பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டிய இஸ்லாமியக் கேள்விகளும் பதில்களும்



1- உமது இறைவன் யார்?

பதில்: எனது இறைவன் அல்லாஹ். 

ஆதாரம்: அல்லாஹ் கூறுகிறான்: 
{கூறுவீராக: “அல்லாஹ்வே எல்லாவற்றிற்கும் இறைவனாக இருக்கும் நிலையில், அவனல்லாதவரை இறைவனாக நான் தேடுவேனா?}
[அல்குர்ஆன் 6:164]

س١: مَنْ رَبُّكَ؟

الجَوَابُ: رَبِّيَ اللهُ،  وَالدَّلِيلُ:  قَولُ اللهِ تَعَالَى:   ﴿ قُلْ أَغَيْرَ اللهِ أَبْغِي رَبّاً وَهُوَ رَبُّ كُلِّ شَيْءٍ ﴾   [الأنعام:١٦٤]


2- உம்மைப் படைத்தது யார்?

பதில்: அல்லாஹ்தான் என்னையும் அனைத்துப் படைப்பினங்களையும் படைத்தவன்.

ஆதாரம்: அல்லாஹ் கூறுகிறான்: 
{அல்லாஹ் ஒவ்வொன்றினதும் படைப்பாளன். மேலும், அவன் ஒவ்வொன்றினதும் பாதுகாவலன்.}
[அல்குர்ஆன் 39:62]

س ٢: مَنْ الَّذِي خَلَقَكَ؟
الجَوَابُ: اللهُ الَّذِي خَلَقَنِي وَخَلَقَ جَمِيعَ المخْلُوقَاتِ، وَالدَّلِيلُ
قَولُهُ تَعَالَى:  ﴿ اللهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ ﴾   [الزُّمَر:٦٢]


3- எதற்காக அல்லாஹ் எங்களைப் படைத்திருக்கிறான்?

பதில்: அவனை வணங்குவதற்காகவே அவன் எம்மைப் படைத்திருக்கின்றான்.

ஆதாரம்: அல்லாஹ் கூறுகின்றான்: 
{மனிதர்களையும் ஜின்களையும் என்னை வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை.} 
[அல்குர்ஆன் 51:56]

س ٣: لماذَا خَلَقَنَا اللهُ؟

الجَوَابُ: خَلَقَنَا لِعِبَادَتِهِ، وَالدَّلِيلُ قَولُهُ تَعَالَى:  ﴿ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيعْبُدُون ﴾   [الذاريات:٥٦]


4- அல்லாஹ் மாத்திரம்தான் வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பது ஏன்?

பதில்: அல்லாஹ் மாத்திரமே வணக்கத்திற்குத் தகுதியானவன். ஏனெனில்,
1- அவன் மாத்திரமே இந்த உலகத்திலுள்ள ஒவ்வொன்றையும் படைத்துப் பரிபாலிக்கின்றான். அந்த வகையில் அவனே எங்களுக்குத் தேவையான அனைத்து அருட்பாக்கியங்களையும் அருளியுள்ளான்.
2- அவன் மாத்திரமே எந்தக் குறைகளுமற்ற பூரணமான பண்புகளுக்குச் சொந்தக்காரனாக இருக்கின்றான்.

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகின்றான்: 
﴿رَّبُّ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَٱلۡأَرۡضِ وَمَا بَیۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَـٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِیࣰّا﴾ [مريم ٦٥] 
வானங்களுக்கும், பூமிக்கும் அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளுக்கும் (அவனே படைத்துப் பரிபாலிக்கின்ற) இரட்சகனாவான், ஆதலால், அவனையே நீர் வணங்குவீராக! அவனை வணங்குவதில் நீர் பொறுமையாக இருப்பீராக! (அவனது பண்புகளில்) அவனுக்கு ஒப்பானவனை நீர் அறிவீரா? (அவற்றில் அவனுக்கு நிகராக எவருமே இல்லை)
(அல்குர்ஆன் 19:65)


5- எங்களது வணக்கம் அல்லாஹ்வுக்குத் தேவையா? 

பதில்: அல்லாஹ்வுக்கு நாங்கள் அவனை வணங்க வேண்டும் என்ற தேவை இல்லை. அல்லாஹ் எந்தத் தேவையுமற்றவன். எங்கள் வணக்கம் எங்களுக்குத்தான் பயனளிக்கும்.

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகின்றான்:
﴿ِإن تَكْفُرُوا فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنكُمْ وَلَا يَرْضَى لِعِبَادِهِ الْكُفْرَ وَإِن تَشْكُرُوا يَرْضَهُ لَكُمْ﴾ [الزُّمَر:٧]
(அவனை) நீங்கள் நிராகரித்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ், உங்களைவிட்டும் தேவையற்றவன், இன்னும், தன் அடியார்களிடத்தில் நிராகரிப்பை அவன் பொருந்திக்கொள்வதில்லை, மேலும், நீங்கள் (அவனை வணங்கி) நன்றி செலுத்தினால், உங்களுக்காக அதனை அவன் பொருந்திக்கொள்வான்.
(அல்குர்ஆன் 39:7)

﴿ياأيُّها النّاسُ أنْتُمُ الفُقَراءُ إلى اللَّهِ واللَّهُ هو الغَنِيُّ الحَمِيدُ﴾ [فاطر: ١٥] 
மனிதர்களே! நீங்கள்தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்கள்; அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், புகழுக்குரியவனுமாவான்!
(அல்குர்ஆன் 35:15)


6- அல்லாஹ்வை வணங்குவதால் எங்களுக்குக் கிடைக்கும் பயன் என்ன?

பதில்: இம்மையில் மன நிம்மதி, மன வலிமை போன்றவையும், மறுமையில் சுவனமும் கிடைக்கும். 
- இன்னும் ஏராளமான இம்மை மறுமை பாக்கியங்களும் கிடைக்கும்.

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகின்றான்:
﴿لِلَّذِينَ أحْسَنُوا في هَذِهِ الدُّنْيا حَسَنَةٌ ولَدارُ الآخِرَةِ خَيْرٌ﴾ [النحل: ٣٠]
இவ்வுலகில் நன்மை செய்தோருக்கு (இவ்வுலகில்) நன்மையே உள்ளது. நிச்சயமாக மறு உலகம் (இதை விடவும்) மிகச் சிறந்தது. 
[அல்குர்ஆன் 16:30]

﴿مَنۡ عَمِلَ صَـٰلِحࣰا مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰ وَهُوَ مُؤۡمِنࣱ فَلَنُحۡیِیَنَّهُۥ حَیَوٰةࣰ طَیِّبَةࣰۖ وَلَنَجۡزِیَنَّهُمۡ أَجۡرَهُم بِأَحۡسَنِ مَا كَانُوا۟ یَعۡمَلُونَ﴾ [النحل ٩٧] 
ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் நற்செயல்களைச் செய்கிறார்களோ, நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க வாழ்க்கை வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில், இவ்வுலகில்) அவர்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்காக அவர்களது கூலியை நிச்சயமாக நாம் அவர்களுக்குக் கொடுப்போம்.
[அல்குர்ஆன் 16:97]


7- அல்லாஹ்வை எவ்வாறு வணங்க வேண்டும்?

பதில்: இக்லாஸுடனும் நபி ﷺ அவர்கள் வழிகாட்டிய முறையிலும் வணங்க வேண்டும்.

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகின்றான்:
﴿وَمَاۤ أُمِرُوۤا۟ إِلَّا لِیَعۡبُدُوا۟ ٱللَّهَ مُخۡلِصِینَ لَهُ ٱلدِّینَ حُنَفَاۤءَ﴾ [البينة ٥] 
அவர்கள் அல்லாஹ்வுக்காகவே வழிபாட்டைக் கலப்பற்றதாக ஆக்கியவர்களாக, இணைவைப்பை விட்டும் நீங்கிய ஏகத்துவவாதிகளாக, அவனை வணங்க வேண்டும் என்றே தவிர அவர்கள் கட்டளையிடப்படவில்லை.
[அல்குர்ஆன் 98:5]

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 
«مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ». 
யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு அமலைச் செய்கிறாரோ அது மறுக்கப்பட்டதாகும்.
 صحيح مسلم 1718


8- தீங்கை நீக்குவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்கிறாரா?

பதில்: அல்லாஹ்வைத் தவிர தீங்கை நீக்குவர் எவரும் இல்லை.

ஆதாரம்: அல்லாஹ் கூறுகின்றான்:
﴿ وَإِنْ يَمْسَسْكَ اللهُ بِضُرٍّ فَلا كَاشِفَ لَهُ إِلاَّ هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلا رَادَّ لِفَضْلِهِ ﴾ [يونس:١۰٧]
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதனை நீக்குபவர் யாருமில்லை. மேலும், உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது கொடையைத் தடுப்பவர் யாரும் கிடையாது. 
[அல்குர்ஆன் 10:107]


9- அல்லாஹ்வைத் தவிர மறைவான அறிவை அறியக்கூடிய யாரும் இருக்கிறார்களா?

பதில்: அல்லாஹ்வைத் தவிர மறைவான விடயங்களை எவரும் அறியமாட்டார்கள்.

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகின்றான்:
﴿قُلْ لا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللهُ﴾ [النمل:٦٥]
(நபியே) கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைவானதை அறிய மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 27:65]


10- அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன?

பதில்: அவனை மாத்திரம் வணங்க வேண்டும்; அவனுக்கு யாரையும் எதையும் இணையாக்கக் கூடாது.

ஆதாரம்: 
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: 
فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى الْعِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلَا يُشْرِكُوا بِهِ شَيْئًا، وَحَقَّ الْعِبَادِ عَلَى اللَّهِ أَنْ لَا يُعَذِّبَ مَنْ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا
அடியார்கள் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமை யாதெனில்: அவனை வணங்குவதும் அவனுக்கு எந்த ஒன்றையும் இணைவைக்காமல் இருப்பதுமாகும். அல்லாஹ் அடியார்களுக்குச் செய்யும் கடமை யாதெனில்: அவனுக்கு எந்த ஒன்றையும் இணை வைக்காதவர்களை வேதனை செய்யாமல் இருப்பதாகும். [புகாரி 2856, முஸ்லிம் 30]


11- எம் மீதுள்ள மிக முக்கியமான கடமையும், முதல் கடமையும் எது?

பதில்: அதுதான் தவ்ஹீத் எனும் ஏகத்துவமாகும்.

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகிறான்:
﴿وَمَاۤ أُمِرُوۤا۟ إِلَّا لِیَعۡبُدُوۤا۟ إِلَـٰهࣰا وَ ٰ⁠حِدࣰاۖ لَّاۤ إِلَـٰهَ إِلَّا هُوَۚ سُبۡحَـٰنَهُۥ عَمَّا یُشۡرِكُونَ﴾ [التوبة ٣١]
ஒரே வணக்கத்துக்குரிய நாயனை வணங்குமாறே அன்றி அவர்கள் கட்டளையிடப்படவில்லை. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (யாரும்) இல்லை. அவர்கள் இணைவைப்பவையை விட்டும் அவன் மிகப் பரிசுத்தமானவன்.
[அல்குர்ஆன் 9:31]

عن ابْن عَبَّاسٍ : لَمَّا بَعَثَ النَّبِيُّ ﷺ مُعَاذًا نَحْوَ الْيَمَنِ، قَالَ لَهُ : " إِنَّكَ تَقْدَمُ عَلَى قَوْمٍ مِنْ أَهْلِ الْكِتَابِ، فَلْيَكُنْ أَوَّلَ مَا تَدْعُوهُمْ إِلَى أَنْ يُوَحِّدُوا اللَّهَ تَعَالَى... خ ٧٣٧٢
நபி ﷺ அவர்கள் முஆத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்களை யமன் நாட்டிற்கு இஸ்லாத்தைப் போதிப்பதற்காக அனுப்பி வைத்த பொழுது, பின்வரும் கூறினார்கள்: "அவர்கள் அல்லாஹ்வை ஓர்மைப்படுத்த வேண்டும் என்பதின் பக்கமே நீர் அவர்களை முதலாவதாக அழைக்க வேண்டும்". (புகாரி 7372)


12- நபிமார்கள் மனிதர்களுக்கு முதலாவது போதித்தது எது?

பதில்: அதுதான் தவ்ஹீத் எனும் ஏகத்துவமாகும். 

ஆதாரம்:
அல்லாஹ் கூறுகிறான்:
﴿وَلَقَدۡ بَعَثۡنَا فِی كُلِّ أُمَّةࣲ رَّسُولًا أَنِ ٱعۡبُدُوا۟ ٱللَّهَ وَٱجۡتَنِبُوا۟ ٱلطَّـٰغُوتَۖ﴾ [النحل ٣٦]
அல்லாஹ்வை வணங்குங்கள், (அவனல்லாத வணங்கப்படும்) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்று (போதிக்கும்) ஒரு தூதரை ஒவ்வொரு சமூகத்திலும் நிச்சயமாக அனுப்பியிருக்கிறோம்.
[அல்குர்ஆன் 16:36]

﴿وَمَاۤ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِیۤ إِلَیۡهِ أَنَّهُۥ لَاۤ إِلَـٰهَ إِلَّاۤ أَنَا۠ فَٱعۡبُدُونِ﴾ [الأنبياء ٢٥] 
(நபியே!) உமக்கு முன்னர் நாம் எந்தவொரு தூதரையும், “நிச்சயமாக வணக்கத்திற்குரிய நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று அவருக்கு வஹ்ய் அறிவித்தே தவிர  அனுப்பவில்லை.
[அல்குர்ஆன் 21:25]


13- தவ்ஹீத் (ஏகத்துவம்) என்றால் என்ன?

பதில்: தவ்ஹீத் என்பது அல்லாஹ்வை அவனுக்கே உரிய தனித்துவமான விடயங்களில் ஓர்மைப்படுத்துவதாகும்.

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகிறான்:
﴿رَّبُّ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَٱلۡأَرۡضِ وَمَا بَیۡنَهُمَا فَٱعۡبُدۡهُ وَٱصۡطَبِرۡ لِعِبَـٰدَتِهِۦۚ هَلۡ تَعۡلَمُ لَهُۥ سَمِیࣰّا﴾ [مريم ٦٥] 
வானங்களதும், பூமியினதும் அவற்றுக்கிடையே உள்ளவையினதும் இரட்சகன் (அவனே); எனவே, அவனையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில்  (கஷ்டங்களைத் தொடர்ந்தும்) பொறுத்துக் கொள்வீராக! அவனுக்கு ஒப்பானவனை நீர் அறிவாயா?
[அல்குர்ஆன் 19:65]


14- கலிமதுத் தவ்ஹீத் - தவ்ஹீதின் வார்த்தை என்பது எது?

பதில்: 
لا إله الا الله
"லா இலாஹ இல்லல்லாஹ்" என்பதாகும்.


15- "லா இலாஹ இல்லல்லாஹ்" என்பதன் அர்த்தம் என்ன?

பதில்:  அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான நாயன் யாருமில்லை

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகிறான்:
﴿قُلۡ یَـٰۤأَهۡلَ ٱلۡكِتَـٰبِ تَعَالَوۡا۟ إِلَىٰ كَلِمَةࣲ سَوَاۤءِۭ بَیۡنَنَا وَبَیۡنَكُمۡ أَلَّا نَعۡبُدَ إِلَّا ٱللَّهَ وَلَا نُشۡرِكَ بِهِۦ شَیۡـࣰٔا وَلَا یَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا أَرۡبَابࣰا مِّن دُونِ ٱللَّهِۚ﴾ [آل عمران ٦٤] 
(நபியே! அவர்களிடம்) கூறுவீராக! “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே பொதுவான ஒரு வார்த்தையின் பக்கம் வாருங்கள்; (அதாவது) *நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எதையும் இணையாக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்”.
[அல்குர்ஆன் 3:64]

﴿ذَ ٰ⁠لِكَ بِأَنَّ ٱللَّهَ هُوَ ٱلۡحَقُّ وَأَنَّ مَا یَدۡعُونَ مِن دُونِهِۦ هُوَ ٱلۡبَـٰطِلُ﴾ [الحج ٦٢] 
நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். நிச்சயமாக அவர்கள் அவனையன்றி (இறைவனென) அழைப்பவை யாவும் பொய்யானவை ஆகும்...
[அல்குர்ஆன் 22:62]


16- "லா இலாஹ இல்லல்லாஹ்" இன்
றுக்ன்கள் (பிரதான பகுதிகள்) எத்தனை?
அவை யாவை?

பதில்: அதன் றுக்ன்கள் இரண்டாகும். 

அவை:
1- மறுத்தல்: 
"லா இலாஹ" (வணக்கத்திற்குரிய நாயன் இல்லை) என்பது அல்லாஹ்வைத் தவிரவுள்ள அனைத்தும் வணக்கத்திற்குத் தகுதியற்றவை என்று மறுப்பதைக் குறிக்கும்.

2- நிலை நாட்டுதல்:
"இல்லல்லாஹ்" (அல்லாஹ்வைத் தவிர) என்பது அல்லாஹ் மாத்திரமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை உறுதி செய்வதை - நிலைநாட்டுவதைக் குறிக்கும்.

ஆதாரம்: 
﴿قُلۡ إِنَّمَا هُوَ إِلَـٰهࣱ وَ ٰ⁠حِدࣱ وَإِنَّنِی بَرِیۤءࣱ مِّمَّا تُشۡرِكُونَ﴾ [الأنعام ١٩] 
(நபியே!) கூறுவீராக! "நிச்சயமாக அவனே   வணக்கத்துக்குரிய ஒரே நாயன். நிச்சயமாக நான் நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் முற்றாக நீங்கிக் கொண்டவன்" .
[அல்குர்ஆன் 6:19]


17- "லா இலாஹ இல்லல்லாஹ்" வின் நிபந்தனைகள் யாவை?

பதில்: அதற்கு எட்டு நிபந்தனைகள் இருக்கின்றன. இந்நிபந்தனைகள் இல்லாத வெறும் வார்த்தை பயனளிக்காது.

- அவை: 
1- அறிதல், 
2- உறுதிகொள்ளல், 
3- இக்லாஸ் 
4- உண்மைத் தன்மை 
5- நேசம் 
6- ஏற்றுக்கொள்ளல் 
7- கட்டுப்படல் 
8- மாற்றமானதை நிராகரித்தல்

ஆதாரம்: 
1- அறிதல்: அதன் கருத்தை அறிந்து கொள்ள வேண்டும். அதில் அறியாமை இருக்கக் கூடாது.
﴿فَٱعۡلَمۡ أَنَّهُۥ لَاۤ إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ﴾ [محمد ١٩]
"அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை" என்பதை அறிந்து கொள்வீராக!
[அல்குர்ஆன் 47:19]
عن عثمان بن عفان رضي الله عنه، أن النبي ﷺ قال: مَن ماتَ وهو يَعْلَمُ أنَّه لا إلَهَ إلّا اللَّهُ، دَخَلَ الجَنَّةَ. رواه مسلم ٢٦
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை" என்று அறிந்தவராக எவர் மரணிக்கிறாரோ அவர் சுவனம் நுழைவார். (முஸ்லிம் 26)

2- உறுதிகொள்ளல்: அதன் அர்த்தத்தை உறுதியாக நம்ப வேண்டும். அதில் சந்தேகம் இருக்கக் கூடாது. 
﴿إِنَّمَا ٱلۡمُؤۡمِنُونَ ٱلَّذِینَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَرَسُولِهِۦ ثُمَّ لَمۡ یَرۡتَابُوا۟﴾ [الحجرات ١٥]
நம்பிக்கை கொண்டவர்கள் யாரெனில் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்பி பின்னர் சந்தேகம் கொள்ளாதோரே...
[அல்குர்ஆன் 49:15]

3- இக்லாஸ்: வணக்கத்தை அல்லாஹ்வுக்கு மாத்திரம் செய்ய வேண்டும். அதில் எந்த ஒரு ஷிர்க்கும் முகஸ்துதியும் இருக்கக் கூடாது.
فَٱعۡبُدِ ٱللَّهَ مُخۡلِصࣰا لَّهُ ٱلدِّینَ﴾ [الزمر ٢]
(இணைவைப்பதில் இருந்து) வழிபாட்டைத் தூய்மையாக்கியவனாக அல்லாஹ்வை வணங்குவீராக!
[அல்குர்ஆன் 39:2]
عن أبي هريرة رضي الله عنه، عن النبي ﷺ قال: أسْعَدُ النَّاسِ بشَفَاعَتي يَومَ القِيَامَةِ، مَن قالَ لا إلَهَ إلَّا اللَّهُ، خَالِصًا مِن قَلْبِهِ. رواه البخاري ٩٩
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் எனது பரிந்துரைக்கு மனிதர்களில் தகுதியானவர் யாரெனில், தன் உள்ளத்திலிருந்து தூய்மையாக, "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாரும் இல்லை" என்று கூறியவராவார். (புகாரி 99)

4- உண்மைத்தன்மை: உள்ளத்தால் உண்மையாகச் சாட்சிசொல்ல வேண்டும். முனாஃபிக்களின் சாட்சியத்தைப் போன்ற நாவினால் மாத்திரம் சொல்லப்படும் பொய்யான சாட்சியமாக இருக்கக் கூடாது. 
عن أنس رضي الله عنه، عن النبي ﷺ قال: ما مِن أحَدٍ يَشْهَدُ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ وأنَّ مُحَمَّدًا رَسولُ اللَّهِ، صِدْقًا مِن قَلْبِهِ، إلَّا حَرَّمَهُ اللَّهُ علَى النَّارِ. رواه البخاري ١٢٨
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரிய நாயன் யாரும் இல்லை என்றும் முஹம்மத் ﷺ அல்லாஹ்வின் தூதர் என்றும் எவர் தனது உள்ளத்தில் இருந்து உண்மையாகச் சாட்சி கூறுகின்றாரோ அவரை (நிரந்தர) நரகத்திற்கு (செல்வதிலிருந்து) அல்லாஹ் தடைசெய்துவிடுவான். (புகாரி 128)

5- நேசம்: அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அவன் நேசிப்ப வற்றையும் நேசிக்க வேண்டும். அவனில் எந்த வெறுப்பும் இருக்கக் கூடாது.  
﴿وَمِنَ ٱلنَّاسِ مَن یَتَّخِذُ مِن دُونِ ٱللَّهِ أَندَادࣰا یُحِبُّونَهُمۡ كَحُبِّ ٱللَّهِۖ وَٱلَّذِینَ ءَامَنُوۤا۟ أَشَدُّ حُبࣰّا لِّلَّهِۗ﴾ [البقرة ١٦٥] 
அல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணைகளாக வைத்துக்கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதைப் போல நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்; ஆனால் (அவர்களை விட) நம்பிக்கை கொண்டவர்களே அல்லாஹ்வை அதிகம் நேசிப்பவர்கள்.
[அல்குர்ஆன் 2:165]

6- ஏற்றுக் கொள்ளல்: அல்லாஹ்வுடைய தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனை மறுக்கக்கூடாது. 
﴿إِنَّمَا كَانَ قَوۡلَ ٱلۡمُؤۡمِنِینَ إِذَا دُعُوۤا۟ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِیَحۡكُمَ بَیۡنَهُمۡ أَن یَقُولُوا۟ سَمِعۡنَا وَأَطَعۡنَاۚ وَأُو۟لَـٰۤىِٕكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ﴾ [النور ٥١] 
முஃமின்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் தீர்ப்புக்கூறுவதற்காக வேண்டி, அவர்கள் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் அழைக்கப்பட்டால், “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான் முஃமின்களின் கூற்றாக இருக்கும்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியாளர்கள்.
[அல்குர்ஆன் 24:51]

7- கட்டுப்படல்: அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, அவனது கட்டளைகளைப் பின்பற்றி எடுத்து நடக்க வேண்டும். அவனுடைய கட்டளைகளை முழுமையாக விட்டு விடக்கூடாது.
﴿۞ وَمَن یُسۡلِمۡ وَجۡهَهُۥۤ إِلَى ٱللَّهِ وَهُوَ مُحۡسِنࣱ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰ﴾ [لقمان ٢٢] 
எவன் தன் முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கமே திருப்பி, நன்மை செய்து கொண்டிருக்கிறானோ, அவன் நிச்சயமாக உறுதியான கயிற்றைப் பலமாக பற்றிக் கொண்டான்.
[அல்குர்ஆன் 31:22]

8- மாற்றமானதை நிராகரித்தல்: அல்லாஹ் அல்லாத வணங்கப்படுகின்ற அனைத்தும் வணங்குவதற்கு தகுதியற்றவை என்று நிராகரிக்க வேண்டும்.
﴿فَمَن یَكۡفُرۡ بِٱلطَّـٰغُوتِ وَیُؤۡمِنۢ بِٱللَّهِ فَقَدِ ٱسۡتَمۡسَكَ بِٱلۡعُرۡوَةِ ٱلۡوُثۡقَىٰ لَا ٱنفِصَامَ لَهَاۗ﴾ [البقرة ٢٥٦]
எவர் (அல்லாஹ்வை அன்றி வணங்கப்படும்) தாகூத்தை  நிராகரித்து விட்டு, அல்லாஹ்வை விசுவாசிக்கிறாரோ அவர் திட்டமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டார்...
[அல்குர்ஆன் 2:256]


18- தவ்ஹீதின் வகைகள் எத்தனை? அவை யாவை?

பதில்: தவ்ஹீத் மூன்று வகைகள்.

அவை:
1- அர்-றுbபூபிய்யஹ்
2- அல்-உலூஹிய்யஹ்
3- அல்-அஸ்மா வஸ்-ஸிபாத்


19- தவ்ஹீதுர்-றுபூபிய்யஹ் என்றால் என்ன?

பதில்: அல்லாஹ் மாத்திரமே அனைத்தையும் திட்டமிட்டு, படைத்து, ஆட்சிசெய்து கொண்டிருப்பவன் என்று நம்புதல். அவனது நாட்டத்திற்கு மாற்றமாக எந்த ஒன்றும் நடக்காது.

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகிறான்:
﴿أَلَا لَهُ الخَلْقُ وَالأَمْرُ﴾ [الأعراف ٥٤]
படைப்பும், கட்டளையும் அவனுக்கே உரியன.
[அல்குர்ஆன் 7:54]


20- தவ்ஹீதுல் உலூஹிய்யஹ் என்றால் என்ன? 

பதில்: அல்லாஹ் மாத்திரமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்று நம்பி, வணக்கத்தை அவனுக்கு மாத்திரமே செய்வதாகும்.

ஆதாரம்: அல்லாஹ் கூறுகிறான்:
﴿وَاعْبُدُوا اللهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيئًا﴾ [النساء ٣٦]
அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள்.
[அல்குர்ஆன் 4:36]


21- தவ்ஹீதுல் அல்-அஸ்மா வஸ்-ஸிபாத் என்றால் என்ன?

பதில்: அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்களும் உயர்ந்த பண்புகளும் இருக்கின்றன. அவற்றைத் திரிபுபடுத்தாமலும், மறுக்காமலும், எவ்வாறு என்று ஒப்பிடாமலும், உவமை கூறாமலும் ஏற்றுக் கொள்வதாகும்.
 
ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகிறான்:
﴿لَيْسَ كَمِثْلِهِ شَيءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ﴾ [الشورى:١١]
அவனைப் போன்று எதுவும் இல்லை. அவன் மிகவும் செவிமடுப்பவனும் பார்ப்பவனும். 
[அல்குர்ஆன் 42:11]


22- "லா இலாஹ இல்ல_ல்லாஹ்" என்ற வார்த்தை எந்த வகைத் தவ்ஹீதைக் குறிக்கின்றது?

பதில்: அது 'தவ்ஹீதுல் உலூகியஹ்'வைக் குறிக்கின்றது. அதாவது வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ் மாத்திரமே; அவன் அல்லாத யாரும், எதுவும் வணங்கப்படக்கூடாது; வணக்கத்தில் அவன் ஓர்மைப்படுத்தப்பட - ஏகத்துவப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


23- நபிமார்கள் 'லா இலாஹ இல்ல-ல்லாஹ்' என்ற தவ்ஹீதுல் உலூஹிய்யஹ்வை முதல் முதலில் தமது சமூகத்திற்கு எடுத்துச் சொன்னதற்கான காரணம் என்ன?

பதில்: 
1- மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் அல்லாஹ்வை மாத்திரம் வணங்க வேண்டும் என்ற கொள்கையான தவ்ஹீதுல் உலூகிய்யஹ்வுக்காகத்தான்.

2- பொதுவாக உலகில் வாழ்ந்த பெரும்பாலான சமூகங்கள் இந்த உலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்ற சர்வ வல்லமையுடைய ஒரு இறைவன் இருக்கின்றான் என்ற தவ்ஹீதுர் றுபூபிய்யஹ்வின் அடிப்படையை ஏற்றிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தவ்ஹீதுல் உலூஹிய்யஹ்வை ஏற்றுக்கொள்ளவில்லை; அதாவது அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, வணக்கத்தில் அவனை ஒருமைப்படுத்தாமல்; பல காரணங்களுக்காகவும் பலரையும் பலதையும் வணங்கிக் கொண்டிருந்தார்கள்.

3- அல்லாஹ் மாத்திரமே வணங்கப்படத் தகுதியானவன் என்ற தவ்ஹீதுல் உலூகிய்யஹ்வானது அல்லாஹ் மாத்திரமே படைத்துப் பரிபாலிக்கின்றவன், சர்வ வல்லமையும் உடையவன் என்ற தவ்ஹீதுர் றுபூபிய்யஹ்வையும் உள்ளடக்கிறது. அதாவது ஒரு மனிதன் அல்லாஹ்வை மாத்திரம் 'இலாஹாக' வணங்குகின்றான்; வேறு எவரையும் எதனையும் வணங்கி அவனுக்கு இணைவைக்கவில்லை என்றால், அதற்கான காரணம் அவன் அல்லாஹ்வை மாத்திரமே படைத்துப் பரிபாலிக்கின்ற சர்வ வல்லமையுமுடைய 'றப்பாக' ஏற்றுக் கொண்டிருப்பதுதான்.


24- நபி ﷺ அவர்கள் முதல் முதலாக 'லா இலாஹ இல்ல-ல்லாஹ்' என்ற வார்த்தையைப் பிரச்சாரம் செய்த போது அதனை எதிர்த்த மக்கஹ்காஃபிர்கள் தவ்ஹீதுர் றுபூபிய்யஹ்வின் அடிப்படையை நம்பி இருந்தார்களா?

பதில்: ஆம், மக்கஹ் காபிர்கள் அல்லாஹ்தான் உலகத்தைப் படைத்துப் பரிபாலிக்கின்ற 'றப்' என்பதை ஏற்றிருந்தார்கள். அல்லாஹுவுக்காக கஃபத்துல்லஹ்வை தவாஃப் செய்தார்கள் உம்ரஹ், ஹஜ் செய்தார்கள். அவர்கள் இப்றாஹீம் நபியின் மகனான இஸ்மாஈல் நபியின் பரம்பரையில் வந்தவர்கள். ஆனாலும் அவர்கள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்காமல், சிலைகளையும் வணங்கினார்கள். அவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் வணக்கங்களைச் செய்ததால் அவனை வணக்கத்தில் ஒருமைப்படுத்தவில்லை. எனவே அவர்கள் வணக்கத்தில் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள்; தவ்ஹீதுல் உலூஹிய்யஹ்வை மறுத்தார்கள்.

ஆதாரம்: 
وَلَىِٕن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَٱلۡأَرۡضَ لَیَقُولُنَّ ٱللَّهُۚ  [لقمان ٢٥]
"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?" என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். 
[அல்குர்ஆன் 31:25]

﴿وَلَىِٕن سَأَلۡتَهُم مَّنۡ خَلَقَهُمۡ لَیَقُولُنَّ ٱللَّهُۖ﴾ [الزخرف ٨٧]
அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள்.
[அல்குர்ஆன் 43:87]

﴿قُل لِّمَنِ ٱلۡأَرۡضُ وَمَن فِیهَاۤ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ۝٨٤ سَیَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَذَكَّرُونَ ۝٨٥ قُلۡ مَن رَّبُّ ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ ٱلسَّبۡعِ وَرَبُّ ٱلۡعَرۡشِ ٱلۡعَظِیمِ ۝٨٦ سَیَقُولُونَ لِلَّهِۚ قُلۡ أَفَلَا تَتَّقُونَ ۝٨٧ قُلۡ مَنۢ بِیَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَیۡءࣲ وَهُوَ یُجِیرُ وَلَا یُجَارُ عَلَیۡهِ إِن كُنتُمۡ تَعۡلَمُونَ ۝٨٨ سَیَقُولُونَ لِلَّهِۚ قُلۡ فَأَنَّىٰ تُسۡحَرُونَ ۝٨٩ بَلۡ أَتَیۡنَـٰهُم بِٱلۡحَقِّ وَإِنَّهُمۡ لَكَـٰذِبُونَ ۝٩٠﴾ [المؤمنون ٨٤-٩٠]
“நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்)?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக! 
“அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக! 
“ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக. 
“அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக! 
“எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - (எல்லாவற்றையும்) பாதுகாப்பவனாகவும் (எவரும் அவனது தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக) அவனுக்கு எதிராகப் பாதுகாக்கப்பட முடியாத நிலையில் இருப்பவனும் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.
அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.
[அல்குர்ஆன் 23:84-89]

மேலும் பார்க்க: அல்குர்ஆன் 29:61, 29:63, 39:38, 43:9, 10:31.


25- அல்லாஹ்தான் முழு உலகத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் சர்வ வல்லமையுமுடைய இரட்சகன் என்ற தவ்ஹீதுர் றுபூபிய்யஹ்வின் அடிப்படையை மக்கஹ் முஷ்ரிக்கள் ஏற்றிருந்தும் ஏன் அவர்கள் சிலைகளை வணங்கினார்கள்?

மக்கஹ் காஃபிர்கள் அல்லாஹ்வை மாத்திரம் வணங்காமல் சிலைகளையும் வணங்கிவந்தார்கள். அவை அல்லாஹ்வின் நல்லடியார்களின் சிலைகள் எனக் கருதினார்கள். அவர்கள் அவற்றை வணங்கியதற்கும் அவற்றிடம் பிரார்த்தனை செய்ததற்கும் பிரதானமாக  இரண்டு காரணங்களைக் கூறினார்கள். அவையாவன:
1. சிலைகளாக வடிக்கப்பட்டிருந்த அந்த நல்லடியார்கள் அல்லாஹ்விடத்தில் அவற்றை வணங்குகின்றவர்களுக்காக சிபாரிசு செய்யும், மன்றாடும் என்று வாதிட்டனர்.

2. அச்சிலைகள் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற நல்லடியார்களாக இருப்பதால் அவை தம்மை வணங்குகின்றவர்களுக்கும் அல்லாஹ்விடம் நெருக்கத்தைப் பெற்றுக் கொடுக்கும் என்றும் வாதிட்டனர். அவற்றை வணங்குவதால் அல்லாஹ்வை நெருங்க முடியும் என்று நம்பினர்.

அதாவது உலகிலுள்ள தலைவர்களை நாம் நெருங்க வேண்டுமாக இருந்தால், அல்லது அவர்களிடம் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு நெருக்கமானவர்களை அணுக வேண்டும். அவர்கள் மூலமாகவே தலைவர்களை நெருங்க முடியும். அவ்வாறே நல்லடியார்களான சிலைகள்
அல்லாஹ்வுக்கும் தாங்களுக்கும் மத்தியில் இடைத்தரகர்களா செயல்படுகிறார்கள் என்று மக்கஹ்காஃபிர்கள் வாதிட்டனர். இவர்கள் இதன் மூலம் படைத்துப் பரிபாலிக்கும் சர்வ வல்லமையும் கொண்ட, யாவற்றையும் அறிந்த, தன்னிடம் பிரார்த்தனை செய்யுமாறு கட்டளை இடுகின்ற அல்லாஹ்வை, பலவீனமான எம்மைப் பற்றி தெரியாத உலகத் தலைவர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள். இது இவர்களின் அறிவீனமாகும்.

ஆதாரம்: 
அல்லாஹ் கூறுகின்றான்:
﴿وَیَعۡبُدُونَ مِن دُونِ ٱللَّهِ مَا لَا یَضُرُّهُمۡ وَلَا یَنفَعُهُمۡ وَیَقُولُونَ هَـٰۤؤُلَاۤءِ شُفَعَـٰۤؤُنَا عِندَ ٱللَّهِۚ قُلۡ أَتُنَبِّـُٔونَ ٱللَّهَ بِمَا لَا یَعۡلَمُ فِی ٱلسَّمَـٰوَ ٰ⁠تِ وَلَا فِی ٱلۡأَرۡضِۚ سُبۡحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا یُشۡرِكُونَ﴾ [يونس ١٨]
 
தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்கள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவை” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; “வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு சொல்லிக் கொடுக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன். அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் உயர்ந்தவன்” என்று கூறும்.
[அல்குர்ஆன் 10:18]

﴿أَلَا لِلَّهِ ٱلدِّینُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِینَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦۤ أَوۡلِیَاۤءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِیُقَرِّبُونَاۤ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰۤ إِنَّ ٱللَّهَ یَحۡكُمُ بَیۡنَهُمۡ فِی مَا هُمۡ فِیهِ یَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا یَهۡدِی مَنۡ هُوَ كَـٰذِبࣱ كَفَّارࣱ﴾ [الزمر ٣] 
அறிந்து கொள்வீராக! (இணைவைப்பிலிருந்து) தூய்மையான மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், “அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை” (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
[அல்குர்ஆன் 39:3]


26- மிகப்பெரும் பாவம் எது?

பதில்: பாவங்களில் மிகப்பெரிய பாவம் ஷிர்க் எனும் இணைவைத்தலாகும்.

ஆதாரம்: அல்லாஹ் கூறுகின்றான்: 
﴿إِنَّ ٱللَّهَ لَا یَغۡفِرُ أَن یُشۡرَكَ بِهِۦ وَیَغۡفِرُ مَا دُونَ ذَ ٰ⁠لِكَ لِمَن یَشَاۤءُۚ وَمَن یُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدِ ٱفۡتَرَىٰۤ إِثۡمًا عَظِیمًا﴾ [النساء ٤٨]
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள். [அல்குர்ஆன் 4:48]

குறிப்பு: ஒருவர் உலகிலேயே மரணத்திற்கு முன்னர் ஷிர்கிலிருந்து தவ்பஹ் செய்தால் அவரை அல்லாஹ் மன்னிப்பான். அவர் ஷிர்கிலிருந்து  தவ்பஹ் செய்யாமல் மரணித்தால் அல்லாஹ் அவரை மறுமையில் மன்னிக்கவேமாட்டான்; அவரை நிரந்தர நரகத்திற்கு அனுப்புவான். ஷிர்கைத் தவிரவுள்ள பாவங்களில் இருந்து உலகிலேயே தஃபஹ் செய்யாதவர்களில் தான் விரும்பியவர்களுக்கு  மாத்திரம் அல்லாஹ் மறுமையில் மன்னிப்பை வழங்குவான். அவர்களில் தான் நாடியவர்களுக்கு நரகில் தண்டனை வழங்குவான். ஆனாலும் அவர்கள் ஷிர்க் எனும் மிகப்பெரும் பாவத்திலிருந்து விலகிக் கொண்டதன் காரணமாக நிரந்தரமாக நரகத்தில் இருக்கமாட்டார்கள்.


27- ஷிர்க் (இணைவைத்தல்) என்றால் என்ன?

பதில்: இணைவைத்தல் என்பது ஏதாவது ஒரு வணக்கத்தை அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு / ஒன்றுக்குச் செய்வதாகும் அல்லது  அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமாக இருக்கும் தனித்துவமான ஒரு விடயம் இன்னொருவருக்கும் இருப்பதாக நம்புவதாகும். 

அதாவது ஷிர்க் என்பது ஒரு விடயத்தில் அல்லாஹ்வுடன் இன்னொருவரை இணைப்பதைக் குறிக்கின்றது. 

வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செலுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும், அல்லாஹ் தனது பண்புகளிலும் செயல்பாடுகளிலும் எவருக்கும் எதற்கும் ஒப்பற்றவனாகவும் இருக்கின்றான். எனவே, அல்லாஹ் அல்லாத ஒருவருக்கு ஏதோ ஒரு வணக்கத்தைச் செய்வதோ, அல்லாஹ்விடம் இருப்பதைப் போன்ற ஒரு பண்பு இன்னொருவரிடம் இருப்பதாக நம்புவதோ, அல்லாஹ்வைப் போன்று இன்னொருவர் ஏதோ ஒரு விடயத்தில் செயல்படுகிறார் என்று நம்புவதோ  இணைவைத்தல் (ஷிர்க்) ஆகும்.


28- அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்வதன் சட்டம் என்ன?

பதில்: துஆ - பிரார்த்தனை என்பது ஒரு முக்கியமான வணக்கமாகும். வணக்கம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும். எனவே, அவன் அல்லாதவர்களிடம் துஆ கேட்பது பெரிய ஷிர்க் ஆகும்.  துஆ கேட்கப்படுகின்றவர்கள் நல்லடியார்களாகவோ நபிமார்களாகவோ இருந்தாலும் சரியே! ஒருவர் ஷிர்க் செய்துவிட்டு, அதிலிருந்து தவ்பஹ் செய்யாமல் மரணித்தால் அவர்  சுவர்க்கம் நுழையவே முடியாது. 

ஆதாரம்: அல்லாஹ் கூறுகிறான்:
﴿ذَ ٰ⁠لِكُمُ ٱللَّهُ رَبُّكُمۡ لَهُ ٱلۡمُلۡكُۚ وَٱلَّذِینَ تَدۡعُونَ مِن دُونِهِۦ مَا یَمۡلِكُونَ مِن قِطۡمِیرٍ﴾﴿إِن تَدۡعُوهُمۡ لَا یَسۡمَعُوا۟ دُعَاۤءَكُمۡ وَلَوۡ سَمِعُوا۟ مَا ٱسۡتَجَابُوا۟ لَكُمۡۖ وَیَوۡمَ ٱلۡقِیَـٰمَةِ یَكۡفُرُونَ بِشِرۡكِكُمۡۚ وَلَا یُنَبِّئُكَ مِثۡلُ خَبِیرࣲ﴾ [فاطر ١٣، ١٤]
அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அவனுக்கே அரசாட்சிஅதிகாரம்  உரியதாகும், அவனையன்றி நீங்கள் எவர்களை(ப் பிரார்த்தித்து) அழைக்கின்றீர்களோ, அவர்கள் பேரித்தம் விதையின் (மெல்லிய) மேற்தொலிக்குக் கூட சொந்தக்காரர்களாக இல்லை. 
நீங்கள் அவர்களை(ப் பிரார்த்தித்து) அழைத்தாலும், அவர்கள் உங்கள் அழைப்பைச் செவியோற்கமாட்டார்கள்; செவியேற்றாலும் கூட உங்களுக்குப் பதிலளிக்கமாட்டார்கள்; கியாமஹ் நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; (அல்லாஹ்வாகிய) நன்கறிபவனைப் போன்று எவருமே உங்களுக்கு அறிவித்துத்தரமாட்டார்கள்.  
[அல்குர்ஆன் 35:13,14]

قال النبي ﷺ: الدُّعاءُ هوَ العبادةُ ثمَّ قالَ: ﴿وَقَالَ رَبُّكُمُ ٱدۡعُونِیۤ أَسۡتَجِبۡ لَكُمۡۚ إِنَّ ٱلَّذِینَ یَسۡتَكۡبِرُونَ عَنۡ عِبَادَتِی سَیَدۡخُلُونَ جَهَنَّمَ دَاخِرِینَ﴾
النعمان بن بشير • صححه الألباني وغيره،  أبو داود (١٤٧٩)، والترمذي (٢٩٦٩)
"துஆவே வணக்கமாகும்" என்று நபி ﷺ அவர்கள் கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் ஆயத்தை  ஓதிக் காண்பித்தார்கள்:
 உங்கள் இரட்சகன் கூறுகிறான்: “என்னையே நீங்கள் அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.”
[அல்குர்ஆன் 40:60]
[திர்மிதீ 2929, அபூ தாவூத் 1479]


29- அல்லாஹ் அல்லாத ஒருவரிடம் நாம் எமது ஒரு தேவையை நிறைவேற்றித் தருமாறு கேட்கலாமா? 

ஆம், அவர் 
1- உயிருள்ளவராகவும்  
2- எமக்கு முன்னிலையில் உள்ளவராகவும் (அல்லது தொலைத் தொடர்பு சாதனம் மூலமாக எமக்கு முன்னிலையில் உள்ளவரைப் போன்றவராகவும்)
3- அத்தேவையை நிறைவேற்றுவதற்குரிய ஆற்றல் வழங்கப்பட்டவராகவும் இருப்பதோடு
4- அல்லாஹ் அவரை ஒரு 'ஸbபbப்' ஆக (காரணமாக / சாதனமாக) மாத்திரமே வைத்துள்ளான் என்ற நம்பிக்கையோடு அவரிடத்தில் எமது தேவையைக் கேட்க முடியும்.

உதாரணமாக ஒரு பிள்ளை தனது தந்தையிடம் தாயிடம் உதவி செய்யுமாறு கேட்டல்.

மாற்றமாக அல்லாஹ் உதவி செய்வதைப் போன்று மர்மமான முறையில் எமக்கு ஒருவர் உதவி செய்ய முடியும் என்று நம்புவது ஷிர்க்காகும். அதனால் மரணித்தவரிடம் உதவிதேடுவதோ, எமக்கு முன்னிலையில் இல்லாததால் எமது கோரிக்கையை செவிமடுக்க முடியாத ஒருவரிடம் உதவிதேடுவதோ, அத்தேவையை நிறைவேற்ற ஆற்றல் இல்லாத ஒருவரிடம் உதவி தேடுவதோ ஷிர்க் ஆகும். அதேபோன்று உதவி வேண்டப்படுபவரை ஸபபாகக் கருதாமல்; அவர் எமக்கு உதவி செய்வதற்கு முழு ஆற்றலும் பெற்றவர் என்று நம்புவதும் ஷிர்க் ஆகும்.

உதாரணமாக மண்ணறையில் இருக்கும் நல்லடியார்களிடம் உதவி தேடுதல், எங்கோ இருக்கும் ஆன்மீகக் குருமார்களிடம் தொலைவில் இருக்கும் பக்தர்கள் உதவி தேடுதல், சூரியன், சந்திரன், கற்கள், சிலைகள், மரங்கள், போன்றவற்றிடம் உதவி தேடுதல். 

ஆதாரம்: அல்லாஹ் கூறுகின்றான்:
﴿وَمَنۡ أَضَلُّ مِمَّن یَدۡعُوا۟ مِن دُونِ ٱللَّهِ مَن لَّا یَسۡتَجِیبُ لَهُۥۤ إِلَىٰ یَوۡمِ ٱلۡقِیَـٰمَةِ وَهُمۡ عَن دُعَاۤىِٕهِمۡ غَـٰفِلُونَ﴾ [الأحقاف ٥] 
கியாம நாள்வரை (அழைத்தாலும்) தமக்கு பதில் கொடுக்காத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார் (இருக்கமுடியும்)? அவர்களோ இவர்கள் அழைப்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
﴿وَإِذَا حُشِرَ ٱلنَّاسُ كَانُوا۟ لَهُمۡ أَعۡدَاۤءࣰ وَكَانُوا۟ بِعِبَادَتِهِمۡ كَـٰفِرِینَ﴾ [الأحقاف ٦] 
மேலும், மனிதர்கள் (மறுமை நாளில்) ஒன்று திரட்டப்பட்டால், (வணங்கப்பட்டவர்களான) அவர்கள் இவர்களுக்கு விரோதிகளாக இருப்பர். இவர்கள் (தங்களை) வணங்கிக் கொண்டிருந்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவர்.
[அல்குர்ஆன் 46:5-6]


30- அல்லாஹ்வைத் தவிர மறைவான அறிவை அறியக்கூடிய யாரும் இருக்கிறார்களா?

பதில்: அல்லாஹ்வைத் தவிர மறைவான விடயங்களை எவரும் அறியமாட்டார்கள். மலக்களும் நபிமார்களும் கூட அல்லாஹ் அவர்களுக்கு அறிவித்துக் கொடுத்த விடயங்களை மாத்திரமே அறிவார்கள். அல்லாஹ் அல்லாத ஒருவரால் மறைவானதை அறிய முடியும் என்று நம்புவது ஷிர்க் ஆகும்.

ஆதாரம்: அல்லாஹ் கூறுகின்றான்:
﴿قُلْ لا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللهُ﴾ [النمل:٦٥]
(நபியே) கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் (எவரும்) மறைவானதை அறிய மாட்டார்கள்.
[அல்குர்ஆன் 27:65]

﴿قُل لَّاۤ أَمۡلِكُ لِنَفۡسِی نَفۡعࣰا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاۤءَ ٱللَّهُۚ وَلَوۡ كُنتُ أَعۡلَمُ ٱلۡغَیۡبَ لَٱسۡتَكۡثَرۡتُ مِنَ ٱلۡخَیۡرِ وَمَا مَسَّنِیَ ٱلسُّوۤءُۚ إِنۡ أَنَا۠ إِلَّا نَذِیرࣱ وَبَشِیرࣱ لِّقَوۡمࣲ یُؤۡمِنُونَ﴾ [الأعراف ١٨٨]
(நபியே!) நீர் கூறுவீராக “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே என்னால் எந்த ஒரு நலவு(செய்துகொள்வதற்)கும், எந்த ஒரு கெடுதி(யைத் தடுத்துக் கொள்வதற்)கும் நான் சக்தி பெறமாட்டேன், நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால், நலவுகளை அதிகம் பெற்றிருப்பேன், கெடுதி என்னைத் தொட்டிருக்காது, நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், விசுவாசம் கொள்ளும் சமுதாயத்தினருக்கு நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை”
[அல்குர்ஆன் 7:188]


31- தீங்கை நீக்குவதற்கு அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இருக்கிறாரா?

பதில்: அல்லாஹ்வைத் தவிர தீங்கை நீக்குபவர் எவரும் இல்லை.

ஆதாரம்: அல்லாஹ் கூறுகின்றான்:
﴿ وَإِنْ يَمْسَسْكَ اللهُ بِضُرٍّ فَلا كَاشِفَ لَهُ إِلاَّ هُوَ وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلا رَادَّ لِفَضْلِهِ ﴾ [يونس:١۰٧]
அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதனை நீக்குபவர் யாருமில்லை. மேலும், உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது கொடையைத் தடுப்பவர் யாரும் கிடையாது. 
[அல்குர்ஆன் 10:107]


32- மறைவான விடயங்களைப் பற்றி பேசுகின்ற குறி சொல்பவர்கள், சோதிடர்கள், சூனியக்காரர்கள் போன்றவர்களிடம் செல்வது கூடுமா?

பதில்: மறைவான விடயங்களைப் பற்றி அறிவிப்பதாகக் கூறுகின்ற எவரிடமும் செல்வது கூடாது - ஹறாமாகும். அவர்களிடம் செல்வதையோ குறி கேட்பதையோ இஸ்லாம் கடுமையாகத் தடை செய்துள்ளது. 

அவர்களுக்கு மறைவானதை அறியும் ஆற்றல் இருப்பதாக நம்புவது அவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்குவதாகும். இது இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றுகின்ற பெரிய ஷிர்க் ஆகும். 

அவர்கள் சொல்வதை உண்மைப்படுத்தாமல் அவர்களிடம் குறி கேட்பது மாத்திரமே 40 நாட்களுக்குரிய தொழுகைகளின் நன்மைகளை அழித்து விடும். 

குறி சொல்பவர்களோ வானத்தில் பேசப்படுவதை ஒத்துக்கேட்கும் அல்லது நடந்த நிகழ்வுகளைக் கண்டு, கேட்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும்  ஜின்களின் உதவியைக் கொண்டு அல்லது தங்களின் ஊகத்தின் அடிப்படையில்  உண்மையையும் பொய்யையும் கலந்து சொல்லுகின்றவர்களாக இருக்கின்றனர். 

சிலர், குறி சொல்லும் இவர்களுக்கு மறைவான ஆற்றல் இல்லை; ஆனாலும் இவர்கள் ஜின்களிடம் தகவல்களை அறிந்து சொல்கிறார்கள் என்ற நம்பிக்கையில் இவர்களிடம் குறி கேட்கின்றனர். இவ்வாறு குறி கேட்பதும் ஹறாமாகும். இவ்வாறான நம்பிக்கை மார்க்கத்தை விட்டும் வெளியேற்றுகின்ற பெரிய ஷிர்காக இல்லாவிட்டாலும், இது மார்க்கத்தை விட்டும் வெளியேற்றாத அளவுக்குள்ள ஷிர்க் அஸ்கர் - சிறிய இணைவைத்தல் எனும் பெரும் பாவமாகும்.

ஆதாரம்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: யார் குறி சொல்பவனிடம் சென்று ஏதாவது ஒன்றைப் பற்றிக் கேட்கின்றாரோ அவரிடம் இருந்து 40 நாட்களுக்கு எந்தத் தொழுகையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. 
 முஸ்லிம் 2230

இப்னு மஸ்ஊத் (றழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: யார் சோதிடன் அல்லது குறி சொல்பவனிடம் சென்று, அவன் சொல்வதை உண்மைப்படுத்துகின்றாரோ அவர் முஹம்மத் ﷺ அவர்கள் மீது இறக்கப்பட்டதை நிராகரித்துவிட்டார்.
 முஸ்னத் - இப்னுல் ஜஃத் 425


33- கைரேகை ஜோதிடம், பிறப்பு ராசி பலன், ஜாதக பொருத்தம், வாஸ்து சாஸ்திரம், நட்சத்திர பலன்கள் போன்றவையும் சோதிடத்தில் அடங்குமா?

பதில்: மறைவான விடயங்களையும் எதிர்காலத்தையும் பற்றி அறிவிக்கின்ற அனைத்து முறைகளும் ஜோதிடத்திற்குள் அடங்கும். பத்திரிகைகள், இணையதளங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தொலைபேசி போன்ற ஊடகங்களின் மூலமாக மறைவான விடயங்களையும் எதிர்கால ராசி பலன்களையும் அறிய முற்படுவதும் சோதிடம் பார்த்தலாகும். இது ஜாஹிலிய்யத்தான, ஹறாமான, ஷிர்க்கான செயலாகும்.

ஆதாரம்:
عن عبد الله بن عباس -رضي الله عنهما- أن رسول الله ﷺ قال: مَن اقتبَسَ شُعبةً مِن النُّجومِ، فقدِ اقتبَسَ شُعبةً مِن السِّحرِ، زاد ما زادَ.
 أبو داود (٣٩٠٥)، وابن ماجه (٣٧٢٦)، وأحمد (٢٠٠٠). صححه الألباني والوادعي وش الأرناؤط
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: யார் (குறி சொல்லும்) நட்சத்திரக் கலையின் ஒரு பகுதியைக் கற்றுக் கொள்கிறாரோ அவர் சூனியத்தின் ஒரு பகுதியைக் கற்றுக் கொண்டவராவார். அவர் அதனை எந்த அளவுக்கு அதிகமாக கற்றுக் கொள்கிறாரோ அந்த அளவுக்கு சூனியத்தை அதிகமாகக் கற்றுக் கொண்டவராவார்.
 அபூதாவூத் 3905, இப்னு மாஜஹ் 3726, அஹ்மத் 2000.


34- ஷிர்க் ஏன் மிகப்பெரிய பாவமாக இருக்கின்றது? அதன் ஆபத்து என்ன?

பதில்:
- ஷிர்க் ஆனது: உலகைப் படைத்துப் பரிபாலித்து, படைப்புக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து நிஃமத்களுக்கும் சொந்தக்காரனாகவும், பூரணமான தன்மைகளுக்கும் பண்புகளுக்கும் சொந்தக்காரனகவும் இருக்கின்ற அல்லாஹ்வை அவன் அல்லாத ஒருவரோடு / ஒன்றோடு சமப்படுத்தி, அவனது மதிப்பைக் குறைக்கின்ற செயலாகும். இது உச்சகட்ட வழிகேடும் மிகப்பெரிய அநீதியுமாகும். (பார்க்க: அல்குர்ஆன் 26:98, 31:13)
- அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய கடமையை இன்னொருவருக்குச் செய்வதன் மூலம் அல்லது அல்லாஹ்வுக்கு இருக்கின்ற ஒரு தன்மையை இன்னொருவருக்கு இருப்பதாக நம்புவதன் மூலம் இணைவைப்பதானது சர்வ வல்லமையும்  கொண்ட, நிஃமத்களை வாரி வழங்குகின்ற, எந்தத் தேவையுமற்ற அல்லாஹ்வைப் பற்றிய கெட்ட எண்ணமாகும். இணைவைத்தலானது இணைவைப்பவனின் உள்ளத்தில் அல்லாஹ்வைப் பற்றிய நேசமும், அவனைப் பற்றிய அச்சமும், அவனிடம் வைக்க வேண்டிய ஆதரவும், அவன் மீது வைக்க வேண்டிய தவக்குலும், அவனிடம் மீளுகின்ற தன்மையும் போதுமானதாக இல்லை என்பதற்கு அடையாளமாகும். (பார்க்க: 39:67, 37:85-87)
- இணைவைத்தல் இந்த அளவுக்கு அசிங்கமானது என்பதினால் தான் இணைவைப்பவர்கள் அசுத்தமானவர்கள் (9:28) என்றும் இணைவைப்பவர்களை மணந்து கொள்வதாகாது (2:221) என்றெல்லாம் குர்ஆன் கூறுகின்றது.

ஷிர்க் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு, அது அனைத்து நல்ல அமல்களையும் அழித்துவிடும் என்பதும், அதில் ஈடுபட்டவர் மரணத்திற்கு முன்னரே தௌபஹ் கேட்காமல் மன்னிக்கப்படமாட்டார் என்பதும், அவர் நிரந்தரமாக நரகத்தில் தங்குவார் என்பதும் எடுத்துக்காட்டுகளாகும். (பார்க்க 39:65, 6:88, 4:48, 5:72, 98:6)

இதனால் தான் ஏகத்துவத்தின் தந்தையான இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கூட இணைவைத்தலை விட்டும் தன்னையும் தன் பிள்ளைகளையும் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். (பார்க்க 14:35)

ஆதாரம்:
﴿وَإِذۡ قَالَ لُقۡمَـٰنُ لِٱبۡنِهِۦ وَهُوَ یَعِظُهُۥ یَـٰبُنَیَّ لَا تُشۡرِكۡ بِٱللَّهِۖ إِنَّ ٱلشِّرۡكَ لَظُلۡمٌ عَظِیمࣱ﴾ [لقمان ١٣]
31:13 மேலும், லுக்மான் தன் மைந்தனுக்கு_அவர் அவருக்கு உபதேசம் செய்தவராக_ என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு இணைவைக்காதே! நிச்சயமாக, இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும் என்று கூறியதை_(நபியே! நீர் நினைவு கூர்வீராக!)

﴿إِنَّهُۥ مَن یُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ حَرَّمَ ٱللَّهُ عَلَیۡهِ ٱلۡجَنَّةَ وَمَأۡوَىٰهُ ٱلنَّارُۖ وَمَا لِلظَّـٰلِمِینَ مِنۡ أَنصَارࣲ﴾ [المائدة ٧٢]
5:72 நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்துவிட்டான், மேலும், அவர் தங்குமிடம் நரகம்தான், இன்னும், (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையிலும்) உதவி செய்வோர் இல்லை. 

﴿وَلَقَدۡ أُوحِیَ إِلَیۡكَ وَإِلَى ٱلَّذِینَ مِن قَبۡلِكَ لَىِٕنۡ أَشۡرَكۡتَ لَیَحۡبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ ٱلۡخَـٰسِرِینَ﴾ [الزمر ٦٥]
39:65 (நபியே!) “நீர் இணைவைத்தால் நிச்சயமாக உம்முடைய செயல்(கள் யாவும்) அழிந்துவிடும், நிச்சயமாக நீர் நஷ்டமடைபவர்களிலும் ஆகிவிடுவீர்” என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் (வஹீ) அறிவிக்கப்பட்டது. 

﴿إِنَّ ٱللَّهَ لَا یَغۡفِرُ أَن یُشۡرَكَ بِهِۦ وَیَغۡفِرُ مَا دُونَ ذَ ٰ⁠لِكَ لِمَن یَشَاۤءُۚ وَمَن یُشۡرِكۡ بِٱللَّهِ فَقَدۡ ضَلَّ ضَلَـٰلَۢا بَعِیدًا﴾ [النساء ١١٦]
4:116 நிச்சயமாக, அல்லாஹ், தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்கமாட்டான், மேலும் இதல்லாத (குற்றத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான், இன்னும் யார் அல்லாஹ்வுக்கு இணைவைப்பாரோ, அவர் திட்டமாக வெகு தூரமான வழிகேடாக வழி கெட்டுவிட்டார்.


35- ஷிர்கான ஒரு காரியத்தைச் செய்தவர் எவ்வாறு அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்? அல்லாஹ் அவரை மன்னிப்பானா?

பதில்: எந்தப் பாவமாக இருந்தாலும் மரணம் தொண்டைக் குழியை வந்தடைவதற்கு முன்னால் அல்லது மறுமையின் அடையாளமான சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதற்கு முன்னால் ஒருவர் அல்லாஹ்விடம் உண்மையான முறையில் தௌபஹ் செய்து மீண்டால் நிச்சயமாக அல்லாஹ் அதனை மன்னிப்பான். அது ஷிர்காக இருந்தாலும் சரியே! (பார்க்க 39:53). தௌபஹ் செய்யப்படாவிட்டால் ஷிர்க் தவிர்ந்த பாவங்களை அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு மாத்திரம்  மன்னித்து விடுவான்; அவற்றுக்காக தான் நாடியவர்களைத் தண்டிப்பான். ஆனால் ஷிர்கைப் பொறுத்தவரை, அதிலிருந்து இவ்வுலகிலேயே தௌபஹ் செய்யாத  எவரையும் அல்லாஹ் மன்னிப்பதே இல்லை. (பார்க்க 4:48, 4:166)

ஆதாரம்: 
﴿۞ قُلۡ یَـٰعِبَادِیَ ٱلَّذِینَ أَسۡرَفُوا۟ عَلَىٰۤ أَنفُسِهِمۡ لَا تَقۡنَطُوا۟ مِن رَّحۡمَةِ ٱللَّهِۚ إِنَّ ٱللَّهَ یَغۡفِرُ ٱلذُّنُوبَ جَمِیعًاۚ إِنَّهُۥ هُوَ ٱلۡغَفُورُ ٱلرَّحِیمُ﴾ [الزمر ٥٣]
39:53. (நபியே!) கூறுவீராக! “தங்கள் மீது (பாவங்களை) அதிகமாக செய்து கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் (மன்னிப்புக் கிடைக்காதெனக் கருதி அவன்) அருளிலிருந்து  நிராசையடைந்துவிட வேண்டாம், நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் (நீங்கள் மன்னிப்புத் தேடினால்,) மன்னித்துவிடுவான், (ஏனென்றால்) நிச்சயமாக அவன் தான் மிக்க மன்னிப்பவன், மிகக்கிருபையுடையவன்”


36- 'ஷிர்க் அஸ்கர்' (சிறிய ஷிர்க்) என்றால் என்ன?

பதில்: 
பெரிய ஷிர்க்கின் அளவை அடையாத, மார்க்கத்தில் ஷிர்க் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு விடயமும் சிறிய ஷிர்காகும்.

- அது சிறியளவிலான முகஸ்துதி போன்று உள்ளம் சார்ந்ததாகவோ, அல்லாஹ் அல்லாதவர் மீது சத்தியம் செய்வதைப் போன்று வார்த்தை சார்ந்ததாகவோ, தாயத்தின் மூலம் அல்லாஹ் பாதுகாப்பான் என்ற நம்பிக்கையில் தாயத்துக் கட்டுவதைப் போன்று அல்லாஹ் சbபbபாக வைக்காத ஒன்றை சbபbபாகக் கருதி செயல்படும் செயல் சார்ந்ததாகவோ இருக்க முடியும்.

- சிறிய ஷிர்க் ஹறாமானதாகும். பெரும் பாவங்களில் எல்லாம் பெரும் பாவமாகும். ஆனாலும் அது பெரிய ஷிர்கை விட பாவத்தின் தரத்தில் குறைந்ததாகும். ஏனெனில் சிறிய ஷிர்கின் காரணமாக ஒருவர் இஸ்லாத்திலிருந்து வெளியேறவோ; நிரந்தரமாக நரகத்தில் இருக்கவோமாட்டார்.

- பொதுவாக சிறிய ஷிர்கானது பெரிய ஷிர்கிற்கு இட்டுச்செல்லும் ஒரு வழியாக / பாலமாக இருக்கும்.

- சிறிய ஷிர்கில் ஒரு வணக்கம் முழுமையாக அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் செய்யப்படுவதாக இருக்க மாட்டாது. ஒரு முழு வணக்கமும் அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் செய்யப்பட்டால் அது பெரிய ஷிர்காகும்.

- வெளித் தோற்றத்தில் சிறிய ஷிர்காகக் கருதப்படும் ஒரு  விடயம், அதில் ஈடுபடுபவரின் நம்பிக்கையின் தன்மையைப் பொறுத்து  பெரிய ஷிர்காகவும் மாற முடியும்.

ஆதாரம்:
عن محمودِ بنِ لَبيدٍ رَضِيَ اللهُ عنه أنَّ رَسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قال: ((إنَّ أخوَفَ ما أخافُ عليكم الشِّرْكُ الأصغَرُ  ))، قالوا: وما الشِّرْكُ الأصغَرُ يا رَسولَ اللهِ؟ قال: ((الرِّياءُ، يقولُ اللهُ عزَّ وجَلَّ يومَ القيامةِ إذا جُزِيَ النَّاسُ بأعمالِهم: اذْهَبوا إلى الذين كنتُم تُراؤون في الدُّنيا، فانظُروا هل تَجِدونَ عِندَهم جَزاءً  ))
நான் உங்கள் மீது அஞ்சுகின்ற விடயங்களில் எல்லாம் மிகவும் அச்சத்திற்குரிய விடயம் சிறிய ஷிர்காகும் என்று நபி ﷺ அவர்கள் கூறினார்கள். அதற்கு, 'சிறிய ஷிர்க்' என்றால் என்ன என்று நபித்தோழர்கள் வினவினர். நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: அதுதான் முகஸ்துதியாகும். கியாமஹ் நாளில் மனிதர்களுக்கு அவர்களின் அமல்களுக்காகக் கூலி வழங்கப்படும் போது, "உலகில் நீங்கள் யாருக்காக காண்பித்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள்; அவர்களிடம் உங்களுக்குக் கூலி கிடைக்கிறதா என்று பாருங்கள் என உயர்த்தியும் கண்ணியமும் மிக்க அல்லாஹ் கூறுவான்".
 مسمد أحمد (23630)، وحسَّن إسناده ابن حجر والمنذري وش الأرناؤوط وصححه الألباني.


37- பெரிய ஷிர்கிற்கும் சிறிய ஷிர்கிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன?

பதில்: அல்லாஹ்வுக்குரிய ஒரு விடயத்தில்  வேறொருவரை சரி சமமாக சமப்படுத்துவது / இணைப்பது பெரிய ஷிர்க் ஆகும். உதாரணமாக அல்லாஹ்விடம் மாத்திரமே துஆ கேட்கப்பட வேண்டும்; அவனல்லாத ஒருவரிடம் துஆ கேட்பது பெரிய ஷிர்க் ஆகும். ஏனெனில், துஆ எனும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு கடமையை இன்னொருவருக்கும் நிறைவேற்றி அல்லாஹ்வையும் இன்னொருவரையும் அந்த விடயத்தில் சமப்படுத்தியதாக அமையும்.
சிறிய ஷிர்கில் அல்லாஹ்வுக்கு இருக்கும் ஒரு விடயத்தில் இன்னொருவரை சரி சமமாக இணைக்காமல் ஏதோ ஒரு அளவில் அல்லது ஒரு விதத்தில் இணைப்பது அடங்கியிருக்கும். உதாரணமாக ஒருவர் அல்லாஹ்வுக்காக தொழுது கொண்டிருக்கும் பொழுது இன்னொருவர் அவதானிக்கின்றார் என்பதற்காக தனது தொழுகையை சற்று அழகுபடுத்துகின்றார். இது ரியா - முகஸ்துதியாகும்.  இது சிறிய ஷிர்க் ஆகும். அவர் தொழுகையை அல்லாஹ்வுக்காகத் தான் நிறைவேற்றுகின்றார். ஆனாலும் அதில் இன்னொருவரையும் ஓரளவுக்கு அல்லது ஒரு வகையில் இணைத்துக் கொள்கின்றார். அல்லாஹ்வுக்கு மாத்திரம் இருக்கின்ற உரிமையை முழுமையாக அவனுக்கு மாத்திரம் நிறைவேற்றாமல், அதில் இன்னொருவரை ஒரு வகையில் பங்குதாரராக ஆக்குகின்றார்.

இருவகையான ஷிர்க்களுக்கும் இடையில் உடன்பாடுகளும் வேறுபாடுகளும் இருக்கின்றன.

வேறுபாடுகள்: 

1- பெரிய ஷிர்க் தவ்ஹீதின் அடிப்படையுடன் (வேருடன்) மோதுகின்றது. சிறிய ஷிர்க் தவ்ஹீதின் பூரணத்துவத்துடன் (கிளையுடன்) மோதுகின்றது.

2- பெரிய ஷிர்கானது முன்னர் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அழித்துவிடும். சிறிய ஷிர்கோ அது கலந்த அமலை மாத்திரம் அல்லது அந்த அமலின் ஒரு பகுதியை மாத்திரம் அழித்துவிடும்.

3- பெரிய ஷிர்க் அதைச் செய்தவரை இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றி விடும். சிறிய ஷிர்க் அவ்வாறல்ல.

4- பெரிய ஷிர்கைச் செய்து விட்டு தவ்பஹ் செய்யாமல் மரணித்தவர் நிரந்தரமாக நரகத்தில் இருப்பார். அவரால் ஒரு போதும் சுவனத்திற்கு நுழைய முடியாது. அவர் தொடர் தண்டனையை அனுபவிப்பார். ஆனால் சிறிய ஷிர்கை மாத்திரம் செய்தவர் நரகம் நுழைந்தால் நிரந்தர நரகத்தில் இருக்கமாட்டார். அவரது தண்டனை குறிப்பிட்ட காலத்துடன் முடிவடையும். அது முடிந்த பிறகு சுவனத்தில் நுழைவார். 

உடன்பாடுகள்:

1- அல்லாஹ்வுக்கு இருக்கின்ற ஒரு உரிமையை அவன் அல்லாத ஒருவருக்கு / ஒன்றுக்குக் கொடுப்பது

2- இருவகையான ஷிர்க்களும் ஹறாமானவையாகவும் பெரும்பாவங்களாகவும் இருக்கின்றன.

3- இரண்டுமே அநியாயங்கள்.

4- இரு வகைகளிலும் நம்பிக்கை, வார்த்தை, செயல் ஆகியவை சார்ந்த பிரிவுகள் இருக்கின்றன.

5- இரு வகைகளிலும் வெளிப்படையாவை, மறைமுகமானவை என இரு பிரிவுகள் இருக்கின்றன. ஆனாலும், பெரும்பாலான சிறிய ஷிர்க்கள் மறைமுகமானவை.


38- முகஸ்துதி ஆபத்தானதா?

பதில்: முகஸ்துதி என்பது ஒரு மனிதன் அல்லாஹ்வுக்குச் செய்யக் கூடிய ஒரு அமலை ஏனையவர்களின்  புகழை அல்லது மதிப்பைப் பெறுவதற்காகச் செய்வதாகும்.  

அல்லாஹ்வுக்காகவும் முகஸ்துதிக்காகவும் செய்வதே வணக்கத்தில் இணைவைப்பதாக கருதப்படும். இது ஷிர்க் அஸ்கராகும். ஆனால் அல்லாஹ்வுக்குச் செய்ய வேண்டிய ஒரு அமலை மனிதர்களிடம் மதிப்பைப் பெறுவதற்காக மாத்திரம் செய்வதானது முகஸ்துதியை விட மிகப்பெரும் பாரதூரமான செயலாகும். அதனை சில அறிஞர்கள் நிபாக் என்றும் பெரிய ஷிர்க் என்றும் கூறியுள்ளனர். 

ஏனெனில் இது முனாஃபிக்களின் முகஸ்துதிக்கு ஒத்திருக்கின்றது. முனாஃபிக்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காக மாத்திரம் தான தர்மங்களை வழங்கக்கூடியவர்களாக இருந்தார்கள்; அவர்களிடம் அல்லாஹ்வைப் பற்றியும் மறுமை நாளைப் பற்றியும் ஈமான் இருக்கவில்லை என்றும் அவர்கள் மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காக வேண்டி தொழுகையில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும் அல்லாஹ் குர்ஆனில் (2:264, 4:142) குறிப்பிடுகின்றான். 

அல்லாஹ் கூறுகின்றான்: 
﴿فَمَن كَانَ یَرۡجُوا۟ لِقَاۤءَ رَبِّهِۦ فَلۡیَعۡمَلۡ عَمَلࣰا صَـٰلِحࣰا وَلَا یُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦۤ أَحَدَۢا﴾ [الكهف ١١٠]
{எவர் தன் இரட்சகனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ, அவர் நற்கருமங்களைச் செய்யவும், தன் இரட்சகனை வணங்குவதில், அவர் வேறொருவரையும் இணையாக்க வேண்டாம்.} [18:110]

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “யார் (தனது நற்செயல்களை மற்றவர்களுக்குச்) செவிமடுக்கச் செய்கிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (இம்மையில் அல்லது மறுமையில்) மற்றவர்களுக்குச்) செவிமடுக்கச் செய்வான். யார் (தனது நற்செயல்களை மற்றவர்களுக்கு) காண்பிக்கிறாரோ அவரை அல்லாஹ் (இம்மையில் அல்லது மறுமையில்) காண்பிப்பான் (அம்பலப்படுத்துவான்)”. (புகாரி 6499, முஸ்லிம் 2987)

ابن السعدي: الرياء آفة عظيمة، ويحتاج إلى علاج شديد، وتمرين النفس على الإخلاص، ومجاهدتها في مدافعة خواطر الرياء والأغراض الضارة، والاستعانة بالله على دفعها لعل الله يخلص إيمان العبد ويحقق توحيده. القول السديد 129
இப்னு ஸஃதி றஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: முகஸ்துதி என்பது பேராபத்தாகும். அதற்குக் கடுமையாக சிகிச்சையளிப்பதும், இஃக்லாஸுடன் செயல்படுவதற்கும், முகஸ்துதி எண்ணங்களையும் கெட்ட நோக்கங்களையும் தடுக்கப் போராடுவதற்கும் உள்ளத்திற்குப் பயிற்சியளிப்பதும் அவசியமாகும். இந்த ஆபத்தைத் தடுப்பதற்காக அல்லாஹ்விடம் உதவி தேடுவதும் அவசியமாகும். அல்லாஹ் அடியானின் ஈமானை இஃக்லாஸ் உள்ளதாகவும் அவனது தவ்ஹீதை உறுதியானதாகவும் மாற்றப் போதுமானவன்.
 
والمرائي في الحقيقة خاسر؛ لأن عمله غير مقبول، ولأن الناس لا ينفعونه؛ لقول النبي  لعبد الله بن عباس : واعلم أن الأمة لو اجتمعوا على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك، ولو اجتمعوا على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك. ومن أخلص عمله لله ولم يراع الناس به فإن الله تعالى يعطف القلوب عليه ويثنى عليه من حيث لا يشعر، فأوصي إخواني المسلمين بالبعد عن الرياء في عباداتهم البدنية كالصلاة والصيام، والمالية كالصدقة والإنفاق، والجاهية كالتظاهر بأنه مدافع عن الناس قائم بمصالحهم وما أشبه ذلك.  نور على الدرب لابن عثيمين>الشريط 331
இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் கூறினார்கள்: மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக செயல்படுபவன் நஷ்டவாளியே. ஏனெனில் அவனுடைய அமல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மனிதர்களும் அவனுக்குப் பயனளிக்கப் போவதில்லை. நபி ﷺ அவர்கள் (சிறுவனாக இருந்த) இப்னு அப்பாஸ் றழில்லாஹு அன்ஹுமா அவர்களிடம் கூறினார்கள்: "அறிந்து கொள் உனக்கு ஒரு நன்மை செய்ய வேண்டும் என்று முழு சமூகமும் சேர்ந்து ஒன்று திரண்டாலும் அல்லாஹ் அதனை உனக்கு எழுதி வைத்திருந்தால் தவிர அவர்களால் உனக்கு எந்த நன்மையையும் செய்ய முடியாது. உனக்கு ஒரு தீங்கு செய்ய வேண்டும் என்று அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒன்று திரண்டாலும் அல்லாஹ் அதனை உனக்கு எதிராக எழுதி வைத்திருந்தால் தவிர அவர்களால் உனக்கு எந்தத் தீங்கையும் செய்ய முடியாது."
யார் மனிதர்களின் பொருத்தத்தைக் கவனத்திற்கொள்ளாமல் அல்லாஹ்வுக்காக இஃக்லாஸுடன் தனது அமலைச் செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் உள்ளங்களை அவர் பக்கம் திருப்பி விடுவான். அவர் உணராமலே அவருக்குப் புகழ் கிடைக்கும். எனவே தொழுகை நோன்பு போன்ற உடல்ரீதியான, தானதர்மங்கள் போன்ற பொருளாதார ரீதியான, மனிதர்களின் நலன்களுக்காகக் குரல் கொடுத்தல் - அவற்றில் கவனம் செலுத்தல் போன்ற அந்தஸ்து ரீதியான வணக்கங்களிலும் முகஸ்துதியில் இருந்து தூரமாக இருக்குமாறு எனது முஸ்லிம் சகோதரர்களுக்கு வஸிய்யத் செய்து கொள்கின்றேன்.


39-முகஸ்துதியின் வடிவங்கள் யாவை?

பதில்: முகஸ்துதிக்குப் பல்வேறு வடிவங்கள் உண்டு:
1- செயல் சார்ந்தது. உதாரணம்: மற்றவர்களுக்குக் காண்பிப்பதற்காக தொழுகையை நீட்டுதல். 
2- வார்த்தைகள்  சார்ந்தது. உதாரணம்: அறிஞர் என்று சொல்லப்படுவதற்காக வேண்டி தன்னிடம் இருக்கும் அறிவுத் திறமையை வெளிப்படுத்துவது. 
3- நடை, உடை, தோற்றம் சார்ந்தது. உதாரணம்: தன்னை நல்ல மனிதராக அல்லது உலகப் பற்றற்றவராக மற்றவர்களுக்கு வெளிப்படுத்துதல்.

மறுமையில் முதன்முதலாக விசாரணைக்காக மூவர்  எடுத்துக்கொள்ளப்படுவர். அவர்கள் மூவருமே நரகத்தில் தள்ளப்படுவர். அவர்கள் மூவரும் சிறந்த அமல்களைச் செய்தவர்களாக இருப்பார்கள். ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் போராடச் சென்று, கொலை செய்யப்பட்டவர். மற்றொருவர் மார்க்க அறிவைக் கற்று அதனை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர், அல்குர்ஆனை ஓதக்கூடியவர். மூன்றாமவர் பொருளாதார வசதிகள் வழங்கப்பட்டு, அதிலிருந்து அல்லாஹ் விரும்புகின்ற அனைத்து வழிகளிலும் செலவு செய்தவர். அல்லாஹ் அவர்களிடம் தான் வழங்கிய நிஃமத்கள் - அருட்பாக்கியங்களைப் பற்றி விசாரணை செய்யும் போது, அவர்கள் தாங்கள் செய்த நல்ல காரியங்களைச் சொல்லி அவைகளை உனக்காகத்தான் செய்தோம் என்று கூறுவார்கள். அதற்கு அல்லாஹ் இல்லை நீ பொய் சொல்கிறாய்; உனக்கு உலகத்தில் நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவற்றைச் செய்தாய்; அது உனக்குக் கிடைத்து விட்டது என்று கூறுவான். பின்னர் அவர்கள் முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் போடப்படுவர். (பார்க்க: முஸ்லிம் 1905)
இவர்கள் நரகத்துக்குச் செல்வதற்கான காரணம் முகஸ்துதி எனும் சிறிய ஷிர்க் ஆகும்.


40-முகஸ்துதியின் நிலைகள், படித்தரங்கள் யாவை ?

பதில்: முகஸ்துதியின் பல்வேறுபட்ட நிலைகள்:

1- முகஸ்துதிக்காகவே ஒரு அமலைச் செய்ய ஆரம்பித்து, அந்த அமலில் அதே நிலையில் தொடர்ந்து இருப்பது. இந்த அமல் bபாதில் ஆகும். இது அடிப்படையில் சிறிய ஷிர்க் ஆகும். பெரிய ஷிர்க் ஆக மாறுவதற்கும் முடியும். 

2- அல்லாஹ்வுக்காகவும் மனிதர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் ஒரு அமலில் ஈடுபடுதல், அந்த அமலில் உள்ள முகஸ்துதி இறுதிவரை தொடர்கிறது. இதுவும் bபாதில் ஆகும். 

3- அல்லாஹ்வுக்காக ஒரு அமலைச் செய்ய ஆரம்பித்து, இடைநடுவில் முகஸ்துதி ஏற்பட்டு, மனதோடு போராடி அதனைத் தடுத்து நிறுத்தி இஃக்லாஸைக் காப்பாற்றிக் கொள்ளல். இது பாதிப்பை ஏற்படுத்தாது. 

4- அல்லாஹ்வுக்காக ஒரு அமலைச் செய்ய ஆரம்பித்து, இடைநடுவில் முகஸ்துதி ஏற்பட்டு, அந்த முகஸ்துதி வெறுக்கப்பட்டுத் தடுத்து நிறுத்தப்படாமல் அது அந்த அமலில் இறுதிவரை தொடர்கிறது. அந்த முகஸ்துதியின் தன்மைக்கேற்ப இந்த அமல் bபாதில் ஆகலாம் அல்லது அதன் நன்மை குறைவடையலாம். உள்ளத்தில் ஏற்பட்ட முகஸ்துதியின் அளவுக்கு ஈமானிலும் இஃக்லாஸிலும் பலவீனம் ஏற்படும். 

5- ஒருவர் ஒரு தொகையை தருமம் கொடுக்க நினைக்கிறார். அதில் ஒரு பகுதியை இஃக்லாஸுடன் கொடுத்துவிட்டார். அடுத்த பகுதியைக் கொடுக்கும் பொழுது அவர் முகஸ்துதியுடன் கொடுத்துவிட்டார். முதலில் கொடுக்கப்பட்ட பகுதி செல்லுபடியானது; இரண்டாவது கொடுக்கப்பட்ட பகுதி பாதில் ஆனது.

6- ஆனால் ஒருவர் ஒரு தொழுகையை ஆரம்பத்தை இஃக்லாஸுடன்  நிறைவேற்றுகிறார். இறுதிப் பகுதியை முகஸ்துதியுடன் நிறைவேற்றுகிறார். இது இவருடைய முழுத் தொழுகையையும் பாதிக்கும். இதற்குக் காரணம் தொழுகை என்பது அதனுடைய ஆரம்பப் பகுதி இறுதிப் பகுதியுடன் தொடர்புபட்ட ஒரு வணக்கமாகும்.

أنا أغْنى الشُّرَكاءِ عَنِ الشِّرْكِ، مَن عَمِلَ عَمَلًا أشْرَكَ فيه مَعِي غيرِي، تَرَكْتُهُ وشِرْكَهُ. مسلم ٢٩٨٥
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இணையாக்கப்படுபவர்களில் இணையை விட்டும் மிகவும் தேவையற்றவனாக நான் இருக்கின்றேன். யார் ஒரு அமலைச் செய்து அதில் என்னுடன் மற்றொருவரை இணையாக்குகிறாரோ அவரை அவரது இணையுடன் விட்டுவிட்டேன். (முஸ்லிம் 2985)

إنّ اللهَ تَجاوَزَ عن أُمَّتي ما حَدَّثَتْ به أنْفُسَها، ما لَمْ تَعْمَلْ أوْ تَتَكَلَّمْ. البخاري ٥٢٦٩ 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என் உம்மத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை, அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான். (புகாரி 5269)

(பார்க்க: இப்னு ஸஃதி, இப்னு உஸைமீன்)
-القول السديد لابن سعدي (ص: 129)  -شرح كتاب التوحيد: باب ما جاء في الرياء لابن عثيمين


41-முகஸ்துதியில் அடங்காத விடயங்கள் எவை?

பதில்:

1- ஒருவர் தனது அமல் முடிவடைந்த பிறகு மனிதர்கள் தன்னுடைய அமலை அறிந்ததையிட்டு சந்தோஷப்பட்டால், அது முகஸ்துதியில் அடங்காது. ஏனெனில் அந்த அமலை அவர் செய்கின்ற பொழுது அவருக்கு முகஸ்துதி ஏற்படவில்லை.

2- ஆனாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும். வரம்பு மீறும் பொழுது அந்த வரம்பு மீறலின் பாவம் அவர் செய்த நன்மையை அழித்து விடலாம். உதாரணமாக ஒருவர் தர்மம் செய்துவிட்டு தான் செய்த தர்மத்தைச் சொல்லிக் காட்டுவது அல்லது தர்மம் கொடுக்கப்பட்டவரை நோவினைக்கு உள்ளாக்குவது. இது அவருடைய தர்மத்தின் நன்மையை அழித்துவிடும்.

قِيلَ لِرَسُولِ اللهِ ﷺ: أَرَأَيْتَ الرَّجُلَ يَعْمَلُ العَمَلَ مِنَ الخَيْرِ وَيَحْمَدُهُ النّاسُ عليه؟ قالَ: تِلكَ عاجِلُ بُشْرى المُؤْمِنِ. مسلم ٢٦٤٢
ஒரு மனிதன் நற்செயல்கள் செய்கின்றான்; அதற்காக மனிதர்கள் அவனைப் புகழ்கின்றனர் இதைப்பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கவர்கள், அது முஃமினுக்கு உலகில் கிடைக்கும் நற்செய்தியாகும் என்று கூறினார்கள். (முஸ்லிம் 2642)

﴿یَـٰۤأَیُّهَا ٱلَّذِینَ ءَامَنُوا۟ لَا تُبۡطِلُوا۟ صَدَقَـٰتِكُم بِٱلۡمَنِّ وَٱلۡأَذَىٰ كَٱلَّذِی یُنفِقُ مَالَهُۥ رِئَاۤءَ ٱلنَّاسِ وَلَا یُؤۡمِنُ بِٱللَّهِ وَٱلۡیَوۡمِ ٱلۡـَٔاخِرِۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفۡوَانٍ عَلَیۡهِ تُرَابࣱ فَأَصَابَهُۥ وَابِلࣱ فَتَرَكَهُۥ صَلۡدࣰاۖ لَّا یَقۡدِرُونَ عَلَىٰ شَیۡءࣲ مِّمَّا كَسَبُوا۟ۗ وَٱللَّهُ لَا یَهۡدِی ٱلۡقَوۡمَ ٱلۡكَـٰفِرِینَ﴾ [البقرة ٢٦٤]
{நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; மேலும், அல்லாஹ் நிராகரிக்கும் சமூகத்தாரை நேரான வழியில் செலுத்தமாட்டான்.} [அல்குர்ஆன் 2:264]

3- ஒருவர் தான் செய்த அமலை நினைத்து சந்தோசப்படுவது முகஸ்துதியாகாது. அது ஈமானின் அடையாளங்களில் ஒன்றாகும்.

ومَن سرَّتْه حسَنتُه وساءتْه سيِّئتُه، فهو مؤمنٌ.. الترمذي (٢١٦٥)، والنسائي في «السنن الكبرى» (٩٢٢٥)، وأحمد (١١٤) صححه الألباني، والوادعي، وش الأرناؤوط.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: யாருக்கு தனது நற்கருமங்கள் சந்தோசத்தையும் தீய செயல்கள் கவலையையும் அளிக்கின்றதோ அவர் முஃமின் ஆவார். (அஹ்மத் 114) 
(பார்க்க: இப்னு ஸஃதி, இப்னு உஸைமீன்)
القول السديد لابن سعدي (ص: 129)  شرح كتاب التوحيد: باب ما جاء في الرياء لابن عثيمين

4- ஒருவர் தனிமையில் அமல் செய்வதற்கு உற்சாகப்படுதில்லை என்று வைத்துக்கொள்வோம். ஆனாலும் அவர் மற்றவர்களுடன் இருக்கும் பொழுது அவர்கள் அமல் செய்வதைப் பார்த்து உற்சாகப்பட்டு அமல் செய்வது முகஸ்துதியில் அடங்காது. 

5- ஒருவர் தனது அமலை மற்றவர்கள் பார்த்துப் பயன்பெற வேண்டும் என்பதற்காக அல்லது அவர்கள் அந்த அமலில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதற்காக வெளிப்படையாகச் செய்வது முகஸ்துதியில் அடங்காது.

مَن سَنَّ في الإسْلَامِ سُنَّةً حَسَنَةً، فَلَهُ أَجْرُهَا وَأَجْرُ مَن عَمِلَ بهَا بَعْدَهُ، مِن غيرِ أَنْ يَنْقُصَ مِن أُجُورِهِمْ شَيءٌ... مسلم ١٠١٧ 
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: இஸ்லாத்தில் யார் அழகான ஒரு வழிமுறையை ஆரம்பித்து வைக்கின்றாரோ அவருக்கு அதனுடைய கூலியும், அவருக்குப் பிறகு அதனைச் செயல்படுத்தியவர்களுடைய கூலியும் இருக்கிறது. எனினும் இதனால் அவர்களுக்கு அவர்களுடைய கூலிகளில் எந்த ஒன்றும் குறையாது… (முஸ்லிம் 1017) 

﴿إِن تُبۡدُوا۟ ٱلصَّدَقَـٰتِ فَنِعِمَّا هِیَۖ وَإِن تُخۡفُوهَا وَتُؤۡتُوهَا ٱلۡفُقَرَاۤءَ فَهُوَ خَیۡرࣱ لَّكُمۡۚ وَیُكَفِّرُ عَنكُم مِّن سَیِّـَٔاتِكُمۡۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِیرࣱ﴾ [البقرة ٢٧١]
{தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே! (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) மேலும், அதனை நீங்கள் மறைத்து ஏழைகளுக்கு அதனைக் கொடுத்தால் அது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். மேலும், அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நுணுக்கமாக அறிந்தவனாகவே இருக்கின்றான்.} [அல்குர்ஆன் 2:271]

தொகுப்பு: ஹுஸைன் மதனி
- ஸுன்னஹ் அகாடமி



أحدث أقدم