புதுவருட காலண்டர்

புதுவருட காலண்டர் கொடுக்கும் இஸ்லாமிய வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனத்தினர் கவனத்திற்கு..!

வாஸ்து, ராசிபலன், நல்ல நேரம் கெட்ட நேரம் என பல மூடநம்பிக்கைகளுக்கு ஆரம்ப வழிகாட்டியே காலண்டர் தான். 

இஸ்லாம் பகுத்தறிவின் மார்க்கம். மூடநம்பிக்கைகளுக்கு எந்த நிலையில் ஒரு முஸ்லிம் துணைபோக கூடாது.

அந்த அடிப்படையில் நமது கடை மற்றும் அலுவலகம் சார்பில் கொடுக்கும் காலண்டரில் இந்த வாஸ்து, ராசிபலன், நல்ல நேரம் கெட்ட நேரம் போன்ற எந்த மூடநம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்காமல், அதற்கு பதிலாக இஸ்லாமிய நற்போதனை அடங்கிய வாசகங்களை அதில் அச்சடித்து கொடுத்தால் அதன்மூலம் அவர்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்க கூடும்.

இதில் கொடுமை என்னவென்றால்.! இந்த மூடநம்பிக்கைகள் அடங்கிய காலண்டர்கள் பல மஸ்ஜித்களிலேயே தொங்குகிறது.!

 நேர்மையான வியாபாரத்தின் மூலம் நாம் விற்கும் பொருளுடன் இஸ்லாத்தையும் அன்பளிப்பாக வழங்க வேண்டிய ஒரு முஸ்லிம், இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அன்பளிப்பாக கொடுப்பது நியாயமற்றது.

*இறைத் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒருவர் ஜோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை."*

*(நூல்: முஸ்லிம் 4488)*

எனவே இத்தகைய மூடநம்பிக்கைகள் அடங்கிய காலண்டரை அன்பளிப்பாக தருவதிலுருந்தும் அதனை நமது வீடு, கடை,  அலுவலகம், பள்ளிவாசல்களில் தொங்க விடுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வோம்..!

பிரிண்ட் செய்து கொடுப்பவர்களின் கவனத்துக்கும் இந்த செய்தியை கொண்டு செல்லுங்கள் இன்ஷா அல்லாஹ்.
أحدث أقدم