ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم


“ஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா” ("இதுவே எங்களுடைய அழைப்புப் பணியும் மேலும் எமது கொள்கைக் கோட்பாடும்") - அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் 

மொழிபெயர்த்தோன்:
அபூ அப்திர் ரஹ்மான் அப்துர் ரஸ்ஸாக் இப்னு முஹம்மத் நஸார் அஸ்ஸைலானீ.


அஷ்ஷேய்ஹ் முக்பில் இப்னு ஹாதி அல்வாதியீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின்

முன்னுரை:

நிச்சயமாக புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதாகும். அவனை நாம் புகழ்கின்றோம்; மேலும் அவனிடமே நாம் உதவி தேடுகின்றோம்; மேலும் அவனிடமே நாம் பாவமன்னிப்பும் தேடுகின்றோம்; மேலும் எமது ஆத்மாக்களின் தீங்குகளை விட்டும், எமது பாவச்செயல்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகின்றோம் . அல்லாஹ் எவருக்கு நேர்வழியை காட்டுகின்றானோ அவரே நேர்வழி பெற்றவராவார். மேலும் அவன் எவரை வழிகெடுத்து விடுகின்றானோ அவனுக்கு நேர்வழி காட்டுபவன் எவனும் இல்லை.

மேலும் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு எவரும் இல்லை, அவன் தனித்தவன்.  அவனுக்கு எந்த ஒரு இணையுமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன்.

மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய அடியான் என்றும் மற்றும் அவனுடைய தூதர் என்றும் சாட்சி கூறுகின்றேன்.

விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள்; மேலும் நிச்சயமாக முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரணித்து விட வேண்டாம்.  - ஆலு இம்ரான்: 102

மக்களே! நீங்கள் உங்கள் இரட்சகனைப் பயந்துக் கொள்ளுங்கள். அவன் எத்தகையவனென்றால், உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான்; அதிலிருந்து அதற்குரிய ஜோடியையும் படைத்தான்; இன்னும் அவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும், பெண்களையும் பரவச்செய்தான்;  இன்னும் அல்லாஹ்வை _ அவனை _ க் கொண்டு நீங்கள் ஒருவருக்கொருவர் (உரிமைகளை) கேட்டுக்கொள்கின்றீர்களே அத்தகையவனையும்;  மேலும் இரத்த பந்த சொந்தங்களை(துண்டித்து வாழ்வதை)யும் நீங்கள் பயந்துக்கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களை அல்லாஹ் கண்காணிப்பவனாக இருக்கின்றான். -    அந்நிஸா: 1

விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வைப் பயந்துக்கொள்ளுங்கள், மேலும் நேர்மையான வார்த்தையையே கூறுங்கள்.

(அவ்வாறு நீங்கள் செய்தால்) அவன் உங்களுடைய செயல்களை உங்களுக்கு சீர்படுத்தி வைப்பான்; மேலும் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னித்து விடுவான். மேலும் எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் வழிப்படுகின்றாரோ அவர் திட்டமாக மகத்தான வெற்றியாக வெற்றி பெற்றுவிட்டார். - அல் அஹ்ஸாப்: 71, 72

இதற்குப் பின்னால்:

நிச்சயமாக பலதரப்பட்ட கொள்கைகள் அதிகரித்து மேலும் பலதரப்பட்ட அழைப்புப்பணிகள் பரவிய போது அந்த அழைபப்புப்பணிக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்களின் நிலமை அல்லாஹ் ஸுப்ஹானஹூ வதஆலா கூறியதைப்போன்று ஆகிவிட்டது.

பிறகு அவர்கள் தங்களின் அக்காரியத்தை அவர்களிடையே பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனர்; ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடம் இருப்பதைக்கொண்டு மகிழ்ச்சி அடைகின்றனர். -  அல் முஃமினூன்: 53

மேலும் அவர்களுடைய நிலமை (அரபியிலே) கூறப்பட்ட ஒரு கவிதையைப் போல் இருக்கின்றது:
“அனைவரும் லைலா என்பவளுடன் அவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக வாதிடுகின்றனர். ஆனால் லைலாவோ அதை அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளவில்லை."

எந்த ஒரு அழைப்புப் பணியை செய்பவர்களாக இருந்தாலும் நிச்சயமாக அவர்களே நேரான பாதையில் இருப்பதாக வாதிடுபவர்களாகவே அன்றி நீ அவர்களை பெற்றுக்கொள்ள மாட்டாய்.

இதோ பிர்அவ்ன் கூறுகின்றான்: 
நானே உங்களுடைய மிக உயர்ந்த இரட்சகனாவேன். -  அந்நாஸிஆத்: 24

மேலும் அவனுடைய கூட்டத்திற்கு கூறுகின்றான்: ( நான் சரிகண்டதைத் தவிர (வேறொன்றையும்) நான் உங்களுக்கு அறிவிக்கவில்லை; நேரான வழியையைத் தவிர (மற்றெதனையும்)  நான் உங்களுக்குக் காட்டவில்லை.) -  அல் ஹாபிர்: 29

மேலும் அவன் அல்லாஹ்வின் நபியான  மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் விடயத்தில் கூறினான்: ( என்னை விட்டுவிடுங்கள் மூஸாவை நான் கொலை செய்யப்போகிறேன் மேலும் அவர் தன்னை (பாதுகாத்துக்கொள்வதற்காக) தன் இரட்சகனை அழைக்கட்டும்.

அவர் உங்களுடைய மார்க்கத்தை மாற்றி  விடுவார் அல்லது பூமியில் குழப்பத்தை வெளிப்படுத்துவார் என்று நிச்சயமாக நான் பயப்படுகின்றேன்.  - அல் ஹாபிர்: 26

மேலும் அவனும்;  அவனுடைய கூட்டமும் மூஸா மற்றும் ஹாரூன் அலைஹிமஸ்ஸலாம் அவர்கள் இருவரின் விடயத்திலும் கூறினார்கள்:      
நிச்சயமாக இவ்விருவரும் இரு சூனியக்காரர்களே! தங்களுடைய சூனியத்தால் உங்களை, உங்களுடைய பூமியை விட்டும் இவ்விருவரும் வெளியாக்கி விடவும்;  உங்களுடைய மேலான பாதையை இவ்விருவரும் போக்கிவிடவும் நாடுகின்றனர். - தாஹா: 63

மேலும் அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா நயவஞ்சகர்களின் பொய்யான வார்த்தையைப் பற்றி கூறுகின்றான்: (மேலும் அவர்களிடம், "நீங்கள் குழப்பம் செய்யாதீர்கள் "என்று கூறப்பட்டால், அவர்கள் "நிச்சயமாக நாங்கள் தான் சீர்த்திருத்தவாதிகள்" என்று கூறுவார்கள். -  அல் பகறா: 11
அல்லாஹ்  கூறுகின்றான்: அறிந்துக்கொள்ளுங்கள்!  நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள். என்றாலும் (அதை)  உணர மாட்டார்கள். (12)

"மேலும் அவர்களிடம் மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள்" என்றுக் கூறப்பட்டால், அவர்கள் "மூடர்கள் விசுவாசங்கொண்டது போல் நாம் விசுவாங்கொள்வோமா? "என்று கூறுவார்கள். அறிந்துக்கொள்ளுங்கள் நிச்சயமாக  அவர்களே மூடர்களாவர்; என்றாலும் (அதை)அவர்கள் அறிந்துக்கொள்ள மாட்டார்கள். - அல் பகறா: 12, 13

அல்லாஹ்  கூறுகின்றான்: அறிந்துக்கொள்ளுங்கள்!  நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பவாதிகள். என்றாலும் (அதை)  உணர மாட்டார்கள். 

“மேலும் அவர்களிடம் மனிதர்கள் விசுவாசங்கொண்டது போன்று நீங்களும் விசுவாசங்கொள்ளுங்கள்” என்றுக் கூறப்பட்டால், அவர்கள் “மூடர்கள் விசுவாசங்கொண்டது போல் நாம் விசுவாங்கொள்வோமா? “என்று கூறுவார்கள். அறிந்துக்கொள்ளுங்கள் நிச்சயமாக  அவர்களே மூடர்களாவர்; என்றாலும் (அதை)அவர்கள் அறிந்துக்கொள்ள மாட்டார்கள். - அல் பகறா: 12, 13

இதற்கான  ஒரு உதாரணத்தை உன்னிடம் முன்வைக்கின்றேன். நஜ்ரான்,  பரஃ, அத்பீன், இஹ்ஸா, கதீப், பஹ்ரைன், மதீனா, ஹிராஸ், இராஸ், ஸன்ஆவிலே இருக்கக்கூடிய  நுக்ம், போன்ற ஊர்களிலும்,  இந்தியா நாட்டிலேயும் இருக்கக்கூடிய இஸ்மாயீலிய்யா என்று சொல்லப்படக்கூடிய வழிகெட்ட, மார்க்கத்திலிருந்து வெளியே சென்ற ஒரு கூட்டமாக அது  இருந்துக்கொண்டிருக்கின்றது.

அவர்களுக்கு "நகாவிலா " என்றும்  பெயர்ச்சொல்லப்படும். அவர்களின் ஷேய்ஹ்மார்களுக்கு "மகாரிமா " என்றே கூறப்படும். (மகாரிமா என்றால் சங்கை செய்யப்படுபவர்கள் என்று பொருள்படும்) அவர்கள் சங்கை செய்யப்படுபவர்களல்லர்.

மேலும் மகாரிமாக்கள் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எதிரானதாக இருக்கக்கூடிய ; மார்க்கத்தை விட்டும் சாய்ந்து சென்ற பாதினிய்யா என்று அழைக்கப்படக்கூடிய மத்ஹபின் பக்கம் அவர்களை சேர்த்துக்கொள்கின்றனர்.

அவர்களின் மூதாதையர்களே அல்லாஹ்வின் புனித வீட்டை ஹஜ் செய்ய வந்தவர்களை கொலை செய்தனர்; மேலும் அங்கிருந்த ஹஜருல் அஸ்வதை எடுத்துச்சென்றனர். ஒரு காலகட்டத்தில் அவர்களிடத்திலேயே அக்கல் காணப்பட்டது.

பிறகு அதிலிருந்து ஒரு சிறிய பகுதியையே அவர்கள்  திருப்பிக்கொடுத்தனர். எனவே மகாரிமாக்கள் முஸ்லிம்களல்லர்.

அவர்கள் யூத,  நஸாராக்களையும் விட அதிகமாக இஸ்லாத்திற்கு தீங்களிக்கக்கூடியவர்களாவர்.
இப்படியெல்லாம் இருக்கும் போதும்,  பணத்தின் தூண்டுதல்களின் மூலமாக  அவர்களின் அழைப்புப்பணியை அவர்கள்  புத்தகங்களைக் கொண்டும், அவைகளல்லாத வேறு விடயங்களைக்கொண்டும் பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

எதுவரைக்கும் என்றால்,  நிச்சயமாக அவர்கள் நஜ்ரான் எனும் ஊருலே இருக்கக்கூடிய யமன் நாட்டைச்சார்ந்த சில பலவீனமானர்களுக்கு சவுதி அரேபியாவின் தேசியத்தைக் கொடுக்கக்கூடியவர்களாக மாறிவிட்டனர் .

உண்மையிலேயே அவர்கள் அவரை சவுதியுடன் சேர்ப்பதற்கு அழைக்கவில்லை என்றாலும்  கராமித்தாவைச்சேர்ந்த,  பாதினிய்யாவைச் சேர்ந்த,  இஸ்மாயீலிய்யா என்ற மத்ஹபிலே அவரை அவர்கள் சேர்த்துக்கொள்வதற்காக வேண்டி அழைக்கின்றனர்.

அவர்கள் சவுதியையும் விரும்ப  மாட்டார்கள், மேலும் அவர்களுடைய அந்த அசத்திய மத்ஹபிலே இல்லாத எவரையும் அவர்கள்  விரும்பவும் மாட்டார்கள்.

நான் இதனை, அவர்களைப் பற்றிய முழு அறிவுடனும்; அனுபவத்துடனுமே கூறுகின்றேன். ஏனென்றால் நான் நஜ்ரான் எனும் ஊரிலே இரண்டு வருட அளவு காலங்கள்  தங்கி இருந்தேன்.

ஒரு நாள் இரவிலே நான் நஜ்ரான் வாசிகளிடம் சென்றேன். அப்பொழுது அவர்களின் புத்தகத்திலிருந்து ஒரு புத்தகத்தை நான் பெற்றுக்கொண்டேன். மேலும் நான் அதனை வாசித்த போது தெளிவான வழிகேடுகளை அதிலே கண்டுக்கொண்டேன்.

சில குர்ஆன் வசனங்களுக்கு அவர்கள் வியாக்கியானம் செய்யும் போது:  அல்லாஹ் உங்களுக்கு ஒரு மாட்டை அறுத்து பலியிடுமாறு ஏவுகின்றான்  அல் பகறா: 67

அந்த மாடு ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) என்று கூறுகின்றனர்.

ஒவ்வொரு  முஸ்லிமும் குர்ஆனை ஒதும் போது அது மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்களது விடயத்திலும் மேலும் அவரது கூட்டத்தாரின் விடயத்திலும் கூறப்பட்டது என்பதை அறிந்துக்கொள்வான்.

மேலும் குர்ஆனிலே இடம் பெற்ற  சூனியம் மற்றும் ஷைத்தான் என்ற இரண்டு  சொற்களுக்கும்   வியாக்கியானம் செய்யும் போது அவ்விரண்டும் அபூ பக்ர் மற்றும் உமர் (ரலியல்லாஹு அன்ஹுமா)  என்றும் கூறுகின்றனர் .

அவ்விருவரின் நிலைப்பாடுகளும் நபி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்திலேயும் மேலும் அவரது காலத்திற்குப் பின்னரும் இஸ்லாத்திலே அனைத்து முஸ்லிமிடத்திலும் அறியப்பட்ட ஒரு விடயமாக இருந்துக்கொண்டிருக்கின்றது .

மேலும் அதிகமான ஹதீஸ்களில் வந்தது போல,  நிச்சயமாக அவ்விருவரும் சுவனவாசிகளில் உள்ளவர்களாவர் .

மேலும் அவர்களை பின்பற்றக்கூடியவர்கள், நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரை விரும்புகின்றார்கள், என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினரை (அல்லாஹ் அவர்களுக்கு இரக்கம் காட்டுவானாக) விரும்புதல் என்ற பொய்யான வாதத்தின் காரணமாக எத்தனையோ சோதனைகள் இஸ்லாத்திற்குள் நுழைந்து விட்டன!

இவ்வாறான முட்டாள் தனங்கள் மேலும் அசத்தியங்கள் மேலும் பொய்யான வாதங்களின் காரணமாகவும், மேலும் முஸ்லிம்களில் அதிகமானவர்கள் அவர்களின் மார்க்க விடயத்தில் மடமையில் இருந்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காகவும் ,  அவர்களே  எங்களிடம் வந்து அவர்களில் அதிகமானவர்கள் தடுமாற்றத்தில் இருப்பதாக அறிவிக்கும் அளவுக்கு விடயம் மாறி விட்டதின்  காரணத்தாலும், மேலும் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்களை விட்டும் முஸ்லிம்களை விரட்டக்கூடிய கம்யூனிசவாதிகள், மறுமைநாளில் மறுபடியும் மக்கள் உயிர்ப் பெற்று எழும்புவார்கள் என்பதை  மறுக்கக்கூடியவர்கள், ராபிழாக்கள், சூபிய்யாக்கள் போன்றவர்களிடமிருந்து வரக்கூடிய சபிக்கப்பட்ட வாதங்களின் காரணத்தினாலும், யமனில் இருக்கக்கூடிய அஹ்லுஸ்ஸுன்னாவுடைய அழைப்புப்பணியைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பிலே ஒன்று சேர்க்கலாம் என்று நான் கருதினேன்.

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.



நான்  அல்லாஹ்வின் நேர்வழியை  வேண்டியவனாகக் கூறுகின்றேன்:

இதுவே எமது அழைப்புப்பணியும்; மேலும் எங்களுடைய கொள்கை கோட்பாடும்.

1.  அல்லாஹ்வைக் கொண்டும் மேலும் அவனுடைய பெயர்களைக் கொண்டும் மேலும் அவனுடைய பண்புகளைக் கொண்டும், அல்லாஹ்வுடைய வேதத்திலும் (குர்ஆனிலும்) மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவிலும் எவ்வாறு அவைகள் வந்திருக்கின்றனவோ! அவ்வாறே,  அதனுடைய சொற்களில் எந்த ஒரு திருப்பு முனையைச்  செய்யாமலும் மேலும் அதனுடைய கருத்துக்களில்  எந்த ஒரு பொய்யான வியாக்கியானங்களை  செய்யாமலும் மேலும் அதற்கு உதாரணம் கற்பிக்காமலும் மேலும் அவைகளுக்கு ஒப்புவமை காட்டாமலும் மேலும் அதனை மறுத்துவிடாமலும்,  நாம்  விசுவாசங்கொள்கின்றோம்.

2.  அல்லாஹ்வை அன்றி வேறு எவரும் சக்தி பெறாத விடயங்களில், (அவைகளை அவர்களுக்கு செய்து தருமாறு) மரணித்தவர்களையும்; அதே போன்றே உயிருள்ளவர்களையும் அழைப்பதும் மேலும் அவர்களிடத்தில் (அது விடயத்தில்) உதவி தேடுவதும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் ஒரு விடயமாகும்.

3. மேலும் அவ்வாறே குப்பிகளிலும்; (மார்க்கம்   தடுத்த) ஓதிப்பார்த்தல்களிலும், நிச்சயமாக அவைகள் அல்லாஹ்வுடன் சேர்ந்தோ அல்லது அல்லாஹ்வையன்றி (அவைகள் மாத்திரம்) பிரயோசனமளிக்கும் என்று நம்பிக்கைக் கொள்வதும் இணைவைப்பாகும். மேலும்  (இவ்வாறான)  நம்பிக்கைகளைக் கொள்ளாமல் அவ்வாறான விடயங்களில் ஈடுபடுவது,  மார்க்கத்தில் ஏற்படுத்தப்பட்ட பொய்யான நூதன அனுஷ்டானமாகும்.

4. வேதத்தையும் (அல் குர்ஆனையும்) மேலும் அஸ்ஸுன்னாவையும் வெளிரங்கமாகவே (அவைகளுடைய வெளிரங்கமான கருத்துக்களையே) நாம் எடுத்துக்கொள்வோம். மேலும் அல் குர்ஆனிலிருந்தும்; ஸுன்னாவிலிருந்தும்,   அவைகளின்  வெளிரங்கமான கருத்திற்கு மாறுபட்ட ஒரு கருத்தை  வேண்டி நிற்கக்கூடிய ஒரு ஆதாரத்தைக் கொண்டே அன்றி, நாம் வெளிரங்கமான கருத்திற்கு மாறுபட்ட கருத்தைச் சொல்ல  மாட்டோம்.

5. மறுமை நாளிலே, எந்தவொரு முறை கற்பித்தலுமின்றி நிச்சயமாக முஃமின்கள் அவர்களுடைய இரட்சகனை காண்பார்கள் என்று நாம் விசுவாசங்கொள்கின்றோம். மேலும் பரிந்துரை (ஷபாஅத்) என்பது இருக்கின்றது என்பதைக்கொண்டும்; நரகத்திலிருந்து ஏகத்துவவாதிகள்  (தவ்ஹீத்வாதிகள்) வெளியேறி விடுவார்கள் என்பதைக்கொண்டும் நாம் விசுவாசங்கொள்கின்றோம்.

6. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களை நாம் விரும்புகின்றோம். அவர்களுக்கு எதிராக பேசக்கூடியவர்களை நாம் வெறுக்கின்றோம். மேலும் அவர்களுடைய விடயத்தில் குறைக்கூறுவது மார்க்கத்தில் குறைக்கூறுவதாகும் என்று நாம் நம்பிக்கை கொள்கின்றோம். ஏனென்றால் அவர்களே அதனை  எமக்கு சுமந்து வரக்கூடியவர்களாக இருந்தனர். மேலும் நபித்துவத்தின்  குடும்பத்தை மார்க்கம் எவ்வாறு விரும்புமாறு கூறியிருக்கின்றதோ அவ்வாறே நாம் விரும்புகின்றோம்.

7. மேலும் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சார்ந்த ஹதீஸ் கலை வல்லுனர்களையும் மேலும் ஏனைய இந்த உம்மத்தினுடைய ஸலபுகளையும் (முன்னோர்களையும்) விரும்புகின்றோம்.

8.  நாங்கள் தத்துவவியல் அறிவை வெறுக்கின்றோம். மேலும் நிச்சயமாக  இந்த உம்மத்தை பிரிப்பதற்குறிய மிக மகத்தான காரணங்களில் ஒன்றாக அது  இருக்கின்றது, என்றும்  நாம் கருதுகின்றோம். 

9.  மார்க்க சட்ட திட்டங்களை விளக்கும் (பிக்ஹ்) புத்தகங்களிருந்தும்; மேலும் குர்ஆன் விளக்கவுரை (தப்ஸீர்) புத்தகங்களிலிருந்தும்; மேலும் பழைய கதைகளிலிருந்தும், மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்தும், அல்லாஹ்வைத் தொட்டும் அல்லது ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் உறுதியானவற்றையே அன்றி வேறெதனையும் நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். மேலும் நிச்சயமாக  நாம்  அவைகளைத் தூக்கி எறிந்து விட்டோம் என்பதோ,  அல்லது நிச்சயமாக நாம்  அவைகளை விட்டும் தேவையற்று இருக்கின்றோம் என்று நாம் எண்ணுகின்றோம் என்பதோ இதன் கருத்தல்ல.  அவ்வாறல்லாமல், மார்க்க சட்ட திட்டங்களை அறிந்த எங்களுடைய  அறிஞர்களினதும்; மேலும் அவர்களல்லாத வேறு அறிஞர்களினதும் விளக்கங்களிலிருந்து நாம் பிரயோசனம் பெறுகின்றோம். என்றாலும் சரியான ஒரு ஆதாரத்தைக் கொண்டே அன்றி மார்க்க சட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் .

10.  குர்ஆனை; அல்லது ஆதாரம் பிடிப்பதற்கு சீரான ஹதீஸையே அன்றி எமது நூல்களிலே நாம் எழுத மாட்டோம். மேலும் எமது பாடங்களிலே நாம் கற்றுக் கொடுக்க மாட்டோம். (அவைகளைக் கொண்டே அன்றி) நாம் எமது குத்பா பிரசங்கங்களை செய்ய மாட்டோம். அதிகமான எழுத்தாளர்களிடமும், பேச்சாளர்களிடமும் காணப்படுகின்ற பொய்யான கதைகளை, பலஹீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் கொண்டும் எழுதுவதையும், பேசுவதையும் அவர்களிடமிருந்து   நாம் வெறுக்கின்றோம்.

11.  எந்த ஒரு முஸ்லிமையும், அல்லாஹ்வைக்கொண்டு இணைவைப்பது அல்லது தொழுகையை விடுவது; இன்னும் மதம் மாறுவது போன்ற பாவங்களைக் கொண்டே அன்றி வேறு எந்த ஒரு பாவத்தைக்கொண்டும் அவன் இறை நிராகரிப்பாளன் என்று நாம் கூற மாட்டோம். அல்லாஹ் எங்களையும்; உங்களையும் அவைகளை விட்டும் பாதுகாப்பானாக!

12. நிச்சயமாக அல் குர்ஆன் அல்லாஹ்வுடைய பேச்சாகும்; அது படைக்கப்பட்டதல்ல என்று நாம் விசுவாசங்கொள்கின்றோம்.

13. எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் அவருடன் சத்தியத்திலே உதவி புரிவது கடமையாகும் என்று நாம் காண்கின்றோம். மடமைக்கால அழைப்புக்களிலிருந்து அல்லாஹ்விடத்தில் நாம்  நிரபராதிகளாக ஆகிவிடுகின்றோம்.

14. முஸ்லிம்களின் ஆட்சியாளர்கள், அவர்கள் முஸ்லிம்களாக இருக்கும் காலமெல்லாம், நாம் அவர்களுக்கு எதிராக வெளியேறுவதை எமது கொள்கையாக கருத மாட்டோம். மேலும் ஆட்சி கவிழ்ப்புகள் (சமூகத்தை) சீர் செய்வதற்குறிய ஒரு காரணமாகும் என்று நாம் கருத மாட்டோம். மாறாக அது சமூகத்தை சீர் கெடுக்கும் ஒரு காரணமாகும் .  “அதன்” என்று சொல்லப்படக்கூடிய ஊருடைய ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில்; அவர்கள் நாத்திகத்திலிருந்தும் மேலும் சோசலிசத்திலிருந்தும் மேலும்  இறை நிராகரிப்பின் தலைவர்களான லெனின், கால்மார்க்ஸ் மேலும் இவர்கள் இருவருமல்லாதவர்களையும், வணங்குவதின் பக்கம் மக்களை அழைப்பதிலிருந்தும் அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீளும் வரைக்கும்  அவர்களுடன் கட்டாயமாக போரிட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

* அடிக்குறிப்பு:  அவர்களை அல்லாஹ் கடுமையான; சக்தி வாய்ந்த பிடியாக பிடித்து விட்டான். இப்போதய நிலமையை பொறுத்தமட்டில்; அது இஸ்லாமிய அரசாங்கமாக இருந்துக்கொண்டிருக்கின்றது.

15. தற்காலத்தில் அதிகமாகக் காணப்படுகின்ற இந்த கூட்டங்கள், முஸ்லிம்களைப் பிரிப்பதற்கும், மேலும் அவர்களைப் பலவீனப்படுத்துவதற்கும் ஒரு காரணமாக இருக்கின்றன என்பதை நாம் காண்கின்றோம்.

16. அல் இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற கூட்டத்தினுடைய அழைப்புப்பணி இந்த சமூகத்தை சீர்திருத்துவதற்கு சீரான ஒன்றாகவும், மேலும் அதற்கு சக்தி பெற்ற ஒன்றாகவும் இல்லை என்பதை நாம் காண்கின்றோம். ஏனென்றால் திட்டமாகவே அது உயிரோட்டமுள்ள ஒரு அழைப்புப்பணியாக இல்லாமல் அரசியல் சார்ந்த ஒரு அழைப்புப்பணியாக மாறிவிட்டது.

மேலும் அது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட ஒரு அழைப்புப்பணியாகவும் மாறிவிட்டது. ஏனென்றால் அது அறியப்படாத ஒருவரிடம் உறுதிமொழி கொடுப்பதின் பக்கம் அழைக்கக்கூடியதாக இருக்கின்றது. மேலும் அது குழப்பத்தின் பக்கம் அழைக்கின்ற அழைப்புப்பணியாகவும் மாறிவிட்டது. இன்னும் அது மடமையின் மீது நிற்கக்கூடியதாகவும், அதன் மீதே செல்லக்கூடியதாகவும் இருந்துக் கொண்டிருக்கின்றது. அக்கூட்டத்திலே வேலை செய்யக்கூடிய சில சிறப்புக்குரிய சகோதரர்கள் முஸ்லிம்களுக்கு எந்தவித பிரயோசனத்தையும் தராத அந்த விடயத்திலே அவர்களுடைய நேரத்தை வீணடிக்காமல் இருப்பதற்காக அதை விட்டு விலகி நடந்துக்கொள்ளட்டும் என்று நாம் அவர்களுக்கு உபதேசம் செய்கின்றோம். மேலும்   இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் நிச்சயமாக அல்லாஹ் வெற்றியைக் கொடுப்பான் என்பதே ஒரு முஸ்லிமுடைய எண்ணமாக இருக்க வேண்டும்.

17.  மேலும் தப்லீக் ஜமாஅத்தை பொருத்தமட்டில், அவர்களைப்பற்றி சிறப்புக்குரிய சகோதரர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அல் உஸாபீ அவர்கள் எழுதியவற்றை நான் உங்களுக்கு முன்வைக்கின்றேன்.

(மொழிபெயர்த்தவர் கூறுகின்றார்: முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அல் உஸாபீ என்று அழைக்கப்படுகின்ற இந்நபர் அஷ்ஷேய்ஹ் முக்பில் ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய மாணவர்களில் ஒருவராக இருந்தார். பிறகு அவருடைய மரணத்திற்குப் பின்னால் ஒரு இயக்கவாதியாக மாறிவிட்டார். மேலும் இவரை விட்டும் பல உலமாக்களும் எச்சரித்திருக்கின்றனர். அந்த உலமாக்களின் வரிசையில் எங்களுடைய ஷேய்ஹான அல் அல்லாமாஹ் யஹ்யா இப்னு அலீ அல் ஹஜூரீ ஹபிழகுல்லாஹ் அவர்களும் ஒருவராவார்.)
எனவே அவர் அதிலே கூறுகின்றார்:  - (அவரை அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்)

1. அவர்கள் [ தப்லீக் ஜமாஅத்தினர் ] பலவீனமான   ஹதீஸ்களைக்கொண்டும், மேலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட, அடிப்படையே இல்லாத ஹதீஸ்களைக்கொண்டும் அமல் செய்கின்றனர்.

2.  அவர்களிடத்தில் அதிகமான பித்அத்துக்கள் [மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்ட விடயங்கள்] காணப்படுகின்றன.  இன்னும் நிச்சயமாக அவர்களுடைய அழைப்புப்பணி பித்அத்துகளின் மீதே அமைக்கப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் அவர்களுடைய அழைப்புப்பணியின் ஏழ்மையான அடிப்படைகளாக, வரையறுக்கப்பட்ட சில காலங்களுக்கு வெளியேறிச்செல்வது இருந்துக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு மாதத்திலும் மூன்று நாட்கள் வெளியேறிச் செல்வது. ஒரு வருடத்தில் நாற்பது நாட்கள் வெளியேறிச் செல்வது, மேலும் வாழ்நாளில் நான்கு மாதங்கள் வெளியேறிச் செல்வது, இன்னும் ஒவ்வொரு கிழமையிலும் இரண்டு சுற்றுக்கள் இருக்கின்றன, ஒரு சுற்று நீ தொழுகின்ற பள்ளியிலும், இரண்டாவது சுற்று வேறு பள்ளிகளுக்கு இடம்மாறுவதாகவும் இருக்கும்.

ஒவ்வொரு நாளும் இரண்டு சபைகள். ஒரு சபை நீ தொழுகின்ற பள்ளியிலும், இரண்டாவது சபை வீட்டிலுமாக இருக்கும்.

அதனை விட்டுவிடாமல் தொடராக கடைபிடித்து வரக்கூடிய நபரையே அன்றி வேறு எவரையும் அவர்கள் பொருந்திக்கொள்ள மாட்டார்கள்.

மேலும் நிச்சயமாக அது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டதாகும். அவ்விடயத்திலே எந்தவித ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கிவைக்காத ஒன்றாக அது இருந்துக்கொண்டிருக்கின்றது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

3. நிச்சயமாக ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பு விடுப்பது இந்த உம்மத்தை விரண்டோடச்செய்யக்கூடியதாகும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

4. நிச்சயமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சுன்னாவின் பக்கம் அழைப்பு விடுப்பது இந்த உம்மத்தை விரண்டோடச்செய்யக்கூடியதாக இருக்கின்றது என்று அவர்கள் கருதுகின்றனர்.

5. ஹுதைதா எனும் ஊரிலே இருக்கக்கூடிய அவர்களுடைய தலைவர் மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய ஒரு பித்அத், அவர்களுக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு சுன்னாவை விட மிகச்சிறந்ததாகும் என்று கூறுகின்றார்.

6. அஹ்லுஸ்ஸுன்னாவுக்கு எதிர்ப்பை காட்டக்கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.

7. மறைவாகவும், மேலும் தெளிவாகவும் பிரயோசனமான அறிவை விட்டும் மக்களை பற்றற்றவர்களாக ஆக்கிவிடுகின்றனர்.

8.  நிச்சயமாக அவர்களுடைய பாதையை விட்டால் மக்களுக்கு வேறு பாதைகளில் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் கருதுகின்றனர். மேலும் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய கப்பலை அதற்கு உதாரணமாக காட்டுகின்றனர். அதிலே எவர் ஏறி விட்டாரோ அவர் பாதுகாப்பு அடைந்து விடுவார், எவர் ஏறி விடவில்லையோ அவர் அழிந்து விடுவார். இன்னும் அவர்கள் கூறுகின்றனர்: நிச்சயமாக எங்களுடைய அழைப்புப்பணி நூஹுடைய கப்பலை போன்றதாகும்.  இந்த உதாரணத்தை நான் ஜோர்தானிலும், யெமனிலும் அவர்களிடமிருந்து செவியுற்று இருக்கின்றேன்.

9. அல்லாஹ்வே வணங்கப்படத்தகுதியானவன் என்ற அந்த ஏகத்துவத்திலும், மேலும் அவனது பெயர்கள், பண்புகள் சம்பந்தப்பட்ட ஏகத்துவ விடயங்களிலும் முக்கியத்துவம் காட்டமாட்டார்கள்.

10. நிச்சயமாக அவர்கள் அறிவைத்தேடுவதற்கு தயாரானவர்களாக இல்லை. அறிவைத்தேடுவதற்காக செலவளிக்கப்படக்கூடிய நேரத்தை வீணானதாகவும் அவர்கள் கருதுகின்றனர்.

மேலும் மேற்சொல்லப்படாத இன்னும் பல விடயங்களும் அவர்களிடத்தில் இருக்கின்றன.

18. அல் குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் நாம் விளங்கும் போது இந்த உம்மத்தினுடைய ஹதீஸ் கலையைச்சார்ந்த ஸலபுகளின் விளக்கத்தைக்கொண்டு விளங்க வேண்டும் என்று நாம் வரையறுத்து வைத்திருக்கின்றோம். அவர்களில் இருக்கக்கூடிய தனி நபர்களில் எவரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற மாட்டோம். மாற்றமாக எவர் சத்தியத்தைக் கொண்டு வருகின்றாரோ அதனை நாம் எடுத்துக்கொள்வோம். மேலும் தாம் ஸலபிக்கொள்கையில் இருப்பதாக வாதிடுகின்ற சிலரை நாம் அறிந்திருக்கின்றோம், ஸபிக்கொள்கை அவர்களை விட்டும் நிரபராதியாக இருக்கின்றது. ஏனெனில் அல்லாஹ் ஹராமாக்கிய விடயங்களை ஹலாலாக்கிக்கொண்டு இந்த சமுதாயம் சென்றுகொண்டிருக்கின்றது.

(அவர்கள் அப்துர் ரஹ்மான் அப்துல் ஹாலிக்குடையவும் மேலும் முஹம்மத் ஸுரூருடையவும் தோழர்களைப்போன்றவர்களாவர்.)

19. நிச்சயமாக அரசியல் மார்க்கத்தில் இருக்கின்ற ஒரு பகுதி என்று நாம் நம்பிக்கை கொள்கின்றோம். அரசியலை விட்டும் மார்க்கத்தைப் பிரிப்பதற்கு முயற்சி செய்கின்றவர்கள்; மார்க்கத்தை உடைத்துத் தரைமட்டமாக்கி பிரச்சினைகளைப் பரப்பிவிடுவதற்குமே  முயற்சி செய்கின்றனர். இவ்வாறே சில இஸ்லாமிய நாடுகளில் பரவிக்காணப்படும் "மார்க்கம் அல்லாஹ்வுக்குரியது  நாடு அனைவருக்குமுரியது" என்ற இந்தக் கோஷம் மடமைக்காலத்தின் ஓர் அழைப்பாகும். மாற்றமாக அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதாகும்.

20. அல் குர்ஆன் மற்றும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவின் பக்கம் திரும்பும் வரைக்கும் முஸ்லிம்களுக்கு எந்தவொரு சக்தியும் கிடையாது. மேலும் எந்தவொரு வெற்றியும் கிடையாது என்று நாம் நம்பிக்கை கொள்கின்றோம்.

21. தற்காலத்தில் இருக்கக்கூடிய கட்சிகளை நாம் வெறுக்கின்றோம். அவைகளிலிருந்தும் உள்ளவைகள் தான்; நாத்தீகக் கொள்கைகளைச் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி, இறுதித்தீர்ப்பு நாளை மறுக்கக்கூடிய கட்சி, நாஸிர் என்பவனுடைய கட்சி, இதே கொள்கையைச் சார்ந்த சோசலிசக் கட்சியும், மேலும் மார்க்கத்தை விட்டும் வெளியேறிய ராபிழாக்களைச் சேர்ந்த கட்சிகளுமாகும்.

நாம் பார்க்கின்றோம் நிச்சயமாக மக்கள் இரு பிரிவினர்களாகப் பிரிந்து காணப்படுகின்றார்கள்.

ரஹ்மானுடைய பிரிவு: அவர்கள்  இஸ்லாத்தினுடைய தூண்களோடும், ஈமானுடைய தூண்களோடும் ஒத்துப்போகக்கூடிய நிலையிலும்,  அல்லாஹ்வுடைய மார்க்கத்திலிருந்து எந்தவொரு விடயத்தையும் மறுக்காத நிலையிலும் இருப்பார்கள்.

ஷைத்தானுடைய பிரிவு: அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு எதிராகப் போராடக்கூடியவர்களாக இருப்பார்கள்.

22. மார்க்கத்தை தொலிகள் என்றும் பழங்கள் என்றும் பிரிப்பவர்களின் மீது நாம் மறுப்புத் தெரிவிக்கின்றோம். அது மார்க்கத்தை இடித்து விடக்கூடிய ஒரு அழைப்பாகும் என்பதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.

23. மக்களை ஸுன்னாவுடைய அறிவிலிருந்து எவன் பற்றற்றவர்களாக்கி, இது அதற்குரிய நேரமில்லை என்று கூறுகின்றானோ அவனுடைய விடயத்தில் நாம் மறுப்புத் தெரிவிக்கின்றோம். மேலும் இவ்வாறே எவன் (மக்களை) ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸுன்னாவைக்கொண்டு அமல் செய்வதை விட்டும் பற்றற்றவர்களாக்கி விடுகின்றானோ அவனின் மீதும் நாம் மறுப்புத் தெரிவிக்கின்றோம்.

24. எது மிக முக்கியமானதாக இருக்கின்றதோ அதனை முற்படுத்த வேண்டும் என்பதை நாம் காணுகின்றோம்.  எனவே கொள்கைக் கோட்பாடுகளை சீர் செய்து கொள்வதில் முக்கியத்துவம் காட்டுவது முஸ்லிம்களின் மீது கடமையாக இருந்து கொண்டிருக்கின்றது. பிறகு கம்யூனிஸ்ட் வாதிகளையும், மேலும் இறுதித் தீர்ப்பு நாளை மறுக்கக்கூடிய கட்சியையும் இல்லாமல் செய்து விட வேண்டும். அவ்விடயம் அல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் பற்றிப்பிடிப்பதைக்கொண்டு ஒற்றுமைப்படுவதின் மூலமாகவே அன்றி ஆகி விடமாட்டாது.

25. நிச்சயமாக ராபிழாக்களின் கொள்கையைச் சார்ந்தவனையும், ஷீயாக்களின் கொள்கையைச் சார்ந்தவனையும், சூபிய்யாக்களின் கொள்கையைச் சார்ந்தவனையும் மேலும் சுன்னாவை பற்றிப்பிடிக்கக்கூடியவனையும் இணைத்து செயற்படக்கூடிய கூட்டமானது, எதிரிகளுக்கு முகங்கொடுப்பதற்கு சக்தி பெற மாட்டது என்பதை நாம் காண்கின்றோம். ஏனெனில் எதிரிகளுக்கு முகங்கொடுக்கின்ற விடயமென்பது, உண்மையான சகோதரத்துவத்தைக்கொண்டும்;  கொள்கைக்கோட்பாட்டில் ஒன்றுபடுவதைக்கொண்டுமே அன்றி ஆகி விடமாட்டாது.

26. அல்லாஹ்வின் பாதையின் பக்கம் அழைக்கக்கூடிய அழைப்பாளர்கள் வஹ்ஹாபிய்யாக்கள்; (அஷ்ஷேய்ஹ் முஹம்மத் இப்னு அப்தில் வஹ்ஹாப் அந்நஜ்தீ ரஹிமஹுல்லாஹ் அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடியவர்கள்) பணத்திற்காக வேலை செய்யக்கூடியவர்கள் என்று நினைத்துக்கொண்டு; பெருமையடித்து, பிடிவாதமாக இருக்கின்றவர்களுக்கு நாம் மறுப்புத்தெரிவிக்கின்றோம். நிச்சயமாக அவர்கள் பொதுமக்களுக்கும் மேலும் அறிஞர்களுக்கும் மத்தியில் ஒரு பிரிவை ஏற்படுத்தி விடுவதற்கு நாடுகின்றார்கள் என்ற அவர்களுடைய கெட்ட நோக்கத்தையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

27. எங்களுடைய அழைப்புப்பணியும், மேலும் கொள்கைக் கோட்பாடும் எமது ஆத்மாக்களை விடவும், சொத்துச் செல்வங்களை விடவும், பிள்ளைகளை விடவும் எமக்கு மிகவும் விருப்பமானதாகும். தங்க நாணயத்தைக்கொண்டும், வெள்ளி நாணயத்தைக்கொண்டும் அதை நாம் விற்றுவிடுவதற்கு  தயாரானவர்களாக இல்லை. எந்த ஒரு  ஆசை வைக்கக்கூடியவரும் எமது அழைப்புப்பணியிலே, அதனை வாங்கி விடுவதற்கு ஆசை வைத்து விடக்கூடாது என்பதற்காகவும், அவர் தங்க, வெள்ளி நாணயத்தைக் கொண்டும் எங்களை வளைத்து விட சக்தி பெற்று விடுவார் என்று அவர்  எண்ணாமல் இருப்பதற்காகவுமே நாம் இதனைக் கூறுகின்றோம்.  நிச்சயமாக அரசியல் வாதிகள் எங்களைத் தொட்டும்  இந்த விடயத்தை அறிந்து வைத்திருக்கின்றனர். இக்காரணத்தினால் தான் அவர்கள் பட்டம் பதவிகளைக்கொண்டோ அல்லது சொத்து செல்வங்களைக் கொண்டோ எங்களுக்கு ஆசை ஊட்டுவதை விட்டும் நிராசையடைந்தவர்களாக இருக்கின்றனர்.

28. இஸ்லாமிய அரசாங்கங்களை; அதிலே எந்த அளவுக்கு நலவு இருக்கின்றதோ அந்த அளவுக்கு நாம் அவைகளை விரும்புவோம். அவைகளில் கெடுதி இருப்பதற்காக வேண்டி நாம் அவைகளை வெறுக்கின்றோம். மேலும் இது தெளிவாகவே இறை நிராகரிப்புத்தான் என்பதை நாம் கண்டுகொண்டால்;  அல்லாஹ்விடமிருந்து அதை தெளிவு படுத்தக்கூடிய ஒரு ஆதாரம் எங்களிடம் இருந்தாலே அன்றி அரசாங்கங்களுக்கு எதிராக வெளிக்கிளம்பிச் செல்வதை நாம் ஆகுமாக்க மாட்டோம். (தெளிவான இறை நிராகரிப்பை அவர்களிடமிருந்து நாம் கண்டால்; அவர்களுக்கு எதிராக வெளிக்கிளம்புவதற்கு முன்னால்) ஒரு நிபந்தனையை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அது என்னவென்றால், அவர்களுக்கு எதிராக  வெளிக்கிளம்பி செல்வதற்கு சக்தி பெற்றவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் போர் புரியும் போது அப்போரில் இரு தரப்பினரும் முஸ்லிம்களாக இருக்கக் கூடாது. ஏனெனில் நிச்சயமாக ஆட்சியாளர்கள் அவர்களுக்கு எதிராக வெளிக்கிளம்புபவர்களை  நாட்டை சேதப்படுத்தக்கூடியவர்கள் என்றும், சீர்க்குலைக்கக்கூடியவர்கள் என்றும் படம்பிடித்துக்காட்டுகின்றனர். மேலும் இதனுடன் தொடர்புபட்ட இன்னும் சில நிபந்தனைகள் எமது வேறு சில புத்தகங்களிலிருந்து மீட்டிக்கொள்ளப்பட வேண்டும்.

29. எங்களுக்கு எவர் நல்ல விடயங்களின் பக்கம் வழிகாட்டி, நல்லுபதேசமும் செய்கின்றாரோ; அவைகளை நாம் அவர்களிடமிருந்து ஏற்றுக்கொள்வோம். நிச்சயமாக  நாங்கள் அறிவை படிக்கின்ற மாணவர்கள். நாம் சரியாகவும் சொல்வோம், (சிலவேளைகளில்) பிழை விட்டும் விடுவோம். நாம் அறிவுடையவர்களாகவும் இருக்கின்றோம், (சில விடயங்களில்) அறிவற்றவர்களாகவும் இருப்போம் என்பதையும் நாம் அறிந்து வைத்திருக்கின்றோம்.

30. தற்காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற சுன்னாவைப் பின்பற்றக்கூடிய அறிஞர்களை நாம் விரும்புகின்றோம். அவர்களிடமிருந்து பிரயோசனங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் ஆசை வைக்கின்றோம். அதிகமானவர்கள் அவர்களிடமிருந்து பிரயோசனம் பெறாது  அவர்களைத் துண்டித்து நடப்பதைப் பார்த்து நாம் கவலைப்படுகின்றோம்.

31. அல்லாஹ்வினுடைய வேதத்திலிருந்தும், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறுதியான சுன்னாவிலிருந்தும் இருக்கின்ற ஒரு ஆதாரத்தைக் கொண்டே அன்றி நாம் மார்க்கத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

32. நாஸ்த்தீகக் கொள்கையின் தலைவர்களில் ஒருவனான லெனினினுடையவும், மேலும் (அவர்களைச் சார்ந்த) அவனல்லாத வேறு மனிதர்களுடையவும் கப்ருஸ்த்தானத்தை மகத்துவப்படுத்துவதற்காக வேண்டி சந்திக்கச் செல்கின்ற இவ்விடயத்தில் (முஸ்லிம்களாக இருக்கின்ற) பொறுப்பாளர்களின் மீதும் மேலும் அவர்களல்லாதவர்களின் மீதும் நாம் மறுப்புத்தெரிவிக்கின்றோம்.

33. முஸ்லிம்களை ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்கள் இஸ்லாத்தினுடைய எதிரிகளுடன், (அவர்கள் அமெரிக்கா நாட்டைச் சார்ந்தவர்களாக, கம்யூனிஸ்ட் வாதிகளாக அல்லது யாராக இருந்தாலும் சரி அவர்களுடன்) ஒற்றுமையாக இருப்பதற்கு எதிராக நாம் மறுப்புத்தெரிவிக்கின்றோம்.

34. ஒரு கூட்டத்திற்கு; எல்லை மீறி (அளவு கடந்து) பற்றுக்கொள்வது, அதாவது அரபு வம்சாவளியைச் சார்ந்த சிலருக்கு அவர்கள் அசத்தியத்தைக் கூறினாலும் கூட அவர்களே சரியான கொள்கையில் உள்ளனர் என்று அவர்களுடைய விடயத்தில் அளவு கடந்து செல்வது போன்ற மடமைக்கால அழைப்புக்களை நாம் மறுக்கின்றோம். மேலும் அவைகளை மடமைக்கால அழைப்புக்களாகவும்,  முஸ்லிம்களை பின்தள்ளிய  காரணங்களில் ஒன்றாகவும் இருக்கின்றன என்று நாம்  கணிக்கின்றோம்.

35. அல்லாஹ் இந்த மார்க்கத்தை எவரைக் கொண்டு புதுப்பிப்பானோ அப்படியான மார்க்கத்தை புதுப்பிக்கக்கூடிய ஒருவரை நாம் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருக்கின்றோம். அபூ தாவூத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய ஸுனன் என்ற நூலிலே, அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அறிவிக்கின்றார்கள்:  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “ஒவ்வொரு நூறு வருடத்தின் ஆரம்பத்திலும் இந்த உம்மத்திற்கு அதனுடைய மார்க்கத்தைப் புதுப்பிற்கக்கூடிய ஒருவரை நிச்சயமாக அல்லாஹ் அனுப்பி வைப்பான்.”

மேலும் இஸ்லாமிய எழுச்சி அவருக்கு விரித்துக்கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் நாம் ஆசை வைக்கின்றோம்.

36. மஹ்தீ மற்றும் தஜ்ஜாலின் வருகை, மேலும் ஈஸா இப்னு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குவது சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ்களை மறுக்கின்றவன் வழிகேட்டிலே இருக்கின்றான் என்று நாம் நம்பிக்கை கொள்கின்றோம். (மஹ்தீ என்று நாம் கூறியதைக்கொண்டு ராபிழாக்களுடைய மஹ்தியை நாம் நாடவில்லை); மாற்றமாக அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்திலிருந்து உள்ள ஒருவராக இருப்பார். இன்னும் அவர் அஹ்லுஸ்ஸுன்னாவிலிருந்து உள்ள ஒருவராகவும் இருப்பார். இப்பூமி (அவர் வருவதற்கு முன்னால்) அநியாயத்தைக் கொண்டு நிறைந்திருந்ததைப் போல் (அவர் வந்ததன் பின்பு) நீதியைக்கொண்டும், நேர்மையைக்கொண்டும் இப்பூமியை அவர் நிறைப்பார். மேலும் அவர் அஹ்லுஸ்ஸுன்னாவைச் சார்ந்தவராக இருப்பார் என்று நாம் கூறினோம். ஏனெனில் சிறப்புக்குறிய ஸஹாபாக்களை ஏசுவது நேர்மையிலிருந்தும் உள்ள ஒரு விடயமல்ல.

37. இவைகளே எங்களுடைய கொள்கைக் கோட்பாடுகள். மேலும் எமது அழைப்புப்பணியைப் பற்றிப் பேசக்கூடிய மூச்சுக்களுமாகும்.  இவைகளை இதனுடைய ஆதாரங்களுடன் கூறுவதானால், இப்புத்தகம் நீண்டதாக ஆகிவிடும்.

(எனவே தான் இவைகளுக்குரிய ஆதாரங்களை இமாமவர்கள் இப்புத்தகத்திலே குறிப்பிடவில்லை.)

மேலும் இவ்விடயங்களின் அதிகமான ஆதாரங்களை "அல் மஹ்ரஜ் மினல் பித்னா" என்ற புத்தகத்திலே நான் குறிப்பிட்டிருக்கின்றேன். எவரிடத்தில் இப்புத்தகத்திற்கு  முரணான கருத்து இருக்கின்றதோ, அவர் சத்தியத்தைக் கூறுபவராக  இருந்தால், உபதேசத்தை ஏற்றுக்கொள்வதற்கும், அவர் பிழையாகக் கூறக்கூடியவராக இருந்தால் அவருடன் விவாதம் செய்வதற்கும், மேலும் அவன் பிடிவாதக்காரனாக இருந்தால், அவனை விட்டும் புரக்கணித்துச் செல்வதற்கும் நாம் தயாரானவர்களாக இருக்கின்றோம்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

இவைகளேயே இச்சிறிய நூலிலே நாம் உங்களுக்கு முன்வைக்கின்றோம். மேலும் அவசியமாக அறியப்பட வேண்டிய ஒன்று தான் இப்புத்தகம் எங்களுடை அழைப்புப்பணியுடை மற்றும் எமது கொள்கை கோட்பாடுகளுடைய  அனைத்து விடயங்களையும் உள்ளடக்கியதாக இல்லை. ஏனெனில் எங்களுடைய அழைப்புப்பணி அல் குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரைக்கும் காணப்படுகின்றது.

அல்லாஹ்வே எங்களுக்கு போதுமானவனாவான். அவனே பொறுப்பாளர்களில் சிறந்தவனாக இருக்கின்றான். மேலும் எந்த ஒரு சூழ்ச்சியும் இன்னும் சக்தியும் அல்லாஹ்வுக்கே அன்றி வேறில்லை.

முற்றும்.

அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் .
Previous Post Next Post