முஹர்ரம் மாத நோன்பு றமளான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பாகும்.

1163 عن  أبي هريرة  رضي الله عنه قال : قال رسول الله ﷺ :  " أفضل الصيام بعد رمضان ؛ شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة ؛ صلاة الليل ".
 صحيح مسلم
அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்: 

*றமளான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாத  நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்.* 

அறிவிப்பவர்: அபூ ஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு)
முஸ்லிம் 1163

முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்பதன் தனித்துவம்:

1163 عن  أبي هريرة  رضي الله عنه قال : قال رسول الله ﷺ :  " أفضل الصيام بعد رمضان ؛ شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة ؛ صلاة الليل ".  صحيح مسلم
அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்: *றமளான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாத  நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்.* 
அறிவிப்பவர்: அபூ ஹுறைறஹ் (றளியல்லாஹு அன்ஹு) முஸ்லிம் 1163
قال الحافظ ابن رجب رحمه الله تعالى: وقد سمى النبي صلى الله عليه وسلم المحرم شهر الله وإضافته إلى الله تدل على شرفه وفضله فإن الله تعالى لا يضيف إليه إلا خواص مخلوقاته ... ولما كان هذا الشهر مختصا بإضافته إلى الله تعالى كان الصيام من بين الأعمال مضافا إلى الله تعالى فإنه له من بين الأعمال ناسب أن يختص هذا الشهر المضاف إلى الله بالعمل المضاف إليه المختص به.
 كتاب لطائف المعارف فيما لمواسم العام من الوظائف، ص36

இப்னு றஜப் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்: "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹர்ரம் மாதத்திற்கு அல்லாஹ்வின் மாதம் என்று பெயர் சொல்லி இருக்கிறார்கள். அதனை அல்லாஹ்வின் பக்கம் இணைத்திருப்பது அதன் கண்ணியத்தையும் சிறப்பையும் எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில் அல்லாஹ் தனது படைப்புகளில் விஷேடமான படைப்புக்களை மாத்திரமே தன் பக்கம் இணைத்துக் கூறுவான்.
இம்மாதமானது அல்லாஹுத்தஆலாவின் பக்கம் விஷேடமாக இணைக்கப்பட்டிருப்பதாலும் அமல்களுக்கு மத்தியில் நோன்பானது அல்லாஹ்வுக்கே உரியது என்று அவன் பக்கம் விஷேடமாக இணைக்கப்பட்டிருப்பதாலும்; அல்லாஹ்வின் பக்கம் இணைக்கப்பட்ட இம்மாதம் அவன் பக்கம் இணைக்கப்பட்ட, அவனுக்கே உரிய நோன்பு எனும் அமலைக் கொண்டு விசேடமாக ஆக்கப்படுவது பொருத்தமானதாகும்".


ஹிஜ்ரி வருடத்தின் ஆரம்பம்:

முஹர்ரம் மாதம் முதலாவது நாளிலிருந்து இஸ்லாமிய ஹிஜ்ரி வருடம் ஆரம்பிக்கிறது.
முஸ்லிம்களிடம் ஆண்டுக் கணக்கை கணக்கிடுவதற்கு ஒரு வழிமுறை இருக்க வேண்டும் என்பதனால் உமர் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபி ﷺ அவர்கள் ஹிஜ்ரத் சென்ற ஆண்டை ஹிஜ்ரி முதலாவது ஆண்டாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆண்டுக் கணக்கையே முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் காலாகாலமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.   இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களும் இதனடிப்படையிலேயே வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்து வந்துள்ளனர். தொடர்ந்தும் இதனைப் பேணி வருவது மார்க்க அடிப்படையில் அவசியமானதாகும்.

ஆனால் இஸ்லாத்தில் புது வருட ஆரம்பத்திற்கென்று எந்தக் கொண்டாட்டங்களும் கிடையாது. நபி ﷺ அவர்களோ, அல்குலபஉர் றாஷிதூன்களோ, ஏனைய நபித்தோழர்களோ அப்படியான ஒரு வழிமுறையை உருவாக்கவில்லை. இஸ்லாத்தில் கொண்டாடுவதற்கு இரண்டு பெருநாட்கள் மாத்திரமே இருக்கின்றன.

அதேபோன்று வருட இறுதியை நல்லமல்களைக் கொண்டு முடிக்க வேண்டும் என்ற எந்த ஒரு வழிகாட்டலும் மார்க்கத்தில் எங்களுக்கு வழங்கப்படவில்லை. லைலத்துல் கத்ர் இரவில் தான் ஒரு வருடத்தின் அமல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன; மாறாக துல்ஹஜ் மாதத்தின் கடைசி இரவில் அல்ல. 

ஹிஜ்ரிப் புது வருடத்தைக் கொண்டாடுவதோ அல்லது வருட இறுதியை விஷேடமான நல்லமல்களைக் கொண்டு முடிப்பதோ சிறப்புக்குரியதாக இருந்திருந்தால் அவற்றை நபி ﷺ அவர்களும் அவர்களது கண்ணியமிக்க ஸஹாபஹ்களும் செயல்படுத்தியிருப்பார்கள். எனவே மார்க்கத்தில் அவர்கள் செய்யாததை நாம் செய்வது புதிதாக உருவாக்கப்படும் "பித்அத்" ஆகக் கருதப்படும்.


ஆஷூறாஃ தினம் பற்றி ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள்:

ஆஷூறாஃ என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும்.

இந்நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாள் என்று நபி ﷺ அவர்களால் வர்ணிக்கப்பட்டுள்ளது. _(முஸ்லிம் 1126)_

ஜாஹிலிய்யஹ் காலத்திலும்கூட மக்கஹ்வில் வாழ்ந்த குறைஷிகள் இந்த நாளை கண்ணியப்படுத்திருக்கிறார்கள். மேலும், இந்த நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்கள். 
_(புகாரி 2002, முஸ்லிம் 1126)_

இந்நாள் ஜாஹிலிய்யஹ் காலத்தில் கஃபஹ்விற்குத் திரை போடப்படுகின்ற நாளாக இருந்திருக்கிறது.
_(புகாரி 1592)_

இந்த நாள் அல்லாஹ் நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கொடுங்கோலன் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றி, அவனையும் அவனது படையையும் கடலில் மூழ்கடித்த நாளாகும். 
_(புகாரி 2004, முஸ்லிம் 1130)_

மூஸா நபியவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக இந்த நாளில் நோன்பு நோற்றார்கள். 
_(முஸ்லிம் 1130)_

மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பின்பற்றி மதீனஹ்வில் வாழ்ந்த யூதர்களும் இந்த நாளில் நோன்பு நோற்று வந்தனர்.
_(புகாரி 2004, முஸ்லிம் 1130)_

இந்த நாளை யூதர்கள் ஒரு பெருநாள் தினமாகவும் கொண்டாடினர். 
_(புகாரி 2004, முஸ்லிம் 1131)_

நபி ﷺ அவர்கள் இந்த நாளை பெருநாளாகக் கொண்டாடுவதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக நோன்பு பிடிக்குமாறு மாத்திரமே கட்டளையிட்டார்கள். _(புகாரி 2004, முஸ்லிம் 1131)_

நபி ﷺ அவர்கள் இந்த நாளில் நோன்பு நோற்குமாறு வலியுறுத்தி மதீனஹ்வைச் சுற்றியிருந்த கிராமங்களுக்கும் தகவலனுப்பி வைத்தார்கள்; எவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்களோ அவர்கள் நோன்பை தொடருமாறும் எவர்கள் நோன்பு வைத்திருக்கவில்லையோ அவர்கள் எஞ்சியுள்ள நேரத்தில் நோன்பு வைக்கட்டும் என்றும் கூறினார்கள்.
_(புகாரி 1960, முஸ்லிம் 1136)_

இந்த நாளில் நபித்தோழர்களும் நோன்பு நோற்று தங்கள் குழந்தைகளையும் நோன்பு நோற்க வைத்தார்கள். _(புகாரி 1960, முஸ்லிம் 1136)_


இஸ்லாத்தில் ஆஷூறாஃ நோன்பு நான்கு கட்டங்களைக் கண்டுள்ளது:

1. நபி ﷺ அவர்கள் மக்கஹ்வில் இருக்கும் பொழுது இந்த நாளில் நோன்பு நோற்று இருக்கிறார்கள். மக்களுக்கு நோன்பு நோற்குமாறு ஏவியிருக்கவில்லை. 
_(புகாரி 2002, முஸ்லிம் 1126)_

2. மதீனஹ்விற்கு வந்த பிறகு இந்நாளில் யூதர்களும் நோன்பு நோற்று இருப்பதை பார்த்துவிட்டு, மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் விடயத்தில் நாமே மிகவும் அருகதை உடையவர்கள் என்று கூறிவிட்டு தாமும் நோன்பு நோற்று, மக்களையும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.
_(புகாரி 2004, முஸ்லிம் 1130)_

3. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ரமழான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு ஆஷூறாஃ நோன்பை விரும்பியவர்கள் நோற்குமாறு கூறி உபரியான வணக்கமாக்கினார்கள். 
_(புகாரி 2001, முஸ்லிம் 1128)_

4. நபி ﷺ அவர்களின் இறுதிக் காலத்தில் யூதர்களுக்கு மாற்றமாக தனித்துவமுள்ளதாக எமது இஸ்லாமியக் கலாச்சாரம் அமைய வேண்டும் என்பதற்காக, 'நான் அடுத்த வருடம் உயிருடன் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்' என்று கூறினார்கள். அடுத்த வருடம் வருவதற்குள் நபி ﷺ அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.
_(முஸ்லிம் 1134)_

*குறிப்பு:* நபி ﷺ அவர்கள் ஆரம்ப காலங்களில் வேதக்காரர்களுக்கு உடன்படும் ஒரு நிலையைக் கடைபிடித்தார்கள். அதற்குக் காரணம் முஷ்ரிக்களை விட முற்காலத்தில் வேதம் வழங்கப்பட்டவர்கள் இஸ்லாத்தின் கருத்துக்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்தனர். பிற்பட்ட காலத்தில் முன்பிருந்த நிலைக்கு மாற்றமாக அவர்களுக்கு  வித்தியாசப்படும் ஒரு நிலைப்பாட்டைக் கடைபிடித்து, முஸ்லிம்களுக்கு தனிக் கலாச்சாரத்தை உருவாக்கினார்கள்.

இந்நாளில் நோன்பு நோற்பதன் மூலமாக இந்நாளுக்கு முன்னுள்ள ஒரு வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படும்.
 _(முஸ்லிம் 1162)_ 

இந்த நாளில் நோன்பு பிடிப்பதில் நபி ﷺ அவர்கள் கூடுதல் கரிசனை காட்டினார்கள். 
 _(புகாரி 2006, முஸ்லிம் 1132)_ 


ஆஷூறாஃ நோன்பின் சிறப்பு:

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
*ஆஷுறாஃ தினத்தில் நோன்பு நோற்பதன் மூலம் அதற்கு முன்னுள்ள வருடத்தின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று நான் ஆதரவு வைக்கின்றேன்.*

அறிவிப்பவர்: அபூ கதாதஹ் (றளியல்லாஹு அன்ஹு) 
முஸ்லிம் 1162

عن أبي قتادة رضي الله عنه مرفوعا: 
*"... وصيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله".*
 صحيح مسلم 1162

இப்னு அப்பாஸ் (றளியல்லாஹு அன்ஹுமா)  கூறினார்கள்: 

*'ஆஷூறாஃ எனும் இந்த நாளையும் இந்த (றமழான்) மாதத்தையும் தவிர, வேறெந்த நாளையும் மற்ற நாட்களைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி ﷺ அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை!'*

புகாரி 2006

عن ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قال: مَا رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ، إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ. يَعْنِي شَهْرَ رَمَضَانَ. 
 صحيح البخاري 2006

Sunnah Academy:
facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy
youtube.com/@Sunnah_academ
Telegram:
t.me/sunnah_academy
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp

أحدث أقدم