இசையை கேட்கும் போது காதுகளில் விரல்களை வைத்தல்

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் இசையின் சத்தத்தை செவியுற்றதும், தனது விரல்களை காதுகளில் வைத்தார்கள், அத்தோடு பாதையை விட்டு ஓரமாக நின்று, என்னிடம் நாபிஃயே, உங்களுக்கு ஏதாவது கேட்கிறதா?" என்று வினவினார், அதற்கு நான் "இல்லை," என்றேன், பிறகு, அவர்கள் தனது விரல்களை காதுகளிலிருந்து வெளியே எடுத்துவிட்டு, "நான் நபி ﷺ அவர்களுடன் இருந்தேன், நபியவர்கள் இதுபோன்ற ஒரு சத்தத்தை செவியுற்ற போது இது போன்று செய்தார்கள்" எனக் கூறினார்கள்.
_ ஸுனன் அபு தாவூத் _( 4924 )

_ அஷ்ஷைக் ஸாலிஹ் அல்-பௌஸான் (حفظه الله) அவர்கள் கூறுகிறார்கள் : "இரு காதுகளுக்குள் குளிர்ந்த நீர் சென்றுவிட்டால் அவற்றுக்கு வலி ஏற்படும், அவ்வாறிருக்கையில் இசை கேட்பதன் காரணமாக மறுமையில் இரு காதுகளுக்குள் ஈயம் உற்றப்பட்டால் எவ்வாறு இருக்கும்?"
_ இகாததுல் லஹ்பான் - [ 17-6-1437 هـ ]

_ அஷ்ஷைக் அல்-அல்பானி (رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்: "இசையின் விடயம் தீவிரம் அடைவதை நான் பயப்படுகிறேன், ஏனெனில் மக்கள் இசையின் மார்க்க சட்டத்தை மறந்துவிடும் போது ஒருவர் இதன் சட்டதிட்டத்தை விளக்கினால், அவருக்குத் தீவிரப் போக்குடையவர் என்று கூறி புறக்கணித்துவிடுவர்."
_ தஹ்ரீமு ஆலாதித் தர்ப் [ பக்கம் 16]

சூனியம் செய்யப்பட்ட/ ஷைதான் பீடித்துள்ளவர்கள் இசையை கேட்கும் போது மேலும் அவர்களது நிலை மோசமாகும் ...

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்: "ஷைத்தானிய நிலைமைகளை பலப்படுத்தும் மிகப்பெரிய காரியங்களில் ஒன்று தான் பாடல் மற்றும் வீணான கேளிக்கைகளை கேட்பதாகும்."
_ மஜ்மூவுல் பதாவா [ 295/11]

இப்னு ரஜப் ( رحمه الله) அவர்கள் கூறுகிறார்கள்: "தண்ணீர் கீரையை முளைக்கச் செய்வது போல் குர்ஆனைக் கேட்பது இதயத்தில் ஈமானை உருவாக்குகிறது, அவ்வாறே இசையைக் கேட்பது உள்ளத்தில் நிபாக் எனும் நயவஞ்சகத்தை உருவாக்கும், ஆதலால் சத்தியமும் அசத்தியமும் சமமாகும் வரை இவ்விரண்டும் -ஈமானும், நிபாகும்- சமமாகமாட்டா."
_ நுஸ்ஹதுல் அஸ்மாஃ [ 93)

இசை ஹராம், அதை கேட்பது பாவமாகும், அதை தினசரி (Story, status) இல் வைப்பது, பாவத்தை பகிரங்கப்படுத்தி, பகிரங்கமாக செய்வதாகும்..

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: "இந்த உம்மத்தில் அனைவரும் ஆரோக்கியம் பெற்று பாகாப்பாக உள்ளனர் ஆனால் பாவத்தை பகிரங்கமாக செய்பவர்களைத் தவிர."
_ ஸஹீஹ் புகாரீ (6069) 
ஸஹீஹ் முஸ்லிம் (2990) 

தமிழில்: அஸ்ஹான் ஹனீபா 
Azhan Haneefa
أحدث أقدم