சிறந்த நற்கூலி

01)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில்  கனமானவை; அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை ஆகும். (அவை:)

சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி

سبحان الله وبحمده

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.

சுப்ஹானல்லாஹில் அழீம்

سبحان الله العظيم

கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

[அல்-புகாரி மற்றும் முஸ்லிம்]


02)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் காலையிலும் மாலையிலும் நூறு முறை 

“சுப்ஹானல்லாஹி வ பிஹம்திஹி”

سبحان الله وبحمده

அல்லாஹ் தூயவன் எனப் போற்றிப் புகழ்கிறேன்

என்று சொல்கிறாரோ அவர் கொண்டுவந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமைநாளில் கொண்டு வருவதில்லை; அவர் சொன்ன அளவுக்குச் சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)


03)

இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்“ “சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி“

سبحان الله وبحمده

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்

என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி-6405


04)

நபி صلى الله عليه وسلم
அவர்கள் நவின்றதாக ஜாபிர் رضي الله عنه அறிவிக்கிறார்கள் : யார் ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி

سبحان الله وبحمده

அல்லாஹ்வை புகழ்வதுடன் அவனைத் தூய்மையானவன் -எனப் போற்றுகிறேன்

என்று கூறுவாரேயானால் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு பேரீத்தம் பழ மரம் நடப்படும்.

திர்மிதி


05)

அபூ மூஸா அப்துல்லாஹ் இப்னு கைஸ் رضي الله عنه அறிவித்தார். நபி صلى الله عليه وسلم
அவர்கள்,

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்“ என்று சொல்வீராக!

“ஏனெனில், அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்“

அல்லது “உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலமாகும்“ என்று கூறியவாறு (அந்த வார்த்தை)

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

لا حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِالله

(அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ (நல்லறங்கள்) புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் முடியாது)

(என்பதாகும்)“ என்பதாகும். என்றார்கள்.

புகாரி


06)

(நபி صلى الله عليه وسلم அவர்களின் துணைவியார்) ஜுவைரியா رضي الله عنها அவர்கள் கூறியதாவது: நபி صلى الله عليه وسلم அவர்கள் சுப்ஹுத் தொழுகைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுதுவிட்டு வந்தார்கள். அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம், ”நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்துகொண்டிருக்கிறாயா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம்” என்றேன். நபி صلى الله عليه وسلم அவர்கள், ”நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன். அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால், நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும். (அவை:)

சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அதத கல்கிஹி, வ ரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்ஷிஹி, வ மிதாத கலிமாத்திஹி

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، عَدَدَ خَلْقِهِ، وَرِضَا نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ، وَمِدَادَ كَلِمَاتِهِ

(ஆகியவையாகும்)” என்றார்கள்.

(பொருள்: அல்லாஹ்வுடைய படைப்புகளின் எண்ணிக்கை அளவுக்கும், அவன் உவக்கும் அளவுக்கும், அவனது அரியணையின் எடையளவுக்கும், அவனுடைய சொற்களின் எண்ணிக்கை அளவுக்கும் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து அவனைத் தூயவன் எனத் துதிக்கிறேன்.)

இதை இப்னு அப்பாஸ் رضي الله عنه அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம்


07)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ‏.‏

லாஇலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்
என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு,

அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும்.

மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும்

அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும்  மேலும்,

அவரின் அந்த நாளில் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும்

மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமாக (முறை இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி


08)

அபூ ஹுரைரா رضي الله عنه அறிவித்தார். மக்கள் (சிலர்), “இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களே! வசதி படைத்தோர் (உயர்) அந்தஸ்துகளையும் (சொர்க்கத்தின்) நிலையான இன்பங்களையும் (தட்டிக்) கொண்டு போய்விடுகின்றனர்“ என்று கூறினார்கள். நபி صلى الله عليه وسلم அவர்கள், “அது எவ்வாறு?“ என்று கேட்டார்கள். “(ஏழைகளாகிய) நாங்கள் தொழுவதைப் போன்றே அவர்களும் தொழுகின்றனர். (அறவழியில்) நாங்கள் போரிடுவதைப் போன்றே அவர்களும் போரிடுகின்றனர். தங்களின் அதிகப்படியான செல்வங்களை (நல்வழியில்) செலவிடுகின்றனர். ஆனால், (அவ்வாறு செலவிட) எங்களிடம் பொருள்களேதும் இல்லையே?“ என்று கூறினர். அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள், “நான் உங்களுக்கு ஒன்றைத் தெரிவிக்கட்டுமா? (அதை நீங்கள் செயல்படுத்திவந்தால் இந்தச் சமுதாயத்தில்) உங்களை பின்னால் வருபவர்களையும் நீங்கள் எட்டிவிடுவீர்கள். இதைப் போன்று செய்தால் தவிர, வேறு எவரும் நீங்கள் செய்ததற்கு நிகராகச் செய்திட முடியாது. (அது யாதெனில்) நீங்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் பத்துமுறை
“சுப்ஹானல்லாஹ்“ (அல்லாஹ் தூயவன்)
سبحان الله என்றும்,

பத்து முறை “அல்ஹம்து லில்லாஹ்“ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே)
الحمد لله என்றும்,

பத்து முறை “அல்லாஹுஅக்பர்“ (அல்லாஹ் மிகவும் பெரியவன்)
الله أكبر என்றும் கூறுங்கள்“ என்றார்கள்.

(ஸஹீஹ் புகாரி)



09)

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார் ஒருவர் “குல்ஹுவல்லாஹு அஹத்“ எனும் (112 வது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார்.

(இதைக்கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயமும் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்று ஈடானதாகும்“ என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் புகாரி)


10)

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ ۝

ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلْحَىُّ ٱلْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُۥ سِنَةٌۭ وَلَا نَوْمٌۭ ۚ لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَ‌ٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ مَن ذَا ٱلَّذِى يَشْفَعُ عِندَهُۥٓ إِلَّا بِإِذْنِهِۦ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَىْءٍۢ مِّنْ عِلْمِهِۦٓ إِلَّا بِمَا شَآءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ ٱلسَّمَـٰوَ‌ٰتِ وَٱلْأَرْضَ ۖ وَلَا يَـُٔودُهُۥ حِفْظُهُمَا ۚ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْعَظِيمُ ۝

உச்சரிப்பு:

அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமாஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லாபி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்பஹும் வலாயுஹீ(த்)தூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிஃப்ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.

அர்த்தம்:

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன்; என்றென்றும் நிலைத்திருப்பவன்; அவனை அரி துயிலோ, உறக்கமோ பீடிக்கா; வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்; அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது; அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது; அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை – அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.

சிறப்பு:

முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார் அபூ ஹுரைரா(ரலி), “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளானின் (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள். அப்போது யாரோ ஒருவன் என்னிடம் வந்து அந்த (ஸகாத்) உணவுப் பொருளை அள்ளலானான். உடனே அவனை நான் பிடித்து, “உன்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்“ என்று சொன்னேன்“ என்று கூறிவிட்டு, – அந்த நிகழ்ச்சியை முழுமையாகக் குறிப்பிட்டார்கள். – (இறுதியில், திருட வந்த) அவன், “நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது (ஆயத்துல் குர்ஸீ“யை ஓதுங்கள்! (அவ்வாறு செய்தால்,) விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (உங்களைப் பாதுகாக்கின்ற) காவலர் (வானவர்) ஒருவர் இருந்துகொண்டேயிருப்பார்; எந்த ஷைத்தானும் உங்களை நெருங்கமாட்டான்“ என்று கூறினான். (இதை நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்). அப்போது நபியவர்கள், “அவன் பெரும் பொய்யானாயிருப்பினும அவன் உம்மிடம் உண்மையாகத்தான் சொல்லியிருக்கிறான்; (உம்மிடம் வந்த) அவன்தான் ஷைத்தான்“ என்று கூறினார்கள் என்றும் கூறினார்கள்.

(ஸஹீஹ் புகாரி)


11)

நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அன்னவர்கள் கூறினார்கள்:

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் யார் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வதற்கு அவரின் மரணம்தான் தடையாக உள்ளது.

(நஸயீ)


12)

ரிஃபாஆ இப்னு ராஃபிவு رضي الله عنه அறிவித்தார்.

நாங்கள் நபி صلى الله عليه وسلم அவர்களின் பின்னே ஒரு நாள் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தியபோது “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா

سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ

எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒருவர் “ரப்பனா வ லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ

என்று கூறினார்.

தொழுது முடித்ததும் “இந்த வார்த்தைகளைக் கூறியவர் யார்?“ என்று நபி صلى الله عليه وسلم கேட்டார்கள். அந்த மனிதர் “நான்“ என்றார்.

“முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதைப் பதிவு செய்வதில் போட்டி போட்டதை கண்டேன்” என்று நபி صلى الله عليه وسلم கூறினார்கள்.

(ஸஹீஹ் புகாரி)


13)

அரபி

اَللَّهُـمَّ أَ نْتَ رَبِّـيْ لَآ إِ لَهَ إلاَّ أَ نْتَ خَلَقْتَنِـيْ ، وَأَنَا عَبْـدُ كَ ، وَأَنَا عَلَـى عَهْـدِكَ وَوَعْـدِكَ مَا اسْتَـطَعْـتُ ، أَعُـوذُبِكَ مِنْ شَـرِّ مَا صَنَـعْتُ ، أَ بُـوءُ لَـكَ بِنِعْـمَتِـكَ عَلَـيَّ ، وَأَ بُـوءُ بِذَ نْـبِيْ ، فَاغْفِـرْ لِي ، فَإِ نَّـهُ لَا يَغْـفِرُ الذّ ُ نُـوبَ إِ لاَّ أَ نْتَ

உச்சரிப்பு:

“அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துன}ப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து“ என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும்.

பொருள்:

அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

பலன்:

இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்“
மாலை நேரத்தில் ஒருவர் இதைச் சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்தால் அவர் (சொர்க்கம் செல்வார்“ அல்லது சொர்க்கவாசியாவார்“ காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்தால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்) என ஷத்தாத் இப்னு அவ்ஸ் رضي الله عنه அறிவித்தார்.

புகாரி


14)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ “அல்பகரா“ எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறவருக்கு அந்த இரண்டுமே போதும்.! என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(புகாரி)

கடைசி இரண்டு ஆயத்துகள்:

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

(இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”


15)

அரபி

بِسْـمِ اللَّهِ الَّذِ يْ لَا يَضُـرُّ مَعَ اسْمِـهِ شَيْ ءٌ فِي الْأَ رْضِ وَلَا فِي السَّمـآءِ ، وَهُـوَ السَّمِـيْعُ الْعَلِـيْمُ

உச்சரிப்பு:

பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ்ஸமாயி வஹுவஸ் ஸமீஉல் அலீம்

பொருள்:

அல்லாஹ்வுடைய திருநாமத்தின் பொருட்டால் (காவல் தேடுகின்றேன்) அவனுடைய திருநாமம் கூறி செய்யப்படும் எந்தச் செயலுக்கும் வானம் பூமியிலுள்ள எதுவும் இடையூறு செய்யாது.)

பலன்:

என்று ஒருவர் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மூன்று முறை சொல்வாரானால் அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் رضي الله عنه

(திர்மிதி, அல்-தவாத், 3388)


16)

அரபி:

أَعُـوْذُ بِكَلِمَـاتِ اللَّهِ ا لتَّـا مَّـاتِ مِنْ شَـرِّ مَا خَلَـقَ

உச்சரிப்பு:

அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக

பொருள்:

அல்லாஹ் படைத்த அனைத்து தீங்குகளை விட்டும் பூரணத்துவம் வாய்ந்த அவனுடைய வார்த்தைகளைக் கொண்டு பாதுகாவல் தேடுகின்றேன்

பலன்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும்போது. ”அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக” என்று கூறினால். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும்வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது. இதை கவ்லா பின்த் ஹகீம் அஸ்ஸுல மிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. –

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ”அல்லாஹ்வின் தூதரே! நேற்றிரவு என்னைத் தேள் ஒன்று கொட்டிவிட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”நீ மாலைப் பொழுதை அடையும்போது, ”அஊது பிகலி மாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்” என்று கூறியிருந்தால் அது உனக்குத் தீங்கிழைத்திருக்காது” என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்)


17) 

அரபி:

حَسْبِـيَ اللَّهُ لَآ إِ لَهَ إِ لاَّ هُوَ عَلَـيْهِ تَوَكَّـلْتُ ، وَهُوَ رَبُّ ا لْعَرْ شِ الْعَظِـيْمِ

உச்சரிப்பு:

ஹஸ்பியல்லாஹு லா இலாஹா இல்லா ஹுவ அலைஹி தவகல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்

பொருள்:

எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்.

பலன்:

எவர் ஒருவர் இதை காலையிலும் மாலையிலும் ஏழுமுறை ஓதுகிறாரோ, இம்மை மற்றும் மறுமையில் அவர் விரும்புவதை அல்லாஹ் வழங்குவான்

[அபூ தாவூத் 4/321]


17)

அரபி :

حَسْبِـيَ اللَّهُ لَآ إِ لَهَ إِ لاَّ هُوَ عَلَـيْهِ تَوَكَّـلْتُ ، وَهُوَ رَبُّ ا لْعَرْ شِ الْعَظِـيْمِ

உச்சரிப்பு:

ஹஸ்பியல்லாஹு லா இலாஹா இல்லா ஹுவ அலைஹி தவகல்து வஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்

பொருள்:

எனக்கு அல்லாஹ் போதுமானவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனையே சார்ந்துள்ளேன்; அவனே மகத்தான அர்ஷின் இறைவன்.

[அபூ தாவூத் 4/321]


18)

மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ-அதைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

நபி (ஸல்) அவர்களிடம் அவருடைய சிறிய தந்தையான அல் அப்பாஸ் அவர்கள் கூறினார்கள்:

யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என்னுடைய சிறிய தந்தையே, கூறுங்கள்

اللهم اني اسالك العافية

அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா

(யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்)

ஆகவே இப்பொழுது ஆஃபியா என்றால் என்ன?

ஆஃபியாவின் பொருளானது எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று”

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் ஆஃபியாவில் இருக்கின்றீர்கள் என்பதாகும்.

வாழ்வதற்கு போதிய பணம் இருக்குமானால் நீங்கள் ஆஃபியாவில்” இருக்கிறீர்கள்

உங்களது குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் தண்டிக்கப்படாமல் மன்னிகப்பட்டவரானால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள்

ஆஃபியாவின் பொருள்:

யா அல்லாஹ்! என்னை வேதனையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பாதுகாப்பாயாக. இது துன்யாவையும் ஆகிராவையும் சேர்த்தே குறிக்கும்.

அல் – அப்பாஸ் அவர்கள் இதைப்பற்றி சிந்தித்துவிட்டு, சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து கூறினார்கள்:

“யா ரஸூலுல்லாஹ்! இந்த துஆ பார்ப்பதற்கு கொஞ்சம் சுருக்கமாக தெரிகிறது. எனக்கு வேறு ஏதாவது பெரியதாக வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய நேசத்திற்குரிய சிறிய தந்தையே, அல்லாஹ்விடம் ஆஃபியாவை கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆஃபியாவைவிட சிறந்ததாக நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள்.

இது மிகவும் எளிமையான துஆ. நீங்கள் கூறுவதன் உண்மையான பொருளானது

யா அல்லாஹ் நான் உன்னிடம் சகல விதமான துன்பத்தைவிட்டும்,கேடுகளை விட்டும், ஆழந்த துக்கத்தைவிட்டும், கஷ்டத்தைவிட்டும்,பாதுகாப்பு தேடுகிறேன். என்னை சோதிக்காதே!

இதெல்லாம் “அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுக அல் – ஆஃபியா என்பதில் உள்ளடங்கிவிடும்.

(ரியாத் அஸ் ஸாலிஹீன், ஸுனன் திர்மிதி)


19)

உங்களில் ஒருவர் பரிபூரணமான முறையில் உளு செய்துவிட்டு பின்பு

أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ الله ُوَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أنَّ مُـحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ

என்ற துஆவை ஓதினால் அவருக்காக சுவர்க்கத்தின் எட்டு வாசல்களும் திறக்கப்பட்டு அவர் விரும்பிய வாசலால் நுழைய முடியும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஆதாரம்- முஸ்லிம்)



20)

அரபி:

بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ ۝ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ۝ اللَّهُ الصَّمَدُ ۝ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ۝ وَلَمْ يَكُن لَّهُ ۥكُفُوًا أَحَدٌ ۝

உச்சரிப்பு:

குல்குவல்லாஹு அஹது,
அல்லாஹுஸ்ஸமது,
லம் எலிது வலம் யூலது,
வலம் யகுல்லகு குஃபுவன் அஹது.

பொருள்:

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

பலன்;

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:’யார் குல் ஹுவல்லாஹு அஹதை பத்து தடவை ஓதுகிறார்களோ அவருக்கு அல்லாஹ் சுவனத்தில் ஒரு அரண்மனையை கட்டித்தருகிறான் .’ உமர் رضي الله عنه அவர்கள் வியந்தவர்களாக கூறினார்கள், “அப்படியென்றால் நாங்கள் எங்களுடைய அரண்மனையை அதிகரித்து கொள்வோம்!” அதற்கு நபி صلى الله عليه وسلم அவர்கள் பதில் கூறினார்கள், ” (வெகுமதி வழங்குவதில்) அல்லாஹ் சிறந்தவன் மற்றும் மிகப் பெரியவன்.”

[அஹ்மத்]


21)

கோடிக்கணக்கான நன்மைகள் சில நொடிகளில் உம்மத்திற்காக பாவ மன்னிப்பு கோருங்கள் 

நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள் : “எவர் ஒருவர் முஃமினான ஆண்கள் மற்றும் முஃமினான பெண்களுக்கு பாவமன்னிப்பு கோருகிறாரோ,
 
 اللَّهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

அல்லாஹும்மஃ’ஃபிர் லில் முஃமினீன வல் முஃமினாத்

அந்த ஒவ்வொரு முஃமினான ஆண் மற்றும் முஃமினான பெண்களின் எண்ணிக்கை அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மையை எழுதுவான்.”

[தபரானி]


22)

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் கூடுதலாகப் பன்னிரண்டு 12 ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்காகச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை  எழுப்பப்படுகிறது.

அறிவிப்பவர் : உம்மு ஹபீபா
(ஸஹீஹ் முஸ்லிம்)


23)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடியவண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் “உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்“ என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களின் இறைவன் “என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?“ என்று கேட்கிறான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்துகொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றர்“ என்று வானவர்கள் கூறுகின்றனர். அதற்கு இறைவன், “அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்?“ என்று கேட்பான். வானவர்கள், “உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள்“ என்று பதிலளிப்பார்கள். அதற்கு இறைவன், “என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகிறார்கள்?“ என்று (தனக்குத் தெரியாதது போன்று) கேட்பான். வானவர்கள், “அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர்“ என்பார்கள். அதற்கு இறைவன், “அவர்கள் அதைப் பார்த்ததுண்டா?“ என்று கேட்பான். அதற்கு வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்?“ என்று கேட்பான். வானவர்கள், “சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசைகொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள்“ என்று பதிலளிப்பார்கள். இறைவன், “அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்?“ என்று வினவுவான். வானவர்கள், “நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்)“ என்று பதிலளிப்பார். இறைவன், “அதனை அவர்கள் பார்த்திருக்கிறார்களா?“ என்று கேட்பான். வானவர்கள், “இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்தில்லை“ என்பர். அதற்கு இறைவன், “அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்?“ என்று கேட்பான் வானவர்கள், “நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள்“ என்பர். அப்போது இறைவன், “எனவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன்“ என்று கூறுவான். அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “(அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகிற அவர்களில் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான்“ என்பார். அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர,) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான்“ என்று கூறுவான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 80. பிரார்த்தனைகள் 6408.


25)

அல்லாஹ்வின் தூதர் நபிصلى الله عليه وسلم அவர்கள் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த இடத்தை கடந்த 

ஒரு மனிதர் அவர்களுடன் அமரும் போது,

السلام عليكم 

அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறினார்.

(அப்பொழுது) நபிصلى الله عليه وسلم அவர்கள், (அவர் பெற்று கொள்வது உறுதி) ”பத்து ஹஸனாத் ”(பத்து நன்மைகள்) 10 என்று கூறினார்கள். 

அடுத்தொருவர் வந்தார். அவர், 

السلام عليكم ورحمة الله 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்” (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்) என்று கூறி அமர்ந்தார். 

நபிصلى الله عليه وسلم , அவர்கள் கூறினார்கள்:(அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ இருபது ஹஸனாத்'(இருபது நன்மைகள்)20. 

மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவர், 

السلام عليكم ورحمة الله وبركاته 

“அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு”(உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

நபிصلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: (அவர் பெற்று கொள்வது உறுதி) ‘ முப்பது ஹஸனாத்'(முப்பது நன்மைகள்)30.

அம்ல் அல் யவ்ம் வல்-லைலாவில் அல் நிஸாயீல் அறிவிக்கப்பட்டுள்ளது (368) மேலும் அல்-அதாப் அல்-முஃப்ரத்தில் அல்-புகாரியால் (586) அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இப்னு ஹிப்பானால் (493) அறிவிக்கப்பட்டுள்ளது.


25)

அபூதர்தா (ரலியல்லாஹூ அன்ஹூ) அறிவிக்கிறார்கள்:

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) கூறினார்கள்,

“யார் ஒருவர் கல்வியை தேடக்கூடிய பாதையை பின்தொடர்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்துடைய பாதையை இலேசாக்குகிறான். மலக்குமார்கள் கல்வியை தேடி செல்லக்கூடியவர்களுக்காக தன் இறக்கைகளை தாழ்த்துகிறார்கள், அவர்கள் செய்பவற்றை கொண்டு இன்பமடைகிறார்கள். வானத்தில் இருக்கக்கூடியவைகளும் பூமியில் இருக்கக்கூடியவைகளும் பெருங்கடலின் ஆழத்தில் இருக்கக்கூடிய மீன்களும்கூட அவருக்காக பாவமன்னிப்பு தேடுகின்றன.

அபூதாவூத்


26)

யார் கல்வியைத் தேடி பயணமாகின்றானோ அவனுக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் எளிதாக்கிவிடுகிறான்.

(ஸஹீஹ் முஸ்லிம்)


27)

யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 160 


أحدث أقدم