தொற்றுநோய் உண்டா?

அஷ்ஷெய்க் அபூ ஹம்zஸா ஹசன் பின் முஹம்மத் பா ஷுஐப் ஹஃபிதஹுல்லாஹ் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கான பதிலும்:

கேள்வி:

ஷெய்க், அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிவானாக... இந்த இரு ஹதீஸ்களிலுள்ள முரண்பாட்டை விளக்க முடியுமா?

ஒரு ஹதீஸில் உள்ளது
(لا عدوى)
 "தொற்று நோய் என்பது கிடையாது"

இன்னொரு ஹதீஸில் உள்ளது
 (لا يدخل مصح على مريض)
 "ஆரோக்கியமானவர்கள் (தொற்று) நோயுள்ளவர்கள் மத்தியில் நுழையக்கூடாது"

 இந்த இரு ஹதீஸ்களுக்கும் இடையிலான விளக்கம் என்ன? ஆரோக்கியமானவர்கள் நோயுற்றவர்கள் மத்தியில் நுழைவதைத் தடுப்பதற்கான காரணம் என்ன?

ஷெய்க் அவர்களின் பதில் :

 இந்த ஹதீஸில் காணப்படுவது போல் அல்-அத்வா (தொற்று நோய்) உள்ளது என்பது தான் உறுதிபடுத்தப்பட்ட மிகவும் சரியான கூற்றாகும்.

(இதற்கு கீழ் காணும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.)

முதலாவது ஹதீஸ்:
 
(لاَ يُورِدُ الْمُمْرِضُ عَلَى الْمُصِحِّ)

 "ஒரு தொற்று நோயாளியை ஆரோக்கியமானவரிடம் அழைத்துக் கொண்டு செல்லக்கூடாது"

மற்றொரு ஹதீஸ்:

 (فر من المجذوم فرارك من الأسد)
 "நீங்கள் சிங்கத்திலிருந்து தப்பி ஓடுவதைப் போல தொழுநோயாளியிடமிருந்து தப்பி ஓடுங்கள்"

_____________________

 (தொற்று நோய் கிடையாது என்று) ஹதீஸில் மறுக்கப்படுவதை  பொறுத்தவரை, அது என்னவென்றால்:

(لا عدوى)
 "தொற்று நோய் என்பது கிடையாது" என்று நபி ﷺ அவர்கள் கூறியது...

இஸ்லாத்திற்கு முன்பு அறியாமையிலிருந்த மக்கள் (தொற்று நோய்) அல்லாஹ்வின் நாட்டமின்றி (நோயுற்ற) ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு (தானாக) பரவுகிறது என்ற தவறான நம்பிக்கை கொண்டிருந்தார்கள், ஆகவே நபி ﷺ அவர்கள்    (தொற்று நோய் என்பது கிடையாது என கூறி) அறியாமையிலிருந்த மக்களின் அந்த தவறான நம்பிக்கையை உடைத்தார்கள்.

 மேலும் அல்லாஹ்வே நன்கு அறிந்தவன்
_______
أحدث أقدم