்கிறது என்றால், குறைவாகச் செய்யப்படும் தொடர்ச்சியான செயலில் வழிபடுதலும் இறைநினைவும் நிலைத்திருக்கும்; அல்லாஹ் கண்காணிக்கின்றான் என்ற உணர்வு, நல்ல எண்ணம், உளத்தூய்மை, படைத்தவனுக்காக முன்னோக்கி முக்கியத்துவப்படுத்திச் செய்தல் போன்றவைகளும் தொடர்ச்சியாக இருந்துகொண்டிருக்கும்.  நிரந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் செய்து வருகின்ற குறைவான செயல், இடைக்கிடை விட்டு விட்டுச் செய்து வருகின்ற அதிகளவு செயல்கள் பெற்றுத்தராத அளவுக்கு பன்படங்கு பலன்களைப் பெற்றுத்தந்து கொண்டிருக்கும்!”.

( நூல்: 'ஷர்ஹுன் நவவீ அலா முஸ்லிம்', 06/71 )


🔅  عن عائشة رضي الله عنها قالت، قال رسول الله صلّى الله عليه وسلم: *« وَإِنَّ أَحَبَّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ مَا دُووِمَ عَلَيْهِ وَإِنْ قَلَّ  »* ( رواه مسلم - ١٤٣٣)

        قال الإمام النووي رحمه الله تعالى:

       *« فيه الحث على المداومة على العمل، وأن قليله الدائم خير من كثير ينقطع. وإنما كان القليل الدائم خيرا من الكثير المنقطع؛ لأن بدوام القليل تدوم الطاعة والذكر، والمراقبة، والنية والإخلاص، والإقبال على الخالق سبحانه وتعالى. ويثمر القليل الدائم بحيث يزيد على الكثير المنقطع أضعافا كثيرة »*

[ المصدر: شرح النووي على مسلم، ٦/٧١ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم