வானவர்கள்தாம் என்பதையும் அறியாது விருந்துபசாரம் செய்த இறைநேசர் இப்ராஹீம் (عليه السلام) அவர்கள்

خليل الرحمن/ خليل الله 
"இறை நேசச் செல்வர்"  என்ற சிறப்பு நாமம் பெற்ற நபி இப்ராஹீம் ( عليه السلام) அவர்கள் பல நூறு சிறப்பான பண்புகளால் புகழப்படுவர்.

அல்குர்ஆனில் இப்ராஹீம் என்ற சொல் 25 அத்தியாங்களில் 69 இடங்களில் 17 ஜுஸ்வுக்களில் பரந்து பட்டு இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய சரித்திரவியலாளர்கள்  குறிப்பிடுகின்றார்கள்.

 லூத் நபி (அலை) அவர்களை நம்பிக்கை கொள்ளாது, அவர்களின் தூதுச் செய்தியை உதாசீனம் செய்து,
ஓரினைச் சேர்க்கைப் பாவத்தில் ஈடுபட்டு வந்த லூத் நபியின் சமூகத்தை அழிப்பதற்காக அனுப்பப்பட்ட வானவர்களை வானவர்கள்தான் என்பதை அறியாது விருந்துபசாரம் செய்த பின்வரும் வரலாறும்
அவரது சரித்திர பின்னணியில்  வந்த சரித்தங்களில் ஒன்றாகும்.

அல்குர்ஆனின் 51வது  சூறாவான அத்தாரியாத் சூறாவில் இது தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 60 வசனங்களைக் கொண்ட அத்தாரியாத் சூறாவானது 
وَالذَّارِيَاتِ ذَرْوًا

51:1 وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ‏
51:1. (புழுதியைக் கிளப்பி) நன்கு பரத்தும் (காற்றுகள்) மீது சத்தியமாக! எனத் தொடங்கி,

فَوَيْلٌ لِّـلَّذِيْنَ كَفَرُوْا مِنْ يَّوْمِهِمُ الَّذِىْ يُوْعَدُوْنَ

ஆகவே, காஃபிர்கள் எந்த மறுமை நாள் பற்றி  வாக்களிக்கப்பட்டதோ, அவர்களுடைய அந்நாளில் (அவர்களுக்கு) கேடுதான் என முடிகின்றது.

அதன் முதலாவது வசனம் முதல் இறுதிவரை
அதில் பல்வேறுபட்ட   அற்புதமான பல கருத்துக்கள் அதில் புதைந்து கணப்படுகின்றது. 
 
அதன் 24 வது வசனம் தொடங்கி இறை நேசச் செல்வர் நபி இப்ராஹீம் (அலை) பற்றி பேசி இருக்கின்றது.

அதன் 24 வது வசனம் முதல்  37 வது வசனம் வரை  அது தொடர்பாக விபரித்துள்ளது. 

அது பற்றி இங்கு நோக்குவோம்.

هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ
(நபியே !) இப்ராஹீமின் கண்ணியம் நிறைந்த  விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?

: اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًا‌ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ‌‏
25. அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி: “உங்களுக்கு) “ஸலாம்” என்று கூறினார்கள்; (அதற்கவர்), “(உங்களுக்கும்) “ஸலாம்” என்று பதில் கூறி, “இவர்கள் (நமக்கு) அறிமுகமில்லாத சமூகத்தாராக (இருக்கின்றார்களே” என்று (மனதில்) கூறிக் கொண்டார்).

فَرَاغَ اِلٰٓى اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِيْنٍۙ‏
26. எனினும் அவர் தம் குடும்பத்தாரிடம் உடன் விரைந்து சென்று, ஒரு கொழுத்த காளைக் கன்றை(அறுத்துப் பொரித்துக்) கொண்டு வந்து,

فَقَرَّبَهٗۤ اِلَيْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ
27. அதை அவர்கள் முன் நெருக்கமாக வைத்து, “நீங்கள் புசியுங்கள்  என்றும் (மென்மையாகக்)  கூறினார்.

فَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ‌ؕ قَالُوْا لَا تَخَفْ‌ ؕ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِيْمٍ‏

28. (அவர்கள் புசிக்காமல் இருக்கவே)  அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் மனப்பயம்  ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்!” எனக் கூறினர்; அவ்வேளை அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயமும் கூறினர்.

 فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِىْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِيْمٌ‏
29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே!” என்று கூறினார்.

قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِ‌ؕ اِنَّهٗ هُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ‏
30. (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள்.  
قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏
31. (பின்னர் இப்ராஹீம்:) “தூதர்களே! உங்களுடைய செய்தி என்ன?” என்று வினவினார்.

قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ‏ • لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ طِيْنٍۙ‏
32.33  (ஓரினச் செயற்கையில் ஈடுபட்டுவரும்) “கொடிய  பாவிகளான ஒரு சமூகத்தினர் பக்கமாக 
அவர்கள் மீது (சுட்ட) களிமண் கற்களை எறிவதற்காக
நிச்சயமாக நாம் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று அவர்கள் பதில் கூறினார்கள்.
51:34 مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِيْنَ‏
51:34. “வரம்பு மீறியவர்களுக்காக உங்கள் இறைவனிடம் (அக்கற்கள்) அடையாள மிடப்பட்டவை.” (என்றும் அவர்கள் கூறினர்).
فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِيْهَا مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏
35. அதற்காக அவ்வூரில் இருந்த முஃமின்களை (முதலில் பாதுகாப்பாக ) நாம் வெளியேற்றி விட்டோம்.
 فَمَا وَجَدْنَا فِيْهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِيْنَ‌ۚ‏
36,  (பாவியான)  ஒரு வீட்டாரைத் தவிர, முஸ்லிம்களில் உள்ள   ஒருவரையும் நாம் அங்கு காணவில்லை.

وَتَرَكْنَا فِيْهَاۤ اٰيَةً لِّـلَّذِيْنَ يَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِيْمَؕ‏
37. நோவினை தரும் வேதனையை எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுக்கு நாம் இதில் ஓர் அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம்.

என இந்த சரித்திரம் முடிகின்றது.


படிப்பினை
--
வீட்டுக்கு வருவோர் யாராக இருப்பினும் அவர்களுக்கு விருந்துபசாரம் செய்வது இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட வழிமுறையாகும்.

நபியாக இறைநேசராக இருப்போருக்கு
علم الغيب மறைவான ஞானம் கிடையாது. 
நபிமார்கள் வஹி மூலம் அது பற்றி அறிவார்கள் .

 இப்ராஹீம் (عليه السلام) அவர்கள் வானவர்களை அறியாது, வெளிப்படையில் அவர்களை மனித விருந்தினராக எண்ணி விருந்து தயாரித்து உண்ணுமாறு பணித்த போது  வானவர்கள் தம்மைப் பற்றிக் கூறிய பின்பே அது பற்றி அறிந்து கொண்டார்கள் .

குழந்தைப் பேறு என்பதற்கும் அல்லாஹ்வின் நாட்டம் இன்றியமையாத ஒன்றாகும். 

அவ்லியா நாதா பெயரில் கப்ருகளில் அங்கப்பட்டிப்போருக்கும் குழந்தைப் பாக்கியத்தை எவ்வித தொடர்பும் கிடையாது. 

ஆணும் ஆணும், பெண்ணும், பெண்ணும் திருமணம் செய்வது என்பது கிடையாது. அது ஒரு கழிசடை கலாச்சார முறையாகும். 

ஓரினச் சேர்க்கை அல்லது பாலின திருமண அங்கீகாரம் என்பது இறை இயல்பு வழிமுறைக்கு நேர்மாறான மானுட சமூகத்தின் பண்பாட்டிற்கு தலைகீழான, இறை தண்டனையைத்  தேடித் தரும் மிருகக் கலாச்சாரத்தை  விட மோசமான ஒரு நடைமுறையாகும்.

ஓரினச் சேர்க்கை என்ற அசிங்கமான பழக்கத்தில் இருந்து தூர விலகி இருந்த முஃமின்கள் கல்மாரியால் தண்டிக்கப்பட்ட லூத் நபியின் சமூகத்தை விட்டும் பாதுகாக்கப்பட்டனர்.
وَلُوطًا ءَاتَيْنَٰهُ حُكْمًا وَعِلْمًا وَنَجَّيْنَٰهُ مِنَ ٱلْقَرْيَةِ ٱلَّتِى كَانَت تَّعْمَلُ ٱلْخَبَٰٓئِثَ ۗ إِنَّهُمْ كَانُواْ قَوْمَ سَوْءٍۢ فَٰسِقِينَ. (الأنبياء - 74)
லூதுக்கு நுபவத்தையும் தீர்க்கமான அறிவையும் நாம் வழங்கி இருந்தோம். மானக்கேடான (வேதனை வேளை நெருங்கிய போது) அசிங்கமான காரியங்களை செய்து கொண்டிருந்த அந்த கிராமத்தில் இருந்த அவரைப் பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் தீய கூட்டத்தினராக இருந்தார்கள். (அல்அன்பியா- 74)

الله أعلم 

தொகுப்பு
 
எம்.ஜே.எம்.
ரிஸ்வான் மதனி
أحدث أقدم