அகீதா அடிப்படையில் பயம் - நேசம் - ஆதரவு பற்றி அறிந்து கொள்ளுவோம்!

அகீதா இதான் இஸ்லாத்தின் அடிப்படைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாகும்! பலருக்கு அகீதாவில் தெளிவு இல்லாத காரணத்தினால் தான் மார்க்கம் என்று பெயரில் ஷிர்க் பித்அத் செய்து கொண்டு உள்ளார்கள் இன்னும் சுன்னாஹ் எது? பித்அத் எது? எது ஷிர்க்? எது வழிக்கேடு? என்று தெரியமால் பின் பற்றி கொண்டு உள்ளார்கள் நவுதுபில்லாஹ்!

ஒவ்வொரு முஸ்லீமும் கட்டாயம் அகீதாவை கற்று கொள்ள வேண்டும்! நமது பிள்ளைகளுக்கும் சிறு வயதில் இருந்தே சொல்லி கொடுக்க வேண்டும்!

• நம்மில் பலரின் பெற்றோர்களுக்கு இன்று கிடைக்கும் கல்வி முறை கிடைத்து இருக்காது! இதனால் மாற்று மத வழிமுறைகளை கூட உறுதியாக செய்து கொண்டு இருப்பார்கள் நம்மையும் செய்ய வைத்து இருப்பார்கள் நவுதுபில்லாஹ்!

இந்த நிலை நம்முடைய பிள்ளைகளுக்கு நம்முடைய சந்ததினருக்கு வந்து விட கூடாது! நமக்கு இந்த வாய்ப்புகள் கல்விகள் கிடைக்கமால் பல வருடம் கடந்து விட்டோம்! இனியும் இவ்வாறு இருந்து விடாமல் அல்லது சிலரை போல் தன் குடும்பம் வேலை பிள்ளை செல்வம் என்று வாழ்கை வாழாமல் அர்த்தம் உடன் அல்லாஹ் எதற்கு நம்மை படைத்தான் அதன் நோக்கத்தை சரியாக அறிந்து அவனுக்கு உண்மையாக கட்டுப்பட்ட முஸ்லீம் ஆக வாழ்ந்து மரணிக்க வேண்டும் நம்மில் ஒவ்வொருவரும்!

அகீதாவின் அடிப்படையில் நம்முடைய உள்ளம் - குணம் - செயல் சார்ந்த அமல்கள் மூலம் அதில் எப்படி நம்மை அறியாமல் ஷிர்க் ஏற்படுகிறது என்பதை இந்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் நாம் சுருக்கமாக பார்ப்போம்!


கஃவ்ப் எனும் பயம் :

பயத்தை அரபியில் கஃவ்ப் என்பார்கள்! இதனை அகீதா அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கலாம்! அவை,

1) அல்லாஹ்விற்கு அஞ்சுவது :

ஒவ்வொரு முஹ்மினும் எப்போதும் தனது இறைவனுக்கு அஞ்ச கூடியவனாக இருக்க வேண்டும்!

முஃமின்களே! நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்!

(சூரத்துல் : அல் மாயிதா : 44)

ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்! ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்!

(சூரத்துல் : ஆல இம்ரான் : 175)

அல்லாஹ்வின் அச்சம் எப்போது மனிதனுக்கு இல்லாமல் போய் விடுகிறதோ அப்போது அவன் தனது இறைவனுக்கு மாறு செய்ய கூடியவனாக ஆகி விடுகிறான்!

உதாரணமாக : அல்லாஹ் அல் பஷீர் ஆக உள்ளான் அதனால் தனிமையில் கூட பாவம் செய்ய அஞ்சுவான்! அல்லாஹ் அஸ் ஸமீயாக உள்ளான் இதனால் பிறர் இல்லாத போது கூட தவறாக பேச மாட்டான்!

எப்போது நாம் அல்லாஹ்விற்கு முழுமையாக அஞ்ச கூடியவர்களாக மாறி விடுகிறோமோ அப்போது மற்ற படைப்புகள் நம்மை அஞ்சும்! மேலும் பிற படைப்புகளை கண்டு ஒரு போதும் நாம் அஞ்ச மாட்டோம்!

2) இயற்கையான பயம் :

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒன்றை கண்டு உள்ளத்தில் இயற்கையாகவே பயம் இருக்கும்!

உதாரணமாக : சிலருக்கு இருட்டை கண்டால் பயம்! ஏதேனும் விலங்கு கண்டால் பயம்! இவ்வாறான பயம் உள்ளம் அளவில் இயற்கையாகவே இருக்கும்! இயன்ற அளவுக்கு இந்த பயத்தை விட்டு வெளியே வர முயற்சி செய்யவேண்டும்!

3) ஷிர்க்கை ஏற்படுத்தும் பயம் :

ஷிர்க்கை ஏற்படுத்தும் பயம் என்றால் நாம் எந்த அளவிற்கு அல்லாஹ்விற்கு அஞ்சுகின்றோமே அதே அளவுக்கு பிற படைப்புகளுக்கு அஞ்சுவது ஷிர்க் ஆகும்!

உதாரணமாக : ஒரு தர்ஹா உள்ளது அதை பற்றி பேசவே பயம்! காரணம் : பேசினால் ஏதேனும் நமக்கோ அல்லது நமது பிள்ளைகளுக்கோ ஆகி விடும்!  ஜின்னை பற்றி இரவில் பேசினால் அது நம்மை ஏதேனும் செய்து விடும்! இவ்வாறான பயம் ஷிர்க் ஆகும்!

இன்னும் சிலருக்கு what's app யில் வரும் forward மெசேஜை forward செய்தால் நல்லது நடக்கும் இல்லை என்றால் ஏதேனும் தீங்கு நடக்கும்! மார்க்கம் விளக்கம் இல்லாத மக்கள் இதையும் நம்பி பிறருக்கு share செய்வார்கள் இல்லை என்றால் ஏதேனும் ஆகி விடும் என்று அஞ்சுவார்கள் இதுவும் ஷிர்க் ஆகும்!

இன்னும் சிலர் பல்லி மேலே பட்டு விட்டால் ஏதேனும் ஆகி விடும்! பால் தினமும் கெட்டு போனால் வீட்டுக்கு ஏதேனும் ஆகி விடும்! வெளியே செல்லும் போது கால் தடுக்கினால் அல்லது யாரேனும் குறுக்கே சென்றால் ஏதேனும் ஆகி விடும் நவுதுபில்லாஹ் இவை எல்லாமே பெரிய ஷிர்க் ஆகும்!

அல்ஹம்துலில்லாஹ் எவ்வளவு மக்கள் மார்க்க விளக்கம் இல்லாமல் இவற்றை எல்லாம் நம்பிக்கை கொண்டு பயந்து கொண்டு செய்கிறார்கள்! இன்னும் சிலர் இதில் ஏதேனும் ஒன்று நடந்து விட்டால் நிம்மதி இழந்து கவலையில் இருப்பார்கள்! ஆனால் அல்லாஹ் நம்மை இவ்வாறான கூட்டத்தில் சேர்க்க வில்லை நல்ல மார்க்க விளக்கத்தை கொடுத்து உள்ளான்! அல்ஹம்துலில்லாஹ்...!

ஒரு முஹ்மின் எப்போதும் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அஞ்ச கூடாது! ஏன் என்றால் அல்லாஹ் மட்டுமே நமக்கு நன்மையோ அல்லது தீமையோ செய்ய முடியும்!

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் :

நிச்சயமாக (இந்த) சமுதாயம் உனக்கு நன்மை செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எதை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்கு நன்மை செய்துவிட முடியாது!

அவர்கள் உனக்கு தீங்கு செய்வதற்காக ஒன்று சேர்ந்தாலும் அல்லாஹ் உனக்கு எந்தத் தீங்கை விதியாக்கி விட்டானோ அதைத் தவிர வேறெதனாலும் அவர்கள் உனக்குத் தீங்கு செய்துவிட முடியாது!

(நூல் : ரியாளுஸ்ஸாலிஹீன் : 62 | சுனன் திர்மிதி : 2516)

4) ஹராமான பயம் :

மார்க்கம் கடமையாக்கி ஒன்றை மார்க்கம் கூறிய ஒன்றை உலக அற்ப காரியங்களுக்கு , பொருளாதாரதிற்கு பயந்து விடுவது ஹராம் ஆகும்!

ஹராமான பயம் என்றால் : தொழுகை நேரம் ஆகி விட்டது ஆனால் இப்போது கடை மூடினால் நஷ்டம் ஏற்பட்டு விடும்! தாடி வைத்தால் வேலை கிடைக்காது! ஹிஜாப் அணிந்து சென்றால் வேலை தரமாட்டார்கள்! இவை எல்லாம் பெரும் பாவம் ஹராம் ஆகும்!

இன்னும் சிலருக்கு கஷ்டம் வந்தால் எனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள்! அசைவ உணவை இரவில் எடுத்து சென்றால் ஜின் ஏதேனும் செய்து விடும் இவ்வாறான செயல் எண்ணமும் ஹராம் ஆகும்!

மஹ்ஃபா எனும் நேசம் :

நேசம் என்பதை அரபியில் மஹ்ஃபா என்று கூறுவார்கள்! இதனை அகீதா அடிப்படையில் 3 வகையாக பிரிக்கலாம்!

1) அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும் நேசிப்பது :

பொதுவாக நேசம் என்பது உள்ளம் சார்ந்த ஒன்றாகும்! உள்ளத்தில் ஒருவர் ஆழமாக நேசித்து விட்டால் அவருகாக என்ன வேண்டும் என்றாலும் செய்ய தயக்க மாட்டார்கள்! அவருக்கு ஏதேனும் துக்கம் என்றால் இவர்களும் கஷ்டம் படுவார்கள் அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி என்றால் இவர்களும் மகிழ்ச்சி கொள்ளுவார்கள்!

பலர் இந்த உள்ளத்தில் ஹரமான உறவுகள் - பொருளாதாரம் - உலக மோகம் என இவற்றையே அளவு கடந்து நேசிக்கிறார்கள்! ஆனால் மார்க்க பற்று அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பதில் அசட்டையாகவே உள்ளார்கள் நவுதுபில்லாஹ்!

ஸஹாபாக்கள் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்களையும் நேசித்தார்கள் இதனால் உயிர் பொருள் குடும்பம் என அனைத்தும் இழக்க தயார் ஆகி விட்டார்கள்! இதனால் இவ்வுலகிலயே அல்லாஹ்வின் பொறுத்தத்தையும் நபி (ஸல்) அவர்கள் நேசத்தையும் பெற்று கொண்டார்கள்!

தங்கள் வீடுகளைவிட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு! அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப் பொருத்தத் தையும் அடையக்கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தாம் ஸாதிகீன் (என்னும் உண்மையான நம்பிக்கையாளர்கள்)!

(சூரத்துல் : அல் ஹஷ்ர் : 08)

நாம் எப்போதும் படைத்த இறைவனையும்! நமது நபி (ஸல்) அவர்களையும் உலகை இன்னும் மற்ற அனைத்தை விடவும் அதிகம் நேசிக்க வேண்டும்!

(நபியே!) நீர் கூறும் : உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!

(சூரத்துல் : அத் தவ்பா : 24)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்!

(நூல் : ஸஹீஹ் புகாரி : 14)

2) இயற்கையான நேசம் :

ஒவ்வொரு மனிதர் உள்ளத்திலும் அன்பு பாசம் இருக்கும்! இதனால் பெற்றோர் பிள்ளைகளை அதிகம் நேசிப்பார்கள்! பிள்ளைகள் பெற்றோர்களை அதிகம் நேசிப்பார்கள், மனைவி கணவனையும், கணவன் மனைவியும் அதிகம் நேசிப்பார்கள்!

இவ்வாறான நேசம் தவறானது அல்ல ஆனால்! இந்த நேசம் வரம்பு மீறினால் அதுவும் ஷிர்க் ஆகி விடும்!

சிலர் பெற்றோர்களை அதிகம் நேசிக்கிறோம் என்று அவர்கள் காலில் விழுவார்கள்! இன்னும் சிலர் மார்க்கத்திற்கு முரணாக ஏதேனும் கூறினாலும் அவர்கள் மீது உள்ள நேசத்தினால் அதையும் செய்வார்கள் இதுவும் ஷிர்க் ஆகும்!

எப்போதும் ஒரு முஸ்லீம் அல்லாஹ்வையும் ரசூலையும் நேசிக்கும் அளவுக்கு வேறு யாரையும் நேசிக்க கூடாது!

அல்லாஹ்வை அதிகம் நேசிக்க வேண்டும் :

அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையாக எடுத்துக் கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பது போல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றனர்! எனினும், இறை நம்பிக்கையாளர்கள் (இவர்களைவிட) அதிகமாக அல்லாஹ்வையே நேசிப்பார்கள்!

(சூரத்துல் : அல் பகரா : 165)

மனிதர்கள் பெரும்பாலும் கஷ்டத்தில் இருக்கும் பொழுது என்ன என்று கேட்டால் அவர்கள் பதில் கீழே உள்ள வசனத்தில் அல்லாஹ் கூறி உள்ள 8 யில் ஏதேனும் ஒன்றாக இருக்கும்!

(நபியே!) நீர் கூறும் : உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை!

(சூரத்துல் : அத் தவ்பா : 24)

ஒரு முஹ்மின் அல்லாஹ் கூறி உள்ள இந்த 8 யும் விட அதிகம் அல்லாஹ்வையும் ரசூலையும் அதிகம் நேசிக்க வேண்டும்! அவ்வாறு நமது உள்ளத்தில் இல்லை என்றால் நாம் பாவி ஆகி விடுவோம்!

அல்லாஹ் பாதுகாக்கணும் இன்று பலர் தமிழுக்காக உயிரை கொடுப்பேன்! எனது தலைவருக்கு உயிரை கொடுப்பேன்! என்னுடைய காதலுக்காக உயிரை கொடுப்பேன்! என்று கூறி கொண்டு உள்ளார்கள் ஆனால் இது தெளிவான ஷிர்க் ஆகும்!

ஆதரவு வைப்பது :

ஆதரவு என்பது நாம் ஒன்றின் மீது உறுதியாக நம்பிக்கை வைப்பது ஆகும்! இது பிழை இல்லை ஆனால் இது வரம்பு மீறினால் இதுவும் ஷிர்க் ஆகும்!

உதாரணமாக : மனிதன் ஆற்றலால் முடியாத ஒன்றை முடியும் என்று நம்புவது ஷிர்க் ஆகும்!

அந்த மருத்துவர் இல்லை என்றால் எனது பிள்ளை இறந்து இருப்பான்! அந்த மருத்துவர் கைராசியானவர் சென்று பார்த்தால் உடனே குணம் ஆகி விடும்! அந்த மருத்து சாப்பிட்டால் உடல் குணம் ஆகி விடும் இவ்வாறு எல்லாம் ஆதரவு வைப்பது ஷிர்க் ஆகும்!

இன்னும் சிலர் இந்த தர்ஹாவிற்கு சென்றால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும் - குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று எதிர் பார்ப்பார்கள்! இன்னும் சிலர் இந்த பெரியார் துஆ செய்தால் போதும் கஷ்டம் நீங்கும்! இவர்கள் சொல்லி விட்டால் போதும் உடனே பழித்து விடும் இவை எல்லாம் நம்பிக்கை கொள்ளுவது ஷிர்க் ஆகும்!

அல்லாஹ் தான் அனைத்தின் மீதும் ஆற்றல் உடையவன்! அல்லாஹ் ஒரு நோயை அருளினால் அதற்கு நிவாரணமும் சேர்த்தே அருளுவான்! நோயும் நிவாரணமும் சேர்த்து விட்டால் இன்ஷாஅல்லாஹ் குணம் ஆகி விடும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒவ்வொரு நோய்க்கும் நிவாரணம் ஒன்று உண்டு! நோய்க்குரிய நிவாரணம் சரியாக அமைந்து விட்டால், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் அனுமதியால் குணம் ஏற்படும்!

(நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 4432)

நாம் மருத்துவம் பார்த்தாலும் மருத்துவ உட்கொண்டாளும் இதில் அல்லாஹ் நாடினால் மட்டும் நமக்கு நிவாரணம் உண்டு இல்லை என்றால் கிடையாது என்று நம்பிக்கை வைக்க வேண்டும்!

அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் போதும் என்று மருத்துவம் பார்க்காமல் இருக்க கூடாது! இஸ்லாம் மருத்துவம் பார்க்க கூறி உள்ளது! அல்லாஹ் அதில் நமக்கு நிவாரணம் இன்ஷாஅல்லாஹ் வைத்து இருப்பான்!

இஸ்லாம் தேன் - கருஞ்சிரகம் - பால் - அஜ்வா பேரித்தபழம் போன்றவற்றை மருத்துவ பயன்கள் கூறி உள்ளது இதன் மூலம் நாம் மருத்துவம் பார்க்கலாம்! ஆனால் இது மட்டும் என்று வேறு எந்த மருத்துவமும் பார்க்காமல் இருந்து விட கூடாது! இதை தவிர்த்து மற்ற மருத்துவமும் பார்க்க வேண்டும் ஏன் என்றால் அல்லாஹ் நமக்கு எதில் நிவாரணம் வைத்து உள்ளான் என்று நமக்கு தெரியாது!

@அல்லாஹ் போதுமானவன் 
أحدث أقدم