காதலர் தினத்தை கொண்டாடுவது சம்பந்தமான மார்க்கத் தீர்ப்பு என்ன?

இமாம் இப்னு உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்: 

பின்வரும் காரணங்களுக்காக காதலர் தினத்தை கொண்டாடுவது கூடாது. 
1- அது ஷரீஅத்தில் எந்த அடிப்படையுமில்லாத ஒரு பித்அத்தான கொண்டாட்டமாகும்.
2- காதலை தூண்டுகிறது.
3- ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழிமுறைக்கு மாற்றமான இது போன்ற அற்பமான விடயங்களில் உள்ளத்தை ஈடுபடுத்துவதற்கு  தூண்டுகிறது.

எனவே, இந்த நாளில் உணவு, குடிபானம், உடை, அன்பளிப்பு, மற்றும் எந்த விடயங்களிலும் கொண்டாட்டத்திற்குரிய எந்த ஒரு அடையாளமும் நிகழக்கூடாது. 

ஒரு முஸ்லிம் தன்னுடைய மார்க்கத்தை பின்பற்றுவதன் மூலம் கண்ணியமானவனாக  இருக்கவேண்டும்; பெருமிதமடைய வேண்டும். அவன் சொந்தப் புத்தி இல்லாதவனாக; கண்டவனை எல்லாம் பின்பற்றுகின்றவனாக இருக்கக் கூடாது. உயர்த்தியான அல்லாஹ்விடமே  வெளிப்படையான, மறைமுகமான அனைத்து குழப்பங்களிலிருந்தும்  முஸ்லிம்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவனே எங்களை பொறுப்பேற்று அனுகூலம் புரியவேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்.

الاحتفال بعيد الحب لا يجوز لوجوه :
الأول : أنه عيد بدعي لا أساس له في الشريعة .
الثاني : أنه يدعو إلى العشق والغرام
الثالث: أنه يدعو إلي اشتغال القلب بمثل هذه الأمور التافهة المخالفة لهدي السلف الصالح رضي الله عنهم .
فــلا يــحـل أن يحدث في هذا اليوم شيء من شعائر العيد سواء كان في المآكل أو المشارب أو الملابس أو التهادي أو غير ذلك وعلى المسلم أن يكون عزيز بدينه ولا يكون إمَّــعَــةً يتبع كل ناعق . أسأل الله تعالى أن يعيذ المسلمين من كل الفتن ما ظهر منها وما بطن وأن يتولانا بتوليه وتوفيقه .
مجموع الفتاوى لابن عثيمين (ج٩/ص١٩٩)

Previous Post Next Post