உள்நாட்டுப் பிறை நடைமுறையிலுள்ள நாடுகளில் சர்வதேசப் பிறையை ஒரு பிரிவினர் நடைமுறைப்படுத்துவது தற்காலத்தில் வாழ்ந்த மாபெரும் உலமாக்களின் வழிகாட்டலுக்கு முற்றிலும் மாற்றமானதாகும்

*இமாம் அல்பானி (றஹிமஹுல்லஹ்)*

1) அவர்கள் தனது தமாமுல் மின்னாஹ் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்:
"இஸ்லாமிய நாடுகள் (சர்வதேசப் பிறையில்) ஒன்றுபடும் வரை ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்கள் நாட்டுடனே நோன்பு பிடிக்கவேண்டும். தங்களுக்குள் பிரிந்து சிலர் தங்கள் நாட்டுடனும் வேறு சிலர் அந்த நாட்டுக்கு முன்னரோ, பின்னரோ நோன்பு பிடித்த நாடுகளுடன் நோன்பு பிடிக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன். ஏனெனில் அது சில அரபு நாடுகளில் சில வருடங்களாக நடந்து வருவதைப் போல ஒரு சமூகத்திற்குள்ளே கருத்து வேறுபாட்டின் வட்டத்தை விரிவுபடுத்துவதாக அமையும்." (398– 399)

قال الإمام ناصر الدين الألباني ( رحمه الله رحمة واسعة ) وهو ممن يرى عدم الاعتبار باختلاف المطالع  :

1- في  تمام المنة – ص398-399

وإلى أن تجتمع الدول الإسلامية على ذلك فإني أرى على شعب كل دولة أن يصوم مع دولته ولا ينقسم على نفسه فيصوم بعضهم معها وبعضهم مع غيرها ممن تقدمت في صيامها أو تأخرت لما في ذلك من توسيع دائرة الخلاف في الشعب الواحد كما وقع في بعض الدول العربية منذ بضع سنين والله المستعان .

2) இமாம் அல்பானி அவர்கள் 'ஸில்ஸிலஹ் ஸஹீஹாஹ்' என்ற தனது நூலில் கூறும் போது, "இஸ்லாமிய அரசுகள் தங்கள் ஹஜ்ஜின் நாளை எவ்வாறு ஒன்றுபடுத்தியுள்ளார்களோ அவ்வாறே தங்கள் நோன்பு   பிடிக்கும் நாளையும் பெருநாளையும் ஒன்றுபடுத்த வேண்டும் என்று நாம் கருதுகிறோம்.   அவர்கள் அந்த விடயத்தில் ஒன்றுபடும் வரை அவர்களுக்குக் கீழ் வாழும் சமூகங்கள்,   சிலர் தங்கள் நாட்டுடனும் வேறு சிலர் இன்னொரு நாட்டுடனும் நோன்பு பிடித்து   தங்களுக்குள்ளே பிளவுபடுவதை நாம் ஆதரிக்கமாட்டோம். (நாம் இவ்வாறு கூறுவது)   உஸூல் (அல் - பிக்ஹ்) கலையில் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று சிறிய பாதிப்பை   செய்து பெரிய பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளல் என்ற சட்ட விதியைச்   சார்ந்ததாகும்." 

(பாகம் 6, பக்கம் 254, ஹதீஸ் எண் 2624)

2- وفي السلسلة الصحيحة - رقم الحديث 2624 – 6/254

و نرى أن من الواجب على الحكومات الإسلامية أن يوحدوا يوم صيامهم و يوم فطرهم ، كما يوحدون يوم حجهم ، ولريثما يتفقون على ذلك ، فلا نرى لشعوبهم أن يتفرقوا بينهم ، فبعضهم يصوم مع دولته ، و بعضهم مع الدولة الأخرى ،وذلك من باب درء المفسدة الكبرى بالمفسدة الصغرى كما هو مقرر في علم الأصول . والله تعالى ولي التوفيق.

அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பலரும் இப்பிரச்சினை சம்பந்தமாக கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்கள் அளித்த பதில்களும் ஆடியோக்களில் பதிவாகியுள்ளன. அவை இணையத்திலும் உள்ளன. அந்த ஆடியோக்கள் أهل الحديث والأثر என்ற இணைய தளத்தில் எழுத்து வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அவற்றின் சில பகுதிகளின் தமிழ் மொழிபெயர்ப்பை கீழே தருகிறோம்.

அல்பானி றஹிமஹுல்லாஹ் கூறினார்கள் (குரல் பத்வா-1):


பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தங்கி வாழக்கூடியவர் -அவர் அரபு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்- அவர் எந்த பிரதேசத்தில் வாழ்கிறாரோ அந்த பிரதேசத்தை விட்டும் நோன்பில் வித்தியாசப்படக் கூடாது. ஏனெனில் அரபு நாட்டுடன் அவர் நோன்பு பிடிப்பது கருத்து வேறுபாட்டை இன்னும் அதிகரிக்கும். மனிதர்களுக்கிடையில் இருக்கும் கருத்து வேறுபாட்டைக் குறைப்பதே கட்டாயமாகும். அதனை அதிகப்படுத்துவது  அனுமதிக்கப்பட்ட விடயமல்ல...

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு இதே சட்டமா? என்று ஷெய்க் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ஆம் என்று பதில் கூறினார்கள்.

அல்பானி -றஹிமஹுல்லாஹ்- கூறினார்கள் (குரல் பத்வா-2): 

நாங்கள் தனிப்பட்ட முஸ்லிம்கள் என்ற வகையில் முழு இஸ்லாமிய உலகையும் ஒரே நாளில் நோன்பு பிடிக்க வைப்பது எங்கள் சக்திக்கு உட்பட்ட காரியமல்ல. இதனால் நாம் ஸஹீஹான ஒரு ஹதீஸை நடைமுறைப்படுத்துவது எங்கள் மீது கடமையாகும். அதுதான் "மனிதர்கள் நோன்பு நோற்கும் நாளில்தான் உங்கள் நோன்பு அமைந்திருக்கும்; மனிதர்கள் பெருநாள் எடுக்கும் நாளில்தான் உங்கள் பெருநாளும் அமைந்திருக்கும்" என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றாகும். நீர் இந்த நாடுகளில் வாழ்பவனாக இருந்தால் அவர்களுடன் சேர்ந்து நோன்பு நோற்று அவர்களுடன் சேர்ந்து பெருநாள் எடுத்துக்கொள். இந்த நாடுகளை நோன்பில் முந்தும் அல்லது பிந்தும்  சவூதியிடனோ ஏனைய நாடுகளுடனோ உன்னுடைய முடிவை தொடர்பு படுத்திக்கொள்ள வேண்டாம்... நாம் புதிதாக ஒரு பிரிவினையை  உண்டு பண்ண வேண்டிய அவசியமில்லை. ...


அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் குரல் பத்வா-3:


நான் சொல்வது யாதெனில்: முடியுமான அளவு கருத்து வேறுபாட்டை தடுப்பது ஷரீஅத்தின் அடிப்படை விதிகளில் உள்ளதாகும். ஒரு நாட்டின் பிறை அடிப்படையில் அனைத்து முஸ்லிம்களும் நோன்பு நோற்பது தான் அடிப்படை என்று இப்போது நாம் கூறினோம். ஆனால் இது நடைமுறையில் இல்லை. எனவே ஒரே நாட்டுக்குள் இந்த அடிப்படையை நாம் கடைபிடிக்க முற்பட்டால் (சர்வதேசத்தை ஒன்று படுத்துதல் என்ற) எமது சக்திக்கு அப்பாற்பட்ட பிரிவினையை விட விசாலமானதாக பிரிவினையின் வட்டம் மாறிவிடும். ... பிரிவினையின் வட்டத்தை சுருக்க வேண்டும் என்பதற்காக நாம் சொல்கிறோம்: எந்த ஒரு அறிஞரும் குறிப்பிடாத அடிப்படையான ஒரு முரண்பாட்டை நாம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் நாம் இருக்கும் நாட்டுடன் நோன்பு பிடிப்போம்...


அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் குரல் பத்வா-4:

ஷெய்க் அல்பானி அவர்களிடம் ஒருவர் கேட்கிறார்:

உஸ்தாத் அவர்களே ஒருவர் தனக்கு சூழுள்ள சமூகம் அல்லாத வேறு ஒரு சமூகத்துடன் நோன்பு பிடிக்க முடியுமா? 

ஷெய்க் அவர்களின் பதில்: முடியாது; அவ்வாறு செய்வது கூடாது.
பிக்ஹ் மஸாஇல்களில்  முடியுமான அளவு புரிந்துணர்வும் நெருக்கமும் ஏற்படுவது கட்டாயம்.... சிறிய பாதிப்பை செய்து பெரும் பாதிப்பை தடுத்துக் கொள்வதற்காக ஒரு நாட்டவர் வேறு ஒரு நாட்டுடன் நோன்பு பிடிக்க வேண்டாம் என்று சொல்லப்படவேண்டும். இதனால் எங்களிடம் இல்லாத ஒரு பிரிவினை ஏற்படுகிறது. எந்த அளவுக்கு என்றால் அடிப்படை விடயங்களில் ஒரு ஸலபிக்கும் ஸலபியல்லாத ஒருவருக்கும் ஏற்படுவது போன்று

ஒரே வீட்டுக்குள்ளே வேறுபாடு ஏற்படுகிறது. இவர் ஸவூதியுடன் நோன்பு நோற்கின்றார் அவருடைய தந்தை நாட்டுடன் நோன்பு நோற்கின்றார். எனவே இது கூடாது. 

...

கேள்வி கேட்டவர் பின்வருமாறு கேட்கிறார்: சரி ஒரு வாதத்திற்கு எந்த பிரச்சினையோ, வேறுபாடோ, விளைவோ ஏற்படவில்லை என்று வைத்துக்கொள்வோமே? என வினவுகிறார். 

அதற்கு ஷெய்க் அவர்கள்: நீர் கற்பனை பண்ண வேண்டாம்; நாங்கள் அனுபவத்தில் அறிந்ததையே உமக்கு சொல்கிறோம். ஒரு வாதத்துக்கு அதனை கூடும் என்று நாம் சொன்னால் நீர் என்ன பயனைத்தான் அடைந்துகொள்ளப் போகிறாய்? மாத இறுதியில் பிரச்சினை ஏற்படும்; இங்கே 29ஆவது நாளாக இருக்கும் போது அங்கே பெருநாளாக இருக்கும். இவன் யாருடன் எவ்வாறு பெருநாள் எடுக்கப் போகிறான். அமல்கள் அவற்றுடைய இறுதி எவ்வாறு அமைகிறது என்பதை பொறுத்தே அமைந்திருக்கும்.  எனவே இவன் தன்னுடைய நாட்டு மக்களுடன் தான் நோன்பு பிடிக்க வேண்டும். அங்கே தவறு நடந்தால் அம்மக்கள் அந்தத் தவறின் பாவத்தை சுமந்து கொள்ள மாட்டார்கள்...


அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களின் குரல் பத்வா-5:


"பிறையைக் கண்டு நோன்பு பிடியுங்கள்" என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களின் கூற்று முழு உம்மத்திற்குமான  கட்டளையாக இருக்கிறது என்பது எங்களிடத்தில் பலமான நிலைப்பாடாக இருந்தாலும்கூட...

ஒவ்வொரு நாடும் அந்நாட்டு மக்கள் நோன்பு பிடிக்கும் பொழுது நோன்பு பிடிக்க வேண்டும் என்றே இதுபோன்ற பிரச்சினையில் நாம்  ஃபத்வா கொடுக்கிறோம்...


*பிறையைத் தீர்மானிக்கும் பொறுப்பாளர் அல்லது பிறைக் குழு பித்அத்வாதிகளாக இருந்தால் அவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லையா?*


பிறையை தீர்மானிப்பவர் முஸ்லிமாக இருந்து, பிறையுடன் சம்பந்தப்பட்ட இஜ்திஹாத்-ஆய்வுக்குட்பட்ட விடயங்களில் இஸ்லாமிய அறிஞர்களின் ஏதாவது ஒரு கருத்தின் அடிப்படையில் தீர்மானிப்பவராக அவர் இருந்தால் அவருக்கு கட்டாயமாக கட்டுப்பட வேண்டும். அவர் ஸுன்னாஹ்வாதியாக  இருந்தாலும் பித்அத்வாதியாக இருந்தாலும் சரியே. இங்கு நாம் அவரின் பித்அத்தை பார்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த விடயம் இஜ்திஹாதிற்குரிய விடயம் என்பதையே கவனிக்க வேண்டும். பிறை விடயத்தில் ஆட்சியாளரோ அல்லது ஆட்சியாளர் இல்லாத இடத்தில் ஆட்சியாளரின் வேலையை செய்பவரோ பித்அத்வாதியாக இருந்தால் அவருக்கு கட்டுப்படக் கூடாது என்பது இஸ்லாத்திற்கு முரணான நிலைப்பாடாகும். ஆட்சியாளராக இருந்தாலும் பாவமான விடயத்தில் நாம் அவருக்கு கட்டுப்படக் கூடாது. இஜ்திஹாதிற்குரிய விடயத்தில் கட்டுப்பட்டே ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக பிறை விடயத்தில் மக்களை மையப்படுத்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஹதீஸைக் கூறியுள்ளார்கள். அதனை நடைமுறைப்படுத்துவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயமாகும். அதனை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அதனடிப்படையில் பிறை விடயத்தில் ஏற்படும் இஜ்திஹாதிற்குரிய கருத்துக்களில் எவரும் தனித்து செயல்பட முடியாது. தான் வாழும் சமூகத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம்களுக்கு உடன்பட வேண்டும். அதற்கு மாற்றமாக நடப்பது அந்த ஹதீஸை புறக்கணித்ததாகவே அமையும். எங்களுடன் வாழும் மக்கள் முஸ்லிம்களாக இருந்தால் இஜ்திஹாதிற்குட்பட்ட பிறை விடயங்களில் அவர்களுக்கு நாம் உடன்படுவது கட்டாயமாகும். அவர்கள் பித்அத்வாதிகளாக இருந்தாலும் சரியே. இஜ்திஹாதுக்கு உட்படாத தீர்க்கமாக மார்க்கத்தில் சொல்லப்பட்ட விடயங்களில் அவர்கள் மார்க்கத்திற்கு மாற்றமான ஒரு தீர்மானத்தை எடுத்தால், உதாரணமாக மாதத்தை 25 நாட்கள் அல்லது 35 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம் என்று தீர்மானித்தால் அப்போது நாம் அவர்களுக்கு கட்டுப்படத் தேவையில்லை. அவ்வாறு எந்த  முஸ்லிம்களும் சொல்வதும் இல்லை. இதனை ஷெய்க் அல்பானி றஹிமஹுல்லாஹ் அவர்களும் தனது பத்வாக்களில் தெளிவாக விளக்கியுள்ளார்.

இந்த உம்மத்தில் எல்லாக் காலத்திலும் பிறையை தீர்மானிப்பவர்களாக ஸுன்னாஹ்வாதிகள் தான் இருந்தார்கள் என்பதில்லை. ஸலபுஸ் ஸாலிஹீன்களின் காலத்துக்குப் பிறகுலிருந்து இன்றுவரை அதிகமான இடங்களில் பித்அத்வாதிகளிடமே இதுபோன்ற பொறுப்புகள் இருக்கின்றன. இதனால் இவர்களுக்கு கட்டுப்படக் கூடாது என்று எந்த ஒரு ஸுன்னஹ்-ஸலஃபி இமாமும் கூறவில்லை.

*மேற்படி விடயத்தில் ஷெய்க் அல்பானி அவர்கள் வழங்கிய இரண்டு பத்வாகளை உங்களுக்கு முன்வைக்கின்றோம்.*

பத்வா-1: 

ஒரு கூட்டம் மக்காஹ்வுடன் நோன்பு நோற்கின்றனர். மற்றவர்கள் நாட்டுடன் நோன்பு நோற்கின்றனர். அவர்கள் சூஃபிகளாக இருக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட போது, எப்படி இருந்தாலும் இது இஜ்திஹாதுக்குரிய ஒரு விடயமில்லையா? என்று அவர்கள் கேட்டுவிட்டு பின்வருமாறு பதில் கூறினார்கள்: இவ்வாறு செய்வதை நாம் சரிகாண மாட்டோம். இதனால் ஒரே நாட்டுக்குள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவு ஏற்படும். (பிறையில்) ஒரே நாட்டுக்குள் மக்கள் பிளவுபடுவதை விட நாடுகள் பிளவுபடுவது  குறைவான பாதிப்பைத் தான் ஏற்படுத்தும். மாக்காவையோ மதீனாஹ்வையோ அடிப்படையாக வைத்து நோன்பு பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஷரீஅத்தில் இல்லை... 


பத்வா-2: 

கசகிஸ்தான் ஒரு இஸ்லாமிய குடியரசாக இருந்தாலும் நோன்பு மற்றும் பெருநாளை தீர்மானிப்பதில் அவர்கள் குறிப்பாக துருக்கியை தக்லீது செய்கிறார்கள் அல்லது கண்மூடித்தனமாக இஜ்திஹாத் செய்கிறார்கள்; அவர்கள் எந்த அளவுக்கு ஹனபி மத்ஹபில் பிடிவாதமாக இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். முப்தியே நோன்பையும் பெருநாளையும் தீர்மானிக்கிறார். அவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் முஸ்லிம்கள்; மார்க்க விடயங்களை கையாளும் மத்திய நிலையம் ஒன்றும் ஒரு முஃப்தியும் ஒரு இஸ்லாமிய கூட்டமைப்பும் அவர்களுக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் அவர்களுடன் சேர்ந்து நோன்பு பிடிக்க முடியுமா என்ற அர்த்தத்தில் ஷெய்க் அல்பானி அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ஷெய்க் அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்: 

இந்த முஃப்தி அஹ்லுஸ்ஸுன்னஹ்களால் பின்பற்றப்படும் மத்ஹபுகளில் ஏதேனும் ஒரு மத்ஹப் அடிப்படையில் தீர்ப்பு வழங்கினால் அவரை இந்த விடயத்தில் பின்தொடர வேண்டும். அவ்வாறு அவர் செய்யாவிட்டால் அவரை பின் தொடரக் கூடாது. 

(அஹ்லுஸ்ஸுன்னாஹ் அறிஞர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுள்ள, இஜ்திஹாதிற்குட்பட்ட விடையங்களில் பிறையைத் தீர்மானிப்பவர் ஏதேனும் ஒரு கருத்தின் அடிப்படையில் செயல்பட்டால் அவருக்கு கட்டுப்பட வேண்டும். அதற்கு மாற்றமாக இஜ்திஹாதிற்கு இடமில்லாத விடயங்களில் அவர் சுயமாக தீர்ப்பு வழங்குபவராக இருந்தால் அதனை நாம் ஏற்கத் தேவையில்லை என்பதை இமாமவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்).


*முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் அங்குள்ள அதிகாரபூர்வப் பிறை குழுவோ அல்லது பிறைக்குப் பொறுப்பானவரோ இஸ்லாமிய நாட்டிலுள்ள அரசாங்கத்தின் இடத்தில் இருக்கின்றனர்.*

1- இமாம் இப்னு பாஸ் உள்ளடங்கலான சவுதி உலமாக்களின் ஆய்வு சபைத் தீர்மானம்:

கேள்வி: இஸ்லாமிய நாடு அல்லாத ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ரமழான், ஷவ்வால்,  துல் ஹஜ் பிறைகளை தீர்மானித்துக் கொள்வதற்கு ஒரு குழுவை அமைத்துக் கொள்வது கூடுமா? கூடாதா?

பதில்: *அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இஸ்லாமிய நாடு அல்லாத ஒரு நாட்டில் வாழும் முஸ்லிம்கள் ரமழான், ஷவ்வால்,  துல் ஹஜ் பிறைகளை தீர்மானிக்கும் பொறுப்பை செய்யும் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துக் கொள்வது கூடும்...* 
 
 1- اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء  
 
سؤال: هل يجوز للمسلمين الذين يقيمون في بلد ليس بإسلامية أن يشكلوا لجنة تقوم بإثبات هلال رمضان وشوال وذي الحجة أم لا ؟ 
الجواب: الحمد لله . المسلمون الموجودون في بلد غير إسلامية يجوز لهم أن يشكلوا لجنة من المسلمين تتولى إثبات هلال رمضان وشوال وذي الحجة . وبالله التوفيق وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم. 
اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء 
الرئيس: عبد العزيز بن عبد الله بن باز
نائب رئيس اللجنة: عبد الرزاق عفيفي  
عضو: عبد الله بن قعود 
عضو: عبد الله بن غديان  
(سؤال رقم 2511, فتاوى اللجنة الدائمة 10/112)

2- கனடாவிலும் அமெரிக்காவிலும் இருக்கும் மக்களுக்கு மேற்படி ஆய்வுக்குழு வழங்கிய மற்றுமொரு ஃபத்வாவில் பின்வருமாறு கூறுகிறார்கள்:

அல்லஜ்னாஹ் அத்தாஇமாஹ் லில் புஹூஸ் அல்-இல்மிய்யாஹ் வல்இப்தா” வாகிய நாம் கருதுவது யாதெனில்: *மேற்படி முஸ்லிம் மாணவர் ஒன்றியம், மேற்படி இஸ்லாமிய அரசு இல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு பிறையைத் தீர்மானிக்கும் விடயத்தில் ஒரு இஸ்லாமிய அரசின் இடத்தில் இருக்கின்றது. இருவேறுபட்ட கருத்துக்களில் ஒன்றை தேர்வு செய்யும் உரிமை அவர்களுக்கு இருக்கின்றது; அங்குள்ள முஸ்லிம்கள் அதனை கடைபிடிப்பது கட்டாயமாகும்...*

2- في فتاوى اللجنة الدائمة (10 / 109-112) 
الفتوى رقم ( 1657 ) 
...
وترى اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء أن اتحاد الطلبة المسلمين في الدول التي حكوماتها غير إسلامية يقوم مقام حكومة إسلامية في مسألة إثبات الهلال بالنسبة لمن يعيش في تلك الدول من المسلمين. وبناء على ما جاء في الفقرة الثانية من قرار مجلس الهيئة يكون لهذا الاتحاد حق اختيار أحد القولين: إما اعتبار اختلاف المطالع، وإما عدم اعتبار ذلك، ثم يعمم ما رآه على المسلمين في الدولة التي هو فيها، وعليهم أن يلتزموا بما رآه وعممه عليهم؛ توحيدا للكلمة، ولبدء الصيام وخروجا من الخلاف والاضطراب...

اللجنة الدائمة للبحوث العلمية والإفتاء 
الرئيس: عبد العزيز بن عبد الله بن باز 
نائب رئيس اللجنة: عبد الرزاق عفيفي 
عضو: عبد الله بن قعود  
عضو: عبد الله بن غديان

3- இமாம் இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் பிறை கருத்து வேறுபாட்டைப் பற்றி குறிப்பிடும் பொழுது பின்வருமாறு கூறுகிறார்கள்:

*முஸ்லிம் அல்லாத நாடுகளில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் அங்கு ஒரு அமைப்போ, அலுவலகமோ, இஸ்லாமிய நிலையமோ இருக்கும் பட்சத்தில் அவர்கள் அவை சொல்வதின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும்...* 
 
3- قال الفقيه العلامة محمد بن صالح بن عثيمين  
في الشرح الممتع على زاد المستقنع (6/  312) : 
مسألة: الأقليات الإسلامية في الدول الكافرة، إن كان هناك رابطة، أو مكتب، أو مركز إسلامي؛ فإنها تعمل بقولهم، وإذا لم يكن كذلك، فإنها تخيَّر، والأحسن أن تتبع أقرب بلد إليها.

மற்றுமொரு பத்வாவில்:
ஒரு நாட்டில் காணும் பிறை அடுத்த நாடுகளுக்கு செல்லுபடியாகாது என்பது துல்ஹஜ் மாதத்தின் பிறையையும் கட்டுப்படுத்துமா? என்று இப்னு உஸைமீன்  (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது பின்வருமாறு பதில் கூறுகிறார்கள்:
*ரமழானிலும்தான் ரமலான் அல்லாத மாதங்களிலும்தான் பிறையின் உதிப்பு பூமியின்  ஒரு இடத்திற்கும் இன்னொரு இடத்திற்கும் இடையில் வித்தியாசப்படும். அதனால் எல்லா மாதங்களுக்கும் ஒரே சட்டம்தான். ஆனாலும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் மக்கள் அங்குள்ள  இஸ்லாமியர்களின் தலைவர் சொல்வதையே பின்பற்ற வேண்டும்; அனைத்து மக்களும்  ஒருமித்த முடிவில் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். ஏனெனில் இந்த விடயம் (கருத்துவேறுபாடுக்குட்பட்ட) விசாலத் தன்மை கொண்டதாகும்...*

وفي مجموع فتاوى ورسائل الشيخ ابن عثيمين (١٩/٤٣): رسالة: بسم الله الرحمن الرحيم

سماحة الشيخ محمد بن صالح العثيمين حفظكم الله 
السلام عليكم ورحمة الله وبركاته 
فقد اطلعنا على فتوى سماحتكم في كتاب «فتاوى إسلامية» حول رؤية الهلال في بلد لا تلزم جميع البلاد بأحكامه. 
فهل ينطبق هذا على رؤية هلال عيد الأضحى (شهر ذي الحجة) أفيدونا مأجورين. 
بسم الله الرحمن الرحيم 
وعليكم السلام ورحمة الله وبركاته 
الهلال تختلف مطالعه بين أرض وأخرى في رمضان وغيره، والحكم واحد في الجميع، لكني أرى أن يتفق الناس على شيء واحد، وأن يتبعوا ما يقوله أمير الجالية الإسلامية في بلاد غير المسلمين؛ لأن الأمر في هذا واسع إن شاءالله، حيث إن بعض العلماء يقول: متى ثبتت رؤية الهلال في بلد الإسلام في أي قطر لزم الحكم جميع المسلمين في جميع الأقطار الإسلامية. كتبه محمد الصالح العثيمين في15/2/1421هـ.

இமாம் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் அவர்கள் முஸ்லிமல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கு செய்த உபதேசத்தில் பின்வருமாறு கூறுகிறார்கள்:
...அம்முஸ்லிம்களின் நோன்பும் பெருநாளும் ஒன்றாக இருக்கவேண்டும். அவர்களை வழிநடத்தும் மார்க்க மத்திய நிலையத்தையே அவர்கள் பின்பற்ற வேண்டும். அவர்களுக்கிடையில் பிரிந்துவிடக் கூடாது. அது ஸஊதியை விட அல்லது ஏனைய இஸ்லாமிய நாடுகளை விட பிந்தி விட்டாலும் சரியே. அவர்களுடைய மத்திய நிலையம் சொல்வதை அவர்கள் பின்பற்றட்டும்.
(மஜ்மூஉல் பதாவா - இப்னுல் உஸைமீன், 19/51)

وقال أيضا في مجموع فتاواه (١٩/٥١): ... وأن يكون صومهم واحداً وفطرهم واحداً، وهم يتبعون المركز الذي عندهم أعني المركز الديني الذي يوجه من تحت نظره من المسلمين وأن لا يتفرقوا حتى لو تأخر صومهم عن صوم المملكة، أو أي بلاد إسلامية أخرى فليتبعوا ما يقوله المركز.

4- மதீனஹ் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களைக் கொண்ட ஆய்வுக்குழுவால் தயாரிக்கப்பட்டு அதன் கல்வி ஆய்வகம் வெளியிட்டுள்ள அர்கானுல் இஸ்லாம் என்ற நூல் பின்வருமாறு கூறுகிறது:

*இஸ்லாமிய ஒற்றுமையை பேணும் முகமாக ஒவ்வொரு நாட்டிலும் (அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடுள்ள) நோன்பை தீர்மானிக்கும் விடயம் அந்நாட்டின் பொது ஆட்சித் தலைவருக்கு விடப்படும். நோன்பு நோற்பது அல்லது நோற்காமல் இருப்பது என்று அவர் தீர்மானித்தால்  அவருக்கு கட்டுப்படுவது கட்டாயமாகும். ஆட்சியாளர் முஸ்லிமாக இல்லாதிருந்தால் இஸ்லாமிய நிலையத்தின் மஜ்லிஸ் அல்லது அது போன்றவை  வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.*

وفي كتاب أركان الإسلام: ويُجعل أمر الصيام في كل دولة إلى ولي الأمر العام للدولة، فإن حكم بالصيام أو عدمه وجبت طاعته، فإن لم يكن ولي الأمر مسلماً يُعمل بما يحكم به مجلس المركز الإسلامي -أو نحوه- في البلاد محافظة على الوحدة الإسلامية.

(17/  25) أركان الإسلام – إصدار عمادة البحث العلمي - الجامعة الإسلامية بالمدينة المنورة

5- ஷெய்க் பர்கூஸ் அவர்களின் ஃபத்வா

… மேலே குறிப்பிட்ட விடயங்களில் இருந்து புரிந்து கொள்ள வேண்டியது யாதெனில்: *நோன்பை ஆரம்பிப்பது, முடித்துக் கொள்வது, உழுஹிய்யாஹ் கொடுப்பது, பெருநாள் கொண்டாடுவது போன்ற ஒரு கூட்டு வணக்கத்தில் தனிப்பட்டவர்களின் கருத்துக்களுக்கு இடமில்லை. அவர்களுக்கு அவற்றில் தனித்துச் செயல்படும் உரிமையும் கிடையாது. அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமாஅத் அல்லாத வேறு ஒரு ஜமாஅத்தைப் பின்தொடரவும் அவர்களுக்கு உரிமை இல்லை. (கருத்து வேறுபாடுள்ள விடயத்தில்) நோன்பு நோற்பதையும் விடுவதையும் தீர்மானிக்கும் அதிகாரம் ஆட்சித் தலைவருக்கும், _தான் வாழும் ஜமாஅத்திற்கும் தான் இருக்கிறது_ .*

5- الشيخ أبو عبد المعز محمد علي فركوس حفظه الله تعالى: 
... ومنه يفهم أنه في العبادة الجماعية كالصوم والإفطار والأضحية والتعييد ونحوها لا عبرة فيها للآحاد، وليس لهم التفرّد فيها، ولا أن يتبعوا الجماعة غير الجماعة التي يتواجدون بينهم، بل الأمر فيها إلى الإمام والجماعة التي وجد معهم صومًا وإفطارًا....
الجزائر في 11 رمضان 1427هـ 
الموافق ل 4 أكتوبر 2006م


6. *இமாம் இப்னு பாஸ் (றஹிமஹுல்லாஹ்)*

1) சவூதி போன்ற ஒரு இஸ்லாமிய நாட்டில் ரமளான் மாதம் ஏற்பட்டு விட்டதாக அறிவிப்புச் செய்யப்பட்டு நான் வாழும் நாட்டில் அது அறிவிக்கப்படவில்லை என்றால் சவூதியில் ரமளான் ஏற்பட்டதை அடிப்படையாகக் கொண்டு நாம் நோன்பு பிடிக்கவேண்டுமா? அல்லது எமது நாட்டில் ரமளான் ஆரம்பித்து விட்டதாக அறிவிக்கப்படும் போது அவர்களுடன் சேர்ந்து நோன்பு பிடித்து அவர்களுடன் சேர்ந்து பெருநாள் எடுக்கவேண்டுமா என்று இப்னு  பாஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பத்வா வழங்குகிறார்கள்.    
பதில் :- ஒரு முஸ்லிம் எந்த நாட்டில் இருக்கிறானோ அந்த நாட்டுடனே நோன்பு பிடிக்கவும் பெருநாள் எடுக்கவும் வேண்டும். 
(மஜ்மூஃ பதாவா இப்னு பாஸ்: பாகம் :- 15, பக்கம் :- 103 – 104)

2) ரமழான் மற்றும் ஷவ்வால் தலைப்பிறை பாகிஸ்தானில் சவூதியை விட இரண்டு நாட்கள் தாமதித்தே தென்படுவதாகவும் நாங்கள் சவூதியுடன் நோன்பு பிடிக்க வேண்டுமா? அல்லது பாகிஸ்தானுடன் நோன்பு பிடிக்க வேண்டுமா? என்று அல்லாமஹ் இப்னு பாஸ் (றஹிமஹுல்லாஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பின்வருமாறு பதிலளிக்கிறார்கள்.
"இத்தூய மார்க்த்தின் சட்டமாக எமக்கு தெளிவாவது என்னவெனில் நீங்கள் உங்களுடன் இருக்கும் முஸ்லிம்களுடன் நோன்பு பிடிப்பதே உங்கள் மீது கட்டாயமாகும். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1- "நீங்கள் நோன்பு பிடிக்கும் நாளில் தான் நோன்பு; நீங்கள் நோன்புப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் நோன்புப் பெருநாள்; நீங்கள் ஹஜ்ஜுப் பெருநாள் எடுக்கும் நாளில் தான் ஹஜ்ஜுப் பெருநாள்" என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
எனவே நீரும் உமது சகோதரர்களும் பாகிஸ்தானில் இருக்கும் காலத்தில் அவர்கள் நோன்பு பிடிக்கும் போதே நீங்களும் நோன்பு பிடிக்க வேண்டும். அவர்கள் பெருநாள் எடுக்கும் போதே நீங்களும் பெருநாள் எடுக்க வேண்டும். ஏனெனில் நீங்களும் மேற்படி ஹதீஸிற்கு உட்படுகிறீர்கள். மேலும் பிறை தென்படுவது இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது. அறிஞர்களில் ஒரு பிரிவினர் ஒவ்வொரு நாட்டு மக்களும் பிறை காணவேண்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இப்னு அப்பாஸ் (றலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இக்கருத்தையே கொண்டிருந்தார்கள்.

2- நோன்பு மற்றும் பெருநாளில் உங்களுடன் இருக்கும் முஸ்லிம்களுக்கு நீங்கள் மாறுபடுவது குழப்பத்தை ஏற்படுத்தும். மக்கள் மத்தியில் கேள்விக்கும் மறுப்புக்கும் வழிவகுக்கும். கருத்து முரண்பட்டு பிரச்சினைபடுவதையும் வாக்குவாதப்படுவதையும் தூண்டக் கூடியதாக அமையும். இம்முழுமையான இஸ்லாமிய மார்க்கம், ஒற்றுமைப்படுவதையும், உடன்படுவதையும், நல்ல காரியத்திலும், இறை அச்சகத்திலும், ஒத்துழைப்பதையும் முரண்பட்டுப் பிரச்சினைப்படுவதைத் தவிர்ப்பதையும் தூண்டுகிறது. இதனால் தான் "அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" பிரிந்து விடாதீர்கள் என அல்லாஹ் கூறுகிறான். மேலும் (நீங்கள் இருவரும் நன்மாராயம் கூறுங்கள்; வெறுப்படையச் செய்யாதீர்கள். உடன்பட்டு நடந்து கொள்ளுங்கள், பிளவுபட்டு நடக்காதீர்கள்) என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், முஆத் (றலியல்லாஹு அன்ஹு) அவர்களையும் அபூ மூஸா (றலியல்லாஹுஅன்ஹு) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்த போது உபதேசம் செய்தார்கள்.
(பார்க்க:- மஜ்மூஃ பதாவா இப்னு பாஸ்: பாகம்:- 15, பக்கம்:- 103 – 104)
من فتاوى الإمام الفقيه ابن باز (رحمه الله رحمة واسعة):
1- في مجموع فتاوى ابن باز (15 / 102)
س: إذا ثبت دخول شهر رمضان في إحدى الدول الإسلامية كالمملكة العربية السعودية، وأعلن ذلك، ولكنه في الدولة التي أقيم بها لم يعلن عن دخول شهر رمضان، فما الحكم ؟ هل نصوم بمجرد ثبوته في المملكة أم نفطر معهم ونصوم معهم متى ما أعلنوا دخول شهر رمضان ؟ وكذلك بالنسبة لدخول شهر شوال - أي يوم العيد - ما الحكم إذا اختلف الأمر في الدولتين؟ وجزاكم الله عنا وعن المسلمين خير الجزاء   .
ج : على المسلم أن يصوم مع الدولة التي هو فيها ، ويفطر معها ؛ لقول النبي صلى الله عليه وسلم: « الصوم يوم تصومون، والفطر يوم تفطرون، والأضحى يوم تضحون »   . وبالله التوفيق.
 
2- وفي مجموع فتاوى ابن باز أيضا (15 / 103- 104)
س: ذكرتم أن الرؤية في الباكستان لهلال رمضان وشوال تتأخر بعد السعودية يومين ، وسألتم : هل تصومون مع السعودية أو مع الباكستان ؟
ج : الذي يظهر لنا من حكم الشرع المطهر أن الواجب عليكم الصوم مع المسلمين لديكم ؛ لأمرين:
أحدهما: قول النبي صلى الله عليه وسلم : «الصوم يوم تصومون، والفطر يوم تفطرون، والأضحى يوم تضحون»   خرجه أبو داود وغيره بإسناد حسن ، فأنت وإخوانك مدة وجودكم في الباكستان ينبغي أن يكون صومكم معهم حين يصومون ، وإفطاركم معهم حين يفطرون ؛ لأنكم داخلون في هذا الخطاب، ولأن الرؤية تختلف بحسب اختلاف المطالع. وقد ذهب جمع من أهل العلم منهم ابن عباس رضي الله عنهما إلى أن لأهل كل بلد رؤيتهم.
الأمر الثاني: أن في مخالفتكم المسلمين لديكم في الصوم والإفطار تشويشا ودعوة للتساؤل والاستنكار وإثارة للنزاع والخصام، والشريعة الإسلامية الكاملة جاءت بالحث على الاتفاق والوئام والتعاون على البر والتقوى وترك النزاع والخلاف ؛ ولهذا قال تعالى: {وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا} وقال النبي صلى الله عليه وسلم لما بعث معاذا وأبا موسى رضي الله عنهما إلى اليمن : « بشرا ولا تنفرا وتطاوعا ولا تختلفا ».

-ஸுன்னாஹ் அகாடமி
Previous Post Next Post