உடலுறவுக்குத் தயாராதல் :
ஆரோக்கியமான உடலுறவைப் பராமரிப்பதற்கு, உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் தயாராகுதல் அதன் நீடிப்புக்கு முக்கியமானது.உடலுறவுக்குத் தயாராகுதல், புணர்ச்சிக்கு நிகராக முக்கியம் பெற்றுள்ளது. இருபாலரும் தங்களைத் தயாராக்கிக்கொள்வதில் கவனமாக இருப்பது மூலம், தங்கள் இணைவில் முழுமையான இன்பம் காணலாம். இந்த விஷயத்தில் அசட்டையாக இருப்பது,
விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் மனைவிமார்களின் வீடுகளுக்குள் நுழையும்போது, தம் வாயையும் பற்களையும் பல்துலக்கி (சிவாக்) கொண்டு சுத்தம்செய்வது வழக்கம். ஷுரைஹ் இப்னு ஹானி அறிவிக்கிறார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் வீட்டினுள் நுழைந்ததும் முதலில் என்ன செய்தார்கள்! என்று நான் ஆயிஷாவிடம் வினவினேன். “சிவாக்கைப்
பயன்படுத்துவார்கள்' என அவர் பதிலளித்தார்.” (சஹீஹ் முஸ்லிம் 253)
நீண்ட பயணங்களிலிருந்து திரும்பி வருகையில் அல்லாஹ்வின் தூதரும் அவருடைய தோழர்களும் இரவு நேரத்தில் தங்களுடைய வீடுகளுக்குள் எதிர்பாராவிதமாக நுழையமாட்டார்கள். மாறாக,
தங்கள் மனைவிகளுக்கு முன்கூட்டியே செய்தியனுப்பி, அவர்கள் தங்கள் கணவர்களுக்குத் தயாராகவிருக்க அவகாசம் அளிப்பார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் ஒரு போர் நடவடிக்கைக்குச் சென்றிருந்தோம். நாங்கள் மதீனாவுக்குத் திரும்பியபோது, எங்கள் வீடுகளுக்குச் செல்ல நாடினோம். அப்போது நபியவர்கள் (ஸல்) கூறினார்கள்: “மாலையில் பின்நேரம்வரை காத்திருந்து (வீடுகளுக்குச்) செல்லவும்.
இதன் மூலம், கலைந்த தலையுடன் இருக்கும் பெண் தன் கூந்தலைச் சீவி சரி செய்து கொள்வாள்; தன் கணவன் உடன் இல்லாத நிலையில் உள்ள
பெண் தன் பருவ முடிகளை மழித்துக்கொள்வாள். ” (சஹீஹ் அல்-புஹாரி 4949 மற்றும் சஹீஹ் மூஸ்லிம் 1928, இங்கு முஸ்லிமில் உள்ள சொற்களே இடம்
பெற்றுள்ளன.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்:
உங்களில் ஒருவா் (பயணத்திலிருந்து மீண்டு) இரவுநேரத்தில் வரும் பொழுது, அவர் தன் குடும்பத்தாரிடம் ஒர் இரவு-விருந்தாளியாகச் செல்லக் கூடாது. (மாறாக சற்று தாமதிப்பது மூலம்) கணவன் வீட்டிலில்லாத பெண் தன் பருவ முடிகளை மழிக்துக்கொள்ளவும், கலைந்த தலையுடன்
இருக்கும் பெண் தன் கூந்தலைச் சீவி சரிசெய்துகொள்ளவும் இயலும்.
(சஹிஹ் அல்- புஹாரி, 4948 மற்றும் சஹிஹ் முஸ்லிம் 1928, இங்கு முஸ்லிமில் உள்ள சொற்களே இடம்பெற்றுள்ளன)
இமாம் அபுல் ஃபராஜ் இப்னு அல்-ஜவ்ஸி தம்முடைய ஸைத் அல்-ஃகாதிரில் இவ்வாறு கூறுகிறார். அதாவது, தம்பதிகள் உடலுறவுக்கென பகலிலோ இரவிலோ குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். இதன் மூலம் இருவரும் உடல், உளரீதியாக தயார்நிலையில் இருக்கவியலும். இது அவர்களின் இன்ப சுகத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, அவர்களில் ஒருவர் உடல் அல்லது உள ரீதியாகத் தயாரின்றி இருக்கும் சாத்தியத்தையும் அகற்றிவிடும். (ஸைத் அல்-ஃகாதிர். ப.280)
மனைவி தயாராதல்:
1. சுத்தமும் தற்சுகாதாரமும்:
சுத்தமும் (நழாஃபா) தூய்மையும் (தஹாரா) தற்சுகாதாரமும் இஸ்லாத்தில் அளப்பரிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள். தூய்மையே தொழுகைக்குத் திறவுகோல். தொழுகை, ஒரு முஸ்லிமின் வாழ்வில் முதன்மையான செயல். மேலும், தூய்மை அல்லாஹ்வின் அன்பை ஒருவருக்குப் பெற்றுத்தருகிறது. அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக, அதிகமாகப் பாவமன்னிப்புக் கோருபவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்; தீமையிலிருந்து விலகி இருப்பவர்களையும் தூய்மையாளர்களையும் நேசிக்கின்றான். (குர்ஆன் 2:222)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூமாலிக் அல்-அஷ்அரி (ரழி) அறிவிக்கிறார்:
துரய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்... (சஹீஸ் முஸ்விம் 284)
எனவே, ஓர் இறைநம்பிக்கையாளர் எல்லா நேரங்களிலும் சுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்கவேண்டும். இதை, தன் மணவாழ்வில் இன்னும் உறுதியாகக் கடைப்பிடிக்கவேண்டும்.
வீட்டில் கணவர் இருக்கும்போது அவருக்கு எதிரில் அழகாகவும் தூய்மையாகவும் இருக்கவேண்டுமே எனும் உணர்வே பெண்களில் சிலருக்கு இருப்பதில்லை. அதேவேளை, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அல்லது நண்பர்களைக் காணச்செல்லும் போது தங்களைத் தூய்மைப்படுத்தி அலங்கரித்துக்கொள்வதில் கவனமாக
இருக்கின்றனர். வேறுசிலர், திருமணம் ஆகுமுன் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் பெரிதும் அக்கறை காட்டுவார்கள். ஆனால், தங்கள் மணவாளனைத் தேர்ந்தெடுத்து மணம்முடித்தபின், இந்த முக்கியமான அம்சத்தில் அலட்சியம் காட்டுவார்கள்.
உண்மையில் இது இஸ்லாமிய போதனைகளுக்குப் புறம்பானது. மனைவி முதலில் தன் கணவனுக்காகவே தன்னை அலங்கரித்துக் கொள்ளவேண்டும். இதற்காக அவளுக்கு நற்கூலியும் அளிக்கப்படுகிறது. மஹ்ரம் அல்லாத (குடும்பத்தார் அல்லாத) ஆண்களின் கவனத்தைக் கவர்வதற்கு அழகுபடுத்திக்கொள்வது முழுக்க முழுக்க விலக்கப்பட்டதும் பெரும்பாவமும் ஆகும். அவள் வீட்டில் தன் கணவன்முன் இயன்றளவு மிக அழகாகவும் தூய்மையாகவும் இருப்பது அவசியம். வீட்டுவேலைகள் காரணமாக அவள் அலங்கோலமாக இருப்பின், வேலை முடிந்ததும் தன்னைத் தூய்மை செய்துகொள்ள வேண்டும், தன் வேலை முடிந்து நீண்டநேரம் ஆகியும் அலங்கோலமாகவே திரிவது அவளுக்கு உகந்ததல்ல.
ஆரோக்கியமான உடலுறவுக்கு, கசப்புணர்வோ தொந்தரவோ ஏற்படுத்தக்கூடிய அனைத்தையும் தவிர்க்கவேண்டும். மனைவி, வாய் நாற்றம் அல்லது வேறுவித உடல்நாற்றமின்றி இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில், இது ‘ஆசையைக் கெடுக்கும்' முக்கிய விஷயமாக அமையக்கூடும்.
வாய்நாற்றம் அடித்தால், அவர்கள் பள்ளிவாசலுள் நுழைவதைக்கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடுத்துள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கிறார்:
“பூண்டு அல்லது வெங்காயம் உண்டவர்கள் எம்மிடம் வரக்கூடாது” அல்லது, இப்படிக் கூறினார்: “அவர் நம் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம். தன் வீட்டிலேயே இருந்துகொள்ளட்டும்...' (சஹீஹ் அல்-புஹாரி 877)
அல்லாஹ்வின் தூதா் (ஸல்) கூறியதாக ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அறிவிக்கிறார்:
எவர் இந்தச் செடியை, அதாவது பூண்டை, உண்டாரோ - இன்னொருமுறை, 'எவர் வெங்காயமும் பூண்டும் சமையற்பூண்டும் உண்டாரோ” எனக் கூறினார்கள் அவர் நம் பள்ளிவாசலுக்கு வரவேண்டாம். ஏனெனில், ஆதமின் மக்கள் பாதிக்கப்படும் அதே பொருள்களினால் வானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். (சஹீஹ் முஸ்லிம் 564)
துர்நாற்றம் மனிதர்கள், வானவர்கள் இரு சாராரையும் பாதிக்கின்றது என்பதை மேற்கூறிய நபிமொழி காட்டுகிறது. எனில், ஒருவர் தன் துணைவருக்குத் தீங்கிழைக்காமல் தவிர்ந்திருப்பது இதைவிட
முக்கியமானது என்பதன் காரணங்களைக் குறிப்பிடத் தேவையில்லை. எனவே, மனைவி என்பவள் அழுக்கு, அசுத்தம், வாய்நாற்றம், உடல் நாற்றம் அனைத்தையும் தவிர்ப்பதில் கவனமாய் இருக்க வேண்டும்.
பற்களை இயன்றளவு அடிக்கடி துலக்கி வாய் சுத்தம் பேணவேண்டும். இதன்மூலம், முத்தமிடும்வேளை துணைவருக்குப் பாதிப்புவராமல் காக்கமுடியும், அவள் எப்பொழுதுமே தன் கணவன் முன் தான்
தூய்மையாக இருப்பதில் ஆர்வமும் அக்கறையும்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கு உடல்நாற்றம் தொடர்பாக உண்மையில் பிரச்சினை உள்ளதென்றால், அவர் மருத்துவ சிசிச்சையை நாடவேண்டும். இந்த நிலைமையை சீர்செய்ய பல எளிய, திறனுள்ள சிகிச்சைகள் உள்ளன. பொதுவாக, உடல் நாற்றத்துக்கு மருத்துவ நோய்க்குறி சோதனை அவசியமில்லை. எனினும், சரிசெய்யும் முயற்சிகளையும் மீறி அது தொடர்ந்து நீடித்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது இறந்தது.
2. அலங்கரித்தலும் அழகுபடுத்தலும்:
உடலுறவுக்குத் தயாராவதன் மிக முக்கிய பகுதி, மனைவி தன்னைக் கணவனுக்காக அழகுபடுத்திக்கொள்வதில் கவனமாய் இருப்பதே.
மனிதர்கள், அழகானவற்றைப் பார்த்து, ரசித்து, மகிழக்கூடிய காட்சி சார்ந்த படைப்பினங்களைப் பார்ப்பதிலும் அனுபவிப்பதிலும் மகிழ்ச்சி
அடைவார்கள். இதனால்தான் இஸ்லாம், ஜும்ஆ (வெள்ளிக்கிழமை தொழுகை), ஈத் (பெருநாள்) போன்ற மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்லும்போது தங்களை அலங்கரித்துச் செல்ல வேண்டும் என ஊக்குவிக்கிறது. முஸ்லிம்கள் இதர முஸ்லிம்களின் கண்களுக்கு இதமாகக் காட்சிதர வேண்டும். வாழ்க்கைத் துணைவரின் விஷயத்தில்
இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
எனவே, பெண் தன் கணவனுடன் உடலுறவுக்காகத் தன்னை அலங்கரித்துக் தயார்படுத்திக்கொள்வதன் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுக்கக் தேவையில்லை. ஹூர் அல்-அய்ன் அல்லது அழகான
கண்களையுடைய கன்னிகள்: எனும் சுவனத்து மங்கைகளை சித்திரிக்கையில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
அவர்கள் இரத்தினங்களையும் பவளங்களையும் போல அழகானவர்கள். (குர்ஆன் 55:59)
ஆகவே, அலங்காரம்செய்தல் என்பது ஒருவர் தன் துணைவரின் கவனத்தை ஈர்ப்பதற்கான வழியாகும். திடமான உடலுறவையும் அதன்மூலம் திடமான மணவாழ்வையும் நாடும் பெண்மணி, தன்னைத்
தன் கணவனுக்காக அழகுபடுத்த முனைவது அவசியம். இதன்மூலம், கணவனும் பிற பெண்களை இச்சையுடன் பார்ப்பதிலிருந்து காக்கப்படுவார்.
துரதிர்ஷ்டவசமாக, பேணுதலான முஸ்லிம் பெண் தன்னைத் தன் கணவனுக்காக வசீகரிக்கும் விதத்தில் அலங்கரித்துக்கொள்வது சரியான செயலல்ல என சில முஸ்லிம்கள் கருதுகின்றனர். இது உண்மைக்கு
எதிரான கருத்து. ஒரு பெண் தன் கணவனுக்காகப் பல்வேறு அழகுபடுத்தல் வழிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி மட்டுமல்ல நற்கூலியும் உண்டு. இறைபக்தியும் பேணுதலுமுள்ள முஸ்லிமாக இருப்பதன் ஒரு பகுதி, கற்பு காத்து வாழுதல். இதற்கான அனைத்து வழிகளும்
ஊக்குவிக்கப்படுகின்றன - அவை ஷரீஆவினால் (இஸ்லாமியச் சட்டத்தினால்) குறிப்பாக விலக்கப்படாத வழிகளாக இருந்தாலே
போதும்.
பெண்கள் தங்களை அலங்கரித்துக்கொண்டு, தங்கள் கணவர்கள் முன் அழகாகக் தோன்றவேண்டுமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஊக்குவிக்கார்கள். அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்:
அல்லாஹ்வின் தூதரிடம் தரவேண்டிய கடிதம் தன்னிடம் உள்ளதாக ஒரு பெண் திரைமறைவிற்குப் பின்னாலிருந்து சைகை காட்டினாள். அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) தம் கையை விலக்கிக்கொண்டு "கூறினார்கள்: “இந்தக் கை ஆணுடையுதா பெண்ணுடையுதா என்பதை என்னால் அறிய முடியவில்லையே. அகுற்கு அவள், “இல்லை, இது ஒரு பெண்ணின் கைதான்' என்றாள். அப்போது நபியவர்கள், 'நீ பெண்ணாக இருப்பின், உன்னுடைய நகங்களை அழகுபடுத்த மருதாணி பூசியிருப்பீர் என்றார்கள். ' (ஸுனன் அபூ தாவூத் 4163)
ஹிந்து பின்த் உத்பா அல்லாஹ்வின் தூதரிடம் வந்து இப்படிக் கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார், அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய உறுதிப் பிரமாணத்தை (பைஅத்) ஏற்றுக் கொள்ளுங்கள். அதற்கு நபியவர்கள் (ஸல்) பதிலளித்தார்கள்:
நீ உன்னுடைய உள்ளங்கைகளின் தோற்றத்தை மாற்றும்வரை நான் உன்னுடைய உறுதிப் பிரமாணத்தை ஏற்கமாட்டேன். அவை வனவிலங்கின்
பாத நகங்கள் போன்று தோன்றுகின்றன! (சுனன் அபூ தாவூத் 4102)
அன்னை ஆயிஷா (ரழி) மேலும் அறிவிக்றார்:
நஜாஷி (மன்னர்) தமக்கு அன்பளிப்பாக அளித்த சில நகைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெற்றார்கள். அவற்றில், அபிஸீனியக் கல் பதித்ததொரு தங்க மோதிரமும் இருந்தது.' ஆயிஷா (ரழி) கூறினார்: 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் முகத்தை அதிலிருந்து திருப்பி, அதை ஒரு குச்சியாலோ தம் விரலாலோ எடுத்து, அபுல் ஆஸின் மகளும் தம் மகள் ஸைனபின் மகளுமான உமாமாவை அழைத்து, என் அருமை மகளே, இதை அணிந்து உன்னை அலங்கரித்துக்கொள் என்றார்கள்.” (சுனன் அபூ தாவூத் 4838)
எனவே, மனைவி தன்னை அழகுபடுத்திக்கொள்வது திடமான உடலுறவுக்கு வழிவகுக்கும்; மேலும் உடலுறவுக்கு உடல்ரீதியாகத் தயாராதலில் இது மிகத்தேவையான அம்சமாகும். இதுகுறித்து சில
முக்கியமான விஷயங்களைக் கீழே தருகிறோம்:
அ. உடல் முடிகளை அகற்றுதல்.
மனைவி - தன் கணவன் விரும்பினால், தன் உடலிலிருந்து தேவையற்ற முடியை அகற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். நாம் ஏற்கனவே சஹீஹ் புஹாரியிலும் சஹீஹ் முஸ்லிமிலும்
பதிவாகியுள்ள அந்த ஹதீஸை மேற்கோள்காட்டினோம். அதில், மனைவி பருவ முடிகளை மழிப்பது", வீடுதிரும்பும் கணவனுக்காகத்
தன்னைத் தயார்படுத்துவதில் ஒரு பகுதி என்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கருதியுள்ளார்கள். உடல் முடியை நீக்குவது முற்றிலும் அனுமதிக்கப்பட்டது. மேலும், அதற்கான எண்ணம் கணவனைத்
திருப்துப்படுத்துவதற்காக இருப்பின், அது விரும்பத்தக்கதும் நற்கூலிக்கு உரித்தானதும்கூட.
பெண்கள் தங்களுடைய கைகள், கால்கள், உடலின் இதர பகுதிகளிலிருந்து பாலுறுப்பு, அக்குள் மற்றும் முகத்தின் ரோமங்களுக்கு சிறப்பு அழுத்தம் உள்ளது - முடியை நீக்கிவிடலாம். புருவங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. நபிமொழியின் பிரகாரம், புருவங்களை மழிப்பதற்கு அனுமதி இல்லை.
சில பெண்களுக்கு கன்னங்களிலும் முகத்தின் இதர பகுதிகளிலும் மிகுதியான முடி வளரக்கூடும். முகத்திலுள்ள இந்த முடியை நீக்குவது விரும்பத்தக்கது. இதன்மூலம், தாங்கள் ஆண் சாயலில் தெரிவதைத் தவிர்க்கலாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பெண்கள் முகத்திலுள்ள
முடி நீக்கப்படுவதைத் தடைசெய்த ஹதீஸிற்கான விளக்கவுரையில் இமாம் நவவி இவ்வாறு கூறுகிறார்: “இந்தச் செயல் (அதாவது, முகத்திலுள்ள முடியைப் பெண்கள் நீக்குவது) அனுமதிக்கப்பட்டதல்ல, ஒரு
பெண்ணிற்கு தாடியோ மீசையோ முளைத்தாலொழிய. அப்படி முளைத்தால், அதை நீக்குவதற்குத் தடையில்லை. உண்மையில், எங்கள்
கருத்துப்படி, அது (அதை நீக்குவது) விரும்பத்தக்கது... (இந்த ஹதீஸில்
உள்ள) தடை, புருவங்களை வடிவமைக்கும் விஷயத்திற்கு மட்டுமே பொருந்தும்.” (அல்-மின்ஹாஜ் ஷரஹ் சஹிஹ் முஸ்லிம் ப, 1602)
தேவையற்ற உடல் முடியைப் பல்வேறு வழிகளில் மெழுகு, பசை, பொடி, சவரக்கத்தி போன்றவை மூலம் நீக்குவதற்கு அனுமதியுண்டு. இதற்குப் பதிலாக, முடியின் நிறத்தை (நரை முடியை கறுப்பு சாயம் கொண்டு மாற்றுவதை தவிர) மாற்றுவதற்கு அனுமதியுண்டு. அதே போல், உடல் முடியை நிரந்தரமாக நீக்குவதற்கும் ஷரீஆவில் தடை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், இங்கே தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தேவையற்ற முடியை நீக்குவதுகான் நோக்கம்.
எனினும், முஸ்லிம் பெண்களின் முன்னிலையில்கூட, அவளது மறைவான பகுதியை (அவ்ரா) வெளிப்படுத்தக் கூடாது எனும் நிபந்தனை உண்டு. பிற முஸ்லிம் பெண்களின் முன்னிலையில் ஒரு முஸ்லிம் பெண்ணின் மறைவான பகுதி (அவ்ரா) என்பது, அவளுடைய தொப்புளிலிருந்து முழங்கால் வரையாகும். இதில் முழங்காலும் அடங்கும். எனவே, பிற முஸ்லிம் பெண்களின் முன்னிலையில்கூட
அவள்; தன் உடல்முடியை நீக்குவதற்காக தொப்புள் முதல் முழங்கால் வரையிலான பகுதியை வெளிப்படுத்தக் கூடாது. அதேபோல், முஸ்லிமல்லாத பெண்களின் முன்னிலையில் ஒரு முஸ்லிம் பெண்ணின் மறைவான பகுதி (அவரா) என்பது, அவளுடைய முகம், கைகள் தவிர்த்து
உடல் முழுவதுமாகும். (அல்-ஹிதாயா 4:461 ரத் அல்-முஹ்தார் 6:371)
ஆ. வசீகரிக்கும் ஆடையணிதல்.
ஒரு பெண் தன் கணவனுடன் உடலுறவு
கொள்வதற்காக கவர்ச்சியான, வசீகரமான, வெளிக்காட்டக்கூடிய உடை அணிந்து அலங்கரித்துக்கொள்வதில் தவறேதுமில்லை. உல்லாச சின்ன உள்ளாடை, மயக்கும் உள்ளாடை, பிகினி, டூ பீஸ் போன்றவற்றை அணிவது
மார்க்க ஒழுங்குக்கும் (அதப்) நாணத்துக்கும் (ஹயா) எதிரானதல்ல. இதற்கான நிபந்தனை, அது கணவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்; அந்தக் கோலத்தில் எந்த மூன்றாவது ஆளும் தம்பதியருடன்
இருக்கக்கூடாது. உண்மையில், நாம் ஏற்கனவே கூறியதுபோல, தன்னுடைய கற்பையும் தன் கணவனின் கற்பையும் காக்க உதவுவதே
இதன் நோக்கமாக இருப்பின், அவளுக்கு நற்கூலி கிடைக்கும், இன்ஷா அல்லாஹ்.
மேலே கூறப்பட்ட உடைபற்றிய
குறிப்புகளை அவள் தன் கணவனின் முன்னிலையில் மட்டும்தான், அதுவும் படுக்கையறை சூழலில்தான், பின்பற்ற வேண்டும்.
இ. நறுமணம்.
இதமான வாசனை பிறர்மீது குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்தலாம். அருமையான நறுமணங்கள் மனதுக்கு இதமளிக்கக் கூடியன. வாசனைத் திரவியங்களைப் பூசி மகிழ்வது மனித இயற்கையின் (பிஃத்ரா) ஒரு பகுதியாகும். இதனால்தான், நறுமணம் பூசும் வழக்கத்தை அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும் பின்பற்றியிருந்தனார். அல்லாஹ்வின்
துரதர் (ஸல்) கூறியதாக அபூ அய்யூப் (ரலி) அறிவிக்கிறார்: .
நான்கு விஷயங்கள் நபிமார்களின் வழிகளைச் சேர்ந்தவை: நாணம், நறுமணம் பூசுதல், பல்துலக்கியைப் (சிவாக்) பயன்படுத்தல், திருமணம் முடித்தல் . (சுனன் அல்-திர்மிதீ 1080)
அல்லாஹ்வின் அன்புத் தூதர் (ஸல்) நறுமணப் பொருட்களை நேசித்தார்கள். அனஸ் (ரழி) அறிவிக்கிறார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நறுமணப் பொருளை மறுக்கமாட்டார்கள்.
(சஹீஹ் அல்-புஹாரி 5585)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்:
ரப்ஹான் (நறுமணப் பொருள்) வழங்கப்படும்போது எவரும் அதை மறுக்கக் கூடாது. அது மென்மையான, அருமையான நறுமணம் கொண்டது. (சஹீஹ் முஸ்லிம் 2253)
ஆண்கள் வெள்ளிக்கிழமை, ஈத் (பெருநாள்) போன்ற பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்பொழுது நறுமணம் பூசுவது விரும்பத்தக்கது எனும் விஷயம் பல நபிமொழிகள் வாயிலாக ஆதாரப்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் இதமான நறுமணம்ப பூசிக்கொள்வதன் மூலம் பிறருக்கு நலன் பயக்கிறார். இந்தக் கருத்துச்சூழலில்தான், நறுமணம் பூசுவது அறச்செயலாகக் கருதப்படுகிறது.
இயல்பாகவே, நறுமணப் பொருள்கள் உடலுறவுச் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதமான மணம் பாலுறவு வேட்கையைத் தூண்டி, இன்ப சுகத்தையும் செயல்திறனையும், அதிகரிக்கும். எனவே, மனைவி தன் கணவனுடன் உடலுறவு கொள்வதற்கான அலங்கரிப்பின் ஒரு பகுதியாக நறுமணம் பூசிக்கொள்ள முயலவேண்டும். அவள் தனக்கு மிகப் பொருத்தமான, தன் கணவனை
மகிழ்விக்கக்கூடிய நறுமணப் பொருளைக் தெரிவுசெய்துகொள்ள வேண்டும். அது, அவளின் உடல் அல்லது உடையில் உள்ள எந்தவொரு
துர்நாற்றத்தையும் போக்க உதவும்.
எனினும் பெண்கள் நறுமணம் பூசிக்கொண்டு வெளியில் செல்ல அனுமதியில்லை.
இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்), மிக ஆதாரப்பூர்வமான (சஹீஹ்) ஹதீஸ்களில் திட்டவட்டமாகத் தடுத்துள்ளார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூமூஸா (ரழி) அறிவிக்கிறார்:
“ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு, ஓர் (ஆண்கள்) குழுவைச் கடந்து செல்கையில், அவர்கள் அவளுடைய நறுமணப் பொருளின் வாசனையை
நுகர்வார்களெனில், அவள் அப்படிப்பட்டவளாவாள்...' (மேலும், ) “அவர்கள் (ஸல்) கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார்கள் என அறிவிப்பாளர்
கூறுகிறார்.” (சுனன் அபூ தாவூத் 4170)
எனவே, மனைவி வீட்டினுள் இருக்கும்போது மட்டுமே நறுமணம் பூசிக்கொள்ளலாம்.
ஈ. அழகுணர்வும் ஆபரணங்களும்.
மனைவியின் அலங்காரத்தில், அழகுபடுத்தலில் தங்கம், வெள்ளி மற்றும் இதரவகை ஆபரணங்கள் அணிவதும் அடங்கும்; முக ஒப்பனையும் உதட்டுச் சாயம் பூசுதலும் அடங்கும். கைகால்களுக்கு மருதாணி இட்டுக்கொள்வதும் - அவளுக்குப்
பிடித்தால், கண்களுக்கு மை அல்லது சுர்மா போட்டுக்கொள்வதும் - அவளின் அழகை அதிகரிக்கும். இவற்றை நபிவழி (சுன்னா) குறிப்பாக அனுமதித்துள்ளது. மேலும், கூந்தலை அழகாக சீவி, சீர்படுத்தி, பராமரிப்பது மூலம் அதையும் அவள் அலங்கரித்துக்கொள்ள வேண்டும். கூந்தலுக்குச் சாயம் பூசுவதற்கும் அனுமதியுண்டு. இதில், சாயத்தின்
உட்பொருள்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாக (ஹலால்) இருக்கவேண்டும்.
மேற்கூறப்பட்டதிலிருந்து, பெண் தன் கணவனுக்காகத் தன்னை அலங்கரித்துக்கொள்ளும் விஷயத்தில் பொதுவாக இஸ்லாம் பெரிய
அளவில் தடைகள் எதையும் விதிக்கவில்லை என்பது விளங்கும். ஆம், அலங்காரம்செய்வது மூலம் கணவன், மனைவி இருவரும் தங்கள் கற்பு ஒழுக்கத்தைப் பேணவும் விலக்கப்பட்டதைத் தவிர்க்கவும் இயலும்.
எனினும், ஒருவரின் உருவத்தையே திரிக்கக்கூடிய சில அலங்காரங்கள்” தடைசெய்யப்பட்டுள்ளன - அவை கணவனுக்காக வேண்டி செய்யப்பட்டாலும் சரியே. இதில் அழகுபடுத்கலுக்காகச் செய்யப்படும் அலங்கார அறுவைசிகிச்சை, புருவங்களை வடிவமைத்தல், பச்சை குத்துதல், காதுகள், மூக்கு தவிர்த்த உடலின் பிற பகுதிகளைக் குத்துதல், மனித ரோமத்தால் செய்யப்பட்ட சவுரி அல்லது செயற்கைத் தலைமுடி அணிதல் ஆகியவை அடங்கும். எனவே, இவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டும்.
உடல் உருவத்தை அழகாக வைத்துக்கொள்ளுதல். ஒரு பெண், தன்னைக் கச்சிகமாகவும் நல்ல வடிவிலும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளுதல் கணவனுக்கு அவள் செய்யும் அலங்காரத்தின் ஒரு
பகுதியே ஆகும். மனைவி தன் உடல் உருவத்தையும் நன்கு கவனித்து, இயன்றளவு அதன் அழகைப் பராமரிப்பது அவசியம். இதன்மூலம்,
அவளுடைய உடலின்பால் கணவன் ஈர்க்கப்படுவது மட்டுமின்றி, அவள் தன் உடல்நலத்தையும் காத்துக்கொள்ள உதவும்.
3. பெண்மைசார்ந்த நடத்தை:
உடலுறவுக்கு உளரீதியாகத் தயாராகும் ஒரு பெண், தன்னுடைய மென்மையும் நளினமும் பெண்மைசார்ந்த நடத்தைகளும்தான் தன் கணவனைத் தன் பக்கம் ஈர்க்கும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். முரட்டுத்தனமும், ஆண் போன்ற இயல்புகளும், பொதுவாக ஆண்களுக்கு ‘ஆசை கெடுக்கும்' விஷயங்கள் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம்”.
பெண்ணின் குரலில் ஓர் இயற்கையான கவர்ச்சியையும் ஈர்ப்பையும் இறைவன் வைத்துள்ளான். இது ஆணிடம் பாலியல் கிளர்ச்சியூட்ட வல்லது. இந்த உண்மையை எவராலும் மறுக்கவியலாது. பல
உளவியலாளர்களும் இதை ஏற்றுள்ளதோடு, அவர்கள், ஒருவரின் குரல் பாலியல் ஆசைகளைக் தூண்டுவதில் பெரும்பங்கு வகிப்பதாக அழுத்தமாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால்தான், இறைவன் குறிப்பாகத் தன்னுடைய தூதரின் மனைவிமார்களையும், பொதுவாக அனைத்து முஸ்லிம் பெண்களையும், அந்நிய அண்களிடம் மென்மையான, இனிமையான குரலில் பேசவேண்டாம் எனக் தடுத்துள்ளான்.
இறைவன் கூறுகிறான்:
நபியின் மனைவியரே! நீங்கள் ஏனைய சாதாரணப் பெண்களைப் போன்றவர்கள் அல்லர். நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சக்கூடியவர்களாய் இருந்தால்
மென்மையாகக் குழைந்து பேசாதீர்கள். ஏனெனில் உள்ளத்தில் கெட்ட எண்ணம் கொண்டிருக்கும் யாரேனும் ஒருவன் சபலம்கொள்ளக் கூடும்.
(குர்ஆன் 33:22)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), பெண் நடத்தைகொண்ட ஆண்களையும், ஆண் நடத்தைகொண்ட பெண்களையும் சபித்துள்ள ஹதீஸிற்கு, இமாம் பத்ருத்தீன் அல்-அய்னி அளிக்கும் கருத்துரையில், எதிர்பாலினரின் பாவனை அறிந்தும் அறியாமலும் -
இரண்டு விதத்திலும் - செய்யப்படுகின்றன என விளக்குகிறார். இந்த ஹதீஸில் உள்ள குற்றச்சாட்டும் சாபமும், அறிந்து செய்பவர்கள் மீதே சாரும். (உம்தத் அல்-காரி ஷரஹ் சஹீஹ் அல்-புஹாரி 15:85)
அந்திய ஆண்களோடு மிகுந்த மென்மையுடன் பேச வேண்டாம் எனவும், அவர்களோடு பேசுகையில் உள்ளடக்கமும் பொருளும் நேர்மையாக இருக்கவேண்டும் எனவும், ஆசை தூண்டுதல் அறவே
இருக்கக்கூடாது எனவும் மேற்கூறிய வசனம் பெண்களுக்குக் கட்டளையிடுகிறது. ஏனெனில், அந்நிய ஆண்களிடம் மென்மையாகவும், இச்சையைத் தூண்டும் விதத்திலும், கொஞ்சிக் குழைந்தும் உரையாடுவது விலக்கப்பட்ட (ஹராம்) ஒன்றில் வீழ்வுதற்கான வழியாகும். எனவே, தவறு செய்வதற்கான வழியும் தடைசெய்யப்பட்டுள்ளது.
உள்ளபடியே, மனைவியின் மென்மையாலும் பெண்மைசார்ந்த நடத்தைகளாலும்தான் கணவன் வெகுவாக அவள்பால் ஈர்க்கப்படுவான்.
மேற்கூறிய வழிகாட்டுதல் எல்லா நேரங்களுக்கும் பொருந்தும் என்ற போதிலும், தம்பதியர் உடலுறவில் ஈடுபட எண்ணும்போது இது இன்னும் அதிகமாகப் பொருந்தும், மனோநிலையையும் காதல் சூழலையும் உருவாக்குவதற்கு மனைவி பல்வேறு வழிகள், உத்திகளைப் பயன்படுத்தி கணவனை வசீகரிக்கவேண்டும். தன் கணவனின் உடலுறவு
ஆசையைக் கிளப்புவதற்காக அவள் கொஞ்சலாம், பேசலாம் மோகவலை வீசலாம். அதேவேளை கசப்பு உணர்வு அல்லது 'ஆசைகெடுக்கும்’ எதனையும் அவள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால்,
கணவன்-மனைவி இணைதலுக்கான ஓர் உணர்ச்சி ததும்பிய இன்பச்சூழல் உருவாகும், ,இன்ஷா அல்லாஹ்.
கணவன் தயாராதல்:
மேலே மனைவியின் உள, உடல்ரீதியான தயார்நிலைபற்றி கூறப்பட்டது கணவனுக்கும் பொருந்தும். இதில் மனைவிக்கென்றே
கூறப்பட்டிருந்த விஷயங்கள் மட்டும், இயல்பாக, கணவனுக்குப் பொருந்தாது. எனவே, மேற்கூறப்பட்ட பொதுவான வழிகாட்டுகலைக் கணவனும் கவனத்தில்கொள்வது அவசியம்.
இறைவன் கூறுகிறான்:
பெண்கள் மீது (ஆண்களுக்கு) உள்ள உரிமைகள் போன்றே பெண்களுக்கும் உரிமைகள் உண்டு. (குர்ஆன் 2:228)
எவ்வாறாயினும், கணவனின் கண்ணோட்டத்திலிருந்து சில குறிப்பிட்ட விஷயங்களை விளக்கவும் பரிசிலிக்கவும் தேவை உள்ளது.
1. சுத்தமும் தற்சுகாதாரமும்:
கணவன், தான் எப்படியிருந்தாலும் - அழுக்காக, அலங்கோலமாக, வாய்நாற்றத்தோடும் உடல் நாற்றத்தோடும் இருந்தாலும் - மனைவி தன்பால் ஈர்க்கப்படுவாள் என எண்ணிக்கொள்வது பெருந்தவறாகும். பெண் ஆணைவிட மிக நளினமான, நயமான உணர்வுகளும் பதிவு நுட்பத்திறமும் உடைய பிறவியாவாள். சில நேரங்களில், அவள் கூச்சவுணர்வு காரணமாக மட்டுமே தன் உணர்வுகளைக் கணவனிடம்
வெளிப்படுத்தாமல் இருப்பாள். எனவே, கணவன் தன்னைச் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களிலேயே மிகத் தூய்மையானவர்கள். தூய்மையின்றி இருப்பதன் விபரீத விளைவுகள் குறித்து நபியவர்கள்
(ஸல்) கணவன்மார்களை எச்சரித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அலீ இப்னு அபீதாலிப் (ரழி) அறிவிக்கிறார். உங்கள் ஆடைகளை சலவைசெய்து கொள்ளுங்கள். உங்கள் தலைமுடியைப் பராமரித்துக் கொள்ளுங்கள். பல்துலக்கியைப் (சிவாக்) பயன்படுத்துங்கள். உங்களை அலங்கரித்துத் தூய்மையாக இருங்கள். பனீ இஸ்ரவேலர்கள் இதைச் செய்யாததனால் அவர்களுடைய பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டனர்.
(கன்ஸ் அல்-உம்மால் ஃபீசுனன் அல்-அக்வால் வஅல்-அஃப்ஆல் 17175)
மேலும், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் கூறுகிறார்: 'எனக்காக என் மனைவி அலங்கரித்துக் கொள்ளவேண்டும் என நான் விரும்புமளவுக்கு அவளுக்காகவும் நான் அலங்கரித்துக்கொள்ள விரும்புகிறேன்.” (ஸைத் அல்-ஃகாதிர் ப.142)
மனிதனின் தூய்மையான, இயற்கையான, இயல்பான புத்து விஷயங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) குறிப்பிட்டார்கள். இயற்கையான வழிமுறைகள் (ஃபித்ரா) என்றழைக்கப்படும் இவை, அல்லாஹ்வின்
நபிமார்களுடைய - குறிப்பாக, இப்ராஹீமுடைய - வழியைச் சார்ந்தவை. மனித இயல்பு இயற்கையாகவே இவற்றை உறுதியாக விரும்புகிறது. இவை குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்:
“பத்து விஷயங்கள் இயல்பானவை (பித்ரா): மீசையை வெட்டிக் குறைக்கல், தாடியை வளரவிடுதல், பல்துலக்கியைப் பயன்படுத்துதல், மூக்கைச் சுத்தம்
செய்தல், நகங்களை வெட்டுதல், மூட்டுகளைக் கழுவுகல், அக்குளில் உள்ள முடியை அகற்றுதல், பருவ முடிகளை மழித்தல், பாலுறுப்புகளைக்
தண்ணீரால் கழுவிச் சுத்தம் செய்தல் (இஸ்தின்ஜா).' அறிவிப்பாளர் (மேலும்) கூறினார், நான் பத்தாவது விஷயத்தை மறந்துவிட்டேன்: அது வாய்
கொப்பளிப்பதாக இருந்திருக்கலாம். (சஹீஹ் மூஸ்லிம் 261, சுனன் அபூ தாவுத் 54, சுனன் அல்-திர்மிதீ 2747, சுனன் அல்-நஸாயி 9,286 மற்றும் சுனன் இப்னு மாஜா 293)
எனவே, தற்சுகாதாரம் தொடர்பாக, கணவன் பின்வரும் விஷயங்களை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்:
அ. தூய்மையாக இருத்தல்.
அழுக்கு, அசுத்தம், துர்நாற்றம் ஆகியவற்றைத் தவிர்த்து சுத்தமாக இருப்பதில் கணவன் கவனமாக இருக்கவேண்டும். மலஜலம் கழித்தபின் அவர், ஆணுறுப்புப் பகுதியைச் சரியாக தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும் (இஸ்தின்ஜா). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஸ்தின்ஜாவை, இயல்பான செயலில் அடங்கும் (ஃபித்ரா) பத்து விஷயங்களுள் ஒன்றாகச் சேர்த்துள்ளார்கள். இது மேலே கூறப்பட்டுள்ளது.
அன்னை ஆயிஷா (ரழி) முஸ்லிம் பெண்களை நோக்கி இவ்வாறு அறிவுறுத்தினார்:
தங்கள் ஆணுறுப்பைத் தண்ணீர்கொண்டு கழுவுமாறு உங்கள் கணவர்களிடம் கூறுங்கள். நானே அவர்களிடம் அதைச் சொல்ல வெட்கம் என்னைத் தடுக்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதைச் செய்வார்கள். (சுனன் அல்-திர்மிதீ 19)
ஒருவர் மலஜலம் கழித்தபின் தன் கைகளைச் சுத்தமாக, அசுத்தத்தின் (நஜாஸா) சுவடுகள் எதுவுமின்றிக் கழுவவேண்டும். சோப் பயன்படுத்துவது சிறந்தது. ஒருவர் சிறுநீர் கழித்தபின், தன் சிறுநீர்க்
குழாயிலிருந்து (இஸ்திப்ரா,) சிறுநீர்த் துளிகள் முற்றிலுமாக வடிந்து விடுவதை உறுதிசெய்தல் வேண்டும்.
ஆ, உடல் நாற்றம்.
கணவன், தன் மனைவிக்குக் கசப்புணர்வோ ஆசை கெடுப்போ ஏற்படுத்தும் எந்தவொன்றையும் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும். அவர் சிறப்புக் கவனமெடுத்து, வாய் நாற்றமோ உடல் நாற்றமோ இல்லாது பார்த்துக்கொள்ள வேண்டும்.
கணவன், தன் உடல் நாற்றத்தை அகற்ற நாள்தோறும் குளிப்பது நல்லது. குறிப்பாக, தன் மனைவியுடன் உடலுறவுகொள்ள நாடும் போது இது முக்கியம். நறுமணம் (இதர) பூசிக்கொள்வது அல்லாஹ்வின் அன்புக் தூதருடைய வழிமுறையாகும். அதை அலட்சியமாக விட்டு விடக்கூடாது. மஸ்க், அம்பர், ஒளச் போன்ற பல இயற்கை நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தலாம். 'மஸ்க் தான் மிக இதமான நறுமணப் பொருள்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அறிவிக்கப்படுகிறது. (சஹீஹ் முஸ்லிம் 2252) பொதுவாக சந்தையில் கிடைக்கும்
வாடைபோக்கிகளையும் (டியோடிரண்ட்) உடல் வாசனைத் தெளிப்பான் ளையும் (ஸ்ப்ரே) பயன்படுத்தலாம். ஓரே நிபந்தனை: அவை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாக (ஹலாலாக) இருக்கவேண்டும்.
அதேபோல், கணவன் தன் வாய்தாற்றத்தை அகற்ற தன் வாயையும் பற்களையும் நன்றாகத் துலக்கவேண்டும். வாய் கொப்பளிப்பது, இயற்கைச் செயலின் (பித்ரா) பத்து விஷயங்களுள் ஒன்று. பற்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுக் துணுக்குகள் அனைத்தையும் நீக்கும் பொருட்டு வாயை நன்றாகக் கழுவவேண்டும். இதற்கு வாய்க்கழுவிகளை (மவுத்வாஷை,) பயன்படுத்தலாம். மீண்டும் ஒரே நிபந்தனை, அதில் ஹராமான உட்பொருள்கள் இருக்கக்கூடாது. பல்துலக்கியைப் (கிவாச்) பயன்படுத்துவதும் ஃபித்ராவின் பத்து
விஷயங்களுள் ஓன்று.
ஹுதைஃபா அறிவிக்கிறார்:
அல்லாஹ்வின் தாதர் (ஸல்) இரவில் (தொழுகைக்காக) எழுந்திருக்கும் போதெல்லாம், பல்துலக்கியைப் (சிவாக்கைப்) பயன்படுத்தித் தம் வாயை நன்கு அலக் கழுவுவார்கள். (சஹீஹ் முஸ்லிம் 255)
தம்பதியர் உடலுறவுகொள்ள எண்ணும்போது, வாயை சுத்தமாகவும் புத்துணர்வுடனும் வைத்திருப்பதில் கவனமாக இருப்பது மிக, மிக முக்கியம். கணவன் சரியாகத் தன் வாயைக் கழுவாமலும் பற்களைத்
துலக்காமலும் தன் மனைவியை உணார்ச்சிப்பூர்வமாக முத்தமிடுவது நிச்சயமாகத் தவறு. புகைபிடிப்பவர்களும் சுவைகெடுக்கும் பொருள்களை உட்கொள்ளும் பழக்கமுடையவர்களும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தவறினால், அது துணைவியின் அடங்கா உணர்ச்சியையும் ஆசையையும் கொன்றுவிடும்.
இ. தோற்றமும் உடையும்.
கணவன் கன் உடையிலும் வெளித்தோற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அவர் பாங்காக உடையணிய வேண்டும். சுத்தமான, இஸ்திரிசெய்த ஆடைகளை உடுக்கவேண்டும். ஆம், அல்லாஹ் அழகானவன்; அழகை விரும்புபவன். கணவன் வழக்கமாக உடை மாற்றிக் கொள்ளவேண்டும். அவற்றைப் பாங்காகவும் துப்புரவாகவும் வைத்துக்கொள்ளவேண்டும். அழுக்கான, சலவை செய்யாத ஆடைகளை உடுத்திக்கொண்டு உலா வருவது நிச்சயமாகத் தவறானது. சில கணவர்கள் இதற்குரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறி, பணி-ஆடைகளை அணிந்த நிலையிலேயே மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுகின்றனர்! இது மனைவிக்கு 'ஆசை கெடுக்கும்’ விஷயம் மட்டு மல்ல; கணவனின் சுயநலத்தைப் பிரதிபலிக்கும் ஒரு செய்லும்கூட..
ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்:
அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இன்னொரு மனிதர் அழுக்கான உடை அணிந்திருப்பதைக் கண்டு, “இந்த மனிதர் தன் ஆடைகளைச் சலவை செய்வதற்கு ஏதாவது தேடிக்கொள்ளக்கூடாதா?” என்று கூறினார்கள். (சுனன் அபூ தாவூத் 4059)
இமாம் அபூதாவூத் தம் நூலில் பதிவுசெய்யும் ஒரு நீண்ட நபிமொழியில் அபூதர்தா (ரழி) சஹ்ல் இப்னு அல்-ஹன்ஸலிய்யா விடம் கூறினார், :... எங்களுக்குப் பலன் தரக்கூடிய, தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு சொல்லை (எங்களுக்குக் கூறும்).” அதற்கு அவர் கூறினார், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இவ்வாறு கூறுவதைக் கேட்டேன்:
நீங்கள் உங்கள் சகோதரர்களைச் சந்திக்கச் செல்கிறீர்கள். எனவே, உங்கள் சேணங்களை சரிசெய்து, உடையை அழகாக்கிக்கொள்ளுங்கள். இதன் மூலம், நீங்கள் (ஓர் அழகான முகத்தில் உள்ள) அழகுக்குறி போல மக்கள் மத்தியில் எடுப்பாகத் தோன்றவேண்டும். முரட்டுத் தனத்தையும் முரட்டு
நடத்தையையும் அல்லாஹ் விரும்புவதில்லை. (சுனன் அபூதாவுத் 4086 முஸ்னத் அஹ்மத் 4:180)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அறிவிக்கிறார்:
“எவர் உள்ளத்தில் கடுகளவு தற்பெருமை உள்ளதோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்.” அப்போது ஒரு மனிதர் வினவினார், “ஒருவர், தன் ஆடை நன்றாக இருக்கவேண்டும்; தன் காலணிகள் நன்றாக இருக்கவேண்டும் என விரும்பலாம் அல்லவா?” அதற்கு நபியவர்கள் (ஸல்) கூறினார்கள்: 'நிச்சயமாக
அல்லாஹ் அழகானவன். அழகை விரும்புபவன். தற்பெருமை என்பது (கர்வத்தால்) உண்மையை மறுப்பதும் மக்களை இழிவாகப் பார்ப்பதும் தான்.
(சஹீஹ் முஸ்லிம் 91)
ஆகவே, தூய்மையாக இருப்பதும் பாங்கான உடை அணிவதும் மணம் கமழ்வதும் நபிவழியாகும். ஒரு மனிதர் தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முன்னிலையில் கூட பாங்காக உடையணிந்து இருக்க
வேண்டும். அவருடைய ஆடை தூய்மையாகவும் அழகாகவும் இருக்க வேண்டும்; அசிங்கமாகவும் பார்க்க சகிக்காத விதத்திலும் இருக்கக்
கூடாது. அவர் தூய்மையான உடையில் நன்றாகத் தோன்றுவார் எனில், அவரைப் பார்க்க இதமாக இருக்கும்; அவரோடு இருப்பதில் மக்கள் இன்புறுவார்கள். ஆனால், அவர் இதற்கு மாறாக இருப்பின், மக்கள் அவரைத் தாழ்வாகப் பார்த்து, அவருக்கு எந்தவொரு முக்கியத்துவமும் அளிக்கமாட்டார்கள். இது, கணவன்-மனைவி உறவு
விஷயக்கில் மேலுமதிகமாக முக்கியத்துவம் பெறுகிறது.
கணவன் அசுத்தமாக இருப்பது, அவனை மனைவி விரும்பாமல் போவதற்குக் காரணமாகிவிடும் என இமாம் இப்னு அல்-ஜவ்ஸி தம் ஸைத் அல்-ஃகாதிரில் கூறுகிறார். அவள் அதைக் தன் கணவனிடம்
சொல்வதற்கு சங்கடப்படலாம். எனினும், அதன் விளைவாக அவன் மீது அவளுக்கு ஆர்வம் குன்றிவிடும். கணவன் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் இருந்தால், அவன்மீது மனைவிக்கு ஈர்ப்பு ஏற்படும். பெண்கள் ஆண்களின் மறுபாதியே - ஷகாயிக். கணவனுக்கு அவள் குறித்து சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கலாம் என்பது போலவே, அவளுக்கும் அவர் குறித்து சில விஷயங்கள் பிடிக்காமல் போகலாம்.
(ஸைத் அல்-ஃகாதிர் ப.141 142)
ஈ. தலையும் தாடியும்.
தலையையும் தாடி முடியையும் சுத்தமாகவும்பாங்காகவும் வைத்திருப்பது முக்கியம். கணவன் தன் முடிக்கு எண்ணெய் பூசி, சீவி வாரிக்கொள்வது அவசியம். அவன் தன் தலை
முடியை சரிவரப் பராமரிக்க இயலாவிட்டால், அதைச் சிறியதாக வெட்டிக்கொள்ள வேண்டும். தாடியை சீவிவிட்டு பாங்காக வைத்திருக்கவேண்டும். இயலுமெனில், எண்ணெயும் தடவலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரழி)
முடிவைத்துக்கொள்பவர் அதைப் பராமரிப்பது அவசியம். (சுனன் அபூ தாவூத் 4180)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் வந்தபோது, அலங்கோலமான ஒரு மனிதரைக் கண்டார்கள். அவருடைய தலைமுடி கலைந்துபோய் இருந்தது.
அப்போது, 'இந்த மனிதர் தன் தலைமுடியை சீர்செய்துகொள்வதற்கு ஏதாவது தேடிக் கொள்ளக்கூடடாதா?' என்றார்கள். (சுனன் அபூ தாவூத் 4059)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தலையையும் தாடி முடியையும் நன்கு பராமரித்துக்கொள்வார்கள். அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அடிக்கடி. எண்ணெய் பூசுவார்கள், தம் தாடியை சீவி விடுவார்கள் மற்றும் கினாவை (எண்ணெயைத் துடைத்து உறிஞ்சுவதற்காக தலைமீது வைக்கப்படும் துணி) பயன்படுத்துவார்கள். எந்த அளவிற் கெனில், அவருடைய துணி எண்ணெய்க்காரரின் துணியைப் போலாகி விடும். (ஷமாயில் அல்-திர்மிதி 33)
ஒருவர் தம் தலைக்கும் தாடி முடிக்கும் சாயம் பூசுவது அனுமதிக்கப்பட்டது மட்டுமின்றி, அது பரிந்துரைக்கவும் படுகிறது. ஒரே நிபந்தனை,
முடிச் சாயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள உட்பொருள்கள் ஹலாலாக இருக்கவேண்டும். தலைக்கோ தாடிக்கோ பூசப்படும் மிகச்சிறந்த சாயம், மருதாணிதான். அல்லாஹ்வின் தாதர் (ஸல்) கூறியதாக அபூதர் (ரழி) அறிவிக்கிறார்:
(ஒருவரின்) முதுமையை (நரைமுடியை) மாற்றுவதற்கான மிகச்சிறந்த சாயம், மருதாணி மற்றும் கத்ம் (ஒருவகை புல்). (சுனன் அல்-திர்மிதீ 1753 மற்றும் பிற நூல்கள்)
எனினும் முற்றிலும் கருப்புச் சாயம் பயன்படுத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்:
..கருப்புச்சாயம் பூசுவதைத் தவிர்க்கவும். (சஹீஹ் முஸ்லிம் 202)
கணவன் தன் மீசையை மழிப்பதில் அல்லது குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலே, ஃபித்ராவின் பத்து விஷயங்கள் பற்றி
கூறப்பட்ட ஹதீஸில் மீசை குறைத்தலும் அடங்கியுள்ளது. ஆக, மீசையைச் சிறிதாக்குவது கருத்தொற்றுமையுள்ள நபிவழியாகும். மேல் உதட்டின் மேல்பகுதியை மூடும் அளவுக்கு மீசையை நீளமாக
வளர்ப்பது தவறு. அது சுகாதாரக் கேடும்கூட. ஏனெனில், உணவும் இதர விரும்பத்தகாத பொருள்களும் மீசையில் ஒட்டிக்கொள்ளும்
சாத்தியம் உண்டு. கணவன் இதில் கவனம் செலுத்தவேண்டும். ஏனெனில் - குறைந்தபட்சம் - தம்பதியர் ஒருவரையொருவர் முத்தமிடும்பொழுது நீளமான மீசை தொல்லை ஏற்படுத்தலாம்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) தம் மீசையை மிகச் சிறியதாக வெட்டுவதால் அவருடைய தோலின் வெண்ணிறம்கூட தெரியும் என இமாம் புஹாரி அறிவிக்கிறார். (சஹீஹ் அல்-புஹாரி 5:2208)
உ. பருவமுடிகளை அகற்றுதல்.
கணவன் தன் மறைவிடத்திலும் அக்குளிலும் உள்ள முடியை வழக்கமாக அகற்றுவதிலும் கவனம் செலுத்தவேண்டும். மறைவிடத்திலும் அக்குள்களிலும் மழிக்காமல் விடப்படும் முடியில் அழுக்கும் வேர்வையும் சேர்ந்துவிடுவதால், அது உடல் நாற்றத்துக்கான ஒரு காரணியாக அமையும். மேலும், அக்குள் முடியை அகற்றுவது, பருவ முடிகளை மழிப்பது இரண்டுமே ஃபித்ராவின் புத்து விஷயங்களுள் அடங்கும். எனவே, இப்பகுதிகளில் உள்ள முடியை வளரவிடுவது ஸுன்னாவுக்கு முரணானதாகும்.
அக்குள் மற்றும் பாலுறுப்புப் பகுதியிலிருக்கும் பருவ முடிகளை வாரம் ஒருமுறை - வெள்ளிக்கிழமை மிகப்பொருத்தமாக இருக்கும் - அகற்றுவது விரும்பத்தக்கது. இதை இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போடுவது விரும்பத்தகாகது அல்ல. எனினும், அதையும் தாண்டிச் செல்வது தவறானது. நாற்பது நாள்களுக்கும் மேல் செல்வது பாவமானது. (அல்-பதாவா அல்-ஹிந்திய்யா 5:257-258)
இதேபோல், கணவன் தன் நகங்களை வெகுநீளமாக வளரவிடக் கூடாது. ஏனெனில், நகங்களில் மிக எளிதாக அழுக்கு சேர்ந்துவிடும். நகங்களை வெட்டுவதும் ஃபித்ராவின் விஷயங்களுள் ஒன்று. எனவே, இரண்டு வாரங்களுக்கும் மேலாக நகங்களை வெட்டாமல் விடுவது தவறாகும். நாற்பது நாட்களைத் தாண்டுவது பாவமாகும். (மேலது)
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கிறார்
நாங்கள் மீசையைச் சிறிதாக்குவுதற்கும் நகங்களை வெட்டுவதற்கும் அக்குள் முடியை அகற்றுவுதற்கும் பருவ முடிகளை மழிப்பதற்கும் (அல்லாஹ்வின் தூதரால்) எங்களுக்குக் கால வரையறை விதிக்கப்பட்டிருந்தது. அவற்றை நாற்பது நாள்களுக்கு மேலாக வளரவிடக்கூடாது என்று. (சஹீஹ் முஸ்லிம் 258)
2. நன்னடத்தையும் வசீகரமும்:
கணவனின் உளவியல் தயார்நிலையின் முக்கியமானதொரு கூறு, உடலுறவுக்குமுன் மனைவியை நல்ல விதமாக நடத்துதல், அன்பாகப் பேசுதல், விளையாடுதல், பாசம் காட்டுதல் போன்றவை. கணவன் தன் மனைவியை - உடலுறவு நாடும் வேளையில் மட்டுமல்லாது - எல்லா நேரங்களிலும் கண்ணியமாக நடத்தவேண்டும் எனப் பொதுவாக இஸ்லாம் கட்டளையிடுகிறது. அல்லாஹ் கூறுகிறான்:
அவர்களோடு நல்லமுறையில் வாழ்க்கை நடத்துங்கள். அவர்களுடன் சேர்ந்து வாழ நீங்கள் விரும்பாவிட்டாலும் பொறுமையைக் கைக் கொள்ளுங்கள். ஏனெனில் ஒரு விஷயம் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருக்கக்கூடும். (குர்ஆன் 4:19)
ஒருவர் தம் மனைவியை சொல்லிலும் செயலிலும் பரிவோடு நடத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வலியுறுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூ
ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்:
மிகச் சிறந்த நற்குணம் கொண்டவர்களே மிகச் சிறந்த இறைநம்பிக்கையாளர்கள் ஆவர். மேலும், உங்கள் பெண்களிடம் மிகச்சிறந்த முறையில்
நடந்துகொள்டவர்களே உங்களில் மிகச் சிறந்தவர்கள். (சுனன் அல். திர்மிதீ 1162. இது மிகவும் நம்பகமான அறிவிப்புத் தொடரைக் கொண்டுள்ளது)
'ஒரு கணவர் தன் மனைவியை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நடைமுறை எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். அவர்கள் தம் மனைவியர் மீது மிகுந்த பண்பும் பரிவும்
கொண்டு, அவர்களை நட்புடன் நடத்தினார்கள். அவர்களிடம் பாசமாகவும் நகைச்சுவையாகவும் தாராளமாகவும் இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் மனைவியருடன் சிறந்த முறையில் நடந்துகொண்டதற்கான பல எடுத்துக்காட்டுகள் நபிமொழித் தொகுப்புகளில் காணப்படுகின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கிறார்:
உங்களில் மிகச் சிறந்தவர், உங்கள் குடும்பத்தாரிடம் மிகச் சிறந்த முறையில் நடப்பவரே. நான் என் குடும்பத்தாரிடம் மிகச் சிறந்த முறையில் நடந்து கொள்கிறேன். (சுனன் இப்னு மாஜா 1977)
எனவே, மனைவியை அன்போடு நடத்துவது இஸ்லாத்தின் பொது விதி. ஒருவர் உடலுறவுகொள்ள நாடும்பொழுது இது மிகவும் தேவையாகிறது. படுக்கை அறைக்கு வெளியில் தம்பதியர் நடந்துகொள்ளும்
விதம், படுக்கை அறைச் செயல்பாடுகளில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உறவுக்குத் தேவையான சூழலை உருவாக்குவதற்கு, கணவன்பண்பாகவும் பாசமாகவும் இருந்து, அவள் மயங்கும் வகையில் தன் காதலை வெளிப்படுத்த வேண்டும். பெண்கள் தங்களிடம் கூறப்படும்
சொற்களாலும் அதில் பொதிந்துள்ள பொருளாலும் 'உறவுக்குத் தூண்டப்படுன்றனர்' என்பதை அவர் மறந்துவிடக்கூடாது. அதாவது, அவருடைய சொற்கள் அவளுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்துகின்றன என்பதே முக்கியம். அது முழுவதும் ஒரு செயல்தொகுப்பு. அதில் ஓவ்வொரு சிறிய விஷயமும் முக்கியமானது; திடமான உடலுறவு அனுபவத்துக்கு வழிவகுக்கக் கூடியது. இதுபற்றி குர்ஆனில் மறைமுகமான சுட்டுதல் உள்ளது. அல்லாஹ் கூறுகிறான்:
உங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்களாவர். எனவே, நீங்கள்
விரும்பிய புறங்களிலிருந்து உங்கள் விளைநிலங்களை அணுகுங்கள். எனினும்,
முன்னதாக உங்களுக்கென சில நற்செயல்கள் செய்துகொள்ளுங்கள்; மேலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (குர்ஆன் 2:224)
குர்ஆன் விரிவுரையாளர்களில் சிலர், “எனினும், முன்னதாக உங்களுக்கென சில நற்செயல்கள் செய்துகொள்ளுங்கள்' எனும் சொற்றொடர், உடலுறவுக்கு முன் நிகழும் விஷயங்களின் முக்கியத்துவம் பற்றியே சுட்டுவுதாகக் கூறுகின்றனர். இதில் சரியான எண்ணம் கொள்ளுதல், பொருத்தமாக துஆ ஓதுதல், ஆசையை அதிகரிக்க முன்விளையாட்டில் ஈடுபடுதல், காரியத்தை எளிதாக்குதல் போன்றவை அடங்கும். (தஃப்சீர் அபூஅல்-சவூத் 1:223 மற்றும் த.ஃப்சீர் அல்- கஷ்ஷாஃப் 1:294)
ஒருவர் தம் மனைவியைக் கொடுமையாக நடத்துவது, பிறகு அவளுடன் உடலுறவிலும் ஈடுபடுவது எந்த அளவிற்கு ஈனத்தனமான செயல் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒரு ஹதீஸில் சித்தரிக்கின்றார்கள்:
உங்களில் ஒருவர் தம் மனைவியை அடிமையை அடிப்பதுபோல் அடித்து விட்டு, பின்னர் மாலையில் அவளுடன் உடலுறவிலும் ஈடுபடுவதா! (சஹிஹ்
அல்-புஹாரி 4658 மற்றும் சஹீஹ் முஸ்லிம் 855, இங்கு புஹாரியின் சொற்களே இடம்பெற்றுள்ளன)
இங்கே அல்லாஹ்வின் தாதர் (ஸல்) திகைப்பை வெளிப்படுத்துகிறார்கள். ஒருவர் தம் மனைவியைக் கொடுமைப்படுத்திவிட்டு, பின்னர் அவளுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கும் துணிச்சல் வந்து விட்டதோ என வியக்கிறார்கள். இதனால்தான் நபியவர்கள் (ஸல்) இன்னொரு ஹதீஸில் கூறினார்கள்:
"உங்களில் ஒருவர் தம் மனைவியை பொலிக்குதிரையை அடிப்பதுபோல்
அடித்துவிட்டு, பின்னர் எப்படி அவளுடன் படுத்துறவாட இயலும்?”
(சஹிஹ் அல்-புஹாரி 5695)
வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமெனில்,
ஒருவா் தம் மனைவியைக் கடுமையாக நடத்தி அக்கிரமம் புரிந்துவிட்டு, பிறகு தன் பாலுறவு எத்தனிப்புகளால் அவள் தூண்டுதல் அடையவேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?
முஸ்லிம் கணவர்கள் இந்த எச்சரிக்கையைக் கவனத்தில்கொள்வது அவசியம். சில ஆண்கள், படுக்கை அறைக்கு வெளியே தங்கள் மனைவியரைப் பரிவோடும் பாசத்தோடும் நெருக்கத்தோடும் நடத்தத்
தவறிவிடுகின்றனர். ஆனால், உடலுறவு வேளையில் திடீரென அன்பு, பாசம், கருணை எல்லாவற்றையும் கொட்டுகின்றனர். இது சுயநலம் மட்டுமல்ல; மனைவியை அவர் எத்தகைய அந்தஸ்தில் வைத்துள்ளார் என்பதையும் காட்டுகிறது.
உடலுறவுக்கு முன் நளினமும் பாசமும் காட்டுதல் நபிவழியாகும். கணவன் தன் மனைவியை மயக்குவதற்குத் தன்னுடைய சொல், செயல்மூலம் பொருத்தமான உத்திகளைக் கையாளவேண்டும். இதன் மூலம், அவருடைய பாலுறவு எத்தனிப்புகளை மனைவியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்பாள்.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். உங்களில் ஒருவர் தன் மனைவி இடம் (உடலுறவு கொள்ள) நெருங்கி
என்று கூறுவாரானால் அவ்விரவில் அவ்விருவருக்கும் குழந்தை பாக்கியம் ஏற்பட்டால் அந்தக் குழந்தையை ஷைத்தான் எப்போதும் தீண்ட மாட்டான்' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி
உடலுறவுக்கு முன்பு பிஸ்மில்லாஹ் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த இந்த துவாவை கண்டிப்பாக கூற வேண்டும்.
துவாவின் பொருள்: அல்லாஹ்வின் பெயர் கூறி (இதில் ஈடுபடுகிறேன்) இறைவா! ஷைத்தானை விட்டும் எங்களை அகற்றிவிடு! நீ எங்களுக்கு வழங்கக்கூடிய குழந்தையையும் ஷைத்தானை விட்டும் அகற்றிவிடு!