நோன்பின் மாண்புகள்

1. நரகிலிருந்து பாதுகாக்கும் கேடயம் :

நபிகளார்  கூறினார்கள் : 'நோன்பானது ஓர் அடியானை  நரகிலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்' (முஸ்னத் அஹ்மத்).

' அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்றால், அவரது முகத்தை அல்லாஹ் நரக நெருப்பைவிட்டு எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு தூரமாக்கிவிடுகிறான்' (புஹாரி, முஸ்லிம்)

2. சுவர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் அமல் :

 'சுவர்க்கத்தில் “ரய்யான்“ எனப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள்.  “நோன்பாளிகள் எங்கே?“ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும்.   அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! (புஹாரி, முஸ்லிம்).

3. அல்லாஹ்விடம் மன்றாடும் அமல் :

' ஓர் அடியானுக்காக நோன்பும் அல்குர்ஆனும் அல்லாஹ்விடம் மன்றாடும். 'எனது இறைவா! பகல் வேளையில் இந்த அடியானை சாப்பிடாமலும் இச்சைகளை வெளிப்படுத்தாமலும் தடுத்துவைத்திருந்தேன். எனவே இவர் விடயத்தில் எனது மன்றாட்டத்தை ஏற்றுக்கொள்' என்று நோன்பு மறுமையில் அல்லாஹ்விடம் மன்றாடும்' (முஸ்னத் அஹ்மத்).

4. சோதனைகளுக்கு விடிவு தரும் அமல்:

 'ஒருவர் தம் குடும்பத்தினர், தம் செல்வம், மற்றும் அண்டை வீட்டார் விடயத்தில் சோதனைக்குள்ளாகும்போது தொழுகை, நோன்பு, தர்மம் ஆகியவை அதற்குப் பரிகாரமாக அமையும்' (புஹாரி, முஸ்லிம்)

5. ஈருலகிலும் மகிழ்ச்சியை கொண்டுவரும் அமல் :

' நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் அடையும் மகிழ்ச்சி; (மறுமையில்) அல்லாஹ்வை சந்திக்கும் போது அடையும் மகிழ்ச்சி' (புஹாரி, முஸ்லிம்).

6. அல்லாஹ் பிரத்தியேகமாக கூலி கொடுக்கும் அமல் :

'நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன்' (புஹாரி, முஸ்லிம்).

7. நிராகரிக்கப்படாத பிரார்த்தனையை கொண்ட அமல் :

'மூவரின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வினால் நிராகரிக்கப்படமாட்டா. அவை :  நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவரின் துஆ, பயணியின் துஆ' (ஸஹீஹுல் ஜாமிஃ).

8. ஈடிணையற்ற அமல் :

'அபூ உமாமா அல்பாஹிலி (றழி) அவர்கள் கூறுகிறார்கள் : 'நான் நபிகளாரிடம் ' அல்லாஹ் எனக்கு அதிக பயன்களை தரக்கூடிய செயல் ஒன்றை சொல்லித்தாருங்கள்' என்று கேட்ட போது ' நோன்பு நோற்றுக்கொள். அதற்கு நிகராக எதுவும் இல்லை' என்று கூறினார்கள் (அஹ்மத், நஸாஈ).

9. முன் பாவங்கள் மன்னிக்கப்படும் அமல் :

'ஈமானோடும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்தும் யார் றமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்' (புஹாரி, முஸ்லிம்).

10. பொறாமை, குரோதம் என்பவற்றை நீக்கும் அமல் :

' பொறுமையின் மாதமான றமழானில் நோன்பு நோற்பதும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும் உள்ளத்திலுள்ள பொறாமை, குரோதம் என்பவற்றை நீக்கிவிடும்' (முஸ்னத் அல்பஸ்ஸார்).

ARM. ரிஸ்வான் (ஷர்கி)
أحدث أقدم