நம்மில் பலர் ஷிர்க் பற்றி அறிந்து வைத்து இருப்போம்! ஆனால் நம்மில் பலர் அறியாத வகையில் நம்மை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றும் நம்முடைய நன்மைகளை அழித்து விடும் பெரும் பாவங்களை அறியாமல் சர்வ சாதாரணமாக செய்து கொண்டு உள்ளோம்!
அகீதா தான் இஸ்லாத்தின் அடிப்படை ஆகும்! இதில் தான் பல வழிக்கேடு பிரிவுகள் பிரிந்து சென்றன! நாம் அகீதாவை சரியான முறையில் அறிந்து அதை பின் பற்ற வேண்டும்! அகீதா சரியாக இல்லாமல் அமல் செய்தும் பயன் இல்லை!
அகீதாவின் மூன்று அடிப்படைகளையும் விரிவாக அறிந்து அதிலும் நாம் உறுதியாக இருக்க வேண்டும் ஒரு போதும் அதில் நாம் இணை வைத்து விட கூடாது!
இன்றும் பல மக்கள் நல்ல முறையில் தொழுவார்கள் ஆனால் அல்லாஹ்விற்கு ஏதேனும் ஒரு வகையில் ஷிர்க் வைப்பார்கள்! தர்ஹா வழிபாடு செய்வார்கள்! ஹஜ் உம்ரா எல்லாம் செய்வார்கள் ஆனால் துஆவை அல்லாஹ் அல்லாத படைப்புகள் மூலமும் கேட்பார்கள்! இவ்வாறு நாம் ஒரு பக்கம் நல்ல அமல் செய்து கொண்டு மாறு பக்கம் அறியாமல் அல்லாஹ்விற்கு ஷிர்க் வைத்து கொண்டு இருப்பார்கள்! நவுதுபில்லாஹ்!
1) தவ்ஹீத் ரூபூவியாவில் ஷிர்க் வைப்பது :
தவ்ஹீத்துர் ரூபூவியா என்றால் அல்லாஹ் ஒருவன் இருக்கின்றான் என்று உறுதியாக நம்பிக்கை கொண்டு அவனுடைய செயல்களில் அவன் தனித்தவன் அவனை தவிர வேறு யாரும் இல்லை என்று நம்பிக்கை கொள்ளுவது ஆகும்!
உதாரணமாக : அனைத்து படைப்புகளுக்கும் அல்லாஹ் மட்டுமே அரசன்! உணவு வழங்க கூடியவன் அல்லாஹ் மட்டுமே! அல்லாஹ் தான் உயிர் கொடுக்க கூடியவன்! நன்மை மற்றும் தீமை செய்ய கூடியவன்! துஆவிற்கு பதில் அளிக்க கூடியவன்! அல்லாஹ்விடம் தான் அனைத்தும் உள்ளது! அவன் நாடியதை செய்கிறான்! மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உண்டு! இவ்வாறு அனைத்தையும் எந்த வித சந்தேகமும் இல்லாமல் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்!
ஒரு போதும் இவற்றில் அல்லாஹ்விற்கு நாம் யாரையும் நாம் இணையாக்க கூடாது! இந்த ஆற்றல்கள் எல்லாம் பிறருக்கு உண்டு என்று நம்புவது பெரிய ஷிர்க் ஆகும்!
(சூரத்துல் : யூனுஸ் நபி : 31)
நம்மில் பலர் அல்லாஹ்வை மட்டும் நம்பிக்கை கொண்டு உள்ளார்கள் ஆனால் அவனின் ஆற்றலை சரியாக நம்பிக்கை கொள்ளுவது கிடையாது! அல்லது அவன் ஆற்றலை பற்றி சரியாக அறிந்து கொள்ளுவது கிடையாது இதனால் இந்த விஷயத்தில் பெரும்பாலான மக்கள் அறியாமலயே ஷிர்க் வைத்து விடுகிறார்கள்!
உதாரணமாக : நாம் பாவம் செய்ய கூடியவர்கள் நம்முடைய துஆவை அல்லாஹ் ஏற்க மாட்டான் அதனால் நாம் இந்த அவ்லியா பொருட்டால் அல்லது இந்த நல்லோர் பொருட்டால் துஆ செய்ய வேண்டும்! இந்த மருந்துவரிடம் சென்றால் உடல் குணம் ஆகி விடும்! இந்த மருத்து சாப்பிட்டால் குணம் ஆகி விடும்! வீட்டிற்கு விஷ பிராணி ஏதேனும் வந்தால் சுலைமான் (அலை) அவர்கள் பொருட்டால் சென்று விடு என்று கூறுவார்கள் இதுவும் ஷிர்க் ஆகும்!
இந்த அவ்லியா தர்ஹாவிற்கு சென்றால் கஷ்டம் நீங்கும் - இறந்தவரின் ரூஹ் நமக்கு உதவி செய்யும் என்றும் சிலர் நான் மட்டும் இல்லை என்றால் உனக்கு வாழ்வாதாரம் கிடையாது! நான் தான் உணவு உணவு அளிக்கிறேன் என்று அல்லாஹ்வின் பண்பை ஆற்றலையும் இவர் தனக்கு கூறி கொள்ளுவார் இவ்வாறான விசியத்தை எல்லாம் செய்வது மேலும் இவை உண்மை என்று நம்பிக்கை கொள்ளுவது இவை அனைத்துமே பெரிய ஷிர்க் ஆகும்!
ஆரம்ப கால மக்கா காஃபிர்கள் அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று நம்பிக்கை கொண்டு இருந்தார்கள் ஆனால் " லாத் - உஸ்ஸா ” போன்ற சிலைகள் அல்லாஹ்விடம் தங்களுக்கு சிபாரிசு செய்யும் என்று நம்பிக்கை கொண்டு அவற்றிக்கு குர்பானி கொடுப்பது அவற்றிக்கு நேரிச்சை செய்வது அவையிடம் துஆ செய்வது போன்ற செயல்களில் செய்து காஃபிர் ஆகி விட்டார்கள்!
(அல்குர்ஆன் : 43 : 87 - 23 : 84 & 89 - 29 : 61)
அல்லாஹ் ஒருவன் உள்ளான் என்று நம்பிக்கை கொண்டால் மட்டும் நாம் முஹ்மினாக ஆகி விட முடியாது அவனுடைய ஆற்றலையும் நம்பிக்கை கொள்ள வேண்டும் இந்த ஆற்றல் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்!
2) தவ்ஹீதுல் உளூஹியாவில் ஷிர்க் :
தவ்ஹீதுல் உளூஹிய்யா என்றால் உள்ளத்திலும் செயலிலும் வணக்க வழிபாடுகள் மூலம் அல்லாஹ்வை ஒர்மை படுத்த வேண்டும்! இவற்றை அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் நாம் செய்ய கூடாது!
(அல்குர்ஆன் : 4 : 36 | 17 : 23)
உதாரணமாக : நம்முடைய துஆ - குர்பானி - தொழுகை - நோன்பு - நம்பிக்கை வைப்பது - பொறுப்பு சாட்டுவது - நேர்ச்சை செய்வது என அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே செய்ய வேண்டும் இதில் நாம் யாரையும் இணையாக்க கூடாது!
இந்த வணக்கங்களை செய்ய தகுதியானவன் அல்லாஹ் மட்டுமே என்று நம்பி அவனை மட்டுமே ஒருமைப்படுத்துவது தான் ‘தவ்ஹீதுல் உளூஹிய்யா’ ஆகும்!
தாகூத் : தாகூத் என்றால் அல்லாஹ்வை விட்டு விட்டு மற்ற படைப்புகளை வணங்குவது அல்லது அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய வணக்கங்களை பிறருக்கு செய்வது ஆகும் இது ஷிர்க் ஆகும்!
உதாரணமாக : துஆ என்பது ஒரு வணக்கம் அதை அல்லாஹ்விற்காக மட்டுமே செய்யவேண்டும்! அல்லாஹ்வை தவிர்த்து மற்றவர்களிடம் துஆ செய்வது அல்லது பிறர் பொருட்டால் துஆ செய்வது அவர்களை வணக்குவது போன்று ஆகி விடும்! வணக்க வழிபாடுகள் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டுமே உரியது! இதில் நாம் யாரையும் இணையாக்க கூடாது! அவ்வாறு இணையாக்கினால் அதுவும் ஷிர்க் ஆகும்!
இன்றும் சில ஊர்களில் 16 செய்யிது மார்கள் நோன்பு வைப்பார்கள் இவ்வாறு ஒரு நோன்பு இஸ்லாத்தில் கிடையாது! இந்த நோன்பை ஷியாக்கள் தங்கள் இமாம்களுக்கு வைப்பார்கள்! இவ்வாறு நோன்பு வைப்பதும் ஷிர்க் ஆகும்! இன்னும் சிலர் தர்ஹாவிற்கு சென்று குர்பானி கொடுப்பார்கள்! இவ்வாறு அல்லாஹ்விற்கு மட்டும் செய்ய வேண்டிய அமல்களை பிறருக்கு செய்வது ஷிர்க் ஆகும்!
தவ்ஹீதுல் உளூஹியா ஷிர்க் இரண்டு வைக்கப்படும் :
1) அல்லாஹ்விற்கு இணை அல்லது துணை இருப்பதாக நம்பிக்கை கொள்ளுவது!
உதாரணமாக : ஷியாக்கள் அப்துல் அலி (அலி (ரழி) அவர்களின் அடிமை) , அப்துல் ஹுஸைன் (ஹுஸையின் (ரழி) அவர்களின் அடிமை) என்று பெயர் வைப்பார்கள்! காரணம் அவர்கள் மீது வரம்பு மீறி நேசம் வைப்பதால் ஆனால் இது ஷிர்க் ஆகும்! இன்றும் பலர் அறியாமல் இவ்வாறான செயல்களை எல்லாம் செய்கிறார்கள்!
சுபியாக்களில் சிலர் நபி (ஸல்) அவர்களால் மறைவான விசயத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நம்பிக்கை கூறுவார்கள் ! நபி (ஸல்) அவர்களால் மனிதர்களின் பாவங்களை மன்னிக்க முடியும் என்றும் நம்புவார்கள்! இதனால் தான் சிலர் அப்துர் ரசூல் (ரசூல் (ஸல்) அவர்களின் அடிமை) என்று பெயர் வைப்பார்கள் இதுவும் ஷிர்க் ஆகும்!
3) அல் அஸ்மா வல் ஸிஃபாத்தில் ஷிர்க் வைப்பது :
அஸ்மா வஸ்ஸிஃபாத் என்றால் அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகளை பற்றி அறிந்து அதை எந்த சந்தேகமும் இல்லாமல் நம்மிக்கை கொள்ளுவது ஆகும்!
அல்லாஹ் தன்னை பற்றியும் தன்னுடைய பண்புகளை பற்றியும் தன்னுடைய ஆற்றல் பற்றியும் அல்குர்ஆனிலும் இன்னும் தன்னுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் பல இடங்களில் கூறி உள்ளான்!
இந்த பண்புகளையும் ஆற்றல்களையும் ஒரு முஹ்மின் அறிந்து இவற்றில் எந்த வித சந்தேகமும் இல்லாமல் நம்பிக்கை கொள்ள வேண்டும்! நாம் அல்லாஹ்வை தவிர்த்து வேறு யாரையும் இதில் இணையாக்க கூடாது!
உதாரணமாக : மறைவான ஞானம் அல்லாஹ்விற்கு மட்டுமே உண்டு! இந்த ஆற்றல் பிறருக்கு இருப்பதாக நம்பிக்கை கொள்ளுவது ஷிர்க் ஆகும்! இன்றும் சில ஊர்களில் நிக்காஹ் செய்யும் முன் அல்லது வேலை புதியதாக ஆரம்பம் செய்யும் முன் பால் கிதாப் என்று ஒன்று பார்ப்பார்கள் இதன் மூலம் எதிர் காலம் அறிந்து கொள்ளலாம் என்பது அடிப்படை நம்பிக்கை ஆகும்! ஆனால் இது தெளிவான ஷிர்க் ஆகும் இந்த பாவம் நம்மை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றி விடும்!
அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் மூலம் அல்லாஹ்விற்கு உருவம் உள்ளது என்று தெளிவாக தெரிந்த பின்பும் பலர் என்னுடைய ஜமாத்தினர் உருவம் இல்லை என்று கூறி உள்ளார்கள்! அல்லது அல்லாஹ்விற்கு உருவம் இல்லை அல்லாஹ் எல்லா இடங்களிலும் உள்ளான் என்று கூறுவார்கள்! காரணம் அல்லாஹ்வின் பெயர் மற்றும் பண்புகள் பற்றி விளக்கம் இல்லை! இவ்வாறு தவறான புரிதலும் நம்மை ஷிர்க்கின் பக்கம் எளிதாக கொண்டு சென்று விடும் நவுதுபில்லாஹ்!
நாம் மார்க்கத்தை அடிப்படையில் இருந்து சரியாக அறிந்து கொண்டால் அல்லாஹ்விற்கு சிறந்த ஒரு அடியானாகவும்! ஒரு சிறந்த முஹ்மின் ஆகவும் இருக்கலாம்! மாறாக அதிகமான மக்கள் இதை செய்கிறார்கள் இது சரியானது தான் என்று செய்தால் நிச்சயமாக இது நம்மை பெரும் வழிக்கேட்டில் கொண்டு சென்று விடும்!
அல்லாஹ்விற்கு மறைமுகமாகவோ அல்லது பகிரங்கமாகவோ ஷிர்க் வைப்பதை விட்டும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக! மேலும் அல்லாஹ்விற்கு எந்த வித இணையும் வைக்காமல் இக்லாஸ் உடன் அவன் பொருந்தி கொள்ளும் விதமாக அமல் செய்யவும் வாழவும் அல்லாஹ் நமக்கு உதவி புரிவானாக ஆமின்!