الغفار
மிக்க மன்னிப்பவன்,
العفو
மன்னிப்பவன்,
غافر
பிழை பொறுப்பவன்
போன்ற பெயர்கள்
அல்லாஹ்வின் அழகிய பெயர்களில் உள்ளவையாகும்.
ஒரு அடியான் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் வானம் பூமி அளவு பாவம் செய்து விட்டு, பின் அவன் மனம் வருந்தியவனாக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினால்
அவனது கோரிக்கையை அல்லாஹ் அங்கீகரித்து மன்னிப்பளிக்கத் தயாராக இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
#அல்லாஹ் கூறுதவாக நபி (ஸல்) #அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
قال ﷺ:«يا عبادي إنكم تخطئون بالليل والنهار وأنا أغفر الذنوب جميعا فاستغفروني أغفر لكم» [رواه مسلم في صحيحه ]
எனது அடியார்களே! நிச்சயமாக நீங்கள் இரவு பகலாக பாவம் செய்கின்றீர்கள். நான்தான் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கின்றேன். எனவே என்னிடமே நீங்கள் பாவமன்னிப்பு வேண்டுங்கள். நான் உங்களுக்கு அனைத்து பாவங்களையும் மன்னிப்பேன். (முஸ்லிம்)
விளக்கம்
-
அல்லாஹ் உறங்காதவன். இறைத்தூதர்கள் மற்றும் அவ்லியாக்கள் மண்ணறையில் புது மாப்பிள்ளை போன்று உறங்குவார்கள் .
அவர்கள் பர்ஸக் எனப்படும் திரையுலக வாழ்வைத் தோடர்கின்றார்கள். அவர்களை அழைத்தாலும் அவர்கள் பதில் தரமாட்டார்கள் எனக் குர்ஆனும் ஹதீஸும் குறிப்பிடுகின்றன.
எனவே உறக்கத்தை தன்மீது ஹராமாக்கிக் கொண்ட, என்றும் உயிருடனும் விழிப்போடும் அர்ஷின் மீதிருந்து அடியார்களைக் கண்காணிக்கின்ற அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்விடம் நமது தேவைகளை வேண்டி பாவங்களையும் கூறி நேரடியாக மன்னிக்க வேண்டுவதனால் அவன் அதனை நிறைவேற்றித் தருவதோடு, மகிழ்ச்சியும் அடைவான்.
அதனால் மரணித்த, மக்கிப்போன எலும்புகளாக மாறிய மனிதர்கள் மூலம் நமது தேவைகளை முன்வைப்பது என்பது அல்லாஹ்வோடு ஒழுக்கமற்று நடப்பதாக கொள்ளப்படுவது மாத்திரிமின்றி, அது பெரும்பாவமாகவும் இருக்கின்றது.
எனவே அல்லாஹ்விடம் நேரடியாகே பாவமன்னிப்புக் கோரி அவனது மன்னிப்பை பெற முயற்சிப்போமாக!
எம்.ஜே.எம்.
ரிஸ்வான் மதனி