கஃபதுல்லாஹ்வின் முதல் புகைப்படம்



இது புனித கஃபாவையும் மக்கா முகர்ரமாவையும் படம்பிடித்த மிகப்பழைமையான புகழ்பெற்ற புகைப்படங்களில் ஒன்றாகும்.

இப்புகைப்படம் 1880 ஆம் ஆண்டு எகிப்திய இராணுவ அதிகாரியும் பொறியாளருமான முஹம்மத் சாதிக் பேக் என்பவரால் எடுக்கப்பட்டது.

இரு புனிதத் தலங்களையும் முதன்முதலில் புகைப்படக் கருவியால் படம் பிடித்தவர் முஹம்மத் சாதிக் பேக் அவர்களேயாவார்.

இவரது இந்த முன்னோடிப் பணியைப் பாராட்டும் விதமாக, 1881ஆம் ஆண்டு வெனிஸ் நகரில் நடைபெற்ற புவியியல் கண்காட்சியில் இவருக்குத் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இப்புகைப்படம் வெட்- ப்ளேட் கொலோடியன்’ (Wet-Plate Collodion) எனும் அக்காலத்திய ஈரமான தகடு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் படம்பிடிக்கப்பட்டது.

இது புனித கஃபாவை அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கிஸ்வாப் (திரை) போர்த்திய நிலையிலும், மஸ்ஜிதுல் ஹராமின் நவீன விரிவாக்கங்களுக்கு முந்தைய மதாஃப் பகுதியையும் மிகத் தெளிவாகக் காட்டுகிறது.

இறைவா, உனது புனித இல்லத்திற்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பை எங்கள் அனைவருக்கும் வழங்குவாயாக.


أحدث أقدم