மரணித்தவரை மர்ஹூம் என்று குறிப்பிடலாமா?

இவர் (மஃغபூர்) மன்னிக்கப்பட்டவர் , இவர் (மர்ஹூம்) ரஹ்மத் செய்யப்பட்டவர் இது போன்ற வார்த்தை பிரயோகங்கள் மரணித்தவர்கள் குறித்து பேசப்படுகிறது இது குறித்து மக்களுக்கு மார்கத்தின் வழிகாட்டல் என்ன ? 

(غفر الله له) அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! (رحمه الله) அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக! என்று கூறலாம் அவர் (மஃغபூர்) மன்னிக்கப்பட்டவர் அவர்  (மர்ஹூம்) ரஹ்மத் செய்யப்பட்டவர்  என்று உறுதியாக சொல்லக் கூடாது. இவ்வாறுதான் கல்வியாளர்கள் கூறுகிறார்கள்.
 
அல்லாஹ்வும் அவனது தூதரும் சான்று பகர்ந்தவர்களை தவிர எந்த ஒரு குறிப்பிட்ட  மனிதரையும்  இவர் சுவனவாதி இவர் நரகவாதி என்று  சொல்வதும் கூடாது . இதுவே அஹ்லுஸ் சுன்னாவின் கொள்கையாகும். 

அபூலஹபை போன்று  யாரைக் குறித்து அல்லாஹ் நரகவாதி என்று தனது வேதத்தில் குறிப்பிட்டானோ அவர் நரகவாதி.  
அவ்வாறே  அபூபக்கர் (رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ) உமர்  (رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ) உஸ்மான் (رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ)அலி (رَضِيَ ٱللَّٰهُ عَنْهُ) சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொல்லப்பட்ட பத்து நபித்தோழர்கள் மற்றும் ஏனைய நபித்தோழர்களை நபி (ﷺ) அவர்கள் சுவனவாதிகள் என்று சான்று பகர்ந்துள்ளார்கள். 

யாரைக் குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சுவனவாதி என்றோ நரக வாதி என்றோ சான்றளிக்கவில்லையோ அவர்களுக்கு நாமும் சான்றளிக்க கூடாது. என்றாலும் அஹ்லுஸ் சுன்னாவினர் மரணித்தவர்களுக்காக நல்ல முடிவை ஆதரவு வைக்கிறார்கள் . கெட்ட முடிவை குறித்து அஞ்சுகிறார்கள். 

எனவே எவர்  இவர் (மஃغபூர்) மன்னிக்கப்பட்டவர் , இவர் (மர்ஹூம்) ரஹ்மத் செய்யப்பட்டவர் என்று சான்றளிப்பதின் பொருள் இவர் சுவனவாதி  இவர் நரகவாதி என்று சான்றளிப்பதற்கு சமமாகும். எனவே இவ்வாறு துணிச்சலாக கூறக்கூடாது. 

(غفر الله له) அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! (رحمه الله) அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்வானாக! என்று பிரார்த்தனை செய்யலாம். 

ஷேக் இப்னு பாஸ் (رحمه الله) அவர்களின் மார்க்கத் தீர்ப்பை தழுவி எழுதப்பட்டது .

மொழியாக்கம் : S யாஸிர் ஃபிர்தௌஸி
அல்-ஜுபைல் தஃவா மற்றும் வழிகாட்டல் மையம், 
சவூதி அரேபியா 
أحدث أقدم