மனைவியிடமிருந்து வரதட்சணை அல்லது வீடு எதிர்பார்ப்பது ஷரீஅத்துக்கு முரணான நடைமுறை

தங்குமிடம் என்பது மனைவிக்கு தன் கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய உரிமையாகும், எனவே அவர் தனது தகுதிக்கு ஏற்ப அவளுக்கு தனி தங்குமிடத்தை வழங்க கடமைப்பட்டுள்ளார்; அது அவர் வழங்க வேண்டிய செலவினங்களின் ஒரு பகுதியாகும். அல்லாஹ் கூறுகிறான்: "(விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை) நீங்கள் வசிக்கும் இடத்தில், உங்கள் வசதிக்கேற்ப தங்குமிடமாக்குங்கள்" [அல்-தலாக் 65:6]. இது விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் விஷயத்தில் பொருந்தினால், இன்னும் திருமண பந்தத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு தங்குமிடம் வழங்குவது மிகவும் பொருத்தமானது. மேலும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, வாழ்க்கைத் துணைவர்களிடையே அன்பான நடத்தையை அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். கட்டளையிடப்பட்ட கண்ணியமாக நடந்து கொள்ளுதலின் ஒரு பகுதி, அவளும் அவளுடைய செல்வமும் பாதுகாப்பாக இருக்க தங்குமிடத்தை வழங்குவதாகும். பிறரின் பார்வையிலிருந்து தன்னை மறைப்பதற்கும், அவள் தன் உடைமைகளுடன் குடியேறுவதற்கும் மனைவி தங்குமிடம் இன்றியமையாதது.. எனவே தங்குமிடம் என்பது அவளுக்கு கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய உரிமை என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

வரதட்சணை போன்றே தங்குமிடத்தைப் பற்றியும் சொல்லலாம்: மனைவியையோ அல்லது அவளுடைய பாதுகாவலரையோ அதை வழங்குமாறு கட்டாயப்படுத்துவது அல்லது கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது (மார்க்கத்தில்) அனுமதிக்கப்படாதது. அதன் அடிப்படையில், மனைவி தங்குமிடம் கொடுக்கவில்லை என்றால், அவளிடமிருந்து அதைக் கோருவதற்கு எந்த உரிமையும் இல்லை. நீங்கள் அதை உங்கள் தந்தையிடம் விளக்க வேண்டும், மேலும் ஷரீஅத்திற்கு முரணான வழக்கத்தை நடைமுறைபடுத்தக் கூடாது. அல்லாஹ் ஆணை பெண்ணின் பாதுகாவலராகவும் பராமரிப்பாளராகவும் ஆக்கியுள்ளான், அதற்கான காரணங்களில் ஒன்று அவன் அவளுக்காகச் செலவிடுவது. 
அல்லாஹ்  கூறுகிறான். "(ஆண், பெண் இரு பாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர். ஆகவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் (அல்லாஹ்வுக்கும் தங்கள் கணவனுக்கும்) பணிந்தே நடப்பார்கள். (தங்கள் கணவன்) மறைவாக உள்ள சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பைக்கொண்டு (தங்களையும் கணவனின் மற்ற பொருள்களையும்) பேணிக்காத்துக் கொள்வார்கள். எவளும் கணவனுக்கு மாறு செய்வாளென்று நீங்கள் அஞ்சினால் அவளுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அவள் திருந்தாவிடில்) படுக்கையில் இருந்து அவளை அப்புறப்படுத்தி வையுங்கள். (அதிலும் அவள் திருந்தாவிட்டால்) அவளை (இலேசாக) அடியுங்கள். அதனால் அவள் உங்களுக்கு கட்டுப்பட்டுவிட்டால் அவள் மீது (வேறு குற்றங்களைச் சுமத்த) ஒரு வழியையும் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக மேலானவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான்.(4:34)
أحدث أقدم