தேர்ந்தெடுக்கப்பட்ட ஹதீஸ்கள் - 01

-ஃபாஸில் அப்துல்லாஹ்


ஈமான் உறுதி பெற இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும்

إنَّ الإيمانَ لَيَخْلَقُ في جَوْفِ أحدِكُمْ كَما يَخلَقُ الثّوبُ ، فاسْألُوا اللهَ تعالَى : أنْ يُجَدِّدَ الإيمانَ في قُلوبِكمْ

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 1590 | خلاصة حكم المحدث : صحيح

துணிகள் பழையதாகி விடுவது போல் உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானும் பழையதாகி (பலவீனமடைந்து) விடும். எனவே, உங்கள் உள்ளங்களில் உள்ள ஈமானைப் புதுப்பிக்க அல்லாஹ்விடம் துஆச் செய்து வாருங்கள்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமி 1590 தரம் : ஸஹீஹ்


எளிமை ஈமானின் ஒர் பகுதி ஆகும்

ألا تسمَعون، ألا تسمَعون، إنَّ البذاذةَ منَ الإيمانِ، إنَّ البذاذةَ منَ الإيمانِ» يعني التَّقحُّلَ

الراوي : إياس بن ثعلبة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 4161 | خلاصة حكم المحدث : صحيح

கவனமாகக் கேளுங்கள்! கவனமாகக் கேளுங்கள்! நிச்சயமாக எளிமை ஈமானின் ஒரு பகுதியாகும். நிச்சயமாக எளிமை ஈமானின் ஒரு பகுதியாகும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஉமாமா (ரலி)  அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 4161 தரம் : ஸஹீஹ்


அல்லாஹ்விற்க்கு விருப்பமான சொல்

إنَّ أحَبَّ الكلامِ إلى اللهِ أن يقول العبدُ : سبحانك اللهمَّ و بحمدِك ، و تبارك اسمُك ، و تعالَى جَدُّك ، و لا إله غيرُك ..... 

الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 2598 | خلاصة حكم المحدث : إسناده صحيح

 பேச்சுகளிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமுள்ளது ஒர் அடியான் பின்வருமாறு கூறுவதாகும் :

” ஸுப்ஹானல்லாஹும்ம வ பிஹம்திக வ தாரகஸ்முக வத ஆலா ஜத்துக வலா இலாஹ கைருக “

என் இறைவா நீயே பரிசுத்தமானவன் புகழ் அனைத்தும் உனக்கே உரியது. உனது திருப்பெயர் நற்பாக்கியம் பெற்றுள்ளது. உனது கண்ணியமும் பெருமையும் உயர்ந்துள்ளது . உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை..... என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 2598 தரம் : ஸஹீஹ்


பிறர் மீது இரக்கம் காட்ட வேண்டும்

الراحمونَ يرحمهمُ الرحمنُ تبارك وتعالى ارْحَموا مَن في الأرضِ يرحمْكم مَن في السماءِ

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 3522 | خلاصة حكم المحدث : صحيح | 

கருணைபுரிபவர்கள் மீது கருணையாளனான அல்லாஹ்'' கருணை புரிவான், நீங்கள் பூமியில் உள்ளோர் மீது இரக்கம் காட்டுங்கள், வானிலுள்ளவன் உங்கள் மீது இரக்கம் காட்டுவான் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமி 3522 தரம் : ஸஹீஹ்


அல்லாஹ் நம்மை நேசிக்க..

ازْهَدْ في الدنيا يُحبَّكَ اللهُ ، وازهدْ فِيما في أيدِي الناسِ يُحبَّكَ الناسُ

الراوي : سهل بن سعد الساعدي | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 922 | خلاصة حكم المحدث : صحيح

உலகில் பற்றற்று வாழ்! அல்லாஹ் உன்னை நேசிப்பான்! மனிதர்களிடத்தில் தேவையற்று இரு! அவர்கள் உன்னை நேசிப்பார்கள்!” என்று நபி ஸல் கூறியதாக சஹல் பின் சஅத் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமி 922 தரம் : ஸஹீஹ்


இரண்டு பாவங்களுக்கு மன்னிப்பே கிடையாது

كلُّ ذنبٍ عسى اللهُ أنْ يغفِرَه إلَّا مَن مات مُشرِكًا أو مَن قتَل مؤمنًا مُتعمِّدًا

الراوي : أبو الدرداء | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 5980 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

எல்லாப் பாவத்தையும் அல்லாஹ் மன்னித்துவிடுவான் என்று அல்லாஹ்விடம் ஆதரவு வைக்கலாம் ஆனால் இரண்டு பாவத்தைத் தவிர 

அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணித்தவரின் பாவத்தையும், ஒரு முஸ்லிமை வேண்டும் என்றே கொலை செய்த முஸ்லிமின் பாவத்தையும் தவிர என்று நபி ஸல் கூறியதாக அபூதர்தா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 5980 தரம் : ஸஹீஹ்


முஃமீனின் இரத்தம் அநியாயமாக ஒட்டப்படுவது

قتلُ المؤمنِ أعظمُ عِندَ اللهِ من زوالِ الدُّنيا

الراوي : بريدة بن الحصيب الأسلمي | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4001 | خلاصة حكم المحدث : حسن صحيح

ஒர் முஃமீன் கொல்லப்படுவது அல்லாஹ்விடம் முழு உலகமும் அழிந்து போவதைவிடப் பயங்கரமானது என்று நபி ஸல் கூறியதாக புரைதா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸயீ 4001 தரம் : ஹஸன் ஸஹீஹ்


அனுமதி இன்றி அடுத்தவர்கள் பொருளை தொடக்கூட கூடாது

لا يأخُذَنَّ أحدُكُم مَتاعَ أخيهِ لاعبًا ولا جادًّا .

الراوي : يزيد بن عبدالله والد السائب | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 1218 | خلاصة حكم المحدث : صحيح

உங்களில் எவரும் தமது சகோதருடைய பொருளை அனுமதியின்றி வேண்டுமென்றோ விளையாட்டகவோ எடுக்க வேண்டாம் என்று நபி ஸல் கூறியதாக யஸீத் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 1218 தரம் : ஸஹீஹ்


கடுமையான குற்றங்கள் மூன்று...

مَن حالَت شفاعتُهُ دونَ حدٍّ من حدودِ اللَّهِ فقَد ضادَّ اللَّهَ ، ومَن خاصمَ في باطلٍ وَهوَ يعلمُهُ ، لم يزَلْ في سَخطِ اللَّهِ حتَّى ينزِعَ عنهُ ، ومَن قالَ في مؤمنٍ ما ليسَ فيهِ أسكنَهُ اللَّهُ رَدغةَ الخبالِ حتَّى يخرجَ مِمَّا قالَ

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 3597 | خلاصة حكم المحدث : صحيح 

1.அல்லாஹ்வுடைய வரம்பை மீறியதற்குரிய தண்டனையைத் தடைசெய்ய எவரேனும் பரிந்து பேசினால் அவன் அல்லாஹ்விடம் போர் தொடுத்துவிட்டான் .

2. தான் சத்தியத்தின் மீது இருக்கிறோம் எனத் தெரிந்தும் எவர் தர்க்கம் செய்வாரோ அவர் தர்க்கத்தை கைவிடும் அவரை அல்லாஹ் அந்த அடியார் மீது கோபத்தில் இருக்கிறான்.

3.ஒர் முஃமீனைப் பற்றி அவரிடத்தில் இல்லாத எவர் கூறுவாரோ அவரை தான் அவதூறு கூறியதற்குரிய தண்டனையைப் பெற்று அப்பாவத்திலிருந்து அவர் பரிசுத்தம் அடையும் வரை அல்லாஹ் நரகத்தில் சீழ் மற்றும் இரத்தத்தின் சகதியிலே குடியிருக்க வைப்பான் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 3597 தரம் : ஸஹீஹ்


அல்லாஹ்விடம் பிரார்த்தித்தல்

كان النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يقولُ يا وليَّ الإسلامِ وأهلِه ثبِّتْني به حتَّى ألقاك

الراوي : أنس بن مالك | المحدث : الهيثمي | المصدر : مجمع الزوائد | الصفحة أو الرقم : 10/179 | خلاصة حكم المحدث : رجاله ثقات

( எங்கள் இறைவா )இஸ்லாமையும்  முஸ்லிம்களையும் பாதுகாப்பவனே ! நான் உன்னை சந்திக்கும் நாள் வரை என்னை இஸ்லாமில் உறுதியாக இருக்க செய் என்று நபி ஸல் பிரார்த்தித்து வந்ததாக அனஸ் பின் மாலிக் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : மஜ்மஉஸ்ஸவாயித் 10/179 தரம் : ஸஹீஹ்


முஃமீன்களுக்கு சிறந்த செயல் 

استَقيموا ولَن تُحصوا واعلَموا أنَّ خيرَ أعمالِكُمُ الصَّلاةَ ولا يحافظُ علَى الوضوءِ إلَّا مؤمنٌ

الراوي : ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 226 | خلاصة حكم المحدث : صحيح

நீங்கள் இயலாது போனாலும் சீராக நடந்து கொள்ளுங்கள். உங்களின் செயல்களில் சிறந்தது தொழுகையே என்பதை அறிந்து கொள்ளுங்கள். மூஃமீனைத் தவிர மற்ற எவரும் ஒளுவைப் பேண மாட்டார்கள் என்று நபி ஸல் கூறினார்கள் என ஸவ்பான் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 226 தரம் : ஸஹீஹ்


மறுமையில் இறைவனை பார்க்க முடியாதவர்கள் 

لا ينظرُ اللهُ إلى رجلٍ أتَى رجلًا أو امرأةً في الدبرِ

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 1165 | خلاصة حكم المحدث : حسن

யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ பின் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 1165 தரம் : ஹஸன்


சாபத்தை பெற்று தரும் செயல்கள் 

ملعونٌ من أتى امرأتَهُ في دبرِها

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2162 | خلاصة حكم المحدث : حسن

யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2162 தரம் : ஹஸன்


உதவி செய்தவர்களுக்கு நன்றி பாரட்டுவோம்

من لم يشْكُرِ الناسَ لم يشْكُرِ اللهَ

الراوي : أبو سعيد الخدري | المحدث : الترمذي | المصدر : سنن الترمذي | الصفحة أو الرقم : 1955 | خلاصة حكم المحدث : حسن صحيح

மனிதர்களுக்கு நன்றி தெரிவிக்காதவர் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்தவர் ஆக மாட்டார் என நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ 1955 தரம் : ஹஸன் ஸஹீஹ்


பாவங்களை அழிக்கும் மூன்று செயல்கள்

إسبَاغُ الوضوءِ في المَكارِه وإعمالُ الأقدامِ إلى المساجدِ وانتظارُ الصَّلاةِ بعدَ الصَّلاةِ يغسلُ الخطايا غَسلًا

الراوي : علي بن أبي طالب | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 959 | خلاصة حكم المحدث : صحيح |

கஷ்டங்களின் போது ஒளுவை முழுமையாகச் செய்தல், பள்ளிவாசல்களின் பக்கம் நடந்து வருதல், தொழுதுவிட்டு மறு தொழுகையை எதிர்பார்த்தல் ஆகியவை குற்றங்களை அழித்து விடும் என்று நபி ஸல் கூறினார்கள் என அலீ இப்னு அபீ தாலிப் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : அல் ஜாமிவு ஸகீர் 959 தரம் : ஸஹீஹ்


தர்க்கம் செய்யாதீர்கள்

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمْ جِدَالُ الْمُنَافِقِ عَلِيمِ اللِّسَانِ . 

 إسناده على شرط البخاري .

நான் உங்களிடத்தில்  மிகவும் அஞ்சுவது மொழியறிவுகொண்ட நயவஞ்சகனோடு (நீங்கள்) தர்க்கம் செய்வதைத்தான்.என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் ரலி அறிவிக்கிறார்கள்.

 நூல் : ஸஹீஹ் இப்னுஹிப்பான்   80

இதன் அறிவிப்பாளர்தொடர் புகாரீ இமாமின் நிபந்தனைக்கேற்ப அமைந்துள்ளது.


சிற்றன்னையின் சிறப்பு

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْخَالَةُ بِمَنْزِلَةِ الأُمِّ ‏"‏ 

சிற்றன்னை ( தாயின் சகோதரி ) அன்னையின் இடத்தில் இருக்கிறார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் 
-இதை பராஉ பின் ஆஸிப் ரலி அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ 1822 

இது ஸஹீஹ் லி கைரிஹி தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


மனத் தூய்மை 

وعن أبي بن كعب قال : قال رسول الله صلى الله عليه وسلم :  بشِّرْ هذهِ الأُمَّةَ بالتَّيسيرِ ، والسَّناءِ والرِّفعةِ بالدِّينِ ، والتَّمكينِ في البلادِ ، والنَّصرِ ، فمَن عمِلَ منهُم بعملِ الآخرةِ للدُّنيا ، فليسَ لهُ في الآخرةِ مِن نصيبٍ.

 خلاصة حكم المحدث : صحيح | التخريج : أخرجه أحمد (21258)، والحاكم (7862)، والبيهقي في ((شعب الإيمان)) (6833) 

இந்த சமுதாயத்துக்கு உயர்வும் , மதிப்பும் இப்பூமியில் வசதியாக வசிப்பதும் உள்ளது என்று நற்செய்தி கூறுவீராக ! 

அவர்களில் யாரேனும் மறுமைக்குரிய அமலை இவ்வுலகுக்காகச் செய்தால் எந்தப் பயனுமில்லை என்று நபி ஸல் கூறினார்கள் என உபை பின் கஃபு ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 21258 ,ஹாகிம் 7862 ,ஷுஅபுல் ஈமான் ( பைஹகீ ) 6833 

இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என்று இமாம் நாஸிருத்தீன்‌ அல்பானீ  கூறுகிறார்கள்.


நபித்தோழர்களை பற்றி பேசும் போது கண்ணியம் காக்கப்பட வேண்டும்

عَنْ عُوَيْمِ بْنِ سَاعِدَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ، قَالَ: " إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى اخْتَارَنِي وَاخْتَارَ بِي أَصْحَابًا، فَجَعَلَ لِي مِنْهُمْ وُزَرَاءَ وَأَنْصَارًا وَأَصْهَارًا، فَمَنْ سَبَّهُمْ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلا عَدْلٌ ".

هَذَا حَدِيثٌ صَحِيحُ الإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ ووافقه الذهبي 

அல்லாஹ் என்னை தூதராக தேர்வு செய்தான் எனக்கு தோழர்களையும் அவனே தேர்வு செய்தான். அவர்களில் சிலரை எனக்கு அமைச்சர்களாகவும், உதவியாளர்களாகவும், சிலரைத் திருமண உறவு முறையில் சம்பந்திகளாகவும் ஆக்கியுள்ளான். எனவே அவர்களை எவன் திட்டுகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும், வானவர்களின் சாபமும், எல்லா மனிதர்களின் சாபமும் உண்டாகட்டும்.மறுமை நாளில் அவனது கடமையான உபரியான எந்த நல்லறங்களும் ஏற்கப்படாது  என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக உவைம் பின் ஸயிதா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஹாகிம் 6686 

இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹானது என்று இமாம் தஹபி கூறுகிறார்கள்.


கல்வியின் சிறப்பு

 (ت, ك , هق ) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ  : كَانَ أَخَوَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ أَحَدُهُمَا يَأْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالْآخَرُ يَحْتَرِفُ فَشَكَا الْمُحْتَرِفُ أَخَاهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ  : لَعَلَّكَ تُرْزَقُ بِهِ .

الحكم على المتن: صحيح

 நபி ஸல் அவர்களின் காலத்தில் இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள் . அவ்விருவரில் ஒருவர் கூலி வேலை பார்த்தார். மற்றொருவர் நபி ஸல் அவர்களுடனேயே இருப்பார். 

அவர்களிடமிருந்து கல்வியைக் கற்றுக் கொள்வார். கூலிவேலை பார்த்தவர் தன்னுடைய சகோதரர் ( வேலை செய்யாதிருப்பது ) பற்றி நபி ஸல் அவர்களிடத்தில் முறையிட்டார்.

அதற்கு நபி ஸல் அவர்கள் கூறினார்கள் : அவரின் பொருட்டால் உனக்கு ரிஜ்க் ( வாழ்வாதாரம் ) அளிக்கப்படலாம் .

- இதை அனஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ ( 2345 ) அல்முஸ்தத்ரக் ஹாகிம் (291 ) ஸுனனுல் குப்ரா - பைஹகி ( 335 ) 

இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


நரக வெப்பத்தின் தன்மை

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ  صَلَّى اللَّهُ عَلَيْهِ  قَالَ: " لَوْ كَانَ فِي هَذَا الْمَسْجِدِ مِائَةٌ أَوْ يَزِيدُونَ، وَفِيهِ رَجُلٌ مِنَ النَّارِ، فَتَنَفَّسَ، فَأَصَابَ نَفَسُهُ، لاحْتَرَقَ الْمَسْجِدُ وَمَنْ فِيهِ "

الحكم على المتن: صحيح

 நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :

இந்த ( மஸ்ஜித் அந்நபவி )மஸ்ஜிதில் ஒரு இலட்சம் பேர் அல்லது அவர்களைவிட அதிகமாக மக்கள் இருந்து அவர்களுள் ஒருவர் நரகவாசி இருந்து அவர் விடும் மூச்சு காற்றை இங்கு உள்ளவர்கள் அதை அடைந்தால் அது இந்த மஸ்ஜிதையும் இதில் உள்ளவர்களையும் கரித்துவிடும் .

 நூல் : முஸ்னது அபீய அலா 6670 தரம் : ஸஹீஹ்


ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு வீடுகள்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  : مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا لَهُ مَنْزِلَانِ مَنْزِلٌ فِي الْجَنَّةِ وَمَنْزِلٌ فِي النَّارِ فَإِذَا مَاتَ فَدَخَلَ النَّارَ وَرِثَ أَهْلُ الْجَنَّةِ مَنْزِلَهُ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى أُولَئِكَ هُمْ الْوَارِثُونَ 

  صحيح .

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா  ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: 

உங்களுள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வீடுகள் இல்லாமலில்லை. சொர்க்கத்தில் ஒரு வீடு; நரகத்தில் ஒரு வீடு. ஒருவன் இறந்து நரகத்தில் நுழைந்துவிட்டால், அவனுடைய வீட்டைச் சொர்க்கவாசி வாரிசாகப் பெற்றுக்கொள்வார். அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்: “அவர்கள்தாம் வாரிசுதாரர்கள்.” (23: 10)   

நூல் :  இப்னுமாஜா : 4332 / 4341    

இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


மனிதன் தனது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நெருக்கமாக இருத்தல்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  : مَا رَأَيْتُ مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا وَلَا مِثْلَ الْجَنَّةِ نَامَ طَالِبُهَا .

  حسن .

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது:

நான் நரக நெருப்பைப் போன்று (கடுமையான) எதையும் கண்டதில்லை. அதிலிருந்து வெருண்டோட வேண்டியவன் உறங்கிக் கிடக்கிறான். 

நான் சொர்க்கத்தைப் போன்று (இன்பமான) எதையும் கண்டதில்லை. அதைத் தேட வேண்டியவனும் உறங்கிக் கிடக்கிறான்.  (திர்மிதீ: 2526 / 2601)

இது ஹசன் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் பேணுதலைக் கடைப்பிடித்தலும் அதற்காக அஞ்சலும்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أُفْتِيَ بِغَيْرِ عِلْمٍ كَانَ إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ .

 حسن .

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது: 

(மார்க்க) ஆதாரம் ஏதுமின்றி மார்க்கத் தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவர் (அந்தத் தவறான தீர்ப்பின் படி செயல்பட்டால்) அதற்குரிய பாவம் அந்தத் தீர்ப்பை வழங்கியவரையே சாரும். 

 நூல்கள் : அபூதாவூத்: 3657, இப்னுமாஜா: 52 / 53, தாரமீ: 159

இதன் அறிவிப்பாளர்தொடர் ஹஸன் தரத்தில் அமைந்துள்ளது.


மஹ்ஷரில் மனிதனின் நிலை 

கேள்வி கணக்கு கேட்கப்படுவது 

عَنْ عَائِشَةَ تَقُولُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْحِسَابِ الْيَسِيرِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا الْحِسَابُ الْيَسِيرُ فَقَالَ الرَّجُلُ تُعْرَضُ عَلَيْهِ ذُنُوبُهُ ثُمَّ يُتَجَاوَزُ لَهُ عَنْهَا إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ وَلَا يُصِيبُ عَبْدًا شَوْكَةٌ فَمَا فَوْقَهَا إِلَّا قَاصَّ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا مِنْ خَطَايَاهُ .

 إسناده قوي . وقال الذهبي : على شرط مسلم.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், எளிமையான முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படுவது குறித்துக் கேட்டேன். “அல்லாஹ்வின் தூதரே! எளிமையான முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படுதல் என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,

 “ஒரு மனிதனிடம் அவனது பாவங்களெல்லாம் எடுத்துக் காட்டப்படும். பிறகு அவனுக்கு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். நிச்சயமாக எவன் துருவித் துருவிக் கேட்கப்பட்டானோ அவன் அழிந்தான். 

ஒரு மனிதருக்கு முள்ளோ அதற்கு மேலோ (ஏதேனும் பொருள்) தொல்லை கொடுத்தால் அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய பாவங்களுக்கு அதைப் பரிகாரமாக ஆக்காமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள்.

இதை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னது அஹ்மத்: 25515, ஹாகிம்: 190 

இதன் அறிவிப்பாளர்தொடர் வலுவானது. இது முஸ்லிம் இமாமின் நிபந்தனைக்கேற்ப அமைந்துள்ளது என தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.


மஹ்ஷரில் மனிதனின் நிலை 

முதன்முதலாகக் கேள்வி கேட்கப்படுகின்ற சமுதாயம்

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَحْنُ آخِرُ الْأُمَمِ وَأَوَّلُ مَنْ يُحَاسَبُ يُقَالُ أَيْنَ الْأُمَّةُ الْأُمِّيَّةُ وَنَبِيُّهَا فَنَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ .
● صحيح .

நாம் கடைசிச் சமுதாயத்தினர் ஆவோம். விசாரணை செய்யப்படுவோருள் முதன்மை ஆவோம். “உம்மி சமுதாயமும் அதன் நபியும் எங்கே?“ என்று வினவப்படும். எனவே நாம்தாம் கடைசியானவர்கள் (அதேநேரத்தில் விசாரணையில்) முதன்மையானவர்கள்.என்று நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : இப்னு மாஜா 4280 /4290 தரம் : ஸஹீஹ்


மஹ்ஷரில் மனிதனின் நிலை 

عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ يُهَوِّنُ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ .

● إسناده صحيح على شرط البخاري .

ஐம்பதாயிரம் ஆண்டுகள்கொண்ட நாளில் அரை நாள் வரை அகிலங்களின் இறைவன் முன்னிலையில் மக்கள் நிற்பார்கள். (ஆனால்) அது இறைநம்பிக்கையாளர்களுக்கு  சூரியன் மறைவதற்காகத் தணிந்து அது மறையும் வரையுள்ள நேரத்தைப் போன்றதாக இருக்கும். என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

 நூல் : இப்னு ஹிப்பான் 7333 தரம் : புகாரீ இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப இது ஸஹீஹ்  தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


மார்க்கத்தின் அடிப்படைகள் உடைக்கப்படுதல்

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " لَتُنْقَضَنَّ عُرَى الْإِسْلَامِ عُرْوَةً عُرْوَةً، فَكُلَّمَا انْتَقَضَتْ عُرْوَةٌ تَشَبَّثَ النَّاسُ بِالَّتِي تَلِيهَا، وَأَوَّلُهُنَّ نَقْضًا الْحُكْمُ، وَآخِرُهُنَّ الصَّلَاةُ. ".

● إسناده جيد

இஸ்லாத்தின் அடிப்படைகள் ஒவ்வொன்றாக உடைக்கப்படும். ஓர் அடிப்படை உடைபடும்போதெல்லாம் மக்கள் மற்றதை இலேசாகக் கருதுவார்கள். அவற்றுள் முதலாவதாக உடைபடுவது ஆட்சியதிகாரம். அவற்றுள் கடைசியாக உடைபடுவது தொழுகை. என்று  நபி ஸல் கூறியதாக அபூஉமாமா அல்பாஹிலீ ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னது அஹ்மத்: 22160  

இதன் அறிவிப்பாளர்தொடர் தரமானது.


இறைநம்பிக்கையின் உண்மை நிலையை அடையாதவர்

عَنْ أَنَسٍ,عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : لَا يَبْلُغُ عَبْدٌ حَقِيقَةَ الْإِيمَانِ حَتَّى يُحِبَّ لِلنَّاسِ مَا يُحِبُّ لِنَفْسِهِ مِنَ الْخَيْرِ. .

● إسناده صحيح

ஓர் அடியார் தமக்கு விரும்புகிற நன்மையையே மக்களுக்கும் விரும்பாத வரை இறைநம்பிக்கையின் உண்மை நிலையை அடைந்துகொள்ள மாட்டார். என்று நபி ஸல் கூறியதாக அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : இப்னுஹிப்பான் 235 அல் அஹாதீஸுல் முக்தாரா 2525

 இது ஸஹீஹ்  தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


இறையச்சத்தை மனிதில் பாதுகாத்துக்கொள் அவன் உன்னைப் பாதுகாப்பான்

عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَقَالَ ‏ "‏ يَا غُلاَمُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ ‏"‏ ‏.

நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் (வாகனத்தில் அமர்ந்து) இருந்தேன். அப்போது அவர்கள், “பையா! நான் உனக்குச் சில விஜயங்களைக் கற்றுத் தருகிறேன். (அவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்.) நீ அல்லாஹ்(வின் உத்தர)வைப் பேணிக்காத்திடு! அவன் உன்னைப் பேணிக்காப்பான். நீ அல்லாஹ்வை (அவனுடைய கடமைகளை)ப் பேணி நடந்துகொள்! அவனை உனக்கு முன்பாக நீ காண்பாய். நீ யாசித்தால் அல்லாஹ்விடமே யாசிப்பாயாக! உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக.

அறிந்துகொள்! உனக்கு ஏதேனும் நன்மை செய்ய ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்றுசேர்ந்தாலும் உனக்கென அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்த நன்மையையும் அவர்களால் உனக்குச் செய்ய இயலாது. (அவ்வாறே) உனக்கு ஏதேனும் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டாலும் உனக்கெதிராக அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்தத் தீங்கும் அவர்களால் உனக்கு இழைத்திட இயலாது.(விதி எழுதிய பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன; (விதி எழுதப் பெற்ற) ஏடுகள் உலர்ந்துவிட்டன” என்று கூறினார்கள்.  (திர்மிதீ: 2516)

زاد في رواية لأحمد : تَعَرَّفْ إِلَيْهِ فِي الرَّخَاءِ يَعْرِفْكَ فِي الشِّدَّةِ... وَاعْلَمْ أَنَّ فِي الصَّبْرِ عَلَى مَا تَكْرَهُ خَيْرًا كَثِيرًا، وَأَنَّ النَّصْرَ مَعَ الصَّبْرِ، وَأَنَّ الْفَرَجَ مَعَ الْكَرْبِ، وَأَنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا.

முஸ்னது அஹ்மத் எனும் நூலில் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளதாவது: செழிப்பான நிலையில் அவனிடம் நீ அறிமுகமாகிக்கொள். கடுமையான நிலையில் அவன் உன்னிடம் அறிமுகமாவான்.  நிச்சயமாகப் பொறுமையில், நீ வெறுப்பதைவிட அதிகமான நன்மைகள் உள்ளன என்பதை அறிந்துகொள். நிச்சயமாக உதவி என்பது பொறுமை எனும் தன்மையோடு உள்ளது. மகிழ்ச்சியானது துன்பத்தோடு உள்ளது. திண்ணமாகச் சிரமத்தோடு இன்பம் உள்ளது.  (முஸ்னது அஹ்மத்: 2803) 

இதை இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

இவை  ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ்கள் ஆகும்.


மக்கள் நான்கு வகையினர்

عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "الْأَعْمَالُ سِتَّةٌ، وَالنَّاسُ أَرْبَعَةٌ، فَمُوجِبَتَانِ، وَمِثْلٌ بِمِثْلٍ، وَحَسَنَةٌ بِعَشْرِ أَمْثَالِهَا، وَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، فَأَمَّا الْمُوجِبَتَانِ: فَمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ، وَأَمَّا مِثْلٌ بِمِثْلٍ: فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ حَتَّى يَشْعُرَهَا قَلْبُهُ، وَيَعْلَمَهَا اللهُ مِنْهُ كُتِبَتْ لَهُ حَسَنَةً، وَمَنْ عَمِلَ سَيِّئَةً، كُتِبَتْ عَلَيْهِ سَيِّئَةً، وَمَنْ عَمِلَ حَسَنَةً فَبِعَشْرِ أَمْثَالِهَا، وَمَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيلِ اللهِ فَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، وَأَمَّا النَّاسُ، فَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مَقْتُورٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مُوَسَّعٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ".

[●حديث حسن.] - [رواه أحمد]

நல்லறங்கள் ஆறு உள்ளன. மக்கள் நான்கு வகையினர். (சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்றவை இரண்டு உள்ளன. பகரத்திற்குப் பகரமும் உண்டு. மேலும் ஒரு நன்மைக்குப் பத்து நன்மைகளும், ஒரு நன்மைக்கு எழுநூறு (மடங்கு) நன்மைகளும் உண்டு. 

(சொர்க்கத்தையும் நரகத்தையும்) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு என்பது, யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாகச்) சொர்க்கம் செல்வார். யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் (நிச்சயமாக) நரகம் செல்வார்'' என்பதாகும். 

பகரத்திற்குப் பகரம் என்பது, யார் ஒரு நன்மை செய்யவேண்டும் என்றெண்ணி அதை அவருடைய உள்ளம் உணர்ந்து, அல்லாஹ்வும் அதனை அவரிடமிருந்து அறிந்துகொள்கின்றானோ (அதைச் செயல்படுத்தாவிட்டாலும்) அவருக்காக ஒரு முழு நன்மை பதிவுசெய்யப்பட்டுவிடுகிறது. யார் ஒரு தீமையைச் செய்கிறாரோ (அதற்குப் பகரமாக) அவருக்கு ஒரு தீமை பதிவுசெய்யப்பட்டுவிடுகிறது.

யார் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அது போன்று பத்து (மடங்கு) நன்மைகள் வழங்கப்படுகின்றன. யார் ஒரு தடவை அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்கிறாரோ அவருக்கு ஒரு நன்மை எழுநூறு மடங்காக வழங்கப்படுகிறது. 

மக்கள் (நான்கு வகையினர் என்பது) இவ்வுலகில் அவர் விசாலமான வாய்ப்புகள் வழங்கப்பட்டவராகவும் (செல்வராகவும்) மறுமையில் அவர் ஏழையாகவும் இருப்பார். இவ்வுலகில் ஏழையாகவும் மறுமையில் விசாலமான வாய்ப்புகள் வழங்கப்பட்டவராகவும் (செல்வராகவும்) இருப்பார். இம்மையிலும் மறுமையிலும் ஏழையாகவே இருப்பார். இம்மையிலும் மறுமையிலும் செல்வராகவே இருப்பார். என நபி ஸல் அவர்கள் கூறியதாக குரைம் பின் ஃபாத்திக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னது அஹ்மத்: 18900)

இது ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


முன்னரே தீர்மானிக்கப்பட்டுவிட்டது

إنَّ الرَّجُلَ ليَعملُ بعَملِ أَهْلِ الجنَّةِ ، وإنَّهُ لمَكْتوبٌ في الكِتابِ من أَهْلِ النَّارِ ، فإذا كانَ قبلَ موتِهِ تحوَّلَ فعملَ بعملِ أَهْلِ النَّارِ فماتَ ، فدخلَ النَّارَ ، وإنَّ الرَّجلَ ليَعملُ بعملِ أَهْلِ النَّارِ ، وإنَّهُ لمَكْتوبٌ في الكتابِ من أَهْلِ الجنَّةِ ، فإذا كانَ قَبلَ موتِهِ تحوَّلَ ، فعَملَ بعملِ أَهْلِ الجنَّةِ ، فَماتَ فدخلَها .

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 1581 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான் ஆனால் அவன் நரகவாசி என்று விதியில் எழுதப்பட்டிருக்கும். அப்போது. (எதிர்பாராவிதமாக) மரணம் ஏற்படுவதற்குமுன் அவனை விதி மாற்றிவிடும். எனவே அவன் நரகவாசிக்குரிய அமல்களைச் செய்யத் தொடங்கி, பின்னர் இறந்துவிடுவான். எனவே அவன் நரகத்தில் நுழைவான். 

ஒரு மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான் ஆனால் அவன் சொர்க்கவாசி என்று விதியில் எழுதப்பட்டிருக்கும். அப்போது. (எதிர்பாராவிதமாக) மரணம் ஏற்படுவதற்குமுன் அவனை விதி மாற்றிவிடும். எனவே அவன் சொர்க்கவாசிக்குரிய அமல்களைச் செய்யத் தொடங்கி, பின்னர் இறந்துவிடுவான். எனவே அவன் சொர்க்கத்தில் நுழைவான். என்று நபி ஸல் கூறியதாக ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் : 1581 தரம் : ஸஹீஹ்


இறை நம்பிக்கை, இஸ்லாம் 

عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَا الْإِسْلَامُ قَالَ أَنْ يُسْلِمَ قَلْبُكَ لِلَّهِ عَزَّ وَجَلَّ وَأَنْ يَسْلَمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِكَ وَيَدِكَ قَالَ فَأَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ الْإِيمَانُ قَالَ وَمَا الْإِيمَانُ قَالَ تُؤْمِنُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ قَالَ فَأَيُّ الْإِيمَانِ أَفْضَلُ قَالَ الْهِجْرَةُ قَالَ فَمَا الْهِجْرَةُ قَالَ تَهْجُرُ السُّوءَ قَالَ فَأَيُّ الْهِجْرَةِ أَفْضَلُ قَالَ الْجِهَادُ قَالَ وَمَا الْجِهَادُ قَالَ أَنْ تُقَاتِلَ الْكُفَّارَ إِذَا لَقِيتَهُمْ قَالَ فَأَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ مَنْ عُقِرَ جَوَادُهُ وَأُهْرِيقَ دَمُهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ عَمَلَانِ هُمَا أَفْضَلُ الْأَعْمَالِ إِلَّا مَنْ عَمِلَ بِمِثْلِهِمَا حَجَّةٌ مَبْرُورَةٌ أَوْ عُمْرَةٌ

رَوَاهُ أَحْمَدُ  وَرِجَالُهُ ثِقَاتٌ .

அம்ர் பின் அபஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: 

“அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் என்றால் என்ன?” என்று ஒரு மனிதர் கேட்டார்.

 “உமது உள்ளம் மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்குப் பணிவதும் முஸ்லிம்கள் உமது நாவிலிருந்தும் கையிலிருந்தும் (எந்த இடையூறுமின்றிப்) பாதுகாப்புப் பெறுவதும் ஆகும்” என்று விடையளித்தார்கள்.  

“இஸ்லாமிய மார்க்கத்தில் எது சிறந்தது?” என்று கேட்டார். 

“இறைநம்பிக்கை கொள்வது” என்று விடையளித்தார்கள். 

“இறைநம்பிக்கை என்றால் என்ன?” என்று கேட்டார். 

அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் மரணத்திற்குப் பின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்பதையும் நீர் நம்புவதாகும்” என்று விடையளித்தார்கள். 

“இறைநம்பிக்கையில் சிறந்தது எது?” என்று கேட்டார். 

“நாடு துறந்து செல்லுதல் (ஹிஜ்ரத்)” என்று கூறினார்கள். 

“ஹிஜ்ரத் என்றால் என்ன?” என்று கேட்டார். “தீமையை வெறுத்தல் ஆகும்” என்று கூறினார்கள். 

“ஹிஜ்ரத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார். 

“(அல்லாஹ்வின் பாதையில்) அறப்போர் புரிதல்” என்று கூறினார்கள்.

 “ஷிஹாத் என்றால் என்ன?” என்று கேட்டார். “(போர்க்களத்தில்) இறைமறுப்பாளர்களை எதிர்கொண்டால் அவர்களோடு போராடுவதாகும்” என்று கூறினார்கள்.    

“ஷிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். “அவனுடைய குதிரையின் பின்னங்கால் வெட்டப்பட்டு, அவனுடைய இரத்தம் ஓட்டப்படுவதாகும்” என்று விடையளித்தார்கள். 

(பின்னர்) அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள்: பிறகு இரண்டு செயல்கள் உள்ளன. அவ்விரண்டும் மிகச் சிறந்த செயல்கள்-அவ்விரண்டைப்போன்று செய்தவரைத் தவிர. 1. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ், 2. அல்லது உம்ரா.  

நூல் : அஹ்மத் (16579 )  தரம் : ஸஹீஹ்


நபிமொழியை பிறருக்கு அறிவித்தல் 

تَسمعونَ ويُسمعُ منْكم ويسمعُ مِمَّن سمعَ منْكم

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 3659 | خلاصة حكم المحدث : صحيح

(இப்போது என்னிடமிருந்து) நீங்கள் செவியுறுகின்றீர்கள்; (பிற்காலத்தில்) உங்களிடமிருந்து செவியுறப்படும்; (அதன்பின்) உங்களிடம் கேட்டவர்களிடமிருந்து செவியுறப்படும். (இவ்வாறே இது தொடரும்).என அல்லாஹ்வின் தூதர் ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள் . 

நூல் : ஸஹீஹ் அபூதாவூத்: 3659 தரம் : ஸஹீஹ்


விதியை நம்புதல்

لا يؤمِنُ عبدٌ حتَّى يُؤْمِنَ بأربعٍ : يشهَدُ أن لا إلَهَ إلَّا اللَّهُ، وأنِّي مُحمَّدٌ رسولُ اللَّهِ بَعثَني بالحقِّ ، ويُؤمنُ بالموتِ ، وبالبَعثِ بعدَ الموتِ ، ويؤمِنُ بالقَدرِ

الراوي : علي بن أبي طالب | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي
الصفحة أو الرقم: 2145 | خلاصة حكم المحدث : صحيح

நான்கு விஷயங்கள் மீது நம்பிக்கை கொள்ளாத வரை எந்த அடியாரும் இறை நம்பிக்கையாளராக ஆகமாட்டார்

1- அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை; நான் அல்லாஹ்வின் தூதர் ஆவேன் ; என்னை அவன் சத்திய ( மார்க்க)த்துடன் அனுப்பிவைத்தான் என உறுதிமொழிவது

2- மரணம் உண்டு என நம்புவது

3- ( அனைவரும் ) இறந்தபின் ( உயிர் கொடுத்து) எழுப்பப்படும் என்பதை நம்புவது

4- விதியை நம்புவது.

என்று நபி ஸல் கூறியதாக அலீ ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2145 தரம் : ஸஹீஹ்


மணப்பெண்ணிற்க்கு மஹ்ராக ஏதேனும் கொடுக்கபட்ட வேண்டும்

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَمَّا تَزَوَّجَ عَلِيٌّ فَاطِمَةَ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَعْطِهَا شَيْئًا ". قَالَ : مَا عِنْدِي شَيْءٌ. قَالَ : " أَيْنَ دِرْعُكَ الْحُطَمِيَّةُ ؟ ".

حكم الحديث: حسن صحيح

அலீ ( ரலி) அவர்கள் ஃபாத்திமா ( ரலி) அவர்களை மணந்துகொண்ட போது அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் அலீ ( ரலி) அவர்களிடம் ஃப்பாத்திமாவுக்கு ( மஹராக ) எதையாவது கொடுங்கள் என்று கூறினார்கள்.

அதற்கு அலீ ( ரலி) அவர்கள், என்னிடம் எதுவும் இல்லை என்று கூறினார்கள் .

உம்முடைய ஹுத்தமிய்யா குல உருக்குச் சட்டை எங்கே ? என்று கேட்டார்கள்.

இதை இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 2125 தரம் : ஹசன் ஸஹீஹ்

*ஹுத்தம்* என்றால் முறிப்பது,உடைப்பது என்று பொருள் 

அதன் படி எதிரியின் வாளை உடைத்தெறியும் இரும்புக் கவச ஆடை என்று பொருள்.


கற்பிக்கக் கூலி பெறுதல்....!!!

420- عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ عَلَّمْتُ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ الْكِتَابَ وَالْقُرْآنَ فَأَهْدَى إِلَيَّ رَجُلٌ مِنْهُمْ قَوْسًا فَقُلْتُ لَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ لَآتِيَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَأَسْأَلَنَّهُ فَأَتَيْتُهُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ أَهْدَى إِلَيَّ قَوْسًا مِمَّنْ كُنْتُ أُعَلِّمُهُ الْكِتَابَ  وَالْقُرْآنَ وَلَيْسَتْ بِمَالٍ وَأَرْمِي عَنْهَا فِي سَبِيلِ اللَّهِ قَالَ إِنْ كُنْتَ تُحِبُّ أَنْ تُطَوَّقَ طَوْقًا مِنْ نَارٍ فَاقْبَلْهَا .

 صحيح ●

420. உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது:

 திண்ணைத் தோழர்களுக்கு எழுத்துப் பயிற்சியையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தேன்.

 ஆகவே அவர்களுள் ஒருவர் எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். இது (பணம் சார்ந்த) பொருள் இல்லை. மேலும் நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்யப் பயன்படுத்துவேன்; (இருந்தாலும்) நான் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, (இதற்கான விளக்கத்தைக்) கேட்பேன் என்று நான் கூறிக்கொண்டேன்.

 எனவே நான் அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எழுத்துப் பயிற்சியையும் குர்ஆனையும் கற்றுக்கொடுத்தவர்களுள் ஒருவர், எனக்கொரு வில்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். 

இது (பணம் சார்ந்த) பொருள் இல்லை. நான் இதை அல்லாஹ்வின் பாதையில் எய்ய(ப் பயன்படுத்த)லாமா?” என்று கேட்டேன். 

அதற்கவர்கள், “அதன் மூலம் (உமக்கு) நெருப்பு மாலை போடப்படுவது உமக்கு மகிழ்ச்சியளித்தால், அதை நீர் ஏற்றுக்கொள்வீர்” என்று கூறினார்கள். 

நூல். : அபூதாவூத்: 3416, 3417

இது 'ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 420)


உண்மையான பாவமன்னிப்பு...!!!

 كَانَ أَبِي عِنْدَ  عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، فَسَمِعَهُ يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " النَّدَمُ تَوْبَةٌ ". 

حكم الحديث: حديث صحيح، وهذا إسناد قوي.

( செய்த தவறுகளை நினைத்து ) மனம் வருந்துவதே ( உண்மையான ) பாவமன்னிப்புக் கேட்ப்பது ஆகும் என நபி ஸல் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 3568,4014,4015,4124 ,இப்னுமாஜா 4252
தரம் : ஸஹீஹ்


மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் :

நான் ( நபி ஸல் அவர்களிடம் ) அல்லாஹ்வின் தூதரே ! எங்கள் துணைவியற்க்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்ன ? என்று வினாவினேன் அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்

-  நீ உண்டால் அவளுக்கும் உண்ணக் கொடு

- நீ உடுத்தினால் அவளுக்கும் உடுத்தக் கொடு

- ( அவள் தவறு செய்தால் ) கன்னத்தில் அறையாதீர்

- அவளிடம் கெட்ட வார்த்தை பேசாதீர்

- வீட்டைத் தவிர மற்ற இடங்களில் அவளை வெறுத்து அவளிடம் பேசாமல் இருக்காதீர் .

இதை முஆவியா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத் ,இப்னுமாஜா ,அஹ்மத்

ஹதீஸ்யின் தரம் : ஹசன் ஸஹீஹ்


ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் வைப்பது

من صامَ ستَّةَ أيَّامٍ بَعدَ الفطرِ كانَ تَمامَ السَّنةِ { مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا }
الراوي : ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 1402 | خلاصة حكم المحدث : صحيح

யார் ரமலானின் ஈதுப் பெரு நாளுக்குப் பிறகு ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் ஆண்டு முழுவதும் நோன்பு வைத்தவர் போன்றாவார். யார் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவர் அது போன்று பத்து நன்மைகளைப் பெறுவார் என நபி ﷺ கூறியதாக தவ்பான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 1402 தரம் : ஸஹீஹ்

عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ : " صِيَامُ رَمَضَانَ بِعَشَرَةِ أَشْهُرٍ ، وَصِيَامُ السِّتَّةِ أَيَّامٍ بِشَهْرَيْنِ ، فَذَلِكَ صِيَامُ السَّنَةِ " 

ஒரு மாத ரமழான் நோன்பு ஆனது பத்து மாத நோன்புக்குச் சமமானது.அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது. இது முழுமையான ஒரு வருடமாகும். ரமழான் நோன்பும் அதற்குப் பிறகுள்ள ஆறு நோன்பும் என்று நபி ﷺ கூறியதாக தவ்பான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : இப்னு குஸைமா 1982 தரம் : ஸஹீஹ்


இவைகளில் வரம்பு மீறுவது கூடாது

...فإنِّي سَمِعْتُ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يقولُ: إنَّهُ سيَكونُ في هذِهِ الأمَّةِ قومٌ يَعتدونَ في الطَّهورِ والدُّعاءِ.

الراوي : عبدالله بن مغفل | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 96 | خلاصة حكم المحدث : صحيح

....என் சமுதாயத்தில் பின்னர் ஒரு கூட்டத்தினர் வருவார்கள் .அவர்கள் தூய்மை செய்வதிலும் ,பிரார்த்தனை புரிவதிலும் வரம்பு மீறுவார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் முக்கஃபல் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத்  96 தரம் : ஸஹீஹ்

ٱدْعُوا۟ رَبَّكُمْ تَضَرُّعًۭا وَخُفْيَةً ۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ.

பணிவாகவும், இரகசியமாகவும் உங்கள் இறைவனைப் பிரார்த்தியுங்கள்! அவன் வரம்பு மீறுவோரை விரும்ப மாட்டான்.

அல் குர்ஆன்  7 : 55


குர்ஆனின் சிறப்பு

492- عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ قَرَأَ الْقُرْآنَ فَقَدِ اسْتَدَرَجَ النُّبُوَّةَ بَيْنَ جَنْبَيْهِ غَيْرَ أَنَّهُ لَا يُوحَى إِلَيْهِ ، لَا يَنْبَغِي لِصَاحِبِ الْقُرْآنِ أَنْ يَحِدَّ مَعَ مَنْ حَدَّ ، وَلَا يَجْهَلَ مَعَ مَنْ جَهِلَ وَفِي جَوْفِهِ كَلَامُ اللَّهِ تَعَالَ .
● قال الذهبي : صحيح .

492. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது: 

யார் குர்ஆனை ஓதினாரோ அவர் நபித்துவத்தைத் தம் இரு புறங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக்கொண்டுவிட்டார் (என்று பொருள்). எனினும் அவருக்கு வஹீ அறிவிக்கப்படுவதில்லை. 

குர்ஆனை உடையவர் (மனனம் செய்தவர்) தம்முடன் கோபப்படுபவர் மீது கோபப்படக்கூடாது. 

தம்மோடு அறிவற்ற நிலையில் நடந்து கொள்பவரோடு அறிவற்ற நிலையில் நடந்துகொள்ளக்கூடாது. (ஏனென்றால்) அவருடைய உள்ளத்தில் உயர்ந்தோன் அல்லாஹ்வின் கலாம் (பேச்சு) உள்ளது. 

 நூல் : ஹாகிம்  2028 
 
இது ‘ஸஹீஹ்’ தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்.

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா ஹதீஸ் எண்- 492


ஜகாத்கொடுக்க மறுத்தால்....

عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِﷺ: " مَا مَنَعَ قَوْمٌ الزَّكَاةَ إِلا ابْتَلاهُمُ اللَّهُ بِالسِّنِينَ ".

எந்த சமுதாயம் ஜகாத் வழங்க மறுக்கிறதோ அந்த சமுதாயத்தை பஞ்சத்தின்
மூலம் அல்லாஹ் சோதிப்பான் என்று நபி ﷺ   கூறினார்கள்.

- இதை புரைதா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஃஜமுல் அஸ்வத் தப்ரானி 4717 தரம் : ஹசன்

* "ஜகாத்" என்ற வார்த்தைக்கு "வளர்ச்சி அடைதல்", தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.


அமானிதம் & சத்தியம் பற்றியது

سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ: " لَا إِيمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ، وَلَا دِينَ لِمَنْ لَا عَهْدَ لَهُ "

- யார் அமானிதத்தை பேணவில்லையோ அவருக்கு ஈமான் இல்லை. 

- யார் சத்தியத்தை கடைபிடிக்கவில்லையோ அவருக்கு மார்க்கம் இல்லை.என்று நபி ﷺ கூறினார்கள்.

-இதை அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 13373 தரம் : ஸஹீஹ்


ஸஹர் செய்வதற்கு மக்களை அழைத்தல்

عَنِ الْعِرْبَاضِ بْنِ سَارِيَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ : وَهُوَ يَدْعُو إِلَى السَّحُورِ فِي شَهْرِ رَمَضَانَ وَقَالَ ‏ "‏ هَلُمُّوا إِلَى الْغَدَاءِ الْمُبَارَكِ ‏"‏ ‏.‏

ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் தூதர் ﷺ   அவர்கள் சஹர் செய்வதற்கு ( வருமாறு மக்களை ) அழைப்பார்கள். மேலும் 
அருள்வளம் ( பரக்கத் ) நிறைந்த உணவு உட்கொள்ள வாருங்கள் என்றும் சொல்வார்கள்.

- இதை இர்பாள் பின் சாரியா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : நஸாயீ  2144 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


இரண்டு பெரும்பாவங்கள்...

عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ‏ "‏ مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الآخِرَةِ مِنَ الْبَغْىِ وَقَطِيعَةِ الرَّحِمِ ‏"‏ ‏.

ஒரு மனிதன் செய்த பாவத்துக்கு அல்லாஹ் மறுமையில் தண்டனையைத் தயாராக வைத்திருப்பதுடன் இம்மையிலேயே துரிதமாகத் தண்டனை அளிப்பதற்கு மிகவும் தகுதிவாய்ந்தது ( இவ்விரண்டு பாவங்கள் ஆகும் ,அவை : )

- பிறருக்கு அநீதியிழைத்தல்
- இரத்த உறவைத் துண்டித்தல்
ஆகும் என்று நபி   ﷺ    கூறினார்கள்.

-இதை அபூபக்ரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ 2448 தரம் : ஸஹீஹ்


பாதுகாப்பு துஆ :

كان النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ إذا أراد سفرًا قال اللهم إني أعوذُ بكَ مِنْ وعثاءِ السفرِ وكآبةِ المُنقلبِ والحَورِ بعد الكونِ ودعوةِ المظلومِ وسوءِ المنظرِ في الأهل والمالِ وإذا رجع قال مثل ذلك إلا أنه يقولُ وسوءِ المنظرِ منَ الأهلِ والمالِ
الراوي : عبدالله بن سرجس | المحدث : ابن جرير الطبري | المصدر : مسند علي
الصفحة أو الرقم: 95 | خلاصة حكم المحدث : صحيح

நபி ﷺ அவர்கள் பயணம் புறப்படும்போது 

இறைவா பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும் ,வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும் , 
அநீதிக்குள்ளானவனின் ( சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும் ,குடும்பத்திலும், செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறுவார்கள்.

[" அல்லாஹும்ம இன்னீ அ ஊது பிக்க மின் வ உஸாயிஸ் ஸஃபரி, வ க ஆபத்தில் முன்கலபி, வல்ஹவரி பஅதல் கவரி, வ தஅவத்தில் மழ்லூமி, வ சூயில் மன்ழரி ஃபில் அஹ்லி வல்மால் " ]

 -இதை அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அலீ 95 தரம் : ஸஹீஹ்


மக்களிடத்தில் நல்லிகணத்தை ஏற்படுத்தவேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ  ، أَنّ النَّبِيَّ ﷺ قَالَ: " إِيَّاكُمْ وَسُوءَ ذَاتِ الْبَيْنِ فَإِنَّهَا الْحَالِقَةُ "،

 நல்லிகணக்கத்தைக் கெடுத்துவிடாதீர்கள் என உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் அது ( மார்க்கத்தையே ) மழிக்கக்கூடியதாகும் என்று நபி ﷺ கூறினார்கள்.

- இதை அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ 2508 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி

குறிப்பு :  وَسُوءَ ذَاتِ الْبَيْنِ    என்பது பகைமையையும், குரோதத்தை ( வளர்ப்பதைக் ) குறிக்கும்


ரமளான் மாதத்தின் சிறப்பு 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: دَخَلَ رَمَضَانُ. فَقَالَ رَسُولُ ﷺ ـ ‏ "‏ إِنَّ هَذَا الشَّهْرَ قَدْ حَضَرَكُمْ وَفِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَهَا فَقَدْ حُرِمَ الْخَيْرَ كُلَّهُ وَلاَ يُحْرَمُ خَيْرَهَا إِلاَّ مَحْرُومٌ ‏"‏ ‏.‏

ஒரு ரமளான் மாதம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் இந்த ( ரமளான் ) மாதம் உங்களிடம் வந்திருக்கிறது. 

இதில் ஒர் இரவு உள்ளது அது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அதன் நன்மையை யார் இழந்துவிட்டாரோ அவர் அனைத்து நன்மைகளையும் இழந்தவர் ஆவார்.

நற்பேறு அற்றவனே அதன் நன்மைகளை விட்டும் தடுக்கப்படுகிறான் என்று நபி  ﷺ கூறினார்கள்.

- இதை அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

 நூல் : இப்னு மாஜா 1644 தரம் : ஹசன் ஸஹீஹ்


ஆண்களுக்குரிய நறுமணப் பொருள் ; பெண்களுக்குரிய நறுமணப் பொருள்களின் தன்மைகள்...

عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ : قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ خَيْرَ طِيبِ الرَّجُلِ مَا ظَهَرَ رِيحُهُ وَخَفِيَ لَوْنُهُ، وَخَيْرَ طِيبِ النِّسَاءِ مَا ظَهَرَ لَوْنُهُ وَخَفِيَ رِيحُهُ ". ..

حكم الحديث: صحيح

என்னிடம் நபி ஸல் அவர்கள் , ஆண்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருள்களில் சிறந்தது 

- மணம் தூக்கலானதாகவும் நிறம் அடக்கமானதாகவும் அமைந்திருப்பதாகும்.

பெண்கள் பயன்படுத்தும் நறுமணப் பொருள்களில் சிறந்தது

- நிறம் தூக்கலான தாகவும் மணம் அடக்கமானதாகவும் அமைந்திருப்பதாகும் என்று கூறினார்கள்....

இதை இம்ரான் பின் ஹுஸைன் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ 2788 தரம் : ஸஹீஹ்


தொழுவதற்கு வெறுக்கப்பட்ட இடங்கள்

عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: " كُلُّ الْأَرْضِ مَسْجِدٌ وَطَهُورٌ، إِلَّا الْمَقْبَرَةَ وَالْحَمَّامَ "

அடக்கத்தலம் , குளியலறை ஆகியவற்றைத் தவிர மற்றெல்லா நிலப்பரப்பும் தொழுவதற்கேற்ற இடம் ஆகும் என நபி  ﷺ   கூறினார்கள்.

இதை அபூ ஸஈத் அல்குத்ரீ ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 11573 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


அல்லாஹ்வுக்கு மாற்றம் புரியும் விஷயத்தில் மனிதர்களுக்கு கீழ்படிந்தல்...?

عَنْ عَلِيٍّ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ ".

حكم الحديث: إسناده صحيح على شرط الشيخين

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கு மாற்றம் புரியும் விஷயத்தில் படைப்பினத்திற்க்குக் கீழ்ப்படிதல் என்பதே கிடையாது என நபி ஸல் கூறினார்கள்

- இதை அலீ ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 1095 

தரம் : புஹாரி ,முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் தரத்தில் அமைந்துள்ளது.


சகோதரர்களை சந்திக்கச் செல்லவேண்டும்

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: " مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ أَتَى أَخًا لَهُ فِي اللَّهِ يَزُورُهُ إِلا نَادَى مُنَادٍ مِنَ السَّمَاءِ: أَنْ طِبْتَ وَطَابَتْ لَكَ الْجَنَّةُ، وَإِلا قَالَ اللَّهُ فِي مَلَكُوتِ عَرْشِهِ: عَبْدِي زَارَ فِيَّ، وَعَلَيَّ قِرَاهُ، وَلَنْ يَرْضَى اللَّهُ لِوَلِيِّهِ بِقِرًى دُونَ الْجَنَّةِ ".

ஒரு அடியான் தன் முஸ்லிமான  சகோதரனை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றால் வானத்திலிருந்து அழைப்பவர் அவரை அழைத்து: நீ சிறந்த காரியம் செய்துவிட்டாய்! இதனால் உனக்கு சிறந்த சொர்க்கம் கிடைத்துவிட்டது! என்று கூறுவார். அதுமட்டுமல்ல! அல்லாஹ் தன் அர்ஷைச் சுற்றியுள்ள மலக்குகளிடம் : என்னுடைய அடியான் எனக்காக அவரைச் சந்திக்கச் சென்றுள்ளான்! எனவே அவனுக்கு நான் விருந்து உபசரணை செய்வேன்! என்று கூறுவான். எனவே அவன் சொர்க்கத்தைத் தவிர மற்ற கூலியைக் கொண்டு அவரை திருப்தியடையச் செய்யமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

- இதை அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா  2398 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


தீய மனிதர்கள்..

عَنْ عَبْدِ اللَّهِ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ مِنْ شِرَارِ النَّاسِ مَنْ تُدْرِكُهُ السَّاعَةُ وَهُمْ أَحْيَاءٌ، وَمَنْ يَتَّخِذُ الْقُبُورَ مَسَاجِدَ ".

حكم الحديث: إسناده حسن

- யார் உயிரோடு இருக்கும்போது அவர்களை யுகமுடிவு நாள் வந்தடைகிறதோ அவர்களும்.

- யார் அடக்கத் தகங்களைப் பள்ளிவாசல்களாக ஆக்கிக்கொள்கிறார்களோ அவர்களும் 

தீய மனிதர்களில் அடங்குவர்.

என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

-இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 4143 

தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் ஹசன் தரத்தில் அமைந்துள்ளது.

விளக்கம் :

يُحَدِّثُ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ ".

حكم الحديث: إسناده صحيح على شرط مسلم

மனிதர்களில் தீயவர்கள் மீதே யுகமுடிவு நாள் ஏற்படும் .

என நபி ஸல் கூறினார்கள்

- இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 3735

தரம் : முஸ்லிம் இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் தரத்தில் அமைந்துள்ளது.


மூன்று ஆணைகள் ...

، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَجِيبُوا الدَّاعِيَ، وَلَا تَرُدُّوا الْهَدِيَّةَ، وَلَا تَضْرِبُوا الْمُسْلِمِينَ ".

حكم الحديث: إسناده جيد

- ( திருமண ) விருந்தழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.

- அன்பளிப்பை மறுக்காதீர்கள்.

- முஸ்லிம்களை அடிக்காதீர்கள்

என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்

- இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 3838 

தரம் : இதன் அறிவிப்பாளர் தொடர் தரமானது.


நல்வழியில் உறுதியாக முடிந்த வரை நிற்க்க வேண்டும்

عَنْ ثَوْبَانَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اسْتَقِيمُوا، وَلَنْ تُحْصُوا ، وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَنْ يُحَافِظَ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ ".
حكم الحديث: حديث صحيح، وهذا إسناد رجاله ثقات رجال الصحيح

நல்வழியில் உறுதியாக நில்லுங்கள் ( ஆயினும் நல் வழியில் நிலையாக நிற்க) உங்களால் இயலாது.
அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் நல்லறங்களில் சிறந்தது தொழுகையாகும்.

இறை நம்பிக்கையாளரைத் தவிர ( வேறெவரும் உரிய முறையில்) அங்கத்தூய்மையைப் பேணி காக்கமாட்டார் என நபி ஸல் கூறினார்கள்.

- இதை ஸவ்பான் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 22378 தரம் : ஸஹீஹ்


ஒருவர் தம் ( முஸ்லிம் ) சகோதரரை இறைமறுப்பாளர் எனத் தூற்றுவது 

عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لَيْسَ عَلَى الْعَبْدِ نَذْرٌ فِيمَا لاَ يَمْلِكُ وَلاَعِنُ الْمُؤْمِنِ كَقَاتِلِهِ وَمَنْ قَذَفَ مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَاتِلِهِ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عَذَّبَهُ اللَّهُ بِمَا قَتَلَ بِهِ نَفْسَهُ يَوْمَ الْقِيَامَةِ ‏”‏‏.
- தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக் கடன் செய்வதும் ,எந்த அடியானுக்கும் தகாது.

- ஒர் அல்லாஹ்வின் நம்பிக்கையாளரை சபிக்கின்றவர் அவரைக் கொலை செய்தவரைப் போன்றவர் ஆவார்.

- ஒர் இறை நம்பிக்கையாளரை இறை மறுப்பாளர் எனத் தூற்றியவன் அவரைக் கொலை செய்தவனைப் போன்றவன் ஆவான்.

- இவ்வுலகில் எந்தப் பொருள் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொண்டாரோ அதன் மூலமே மறுமை நாளில் அவரை அல்லாஹ் வேதனை செய்வான் என்று நபி ஸல் கூறினார்கள்.

- இதை ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி)அறிவிக்கிறார்கள்

நூல் :  திர்மிதீ 2579 தரம் : ஸஹீஹ்


திருக்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுதல் 

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ أَبَا مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يَقْرَأُ ذَاتَ لَيْلَةٍ ، فَمَشَى رَسُولُ اللَّهِ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَسْمَعُ ، فَلَمَّا أَصْبَحَ قِيَلَ لَهُ ، قَالَ : لَوْ عَلِمْتُ لَحَبَّرْتُ لَكَ تَحْبِيرًا وَلَشَوَّقْتُ لَكَ تَشْوِيقًا .

●  صحيح لغيره .

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: 

ஒரு நாள் இரவு அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு (திருக்குர்ஆனை) ஓதிக்கொண்டிருந்தார். அதைக் கேட்டுக்கொண்டே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்து சென்றார்கள். (நேற்றிரவு உம்முடைய ஓதலை நபியவர்கள் செவியுற்றார்கள் என்ற) இச்செய்தி அவர்களிடம் காலையில் சொல்லப்பட்டது. “(என்னுடைய ஓதலை நபியவர்கள் செவியுற்றார்கள் என்பது) எனக்குத் தெரிந்திருந்தால் நான் இன்னும் அழகிய தொனியில் இனிமையாக ஓதியிருப்பேனே” என்று கூறினார்கள். 

 நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா: 5/1650 

இதன் அறிவிப்பாளர்தொடர் ‘ஸஹீஹ் லி கைரிஹி' தரத்தில் அமைந்துள்ளது.


திருக்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுதல்

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : سُئِلَ رَسُولُ اللَّهِ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  أَيُّ النَّاسِ أَحْسَنُ قِرَاءَةً ؟ قَالَ : الَّذِي إِذَا سَمِعْتَهُ يَقْرَأُ رَأَيْتَ أَنَّهُ يَخْشَى اللَّهَ  عَزَّ وَجَلَّ .

● رجاله ثقات .

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: 

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “அழகிய முறையில் ஓதுபவர் யார்?” என்று கேட்கப்பட்டது. “அவர் ஓதுவதை நீ செவியுற்றால், அவர் வல்லமையும் மகத்துவமும் கொண்ட அல்லாஹ்வை அஞ்சு(ம் நிலையில் ஓது)கிறார் என நீ கருதுவாய்” என்று பதிலுரைத்தார்கள். 

 நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா: 11/223 

இதன் அறிவிப்பாளர்கள் உறுதியானவர்கள்.


திருக்குர்ஆனை அழகிய தொனியில் ஓதுதல் 

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : إِنَّ لِكُلِّ شَيْءٍ حِلْيَةً ، وَحِلْيَةُ الْقُرْآنِ الصَّوْتُ الْحَسَنُ .

 صحيح لغيره

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: 

ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அழகு உண்டு. குர்ஆனின் அழகு அழகிய குரல்தான். 

நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா: 7/2496

 இதன் அறிவிப்பாளர்தொடர் ‘ஸஹீஹ் லி கைரிஹி ' தரத்தில் அமைந்துள்ளது.


அடியார்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் 

عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ ، كَمَا يُحِبُّ أَنْ تُؤْتَى عَزَائِمُهُ .

●إسناده صحيع.

நிச்சயமாக அல்லாஹ் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான். மேலும் (அடியார்கள்) உறுதியான தன்மைகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான்.என நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

 நூல் :  அல்அஹாதீஸுல் முக்தாரா: 12/304, இப்னு ஹிப்பான்: 354 தரம் : ஸஹீஹ்


அடியார்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும்

 عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ كَمَا يَكْرَهُ أَنْ تُؤْتَى مَعْصِيَتُهُ

- صحيح   

 நிச்சயமாக அல்லாஹ் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான். மேலும் அவனுக்கு (அடியானால்) மாறு செய்யப்படுவதை வெறுக்கிறான். என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னது அஹ்மத்: 5866  தரம் : ஸஹீஹ்


திக்ருகளை விரல்களால் எண்ணி ஒதவேண்டும்.

أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أمرَهنَّ أن يُراعينَ بالتَّكبيرِ والتَّقديسِ والتَّهليلِ وأن يعقِدنَ بالأناملِ فإنَّهنَّ مَسئولاتٌ مُستَنطَقاتٌ
الراوي : يسيرة بنت ياسر | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 1501 | خلاصة حكم المحدث : حسن

நபி ஸல் அவர்கள் பெண்களுக்கு அல்லாஹு அக்பர்,ஸுப்ஹானல் மலிகுல் குத்தூஸ்,லாயிலாஹ இல்லல்லாஹு ஆகிய மூன்று திக்ருகளை விரல்களால் எண்ணி ஒதுமாறு கட்டளையிட்டார்கள் .

ஏனெனில் விரல்களிடம் மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் போது அவை ( சாட்சி கூறிப்) பேசும் என்று கூறினார்கள்.

இதை யுஸைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1501 தரம் : ஹசன்


வானவர்களின் பண்பு .

أبي هريرة  ورفعه إلى النبي ﷺ: إن طرف صاحب الصور منذ وكل به مستعد ينظر نحو العرش مخافة أن يؤمر قبل أن يرتد إليه طرفه، كأن عينيه كوكبان دريان 

[رواه الحاكم في المستدرك: 8676، صححه الألباني في سلسلته الصحيحة: 1078].

எக்காலமும் ஸுர் ஊதுபவருடைய ( வானவர் ) கண்பார்வை அவர் அதற்காக நியமிக்கப்பட்டதிலிருந்து தயாராக இருக்கிறது. அவர் தம் கண்பார்வையைச் சிமிட்டுவதற்குள் இறைகட்டளை ஏவப்பட்டுவிடுமோ என்று அஞ்சுபவராக அவர் அர்ஷையே பார்த்தவாறு இருக்கிறார்.

அவருடைய இரண்டு கண்களும் மின்னக்கூடிய இரண்டு நட்சித்திரங்களைப் போன்று உள்ளன என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஹாகிம் 8676 தரம் : ஸஹீஹ்


மறுமை அடையாளங்களில் இவையும் ஒன்று

عَن خارجةَ بنِ الصَّلتِ البرجميِّ قالَ: دخَلتُ معَ عبدِ اللَّهِ المسجِدَ، فإذا القومُ رُكوعٌ فرَكَعَ، فمرَّ رجلٌ فسلَّمَ عليهِ، فقالَ عبدُ اللَّهِ: صدقَ اللَّهُ ورسولُهُ، ثمَّ وصلَ إلى الصَّفِّ، فلمَّا فرغَ سألتُهُ عن قولِهِ: صدقَ اللَّهُ ورسولُهُ، فقالَ: إنَّهُ كانَ يقولُ: لا تقومُ السَّاعةُ حتَّى تُتَّخذَ المساجدُ طرقًا، وحتَّى يسلِّمَ الرَّجلُ على الرَّجلِ بالمعرفةِ، وحتَّى تتَّجرَ المرأةُ وزَوجُها، وحتَّى تغلُوَ الخيلُ والنِّساءُ، ثمَّ ترخُصَ فلا تَغلو إلى يومِ القيامةِ

الراوي : عبدالله | المحدث : الحاكم | المصدر : المستدرك على الصحيحين
الصفحة أو الرقم : 8598 | خلاصة حكم المحدث : صحيح الإسناد

காரிஷா பின் அஸ்ஸல்த் அல்புர்ஷுமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது:

 நான் அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) அவர்களுடன் பள்ளிவாசலில் நுழைந்தேன். அப்போது மக்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். எனவே அவரும் தொழுகச் சென்றார். 

அச்சமயத்தில் ஒரு மனிதர் கடந்து சென்றபோது அப்துல்லாஹ்வுக்கு முகமன் கூறினார். அப்போது அப்துல்லாஹ், “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர்” என்று கூறினார். பிறகு (தொழுகை) அணியை அடைந்(து தொழுது முடித்)தார். அவர் தொழுது முடித்தபோது, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர்” என்று அவர் கூறியது குறித்து நான் கேட்டேன். 

அப்போது அவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகத் தெரிவித்ததாவது: 

பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படும் வரை, ஒரு மனிதர் தாம் அறிந்த மனிதருக்கு (மட்டும்) முகமன் சொல்லும் வரை, கணவனோடு சேர்ந்து மனைவியும் வியாபாரம் செய்யும் வரை, குதிரைகளும் பெண்களும் விலையுயர்ந்து, பின்னர் அவற்றின் மதிப்பு குறைந்து போகும் வரை மறுமை நாள் ஏற்படாது. (பின்னர்) மறுமை நாள் வரை அவர்களின் மதிப்பு உயராது. 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) நூல் : ஹாகிம் 8598 தரம் : ஸஹீஹ்


நரகவாசிகளின் உணவு

عَنْ مُجَاهِدٍ ، أَنَّ النَّاسَ كَانُوا يَطُوفُونَ بِالْبَيْتِ، وَابْنُ عَبَّاسٍ جَالِسٌ مَعَهُ مِحْجَنٌ، فَقَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " { يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ }، وَلَوْ أَنَّ قَطْرَةً مِنَ الزَّقُّومِ قُطِرَتْ، لَأَمَرَّتْ عَلَى أَهْلِ الْأَرْضِ عَيْشَهُمْ، فَكَيْفَ مَنْ لَيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا الزَّقُّومُ ؟ ".

حكم الحديث: إسناده صحيح على شرط الشيخين

....இறை நம்பிக்கை கொண்டோரே ! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறையில் அஞ்சுங்கள் ( அல்லாஹ்வுக்கு ) அடிபணிந்தவர்களாகவே ( முஸ்லிம்களாகவே ) அன்றி ( வேறு நிலையில் ) இறந்துவிடாதீர்கள் ( 3:102)

(ஏனெனில் நரகவாசிகளின் உணவுப் பொருளான ) ஸக்கூமின் ( சப்பாத்திக் கள்ளியின் ) ஒரேயொரு துளி இந்தப் பூமியில் விழுந்தாலும் பூமியில் வசிப்போரின் ( ஒட்டு மொத்த ) வாழ்வாதாரங்களை அது கசப்பாக்கிவிடும்.

அவ்வாறாயின்,அந்த ஸக்கூமைத் தவிர வேறு உணவே இல்லாத நரகவாசி ஒருவரின் நிலை எப்படியிருக்கும் ..?

என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 2735 தரம் : ஸஹீஹ்


ஏகத்துவக் கொள்கையோடு யார் மரணித்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் 

عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِي، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ لَقِيَ اللَّهَ، وَهُوَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَلَمْ تَضُرَّهُ مَعَهُ خَطِيئَةٌ، كَمَا لَوْ لَقِيَهُ وَهُوَ مُشْرِكٌ بِهِ دَخَلَ النَّارَ، وَلَمْ  تَنْفَعْهُ مَعَهُ حَسَنَةٌ»

•إسناده صحيع على شرط الشيخين.

யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனைச் சந்திக்கின்றாரோ அவரோடு உள்ள பாவங்கள் அவருக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாது. 

யார் அவனுக்கு இணைவைத்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவரோடு உள்ள நன்மைகள் அவருக்கு எந்தப் பயனையும் தராது”. என்று  நபி ஸல்  கூறினார்கள். என அப்தில்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 6586

தரம் :  புகாரீ, முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ஸஹீஹ் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.


மூன்று நற்குணங்கள்..

إن الهَدْيَ الصالحَ ، والسَمْتَ الصالحَ ، والاقتصادَ جزءٌ مِن خمسةِ وعشرين جزءًا مِن النُّبُوَّةِ.

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 4776 | خلاصة حكم المحدث : حسن

நல்வழி ,நன்னடத்தை, நடுநிலைப் போக்கு ஆகியவை நபித்துவத்தின் இருபத்து ஜந்து பாகங்களில் ஒரு பாகமாகும் என்று நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 4776 தரம் : ஹசன்


இஸ்லாம் முந்திய பாவங்களை அழித்துவிடும்

عَنْ أَنَسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ  فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَكْتُ حَاجَةً، وَلا دَاجَةً إِلا قَدْ أَتَيْتُ، قَالَ: " أَلَيْسَ تَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ، ثَلاث مَرَّاتٍ؟ "، قَالَ: نَعَمْ، قَالَ: " فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ

• إسناده صحيع .

ஒரு மனிதர் நபி ஸல்  அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் சிறிய, பெரிய எந்தப் பாவத்தையும் செய்யாமல் விடவில்லை. (என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா) என்று கேட்டார். 

“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நீ சாட்சி சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். இவ்வாறு மூன்று முறை கேட்டார்கள். அதற்கு அவர், ஆம் (நான் சாட்சி சொல்லியுள்ளேன்) என்று கூறினார். (அப்படியானால்) அது அவ்வாறே (பாவங்களை அழித்துவிட்டு) வரும்.

இதை அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா 1618 தரம் : ஸஹீஹ்


நோய்க்கு இவைகளில் நிவாரணம் உண்டு 

عَنِ ابْنِ عَبَّاسٍ ، فَاحْتَبَسْتُ أَيَّامًا، فَقَالَ مَا حَبَسَكَ ؟ قُلْتُ : الْحُمَّى. قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِنَّ الْحُمَّى مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَابْرُدُوهَا بِمَاءِ زَمْزَمَ ".

حكم الحديث: إسناده صحيح على شرط الشيخين

நான் ( மக்காவில் )இப்னு அப்பாஸ் ரலி அவர்களிடமிருந்து மக்களை ( தள்ளு முள்ளு இல்லாமல் ) தடுத்து ( ஒழுங்குபடுத்துக் பணி செய்து)வந்தேன். அப்போது சில நாட்கள் நான் அவர்களை சந்திக்கமுடியாமல் தடைபட்டேன்.

பின்னர் ( சில நாட்கள் கழித்து நான் மறுபடியும் சென்றபோது ) உம்மை ( இங்கு வர விடாமல் ) தடுத்தது எது ? என்று இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கேட்டார்கள் நான் காய்ச்சல் என்றேன்.

அப்போது அவர்கள் இந்த காய்ச்சல் நரகத்தின் பெருமூச்சால் தான் ஏற்படுகிறது எனவே ஸம்ஸம் நீரைக் கொண்டு காய்ச்சலைத் தணித்துக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

இதை அபூ ஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் அள்ளுபஈ ( ரஹ் ) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 2649 தரம் : ஸஹீஹ்


கால்நடைகளுக்கு உரிய உரிமைகளை கொடுக்கவேண்டும்

إنَّ النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ نهى عن قتلِ أربعٍ من الدوابِّ ؛ النملةِ، والنحلةِ، والهدهدِ، والصّردِ
الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 5267 | خلاصة حكم المحدث : صحيح

நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி ஸல் அவர்கள் தடை விதித்தார்கள்.

1. எறும்பு

2. தேனீ

3. கொண்டைலாத்திப் பறவை (Hoopoe)

4. கீச்சாங்குருவி ( Shrike )

இதை இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 5267 தரம் : ஸஹீஹ்


ஈமான் என்றால் என்ன ?

سألَ رجلٌ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِهِ وسلَّمَ فقالَ: ما الإِثمُ ؟ قالَ: إذا حاكَ في نَفسِكَ شيءٌ فَدعهُ. قالَ: فما الإيمانُ ؟ قالَ : إذا ساءَتكَ سيِّئتُكَ ، وسرَّتكَ حسَنتُكَ فأنتَ مؤمنٌ .
الراوي : أبو أمامة الباهلي | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند

الصفحة أو الرقم: 489 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் பாவம் என்றால் என்ன ? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்

( ஏதேயேனும் ஒன்றைச் செய்கின்றபோது ) உன் உள்ளத்தில் ஏதேனும் நெருடல் ஏற்பட்டால் ( அதுதான் பாவம் எனவே ) அதை விட்டுவிடு என்றார்கள் 

ஈமான் என்றால் என்ன ? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்

நீ செய்கின்ற நன்மை உன்னை மகிழ்வித்து நீ செய்கின்ற தீமை உன்னைத் துன்புறுத்தினால் நீ முஃமின் (இறை நம்பிக்கையாளன்) ஆவாய் என்று பதிலளித்தார்கள்.

இதை அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 489 தரம் : ஸஹீஹ்


மறுமை அடையாளங்களில் இதுவும் ஒன்று 

إنَّ من أشراطِ الساعةِ أن يُلتمسَ العِلمُ عند الأصاغرِ

الراوي : أبو أمية الجمحي | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 695 | خلاصة حكم المحدث : إسناده جيد

சிறுவர்கள் அறிஞர்களாக்கப்படுவது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என நபி ஸல் கூறியதாக அபூ உமையா அல்ஜும்ஹி( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 695 தரம் : ஸஹீஹ்


மறுமை அடையாளங்களில் இதுவும் ஒன்று

من اقترابِ الساعةِ انتفاخُ الأَهِلَّةِ ، و أن يُرَى الهلالُ لليلةٍ ، فيقال : هو ابنُ ليليتيْنِ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 2292 | خلاصة حكم المحدث : صحيح

பிறை பெரிதாகி மக்கள் முதல் பிறையைக் கண்டு இது இரண்டாம் பிறையைப் போன்றிருக்கிறதே என்பார்கள்.

இது மறுமை நாளின் அடையாளமாகும்  என நபி ஸல் கூறினார்கள் 

இதை அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 2292 தரம் : ஸஹீஹ்


மறுமை அடையாளங்களில் இவையும் ஒன்று 

مِنْ أشراطِ الساعةِ أنْ يَمُرَّ الرجلُ في المسجدِ ، لا يصلي فيه ركعتينِ ، وأنْ لَّا يُسَلِّمَ الرجلُ إلَّا على مَنْ يعرفُ
الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الجامع
الصفحة أو الرقم: 5896 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு மனிதன் பள்ளிவாசலை கடந்து செல்வான் ஆனால் அதிலே இரண்டு ரக் அத்கள் தொழ மாட்டான் 
தனக்கு தெரிந்தவர்களுக்கு மாத்திரமே ஸலாம் கூறுவான் 
இவை மறுமை நாளின் அடையாளங்களாகும் என நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 5896 தரம் : ஸஹீஹ்


ஜந்து விஷயங்கள்...

بَخٍ بَخٍ لِخمسٍ ما أثقلَهُنَّ في الميزانِ : لا إلهَ إلَّا اللهُ ، وسبحانَ اللهِ ، والحمدُ للهِ ، واللهُ أكبرُ ، والولَدُ الصالِحُ ، يُتوَفَّى للمرْءِ المسلِمِ فيَحتَسِبُهُ

الراوي : ثوبان وأبو سلمة وأبو أمامة | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2817 | خلاصة حكم المحدث : صحيح

ஐந்து விஷயங்கள் என்னே அழகு. மீஸான் தட்டில்  அவற்றின் எடை எவ்வளவு கனமானது. 
அவை 
1.லாயிலாஹ இல்லல்லாஹ், 
2.சுப்ஹானல்லாஹ், 
3.அல்ஹம்து லில்லாஹ், 
4.அல்லாஹு அக்பர், 
5.ஒரு முஸ்லிமுக்கு அவர்தம் நல்ல பிள்ளை இறந்துவிட்டது; அவர் அதன்மூலம் நன்மையை எதிர்பார்க்கிறார். என்று நபி ஸல் கூறியதாக அபூஸல்மா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ  2817 தரம் : ஸஹீஹ்


அழகிய பேச்சுகள் நான்கு..

إنَّ اللهَ تعالى اصْطفَى من الكلامِ أرْبعًا : سُبحانَ اللهِ ، والحمدُ للهِ ، ولا إِلهَ إلَّا اللهُ ، واللهُ أكْبَرُ . فمَنْ قال : سُبحانَ اللهِ كُتِبَتْ لهُ عِشرُونَ حسَنةً ، وحُطَّتْ عنهُ عِشرُونَ سيِّئَةً . ومَنْ قال : اللهُ أكْبرُ ، مِثلَ ذلِكَ . ومَنْ قال : لا إِلهَ إلَّا اللهُ مِثلَ ذلِكَ ، ومَنْ قال : الحمدُ للهِ ربِّ العالَمِينَ ، من قِبَلِ نَفْسِهِ كُتِبَتْ لهُ ثلاثُونَ حسَنةً وحُطَّ عنْهُ ثلاثُونَ خَطيئَةً

الراوي : أبو سعيد الخدري وأبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الجامع
الصفحة أو الرقم: 1718 | خلاصة حكم المحدث : صحيح

  நிச்சயமாக அல்லாஹ் பேச்சுகளிலிருந்து நான்கைத் தேர்வுசெய்துள்ளான். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ  இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகியவை ஆகும்.

1.யார் சுப்ஹானல்லாஹ் என்று சொல்கிறாரோ அதற்காக அல்லாஹ் அவருக்கு இருபது நன்மைகளை எழுதுகிறான். அல்லது இருபது தீமைகளை அழிக்கின்றான். 

2.யார் அல்லாஹு அக்பர் என்று சொல்கிறாரோ அவருக்கு அதேபோல (எழுதுகிறான்). 

3.யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்கிறாரோ அவருக்கு அதேபோல (எழுதுகிறான்). 

4.யார் தமது மனத்திலிருந்து அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று சொல்கிறாரோ அவருக்கு முப்பது நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது முப்பது தீமைகள் அழிக்கப்படுகின்றன” என்று  நபி ஸல்   அவர்கள் கூறியதாக அபூசஈத் ( ரலி ) மற்றும் அபூஹுரைரா (ரலி ) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 1718 தரம் : ஸஹீஹ்


தூய்மையான உழைப்பு

إنَّه مِن أطيَبِ ما أكَلَ الرَّجُلُ مِن كَسْبِه، وولَدُه مِن كَسْبِه.

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 3528 | خلاصة حكم المحدث : صحيح

நிச்சயமாக உங்கள் பிள்ளைகள் ( உடைய உழைப்பிலிருந்து சாப்பிடுவது ) உங்களுடைய மிகத் தூய்மையான உழைப்புதான்.

எனவே நீங்கள் உங்கள் பிள்ளைகளின் உழைப்பிலிருந்து சாப்பிடுங்கள் என்று நபி ஸல் கூறியதாக அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 3528 தரம் : ஸஹீஹ்


பிரார்த்தனையின் ஒழுங்குகள்

عَن عائشةَ رضيَ اللَّهُ عَنها قالَت : كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يستحِبُّ الجوامعَ منَ الدُّعاءِ ويدَعُ ما سِوى ذلِكَ

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 1482 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் குறைவான சொற்றொடர்களில் ஒருங்கிணைந்த நிறைவான கருத்துக்கள் உள்ளடங்கிய சொற்களைக் கொண்டு பிரார்த்திப்பதைப் பிரியப்படுவார்கள். இவை அல்லாத வார்த்தைகளைக் கொண்டு பிரார்த்தனை செய்வதைவிட்டு விடுவார்கள் என ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1482 தரம் : ஸஹீஹ்


நரகத்தில் குறைந்த தண்டனையின் அளவு

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَهْوَنُ أَهْلِ النَّارِ عَذَابًا رَجُلٌ فِي رِجْلَيْهِ نَعْلَانِ، يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ، وَمِنْهُمْ فِي النَّارِ إِلَى كَعْبَيْهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنْ فِي النَّارِ إِلَى رُكْبَتَيْهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنِ اغْتَمَرَ فِي النَّارِ إِلَى أَرْنَبَتِهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنْ هُوَ فِي النَّارِ إِلَى صَدْرِهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنْ قَدِ اغْتَمَرَ فِي النَّارِ ". قَالَ عَفَّانُ : " مَعَ إِجْرَاءِ الْعَذَابِ قَدِ اغْتَمَرَ ".

الراوي : أبو سعيد الخدري| المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم :11100 | خلاصة حكم المحدث : إسناده صحيح

நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர், நெருப்பாலான இரு காலணிகளை அணி(விக்கப்படு)வார். உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்களுள் சிலர் கணுக்கால் வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு- வேதனை செய்யப்படுவார்கள். 

அவர்களுள் சிலர் முட்டுக்கால் வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு- வேதனை செய்யப்படுவார்கள். 
அவர்களுள் சிலர் மூக்குநுனி வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு-
வேதனை செய்யப்படுவார்கள்.

அவர்களுள் சிலர் நெஞ்சு வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு-
வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களுள் சிலர் (முற்றிலும்) நெருப்புக்குள் மூழ்கிவிடுவார்கள். என்று நபி ஸல் கூறியதாக அபூ சையத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 11100 தரம் : ஸஹீஹ்


ஈகை திருநாள் 

إنَّ أعظمَ الأيَّامِ عندَ اللَّهِ تبارَكَ وتعالَى يومُ النَّحرِ ثمَّ يومُ القُرِّ . ..

الراوي : عبدالله بن قرط | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 1765 | خلاصة حكم المحدث : صحيح

அருள்வளம் மிக்க உயர்ந்தோன் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியமான நாள் அறுத்துப் பலியிடும் ( துல்ஹஜ் 10 ) ஈகைத் திரு நாளாகும் அதற்கு அடுத்த நாளாகிய பதினொன்றாவது நாளும் ஆகும் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் குர்த் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1765 தரம் : ஸஹீஹ்


ஈகை திருநாள்..

إنَّ يومَ عرفةَ ويومَ النَّحرِ وأيَّامَ التَّشريقِ عيدُنا أَهْلَ الإسلامِ ، وَهيَ أيَّامُ أَكْلٍ وشربٍ
الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح النسائي

الصفحة أو الرقم: 3004 | خلاصة حكم المحدث : صحيح

 
 அரபா தினம் (துல் ஹஜ் 9), அந்நஹ்ர் தினம் (துல் ஹஜ் 10), அய்யாமுத் தஷ்ரீக் தினங்கள் (துல் ஹஜ் 11, 12, 13) ஆகியன எங்களுடைய பெருநாட்தினங்கள் முஸ்லிம்களே! அவை உண்டு, பருகி மகிழும் தினங்களாகும்.என்று நபி ஸல் கூறியதாக உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 3004 தரம் : ஸஹீஹ்


அனைத்திற்க்கும் கேள்வி கணக்கு உண்டு.

يا عائشةُ إياكِ ومحقَّراتِ الأعمالِ فإنَّ لها من اللهِ طالبًا

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه
الصفحة أو الرقم: 3440 | خلاصة حكم المحدث : صحيح

அற்பமாக கருதப்படுகின்ற பாவமான செயல்களைப் பற்றி உன்னை எச்சரிக்கின்றேன் ஏனெனில் நிச்சயமாக அவைகளுக்கு அல்லாஹ்விடம் கேள்வி கணக்கு உண்டு என்று நபி ஸல் என்னிடத்தில் கூறினார்கள்

இதை அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 3440 தரம் : ஸஹீஹ்


உபரியான தொழுகையின் சிறப்பு 

ما منِ امرئٍ تَكونُ لَهُ صلاةٌ بليلٍ يغلبُهُ عليْها نومٌ إلاَّ كتبَ لَهُ أجرُ صلاتِهِ وَكانَ نومُهُ عليْهِ صدقةً
الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 1314 | خلاصة حكم المحدث : صحيح

இரவுத் தொழுகை தொழும் ( வழக்கமுள்ள ) ஒருவருக்குத் தொழுகையில் தூக்கமிகுதி ஏற்பட்டுத் தொழாமல் தூங்கிவிட்டால் அந்தத் தொழுகையின் நன்மை பதிவு செய்யப்படாமல் விடுவதில்லை அவருடைய உறக்கம் அவருக்குத் தர்மமாக அமைந்துவிடும் என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1314 தரம் : ஸஹீஹ்


உபரியான தொழுகையின் போது உறக்கம் மிகைத்துவிடும் போது.

إذا قامَ أحدُكم منَ اللَّيلِ فاستعجمَ القرآنُ على لسانِهِ فلم يدرِ ما يقولُ فليضطجع
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود

الصفحة أو الرقم: 1311 | خلاصة حكم المحدث : صحيح

நீங்கள் யாரேனும் இரவுத் தொழுகை தொழ நின்று அவருடைய நாவில் குர் ஆன் ஒதுதல் தடுமாறுகின்றது ( அல்லது ) அவர் ஓதுவதை அவரே அறியவில்லையென்றால் அவர் படுத்து உறங்கிவிடட்டும் என்று நபி ஸல் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 1311 தரம் : ஸஹீஹ்


பிரார்த்தனை ஏற்றுகொள்ளப்படும் நேரம்

قلتُ يا رسولَ اللَّهِ أيُّ اللَّيلِ أسمَعُ قالَ جوفُ اللَّيلِ الآخرُ فصلِّ ما شئتَ فإنَّ الصَّلاةَ مشْهودةٌ مَكتوبةٌ حتَّى تصلِّيَ الصُّبحَ... 

الراوي : عمرو بن عبسة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1277 | خلاصة حكم 
المحدث : صحيح

அல்லாஹ்வின் தூதரே ! இரவில் எந்த நேரத்தில் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரவின் கடைசிப் பகுதி எனவே அந்த நேரத்தில் நாடிய அளவு நீ தொழுதுகொள் 

ஃபஜ்ரு தொழும் வரை அங்கு வானவர்கள் வருகிறார்கள் அதற்குரிய நன்மையை எழுதுகிறார்கள் என்று கூறினார்கள்.

இதை அம்ர் பின் அபஸா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1277 தரம் : ஸஹீஹ்


உபரியான தொழுகையின் சிறப்பு 

رحِمَ اللَّهُ امرَأً صلَّى قبلَ العصرِ أربعًا
الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 1271 | خلاصة حكم المحدث : حسن

அஸ்ருடைய ஃபர்ளுக்கு முன் சுன்னத் நான்கு ரக்அத் தொழுத மனிதனுக்கு அல்லாஹ் அருள் செய்கிறான் என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1271 தரம் : ஹசன்


தடுக்கபட்ட வியபார முறைகள் 

أنَّ النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ نهى أن يبيعَ حاضرٌ لبادٍ، وإن كان أباهُ أو أخاهُ
الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح النسائي

الصفحة أو الرقم: 4504 | خلاصة حكم المحدث : صحيح

கிராமத்திலிருந்து ( சரக்கு கொண்டு ) வருபவருக்காக உள்ளூர்க்காரர் விற்றுக் கொடுப்பதை நபி ஸல் அவர்கள் தடை செய்தார்கள். அவர் அவருடைய தந்தையாகவோ அவருடைய சகோதரராகவோ இருந்தாலும் சரியே

இதை அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் நஸாயீ 4504 தரம் : ஸஹீஹ்


தடுக்கபட்ட வியபார முறைகள் 

نهى رسولُ اللهِ صلى الله عليه وسلم عن سلفٍ وبيعٍ، وعن شرطين في بيعٍ واحدٍ، وعن بيعِ ما ليس عندَك، وعن ربحِ ما لم يضمنْ.

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح النسائي
الصفحة أو الرقم: 4645 | خلاصة حكم المحدث : حسن صحيح

கடன் தர வேண்டும்மென்ற நிபந்தனையுடன் ஒன்றை விற்பதற்கு அனுமதி இல்லை.

ஒரே வியாபாரத்தில் இரண்டு நிபந்தனைகள் இடுவதற்கு அனுமதி இல்லை.

கைக்கு வந்து சேர்வதற்கு முன் விற்கப்பட்ட பொருளில் கிடைத்த இலாபத்திற்கும் அனுமதி இல்லை என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 4645 தரம் : ஹசன் ஸஹீஹ்


தடுக்கபட்ட வியபார முறைகள் 

نهى رسولُ اللهِ صلى الله عليه وسلم عن بيعتينِ في بيعةٍ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 1231 | خلاصة حكم المحدث : صحيح

ஒரே வணிகத்தில் இரண்டு விதமான பேரங்கள் பேசுவதற்க்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் தடை விதித்தார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 1231 தரம் : ஸஹீஹ்


இவர்கள் நபி ஸல் அவர்களுடைய வழிமுறை மீறியவர்கள் ஆவர்.

يا روَيْفعُ لعَلَّ الحياةَ ستطولُ بِكَ بعدي ، فأخبرِ النَّاسَ أنَّهُ من عقدَ لحيتَهُ ، أو تقلَّدَ وَترًا ، أو استَنجى برجيعِ دابَّةٍ ، أو عَظمٍ فإنَّ محمَّدًا صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ منهُ بريءٌ.

الراوي : رويفع بن ثابت الأنصاري | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 36 | خلاصة حكم المحدث : صحيح

ருவைஃபி உவே ! எனக்குப் பிறகு உம்முடைய வாழ்நாள் நீடிக்கலாம் அப்போது நீர் மக்களிடம் யார் தம் தாடியை முடிச்சுப் போடுகிறாரோ அல்லது கயிற்றை கழுத்தில் ( தாயத்து போன்று ) மாலையாகப் போட்டுக் கொள்கிறாரோ அல்லது கால் நடைகளின் விட்டையால் அல்லது எலும்பால் ( மலம் கழித்தபின் ) தூய்மை செய்கிறாரோ அவரிடமிருந்து முஹம்மத் நீங்கிக் கொண்டார் என்று தெரிவித்துவிடு என்று கூறினார்கள் என ருவைஃபிஉ பின் ஸாபித் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 36 தரம் : ஸஹீஹ்


அந்த இருவர்...!

ما في النَّاسِ مِثلُ رجُلٍ آخذٍ برأسِ فرسِه يجاهدُ في سبيلِ اللَّهِ عزَّ وجلَّ ويجتَنبُ شرورَ النَّاسِ ، ومثلُ آخرَ بادٍ في نِعمةٍ يُقري ضيفَه ويُعطي حقَّهُ.

الراوي : عبدالله بن عباس | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند

الصفحة أو الرقم: 637 | خلاصة حكم المحدث : صحيح

அந்த மனிதரைப் போன்று மக்களில் யாரும் இல்லை அவர் ( யாரென்றால் ) தமது குதிரையின் தலையைப் பிடித்துக் கொண்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகிறார் மேலும் மக்களுக்குத் தீங்கிழைக்காமல் விலகியிருக்கிறார்.

இன்னொருவரைப் போன்றும் (மக்களில் யாரும் இல்லை ) அவர் ( யாரென்றால் ) அல்லாஹ்வின் அருட்கொடைகளுடன் நாட்டுப் புறத்தில் வசிக்கிறார் மேலும் தம் விருந்தினரை உபசரித்து அவருக்கான உரிமையை வழங்குகிறார் என்று நபி ஸல் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் :  ஸஹீஹ் முஸ்னத் 637 தரம் : ஸஹீஹ்


பிற முஸ்லிம்க்கு செய்ய வேண்டிய கடமை ஆறு

للمؤمنِ على المؤمنِ ستُّ خصالٍ يعودُهُ إذا مرضَ ويشْهدُهُ إذا ماتَ ويجيبُهُ إذا دعاهُ ويسلِّمُ عليْهِ إذا لقيَهُ ويشمِّتُهُ إذا عطسَ وينصحُ لَهُ إذا غابَ أو شَهدَ.
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح النسائي
الصفحة أو الرقم: 1937 | خلاصة حكم المحدث : صحيح

 
ஒர் இறை நம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஆறாகும்

1- அவர் நோய்வாய்ப்பட்டால் அவரை உடல் நலம் விசாரிப்பது

2- அவர் இறந்துவிட்டால் அவரது ஜனாஸாவில் பங்கேற்பது

3- அவர் அழைத்தால் அவருக்கு பதிலளிப்பது

4- அவரைச் சந்திக்கும்போது அவருக்கு ஸலாம் கூறுவது

5- அவர் தும்மி ( அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி)னால் ( யர்ஹமுகல்லாஹ் என்று ) அவருக்கு மறுமொழி கூறுவது

6- அவர் உடன் இருக்கும்போது இல்லாதபோதும் அவருக்கு நல்லதே நினைப்பது என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் நஸாயீ 1937 தரம் : ஸஹீஹ்


நளினமாக நடப்பதின் சிறப்பு

أدخلَ اللهُ عز وجل رجلاً كان سهلاً، مشتريًا، وبائعًا، وقاضيًا، ومُقتضيًا الجنةَ.

الراوي : عثمان بن عفان | المحدث : الألباني | المصدر : صحيح النسائي
الصفحة أو الرقم: 4710 | خلاصة حكم المحدث : حسن

விற்கும்போதும் வாங்கும்போதும் கடனை நிறைவேற்றுகின்ற போதும் ( கடனைத் ) திருப்பிக் கேட்கின்றபோதும் யார் நளினமான முறையில் நடந்துகொண்டாரோ அத்தகைய மனிதரை அல்லாஹ் மன்னித்து சொர்க்கத்தில் நுழைய செய்வான் என்று நபி ஸல் கூறியதாக உஸ்மான் பின் அஃப்ஃபான் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் நஸாயீ 4710 தரம் : ஹசன்


கருமித்தனம்

إيَّاكُم والشُّحَّ، فإنَّما هلَكَ مَن كانَ قبلَكُم بالشُّحِّ، أمرَهُم بالبخلِ فبخِلوا، وأمرَهُم بالقَطيعةِ فقطعوا، وأمرَهُم بالفجورِ ففجَروا .

الراوي : عبدالله بن عمرو | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند
الصفحة أو الرقم: 801 | خلاصة حكم المحدث : صحيح

கருமித்தனம் குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் கருமித்தனம் செய்ததால் தான் அழிந்து போனார்கள்.அவர்களின் கருமித்தனம் அவர்கள் தர்மம் செய்ய வேண்டாமெனக் கட்டளையிட்டது எனவே அவர்கள் கஞ்சத்தனம் செய்தார்கள்.

அவர்களின் கருமித்தனம் உறவினர்களைத் துண்டித்து வாழக் கட்டளையிட்டது எனவே அவர்கள் உறவினர்களைத் துண்டித்து வாழ்ந்தார்கள் .

கருமித்தனம் அவர்களைப் பாவங்கள் செய்யக் கட்டளையிட்டது எனவே அவர்கள் பாவங்கள் செய்தார்கள் என்று நபி ஸல்  உரை நிகழ்த்தும்போது கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 801 தரம் : ஸஹீஹ்


உறவுகளை பேணி வாழவேண்டும்..

قالَ اللَّهُ : أَنا الرَّحمنُ وَهيَ الرَّحمُ ، شَقَقتُ لَها اسمًا منَ اسمي ، من وصلَها وصلتُهُ ، ومن قطعَها بتتُّهُ

الراوي : عبدالرحمن بن عوف | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1694 | خلاصة حكم المحدث : صحيح 

மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கூறுகிறான் :

நானே அல்லாஹ் நானே அளவிலா அருளாளன் ஆவான் உறவை நானே படைத்தேன் என் பெயரில் ( ரஹ்மான் என்பதில் ) இருந்தே அதற்கு நான் பெயர் சூட்டியுள்ளேன்.

யார் உறவைப் பேணி வாழ்கிறாரோ அவரை நானும் பேணிக்காப்பேன் யார் உறவை முறிக்கிறாரோ அவருடன் நானும் உறவை முறித்துக்கொள்வேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அறிவித்தார்கள் என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 1694 தரம் : ஸஹீஹ்


தொழுகையின் சிறப்பு

يقولُ اللَّهُ عزَّ وجلَّ يا ابنَ آدمَ لاَ تعجزني من أربعِ رَكعاتٍ في أوَّلِ نَهارِكَ أَكفِكَ آخرَهُ.

الراوي : نعيم بن همار الغطفاني | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1289 | خلاصة حكم المحدث : صحيح

மாண்பும் வல்லமையும் மிக்க அல்லாஹ் கூறுகிறான் 

ஆதமின் மகனே ! உன்னுடைய பகலின் ஆரம்ப நேரத்தில் நான்கு ரக்அத்களைத் தொழாமல் இருந்துவிடாதே பகலின் கடைசி வரைக்கும் ( உன் தேவைகளை நிறைவேற்றுவதில் ) நான் போதுமானவன் ஆவேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் அறிவித்தார்கள் என நுஅய்ம் பின் ஹம்மார் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத்  1289 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை -17

أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ كان يقولُ اللَّهمَّ إني أعوذُ بك من الفقرِ ، وأعوذُ بك من القِلَّةِ والذِّلَّةِ ، وأعوذُ بك أن أَظْلِمَ أو أُظْلَمَ

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح النسائي
الصفحة أو الرقم: 5475 | خلاصة حكم المحدث : صحيح

இறைவா வறுமையை விட்டும் ( நற்செயல்களில் ) குறைவு ஏற்படுவதை விட்டும் இழிவுபடுத்துவதை விட்டும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

நான் அநீதி செய்வதிலிருந்தும் அல்லது அநீதி இழைக்கப் படுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன் என்று நபி ஸல் அவர்கள் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள் என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 5475 தரம் : ஸஹீஹ்


பிரதியுபகாரம் செய்ய இயலாதவர் தனக்கு உதவி செய்தவர்க்கு பிரார்த்தனை செய்யவேண்டும்

عن أَنَسٍ، أنَّ المُهاجِرينَ قالوا: يا رسولَ اللهِ، ذَهَبَتِ الأنصارُ بالأجرِ كُلِّهِ، قال: لا، ما دَعَوْتُمُ اللهَ لهُم، وأَثْنَيْتُم عليهِم.
الراوي : أنس بن مالك | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند
الصفحة أو الرقم: 119 | خلاصة حكم المحدث : صحيح على شرط مسلم

முஹாஜிரீன்கள் நபி ஸல் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! அன்ஸாரிகள் ( எங்களுக்கு உபகாரம் புரிந்து) நற்கூலிகளைக் கொண்டு சென்றுவிட்டனர் என்று கூறிய போது."இல்லை" அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீங்கள் பிரார்த்திப்பதும் அவர்களை நீங்கள் கண்ணியப்படுவதும் அந்த நற்கூலிக்குப் பகரமாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 119 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை 

سَأَلْتُ عَائِشَةَ عَمَّا كانَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ يَدْعُو به اللَّهَ، قالَتْ: كانَ يقولُ: اللَّهُمَّ إنِّي أَعُوذُ بكَ مِن شَرِّ ما عَمِلْتُ وَمِنْ شَرِّ ما لَمْ أَعْمَلْ.

الراوي : عائشة أم المؤمنين | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2716 | خلاصة حكم المحدث : [صحيح] 

நான் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா ( ரலி ) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டிவந்த பிரார்த்தனைகள் குறித்துக் கேட்டேன் அதற்க்கு அன்னை பின்வருமாறு கூறினார்கள்

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்த்து வ மின் ஷர்ரி மா லம் அஃமல் என்று பிரார்த்திபார்கள் எனப் பதிலளித்தார்கள்

பொருள் : இறைவா நான் செய்தவற்றின் தீங்கிலிருந்தும் நான் செய்யத் தவறியவற்றின் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2716 தரம் : ஸஹீஹ்


பிறையை காண்பதற்கான இரு ஆண்களின் சாட்சியங்கள்...

أنَّ أميرَ مَكَّةَ خطبَ ، ثمَّ قالَ : عَهِدَ إلينا رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ أن ننسُكَ للرُّؤيةِ ، فإن لم نرَهُ ، وشَهِدَ شاهدا عَدلٍ نسَكْنا بشَهادتِهِما.....

الراوي : حسين بن الحارث الجدلي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2338 | خلاصة حكم المحدث : صحيح

ஒருமுறை மக்காவின் ஆளுநர் உரை நிகழ்த்தினார் அப்போது அவர் ஹஜ் வழிபாடுகளைப் பிறையைப் பார்த்த பின்னரே நிறைவேற்ற வேண்டும்.

பிறையை நாங்கள் பார்க்கவில்லையென்றால் நீதமான இரு ஆண்கள் பிறை கண்டதாக சாட்சி சொல்ல வேண்டும் அவ்விருவரின் சாட்சியை வைத்து ஹஜ் வழிபாடுகளை செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் எங்களிடம் உடன்படிக்கை செய்தார்கள்.

( அப்துல்லாஹ் பின் உமர் தன்னுடைய உரையில் இதை அறிவித்தார்கள் ) என ஹுஸைன் பின் அல்ஹாரிஸ்  அல்ஜதலி ( ரஹ் ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 2338 தரம் : ஸஹீஹ்


சிறந்த ஸஹர் உணவு..

نِعمَ سحورُ المؤمنِ التَّمرُ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2345 | خلاصة حكم المحدث : صحيح

பேரீச்சம் பழம் இறை நம்பிக்கையாளரின் ஸஹர் உணவில் மிக நல்லதாகும் என நபி ஸல் கூறினார்கள் என்று அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2345 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை 

كان النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ إذا أراد سفرًا قال اللهم إني أعوذُ بكَ مِنْ وعثاءِ السفرِ وكآبةِ المُنقلبِ والحَورِ بعد الكونِ ودعوةِ المظلومِ وسوءِ المنظرِ في الأهل والمالِ وإذا رجع قال مثل ذلك إلا أنه يقولُ وسوءِ المنظرِ منَ الأهلِ والمالِ

الراوي : عبدالله بن سرجس | المحدث : ابن جرير الطبري | المصدر : مسند علي
الصفحة أو الرقم: 95 | خلاصة حكم المحدث : صحيح

நபி ஸல் அவர்கள் பயணம் புறப்படும்போது 

" அல்லாஹும்ம இன்னீ அ ஊது பிக்க மின் வ உஸாயிஸ் ஸஃபரி, வ க ஆபத்தில் முன்கலபி, வல்ஹவரி பஅதல் கவரி, வ தஅவத்தில் மழ்லூமி, வ சூயில் மன்ழரி ஃபில் அஹ்லி வல்மால் "

இறைவா பயணத்தின் சிரமங்களிலிருந்தும், துயரத்தோடு திரும்பி வருவதிலிருந்தும் ,வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்தும் , அ நீதிக்குள்ளானவனின் ( சாபப்) பிரார்த்தனைக்கு உள்ளாவதிலிருந்தும், குடும்பத்திலும், செல்வத்திலும் தீய மாற்றங்கள் நிகழ்ந்துவிடுவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன் என்று கூறுவார்கள் என அப்துல்லாஹ் பின் சர்ஜிஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அலீ 95 தரம் : ஸஹீஹ்


பெற்றோர்க்கு நன்மை செய்ய வேண்டும்

عَنْ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا ثُمَّ دَخَلَ النَّارَ مِنْ بَعْدِ ذَلِكَ، فَأَبْعَدَهُ اللَّهُ وَأَسْحَقَهُ 

الراوي : أُبَيِّ بْنِ مَالِكٍ | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم :19027| خلاصة حكم المحدث : إسناده صحيح

தன் பெற்றோரில் இருவரை அல்லது அவர்களில் ஒருவரையேனும் ( நன்மைகள் செய்து ) அடைந்தவர் அதற்குப் பின்பு நரகத்தில் நுழைந்தால் அவரை அல்லாஹ் அதிலிருந்து தூரமாக்கி அவரை நரகத்தை விட்டும் வெளியேற்றவும் செய்கிறான் என்று நபி ஸல் கூறியதாக அபி பின் மாலிக் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 19027 தரம் : ஸஹீஹ்


அணிந்திருக்கும் தங்க நகைகளுக்கு ஜகாத் கடமை

[ عن ] عائشةَ ، قالَت : دخلَ عليَّ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ فرأى في يديَّ فتَخاتٍ من وَرِقٍ ، فقالَ: ما هذا يا عائشةُ ؟ ، فقلتُ: صنعتُهُنَّ أتزيَّنُ لَكَ يا رسولَ اللَّهِ ، قالَ: أتؤدِّينَ زَكاتَهُنَّ؟ قلتُ: لا ، أو ما شاءَ اللَّهُ ، قالَ: هوَ حَسبُكِ منَ النَّارِ
الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 1565 | خلاصة حكم المحدث : صحيح

ஒருமுறை அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் என்னிடம் வந்தார்கள் அப்போது என் இருகைகளின் விரல்களில் பெரிய வெள்ளி மோதிரங்கள் இருப்பதைப் பார்த்தார்கள். உடனே அவர்கள் ஆயிஷா ! இது என்ன ? என்று கேட்டார்கள் அதற்க்கு நான்

அல்லாஹ்வின் தூதரே உங்களுக்கு முன் நான் என்னை அலங்கரித்துக்கொள்ள அணிந்து கொண்டேன் என்று கூறினேன்.

அப்போது அவர்கள் இவற்றுக்குரிய ஜகாத்தை நீ நிறைவேற்றுகின்றாயா ? என்று கேட்டார்கள் அதற்க்கு நான் இல்லை அல்லது இறைவன் நாடியவாறு பதில் கூறினேன்.

அப்போது நபி ஸல் அவர்கள் " நரகத்தில் நீ நுழைவதார்க்கு இது உனக்குப் போதுமாகும் என்று கூறினார்கள் என அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1565 தரம் : ஸஹீஹ்


நம்பகமானவர் யார்...?

المستشارُ مؤتمنٌ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2822 | خلاصة حكم المحدث : صحيح

ஆலோசனை கேட்கப்படுபவர் ( பிறரால் ) நம்பகமானவர் என்று கருதப்படுபவர் ஆவார் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2822 தரம் : ஸஹீஹ்


ஸகாத் தர்மத்தை இருவர்களுக்கு கொடுக்க தடை..

لا تحلُّ الصَّدقةُ لغنيٍّ ولا لذي مِرَّةٍ سَوِيٍّ

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 1634 | خلاصة حكم المحدث : صحيح

செல்வரும், உழைப்பதற்க்கு உடலில் வலிமை உள்ளவரும் ஸகாத் ( தர்மத்தை) பெற்றுக்கொள்ள அனுமதி இல்லை என்று நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 1634 தரம் : ஸஹீஹ்


மூன்று வகையான கைகள் பற்றின சிறப்பு.

الأيدي ثلاثةٌ فَيدُ اللَّهِ العُليا ويدُ المُعطي الَّتي تَليها ويدُ السَّائلِ السُّفلَى فأعطِ الفضلَ ولا تعجَزْ عن نفسِكَ

الراوي : مالك بن نضلة الجشمي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1649 | خلاصة حكم المحدث : صحيح 

மூன்று வகையான கைகள் உள்ளன அவை

1. அல்லாஹ்வின் கை அது மிகவும் உயர்ந்தது.

2. தர்மம் கொடுப்பவரின் கை அது அல்லாஹ்வின் கைக்கு அடுத்து இருக்கிறது.

3. யாசிப்பவரின் கை அது மிகவும் கீழே இருக்கிறது 

உன் தேவைக்குப் போக எஞ்சியதை தர்மம் செய் தர்மம் செய்யாதே என்று உன் மனம் சொன்னால் அதற்க்கு மாற்றம் செய் என்று நபி ஸல் கூறியதாக மாலிக் பின் நழ்லா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவுத் 1649 தரம் : ஸஹீஹ்


விபச்சாரத்தின் பங்கு..!

أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ قالَ لِكلِّ ابنِ آدمَ حظُّهُ منَ الزِّنا بِهذِه القصَّةِ قالَ واليدانِ تزنيانِ فزناهما البطشُ والرِّجلانِ تزنيانِ فزناهما المشيُ والفمُ يزني فزناهُ القبلُ.

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 2153 | خلاصة حكم المحدث : حسن

ஆதமின் மகன் ஆகிய ஒவ்வொரு மனிதனுக்கும் விபச்சாரத்தின் பங்கு உண்டு. இரு கைகளும் விபச்சாரம் செய்கின்றன.அவ்விரண்டின் விபச்சாரம்  என்பது தவறான தொடுதல் ஆகும்.

இரு கால்களும் விபச்சாரம் செய்கின்றன அவ்விரண்டின் விபச்சாரம்  என்பது தவறானவற்றுக்காக நடப்பதாகும்.

வாய் விபச்சாரம் செய்கின்றது அதன் விபச்சாரம் என்பது முத்தமிடுவதாகும் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2153 தரம் : ஹசன்


ஜகாத் எங்கு வசூல் செய்யப்படும்..?

لا جَلَبَ ، و لا جَنَبَ ، ولا تُؤخَذُ صدقاتُهمْ إلَّا في دُورِهِمْ

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 7484 | خلاصة حكم المحدث : صحيح

ஜகாத்தை ( கட்டாய தர்மத்தை) வசூலிப்பவர் ஒரிடத்தில் இருந்துகொண்டு ஆளனுப்பி ஜகாத் பொருள்களைக் கொண்டு வரச் செய்யும் முறை இஸ்லாத்தில் கிடையாது.

அவ்வாறே, பொருளின் உரிமையாளர் அதைத் தொலைவிற்கு எடுத்துச் சென்று ஜகாத் வசூலிப்பவர் தம்மைத் தேடிவரச் செய்வதும் இஸ்லாத்தில் கிடையாது என்று நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 7484 தரம் : ஸஹீஹ்


ஜமாஅத் தொழுகையின் நன்மைகள்

إنه من قام مع الإمامِ ، حتى ينصرفَ ، كُتِبَ له قيامُ ليلةٍ

الراوي : أبو ذر الغفاري | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2417 | خلاصة حكم المحدث : صحيح

யார் இமாமுடன் தொழுகையை முடிக்கும்வரை நின்று தொழுகிறாரோ அவருக்கு இரவு முழுவதும் நின்று தொழுத நன்மை கணக்கிடப்படும் என்று நபி ஸல் கூறியனார்கள் என அபூதர் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் ஜாமி 2417 தரம் : ஸஹீஹ்


ரமலான் கடைசி பத்து இரவுகள்

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ : كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوقِظُ أَهْلَهُ فِي الْعَشْرِ الْأَوَاخِرِ مِنْ شَهْرِ رَمَضَانَ ، وَكُلَّ صَغِيرٍ وَكَبِيرٍ يُطِيقُ الصَّلَاةَ " . 
الحكم على المتن: صحيح لغيره

ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் நபி ஸல் அவர்கள் தமது குடும்பத்தினரை ( வணக்க வழிப்பாடுகள் செய்ய ) இரவிலே எழுப்பி விடுவார்கள். தொழக்கூடிய ஆற்றல் இருக்கும் அனைத்து சிறியவர்களையும் பெரியவர்களையும் எழுப்பி விடுவார்கள் என்று அலீ ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : அல்முஃஜமுல் அவ்ஸத் லிதப்ரானி 7621 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


பிறர் நமக்கு உணவு அளித்தால்

كان إذا أفطرَ عندَ قومٍ قال : أَفْطَرَ عندَكُمُ الصَّائِمُونَ ، و أكلَ طَعَامَكُمُ الأَبْرَارُ ، و تنزلَتْ عَلَيْكُمُ الملائكةُ

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الجامع
الصفحة أو الرقم: 4677 | خلاصة حكم المحدث : صحيح

உங்களிடம் நோன்பாளிகள் நோன்பு திறக்கட்டும் நல்லோர்கள் உங்களது உணவுகளை சாப்பிடட்டும் வானவர்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்யட்டும் என்று நபி ஸல் ச அத் பின் உபைதுல்லாஹ் ( ரலி ) வீட்டில் தமக்கு விருந்து அளித்த போது அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள் என்று அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 4677 தரம் : ஸஹீஹ்


தர்மம் எங்கு இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

إنَّ الصَّدقةَ على المسْكينِ صدقةٌ وعلى ذي الرَّحمِ اثنتانِ صدَقةٌ وصِلةٌ

الراوي : سلمان بن عامر الضبي | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2581 | خلاصة حكم المحدث : صحيح

ஏழை ஒருவருக்குச் செய்யும் தர்மம் ஒர் தர்மத்தின் ( நன்மையை பெற்று தரும் ) அதனையே நெருங்கிய உறவினருக்கு செய்தால் அவை இரண்டு தர்மம் ஆகும் 1. தர்மம் 2.உறவினரை ஆதரித்தல் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என ஸல்மான் பின் ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 2581 தரம் : ஸஹீஹ்


ஜகாத் வசூலிப்பவர் பேண வேண்டிய ஒழுங்குகள்

منِ استعملناهُ على عملٍ فرزقناهُ رزقًا فما أخذَ بعدَ ذلِكَ فَهوَ غُلولٌ

الراوي : بريدة بن الحصيب الأسلمي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2943 | خلاصة حكم المحدث : صحيح

நாம் எவரை ஒரு வேலைக்குப் பணியாளராக நியமித்து அதற்குரிய ஊதியத்தையும் அவருக்கு நாம் வழங்குகிறோமோ அதற்க்குப் பிறகும் அவர் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொண்டால் அது மோசடியாகும் என்று  நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் புரைதா அவர்கள் தம் தந்தை புரைதா ( ரலி ) மூலமாக அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2943 தரம் : ஸஹீஹ்


இறைவனை முன் நிறுத்தி ஒருவர் நம்மீடத்தில் யாசித்தால்...?

...أفأخبرُكُم بشرِّ النَّاسِ منزلةً ؟ قالوا : نعَم يا رسولَ اللَّهِ ، قالَ : الَّذي يَسألُ باللَّهِ ولا يُعطي بِهِ
الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد

الصفحة أو الرقم: 3/359 | خلاصة حكم المحدث : إسناده صحيح

...தகுதியால் மக்களில் மோசமானவர் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா ? என்று நபி ஸல் அவர்கள் தோழர்களிடத்தில் கேட்க ஆம் ! அறிவியுங்கள் என்று கூறினர்.

அப்போது நபி ஸல் அவர்கள் " 
அல்லாஹ்வின் பெயரால் தர்மம் கேட்கப்பட்டும் அவனுக்காக எதுவும் வழங்காதவர் தான் அவர் என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 3/359 தரம் : ஸஹீஹ்


நேர்ச்சை அல்லது கடமையான நோன்பை தவறவிட்டவர்களுக்காக நோன்பு நோற்றல்.

عنِ ابنِ عبَّاسٍ، أنَّ امرأةً ركِبتِ البحرَ فنذَرَت إن نجَّاها اللَّهُ أن تصومَ شهرًا، فنجَّاها اللَّهُ فلم تَصُم حتَّى ماتَت فجاءتِ ابنتُها أو أُختُها إلى رسولِ اللَّهِ -صلَّى اللَّهُ عليهِ وعلَى آلِه وسلَّمَ- فأمرَها أن تصومَ عَنها .

الراوي : عبدالله بن عباس | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 663 | خلاصة حكم المحدث : صحيح على شرط الشيخين

ஒரு பெண் கடலில் பயணித்தார் அப்போது அவர் வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பாதுகாப்பாகத் தன்மைக் கரை சேர்த்தால் ஒரு மாதம் நோன்பு நோற்பேன் என்று நேர்ச்சை செய்தார்.

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் அவரைப் பாதுகாப்பாகக் கரை சேர்த்தான் ஆனால் அப்பெண் நோன்பு நோற்காமல் இறந்து விட்டார்

அப்போது அவருடைய இரத்த உறவுக்காரப் பெண் ஒருவர் நபி ஸல் அவர்களிடம் வந்து நடந்ததை எடுத்துரைத்தார் நபியவர்கள் 

அவர் சார்பாக நீ நோன்பு வை என்று கூறினார்கள். என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 663 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை

قالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: اللَّهُمَّ مُصَرِّفَ القُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا علَى طَاعَتِكَ.

الراوي : عبدالله بن عمرو | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2654 | خلاصة حكم المحدث : [صحيح]

உள்ளங்களைத் திருப்பக்கூடியவனே ! எனக்கு ( உன்னை ) வழிபடுவதின் மீது என் உள்ளத்தைத் திருப்பி வை என்று நபி ஸல் அவர்கள் பிரார்த்தித்துவந்தாக அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2654 தரம் : ஸஹீஹ்


நோன்பு பெருநாள் தர்மம்

زَكاةَ الفطرِ طُهرةً للصَّائمِ منَ اللَّغوِ والرَّفثِ وطعمةً للمساكينِ من أدَّاها قبلَ الصَّلاةِ فَهيَ زَكاةٌ مقبولةٌ ومن أدَّاها بعدَ الصَّلاةِ فَهيَ صدقةٌ منَ الصَّدقاتِ
الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1609 | خلاصة حكم المحدث : حسن 

ஸதகத்துல் பித்ரு( நோன்பு பெரு நாள் தர்மம் ) வீண் பேச்சுகள்,கெட்ட பேச்சுகள் ஆகியவற்றை விட்டு நோன்பாளியைப் தூய்மைப்படுத்த கூடியதாகும். யார் அதனை தொழுகைக்கு ( பெரு நாள் ) முந்தி நிறைவேற்றுகிறாரோ அது ஒப்பு கொள்ளப்பட்ட ஜகாத் தர்மமாக இருக்கும். யார் அதனை ( பெரு நாள் ) தொழுகைக்கு பிந்தி நிறைவேற்றுகிறாரோ அது சார்தான தர்மமாகவே கணக்கி எடுக்கப்படும் என்று நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1609 தரம் : ஹசன்


ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் வைப்பது

من صامَ ستَّةَ أيَّامٍ بَعدَ الفطرِ كانَ تَمامَ السَّنةِ { مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا }

الراوي : ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 1402 | خلاصة حكم المحدث : صحيح

யார் ரமலானின் ஈதுப் பெரு நாளுக்குப் பிறகு ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் ஆண்டு முழுவதும் நோன்பு வைத்தவர் போன்றாவார். யார் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவர் அது போன்று பத்து நன்மைகளைப் பெறுவார் என நபி ஸல் கூறியதாக தவ்பான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 1402 தரம் : ஸஹீஹ்


நோன்பின் போது தாகம் மற்றும் வெப்பத்தை தணிக்க குளித்துகொள்வது

قالَ أبو بكرٍ قالَ الَّذي حدَّثني لقد رأيتُ رسولَ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِهِ وسلَّمَ بالعَرْجِ يصبُّ على رأسِهِ الماءَ وهوَ صائمٌ منَ العطشِ أو منَ الحرِّ

الراوي : بعض أصحاب النبي صلى الله عليه وسلم | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 1472 | خلاصة حكم المحدث : صحيح على شرط الشيخين

நபி  ஸல் அவர்களை நோன்பு வைத்த நிலையில் தாகம் மற்றும் வெப்பத்தினை தணிக்க தனது தலையின் மீது தண்ணீர் ஊற்றுவதை நான் பார்த்தேன் என்று நபித்தோழர்களில் ஒருவர் கூறினார் என அபூபக்கர் பின் அப்துர் ரஹ்மான் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 1472 தரம் : ஸஹீஹ்


நோன்பை விடுவதற்க்கு சலுகை அளிக்கபட்டவர்கள்

إنَّ اللَّهَ وضعَ عنِ المسافرِ الصوم وشطرَ الصَّلاةِ وعنِ الحاملِ أوِ المُرضعِ الصَّومَ أوِ الصِّيامَ ....

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 715 | خلاصة حكم المحدث : حسن صحيح

அல்லாஹ் பயணிக்கு நோன்பை விடுவதற்க்கும் தொழுகையை கஸ்ர் (சுரைக்கி தொழுவதவதற்க்கும்) சலுகையளித்துள்ளான். அதைபோன்று கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்க்கு சலுகையளித்துள்ளான் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 715 தரம் : ஹசன் ஸஹீஹ்

குறிப்பு : இவர்கள் வேறு ஒர் நாட்களில் விடுபட்ட நோன்பை எடுத்துவைக்க வேண்டும்.


உபரியான நோன்பின் சட்டங்கள்

لا تصوموا يومَ الجُمُعةِ ، إلا وقبلَه يومٌ ، أو بعدَه يومٌ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 7356 | خلاصة حكم المحدث : صحيح |

வெள்ளிக்கிழமை மட்டும் நீங்கள் நோன்பு வைக்காதீர்கள் அதற்க்கு முன்னர் ஒரு நாள் அல்லது அதற்க்கு பின்னர் ஒரு நாள் நோன்பு இருந்தாலே தவிர என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 7356 தரம் : ஸஹீஹ்


சாட்சியங்கள் அடிப்படையில் நோன்பு வைப்பது

عن ابنِ عمرَ قال : تراءَى النَّاسُ الهلالَ فأخبرتُ رسولَ اللهِ صلَّى اللهُ علَيهِ وسلَّمَ أنِّي رأيتُه فَصامَه وأمر النَّاسَ بصيامِهِ

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2342 | خلاصة حكم المحدث : صحيح

மக்கள் பிறையைப் பார்க்க முயற்சித்தார்கள் நிச்சயமாக நான் அதைப் பார்த்தேன் என்று நபி ஸல் அவர்களிடம் அறிவித்தேன். ஆகவே அவர்களும் அன்று நோன்பு நோற்றார்கள் அன்று நோன்பு வைக்கும் படி மக்களுக்கும் அவர்கள் கட்டளையிட்டார்கள் என்று இப்னு உமர் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2342 தரம் : ஸஹீஹ்


வாழ்வாதாரம் கொடுப்பது இறைவன் கைவசமே

افعلوا الخيرَ دهرَكم وتعرضوا لنفحاتِ رحمةِ اللهِ فإن للهِ نفحاتٍ من رحمتِه يصيبُ بها من يشاءُ من عبادِه وسلوا اللهَ أن يسترَ عوراتِكم وأن يُؤمِّنَ روعاتِكم

الراوي : أنس بن مالك | المحدث : الهيثمي | المصدر : مجمع الزوائد | الصفحة أو الرقم : 10/234 | خلاصة حكم المحدث : إسناده رجاله رجال الصحيح 

உங்களுடைய காலம் முழுவதும் நன்மை செய்து கொண்டே இருங்கள் அல்லாஹ்வின் கருணை வளங்களை பெற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் அல்லாஹ்வின் கருணையில் எண்ணிலடங்கா வளங்கள் உள்ளன . தன்னுடைய அடியார்களில் நான் நாடியவருக்கு அவற்றை அவன் வழங்குகிறான் என்று நபி ஸல் கூறியதாக அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : மஜ்மஉஸ்ஸவாயித் 10/234  தரம் : ஸஹீஹ்


ஷஃபான் நோன்பை நபி ஸல் விரும்பி வந்தார்கள்

عن عائشةَ قالَت : كانَ أحبَّ الشُّهورِ إلى رسولِ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ أن يَصومَهُ: شعبانُ، ثمَّ يصلُهُ برمضانَ

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2431 | خلاصة حكم المحدث : صحيح

நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2431 தரம் : ஸஹீஹ்


ஷாபான் நோன்பின் சிறப்பு

يا رسولَ اللَّهِ ! لم ارك تَصومُ شَهْرًا منَ الشُّهورِ ما تصومُ من شعبانَ ؟ ! قالَ : ذلِكَ شَهْرٌ يَغفُلُ النَّاسُ عنهُ بينَ رجبٍ ورمضانَ ، وَهوَ شَهْرٌ تُرفَعُ فيهِ الأعمالُ إلى ربِّ العالمينَ ، فأحبُّ أن يُرفَعَ عمَلي وأَنا صائمٌ

الراوي : أسامة بن زيد | المحدث : الألباني | المصدر : صحيح النسائي
الصفحة أو الرقم: 2356 | خلاصة حكم المحدث : حسن

இந்த மானத்தின் அதிகம் நோன்பு வைக்க என்ன காரணம் என்று நான் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் கேட்டேன் அதற்க்கு அவர்கள் ( ஷாபான் ) ரஜபுக்கும் ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும் . 

இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன.இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமல் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள் இதை உஸாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 2356 தரம் : ஹசன்


வெள்ளிக்கிழமை ஓதப்படும் சூராக்களின் சிறப்பு.

من قرأ سورةَ الكهفِ في يومِ الجمعةِ ، أضاء له من النورِ ما بين الجمُعتَينِ

الراوي : أبو سعيد الخدري | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 6470 | خلاصة حكم المحدث : صحيح

யார் ஸூரத்துல் கஹ்பு அத்தியாத்தை ஜும் ஆ அன்று ஒதுகிறாரோ அவருக்கு இரண்டு ஜும் ஆ க்களுக்கு மத்தில் ஒளி  ( அவர் மீது ) இலங்கிக் கொண்டிருக்கும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரீ ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 6470 தரம் : ஸஹீஹ்


நோய்க்கு இவைகளில் நிவாரணம் உண்டு

عليكُم بهذا العودِ الهنديِّ ، فإنَّ فيهِ سبعةَ أشفِيَةٍ ، يُسْتَعَطُ بهِ مِن العُذْرَةِ ، و يُلَدُّ بهِ من ذاتِ الجنبِ

الراوي : أم قيس بنت محصن | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 4082 | خلاصة حكم المحدث : صحيح

நீங்கள் இந்த இந்திய  (அதிமதுரம்)    குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன. அடிநாக்கு அழற்சிக்காக அதை(த் தூளாக்கி எண்ணெயில் குழைத்து) மூக்கில் சொட்டு மருந்தாக இடப்படும். (மார்புத் தசைவாதத்தால் ஏற்படும்) விலா வலிக்காக அதை வாயின் ஒரு பக்கத்தில் சொட்டு மருந்தாகக் கொடுக்கப்படும்.
என  நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்று உம்மு கைஸ் பின்த் மிஹ்ஸன்(ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 4082 தரம் : ஸஹீஹ்


நோய்க்கு இவைகளில் நிவாரணம் உண்டு

خَيرُ ماءٍ على وجْهِ الأرضِ ماءُ زَمْزَمَ ، فِيه طعامٌ من الطُّعْمِ ، و شِفاءٌ من السُّقْمِ ، ...

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 3322 | خلاصة حكم المحدث : صحيح

இந்த பூமியில் ஓடக்கூடிய தண்ணீர்களில் மிக சிறந்தது ஜம்ஜம் தண்ணீர் ஆகும். அது ஒர் வகை உணவாகும் நோய்க்கு நிவாரணமாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் ஜாமி 3322 தரம் : ஸஹீஹ்


நோய்க்கு இவைகளில் நிவாரணம் உண்டு

الشفاءُ في ثلاثةٍ : شربةُ عسلٍ ، وشرْطَةُ محْجمٍ ، وكَيَّةُ نارٍ ، وأنهى أمتي عن الكيِّ

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 3734 | خلاصة حكم المحدث : صحيح


மூன்றில் நிவாரணம் உண்டு.

தேன் அருந்துவது

இரத்தம் வெளியேற்றும் கருவியால் ( உடலில் ) கீறுவது

தீயால் சூடிட்டிக்கொள்வது ஆகியவையே அந்த மூன்றுமாகும்.( ஆனால்) தீயால் சூடிட்டுக்கொள்ள வேண்டாமென என் சமுதாயத்தாருக்கு நான் தடை விதிக்கிறேன் என்று நபி ஸல் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் ஜாமி 3734 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை

اللَّهمَّ أغفر لي ذَنبي خَطئي وعَمدي، ...

الراوي : عثمان بن أبي العاص الثقفي | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 927 | خلاصة حكم المحدث : صحيح

என் இறைவா ! எனது பாவத்தையும் நான் தவறுதலாக செய்ததையும் நான் நாடி செய்ததையும் எனக்கு மன்னித்தருள் என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்தார்கள் என உஸ்மான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 927 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை 

كانَ مِن دُعَاءِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ: اللَّهُمَّ إنِّي أَعُوذُ بكَ مِن زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ.

الراوي : عبدالله بن عمر | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2739 | خلاصة حكم المحدث : [صحيح] |

என் இறைவா ! நீ எனக்கு செய்த அருள் என்னிடமிருந்து நீங்குவதை விட்டும் 

நீ வழங்கிய பரிபூரண சுகம் அகன்று விடுவதை விட்டும் 

திடீரென நீ கண்டிப்பதை விட்டும் உனது எல்லா விதமான கோபத்தை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்தார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2739 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை 

أنَّ جِبْرِيلَ، أَتَى النبيَّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ فَقالَ: يا مُحَمَّدُ اشْتَكَيْتَ؟ فَقالَ: نَعَمْ قالَ: باسْمِ اللهِ أَرْقِيكَ، مِن كُلِّ شيءٍ يُؤْذِيكَ، مِن شَرِّ كُلِّ نَفْسٍ، أَوْ عَيْنِ حَاسِدٍ، اللَّهُ يَشْفِيكَ باسْمِ اللهِ أَرْقِيكَ.

الراوي : أبو سعيد الخدري | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2186 | خلاصة حكم المحدث : [صحيح]

  நபி ஸல் ( நோயுற்றிருந்த போது ) வானவர் ஜிப்ரீல் அலை அவர்கள் வந்து முஹம்மதே ! நோயுற்றிருக்கிறீர்களா ? என்றார்கள் அதற்க்கு நபி ஸல் அவர்கள் ஆம் என்றார்கள்.

அதற்கு ஜிப்ரீல் அலை அவர்கள் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள் 

அல்லாஹ்வின் பெயர் கூறி ஒதிப்பார்க்கிறேன். உமக்கு தொல்லை தரும் ஒவ்வொன்றிலிருந்தும் எல்லா மனிதர்களின் தீமையிலிருந்தும் பொறமைக்காரனிடமிருந்தும் , கண்களினால் ஏற்படும் தீமைகளிலிருந்தும் உம்மை அல்லாஹ் குணப்படுத்துவானாக 

இதை அபூ ஸயீதுல் குத்ரி ( ரலி ) அறிவிக்கிறார்கள் 

 நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2186 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை 

أنَّ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ كانَ يتعوَّذُ من خَمسٍ : منَ البُخلِ والجُبنِ ، وفِتنةِ الصَّدرِ ، وعَذابِ القَبرِ وسوءِ العَملِ

الراوي : عمر بن الخطاب | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم :145 | خلاصة حكم المحدث : إسناده صحيح

உமர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நபி (ஸல்) அவர்கள் கருமித்தனம், கோழைத்தனம், மனக்குழப்பம், கப்று வேதனை, நீண்ட ஆயுளின் தீங்கு ( தள்ளாமை ) ஆகிய ஜந்து தன்மைகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவார்கள்.

 நூல் : முஸ்னத் அஹ்மத் 145 தரம் : ஸஹீஹ்


நல்லவர் என்று சாட்சியம் அளித்தல்

أيُّما مسلمٍ شهِدَ لهُ أربعةٌ بِخيرٍ ، أدْخلَهُ اللهُ الجنةَ ، أو ثلاثةً أو اثْنانِ

الراوي : عمر بن الخطاب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2740 | خلاصة حكم المحدث : صحيح

 நபி ஸல் அவர்கள் கூறினாகள் :

முஸ்லிம் ஒருவரைப் பற்றி, அவர் நல்லவர் என நான்கு பேர் சாட்சியம் அளித்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைய செய்வான் என்று கூறினார்கள். 

நாங்கள் மூவர் சாட்சியம் அளித்தால் ? என்று கேட்டோம் அதற்கு நபி ஸல் அவர்கள் மூன்று பேர் சாட்சியம் அளித்தாலும் தான் என்றார்கள் தொடர்ந்து இருவர் சாட்சியம் அளித்தால் ? என நாங்கள் கேட்டதற்கு இரண்டு பேர் சாட்சம் அளித்தாலும் தான் என்றார்கள் .  இதை உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 2740 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை

كانَ يقولُ إذا صلَّى الصُّبحَ حينَ يسلِّمُ اللَّهمَّ إنِّي أسألُكَ عِلمًا نافعًا ورزقًا طيِّبًا وعملًا متقبَّلًا

الراوي : أم سلمة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 762 | خلاصة حكم المحدث : صحيح

நபி ஸல் அவர்கள் பஜ்ர் தொழுகை தொழுது முடித்த பிறகு பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்

என் இறைவா ! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியையும், தூய்மையான உணவையும், ஏற்று கொள்ளப்பட்ட அமலையும் உன்னிடம் வேண்டுகிறேன் இதை உம்மு ஸலமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 762 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை

....اللَّهمَّ زيِّنَّا بزينةِ الإيمانِ واجعَلنا هداةً مُهتدين.
الراوي : قيس بن عباد أو عبادة | المحدث : الألباني | المصدر : صحيح النسائي
الصفحة أو الرقم: 1305 | خلاصة حكم المحدث : صحيح

எங்கள் இறைவா ! ஈமானின் அலங்காரத்தைக் கொண்டு எங்களை அலங்கரி !

எங்களை நேர்வழி பெற்றவர்களாகவும் நேர்வழி காட்டுபவர்களாகவும் ஆக்கு என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்தார்கள் என கையீஸ் பின் இபாத் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் நஸாயீ 1305 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை

كانَ النبي صلَّى اللَّه عليه وسلم يدعو يقولُ ربِّ أَعِنِّي ولاَ تُعِن عليَّ وانصُرني ولاَ تنصر عليَّ وامْكُر لي ولاَ تمْكُر عليَّ واهدني ويسِّرِ الْهدى لي وانصرني على من بغى عليَّ ربِّ اجعلني لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مطواعًا لَكَ مخبتًا إليْكَ أوَّاهًا منيبًا ربِّ تقبَّل توبتي واغسل حوبتي وأجب دعوتي وثبِّت حجَّتي وسدِّد لساني واهدِ قلبي واسلُل سخيمةَ صدري

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي
الصفحة أو الرقم: 3551 | خلاصة حكم المحدث : صحيح

என் இறைவா ! ( என் எதிரிகள் விஷயத்தில் ) எனக்குச் சாதகமாக உதவி செய் ! எனக்கு எதிராக உதவி செய்து விடாதே !

( நன்மைகளைச் செய்வதற்கு ) எனக்கு உதவி செய் ! எனக்கெதிராக உதவி செய்து விடாதே !

எனக்கு சாதகமாக சூழ்ச்சி செய் ! எனக்கு எதிராக சூழ்ச்சி செய்து விடாதே !

எனக்கு நேர்வழிகாட்டு ! நேர்வழியை எனக்கு இலகுவாக்கிக்கொடு!

என் மீது அநியாயம் செய்பவருக்கு எதிராக எனக்கு உதவி செய் !

என் இறைவா !  உனக்கு அதிகம் நன்றி செலுத்துபவனாக,அதிகம் பயந்தவனாக,உனக்கு அதிகம் கீழ்ப்படிந்தவனாக,அதிகம் அச்சமுடையவனாக,உன்னை ஆக்கி அருள் புரிவாயாக.

என் இறைவா ! என்னுடைய பாவங்களை மன்னித்து அருள் ! 

என் பிரார்த்தனையை ஏற்றுகொள் ! என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டு !

எனது நாவை நேர்மைப்படுத்து ! என் உள்ளத்திலுள்ள குரோதத்தை நீக்கிவிடு என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்தார்கள் என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3551 தரம் : ஸஹீஹ்


ஷஹீதுகளுக்கு கிடைக்கும் சிறப்புகள்

للشَّهيدِ عندَ اللَّهِ ستُّ خصالٍ يُغفَرُ لَهُ في أوَّلِ دَفعةٍ من دمِهِ، ويَرى مقعدَهُ منَ الجنَّةِ، ويُجارُ من عذابِ القبرِ، ويأمنُ منَ الفزعِ الأَكْبرِ، ويُحلَّى حُلَّةَ الإيمانِ، ويزوَّجُ منَ الحورِ العينِ ويُشفَّعُ في سبعينَ إنسانًا من أقاربِهِ

الراوي : المقدام بن معدي كرب | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 2274 | خلاصة حكم المحدث : صحيح

போர்க்களத்தில் எதிர்களால் வெட்டிக் கொல்லப்படும் இறை நம்பிக்கையாளர்களுக்கு ஆறு சிறப்பம்சங்கள் கிடைக்கின்றன.

முதலாம் இரத்தத் துளியுடன் அவர் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

அவருடைய சுவனத்தின் இருப்பிடத்தை கண்ணால் காண்கின்றர்.

மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்.

மறுமையின் பெருந்திடுக்கங்களிலிருந்து பாதுகாப்பு பெறுகிறார்.

 நம்பிக்கையின் அணிகலன்கள் அனுவிக்கப்பட்டு ஹூருல் ஈன்களுடன் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்.

அவரது நெருங்கிய உறவினர்களுக்கு எழுபது பேருக்குப் பரிந்துரை செய்து சொர்க்கத்தில் சேர்த்து நுழைய செய்கிறார் என நபி ஸல் கூறியதாக மிக்தாம் இப்னு மஃதீ (ரலி)

 நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 2274 தரம் : ஸஹீஹ்


பெண்கள் தொழும்  இடத்திலேயே  மிக சிறந்த இடம் வீடு ஆகும்.

 لا تمنعوا نساءَكمُ المساجدَ وبيوتُهنَّ خيرٌ لَهنَّ

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 567 | خلاصة حكم المحدث : صحيح

பள்ளிவாசல்காளை விட்டு பெண்களைத் தடுக்காதீர்கள் அவர்களுக்கு அவர்களது வீடுகள் தான் சிறந்த இடமாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என இப்னு உமர் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 567 தரம் : ஸஹீஹ்


அமல்கள் ஏதுவாயினும் பித்அத்தாக இருப்பின் அவை அங்கீகரிக்கபடாது

مَن أحدثَ حدَثًا ، أو آوى مُحدِثًا فعليهِ لعنةُ اللَّهِ والملائِكَةِ والنَّاسِ أجمعينَ ، لا يُقبَلُ منهُ صرفٌ ولا عدلٌ...

الراوي : أبو حسان الأعرج | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم 959 | خلاصة حكم المحدث : إسناده صحيح

ஒருவன் ( மார்க்கத்தின் பெயரால் )புதிதாக ஒன்றை உருவாக்கினால் அல்லது புதிதாக உருவாக்கியவனுக்கு ஆதரவளித்தால் அவன் மீது அல்லாஹ்வின் சாபமும்,வானவர்களின் சாபமும்,( நல்)மக்கள் அனைவரின் சாபமும் உண்டாகும்.அவனுடைய கடமையான வழிபாடோ ,உபரியான வழிப்பாடோ அவனிடம் இருந்து ஏற்கப்படாது என்று நபி ஸல் கூறினார்கள் என அலீ ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 959 தரம் : ஸஹீஹ்


குர்பானிப் பிராணியை வாங்கும்போது கவனிக்கவேண்டியவை

أمَرنا رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم أنْ نستشرفَ العينَ والأُذنَ

الراوي : علي بن أبي طالب | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 5920 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

(குர்பானிப் பிராணியை வாங்கும்போது அவற்றின் ) கண்களையும், காதுகளையும் அதற்கு மேலுள்ளதையும் ( அதாவது கொம்பையும் ) கவனித்துத் தேர்வு செய்யுமாறு  நபி ஸல் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என அலீ ( ரலி ) அறிவிக்கிறார்கள் .

நூல் : ஸஹீஹ் இப்னுஹிப்பான் 5920 தரம் : ஸஹீஹ்


பிறரிடம் அழகிய முறையில் பழக வேண்டும் 

اسْمَحْ يُسْمَحْ لكَ

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 2233 | خلاصة حكم المحدث : إسناده صحيح

நீ பெருந்தன்மையோடு நடந்துகொள் உன்னிடம் பெருந்தன்மையாக நடந்துகொள்ளப்படும் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 2233 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை

 لم يكنْ رسولُ اللهِ صلى الله عليه وسلم يَدَعُ هؤلاء الدعواتِ حينَ يُمسي، وحينَ يُصبِحُ :اللهم إني أسألُك العافيةَ في الدنيا والآخرةِ ، اللهم إني أسألُك العفوَ والعافيةَ في ديني ودنياي وأهلي ومالي ، اللهم استرْ عورتي وآمنْ روعاتي ، اللهم احفظْني مِن بين يديَّ ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي ، وأعوذُ بعظمتِك أن أُغتالَ مِن تحتي.

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود
الصفحة أو الرقم: 5074 | خلاصة حكم المحدث : صحيح

நபி ஸல் அவர்கள் காலையிலும் மாலையிலும் பின்வரும் பிரார்த்தனையை கேட்க்காமல் இருக்க மாட்டார்கள்:

என் இறைவா !  நான் உன்னிடம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பையும் பூரண சுகத்தையும் கேட்கிறேன்.

என் இறைவா ! நான் உன்னிடம் மன்னிப்பையும் எனது மார்கத்திலும் உலகத்திலும் எனது குடும்பத்திலும் எனது பொருளிலும் பூரண சுகத்தைக் கேட்கிறேன்.

என் இறைவா ! எனது அந்தரங்களை மறைத்து விடு ! எனது அச்சங்களுக்குப் பாதுகாப்பு வழங்கு !

என் இறைவா ! எனக்கும் முன்னும் எனக்கு பின்னும் என் வலப்பக்கத்திலிருந்தும் என் இடப்பக்கத்திலிருந்தும் எனக்கு மேலிருந்தும் என்னைப் பாதுகாத்துக்கொள்!

உனது மகத்துவத்தைக் கொண்டு எனக்குக் கீழிருந்து நான் அழிக்கப்படுவதை விட்டு பாதுகாவல் தேடுகிறேன் 

இதை  அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 5074 தரம் : ஸஹீஹ்


வசதி உள்ளவர் ஹஜ்யை தாமதப்படுத்த கூடாது

من أرادَ الحجَّ فليتعجَّلْ

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1732 | خلاصة حكم المحدث : حسن 

ஹஜ் செய்ய விரும்புகின்றவர் விரைவில் செய்யட்டும் என்று நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1732 தரம் : ஹசன்


அழகிய பிரார்த்தனை

اللهمَّ أستهديك لأَرْشَدِ أمري وأعوذُ بك مِن شرِّ نفسي

الراوي : عثمان بن أبي العاص وامرأة من قيس | المحدث : الهيثمي | المصدر : مجمع الزوائد | الصفحة أو الرقم : 10/180 | خلاصة حكم المحدث : رجاله رجال الصحيح

என் இறைவா ! எனது காரியங்களில் மிக நேரானதை அடைவதற்கு உன்னிடம் நான் நேர்வழி தேடுகிறேன். என் உள்ளத்தின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்தார்கள் என உஸ்மான் பின் அபீ அல் ஆஸ்( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : மஜ்மஉஸ் ஸவாயித் 10/180 தரம் : ஸஹீஹ்


நரகம் தீண்டாத அந்த மூன்று கண்கள்

ثلاثَةٌ لا تَرَى أَعْيُنُهُمُ النارَ يومَ القيامةِ : عَيْنٌ بَكَتْ من خَشْيَةِ اللهِ ، و عَيْنٌ حَرَسَتْ في سبيلِ اللهِ ، و عَيْنٌ غَضَّتْ عن مَحارِمِ اللهِ

الراوي : معاوية بن حيدة وابن عباس وأبو ريحانة وأبو هريرة وأنس بن مالك | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 2673 | خلاصة حكم المحدث : صحيح بمجموع طرقه

மூன்று கண்களை நரகம் தீண்டாது: 

1.அல்லாஹ்வின் பாதையில் ( போரின் ) போது கண்விழித்து பாதுகாத்த கண்கள்

2.அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் வடித்த கண்கள்

3.அல்லாஹ் தடுத்தவைகளை விட்டு தவிர்த்த கண்கள் என்று நபி ஸல் கூறியதாக முஆவியா ( ரலி ),இப்னு அப்பாஸ் ( ரலி),அபூ ரிஹானா (ரலி),அபூஹுரைரா ( ரலி),அனஸ் பின் மாலிக்( ரலி)  ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 2673 தரம் : ஸஹீஹ்


இவை அனைத்தும் ஒரே நாளில் செய்தவர் அடையும் நன்மை

خمسٌ من عمِلهنّ في يومٍ كتبهُ اللهُ من أهلِ الجنةِ : من عادَ مريضًا ، وشهدَ جنازةً ، وصامَ يوما ، وراحَ يومَ الجمعةِ ، وأعتقَ رقبةً

الراوي : أبو سعيد الخدري | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1023 | خلاصة حكم المحدث : إسناده صحيح رجاله ثقات

ஐந்து காரியங்கள் உள்ளன. ஒரு நாளில் அதனை யார் நிறைவேற்றுகின்றாரோ அல்லாஹ் அவரை சொர்க்கவாதிகளில் எழுதிவிடுகிறான். அவர் நோயாளியை விசாரிக்கவேண்டும். ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும். அன்றைய தினம் நோன்பு நோற்றிருக்க வேண்டும். ஜும்ஆவிற்கு முன்னேரத்தில் செல்ல வேண்டும். அடிமையை உரிமைவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஸயீத் அல்குத்ரீ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 1023 தரம் : ஸஹீஹ்


நாவை நல்லதுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்

جاءَ أعرابيٌّ إلى النبيِّ – صلى اللهُ عليه وعلى آلهِ وسلمَ – فقالَ : يا رسولَ اللهِ علمنِي عملًا يدخلنِي الجنةَ ؟ فقال : لئنْ كنتَ أقصرتَ الخطبةَ ، لقد أعرضتَ المسألةَ : اعتقْ النسمةَ وفكَ الرقبةَ فقالَ : يا رسولَ اللهِ : أوَ ليستْ بواحدةٍ ، قال : لا إنَّ عتقَ النسمةِ أن تفردَ بعتقِها ، وفكُ الرقبةِ أن تعينَ في عتقها ، والمنحةُ الوكوفُ والفيءُ على ذي الرحمِ الظالمِ ، فإنْ لمْ تطقْ ذلكَ فأطعمْ الجائعَ ، واسقْ الظمآنَ ، وأمرْ بالمعروفِ ، وانهَ عن المنكرِ ، فإنْ لم تطقْ ذلكَ فكفَّ لسانَك إلا من الخيرِ .

الراوي : البراء بن عازب | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 141 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டார். அதற்கவர்கள், நீர் மிகச் சிறிய வார்த்தையைக் கூறினாலும் நிச்சயமாக மிகப் பெரிய செய்தியைக் கேட்டுவிட்டீர்! -- ஜீவன்களை உரிமை விடு! அடிமையை உரிமை விடு! என்றார்கள். அதற்கவர், இவ்விரண்டும் ஒன்றில்லையா? என்று கேட்டார். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை, ஜீவன்களை உரிமை விடுவதென்பது நீ தனிப்பட்ட ரீதியில் உரிமை வழங்குவதாகும். அடிமையை உரிமை விடுவதென்பது அதற்குரிய கிரயத்தை நீ கொடுப்பதாகும். மேலும் பால் கொடுக்கும் கால்நடைகளை பிறருக்குக் கொடு! பிரிந்து வாழும் உறவினர்களுடன் இணைந்து வாழவேண்டும். இதனைச் செய்ய உமக்கு சக்தியில்லை என்றால் பசித்தவருக்கு உணவளி! தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! இதற்கும் நீர் சக்தி பெறவில்லை என்றால் நன்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதவாறு உனது நாவை காத்துக் கொள்! என்றார்கள். என பரா இப்னு ஆஸிப் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 141 தரம் : ஸஹீஹ்


சிறந்த நீதிபதி

القضاةُ ثلاثةٌ : واحدٌ في الجنَّةِ ، واثنانِ في النَّارِ ؛ فأمَّا الَّذي في الجنَّةِ ، فرجلٌ عرفَ الحقَّ فقضى بهِ . ورجلٌ عرفَ الحقَّ ، فجارَ في الحكمِ ، فهوَ في النَّارِ ، ورجلٌ قضى للنَّاسِ على جهلٍ فهوَ في النَّارِ

الراوي : بريدة بن الحصيب الأسلمي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 3573 | خلاصة حكم المحدث : صحيح

மூன்று நீதிபதிகள். அதில் ஒருவர் சொர்க்கவாதி. இருவர் நரகவாதிகள். உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்குபவர் சொர்க்கவாதி. உண்மையை அறிந்திருந்தும் அதற்கு மாற்றமான தீர்ப்பு வழங்குபவரும், கல்வியறிவு இல்லாமல் மடைமையாக மக்களுக்குத் தீர்ப்பு வழங்குபவரும் நரகவாதிகள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என புரைதா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 3573 தரம் : ஸஹீஹ்


வயோதிகளும் ரமளானில் இறைவழிப்பாடு செய்யவேண்டும்

أنَّ رجلًا أتى النبيَّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ فقال : يا نبيَّ اللهِ إني شيخٌ كبيرٌ عليلٌ يشُقُّ عليَّ القيامُ فأْمُرْني بليلةٍ لعل اللهَ يوفِّقُني فيها ليلةَ القدرِ قال : عليكَ بالسابعةِ

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 2149 | خلاصة حكم 
المحدث : إسناده صحيح

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ! நான் பெரும் முதியவன் ; உடல் நிலை சரியில்லாமல் நோயுற்றிருக்கிறேன் ( ரமளானில் எல்லா இரவுகளிலும் ) நின்று வழிபடுவது எனக்கு பாரமாக இருக்கிறது எனவே ( ஏதேனும் குறிப்பிட்ட ) ஒர் இரவில் நின்று வழிபடுமாறு எனக்கு உத்தரவிடுங்கள் அந்த இரவில் ( நின்று வழிபட்டு) மகத்துவமிக்க இரவினைப் பெற்றுக் கொள்வதற்கு அல்லாஹ் எனக்கு வாய்ப்பளிக்கட்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது நபி ஸல் ( ரமளானில் கடைசிப் பத்தில் ) ஏழாம் இரவைப் பற்றிக்கொள்வீராக என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 2149 தரம் : ஸஹீஹ்


நோயாளிகளிடம் நடந்துகொள்ளும் முறை 

ما مِنْ عبدٍ مسلمٍ يعودُ مريضًا لم يَحضُرْ أجلُه فيقولُ سبعَ مراتٍ : أسألُ اللهَ العظيمَ ربَّ العرشِ العظيمِ أنْ يَشفيَكَ إلا عُوفيَ

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 2137 | خلاصة حكم المحدث : إسناده صحيح

ஒரு முஸ்லிமான அடியார் ( இறப்பின் ) தவணை நெருங்காத நோயாளி ஒருவரைச் சந்தித்து

" அஸ் அலுல்லாஹல் அழீம்,ரப்பல் அர்ஷில் அழீம்,அய்யஷ்ஃபியக்க " 

பொருள் : மகத்தான அர்ஷின் அதிபதியாகிய ,மகத்தான அல்லாஹ் உமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அவனிடம் நான் வேண்டுகிறேன் )என்று ஏழுமுறை கூறினால் அவருக்கு நிவாரணம் வழங்கப்பெறாமல் இருப்பதில்லை என்று நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ரலி அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 2137 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை 

أنَّ رسولَ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ كان يعوذُ حسنًا وحسينًا يقولُ : أُعيذكما بكلماتِ اللهِ التامةِ من كلِّ شيطانٍ وهامَّةٍ ومن كلِّ عينٍ لامَّةٍ وكان يقولُ : كان إبراهيمُ أبي يعوذُ بهما إسماعيلَ وإسحقَ

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/356 | خلاصة حكم المحدث : إسناده صحيح

நபி ஸல் அவர்களுடைய பேரர்களான ஹசன்,ஹுசைன் ஆகியோருக்காக இறைவனிடத்தில் பாதுகாப்புப் கோரி வந்தார்காள்:

உஈதுக்குமா பி கலிமாத்தில்லாஹித் தாம்மத்தி ,மின் குல்லி ஷைத்தானின் வ ஹாம்மத்தின் வ மின் குல்லி அய்னின் லாம்மத்தின்

பொருள் : அல்லாஹ்வின் முழுமையான ( குணமளிக்கும்) சொற்களைக் கொண்டு ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும் ,விஷக்கடியிலிருந்தும்,தீய எண்ணத்துடன் தீண்டும் ( பொறாமை) கண்ணிலிருந்தும் உங்களிருவருக்காக இறைவனிடம் பாதுகாப்பு கோருகிறேன்.இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 3/356 தரம் : ஸஹீஹ்


தந்தையின் சிறப்பு

لا يحلُّ لرجلٍ أن يُعْطِيَ العَطِيَّةَ ثم يرجعُ فيها إلا الوالدُ فيما يُعْطِي ولدَهُ ...

الراوي : عبدالله بن عباس وعبدالله بن عمر | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 7/242 | خلاصة حكم المحدث : إسناده صحيح 

ஒருவர் அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெறுவதற்கு அனுமதி இல்லை; ஒரு தந்தை தம் பிள்ளைக்குக் கொடுத்த அன்பளிப்பைத் தவிர... என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி) மற்றும் அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 7/242 தரம் : ஸஹீஹ்


நோயாளிகளிடம் நடந்துகொள்ளும் முறை

لا تُديموا النَّظرَ إلى المجذومينَ

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 2870 | خلاصة حكم 
المحدث : حسن صحيح

தொழு நோயாளிகளை வெறித்துப் பார்க்காதீர்கள் என நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 2870 தரம் : ஹசன் ஸஹீஹ்


நரகில் கொண்டு சேர்க்கும் செயல்கள்

الحياءُ منَ الإيمانِ، والإيمانُ في الجنَّةِ، والبَذاءُ منَ الجفاءِ، والجفاءُ في النَّارِ

الراوي : أبو بكرة نفيع بن الحارث | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 3392 | خلاصة حكم المحدث : صحيح

வெட்கம் ஈமானில் ஒரு பகுதி, ஈமான் சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். கெட்ட வார்த்தைகள் வெறுப்பையும் பிளவுவையும் ஏற்படுத்தும். வெறுப்பும் பிளவும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூபக்ரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 3392 தரம் : ஸஹீஹ்


விஷய ஜந்துகளை கண்டால் அடித்துகொன்றுவிட வேண்டும்

من ترك الحيَّاتِ مخافةَ طلبهِنَّ فليس مِنَّا ما سالمناهنَّ منذُ حاربناهُنَّ

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/328 | خلاصة حكم المحدث : إسناده صحيح

பழிவாங்கிவிடும் என அஞ்சி பாம்புகளை கொல்லாமல் விட்டவர் நம்மை சார்ந்தவர் அல்லர்.அவற்றை நாம் பகைத்துகொண்ட காலம் முதல் அவற்றுடன் நாம் சமரசம் செய்துகொண்டதே இல்லை என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 3/328 தரம் : ஸஹீஹ்


ரமளான் மாதத்தில் செய்யப்படும் உம்ராவின் சிறப்பு

 إذا كان رمضانُ ، فاعتَمِري فيهِ ، فإنَّ عُمرةً فيهِ تعدِلُ حَجَّةً

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2109 | خلاصة حكم المحدث : صحيح

ரமளான் வந்துவிட்டால் அதில் உம்ரா செய்துகொள், ஏனெனில் ரமளானில் உம்ரா செய்வதானது ஹஜ்ஜுக்கு நிகரான பலனுடையதாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 2109 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை 

..واهدني ويَسِّرْ الهُدَى إليَّ وانصرني على من بَغَى عليَّ ...

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/310 | خلاصة حكم 
المحدث : إسناده صحيح

( என் இறைவா !) என்னை நல்வழியில் செலுத்துவாயாக ! நல்வழியை எனக்கு எளிதாக்குவாயாக ! என்னிடம் வரம்பு மீறி நடப்பவருக்கெதிராக எனக்கு உதவி செய்வாயாக ! என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்தார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 3/310 தரம் : ஸஹீஹ்


அழகிய பிரார்த்தனை

اللَّهمَّ اجعلني لَكَ شاكرًا لَكَ ذاكرًا لَكَ راهبًا لَكَ مِطواعًا إليكَ مُخبتًا أو مُنيبًا 

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1510 | خلاصة حكم المحدث : صحيح

என் இறைவா ! உனக்கு அதிகம் நன்றி செலுத்தக்கூடியவனாக, உன்னை அதிகம் நினைவுகூருபவனாக,உன்னை அதிகம் அஞ்சுபவனாக, உனக்கு அதிகம் கட்டுப்படுபவனாக ,உன்னிடம் அதிகம் பிரார்த்திப்பவனாக உன் பக்கமே மீளக்கூடியவனாக என்னை ஆக்குவாயாக என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்தார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத்  1510 தரம் : ஸஹீஹ்


மூன்றை தவிர்த்தால் சுவனம்

من فارقَ الرُّوحُ الجسدَ وَهوَ بريءٌ من ثلاثٍ، دخلَ الجنَّةَ: منَ الْكبرِ، والغُلولِ، والدَّينِ

الراوي : ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 1971 | خلاصة حكم المحدث : صحيح

பெருமையடித்தல், போரில் கிடைத்த பொருட்களில் மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகிய மூன்றை விட்டும் நீங்கியவனாக மரணித்தவன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஸவ்பான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 1971 தரம் : ஸஹீஹ்


இவர்களை போல் நாம் இருக்க வேண்டும்

ما في النَّاسِ مِثْلُ رَجُلٍ آخِذٍ برأسِ فرَسِه، يُجاهِدُ في سبيلِ اللهِ عزَّ وجلَّ، ويَجتنِبُ شُرورَ النَّاسِ، ومِثْلُ آخَرَ بادٍ في نَعَمِه، يَقْري ضَيْفَه، ويُعطي حقَّه.

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/306 | خلاصة حكم المحدث : إسناده صحيح

( தபூக்கில் மக்களுக்கு உரை நிகழ்த்திய அ ந் நாளில் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் )

அந்த மனிதரைப் போன்று மக்களில் யாரும் இல்லை அவர் யாரென்றால் தமது குதிரையின் தலையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிகிறார்

மேலும் மக்களுக்குத் தீங்கிழைக்காமல் விலகியிருக்கிறார்.

இன்னொருவரை போன்றும் மக்களில் யாரும் இல்லை அவர் யாரென்றால் அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுடன் நாட்டுப் புறத்தில் வசிக்கிறார் மேலும் தம் விருந்தினரை உபசரித்து அவருக்கான உரிமையை வழங்குகிறார் என்று நபி ஸல் அவருடைய உரையில் கூறிபிட்டார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 3/306 தரம் : ஸஹீஹ்


கால்நடைகளுக்கு உரிய உரிமைகளை கொடுக்கவேண்டும் 

أردفَني رَسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ ، ذاتَ يومٍ خَلفَهُ ، فأسرَّ إليَّ حديثًا لا أُخبِرُ بِهِ أحدًا أبدًا وَكانَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ أحبُّ ما استترَ بِهِ في حاجتِهِ هدَفٌ ، أو حائشُ نَخلٍ ، فدخَلَ يومَ حائِطًا مِن حيطانِ الأَنصارِ ، فإذا جَملٌ قدِ أتاهُ فجَرجرَ ، وذَرِفَت عيناهُ - قالَ بَهْزٌ ، وعفَّانُ : فلمَّا رَأى النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ حَنَّ وذرِفَت عيناهُ - فمَسحَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ سراتَهُ وذِفراهُ ، فسَكَنَ ، فقالَ : مَن صاحبُ الجمَلِ ؟ فجاءَ فتًى منَ الأَنصارِ ، فقالَ : هوَ لي يا رسولَ اللَّهِ ، فقالَ : أما تتَّقي اللَّهَ في هذِهِ البَهيمةِ الَّتي ملَّكَكَها اللَّهُ ، إنَّهُ شَكا إليَّ أنَّكَ تجيعُهُ وتدئبُهُ

الراوي : عبدالله بن جعفر بن أبي طالب | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/189 | خلاصة حكم المحدث : إسناده صحيح
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் வாகனத்தில் என்னைத் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டு சென்றார்கள். அப்போது என்னிடம் இரகசியமாக ஒரு செய்தியை சொன்னார்கள் அதை நான் மக்களில் யாரிடமும் ஒருபோதும் சொல்லமாட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் இயற்கை கடனை நிறைவேற்றச் செல்லும் மறைவிடங்களிலேயே மேடு , அல்லது அடர்த்தியான பேரீச்சந்தோட்டமே அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது.
அவ்வாறே ஒரு நாள் அன்சாரிகளில் ஒருவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் நபி ஸல் நுழைந்தார்கள் அப்போது ஒர் ஒட்டகம் நின்றுகொண்டு இருந்தது அது நபி ஸல் அவர்களிடம் முனகிக்கொண்டே கண்ணீர் வடித்தது நபி ஸல் அவர்கள் அதன் முதுகையும் பின் தலையையும் தடவிக்கொடுத்தார்கள் அது அமைதியடைந்தது.

பின்னர் நபி ஸல் அவர்கள் இந்த ஒட்டகத்தின் உரிமையாளர் யார் ? என வினவினார்கள் அன்சாரிகளில் ஒர் இளைஞர் வந்து அல்லாஹ்வின் தூதரே அது எனக்குரியது தான் என்றார். அப்போது நபி ஸல் அவர்கள் அல்லாஹ் உமக்கு உடைமை ஆக்கிக்கொடுத்த இந்தப் பிராணி விஷயத்தில் அவனை நீர் அஞ்சமாட்டீரா ? நீர் பசியாலும் வேலை பளுவாலும் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக என்னிடம் இது முறையிடுகிறது என்று கோபத்துடன் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் ஜாஃபிர் அறிவிக்கிறார்கள்.

 நூல் : முஸ்னத் அஹ்மத் 3/189 தரம் : ஸஹீஹ்


பெண்குழந்தைகளை அழகிய முறையில் வளர்க்க வேண்டும் 

من عالَ ابنتيْنِ ، أو ثلاثَ بناتٍ ، أو أختيْنِ أو ثلاثَ أخواتٍ ، حتى يَمُتْنَ و في روايةٍ : يَبِنَّ ، وفي أخرى يبلُغْنَ ) أو يموتُ عنهن كنتُ أناو هوَ كهاتيْنِ ، وأشار بإصبعيْهِ السبابةَ و الوسطى

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 296 | خلاصة حكم المحدث : إسناده صحيح على شرط الشيخين

யாரேனும் இரண்டு அல்லது மூன்று பெண் பிள்ளைகளையோ, இரண்டு அல்லது மூன்று சகோதரிகளையோ அவர்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்களை விட்டும் இவர் மரணிக்கும் வரை பொறுப்பேற்றுக் கொண்டால் நானும் அவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் தம் நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள்.
மற்றொரு அறிவிப்பில் : அவர்கள் பருவம் அடையும் வரை என்று வந்துள்ளது.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 296 தரம் : ஸஹீஹ்


சாபத்தை பெற்று தரும் செயல்கள் 

ملعونٌ من سبَّ أباهُ ملعونٌ من سبَّ أُمَّهُ ملعونٌ من ذبح لغيرِ اللهِ ملعونٌ من غيَّرَ تُخُومَ الأرضِ ملعونٌ من كَمَهَ أعمى عن طريقٍ ملعونٌ من وقع على بهيمةٍ ملعونٌ من عمل بعملِ قومِ لوطٍ

الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/266 | خلاصة حكم المحدث : إسناده صحيح

1.தன் தந்தையைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

2. தன் தாயைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

3.அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் ( பிராணிகளை ) அறுத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

4. பூமியின் ( எல்லைக் கல்,மைல் கல்,வரப்பு உள்ளிட்ட ) அடையாளங்களை மாற்றியமைத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

5. கண்பார்வை அற்றவரைத் தவறான வழியில் செலுத்தியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

6. விலங்கைப் புணர்ந்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

7. இறைத்தூதர் லூத் ( அலை) சமூகத்தாரின் ஈனச் செயலைச் ( தன்பாலுறவு) செய்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான் என்று நபி ஸல் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 3/266  தரம் : ஸஹீஹ்


பெண்குழந்தைகளை அழகிய முறையில் வளர்க்க வேண்டும் 

مَنْ كُنَّ لهُ ثلاثُ بناتٍ يُؤْوِيهِنَّ ، و يَرْحَمُهُنَّ و يَكْفُلُهُنَّ وجَبَتْ لهُ الجنةُ البَتَّةَ قيل : يا رسولَ اللهِ ! فإنْ كانَتْ اثْنَتَيْنِ ؟ قال : و إنْ كانَتْ اثْنَتَيْنِ قال : فَرأى بَعْضُ القومِ أنْ لَوْ قالوا لهُ : واحدةً ؟ لقال : واحدةً

الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 2679 | خلاصة حكم المحدث : حسن

ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து அவர்களை ஆதரித்து, இரக்கம் காட்டி, பொறுப்புடன் வளர்த்தால் அவருக்கு நிச்சயமாக சொர்க்கம் கிடைத்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலும்தான்! என்று கூறினார்கள். அவர்கள் ஒரு பெண் பிள்ளையைப் பற்றி கேட்டிருந்தால் ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்! என நிச்சயமாகக் கூறியிருப்பார்கள் என அக்கூட்டத்தில் இருந்த சிலர் கருதினர். என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 2679 தரம் : ஹசன்


பெண்குழந்தைகளை அழகிய முறையில் வளர்க்க வேண்டும்

من كنَّ له ثلاثُ بناتٍ ، أو ثلاثُ أخواتٍ ، فاتَّقى اللهَ و أقام عليهنَّ كان معي في الجنةِ هكذا ، و أومأَ بالسبابةِ و الوسطى

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 295 | خلاصة حكم المحدث : إسناده صحيح رجاله ثقات

எவருக்கேனும் மூன்று பெண் பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லாஹ்வுக்குப் பயந்து அவர்களை முறையாகப் பேணிவளர்த்தால் அவர் சொர்க்கத்தில் என்னுடன் இவ்வாறு இருப்பார் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள். என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 295 தரம் : ஸஹீஹ்


நபியின் மீது ஸலவாத் கூறுவோம்

ما مِن أحدٍ يسلِّمُ عليَّ إلَّا ردَّ اللَّهُ عليَّ روحي حتَّى أردَّ علَيهِ السَّلامَ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2041 | خلاصة حكم المحدث : حسن 

எவராவது எனக்கு ஸலாம் கூறினால் அவருடைய ஸலாத்திற்கு பதில் கூறுவதற்காக அல்லாஹ் எனக்கு என்னுடைய ரூஹை மீட்டித் தராமலிருப்பதில்லை என நபி ஸல் கூறினார்கள் என்று அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2041 தரம் : ஹசன்


செவிச் செய்தி சில நேரங்களில் பொய் உரைக்கும்

ليس الخبرُ كالمعايَنَةِ

الراوي : أنس بن مالك وأبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 5373 | خلاصة حكم المحدث : صحيح

செவிச் செய்தி நேரில் காண்பது போன்றதல்ல என்று நபி ஸல் கூறியதாக அனஸ் பின் மாலிக் ( ரலி) மற்றும் அபூஹுரைரா ( ரலி) ஆகியோர் அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் ஜாமி 5373 தரம் : ஸஹீஹ்


நபியின் மீது ஸலவாத் கூறுவோம் 

أكْثِرُوا الصلاةَ عليَّ ، فإنَّ اللهَ وكَّلَ بي ملَكًا عند قبري ، فإذا صلَّى عليَّ رجلٌ من أُمَّتِي قال لي ذلك المَلَكُ : يا محمدُ إنَّ فلانَ بنَ فلانٍ صلَّى عليك الساعةَ

الراوي : أبو بكر الصديق | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1530 | خلاصة حكم المحدث : حسن
என் மீது ஸலாத்தை அதிகப்படுத்துங்கள். ஏனெனில் அல்லாஹ் என் மண்ணறையில் ஒரு
வானவரை சாட்டியுள்ளான். என் உம்மத்தில் ஒருவர் என் மீது ஸலவாத்துக் கூறினால்,
முஹம்மதே ! இன்னாரின் மகன் இன்னார் உங்கள் மீது இப்போது ஸலவாத்துக் கூறினார் என்று எனக்கு அந்த வானவர் கூறுவார் என்று நபி ஸல் கூறியதாக அபூபக்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் :ஸில்ஸிலா ஸஹீஹா 1530 தரம் : ஹசன்


சிறந்த மனைவி 

رحمَ اللَّهُ رجلاً قامَ منَ اللَّيلِ فصلَّى وأيقظَ امرأتَهُ فإن أبت نضحَ في وجْهِها الماءَ رحمَ اللَّهُ امرأةً قامت منَ اللَّيلِ فصلَّت وأيقظت زوجَها فإن أبى نضحت في وجْهِهِ الماءَ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1308 | خلاصة حكم المحدث : حسن صحيح

இரவில் எழுந்து தொழக் கூடியவனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக, அவன் எழுந்து (விட்ட பின்) அவனது மனைவியையும் எழுப்பி, இன்னும் அவள் (எழுந்திருக்க) மறுத்து விடுவாளென்றால் அவளது முகத்தில் தண்ணீரைத் தெளிக்கட்டும். இரவில் எழுந்து தொழக் கூடிய பெண்க்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக அவள் எழுந்து ( விட்ட பின் ) அவனது கணவனையும் எழுப்பி இன்னும் அவர் ( எழுந்திருக்க ) மறுத்து விடுவாறென்றால் அவரது முகத்தில் தண்ணீரைத் தெளிக்கட்டும் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1308 தரம் : ஹசன் ஸஹீஹ்


சிறந்த மனைவி

قلبٌ شاكرٌ و لسانٌ ذاكرٌ و زوجةٌ صالحةٌ تُعينُك على أمرِ دنياك و دينِك خيرٌ ما اكْتَنَزَ الناسُ

الراوي : أبو أمامة وثوبان وعلي بن أبي طالب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 4409 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு நேர்மையான மனைவியானவள் (தனது கணவனுக்கு) இந்த உலக வாழ்க்கையிலும் இன்னும் மார்க்க துறையிலும் (உங்களுக்கு) உதவக் கூடியவளாக இருப்பாள், அத்தகையவளே ஒருவன் பெற்றுக் கொண்ட அருட்கொடையிலேயே மிகச் சிறந்த அருட்கொடையாகும். என்று நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 4409 தரம் : ஸஹீஹ்


ஷைத்தானை விட்டு பாதுகாவல் தேடுவது 

إنَّ اللهَ تعالى كتب كتابًا قبلَ أنْ يخلقَ السمواتِ و الأرضَ بألْفي عامٍ ، و هو عندَ العرشِ ، و إنَّه أنزل منه آيتينِ ، ختم بهما سورةُ البقرةِ ، و لا يُقرآنِ في دارٍ ثلاثَ ليالٍ فيقربُها الشيطانُ

الراوي : النعمان بن بشير | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 1799 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ் இந்த வானம் மற்றும் பூமி ஆகியவற்றைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் ஒன்றை எழுதினான், அவனது அர்ஷுக்கு அருகில் அதனை வைத்திருந்தான், இன்னும் அதிலிருந்து இரண்டு வசனங்களை எடுத்து சூரா அல் பகராவினை நிறைவு செய்தான். அதனை மூன்று இரவுகள் தொடர்ந்து ஓதி வந்தால், அந்த வீட்டினை ஷைத்தான் நெருங்க மாட்டான் என்று நபி ஸல் கூறினார்கள் என நுமான் பின் பஸீர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 1799 தரம் : ஸஹீஹ்


ஷைத்தானை விட்டு பாதுகாவல் தேடுவது

أقِلُّوا الخروجَ بعد هدوءٍ ؛ فإنَّ لله دوابٌّ يبُثُّهنَّ ، فمن سمع نباحَ كلبٍ أو نهاقَ حمارٍ من الليلِ فلْيستَعِذْ بالله من الشيطانِ الرَّجيمِ فإنهم يَرَونَ ما لا تَرَونَ

الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح الأدب المفرد | الصفحة أو الرقم : 937 | خلاصة حكم المحدث : صحيح لغيره

இரவுப் பொழுதுகளில்  அடிக்கடி வெளியில் செல்வதைத் தவித்துக் கொள்ளுங்கள். சில உயிரினங்களை அல்லாஹ் (இரவுப் பொழுதுகளில் தான்) வெளியில் உலவ விடுகிறான். (இரவில்) நாய் குரைப்பதையோ, கழுதை கத்துவதையோ யாராவது செவியுற்றால், சபிக்கப்பட்ட ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ளட்டும். (ஏனெனில்,) உங்களால் பார்க்க முடியாத(மறைவான)வற்றை அவை பார்க்கின்றன. என்று நபி ஸல் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அதாப் அல் முஃப்ரத் 937 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


யாசகம் கேட்கக் கூடாது

مَن يَكْفُلُ لي أن لا يسألَ النَّاسَ شيئًا وأتَكَفَّلُ لَه بالجنَّةِ فقالَ ثَوبانُ أنا فَكانَ لا يسألُ أحدًا شيئًا

الراوي : ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1643 | خلاصة حكم المحدث : صحيح

மக்களிடம் எதனையும் யாசகம் கேட்கமாட்டேன் என எனக்கு உத்திரவாதம் தருபவர் யார்? அவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஸவ்பான் (ரலி) அவர்கள், நான்! என்று கூறினார்கள். அவர்கள் எவரிடமும் எந்த உதவியும் கேட்காதவராக இருந்தார்கள்.( என அறிவிப்பாளர்களில் ஒருவர் அறிவிக்கிறார்கள்.)

 இதை ஸவ்பான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1643 தரம் : ஸஹீஹ்


நல்லோர் நற்சான்று கூறுமாறு நடந்து கொள்ளவேண்டும்

أهلُ الجنةِ من ملأَ اللهُ أذنيْهِ من ثناءِ الناسِ خيرًا وهو يسمعُ وأهلُ النارِ من ملأَ أذنيْهِ من ثناءِ الناسِ شرًّا وهو يسمعُ

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 3422 | خلاصة حكم المحدث : حسن صحيح

தன்னைப் பற்றி மக்கள் நற்சான்று கூறுவதை யாருடைய காதுகளில் அல்லாஹ் அதிகமாக கேட்கச் செய்து விட்டானோ அவர் சொர்க்கவாதியாவார். தன்னைப் பற்றி மக்கள் தவறாகக் கூறுவதை யாருடைய காதுகளில் அல்லாஹ் அதிகமாக கேட்கச் செய்து விட்டானோ அவர் நரகவாதியாவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 3422 தரம் : ஹசன் ஸஹீஹ்


பள்ளிவாசல் கட்ட உதவுவது

مَن بَنى مَسجدًا للَّهِ كمِفحَصِ قَطاةٍ ، أو أصغرَ ، بَنى اللَّهُ لَهُ بيتًا في الجنَّةِ

الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 609 | خلاصة حكم المحدث : صحيح

யாரேனும் அல்லாஹ்வுக்காக புறா போன்ற பறவையின் இறக்கை அளவோ அல்லது அதனை விட சிறிய அளவோ பள்ளிவாயில் கட்டுவதில் பங்கெடுத்துக் கொண்டால் அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 609 தரம் : ஸஹீஹ்


குர் ஆன் ஒதுவதின் சிறப்பு 

يقالُ لصاحِبِ القرآنِ: اقرأ، وارتَقِ، ورتِّل كَما كُنتَ ترتِّلُ في الدُّنيا، فإنَّ منزلتَكَ عندَ آخرِ آيةٍ تقرأُ بِها

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2914 | خلاصة حكم المحدث : حسن صحيح

நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! நீர் உலகத்தில் அழகாக ஓதியது போன்று அழகாக ஓதுவீராக! நிச்சயமாக உமது உயர் பதவி நீர் எந்த வசனத்தை இறுதியாக ஓதுகிறீரோ அந்த இடமாகும் என அல்குர்ஆனை ஓதி அதன்படி வாழ்ந்தவருக்கு (சொர்க்கத்தில் நுழையும் போது) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2914 தரம் : ஹசன் ஸஹீஹ்


குர் ஆன் ஒதுவதின் சிறப்பு 

يَجيءُ القرآنُ يومَ القيامةِ فيَقولُ: يا ربِّ حلِّهِ، فَيلبسُ تاجَ الكَرامةِ، ثمَّ يقولُ: يا رَبِّ زِدهُ، فيلبسُ حلَّةَ الكرامةِ، ثمَّ يقولُ: يا ربِّ ارضَ عنهُ، فيقالُ لَهُ: اقرأْ وارْقَ، وتزادُ بِكُلِّ آيةٍ حسنةً

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2915 | خلاصة حكم المحدث : حسن

மறுமை நாளில் அல்குர்ஆன் வரும். அப்போது அது, இரட்சகனே! இவருக்கு ஆடை அணிவிப்பாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும். அது மீண்டும், இரட்சகனே! இவருக்கு மேலும் வழங்குவாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். மீண்டும் அது, இரட்சகனே! இவரை நீ பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும், அப்போது நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும் என்று அவருக்குக் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

 நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2915 தரம் : ஹசன்


குர்ஆனை ஒதுவதின் சிறப்பு

مَن قرأَ حرفًا من كتابِ اللَّهِ فلَهُ بِهِ حسنةٌ ، والحسنةُ بعشرِ أمثالِها ، لا أقولُ آلم حرفٌ ، ولَكِن ألِفٌ حرفٌ وميمٌ حرفٌ

الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2910 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு! ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். "அலிஃப், லாம், மீம்’ என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2910 தரம் : ஸஹீஹ்


பிள்ளைகள் பெற்றோர்க்கு பாவமன்னிப்பு கேட்க வேண்டும்

إنَّ الرَّجلَ لتُرفَعُ درجتُه في الجنةِ فيقولُ : أنَّى هذا ؟ فيقالُ : باستغفارِ ولدِك لكَ
الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 3/214 | خلاصة حكم المحدث : حسن

ஒரு மனிதருக்கு சொர்க்கத்தில் நிச்சயமாக அந்தஸ்த்துக்கள் உயர்த்தப்படும். அப்போது அவர், இது எவ்வாறு எனக்குக் கிடைத்தது? என்று ஆச்சரியப்பட்டுக் கேட்பார். இது உனக்காக உன்னுடைய மகன் பாவமன்னிப்புத் தேடியதனால் கிடைத்தது என்று அவருக்குக் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என்று அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 3/214 (3660) தரம் : ஹசன்


தாய்க்கு பணிவிடைகள் செய்ய வேண்டும்

نمتُ فرأيتُني في الجنَّةِ فسَمِعْتُ صوتَ قارئٍ يقرأُ فقُلتُ مَن هذا فقالوا : هذا حارثةُ بنُ النُّعمانِ فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وعلَى آلِه وسلَّمَ كذلكَ البِرُّ كذلكَ البِرُّ وَكانَ أبرَّ النَّاسِ بأمِّهِ.
الراوي : عائشة أم المؤمنين | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 1555 | خلاصة حكم المحدث : صحيح

தூங்கிக் கொண்டிருந்த நான் கனவில் என்னை சொர்க்கத்தில் இருப்பதாகக் கண்டேன். அங்கு ஒருவர் ஓதிக் கொண்டிருக்கும் சப்தத்தை செவியுற்ற நான், இவர் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஹாரிஸா இப்னு நுஃமான் என்று பதிலளித்தார்கள்! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், இது போன்றுதான் நல்லறங்களுக்குக் கூலி கிடைக்கும்! தாயிக்குப் பணிவிடை செய்யும் மனிதர்களிலேயே அவர் மிகச் சிறந்த பணிவிடையாளராகத் திகழ்ந்தார் என்றார்கள். என நபி ஸல் கூறியதாக ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 1555 தரம் : ஸஹீஹ்


தந்தையிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுவது

رضا الرَّبِّ في رضا الوالدِ وسخطُ الرَّبِّ في سخطِ الوالدِ.

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 1899 | خلاصة حكم المحدث : حسن

அல்லாஹ்வின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்தில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 1899 தரம் : ஹசன்


மனிதர்களில் சிறந்தவர் 

خيرُ الناسَ أنفعُهُمْ لِلناسِ
الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 3289 | خلاصة حكم المحدث : حسن

மனிதர்களில் மிக சிறந்தவர் பிற மக்களுக்கு அதிகம் பயன் அளிப்பவரே என்று நபி ஸல் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் ஜாமி 3289 தரம் : ஹசன்


மனிதர்களில் சிறந்தவரும் தீயவரும் 

أنَّ رجلًا قالَ : يا رسولَ اللَّهِ أيُّ النَّاسِ خيرٌ ؟ قالَ : مَن طالَ عمرُهُ ، وحَسنَ عملُهُ ، قالَ : فأيُّ النَّاسِ شرٌّ ؟ قالَ : مَن طالَ عمرُهُ وساءَ عملُهُ

الراوي : أبو بكرة نفيع بن الحارث | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2330 | خلاصة حكم المحدث : صحيح

ஒருவர் நபி ஸல் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே ! மனிதர்களில் சிறந்தவர் யார் ? என்று கேட்டார் அதற்க்கு நபி ஸல் அவர்கள் அழகிய செயல்பாடுகளோடு நீண்ட ஆயுட்காலம் வாழ்பவரே என்றார்கள் பிறகு அந்த மனிதர் மீண்டும் நபி ஸல் அவர்களிடத்தில் மனிதர்களில் தீயவர் யார் ? என்று கேட்டார் அதற்க்கு நபி ஸல் அவர்கள் தீய செயல்பாடுகளோடு அதிககாலம் வாழ்பவரே என்று பதில் அளித்தார்கள் என அபூ பக்ரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2330 தரம் : ஸஹீஹ்


உறுதியான மன நிலையில் சொல்லப்படும் பாங்கின் நன்மைகள்

كنَّا معَ رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ فقامَ بلالٌ ينادي فلمَّا سَكتَ قالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ من قالَ مثلَ هذا يقينًا دخلَ الجنَّةَ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 673 | خلاصة حكم المحدث : حسن |

நாங்கள் நபி ஸல் அவர்களுடன் இருந்தோம் அப்போது பிலால் ( ரலி) எழுந்து பாங்கு கூறினார். அவர் ( பாங்கை) முடித்த போது " இது போன்று உறுதியான நிலையில் ஒருவர் கூறினால் அவர் சொர்க்கம் நுழைவார் ". என்று நபி ஸல் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 673 தரம் : ஹசன்


பாங்கு பிறகு கேட்க்கப்படும் துஆ

أن رجلًا قال: يا رسولَ اللهِ، إن المؤذنين يَفْضِلوننا ؟ فقال رسولُ اللهِ صلى الله عليه وسلم: قلْ كما يقولون، فإذا انتهيتَ فسلْ تُعْطَه.

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 524 | خلاصة حكم المحدث : حسن صحيح

ஒருவர் நபி ஸல் அவர்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரே ! பாங்கு கூறுபவர்கள் எங்களை விட அதிக நன்மை செய்கிறார்கள் என்று ( கூறினார் ) அதற்க்கு நபி ஸல் அவர்கள் ( பாங்கு கூறுபவர் ) போன்று நீ கூறு அவர் முடித்ததும் நீ ( இறைவனிடம் ) கேள் ,உனக்கு கொடுக்கப்படும் என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 524 தரம் : ஸஹீஹ்


பாங்கு கூறுவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்

 المُؤَذِّنُ يُغفَرُ له مَدَى صَوتِه ، و أجْرُهُ مِثلُ أجرِ مَنْ صَلَّى مَعَهُ

الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح الجامع

الصفحة أو الرقم: 6643 | خلاصة حكم المحدث : صحيح 

பாங்கு கூறுபவருக்கு அவரின் சப்தம் சென்றையும் தூரம் அளவிற்க்கு அவருடைய பாவங்களும் மன்னிக்கப்படும். அவருடைய கூலி அவருடன் தொழுதவரின் கூலியை போன்றதாகும் என்று நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 6643 தரம் : ஸஹீஹ்


தொழுகையாளர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும்

خمسُ صلواتٍ افترضهن اللهُ تعالى, من أحسن وضوءَهن وصلَّاهن لوقتِهن وأتم رُكوعَهن وخشوعَهن كان له على اللهِ عهدٌ أن يغفرَ له ومن لم يفعلْ فليس له على اللهِ عهدٌ إن شاء غفر له وإن شاء عذبَه.

الراوي : عبدالله الصنابحي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 425 | خلاصة حكم المحدث : صحيح

ஜவேளைத் தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் அங்க தூய்மை செய்து, உரிய நேரத்தில் தொழுகையை தொழுதும் ருகூவையும் ,ஸஜிதாவையும் பரிபூர்வமாக  நிறைவேற்றுகிறாரோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். 

எவர் ஒருவர் தொழுகையை பேண வில்லையோ அவர்க்கு இந்த வாக்கு உறுதி சேராது.

அவரை இறைவன் நாடினால் மன்னிப்பான் அல்லது நாடினால் தண்டிப்பான் என்று நபி ஸல் கூறியதாக உபாத பின் ஸாமித் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 425 தரம் : ஸஹீஹ்


ஆறு விஷயங்களை கடைப்பிடித்தல்

اضْمنُوا لِي سِتًّا من أنفسِكمْ أضْمَنُ لكمْ الجنةُ ؛ اصْدُقُوا إذا حدَّثْتُمْ ، وأوْفُوا إذا وعدتُمْ ، وأدًُّوا إذا ائْتُمِنْتُمْ ، و احفَظُوا فُروجَكمْ ، وغُضُّوا أبْصارَكمْ ، وكُفُّوا أيديّكمْ

الراوي : عبادة بن الصامت | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 1018 | خلاصة حكم المحدث : حسن

 நீங்கள் ஆறு விஷயங்களைச் செய்வதாக எனக்கு உறுதி அளித்தால் நான் உங்களுக்கு சுவர்கத்தை பெற்றுத்தர உறுதியளிப்பேன்.

1.பேசினால் உன்மையே பேசுங்கள் 

2.வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்

3.அமானிதத்தைப் பாதுகாத்து வாருங்கள்.

4.நாவையும் மர்ம உறுப்பையும் பாதுகாதுக்கொள்ளுங்கள்.

5.தீமையை விட்டும் உங்கள் பார்வைத் திருப்பிக் கொள்ளுங்கள்.

6.உங்கள் கரங்களை தீமையை விட்டும் தடுத்துக் கொள்ளுங்கள் என்று நபி ஸல் கூறியதாக உபாத இப்னு ஸாமித் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் ஜாமி 1018 தரம் : ஹசன்


தந்தை குழந்தை பெயருடன் அழைக்கப்படுவது

لما وفَدَ إلى رسولِ اللهِ صلى الله عليه وسلم سمعهُ وهم يكنُّونَ هانئًا أبا الحكمِ، فدعاهُ رسولُ اللهِ صلى الله عليه وسلم فقال لهُ : إنَّ اللهَ هو الحكَمُ وإليهِ الحُكمُ، فلمِ تُكنىَّ أبا الحكمِ . فقال : إنَّ قومي إذا اختلفُوا في شيءٍ أتَوْني فحكمتُ بينهُم، فرضِيَ كلا الفريقَيْنِ . قال : ما أحسنَ هذا! فما لك من الولدِ ؟ قال : لي شُريحٌ، وعبدُ اللهِ، ومسلمٌ . قال : فمنْ أكبرُهم ؟. قال : شُريح قال : فأنت أبو شُريحٍ فدعا له ولولدِهِ

الراوي : هانئ بن يزيد بن نهيك أبو شريح | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 5402 | خلاصة حكم المحدث : صحيح

நான் வெளியூரில் இருந்து நபி ஸல் அவர்களை சந்திப்பதற்காகத் எனது தூதுக்குழுவினருடன் வந்திருந்த நேரத்தில் எனது கூட்டத்தினர் என்னை அபுல் ஹகம் ( அறிவின் தந்தை ) என அழைப்பதை நபி ஸல் அவர்கள் செவியுற்றார்கள்.

உடனே நபி ஸல் அவர்கள் என்னை அழைத்து அல்லாஹ் தான் ஞானம் மிக்கவன் அவனிடமே அனைத்து ஞானங்களும் மீளும் எனவே நீ அபுல் ஹகம் என்று புனைப் பெயரை சூட்டிகொள்ளாதீர் என்று என்னிடம் கூறினார்கள்.

அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே ! எனது கூட்டத்தினருக்கு மத்தியில் ஏதெனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் என்னிடம் வருவார்கள்.

நான் அளிக்கும் தீர்ப்பை இரு சாராரும் திருப்தியுடன் ஏற்பார்கள் என்று கூறினேன் இதை கேட்ட நபி ஸல் அவர்கள் இது எவ்வளவு அழகான விஷயம் என்று கூறி விட்டு.

உனக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா ? எனக் என்னிடம் கேட்டார்கள். ஷுரைஹ், முஸ்லிம், அப்துல்லாஹ் என்று மூவர் உள்ளனர் என்றேன்.

அவர்களில் மூத்தவர் யார் ? என்று நபி ஸல் கேட்டார்கள் . நான் ஷுரைஹ் என்றேன் அப்படியாயின் நீ அபூஷுரைஹ் என்று கூறிவிட்டு எனக்காகவும் என்னுடைய குழந்தைகளுக்காகவும் பிரார்த்தித்தார்கள் 

இதை ஷுரைஹ் பின் ஹனீ அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 5402   தரம் : ஸஹீஹ்


மறுமையில் இறைவனை பார்க்க முடியாதவர்கள் 

ثلاثةٌ لا ينظرُ اللهُ عزَّ وجلَّ إليهم يومَ القيامةِ : العاقُّ لوالديْهِ ، و المرأةُ المُترجِّلةُ ، و الدَّيُّوثُ .... 

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 674 | خلاصة حكم المحدث : إسناده جيد

 மூன்று நபர்கள் அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்

1.பொற்றோரைத் துன்புறுத்துபவன்

2.ஆண்களை போல ஒப்பனை செய்துகொள்ளும் பெண்

3.தனது குடும்பத்துப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை அறிந்தும் கண்டிக்காமலிருப்பவன் என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல்: ஸில்ஸிலா ஸஹீஹா 674 தரம் : ஸஹீஹ்


சுவனம் செல்லாதவர்கள்

   ....وثلاثةٌ لا يدخُلونَ الجنَّةَ: العاقُّ لوالِدَيهِ ، والمدمِنُ على الخمرِ ، والمنَّانُ بما أعطى  
 
الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2561 | خلاصة حكم المحدث : حسن صحيح

மூன்று நபர்கள் சுவனத்தில் நுழையமாட்டார்கள்.

1.பெற்றோரைத் துன்புறுத்துபவன்
2.மதுப்பழக்கத்தில் மூழ்கியிருப்பவன்
3.கொடுத்த தர்மத்தை சொல்லிக் காட்டுபவன் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 2561 தரம் : ஹசன் ஸஹீஹ்


பாதுகாப்புத் தேடுதல்

اللهمَّ إنِّي أعوذُ بك من يومِ السوءِ ، و من ليلةِ السُّوءِ ، و من ساعةِ السُّوءِ ، و من صاحبِ السُّوءِ ، و من جارِ السُّوءِ في دارِ المُقامةِ

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 1299 | خلاصة حكم المحدث : حسن

என் இறைவா ! தீய நாளை விட்டும், தீய இரவை விட்டும், தீய  நேரத்தை விட்டும், தீய நண்பரை விட்டும்,தங்கும் ஊரில் தீய அண்டை வீட்டார் அமைவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்  என்று நபி ஸல் கூறியதாக உக்பா இப்னு ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 1299 தரம் : ஹசன்


நல்லதை பிறருக்கு சொல்லும் முன்பு நாமும் அதை கடைபிடிக்க வேண்டும்

مثلُ الذي يُعلِّمُ الناسَ الخيرَ ، و يَنسى نفسَه ، مثلُ الفتيلةِ ، تضيءُ للناسِ ، و تحرِقُ نفسَها

الراوي : أبو برزة الأسلمي وجندب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 5837 | خلاصة حكم المحدث : صحيح

மக்களுக்கு நல்லதை போதித்துவிட்டு தன்னை மறந்து விட்ட ஒருவனின் உதாரணம் மக்களுக்கு ( பயனளித்து) தன்னை அழித்துக் கொள்ளும் விளக்கு போன்றதாகும் என நபி ஸல் கூறியதாக அபூ பர்ஸா ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 5837 தரம் : ஸஹீஹ்


எளிமையாக பிற மக்களிடம் நடந்துகொள்ளவேண்டும்

كان يجلِسُ على الأرضِ ، ويأكُلُ على الأرضِ ، ويعتقِلُ الشاةَ ، ويُجيبُ دعوةَ المملوكِ على خبزِ الشعيرِ

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 4915 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் தரையில் அமர்பவர்களாகவும், தரையில் அமர்ந்து உணவு உண்ணுபவர்களாகவும், ஆட்டையும் மேய்த்துக் கொள்ளுபவர்களாகவும், கோதுமை ரொட்டிக்காக ஒரு அடிமையின் அழைப்பையும் ஏற்று விருந்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 4915 தரம் : ஸஹீஹ்


பிற முஸ்லிம்களிடம் நலம் நாடவேண்டும்

كان يأتي ضُعفاءَ المسلِمينَ ، ويزورُهمْ ، و يعودُ مرضاهمْ ، و يشهَدُ جنائزَهمْ

الراوي : سهل بن حنيف | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 4877 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் முஸ்லிம்களில் சாதாரண நிலையுடையோரிடம் சென்று அவர்களை சந்தித்து அவர்களிலுள்ள நோயாளிகளை நலமும் விசாரித்து அவர்களில் ஏவரேனும் இறந்ததாக இறப்பு செய்தி கிடைத்துவிட்டால் உடனே ஜனாஸாவில் கலந்து கொள்பவர்களாகவும் இருந்தார்கள் என சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அறிவிக்கிறார்கள்.

 நூல் : ஸஹீஹ் ஜாமி 4877 தரம் : ஸஹீஹ்


இவைகளில் நற்பாக்கியம் உள்ளது

أربعٌ من السعادةِ : المرأةُ الصالحةُ ، و المسكنُ الواسعُ ، و الجارُ الصالحُ ، و المركبُ الهنيءُ ....

الراوي : سعد بن أبي وقاص | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 887 | خلاصة حكم المحدث : صحيح

 நான்கு விஷயங்களில் ( முஸ்லிக்கு) நற்பாக்கியம் உள்ளது :

1. நல்ல மனைவி
2. விசாலமான வீடு
3.  நல்ல அண்டை வீட்டார்
4.  நிம்மதியான  வாகனம் ஆகும் என்று நபி ஸல் கூறியதாக ஸஃது பின் அபீ வக்காஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

 நூல் : ஸஹீஹ் ஜாமி 887 தரம் : ஸஹீஹ்


மழை தொழுகையில் செய்ய வேண்டியவை

أرسلني أميرٌ من الأُمراءِ إلى ابنِ عباسٍ أسأَلُهُ عن الصلاةِ في الاستسقاءِ فقال ابنُ عباسٍ : ما منعَه أن يَسألَني ؟ خرج النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ متواضعًا مُتَبَذِّلًا مُتَخَشِّعًا مُتَرَسِّلًا مُتَضَرِّعًا فصلَّى ركعتينِ كما يُصلِّي في العيدِ لم يَخطبْ خطبتَكم هذه

الراوي : إسحاق بن عبدالله بن الحارث | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 5/115 | خلاصة حكم المحدث : إسناده صحيح

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பணிவாகவும், உள்ளச்சத்துடனும், அடக்கத்துடனும் மழைத் தொழுகைக்காகப் புறப்பட்டு முஸல்லா என்ற திடலுக்கு வந்தார்கள். பெருநாள் தொழுகையைப் போலவே இரண்டு ரக்அத்கள் தொழ வைத்தார்கள். நீங்கள் இப்போது செய்யும் சொற்பொழிவு போல் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தவில்லை. மிம்பரில் ஏறி துஆச் செய்வதிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள். என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 5/115 தரம் : ஸஹீஹ்


பரக்கத் வழங்கப்படும்

إنَّ اللهَ تباركَ وتعالى يَبْتَلِي عَبْدَهُ بِما أعطاهُ ، فمَنْ رضيَ بِما قَسَمَ اللهُ عزَّ و جلَّ لهُ بارَكَ اللهُ لهُ فيهِ و وسَّعَهُ ، و مَنْ لمْ يَرْضَ لمْ يُبارِكْ لهُ فيهِ

الراوي : أحد من بني سليم | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1658 | خلاصة حكم المحدث : إسناده صحيح على شرط مسلم

அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொருளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்தி கொள்கிறாரோ! அவருக்கு அதில் பரக்கத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ளவில்லையோ! அதில் அல்லாஹ் பரக்கத் செய்வதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என பனூ ஸுலைம் கூட்டத்தில் ஒருவர் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 1658 தரம் : ஸஹீஹ்


பெற்றோர்களை கவனித்தால் சுவனம் நிச்சியம்

أنَّ جاهِمةَ جاءَ إلى النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ ، فقالَ: يا رسولَ اللَّهِ ، أردتُ أن أغزوَ وقد جئتُ أستشيرُكَ ؟ فقالَ: هل لَكَ مِن أمٍّ ؟ قالَ: نعَم ، قالَ : فالزَمها فإنَّ الجنَّةَ تحتَ رِجلَيها

الراوي : معاوية بن جاهمة السلمي | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 3104 | خلاصة حكم المحدث : حسن صحيح

 நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ”அல்லாஹ்வின் தூதரே நான் போருக்குச் செல்ல நாடுகிறேன். உங்களிடம் ஆலோசனை பெறுவதற்காக வந்துள்ளேன்” என்று கூறினேன் அதற்க்கு . நபியவர்கள் ”உனக்கு தாய் (உயிரோடு) இருக்கிறார்களா?” என்று கேட்டார்கள். அதற்க்கு 
 நான் ”ஆம்” என்று கூறினேன். அதற்கு நபியவர்கள் ”உன்னுடைய தாயைப் (அவருக்கு பணிவிடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக் கொள். நிச்சயமாக சொர்க்கமாகிறது அவளுடைய இரு பாதங்களின் கீழ்தான் இருக்கிறது”. என்று கூறினார்கள். என முஆவியா பின் ஜாஹிமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 3104 தரம் : ஹசன் ஸஹீஹ்


இறை நம்பிக்கையாளர் இறந்த பிறகு அவரை வந்து அடையும் நற்கூலிகள்

إنَّ مِمَّا يلحقُ المؤمنَ من عملِهِ وحسناتِه بعدَ موتِه عِلمًا علَّمَه ونشرَه وولدًا صالحًا ترَكَه ومُصحفًا ورَّثَه أو مسجِدًا بناهُ أو بيتًا لابنِ السَّبيلِ بناهُ أو نَهرًا أجراهُ أو صدَقةً أخرجَها من مالِه في صِحَّتِه وحياتِه يَلحَقُهُ من بعدِ موتِهِ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 200 | خلاصة حكم المحدث : حسن 

ஒரு இறை நம்பிக்கையாளர் இறந்த பிறகும் அவரது செயல்களில் அவரது நல்லறங்களில் அவரை அடையக்கூடியவை.

அவர் பிறருக்கு கற்றுகொடுத்து , பரவச் செய்த கல்வி

அவர் விட்டு சென்று உள்ள சாலிஹான மகன்

அல்லது அவர் கட்டிசென்ற இறை இல்லம்

அல்லது வழிப்போக்கர்களுக்கு அவர் கட்டிதந்த விடுதி

அல்லது அவர் ஏற்படுத்திய ஆறு

அல்லது அவர் உயிருடன் ஆரோக்கியமுடன் இருந்த சமயத்தில் தன் பொருளிலிருந்து செலவு செய்த  தர்மமுமாகும் ( இவ்வைகளின் நன்மைகள் ) அவர் இறந்த பிறகும் அவரை வந்து அடைகிறது என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 200 தரம் : ஹசன்


மக்களுடன் கலந்து வாழ வேண்டும்

قال العباسُ قلت لا أدرِي ما بقي رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فينا فقلت يا رسولَ اللهِ لو اتخذت عريشًا يُظلُّك قال لا أزالُ بينَ أظهُرِهم يطؤون عقِبي وينازعون ردَائي حتى يكونَ اللهُ يُريحُني منهم

الراوي : العباس بن عبدالمطلب | المحدث : الهيثمي | المصدر : مجمع الزوائد | الصفحة أو الرقم : 9/24 | خلاصة حكم المحدث : رجاله رجال الصحيح

நபி (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் மக்களிடம் கூறினார்கள். 

பின்னர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே’’ என்று கேட்டார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித்தான் இருப்பேன்’’ எனக் கூறினார்கள். 

என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : மஜ்மஉஸ் ஜவாயித் 9/24 தரம் : ஸஹீஹ்


தங்கத்தை அணிந்து ஒர் முஸ்லிம் மரணித்தால் ?

من لَبِسَ الذَّهبَ مِن أمَّتي فماتَ وَهوَ يلبسُهُ لم يلبس من ذَهَبِ الجنَّةِ ....

الراوي : عبدالله بن عمرو | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 11/150 | خلاصة حكم المحدث : إسناده صحيح

என்னுடைய சமூகத்தாரில் எவர் தங்கத்தை அணிந்தும் அதை அணிந்துகொண்டவராகவே மரணித்து விடுகிறாரோ அவரின் மீது சுவனத்திலுள்ள தங்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விடுகிறான் என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 11/150 தரம் : ஸஹீஹ்


பிறர் மீது இரக்கம் காட்டவேண்டும்

يا عائشةُ ارفُقي إذا أراد اللهُ بأهلِ بيتٍ خيرًا أدخَل عليه الرِّفقَ

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الهيثمي | المصدر : مجمع الزوائد | الصفحة أو الرقم : 8/22 | خلاصة حكم المحدث : رجاله رجال الصحيح‏‏

ஆயிஷாவே ! இரக்கம் காட்டுவீராக ! ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் ஒரு வீட்டாருக்கு நன்மையை நாடிவிட்டால் அவர்களில் இரக்கத் தன்மையை புகுத்திவிடுகிறான் என்று நபி ஸல் கூறினார்கள் என அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : மஜ்மஉஸ் ஜவாயித் 8/22 தரம் : ஸஹீஹ்


அழகிய ஆடைகளை உடுத்திகொள்ள வேண்டும்

أتَيتُ النَّبيَّ -صلَّى اللَّهُ علَيهِ وعلَى آلِه وسلَّمَ- في ثَوبٍ دونٍ فقالَ : ألَكَ مالٌ ؟ قالَ : نعَم قالَ مِن أيِّ مالٍ ؟ قالَ قد آتانيَ اللَّهُ منَ الإبلِ والغنمِ والخَيلِ والرَّقيقِ. قالَ : فإذا آتاكَ اللَّهُ مالًا فَليُرَ أثرُ نعمةِ اللَّهِ علَيكَ وكرامتِهِ

الراوي : مالك بن نضلة الجشمي | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 1109 | خلاصة حكم المحدث : صحيح على شرط مسلم

அபுல் அஹ்வஸ் தன் தந்தை கூறியதாக அறிவிக்கிறார்கள்

நான் அழுக்கான ஆடையுடன் நபி ஸல் அவர்களிடம் வந்தேன் ., நபி ஸல் அவர்கள் என்னிடம் உங்களிடம் செல்வம் உண்டா ? என்று வினாவினார்கள் 

நான் ஆம் உண்டு என்றேன்
பிறகு நபி ஸல் அவர்கள் என்னை நோக்கி எவ்வகையான செல்வம் என்று கேட்டார்கள் ?

ஒட்டகம் , மாடு , ஆடு, குதிரைகள், அடிமை ஆகியவை உள்ளது என்று கூறினேன்.

உடனே நபி ஸல் என்னிடம் கூறினார்கள் அல்லாஹ் உனக்கு செல்வத்தை வழங்கியிருந்தால் அல்லாஹ்வினுடைய அருட்கொடை மற்றும் அவனின் சங்கையின் பிரதிபலிப்பு உன் மீது காணப்பட வேண்டும் என்று கூறினார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 1109 தரம் : ஸஹீஹ்


கால்நடைகளுக்கு உரிய உரிமைகளை கொடுக்கவேண்டும் 

نا مع رسولِ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ في سفرٍ فانطلق لحاجةٍ فرأينا حُمَّرةً معها فرخان فأخذْنا فرخَيْها فجاءتِ الحُمَّرةُ فجعلت تفرشُ فجاء النبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ فقال : من فجَعَ هذه بولدِها ؟ رُدُّوا ولدَها إليها ورأى قريةَ نملٍ قد حرَّقناها فقال : من حرَّق هذه ؟ قلنا : نحن قال : إنه لا ينبغي أن يُعذِّبَ بالنَّارِ إلا ربُّ النَّارِ

الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1/64 | خلاصة حكم المحدث : إسناده صحيح

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுடன் ஒரு பயணத்தில் நாங்கள் இருந்தோம் அப்போது அவர்களுடைய தேவைக்காக சென்றிருந்தார்கள். சிட்டு கருவிக்கு ஒப்பான ஒரு பறவையை அதனுடன் இரு குஞ்சுகள் இருக்க நாங்கள் கண்டு விட்டோம். 

அப்போதே அதனுடைய இரு குஞ்சுகளையும் நாங்கள் ( பிடித்து ) எடுத்துக் கொண்டோம் . சிட்டு கருவிக்கு ஒப்பான அப்பறவை வந்து வட்டமிட்டுப் பறக்க தொடங்கியது; பின்னர் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எங்களிடம் வந்தடைந்தபோது இதை இதன் குஞ்சுகளான ( பிள்ளைகள் ) மூலம் வேதனைப்படுத்தியவர் யார் ? அதன் குஞ்சுகளை ( பிள்ளைகளை ) அதற்க்குத் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கூறினார்கள்.

இன்னும் நாங்கள் நெருப்பால் அதை கரித்துவிட்ட எறும்புகளின் ஊரை அவர்கள் கண்டுவிட்டு இதை கரித்து விட்டவர் யார் ? என்று கேட்டார்கள் ( அதற்கு ) நாங்கள் தான் என்று கூறினோம் 

( பிறகு நபி ஸல் எங்களை நோக்கி கூறினார்கள் )  நெருப்பால் தண்டனை செய்வது நெருப்பின் இரட்சகனுக்கலாது ( மற்றொருவருக்கும் ) ஆகுமானது அல்ல என்று கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்உத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

 நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 1/64 தரம் : ஸஹீஹ்


கால்நடைகளுக்கு உரிய உரிமைகளை கொடுக்கவேண்டும் 

كان يُصْغِي للهرَّةِ الإِنَّاءَ ، فتشربُ ، ثُمَّ يَتَوضَّأُ بفضلِها

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح الجامع
الصفحة أو الرقم: 4958 | خلاصة حكم المحدث : صحيح

நபி ஸல் அவர்கள் பூனைக்கு ( அது தண்ணீர் அருந்துவதற்காக ) பாத்திரத்தைச் சாய்த்துக் கொடுப்பார்கள் அப்போது அது குடிக்கும் பின்னர் ( அது வாய்வைத்துக் குடித்த ) அதன் மிச்சத்தைக் கொண்டு வுளு செய்வார்கள் என அன்னை ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அல் ஜாமி 4958 தரம் : ஸஹீஹ்


கால்நடைகளுக்கு உரிய உரிமைகளை கொடுக்கவேண்டும் 

مرَّ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ ببعيرٍ قد لحِقَ ظَهْرُهُ ببطنِهِ فقالَ اتَّقوا اللَّهَ في هذهِ البَهائمِ المعجَمةِ فاركَبوها صالِحةً وَكُلوها صالحةً

الراوي : سهل ابن الحنظلية الأنصاري | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2548 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் வயிறு முதுகோடு ஒட்டிவிட்ட ஒரு ஒட்டகத்திற்கருகில் சென்றார்கள் அப்போது . வாய்பேசாத இம்மிருகங்களின் விஷயத்தில் அல்லாஹ்வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். சீரானவையாக இருக்க அவற்றின் மீது சவாரி செய்யுங்கள். அவை சீரானவையாக இருக்க அவற்றை உண்ணுங்கள் என்று கூறியதாக ஸுஹைல் பின் ஹன்ழலா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

 நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2548 தரம் : ஸஹீஹ்


தந்தை சொர்க்கத்தின் வாசல் ஆவார்

الوالدُ أوسطُ أبوابِ الجنَّةِ فأضع ذلِكَ البابَ أوِ احفظْهُ

الراوي : أبو الدرداء | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 2970 | خلاصة حكم المحدث : صحيح

தந்தை சொர்க்கத்தின் வாசல்களுள் மையவாசல் ( ஆவார் ) எனவே நீ அக்கதவை வீணாக்கிவிடு அல்லது அதைப் பேணிக்கோள் என்று நபி ஸல் கூறியதாக அபூ தர்தா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 2970 தரம் : ஸஹீஹ்


தொழுகையை விட்டவர் காஃபிர்

العَهدُ الَّذي بيننا وبينهم الصَّلاةُ ، فمَن تركَها فَقد كَفرَ

الراوي : بريدة بن الحصيب الأسلمي | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2621 | خلاصة حكم المحدث : صحيح   
 
நமக்கும் இறைமறுப்பாளர்களுக்குமிடையே இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என புரைதா ( ரலி ) 

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2621 தரம் : ஸஹீஹ்


அமல்களில் சிறந்தது

سُئِلَ رسولُ اللهِ صلى الله عليه وسلم أيُّ الأعمالِ أفضلُ؟ قال: الصلاةُ في أولِ وقتِها..

الراوي : أم فروة بنت أبي قحافة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 426 | خلاصة حكم المحدث : صحيح

அமல்களில் சிறந்தது எது என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவது என்றார்கள்.என உம்மு ஃபர்வா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 426 தரம் : ஸஹீஹ்


தொழாதவர்களுடைய மறுமை நண்பர்கள்

أنَّهُ : ذَكَرَ الصَّلاةَ يومًا فقالَ : من حافظَ علَيها كانت لَهُ نورًا وبرهانًا ونَجاةً يومَ القيامةِ ، ومن لم يحافِظ عليها لم يَكُن لَهُ نورٌ ، ولا برهانٌ ، ولا نجاةٌ ، وَكانَ يومَ القيامةِ معَ قارونَ ، وفرعونَ ، وَهامانَ ، وأبيِّ بنِ خلفٍ

الراوي : عبدالله بن عمرو | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 10/83 | خلاصة حكم المحدث : إسناده صحيح

யார் தொழுகையைப் பேணிக் கொள்கிறாரோ அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும், அத்தாட்சியாகவும்,மறுமை நாளில் ஈடேற்றமாகவும் ஆகிவிடும். மேலும் எவன் அதை பேணிக் கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, சாட்சியாகவோ,ஈடேற்றமாகவோ இருக்காது. (மாறாக) அவன் மறுமை நாளில் காரூன், பிர்அவ்ன், காமான், உபைபின் கஃப் ஆகியோருடன் இருப்பான். என நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். என அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 83/10 தரம் : ஸஹீஹ்


ஜந்து நேரதொழுகை ஜம்பது நேர தொழுகைக்கு நிகரானது

فُرِضَتْ عَلى النَّبيِّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ ليلةَ أُسرِيَ بِه الصَّلواتُ خَمسينَ ، ثُمَّ نَقصَتْ حتَّى جُعِلَتْ خَمسًا ، ثُمَّ نودِيَ : يا محمَّدُ : إنَّهُ لا يُبَدَّلُ القولُ لديَّ ، وإنَّ لَكَ بِهذِهِ الخمسِ خَمسينَ

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 213 | خلاصة حكم المحدث : صحيح

நபி ( ஸல் ) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்ட (மிஅராஜ் ) இரவில் அவர்களுக்கு ஜம்பது தொழுகைகள் ( ஆரம்பத்தில் ) கடமையாக்கப் பட்டன. பிறகு ( படிப்படியாக ) குறைக்கப்பட்டு ஜந்து வேளையாக ஆக்கப்பட்டன பிறகு “ முஹம்மதே ! என்னிடம் இந்தச் சொல் மாற்றப்படாது ; இந்த ஜவேளைத் தொழுகைகளுக்கு ஜம்பது வேளை தொழுகை ( களுக்குரிய நன்மை) கள் உமக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ  213 தரம் : ஸஹீஹ்


சாபத்தை பெற்று தரும் செயல்கள் 
 
لَعَنَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بالنِّسَاءِ، والمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بالرِّجَالِ

الراوي : عبدالله بن عباس | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5885 | خلاصة حكم المحدث : [صحيح]

ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும்  நபி ஸல்  சபித்தார்கள். என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் புஹாரி  5885 தரம் : ஸஹீஹ்


சாபத்தை பெற்று தரும் செயல்கள் 

رَأَيْتُ أبِي اشْتَرَى حَجَّامًا، فأمَرَ بمَحَاجِمِهِ، فَكُسِرَتْ، فَسَأَلْتُهُ عن ذلكَ قالَ: إنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ نَهَى عن ثَمَنِ الدَّمِ، وثَمَنِ الكَلْبِ، وكَسْبِ الأمَةِ، ولَعَنَ الوَاشِمَةَ والمُسْتَوْشِمَةَ، وآكِلَ الرِّبَا، ومُوكِلَهُ، ولَعَنَ المُصَوِّرَ.

الراوي : وهب بن عبدالله السوائي أبو جحيفة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 2238 | خلاصة حكم المحدث : [صحيح]

என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரின் தொழிற் கருவிகளை உடைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகிற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடுத்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்தி விடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்!' என்று பதிலளித்தார்கள்!'

நூல் : ஸஹீஹ் புஹாரி 2238 தரம் : ஸஹீஹ்


சாபத்தை பெற்று தரும் செயல்கள் 

لَعَنَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ الواصِلَةَ والمُسْتَوْصِلَةَ.

الراوي : أسماء بنت أبي بكر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5936 | خلاصة حكم المحدث : [صحيح]

நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும்  சபித்தார்கள். என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் புஹாரி 5936 தரம் : ஸஹீஹ்


சாபத்தை பெற்று தரும் செயல்கள் 

مَن أشارَ إلى أخِيهِ بحَدِيدَةٍ، فإنَّ المَلائِكَةَ تَلْعَنُهُ، حتَّى يَدَعَهُ، وإنْ كانَ أخاهُ لأَبِيهِ وأُمِّهِ.

الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2616 | خلاصة حكم المحدث : [صحيح]

ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்தால்,அவர் அதைக் கைவிடும்வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே" என்று  நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2616 தரம் : ஸஹீஹ்


பெற்றோர்க்கு நன்மை செய்தால் பாவங்கள் மன்னிக்கப்படும்

أنَّ رجلًا أتَى النَّبيَّ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ فقالَ يا رسولَ اللَّهِ إنِّي أصَبتُ ذنبًا عظيمًا فَهَل لي مِن تَوبةٍ قالَ هل لَكَ مِن أمٍّ ؟ قالَ : لا ، قالَ : هل لَكَ من خالةٍ ؟ قالَ : نعَم ، قالَ : فبِرَّها

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي
الصفحة أو الرقم: 1904 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?” என்று கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் “உனக்குத் தாய் இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார். “உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம்” என்றார். அதற்கு நபி ஸல்  அவர்கள் “அவருக்கு உதவிகள் செய்வீராக” என்றார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதி 1904 தரம் : ஸஹீஹ்


சாபத்தை பெற்று தரும் செயல்கள் 

لعَنَ اللهُ مَن لعنَ والدَه ، و لعَنَ اللهُ مَن ذَبِحَ لغيرِ اللهِ ، و لعَنَ اللهُ مَن آوى مُحْدِثًا، و لعَنَ اللهُ مَن غيَّرَ منارَ الأرضِ.

الراوي : علي بن أبي طالب | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4434 | خلاصة حكم المحدث : صحيح

தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல்,மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்"  என நபி ஸல் கூறியதாக அலி ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 4434 தரம் : ஸஹீஹ்


வஹீயை மட்டுமே பின்பற்ற வேண்டும் 

أطيعوني ما كنتُ بين أظهرِكم ، و عليكم بكتابِ اللهِ ، أحلَّوا حلالَه ، و حرَّموا حرامَه

الراوي : عوف بن مالك وعبدالله بن عمرو بن العاص ومعاذ بن جبل | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 1034 

உங்களிடையே நான் இருந்தபோது செய்தவற்றில் என்னை பின்பற்றுங்கள் .அல்லாஹ்வின் வேதத்தைப்பற்றிக் கொள்ளுங்கள் அது அனுமதித்ததை செய்யுங்கள் அது தடுத்தவற்றை தவிருங்கள் என்று நபி ஸல் கூறினார்கள். என அவ்ஃப் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 1034 தரம் : ஸஹீஹ்


வஹீயை பின்பற்றுதல்

خرج علينا رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم فقال أليسَ تشهدون أن لا إلهَ إلا اللهُ وأني رسولُ اللهِ قالوا بلى قال إن هذا القرآنَ طرفُه بيدِ اللهِ وطرفُه بأيدِيكم فتمسكوا به فإنكم لن تضلُّوا ولن تهلِكوا بعدَه أبدًا

الراوي : أبو شريح العدوي خويلد بن عمرو | المحدث : الهيثمي | المصدر : مجمع الزوائد | الصفحة أو الرقم : 1/174 | خلاصة حكم المحدث : رجاله رجال الصحيح |

நபி ஸல் அவர்கள் எங்களிடம் வந்து “ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு எவருமில்லை என்றும் , நான் இறைத்தூதர் என்றும் சான்று பகரவில்லையா ?” என்று கேட்டதற்கு ஆம் பகர்கிறோம் என நபித்தோழர்கள் கூறினர் “ நிச்சயமாக இந்த குர் ஆன் அதன் ஒரு பகுதி அல்லாஹ்வின் கையிலும் அதன் மறுபகுதி உங்களின் கையில் உள்ளது இதை நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் அதன் பிறகு எக்காலமும் வழிகெடவோ, அழிந்து விடவோ மாட்டீர்கள் “ என்று நபி ஸல் கூறினார்கள் .என அபூ ஷுரைஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : மஜ்மஉஸ் ஜவாயித் 1/174 தரம் : ஸஹீஹ்


நம்மை சார்ந்தவர் அல்ல

ليسَ مِنَّا مَن ضَرَبَ الخُدُودَ، وشَقَّ الجُيُوبَ، ودَعَا بدَعْوَى الجَاهِلِيَّةِ.

الراوي : عبدالله بن مسعود | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 1298 | خلاصة حكم المحدث : [صحيح]

 (துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் ,சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்காக)அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் புஹாரி 1298 தரம் : ஸஹீஹ்


பெரியவர்களை கண்ணியப்படுத்த வேண்டும்

ليس منَّا مَن لم يُوقِّرِ الكبيرَ ويرحَمِ الصَّغيرَ ويأمُرْ بالمعروفِ ويَنْهَ عن المنكَرِ

الراوي : عبدالله بن عباس | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 458 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه 

பெரியோரைக் கண்ணியப்படுத்தி,சிறுவர் மீது அன்பு காட்டி, நன்மையை ஏவி, தீமையை தடுக்காதவர் எம்மை சார்ந்தவர் இல்லை என்று நபி ஸல் கூறியதாக  இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 458 தரம் : ஸஹீஹ்


பிறர் புகழவேண்டும் என்பதற்காக நன்மை செய்தல்

عبدُ اللهِ بنُ عمرٍو وقال سمِعْتُ رسولَ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم يقولُ مَن سمَّعَ النَّاسَ بعَمَلِه سمَّع اللهُ به سامِعَ خَلْقِه وصَغَّره وحَقَّره

الراوي : عبدالله بن عمرو | المحدث : الهيثمي | المصدر : مجمع الزوائد | الصفحة أو الرقم : 10/225 | خلاصة حكم المحدث : رجال أحمد وأحد أسانيد الطبراني في الكبير رجال الصحيح

மக்களை கேட்கச் செய்யும் வகையில் ( புகழுக்காக ) ஒருவன் செய்தால் அல்லாஹ் அவனைப்பற்றி தன் படைப்பினங்களிடத்தில் கேட்கச் செய்வதோடு அவனை சிறுமைபடுத்தி இழிவுபடுத்துவான் என்று நபி ஸல் கூறினார்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ரு ‏ ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : மஜ்மஉஸ் ஜவாயித்  10/225 தரம் : ஸஹீஹ்


நற்செயல்களை விளம்பரம் படுத்துதல் பற்றி எச்சரிக்கை

مَن سَمَّعَ سَمَّعَ اللَّهُ به، ومَن يُرائِي يُرائِي اللَّهُ بهِ.

الراوي : جندب بن عبدالله | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 6499 | خلاصة حكم المحدث : [صحيح]

விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்' என்று நபி ஸல் கூறியதைக் கேட்டேன்.என ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் புஹாரி 6499 தரம் : ஸஹீஹ்


நற்செயல்கள் யாவும் இறை திருப்திக்காக மட்டுமே இருக்கவேண்டும்

بَشِّرْ هذه الأُمةَ بِالسَّناءِ ، و الدِّينِ ، و الرِّفعةِ و النَّصرِ ، و التَّمكينِ في الأرضِ ، فمَنْ عَمِلَ مِنهمْ عَمَلَ الآخرةِ للدُّنْيا ، لَمْ يَكُنْ له في الآخرةِ من نَصيبٍ

الراوي : أبي بن كعب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2825 | خلاصة حكم المحدث : صحيح

இந்த சமுதாயத்துக்கு உயர்வும், மதிப்பும் இப்பூமியில் வசதியாக வசிப்பதும் உள்ளது என்று நற்செய்தி கூறுவீராக ! அவர்களில் யாரேனும் மறுமைக்குரிய அமலை இவ்வுலகுக்காகச் செய்தால் எந்தப்பயமுமில்லை என்று நபி ஸல் கூறினார்கள். என உபை பின் கஃப் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமி ( 2825 ) தரம் : ஸஹீஹ்


இரண்டு காரியங்களை தவிர்த்து இருந்தால் பிரார்த்தனை ஏற்றுகொள்ளப்படும்

ما من مُسلمٍ يدعو بدعوةٍ ليسَ فيها إثمٌ، ولا قطيعةُ رحمٍ، إلَّا أعطاهُ اللَّهُ بِها إحدى ثلاثٍ : إمَّا أن تعجَّلَ به دعوتُهُ، وإمَّا أن يدَّخرَها لَهُ في الآخرةِ، وإمَّا أن يَصرِفَ عنهُ منَ السُّوءِ مثلَها قالوا: إذًا نُكْثرُ، قالَ: اللَّهُ أَكْثَرُ

الراوي : أبو سعيد الخدري | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 421 | خلاصة حكم المحدث : صحيح 

பாவமற்ற விஷயங்களிலும், உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான்.

 அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன் என்றார்கள். இதை அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்

நூல்: ஸஹீஹ் முஸ்னத் 421 தரம் : ஸஹீஹ்


அழகிய கடன் 

غفرَ اللَّهُ لرَجلٍ كانَ قبلَكُم ، كانَ سَهْلًا إذا باعَ ، سَهْلًا إذا اشتَرَى ، سَهْلًا إذا اقتَضَى

الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 1320 | خلاصة حكم المحدث : صحيح | 

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தான்.
அவர் விற்கும்போது மென்மையாக நடந்துகொண்டார்.
வாங்கும்போதும் மென்மையாக நடந்துகொண்டார்.
கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் போதும் மென்மையாக நடந்துகொண்டார்.என நபி ஸல் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ ( 1320) தரம் : ஸஹீஹ்


இறைவழிப்பாடுகள் தூய்மையானதாக இருக்க வேண்டும்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ‏:‏ حَجَّ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، عَلَى رَحْلٍ رَثٍّ، وَعَلَيْهِ قَطِيفَةٌ، لا تُسَاوِي أَرْبَعَةَ دَرَاهِمَ، فَقَالَ‏:‏ اللَّهُمَّ اجْعَلْهُ حَجًّا، لا رِيَاءَ فِيهِ، وَلا سُمْعَةَ‏

خلاصة حكم المحدث : صحيح 

நபி ஸல் அவர்கள் பழைய சேணம் போடப்பட்ட வாகனத்தில் ஹஜ் செய்தார்கள். அவ்வாகனத்தின் மீது ஒரு போர்வை இருந்தது .

அது நான்கு திர்ஹத்தின் மதிப்பு கூட கிடையாது .

அப்போது நபி ஸல் அவர்கள் இறைவா ! இந்த ஹஜ்ஜை அடுத்தவர் பார்ப்பதற்காகவும் துதிப்பதற்காகவும் இல்லாமல் ஆக்கு என்று து ஆச் செய்தார்கள் என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : முக்தஸர் ஷமாயிலுத் முஹம்மதியா 288 தரம் : ஸஹீஹ்


அழகிய கடன் 

من أنظر معسرًا فله بكلِّ يومٍ مثلَيه صدقةٌ قال : ثم سمعتُه يقول من أنظَر مُعسرًا فله بكلِّ يومٍ مِثلَيه صدقةٌ قلت : سمعتُك يا رسولَ اللهِ تقول من أنظر مُعسرًا فله بكلِّ يومٍ مِثلِه صدقةُ ثم سمعتُك تقول : من أنظر مُعسرًا فله بكلِّ يومٍ مثلَيه صدقةٌ قال : له بكلِّ يومٍ صدقةٌ قبلَ أن يَحلَّ الدَّينُ فإذا حلَّ الدَّينُ فأنظَرَه فله بكلِّ يومٍ مثلَيهِ صدقةٌ

الراوي : بريدة بن الحصيب الأسلمي | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1/170 | خلاصة حكم المحدث : إسناده صحيح |
கடனால் சிரமப்படுபவருக்கு யாரேனும் அவகாசம் அளித்தால் அக்கடனை நிறைவேற்றும் காலம் வருவதற்கு முன் ( அவர் அளிக்கும் ) ஒவ்வொரு நாளுக்குப் பகரமாக அவர் கொடுத்த கடன் போன்றதை தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு.

அக்கடனை நிறைவேற்றும் காலம் நெருங்கி வந்து பிறகு மீண்டும் அவருக்கு அவகாசம் அளித்தால் ( அவர் அளிக்கும் ) ஒவ்வொரு நாளுக்குப் பகரமாக அவர் கொடுத்த கடன் போன்று இரண்டு மடங்கை தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என நபி ஸல் கூறினார்கள் என்று புரைதா ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 1/170 தரம் : ஸஹீஹ்


அழகிய கடன்

إنَّ السلفَ يجري مجرى شطرِ الصدقةِ

الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الجامع

الصفحة أو الرقم: 1640 | خلاصة حكم المحدث : صحيح

( ஒருமுறை) கடன் கொடுப்பது ( அதில்) பாதியை தர்மம் செய்தனுடைய இடத்தில் இருக்கிறது என்று நபி ஸல் கூறியதாக இப்னு மஸ்வூத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 1640 தரம் : ஸஹீஹ்


பரகத் நிறைந்த இரவுகள்....!!

عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ َؓ قَالَ لِي رَسُولُ الله ﷺ: إِنَّ أَقْرَبَ مَا يَكُونُ الرَّبُّ مِنَ الْعَبْدِ جَوْفَ اللَّيْلِ اْلآخِرِ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ.

خلاصة حكم المحدث : إسناده صحيح

நிச்சயமாக!! இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ்  அடியானிடம் மிக நெருக்கமாகிவிடுகிறான். உம்மால் முடிந்தால் அந்த நேரத்தில் அல்லாஹ்வை திக்ரு செய்து கொள்வீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக  அம்ருப்னு அபஸா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹுஜைமா 1147 தரம் : ஸஹீஹ்


அநீதி குரோதம் பொறாமை ஆகியவற்றை விட்டு உள்ளத்தை தூய்மைப்படுத்த வேண்டும்

قيل لرسولِ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ أيُّ الناسِ أفضلُ قال كلُّ مخمومِ القلبِ صدوقِ اللسانِ قالوا صدوقُ اللسانِ نعرفُه فما مخمومُ القلبِ قال هو التقيُّ النقيُّ لا إثمَ فيه ولا بغيَ ولا غِلَّ ولا حسدَ

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 3416 | خلاصة حكم المحدث : صحيح

மனிதர்களில் சிறந்தவர் யார் ? என்று நபி ஸல் அவர்களிடம் கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் " உண்மை பேசக்கூடிய தூய்மையான உள்ளம் உடைய ஒவ்வொருவரும் என்று கூறினார்கள்.

அங்கு இருந்த நபித்தோழர்கள் உண்மை பேசக்கூடியவர் என்பதை நாம் அறிவோம் தூய்மையான உள்ளம் உடையவர் என்றால் என்ன ? என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ஸல் அவர்கள் " இறைச்சமுடைய பரிசுத்தமான உள்ளம் உடையவர் ஆகும் அந்த உள்ளத்தில் பாவம், அ நீதி, குரோதம்,பொறாமை ஆகியவை இருக்காது என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு மாஜா 3416 தரம் : ஸஹீஹ்


கல்வியின் சிறப்பு

فضلُ العلْمِ أحبُّ إِلَيَّ مِنْ فضلِ العبادَةِ ، وخيرُ دينِكُمُ الورَعُ

الراوي : سعد بن أبي وقاص وحذيفة بن اليمان | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 4214 | خلاصة حكم المحدث : صحيح

வணக்கவழிபாடுகளின் சிறப்பை விட கல்வியின் சிறப்பு எனக்கு மிக விருப்பமானது. உங்கள் மார்க்கத்தில் சிறந்தது பேணுதலாகும் என்று நபி ஸல் கூறியதாக ஸஅத் பின் அபீ வக்காஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் ஜாமிஃ 4214 தரம் : ஸஹீஹ்


நற்செயல்களில் சிறந்தது 

قلتُ يا رسولَ اللَّهِ مرني بعملٍ قالَ عليكَ بالصَّومِ فإنَّهُ لا عدلَ لَه قلتُ يا رسولَ اللَّهِ مرني بعملٍ قالَ عليكَ بالصَّومِ فإنَّهُ لا عدلَ لَه

الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2222 | خلاصة حكم المحدث : صحيح

நான் நபி ஸல் அவர்களிடம் " நற்செயல்களில் சிறந்தது எது "? என்று வினாவினேன் அதற்க்கு நபி ஸல் அவர்கள் நோன்பு நோற்பதைக் கடைபிடி ஏனெனில் அதற்கு நிகர் கிடையாது என்று கூறினார்கள் இதை அபு உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் நஸாயீ 2222 தரம் : ஸஹீஹ்


ஈமான் என்றால் என்ன ?

الإِيمانُ : أنْ تُؤمن بِاللهِ ومَلائِكتِه ، وكُتُبِهِ ، و رُسُلِهِ ، و تُؤمن بِالجنَّةِ و النَّارِ ، و المِيزانِ ، و تُؤمن بِالبعثِ بعدَ الموتِ ، و تُؤمن بِالقدَرِ خَيرِهِ و شَرِّهِ

الراوي : عمر بن الخطاب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2798 | خلاصة حكم المحدث : صحيح

ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் நம்புவதும் சொர்க்கம்,நரகம் மீஸான் ஆகியவற்றை நம்புவதும் ,மரணித்த பிறகு மீண்டும் எழுப்பப்படுதலையும் விதியையும் அதில் நல்லது,கெட்டதையும் நம்புவதும் ஆகும் என்று நபி ஸல் கூறியதாக உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமி 2798 தரம் : ஸஹீஹ்


உபதேசித்தப்படி நடப்போம்

رأيتُ ليلةَ أُسْرِي بي رجالًا تُقْرَضُ شِفاهُهُمْ بمقاريضَ من نارٍ ، فقلتُ : من هؤلاءِ يا جبريلُ ؟ فقال : الخُطباءُ من أُمَّتِك ، يأمرون الناسَ بالبِرِّ و ينسوْنَ أنفُسَهم ، و هم يتلونَ الكتابَ ، أفلا يعقلونَ ‍

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 291 | خلاصة حكم المحدث : صحيح

மிஃராஜ் இரவில் ஒரு கூட்டத்தாரை நான் கடந்து சென்றபோது, அவர்களுடைய உதடுகள் நரக நெருப்பாலான கத்தரிக்கோல்களால் கத்தரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நான்  ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், இவர்கள் யார்?'' என்று கேட்டேன். இவர்கள் உபதேசம் செய்பவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்யும்படி ஏவிக்கொண்டிருந்தார்கள். மேலும் தன்னை மறந்தவர்களாக (செயல்படாமல்) இருந்தனர். இவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதி வந்தனர். இவர்கள் விளங்கியிருக்க வேண்டாமா?'' என்று  ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்னதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 291 தரம் : ஸஹீஹ்


மன்னிப்பு வழங்கப்படும்

مَن لَقي اللهَ لا يُشرِكُ به شيئًا ، يُصلِّي الصلواتِ الخمسَ ، ويصومُ رمضانَ غُفِر له ....

الراوي : معاذ بن جبل | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1315 | خلاصة حكم المحدث : إسناده صحيح، رجاله ثقات رجال الشيخين

அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காமலும், ஐவேளை தொழுதும், ரமழான் மாத நோன்பும் வைத்த நிலையில், எம்மனிதர் அல்லாஹ்வைச் சந்திக்கிறாரோ, அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக  முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 1315 தரம் : ஸஹீஹ்


உள்ளச்சம் வேண்டும்

أوَّلُ شيءٍ يُرْفَعُ مِنْ هِذِهِ الْأُمَّةِ الخشوعُ حتى لا تَرَى فيها خاشِعًا

الراوي : أبو الدرداء | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2569 | خلاصة حكم المحدث : صحيح

இந்தச் சமுதாயத்திலிருந்து முதன் முதலில் உள்ளச்சம் எடுக்கப்பட்டுவிடும், இச்சமுதாயத்தில் உள்ளச்சமுடைய ஒருவரைக் கூட நீர் காணமாட்டீர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமி 2569 தரம் : ஸஹீஹ்


நரகம் தூரமாக்கப்படும்

من صامَ يومًا فى سبيلِ اللَّهِ باعدَ اللَّهُ بينَهُ وبينَ النَّارِ بذلِكَ اليومِ سبعينَ خريفًا.

الراوي : أبو سعيد الخدري | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2244 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் பாதையில் எவர் ஒருநாள் நோன்பு நோற்பாரோ, அந்த ஒரு நாள் நோன்புக்குப் பகரமாக அவருக்கும், நரகத்திற்குமிடையே அல்லாஹ் எழுபது வருட தொலை தூரத்தை ஏற்படுத்தி விடுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸஈத் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸயீ 2244 தரம் : ஸஹீஹ்


நோன்பும் குர் ஆனும் மறுமையில் சிபாரிசு செய்யும்

الصِّيامُ والقرآنُ يشفَعانِ للعبدِ يومَ القيامةِ يقولُ الصِّيامُ أي ربِّ منعتُهُ الطَّعامَ والشَّهواتِ بالنَّهارِ فشفِّعني فيهِ ويقولُ القرآنُ منعتُهُ النَّومَ باللَّيلِ فشفِّعني فيهِ قالَ فَيشفَّعانِ

الراوي : عبدالله بن عمرو | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 10/118 | خلاصة حكم المحدث : إسناده صحيح

ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : அஹ்மத் 10/118 தரம் : ஸஹீஹ்


நோன்பு திறப்பதை முற்படுத்துதல்

لا تَزَالُ أُمَّتِي على سُنَّتِي مالم تَنْتَظِرْ بفِطْرِها النجومَ . قال : وكان النبيُّ صلَّى اللهُ عليه وسلَّم إذا كان صائمًا أمر رجلًا ، فأَوْفَى على شيءٍ ، فإذا قال : غابَتِ الشمسُ أَفْطَرَ .

الراوي : سهل بن سعد الساعدي | المحدث : الألباني | المصدر : صحيح ابن خزيمة | الصفحة أو الرقم : 2061 | خلاصة حكم المحدث : إسناده صحيح

என்னுடைய உம்மத் சுன்னத்திலேயே இருந்து கொண்டிருக்கும் நோன்பு திறப்பதற்கு நட்சத்திரங்களை எதிர்ப்பார்க்காத காலம் வரை மேலும் நபி ஸல் அவர்கள் நோன்பாளியாக இருந்தால் ஒரு மனிதனுக்கு கட்டளையிடுவார்கள் எதிலாவது ஏறிப்பார்த்து சூரியன் மறைந்து விட்டதென்று அறிவித்தால் நோன்பை திறப்பார்கள் என்று சஹல் இப்னு சஹத் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் :  ஸஹீஹ் இப்னு குஸைமா 2061 தரம் : ஸஹீஹ்


மறுமை நாளின் அடையாளங்களில் இதுவும் ஒன்றும்

سيَأتي علَى النَّاسِ سنواتٌ خدَّاعاتُ يصدَّقُ فيها الكاذِبُ ويُكَذَّبُ فيها الصَّادِقُ ويُؤتَمنُ فيها الخائنُ ويُخوَّنُ فيها الأمينُ وينطِقُ فيها الرُّوَيْبضةُ قيلَ وما الرُّوَيْبضةُ قالَ الرَّجلُ التَّافِهُ في أمرِ العامَّةِ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 3277 | خلاصة حكم المحدث : صحيح

ஏமாற்றுகள் நிறைந்த ஒரு காலம் வரும் அப்போது பொய்யர்கள் உண்மையாளர்களாகவும் ,உண்மையாளர்கள் பொய்யர்களாகவும் , ஏமாற்றுக்காரர்கள் நம்பிக்கையாளர்களாகவும், நம்பத்த்ககுந்தவர்கள் ஏமாற்றுக்காரர்களாகவும் பார்க்கப்படுவார்கள். 

அப்போது மடையர்கள் பேசத் தொடங்கி விடுவார்கள் என நபி ஸல் அவர்கள் கூறிப்பிட்டார்கள் அப்போது (ருவைபிழா ) மடையர்கள் என்றால் யார் ? எனக் கேட்கப்பட்டது அதற்க்கு நபி ஸல் கூறினார்கள் " மடையர்கள் பொதுமக்களின் காரியம் பற்றி பேசுதல் என பதிலளித்தார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 3277  தரம் : ஸஹீஹ்

குறிப்பு : அனஸ் ( ரலி ) மூலமாகவும் வேறு அறிவிப்பாளர் தொடரை கொண்டும் இதே செய்தி இடம்பெற்று உள்ளது


ஒரு சமுதாயம் பிறையில் பிழைவிட்டால்

وفِطرُكم يومَ تفطرونَ وأَضحاكم يومَ تضحُّونَ وَكلُّ عرفةَ موقفٌ وَكلُّ منًى منحَرٌ وَكلُّ فجاجِ مَكَّةَ منحرٌ وَكلُّ جَمعٍ موقفٌ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2324 | خلاصة حكم المحدث : صحيح |

உங்கள் பெரு நாள் என்பது நீங்கள் பெரு நாள் கொண்டாடும் நாளாகும் உளுஹிய்யா என்பது நீங்கள் உளுஹிய்யா கொடுக்கும் நாளாகும். அரஃபாவில் நீங்கள் எங்கு நின்றாலும் அது நிற்குமிடம் தான். மினாவில் நீங்கள் எங்கு அறுத்தாலும் அறுக்கலாம்.

மக்காவில் அனைத்து இடங்களிலும் அறுக்கக் கூடிய இடங்களே எந்த இடங்களிலும் நீங்கள் நிற்கலாம் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2324 தரம் : ஸஹீஹ்


ரமளான் நோன்பின் சிறப்பு

 إذا كانَت أوَّلُ ليلةٍ من رمَضانَ صُفِّدتِ الشَّياطينُ ومَردةُ الجِنِّ وغلِّقت أبَوابُ النَّارِ فلم يُفتَحْ منها بابٌ وفُتِحت أبوابُ الجنَّةِ فلم يُغلَقْ منها بابٌ ونادى منادٍ يا باغيَ الخيرِ أقبِلْ ويا باغيَ الشَّرِّ أقصِر وللَّهِ عتقاءُ منَ النَّارِ وذلِك في كلِّ ليلةٍ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 1339 | خلاصة حكم المحدث : صحيح 

ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜீன்களுக்கும் விலங்கிடப்படும்.

நரகத்தின் கதவுகள் மூடப்படும் அதில் ஒரு கதவும் திறந்திருக்காது மேலும் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும் அதில் எந்த கதவும் மூடப்படாது.

ஒரு இறை அழைப்பாளர் நன்மை செய்பவர்களே ! முன் வாருங்கள் 

பாவம் செய்பவர்களே ! நிறுத்திக் கொள்ளுங்கள் என்று ஒவ்வொரு இரவும் உரக்கச் சொல்வார் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 1339 தரம் : ஸஹீஹ்


தூய்மையான எண்ணம் போல நற்கூலியும் கிடைக்கும்

من أَتَى فِراشَه وهو يَنْوِي أن يقومَ يُصَلِّي من الليلِ فَغَلَبَتْه عينُه حتى يصبحَ كُتِبَ له ما نَوَى ، وكان نومُه صدقةً عليه من ربِّه

الراوي : أبو الدرداء | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 8267 | خلاصة حكم المحدث : صحيح

ஒருவர் இரவில் எழுந்து தொழ வேண்டும் என்ற எண்ணத்துடன் படுக்கைக்குச் செல்கிறார். ஆனால் காலை நேரமாகும் வரை அயர்ந்து உறங்கிவிடுகிறார் இத்தகைய ஒருவருக்கு அவர் எண்ணியதைப் போன்று நன்மை எழுதப்படுகிறது. அவருக்குக் கிடைத்த உறக்கம் அவருடைய இறைவனின் சார்பாக அவருக்கு வழங்கப்பட்ட தர்மம் ஆகும் என்று நபி ஸல் கூறியதாக அபுத்தர்தா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஜாமி ஸஹீர் 8267 தரம் : ஸஹீஹ்


ஜமாஅத்துடன் தொழுவதின் சிறப்பு

إنَّ اللهَ تعالى وملائكتَهُ يُصلُّونَ على الذينَ يَصِلُونَ الصفوفَ، ومنْ سدَّ فرجةً رفعهُ اللهُ بها درجةً

الراوي : عائشة أم المؤمنين | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 1807 | خلاصة حكم المحدث : صحيح

தொழுகை வரிசைகளில் சேர்(ந்து ஜமா அத்துடன் தொழு ) வோருக்கு அல்லாஹ் அருள் புரிகிறான், வானவர்கள் பிரார்த்திக்கின்றனர்.

ஒருவர் ( தொழுகை வரிசையிலுள்ள ) இடைவெளி ஒன்றை நிரப்புவதன் காரணமாக அவருடைய தகுதியொன்றை அல்லாஹ் உயர்த்துகின்றான் என்று நபி ஸல் கூறியதாக ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஜாமி ஸஹீர் 1807 தரம் : ஸஹீஹ்


இமாம் செய்ய வேண்டிய கடமை

...مَن أمَّ النَّاسَ فأصابَ فالصَّلاةُ لهُ ولَهُم ومَن انتقصَ مِن ذلكَ شيئًا فعليهِ ولا علَيهِم

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 809 | خلاصة حكم المحدث : صحيح

....மக்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிப்பவர் சரியாகத் தொழுவித்தால் அத்தொழுகை அவருக்கும் நன்மையாக அமையும் மக்களுக்கும் நன்மையாக அமையும். அவர் அதில் ஏதேனும் குறைபாடு செய்தால் அவருக்கே அது தீமையாக அமையும் மக்களுக்கல்ல என்று நபி ஸல் கூற நான் கேட்டுள்ளேன் என்று உக்பா பின் ஆமிர் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 809 தரம் : ஸஹீஹ்


முஸ்லிம்களின் இருவிஷயங்களை பார்த்து யூதர்கள் பொறாமை அடைவது

ما حسَدَتكُم اليَهودُ علَى شيءٍ ما حسَدَتكُم علَى السَّلامِ والتَّأمينِ

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 704 | خلاصة حكم المحدث : صحيح

ஆமீன் கூறுதல், ஸலாம் கூறுதல் ஆகியவற்றில் யூதர்கள் உங்கள் மீது பொறாமை கொண்டதைப் போன்று வேறெதிலும் அவர்கள் உங்கள் மீது பொறாமை கொண்டதில்லை என்று நபி ஸல் கூறியதாக ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 704 தரம் : ஸஹீஹ்


உணவு உண்ட பின் இறைவனை புகழ்வதினால் சிறப்பு

الطاعِمُ الشَّاكِرُ بمنزلةِ الصائِمِ الصابِرِ

الراوي : أبو هريرة | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 14/214 | خلاصة حكم المحدث : إسناده صحيح | 

உணவு உண்ட பின் நன்றி செலுத்தக் கூடியவன் பொறுமையுள்ள நோன்பாளியைப் போலாவான் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 14/214 தரம் : ஸஹீஹ்


மனைவியின் உரிமைகள்

يا رسولَ اللَّهِ ، ما حقُّ زَوجةِ أحدِنا علَيهِ ؟ ، قالَ : أن تُطْعِمَها إذا طَعِمتَ ، وتَكْسوها إذا اكتسَيتَ ، أوِ اكتسَبتَ ، ولا تضربِ الوَجهَ ، ولا تُقَبِّح ، ولا تَهْجُرْ إلَّا في البَيتِ

الراوي : معاوية بن حيدة القشيري | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2142 | خلاصة حكم المحدث : حسن صحيح

அல்லாஹ்வின் தூதரே எங்கள் மனைவியருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன ? என்று கேட்டேன். அதற்க்கு 

1.நீ உண்ணும் போது அவளை உண்ணச் செய்ய வேண்டும்.

2. நீ உடுத்தும் போது அவளுக்கு உடுத்தக் கொடுக்க வேண்டும் 

3.முகத்தில் அடிக்கக் கூடாது .

4.வீட்டில் தவிர ( வெளியில் ) அவளை வெறுக்கக் கூடாது என்று நபி ஸல் அவர்கள் பதிலளித்தார்கள்  என  முஆவியா ( ரழி ) அறிவித்தார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2142 தரம் : ஹசன் ஸஹீஹ்


தலைமை பொறுப்பு

إن شئتُم أنبأْتُكم عن الإمارةِ و ما هي ؟ أولُها ملامةٌ ، و ثانيها ندامةٌ ، و ثالثُها عذابٌ يومَ القيامةِ ، إلا من عَدَل ، فكيف يعدِلُ مع أقربِيه ؟

الراوي : عوف بن مالك الأشجعي | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1562 | خلاصة حكم المحدث : رجاله رجال الصحيح

நீர் விரும்பினால் இந்தத் தலைமைத் தனத்தின் அந்தரங்கத்தைப் பற்றி கூறுகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், யாரஸூலல்லாஹ், அதனுடைய அந்தரங்கம் என்ன?'' என்று நான்  கேட்டேன். (நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது)

இதனுடைய ஆரம்ப நிலை பழிப்பு, இரண்டாம் நிலை கைசேதம், மூன்றாம் நிலை கியாமத் நாளில் வேதனை, ஆயினும், நீதமாக நடந்து கொண்டவரைத் தவிர! எவர் நீதமாக நடந்தாரோ அவர் வேதனையை விட்டும், பாதுகாக்கப்படுவார், (என்றாலும்) தனக்கு நெருக்கமான உறவினர் போன்றவர்களுடைய காரியங்களில் மனிதன் எப்படி நீதி, நேர்மையுடன் இருக்க முடியும்? என்று நபி ஸல் கூறியதாக அவ்ஃப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 1562 தரம் : ஸஹீஹ்


கால்நடைகளுக்கு உரிய உரிமைகளை கொடுக்கவேண்டும்

اتَّقوا اللهَ في هذه البهائمِ المعجَمَةِ ، فارْكبوها صالحةً و كُلوها صالحةً

الراوي : سهل ابن الحنظلية الأنصاري | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 23 | خلاصة حكم المحدث : إسناده صحيح |

வாயில்லாப் பிராணிகள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். நல்ல முறையில் சவாரி செய்யுங்கள். மேலும் ( அவைகள் களைப்படைவதற்கு முன்பே ) நல்ல முறையில் ( இளைப்பாற ) விட்டுவிடுங்கள் என நபி ஸல் கூறினார்கள் என ஸஹ்ல் பின் ஹன்லலியா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 23 தரம் : ஸஹீஹ்


ஜுமுஆ பிரசங்கம் எப்படி அமைந்து இருக்க வேண்டும்

 أنَّ رسولَ اللهِ صلَّى الله عليه وسلَّم قرأَ يومَ الجمُعةِ تبارَكَ ، وَهوَ قائمٌ ، فذَكَّرَنا بأيَّامِ اللَّهِ ، ....

الراوي : أبي بن كعب | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 919 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ஒரு ஜுமுஆ நாளில் மிம்பர் மீது நின்று தபாரக் ( எனும் 67 ஆம் ) அத்தியாயத்தை ஓதி அல்லாஹ்வின் அருட்கொடைகளையும், சோதனைகளையும் எங்களுக்கு நினைவூட்டி உரை நிகழ்த்தினார்கள் என்று உபை பின் க அப் (ரலி) அறிவிக்கிறார்கள்...

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 919 தரம் : ஸஹீஹ்


வெள்ளிகிழமை அன்று மக்களுக்கு இடையூறு செய்யகூடாது

 أنَّ رجلًا دخلَ المسجدَ يومَ الجمعةِ ، ورسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يخطبُ ، فجعلَ يتخطَّى النَّاسَ ، فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ: اجلِس ، فقد آذيتَ وآنيتَ

الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 923 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு வெள்ளிக்கிழமையன்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் அப்போது ஒருவர் பள்ளிவாசலுக்குள் மக்களைத் தாண்டிக்கொண்டு வரலானார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் அவரை நோக்கி அங்கேயே அமர்வீராக தாமதமாக வந்துவிட்டு ( பிறருக்கு) தொல்லையும் தராதீர் என்று கூறினார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 923 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி

குறிப்பு : ஹாகிம் 1012 ,ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 2847 யில் அப்துல்லாஹ் பின் புஸ்ர் ( ரலி) வழியாக ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளதால் ஸஹீஹ் இப்னுமாஜாவில் வரும் அறிவிப்பு புற சான்றுகளால் ஸஹீஹ் லி கைரிஹி தரத்தை அடையும்


சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ

 كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّه عليه وسلم إذا رفعتِ المائدةُ من بينِ يديْهِ يقولُ الحمدُ للَّهِ حمدًا كثيرًا طيِّبًا مبارَكًا فيهِ غيرَ مودَّعٍ ولاَ مستغني عنْهُ ربُّنا .

الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3456 | خلاصة حكم المحدث : صحيح |

நபி ஸல் அவர்கள் ( சாப்பிட்டு முடித்த பின் ) தமது உணவு விரிப்பை எடுக்கும் போது " அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்த இன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா " என்று பிரார்த்திப்பார்கள்

பொருள் ( அதிகமான தூய்மையான வளமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது இறைவா இப்புகழ் முற்றுப் பெறாதது கைவிடப்படக் கூடாதது தவிர்க்க முடியாதது ஆகும் ) என்று அபூ உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3456 தரம் : ஸஹீஹ்


நமக்குக்கு என்று எழுதபட்ட வாழ்வாதாரம் நம்மை வந்து அடையும்

إنَّ الرِّزقَ ليطلُبُ العبدَ كما يطلُبُه أجَلُه

الراوي : أبو الدرداء | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 3238 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

நிச்சயமாக ஒரு மனிதனை அவன் தவணை ( மெளத் ) தேடி வருவது போல் அவனுடைய ரிஜ்கும் அவனைத் தேடி வரும் என்று நபி ஸல் கூறியதாக அபூ தர்தா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 3238 தரம் : ஸஹீஹ்


பிற முஸ்லிம்களுக்கு செய்ய கூடாதவை

لا يحلُّ لمسلمٍ أن يروِّعَ مسلمًا

الراوي : عبدالرحمن بن أبي ليلى | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 5004 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு முஸ்லிம் பயப்படும்படி நடந்து கொள்வது மற்றொரு முஸ்லிமுக்கு தகாது என்று நபி ஸல் கூறியதாக அபூலைலா ( ரலி)  அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 5004 தரம் : ஸஹீஹ்


ஸலாம் சொல்லியே பேச்சை ஆரம்பம் செய்யவேண்டும்

لا تأذَنُوا لِمَنْ لمْ يبدأْ بالسلامِ

الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 7190 | خلاصة حكم المحدث : صحيح |

ஸலாமைக் கூறி தன் பேச்சை ஆரம்பிக்காதவருக்கு ( பேசுவதற்கு) அனுமதி தர வேண்டாம் என நபி ஸல் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமி 7190 தரம் : ஸஹீஹ்


இந்த பண்புகளை கொண்டவர் மூஃமீன் இல்லை

ليسَ المؤمنُ بالطَّعَّانِ ولا اللَّعَّانِ ولا الفاحشِ ولا البَذيءِ

الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 1977 | خلاصة حكم المحدث : صحيح

எப்போதும் குறை கூறிக்கொண்டே இருப்பவனும் ,சபிப்பவனும்,ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறை நம்பிக்கையாளன் இல்லை என்று நபி ஸல் கூறியதாக இப்னு மஸ்ஊத் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 1977 தரம் : ஸஹீஹ்


நரகவாசிகளின் பண்புகள் சில

....ألا أُخْبِرُكُمْ بأَهْلِ النَّارِ: كُلُّ عُتُلٍّ، جَوّاظٍ مُسْتَكْبِرٍ.

الراوي : حارثة بن وهب الخزاعي | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 4918 | خلاصة حكم المحدث : [صحيح

 நபி ஸல் அவர்கள் கூறியதாக ஹாரிஸா இப்னு வஹ்ப் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கட்டுமா?
அவர்கள் இரக்கமற்றவர்கள்; அகம்பாவம் கொண்டவர்கள்; பெருமை பிடித்தவர்கள்' 

 நூல் : புஹாரி 6071 தரம் : ஸஹீஹ்


இறை நம்பிக்கையாளர் மட்டுமே சுவனம் செல்லுவார்

يا ابنَ الخَطَّابِ ! اذْهَبْ فنادِ في الناسِ : إنه لا يَدْخُلُ الجنةَ إلا المؤمنونَ

الراوي : عمر بن الخطاب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 7837 | خلاصة حكم المحدث : صحيح

கத்தாபின் புதல்வரே! நீங்கள் சென்று, "இறைநம்பிக்கையாளர்கள்தாம் சொர்க்கத்தில் நுழைவார்கள்" என்று மக்களுக்கு அறிவித்துவிடுங்கள்!" என்று நபி ஸல் கூறினார்கள் என உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமி 7837 தரம் : ஸஹீஹ்


மன தூய்மையுடன் சொல்லப்படும் கலிமாவின் சிறப்பு

ما قالَ عبدٌ لا إلَهَ إلَّا اللَّهُ قطُّ مخلِصًا، إلَّا فُتِحَت لَهُ أبوابُ السَّماءِ، حتَّى تُفْضيَ إلى العرشِ، ما اجتَنبَ الكبائرَ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3590 | خلاصة حكم المحدث : حسن |

ஓர் அடியான் "லா இலாஹ இல்லல்லாஹ்" என்று மனத் தூய்மையுடன் சொல்லும்போது, சொல்பவர் பெரும் பாவங்களிலிருந்து விலகியிருக்கும் நிலையில் இக்கலிமாவுக்காக வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு அது நேரடியாக அர்ஷ் வரை சென்றடையாமல் இருப்பதில்லை.என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3590 தரம் : ஹஸன்


சுன்னத்தான நோன்புகள்

كانَ النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ يتحرَّى صومَ الاثنينِ والخَميسِ

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 745 | خلاصة حكم المحدث : صحيح

நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் திங்கள் மற்றும் வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள் என்று அன்னை ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 745 தரம் : ஸஹீஹ்


பிறரிடம் அழகிய முறையில் பழக வேண்டும்

إن كان النبيُّ لَيُخالطُنا ، حتى يقولَ لأخٍ لي صغيرٍ : يا أبا عُمَيرُ ! ما فعل النُّغَيرُ

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الأدب المفرد | الصفحة أو الرقم : 203 | خلاصة حكم المحدث : صحيح

நபி(ஸல்) அவர்கள் எங்களுடன் (இனிமையாகப்) பழகுவார்கள். எந்த அளவிற்கென்றால், சிறுவனாக இருந்த என் தம்பியிடம் 'அபூ உமைரே! பாடும் உன்னுடைய சின்னக் குருவி (புள்புள்) என்ன ஆயிற்று?' என்று கூடக் கேட்பார்கள். என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அல்-அதபுல் முஃப்ரத் 203 தரம் : ஸஹீஹ்


நற்பண்புகளை பிறருக்கு கற்றுகொடுக்க வேண்டும்

أنه استأذن على النبيِّ صلى الله عليه وسلم وهو في بيتٍ فقال ألِجُ فقال النبيُّ صلى الله عليه وسلم لخادمِه: اخرُجْ إلى هذا فعلِّمْه الاستئذانَ ، فقل له: قلْ: السلامُ عليكم أأدخُلُ ؟ فسَمِعَه الرجلُ, فقال: السلامُ عليكم ، أأدخُلُ ؟ فأذن له النبيُّ صلى الله عليه وسلم ، فدخل.

الراوي : رجل من بني عامر | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 5177 | خلاصة حكم المحدث : صحيح

(பனூ ஆமிர் குலத்தைச் சார்ந்த) ஒரு மனிதர் நபி ஸல் அவர்கள் வீட்டில் இருக்கும் போது “ நான் நுழையலாமா ?” என்று அனுமதி கோரினார் நபியவர்கள் தன்னுடைய பணியாளருக்கு “ நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையை கற்றுக் கொடு.” அஸ்ஸலாமு அலைக்கும் ( என்று முதல் ஸலாம் கூறி பிறகு ) நான் நுழையலாமா ?” என்று தான் ( அனுமதி பெறும்போது ) கூறவேண்டும். “ என்று அவருக்குச் சொல் “ என்று கூறினாகள்.

அம்மனிதர் இதனைச் செவியேற்றார். உடனே “ அஸ்ஸலாமு அலைக்கும் “ என்று கூறி “ நான் நுழையலாமா ?” என்று ( அனுமதி கோரினார் ) நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள் என்று அபூ ஸயித் ( ரலி ) அறிவிக்கிறார்கள் 

 நூல் :  ஸஹீஹ் அபூதாவூத் 5177 தரம் : ஸஹீஹ்


சொர்க்கத்தை கடமையாகும் செயல்கள்

سمِع النَّبيُّ صلَّى اللهُ عليهِ وسلَّمَ رجلًا وهو في مَسيرٍ له يقولُ: اللهُ أكبرُ، اللهُ أكبرُ . فقال نبيُّ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ: علَى الفطرةِ . قال: أشهدُ أن لا إلهَ إلَّا اللهُ . قال: خرجَ من النَّارِ . فاستبقَ القومُ إلى الرَّجلِ فإذا راعي غنمٍ حضَرتْهُ الصَّلاةُ فقام يؤذِّنُ .

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح ابن خزيمة | الصفحة أو الرقم : 399 | خلاصة حكم المحدث : إسناده صحيح

நபி ( ஸல் ) பிரயாணம் செய்யும் போது ஒருவர் " அல்லாஹு அக்பர் ,அல்லாஹு அக்பர் என்று கூறுவதை கேட்டார்கள் 

இயற்கையான வழிப்படியே உள்ளார் என்று கூறினார்கள் அவர் அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறினார்

நரகத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார் என்று கூறினார்கள் அந்த மனிதரிடம் மக்கள் முன்னோக்கினர் அப்போது அவர் தொழுகை நேரம் வந்ததும் பாங்கு கூறுபவரான ஆடு மேய்ப்பாளராக இருந்தார் என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு குஸைமா 399 தரம் : ஸஹீஹ்


முன் பாவங்கள் மன்னிக்கப்படும்

....مَن تَوضَّأَ كما أُمِرَ ، وصلَّى كما أُمِرَ ، غُفِرَ لَهُ ما قدَّمَ مِن عملٍ

الراوي : عاصم بن سفيان الثقفي | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 144 | خلاصة حكم المحدث : صحيح

ஒருவர் கட்டளையிடப்பட்டது போன்று ஒளுச்செய்து ,கட்டளையிடப்பட்டது போன்று தொழுதால் அவர் முன்பு செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி ஸல் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்சாரீ ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் நஸாயீ 144 தரம் : ஸஹீஹ்


பெருந்தன்மையோடு பிறரை மன்னித்து வாழ வேண்டும்

يا عقبةُ بنَ عامرٍ صِلْ من قطعَكَ وأَعْطِ من حَرَمَكَ واعْفُ عمَّن ظلمَكَ ....

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 6/859 | خلاصة حكم المحدث : إسناده صحيح

உன்னை ( வெறுத்து ஒதுக்குபவனோடு )  நீ சேர்ந்தே இரு . உன்னை தவிர்ப்பவனுக்கும் நீ கொடுத்து வாழ். உனக்கு அநியாயம் செய்தவனை பெருந்தன்மையோடு மன்னித்துவிடு என்று நபி ஸல் எனக்கு அறிவுரை கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 6/859 தரம் : ஸஹீஹ்


கடைசி தருனத்திலும் கலிமாவை சொல்லி கொடுக்க வேண்டும்

دخَل على رجُلٍ مِن بني النَّجَّارِ يعُودُه، فقال له رسولُ اللهِ صلَّى اللهُ عليه وعلى آلِه وسلَّم: يا خالِ، قُلْ: لا إلهَ إلَّا اللهُ، فقال: أوخَالٌ أنا أو عَمٌّ؟! فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وعلى آلِه وسلَّم: لا، بل خَالٌ، فقال له: قُلْ لا إلهَ إلَّا اللهُ، قال: هو خَيْرٌ لي؟ قال: نَعَم.

الراوي : أنس بن مالك | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 31 | خلاصة حكم المحدث : صحيح

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்ற போது, (அவரை நோக்கி) மாமாவே! லாயிலாஹ இல்லல்லாஹு எனச் சொல்வீராக! என்று சொன்ன போது (நான் உங்களுக்கு) மாமாவா? அல்லது சிறிய தந்தையா? எனக் கேட்டார்.

 நபி(ஸல்) அவர்கள் நீங்கள் மாமா தான் என்று சொன்னார்கள். பிறகு அவர், லாயிலாஹ இல்லல்லாஹு என்று சொல்வது எனக்கு நன்மையாகுமா? எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள் என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் முஸ்னத் 31 தரம் : ஸஹீஹ்


மய்யித்தை குளிப்பாட்டியவர் குளித்துக்கொள்வது

مَن غسَّل ميِّتًا فليغتسِلْ ومَن حمَله فليتوضَّأْ

الراوي : أبو هريرة | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان

الصفحة أو الرقم: 1161 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

யார் மய்யித்தை குளிப்பாட்டினார்களோ அவர் குளித்துக்கொள்ளட்டும் யார் அதனை சுமந்து சென்றார்களோ அவர் வுளூ செய்து கொள்ளட்டும் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுஹிப்பான் 1161 தரம் : ஸஹீஹ்


அதிகம் சோதிக்கப்படுபவர் 

يا رسولَ اللَّهِ أيُّ النَّاسِ أشدُّ بلاءً قالَ الأنبياءُ ثمَّ الأمثَلُ فالأمثَلُ يُبتَلَى العبدُ علَى حَسبِ دينِهِ .....

الراوي : سعد بن أبي وقاص | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 3265 | خلاصة حكم المحدث : حسن صحيح

அல்லாஹ்வின் தூதரே ! மக்களில் அதிகமாக சோதனைக்கு உட்படுத்தபடுபவர்கள் யார் என்று ஸஃது ( ரலி ) கேட்டார்கள் அதற்க்கு நபி ஸல் பின்வருமாறு கூறினார்கள் :

நபிமார்கள், பின்னர் நல்லடியார்கள் பின்னர் மக்களில் அல்லாஹ்வை அதிகம் வழிப்படுபவர்கள் என்று பதில் உரைத்தார்கள் இதை ஸஃது பின் அபீ வக்காஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 3265 தரம் : ஹஸன் ஸஹீஹ்


சுவனத்தை விட்டு தடுக்கப்பட்டவர்கள் 

أيُّمَا امرأةٍ سألت زوجَها طلاقًا في غيرِ ما بأسٍ فحرامٌ عليها رائحةُ الجنةِ

الراوي : ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2226 | خلاصة حكم المحدث : صحيح

எந்தவொரு பெண் தன் கணவனிடம் எக்காரணமும் இன்றி  விவாகரத்தை வேண்டினால் அவள் மீது சொர்க்கத்தின் வாடையை கூட நுகர ( அனுமதி ) இல்லை என்று நபி ஸல் கூறியதாக ஸெளபான் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2226 தரம் : ஸஹீஹ்


பிறருக்கு கல்வியை கற்றுகொடுப்பது

 من علَّم علمًا فله أجرُ من عمِل به ، لا ينقصُ من أجرِ العاملِ

الراوي : معاذ بن أنس | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 6396 | خلاصة حكم المحدث : صحيح

ஒருவன் கல்வியை கற்றுக் கொடுத்தால் அவனுக்கு அக்கல்வியை செயல்படுத்து ஒருவனது கூலி உண்டு; இதனால் செயல்படுத்துபவனின் கூலியில் ஏதும் குறைந்துவிடாது என்று நபி ஸல் கூறினார்கள் என முஆத் இப்னு அனஸ்( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமி 6396 தரம் : ஸஹீஹ்


மகிழ்ச்சியான செய்திகளை அடைந்தால் 

أنَّهُ كانَ إذا جاءَهُ أمرُ سرورٍ أو بشِّرَ بِهِ خرَّ ساجدًا شاكرًا للَّهِ

الراوي : أبو بكرة نفيع بن الحارث | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2774 | خلاصة حكم المحدث : صحيح

சந்தோசமான செய்தி எத்தினால் அல்லது நன்மாரயம் கூறப்பட்டால் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக நபி ஸல் ஸஜ்தா செய்வார்கள் என்று அபூ பக்ரா ( ரல் ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2774 தரம் : ஸஹீஹ்


சாபத்தை பெற்று தரும் செயல்கள் 

لعنَ رسولُ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ الرَّاشِيَ والْمُرْتَشِيَ

الراوي : عبدالله بن عمرو | المحدث : الترمذي | المصدر : سنن الترمذي | الصفحة أو الرقم : 1337 | خلاصة حكم المحدث : حسن صحيح

இலஞ்சம் வாங்குபவனையும் இலஞ்சம் கொடுப்பவனையும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சபித்தார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ரு ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸுனன் திர்மிதீ 1337 தரம் : ஹஸன் ஸஹீஹ்


சாபத்தை பெற்று தரும் செயல்கள்

اتَّقوا الملاعِنَ الثَّلاثَ : البَرازَ في المواردِ، وقارِعةِ الطَّريقِ، والظِّلِّ

الراوي : معاذ بن جبل | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 139 | خلاصة حكم المحدث : صحيح

தண்ணீர் துறைகளில், நடைபாதைகளின் ஒரத்தில், நிழல் உள்ள இடத்தில் மலம் கழித்தல் ஆகிய சாபத்திற்குரிய மூன்று செயல்களை அஞ்சிக்கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : அல் ஜாமிவு ஸகீர் 139 தரம் : ஸஹீஹ்


சாபத்தை பெற்று தரும் செயல்கள் 

مَنْ آذَى المسلِمينَ في طُرُقِهمْ وجَبَتْ عليه لعنَتُهُمْ

الراوي : حذيفة بن أسيد وأبو ذر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 5923 | خلاصة حكم المحدث : حسن

முஸ்லிம்கள் பயன்படுத்தும் பாதைகளில் அவர்களுக்கு ஒருவர் இடைஞ்சல் தந்தால் அவர் மீது முஸ்லிம்களின் சாபம் உண்டாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என ஹுதைபா இப்னு அஸீத் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் அல் ஜாமி 5923 தரம் : ஹஸன்


அல்லாஹ்வின் படை

لا يزالُ اللهُ يغرِسُ في هذا الدِّينِ بغرسٍ يستعمِلُهم في طاعتِه

الراوي : أبو عنبة الخولاني | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 326 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

இந்த மார்க்கத்தில் அல்லாஹ் ஒரு சாராரை உருவாக்கிக் கொண்டே இருப்பான். அவர்களை தனது சேவைக்காக பயன்படுத்திக் கொள்வான்’ என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஇனபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

 நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 326 தரம் : ஸஹீஹ்


நட்பை முறிப்பது கொலைக்கு சமம்

من هجر أخاه سنةً ، فهو كسفكِ دمِه.

الراوي : أبو خراش السلمي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 4915 | خلاصة حكم المحدث : صحيح 

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூகிராஷ் ஸுலமீ ( ரலி ) அறிவிக்கிறார்கள்:

எவர் தன் முஸ்லிம் சகோதரருடன் ( கோபம் கொண்டு ) ஒர் ஆண்டு காலம் வரை நட்புகொள்ளாமல் இருப்பது அவரது இரத்தத்தை ஓட்டியதைப் போன்று ஆகும்.

நூல் : அபூதாவூத் 4915 தரம் : ஸஹீஹ்


முஃமீனுக்கு உதாரணம் 

مَثَلُ المؤمنِ مَثَلُ النَّخلةِ إنْ أكَلتْ أكَلتْ طيِّبًا وإنْ وضَعتْ وضَعتْ طيِّبًا

الراوي : أبو رزين العقيلي | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 5230 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

ஒரு முஃமீன் தேனீக்கு ஒப்பாக இருக்கிறார் அந்த தேனீ ஆகுமாக்கப்பட்ட உயர்தரமானவற்றையே மட்டுமே உண்கிறது. உயர்தரமானவற்றை மட்டுமே ( மற்றவர்களுக்காக ) வைக்கிறது என்று நபி ஸல் கூறியதாக அபூ ராஜீன் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (5230) தரம் : ஸஹீஹ்


முஃமீனுக்கு உதாரணம் 

....والَّذي نفسُ محمَّدٍ بيدِهِ إنَّ مثلَ المؤمنِ لَكَمثلِ القطعةِ مِنَ الذَّهبِ نفَخَ عليها صاحبُها فلم تَغيَّرْ ولم تَنقُصْ ...

الراوي : عبدالله بن عمرو | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 11/90 | خلاصة حكم المحدث : إسناده صحيح

 முஹம்மதின் உயிர் எவன் கைகளில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக ஒரு முஃமீனுக்கு உதாரணம் தங்க துண்டைப் போன்றதாகும். அதற்குரியவர் அதன் மீது ஊதினாலும் அந்த தங்கத்தின் தன்மை மாறாது மதிப்பும் குறையாது என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 11/90 தரம் : ஸஹீஹ்


முஃமீனுக்கு உதாரணம்

مَثَلُ المؤمنِ مثلُ السُّنبُلةِ ، تميلُ أحيانًا ، و تقوم أحيانًا

الراوي : أنس بن مالك وأبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 5845 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு முஃமீனுக்கு உதாரணம் நெற்கதிரை போன்றதாகும் ( காற்று அடிக்கும் ) போது சில நேரம் சாயும் சில நேரம் நிமிர்ந்து நிற்க்கும் என்று நபி ஸல் கூறியதாக அன்ஸ் பின் மாலிக்( ரலி) மற்றும் அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ்  அல் ஜாமி 5845 தரம் : ஸஹீஹ்


ஒற்றுமையாக இருப்போம்

ألا أخبرُكم بأفضلِ من درجةِ الصيامِ والصلاةِ والصدقةِ ؟ قالوا: بلى، قال: إصلاحُ ذاتِ البينِ ، وفسادُ ذاتِ البينِ الحالِقةُ.

الراوي : أبو الدرداء | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 4919 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூதர்தா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :

நோன்பு, தொழுகை , தான தர்மங்களை விடச் சிறந்த காரியத்தைச் நான் உங்களுக்கு சொல்லட்டுமா ? என நபி ( ஸல் ) அவர்கள் கேட்டார்கள்,( அங்கு உள்ள நபித்தோழர்கள் கூறுங்கள் இறைத்தூதரே என்று கூறினர் )

மக்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவது இவை அனைத்திலும் சிறந்தது ஏனெனில் ஒற்றுமையின்றி இருப்பது மார்க்கத்தை( தீனை) சிரைத்துவிடக் கூடியது .

தலைமுடியை முழுமையாகச் சிரைத்துவிடுவது போலத் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வது மார்க்கத்தை( தீனை) இல்லாமலாக்கிவிடும் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் ( 4919) தரம் : ஸஹீஹ்


நட்பை முறித்தவனின் நிலை !

لا يحلُّ لمسلمٍ أن يهجرَ أخاه فوقَ ثلاثٍ ، فمن هجرَ فوقَ ثلاثٍ فمات، دخل النارَ.

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 4914 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :

தன் முஸ்லிம் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் நட்பை முறித்து இருப்பது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல ! எவர் மூன்று நாட்களுக்கும் அதிகமாகத் நட்பை முறித்து அதே நிலையில் இறந்துவிட்டால் அவர் நரகத்திற்க்கு செல்வார் என்று கூறினார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 4914 தரம் : ஸஹீஹ்


கடமையான தொழுகைக்கு பாங்கு அவசியம் 

يعجَبُ ربُّكَ من راعي غنمٍ ، في رأسِ شظيَّةِ الجبلِ يؤذِّنُ بالصَّلاةِ ويصلِّي فيقولُ اللَّهُ عزَّ وجلَّ انظروا إلى عبدي هذا يؤذِّنُ ويقيمُ الصَّلاةَ يخافُ منِّي قد غَفرتُ لعَبدي ، وأدخلتُهُ الجنَّةَ

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 665 | خلاصة حكم المحدث : صحيح

மலை உச்சியில் நின்று, தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து பின்பு தொழுகின்ற இடையனை (ஆடு மேய்ப்பவனை)க் கண்டு அல்லாஹ் மகிழ்ச்சி அடைகிறான்.’ அப்போது அல்லாஹ் கூறுகிறான்: ‘என்னுடைய இந்த அடியானை பாருங்கள். அவன் தொழுகைக்கு அழைப்புக் கொடுத்து விட்டு, தொழுகிறான். அவன் என்னைப் பற்றி மிக அச்சஉணர்வு கொண்டவனாக விளங்குகிறான். என்னுடைய (இந்த) அடியானின் பாவங்களை நான் மன்னித்து, அவனை சுவர்கத்தினுள் நுழையச் செய்துவிட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறினார்கள் 

இதை உக்பா இப்னு ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் நஸயீ 665 தரம் : ஸஹீஹ்


இருகரங்களை ஏந்தி பிரார்தித்தல்

إنَّ ربَّكم تبارَكَ وتعالى حيِيٌّ كريمٌ، يستحيي من عبدِهِ إذا رفعَ يديهِ إليهِ، أن يردَّهُما صِفرًا

الراوي : سلمان الفارسي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 1488 | خلاصة حكم المحدث : صحيح

நிச்சயமாக உங்கள் இரட்சகன் வெட்கமுள்ளவன். கொடையாளன். தனது அடியார் இரு கரம் ஏந்தி கேட்கும் போது வெறுங்கையுடன் திருப்பு அனுப்புவதற்கு வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸல்மான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 1488 தரம் : ஸஹீஹ்


அனைத்து பொறுப்புகளுக்கும் மறுமையில் விசாரனை உண்டு

إنَّ اللهَ سائلٌ كلَّ راعٍ عمَّا استرعاه: أحفِظ أم ضيَّع حتَّى يسأَلَ الرَّجلَ عن أهلِ بيتِه

الراوي : الحسن | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 4493 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

ஒவ்வொரு கண்காணிப்பாளரையும் அவர் மேய்ப்பவற்றை பற்றி ( மறுமை நாளில் ) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்கிறான். அவர் அதனை பாதுகாத்தாரா அல்லது வீணாக்கி விட்டாரா என்று கேட்கப்படும் அவனுடைய வீட்டாரைப் பற்றியும் அம்மனிதன் கேட்கப்படுவான் என நபி ஸல் கூறியதாக ஹஸன் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் ( 4493) தரம் : ஸஹீஹ்


பெருநாள் நாட்களில் விளையாடுவது

كانَ لأهْلِ الجاهليَّةِ يومانِ في كلِّ سنَةٍ يلعَبونَ فيها فلَمَّا قدمَ النَّبيُّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ المدينةَ قالَ كانَ لَكُم يومانِ تلعَبونَ فيهِما وقد أبدلَكُمُ اللَّهُ بِهِما خيرًا منهُما يومَ الفطرِ ، ويومَ الأضحى

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 1555 | خلاصة حكم المحدث : صحيح

நபி ஸல் அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனா வாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விளையாடுபவர்களாக இருந்தார்கள். அப்போது நபி ஸல் அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள். அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில் தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு நபி ஸல் அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெரு நாள் ஹஜ் பெரு நாள் என்ற இரண்டு நட்களை அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்.என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் நஸாயீ 1555 தரம் : ஸஹீஹ்


அனைத்துக்கும் மருந்து உண்டு 

قالَتِ الأعرابُ : يا رسولَ اللَّهِ ألا نَتداوى قالَ : نعَم يا عبادَ اللَّهِ تداوَوا فإنَّ اللَّهَ لم يضَعْ داءً إلَّا وضعَ لَهُ شفاءً أو دواءً إلَّا داءً واحدًا فَقالوا : يا رسولَ اللَّهِ وما هوَ قالَ : الهرمُ

الراوي : أسامة بن شريك | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2038 | خلاصة حكم المحدث : صحيح

ஓர் கிராமவாசி வந்து அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் நோய் உற்று இருக்கும் போது மருத்துவம் பார்க்கலாமா என்று கேட்டார் அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் அல்லாஹ்வின் அடியார்களே மருத்துவம் செய்யுங்கள் எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கி அருளவில்லை ஒன்றை தவிர அதற்க்கு அந்த கிராமவாசி அது என்ன அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார் அவை தான் முதுமை ஆகும் என்று நபி ஸல் கூறியதாக உஸாமா பின் ஷரீக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2038 தரம் : ஸஹீஹ்


ஆரோக்கியத்துடன் இருக்கும் போது செய்யும் நற்காரியங்கள்

إذا ابتلى اللَّهُ العبدَ المسلِمَ ببلاءٍ في جسَدِهِ قالَ اللَّهُ : اكتُب لَه صالِحَ عملِه الَّذي كانَ يعملُهُ فإن شفاهُ غسلَه وطَهَّرَه وإن قبضَه غفرَ لَه ورحِمَهُ .

الراوي : أنس بن مالك | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند | الصفحة أو الرقم : 30 | خلاصة حكم المحدث : صحيح ، رجاله رجال الصحيح
 

அல்லாஹ் ஒரு முஸ்லிம் அடியானுக்கு உடலில் நோயைக் கொடுத்து சோதித்தால் 

 இறைவன் ( வானவர்களுக்கு ) கட்டளையிடுவான் :

இந்த அடியானுக்கு அவர் ( நல்ல நிலையில் செய்துவந்த ) அனைத்து நற்செயகளையும் பதிவு செய்யுங்கள் என்று கட்டளையிடுவான்.

 பிறகு அவருக்கு உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்துவிட்டால் அவரை ( பாவங்களை விட்டும் ) கழுவிச் சுத்தம் செய்கிறான்.

அவரது உயிரைக் கைப்பற்றிவிட்டால் அவரது பாவங்களை மன்னித்து அவர் மீது அருள்பொழிகிறான்.

நூல் : ஸஹீஹ் அஹ்மத் ( 30 ) தரம் : ஸஹீஹ்


பாவமன்னிப்பு துஆக்கள் 

مَن قال: بسمِ اللهِ الذي لا يَضرُ مع اسمِه شيءٌ في الأرضِ ولا في السماءِ وهو السميعُ العليمِ . ثلاثُ مراتٍ ، لم تصبْه فجأةُ بلاءٍ حتى يُصبحَ ، ومَن قالها حينَ يُصبحُ ثلاثَ مراتٍ لم تُصبْه فجأةُ بلاءٍ حتى يُمسي.

الراوي : عثمان بن عفان | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 5088 | خلاصة حكم المحدث : صحيح

 
அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன். அவன் எத்தகையவன் என்றால், அவனுடைய திருப் பெயருடன் பூமியிலுவும் வானத்திலும் உள்ள எப்பொருளும் எந்த இடையூறும் செய்யாது. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், முற்றும் அறிந்தவன்.என்று யார் ஒருவர் மாலையில் மூன்று முறை ஓதி ( பாதுகாவல் ) தேடுவாரோ அவருக்கு அன்று ஏற்ப்படும் திடுக்கிடும் இடையூறுகள் அனைத்தையும் விட்டும் அல்லாஹ் பாதுகாத்திடுவான் அதைபோல் எவர் ஒருவர் காலையில் மூன்று முறை ஒதி ( பாதிகாவல் ) தேடுவாரோ மாலை வரை திடுக்கிடும் இடையூறுகள் அனைத்தைவிட்டும் இறைவன் பாதுகாத்திடுவான் என்று நபி ஸல் கூறியதாக உஸ்மான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 5088 தரம் : ஸஹீஹ்


பாவமன்னிப்பு துஆக்கள் 

 اللَّهمَّ جنِّبْني مُنكَراتِ الأخلاقِ والأهواءِ والأسواءِ والأدواءِ

الراوي : قطبة بن مالك | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 960 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه 

என் இறைவா ! தீயகுணங்கள், தீயஆசைகள், தீயசெயல்கள், தீயநோய்கள் ஆகியவைகளிலிருந்து என்னை நீ காப்பாற்று வாயாக! என்று நபி ( ஸல் ) பிரார்த்தித்துவந்ததாக குத்பா பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 960 தரம் : ஸஹீஹ்


பாவமன்னிப்பு துஆக்கள் 

كان مِن دعاءِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم: ( اللَّهمَّ إنِّي أعوذُ بك مِن الجوعِ فإنَّه بئس الضَّجيعُ وأعوذُ بك مِن الخيانةِ فإنَّها بئستِ البِطانةُ )

الراوي : أبو هريرة | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 1029 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

எங்கள் இறைவா ! பசியை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது மனிதனை கீழே சாய்ப்பதில் மிகவும் தீயது. மேலும் மோசடி செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். ஏனெனில் நிச்சயமாக அது மிகக்கொடிய நம்பிக்கை துரோகமாகும்.என்று நபி ( ஸல் ) பிரார்த்தித்துவந்ததாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (1029 ) தரம் : ஸஹீஹ்


மண்ணறை வேதனையில் அதிகமாக தண்டிக்கப்படும் குற்றம்

أكثرُ عذابِ القبرِ من البولٍ

الراوي : أبو هريرة | المحدث : الدارقطني | المصدر : سنن الدارقطني | الصفحة أو الرقم : 1/314 | خلاصة حكم المحدث : صحيح

மண்ணறை வேதனையில் அதிகமானது சிறுநீர் (கழித்து விட்டு சுத்தம் செய்யாமல் இருந்ததன்) காரணமாகவே ஏற்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : தாரகுத்னீ 1/314 தரம் : ஸஹீஹ்


பாவங்களிலேயே மூழ்கியிருந்தால்

إنَّ المؤمِنَ إذا أَذنَبَ كانتْ نُكتةٌ سَوداءُ في قلْبِه، فإنْ تابَ ونَزَعَ واستَغفرَ؛ صُقِلَ قلْبُه، وإنْ زادَ زادَتْ، حتَّى يَعلوَ قلْبَه ذاكَ الرَّينُ الَّذي ذَكَر اللهُ عزَّ وجلَّ في القرآنِ: {كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ} [المطففين: 14].

الراوي : أبو هريرة | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 15/98 | خلاصة حكم المحدث : إسناده صحيح

ஓர் இறைநம்பிக்கையாளர் பாவம் புரிகின்ற போது அவருடைய உள்ளத்தில் ஒரு கரும்புள்ளி பதியப்படுகின்றது. தான் செய்த பாவத்தை எண்ணி மனம் வருந்தி அதற்காக இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருகையில் அவருடைய உள்ளமானது பரிசுத்தப் படுத்தப்படுகின்றது. மாறாக, அவர் (அதிலிருந்து மீளாமல்) மீண்டும் மீண்டும் பாவம் செய்து கொண்டேயிருப்பாரெனில் (கரும்புள்ளி பதியப்படுவதும் அதிகரித்து) அவருடைய உள்ளம் முழுவதையும் (நற்போதனைகள் பயன்தராத விதத்தில், இருளாக) சூழ்ந்து கொள்கின்றது. பாவமானது (கரும்புள்ளிகளாக அவருடைய) உள்ளத்தை சூழ்ந்து கொள்வதைப் பற்றி, அல்லாஹ் தனது வேதமான குர்ஆனில் “அவ்வாறில்லை! மாறாக அவர்கள் செய்தது அவர்களது உள்ளங்களில் துருவாகப் படிந்து விட்டது (83:14)” என்று குறிப்பிடுகின்றான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
என  அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 15/98 தரம் : ஸஹீஹ்


அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَقُولُ : أَنَا مَعَ عَبْدِي إِذَا هُوَ ذَكَرَنِي، وَتَحَرَّكَتْ بِي شَفَتَاهُ ".

حكم الحديث: صحيح

அல்லாஹ் கூறுகிறான் :

என் அடியான் என்னை நினைத்து அவன் நாவுகள் என் நினைவில் அசைந்து கொண்டிருக்கும் போது நான் அவனுடன் இருக்கிறேன்.

நூல் : இப்னுமாஜா ( 3792 ) தரம் : ஸஹீஹ்


ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்

مَن أحبَّ للهِ ، وأبغَضَ للهِ ، وأَعْطَى للهِ ، ومنَعَ للهِ ، فقد استَكْمَلَ الإيمانَ.

الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 4681 | خلاصة حكم المحدث : صحيح

யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ, அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ, அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ, அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள். என அபூ உமாமா (ரலி)

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 4681 தரம் : ஸஹீஹ்


தொழுகை பாவங்களை அழிக்கும்

إنَّ عبدَ اللهِ بنَ عُمَرَ رأى فتًى وهو يُصلِّي قد أطال صلاتَه وأطنَب فيها فقال مَن يعرِفُ هذا ؟ فقال رجُلٌ : أنا فقال عبدُ اللهِ : لو كُنْتُ أعرِفُه لَأمَرْتُه أنْ يُطيلَ الرُّكوعَ والسُّجودَ فإنِّي سمِعْتُ النَّبيَّ صلَّى اللهُ عليه وسلَّم يقولُ : ( إنَّ العبدَ إذا قام يُصلِّي أُتِي بذُنوبِه فوُضِعَتْ على رأسِه أو عاتقِه فكلَّما ركَع أو سجَد تساقَطَتْ عنه )

الراوي : عبدالله بن عمر | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 1734 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பார்த்தார்கள். அவர் தனது தொழுகை(யின் நிலை)யை நீட்டி அதிலேயே நீண்ட நேரம் நின்றார். இப்னு உமர் (ரலி) அவர்கள் "இவரை யாருக்குத் தெரியும்?'' என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் "நான் (அறிவேன்)'' என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் "அவர் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவர் ருகூவையும், ஸுஜூதையும் நீட்டி(த் தொழுமாறு) ஏவியிருப்பேன். ஏனென்றால் "ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் போது அவனுடைய பாவங்கள் கொண்டு வரப்பட்டு அவனது தலையின் மீதும், தோள்புஜத்தின் மீதும் வைக்கப்படுகிறது. அவர் ஒவ்வொரு தடவை ருகூவு அல்லது ஸுஜூது செய்யும் போதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன், (இதை அந்த இளைஞரிடம் அறிவியுங்கள்) எனக் கூறினார்கள்.

 நூல் : ஸஹீஹ் இப்னுஹிப்பான் 1734 தரம் : ஸஹீஹ்


நம் நடத்தைகளை அறிந்துகொள்வதற்கான சிறந்த வழி

قال رجُلٌ للنَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم: كيف لي أنْ أعلَمَ إذا أحسَنْتُ وإذا أسَأْتُ ؟ قال: ( إذا سمِعْتَ جيرانَك يقولون: قد أحسَنْتَ فقد أحسَنْتَ وإذا سمِعْتَهم يقولون: قد أسَأْتَ فقد أسَأْتَ )

الراوي : عبدالله بن مسعود | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 526 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதரே!) நான் (மற்றவர்களுடன்) நல்ல முறையில் நடந்து கொண்டேனா அல்லது தீய முறையில் நடந்துகொண்டேனா என்பதை எப்படி நான் அறிந்து கொள்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களது அண்டைவீட்டாரிடம் கேளுங்கள், நீங்கள் நல்ல முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறச் செவியுற்றால் நீங்கள் நல்லது செய்தீர்கள் , நீங்கள் தீய முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறச் செவியுற்றால் நீங்கள் தீயது செய்தீர்கள் என்று பதிலளித்தார்கள்.
 என அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 526 தரம் : ஸஹீஹ்


தவ்ஹீத் வாதிகளும் தவறுகளுக்கு ஏற்ப நரகில் போடப்படுவார்கள்

يعذَّبُ ناسٌ مِن أَهْلِ التَّوحيدِ في النَّارِ حتَّى يَكونوا فيها حَممًا ثمَّ تدرِكُهُمُ الرَّحمةُ فيُخرَجونَ ويُطرَحونَ على أبوابِ الجنَّةِ قالَ : فيَرشُّ عليهم أَهْلُ الجنَّةِ الماءَ فينبُتونَ كما ينبُتُ الغُثاءُ في حمالةِ السَّيلِ ثمَّ يُدخَلونَ الجنَّةَ

الراوي : جابر بن عبدالله | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2597 | خلاصة حكم المحدث : صحيح

தவ்ஹீத்வாதிகளில் சிலர் (அவர்கள் செய்த வேறு பாவங்கள் காரணமாக) நரகில் வேதனை செய்யப்பட்டு (நரக நெருப்பின் தாக்கத்தால்) கரிக்கட்டை போல் ஆவார்கள். பின்னர் அவர்களுக்கு இறையருள் கிடைக்கும். நரகில் இருந்து வெளியேற்றப்பட்டு சொர்க்கத்தின் வாசலில் போடப்படுவார்கள். சொர்க்கவாசிகள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் அவர்கள் கரையோரத்தில் புல் முளைப்பது போல் பசுமையாவர்கள். பின்னர் சொர்க்கத்தில் நுழைவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2597 தரம் : ஸஹீஹ்


பிரார்த்தனை செய்யும் போது கடைபிடிக்கவேண்டியவை

سمِع رسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم رجلًا يدعو في صلاتِه لم يحمَدِ اللهَ ولم يُصَلِّ على النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم فقال النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم: ( عجِل هذا ) ثمَّ دعاه فقال له: ( إذا صلَّى أحدُكم فليبدَأْ بتحميدِ اللهِ والثَّناءِ عليه ثمَّ ليُصَلِّ على النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم ثمَّ ليَدْعُ بعدُ بما شاء)

الراوي : فضالة بن عبيد | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 1960 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வைப் (புகழ்ந்து) கண்ணியப் படுத்தாமலும் நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபி (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வை அவர் புகழ்ந்து கண்ணியப் படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலாவத் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டட்டும் என்று கூறினார்கள்.
என ஃபளாலா பின் உபைத் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1960 தரம் : ஸஹீஹ்


அண்டைவீட்டார்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்

خيرُ الأصحابِ عندَ اللهِ خيرُهم لصاحبِه وخيرُ الجيرانِ عندَ اللهِ خيرُهم لجارِه

الراوي : عبدالله بن عمرو | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 519 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

யார் தன்னுடைய தோழரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ, அவரே தோழர்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராவார் ; யார் தன்னுடைய அண்டை வீட்டாரிடத்தில் சிறந்தவராக இருக்கிறாரோ, அவரே அண்டை வீட்டார்களில் அல்லாஹ்விடத்தில் சிறந்தவராவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல் : ஸஹீஹ் இப்னுஹிப்பான் 519 தரம் : ஸஹீஹ்


அல்லாஹ்வின் மீது முழு ஆதரவு வைப்பதினால் கிடைக்கும் நற்கூலிகள்

قالَ اللَّهُ تبارَكَ وتعالى يا ابنَ آدمَ إنَّكَ ما دعوتَني ورجوتَني غفَرتُ لَكَ على ما كانَ فيكَ ولا أبالي، يا ابنَ آدمَ لو بلغت ذنوبُكَ عَنانَ السَّماءِ ثمَّ استغفرتَني غفرتُ لَكَ، ولا أبالي، يا ابنَ آدمَ إنَّكَ لو أتيتَني بقرابِ الأرضِ خطايا ثمَّ لقيتَني لا تشرِكُ بي شيئًا لأتيتُكَ بقرابِها مغفرةً

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3540 | خلاصة حكم المحدث : صحيح

ஆதமுடைய மகனே! நீ என் மன்னிப்பை ஆதரவு வைத்து, என்னை அழைத்துப் பிரார்த்திக்கின்றாய்! நான் உன் ஆதரவை ஏற்று உன் பாவங்களை மன்னித்து விடுகின்றேன்!

ஆதமின் மகனே! நீ வானத்தின் முகட்டை தொடும் அளவுக்கு பாவத்தோடு என்னிடம் மன்னிப்பு கேட்டு வந்தாலும் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை, நான் மன்னித்து விடுவேன்!

ஆதமின் மகனே! எனக்கு இணை கற்பிக்காத நிலையில் பூமி முழுவதும் பாவத்தோடு நீ என்னிடம் வந்தாலும், நான் உன்னிடம் மன்னிப்பு எனும் பெரும் கருணையோடே உன்னை நான் நெருங்கி வருவேன். என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல் கூறியதாக  அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3540 தரம் : ஸஹீஹ்


சுவனத்தின் மாளிகைக்கு சொந்தகாரர்கள் 

إنَّ في الجنةِ غرفةً يُرَى ظاهرُها مِنْ باطِنِهَا وباطنُهَا من ظاهِرِهَا فقالَ أبو مُوسَى الأشعريُّ لِمَنْ هِيَ يا رسولَ اللهِ قالَ لِمَنْ ألانَ الكلامَ وأطْعَمَ الطَّعَامَ وبَاتَ للهِ قائِمًا والنَّاسُ نيامٌ

الراوي : عبدالله بن عمرو | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 10/111 | خلاصة حكم المحدث : إسناده صحيح

சுவனத்தில் ஒரு மாளிகை உண்டு. அதன் சிறப்பம்சம் என்னவெனில், உள்ளே உள்ளவை வெளியேயும், வெளியில் உள்ளவை உள்ளேயும் காட்சியளிக்கும்” என்று நபிகளார் கூறியபோது...

அபூமூஸா ரலி அவர்கள் கேட்டார்கள் “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இத்தகைய சிறப்பு வாய்ந்த மாளிகையை அல்லாஹ் யாருக்கு வழங்குவான்” என வினவினார்கள்.

அதற்கு நபி {ஸல்} அவர்கள் “இந்த மாளிகையை “மக்களுக்கு மத்தியில் தூய்மையோடு பேசியும், பசித்தவர்களுக்கு உணவளித்தும், மக்களெல்லாம் உறங்கும் நேரத்தில் விழித்தெழுந்து தொழுதும் வந்தவர்களுக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளான்” என்று பதிலளித்தார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : அஹ்மத் 10/111 தரம் : ஸஹீஹ்


உபரியான தொழுகையை கடைபிடிப்பவர்களுக்கு மட்டும் கிடைக்கும் நன்மைகள்

ما من عبدٍ يسجدُ للَّهِ سجدةً إلَّا كتبَ اللَّهُ لَهُ بِها حسنَةً ومحا عنْهُ بِها سيِّئةً ورفعَ لَهُ بِها درجةً فاستَكثِروا منَ السُّجودِ

الراوي : عبادة بن الصامت | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 1179 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்விற்காக ஓர் அடியான் ஒரு ஸஜ்தா செய்கிறான் என்றால், அல்லாஹ் அந்த அடியானுக்கு ஓர் நன்மையை எழுதுகின்றான். ஒரு பாவத்தை அழிக்கின்றான். ஒரு அந்தஸ்தை உயர்த்துகின்றான். எனவே, நீங்கள் அதிகமாக ஸுஜூது செய்யுங்கள் என்று நபி ஸல் கூறியதாக உபாத இப்னு ஸாமித் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1179 தரம் : ஸஹீஹ்


ஜும்ஆ தினத்தின் போது ஜமாஅத்தாக தொழுகும் தொழுகையின் சிறப்பு

أفضلُ الصلواتِ عند اللهِ صلاةُ الصبحِ يومَ الجمعةِ في جماعةٍ

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 1566 | خلاصة حكم المحدث : صحيح

அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த தொழுகை ஜும்ஆ தினத்தன்று சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுவது தான் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் :   ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா 1566 தரம் : ஸஹீஹ்


ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மையை அடைய...

مَن صلى الفجرَ في جماعةٍ ، ثم قَعَد يَذْكُرُ اللهَ حتى تَطْلُعَ الشمسُ ، ثم صلى ركعتينِ ، كانت له كأجرِ حَجَّةٍ وعُمْرَةٍ تامَّةٍ ، تامَّةٍ ، تامَّةٍ

الراوي : أنس بن مالك | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 6346 | خلاصة حكم المحدث : صحيح

எவர் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்தாக தொழுது விட்டு, அதே இடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை திக்ரும் செய்து, சூரியன் உதயமாகிய பின்னர் இரண்டு ரக்அத் தொழுவாரோ அவருக்கு பரிபூரணமான ஹஜ் மற்றும் உம்ரா செய்த நன்மை வழங்கப்படுகின்றது என நபி ஸல் கூறியதாக அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல்: ஸஹீஹுல் அல் ஜாமி 6346 தரம் : ஸஹீஹ்


சிறந்த ஹிஜ்ரத்

قال رجلٌ : يا رسولَ اللهِ ! أيُّ الهجرةِ أفضلُ ؟ قال : أن تهجر ما كرهَ ربُّك عز وجل ...

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4176 | خلاصة حكم المحدث : صحيح

ஒர் மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹிஜ்ரத்தில் மிக அறிந்தது எது ? என்று கேட்டார் அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் விரும்பாததை விட்டு தூரமாகிக் கொள்வதற்காக செய்யப்படும் ஹிஜ்ரத்தே ஆகும் என கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
 
நூல் : ஸஹீஹ் நஸயீ 4176 தரம் : ஸஹீஹ்


இரட்டை வேடம்

عَنْ عَمَّارٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ ‏"‏ ‏.‏

உலக வாழ்வில் இரட்டை வேடம் போட்டவனுக்கு மறுமை நாளில் நெருப்பாலான இரண்டு நாக்குகள் இருக்கும் என்று நபி ஸல் கூறியதாக அம்மர் ( ரழி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அபூதாவூத் ( 4873 )தரம் : ஸஹீஹ்


தொழுகையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம்

فَإِنْ أَنْتَ وَضَعْتَ وَجْهَكَ لِلَّهِ عَزَّ وَجَلَّ خَرَجْتَ مِنْ خَطَايَاكَ كَيَوْمَ وَلَدَتْكَ أُمُّكَ

உங்கள் முகத்தை வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காகத் தரையில் வைத்(துத் தொழுது பணிந்)தால் உங்கள் தாய் உங்களைப் பெற்றெடுத்த நாளில் நீங்கள் இருந்ததைபோன்று தவறுகளிலிருந்து நீங்கள் நீங்கிவிடுவீர்கள் .... என்று நபி ஸல் கூறியதாக அம்ர் பின் அபஸா அஸ்ஸுலமீ ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

 நூல் : நஸாயீ ( 147 ) தரம் : ஸஹீஹ்

நீண்ட ஒர் ஹதீஸ்யின் பகுதி ஆகும்


பெண்களுக்கான அபிவிருத்தி 

مِن يُمنِ المرأةِ تسهيلُ أمرِها وقلَّةُ صداقِها ..

الراوي : عائشة أم المؤمنين | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 4095 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

பெண்களின் அபிவிருத்தி என்பது அவளின் காரியங்களை இலகுவாக்குவதும் அவளின் மஹரை குறைப்பதுமே ஆகும் என நபி ஸல் தன்னிடம் கூறியதாக ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுஹிப்பான் 4095 தரம் : ஸஹீஹ்


நரகவாசிகளையும் & சுவனவாசிகளையும் அறிந்துகொள்வதற்கான வழி

خطبنا رسولُ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ بالنباوةِ أو البناوةِ قال والنباوةُ من الطائفِ قال يُوشِكُ أن تعرفوا أهلَ الجنةِ من أهلِ النارِ قالوا بم ذاك يا رسولَ اللهِ قال بالثناءِ الحسنِ والثناءِ السيِّئِ أنتم شهداءُ اللهِ بعضُكم على بعضٍ

الراوي : أبو زهير الثقفي | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 3419 | خلاصة حكم المحدث : حسن

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் தாயிஃபில் உள்ள அன் நபாவா என்ற ஊரில் உரை நிகழ்த்தினார்கள் அப்போது " நரகவாசிகளையும் ,சுவனவாசிகளையும் அறிந்து கொள்வதற்கு நீங்கள் நெருங்கிவிட்டீர்கள் " என்று கூறினார்கள்.

அதற்க்கு நாங்கள் அது எவ்வாறு ? எனக் கேட்டோம் அதற்கு நபி ஸல் அவர்கள் நல்ல புகழ்ச்சியின் மூலமும் ,தீய புகழ்ச்சியின் மூலமும் உங்களில் சிலர் சிலருக்கு அல்லாஹ்வின் சாட்சியாளர்களாக உள்ளீர்கள் என்று கூறியதாக அபீ பக்ர் பின் அபீ ஜுஹுரி ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 3419 தரம் : ஹஸன்


நீதமான சாட்சி இல்லாமல் திருமணம் இல்லை

لا نكاحَ إلَّا بوليٍّ وشاهدَيْ عَدلٍ ...

الراوي : عائشة | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 4075 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

வலி, நீதமான இரண்டு சாட்சியாளர்கள் இல்லாமல் நிக்காஹ் இல்லை என நபி ஸல் கூறியதாக ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 4075 தரம் : ஸஹீஹ்


அனைத்திலும் நன்மை பெற...

مَن أحيا أرضًا ميتةً فله فيها أجرٌ وما أكَلتِ العافيةُ منها فهو له صدقةٌ

الراوي : جابر بن عبدالله | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 5204 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

எவர் இறந்த பூமியை உயிர்பிப்பாரோ அதில் அவருக்கு நன்மையுண்டு. மேலும் உணவை தேடக் கூடிய மனிதன், கால் நடைகள், பறவைகள் அவற்றிலிருந்து உண்டால் அதுவும் அவருக்கு தர்மமாக ஆகிவிடும் என நபி ஸல் கூறியதாக ஜாபிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் :  ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 5204 தரம் : ஸஹீஹ்


அமானித பொருட்கள் தொலைந்துவிட்டால்....?

لا ضَمانَ على مُؤتَمَنٍ

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 7518 | خلاصة حكم المحدث : حسن

அமானிதத்தை பெற்றவர் மீது எவ்வித பிணையும் இல்லை என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமி 7518 தரம் : ஹசன்

விளக்கம் :

அமானிதமான பொருட்கள் எவரிடம் உள்ளதோ அவர் அதனை பாதுகாப்பது அவசியமாகும்.

அவர் கவனமாக இருந்த நிலையில் அமானித பொருட்கள் அழிந்து விட்டால் அல்லது தொலைந்து விட்டால்  அமானிதத்தை பெற்றவர் மீது எவ்வித பிணைத் தொகையும் இல்லை.


உண்பதற்கு ஹராம் என்றால் அதை மற்ற வழிகளிலும் பயன்படுத்துவதும் தடுக்கப்பட்டதே

وإنَّ اللَّهَ إذا حرَّمَ على قومٍ أَكْلَ شيءٍ ، حرَّمَ علَيهِم ثمنَهُ

الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 3488 | خلاصة حكم المحدث : صحيح

நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது உண்பதற்கு ஒரு பொருளை ஹராமாக்கினால் அதனுடைய கிரயத்தையும் அவர்கள் மீது ஹராமாக்கி விடுகிறான் என நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 3488 தரம் : ஸஹீஹ்


சிறந்த சம்பாத்தியம்

إن أطيبَ ما أكلَ الرجلُ من كسبِه ، و إن ولدَ الرجلِ من كسبِه.

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4461 | خلاصة حكم المحدث : صحيح

நிச்சயமாக மனிதன் உண்ணுவதிலேயே மிக தூய்மையானது அவன் சம்பாத்தியத்திலிருந்து அல்லது அவனது மகனின் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுவதே ஆகும் என நபி ஸல் கூறியதாக ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் நஸாயீ 4461 தரம் : ஸஹீஹ்


உலக லாபத்திற்காக மார்க்க கல்வியை கற்றவன் அழிந்தான்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَعَلَّمُهُ إِلَّا لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا ؛ لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ ". يَعْنِي رِيحَهَا.

حكم الحديث: صحيح

அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத் தரும் கல்வியை இவ்வுலகின் பயன் ஒன்றை அதன் மூலம் அடைவதற்காக கற்றால் இவன் மறுமையில் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது என்று நபி ஸல் கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூஹுரைரா ( ரழி)

நூல் : அபூதாவூத் ( 3664) தரம் : ஸஹீஹ்


அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் அந்த மூவர்...

ثلاثةٌ كلُّهم حقٌّ على اللَّهِ عزَّ وجلَّ : عونُهُ المُجاهدُ في سبيلِ اللَّهِ ، والنَّاكحُ الَّذي يريدُ العفافَ ، والمُكاتبُ الَّذي يريدُ الأداءَ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 3120 | خلاصة حكم المحدث : حسن | التخريج :أخرجه الترمذي (1655)، والنسائي (3120) واللفظ له، وابن ماجه (2518)، وأحمد (7410).

மூன்று பேருக்கு உதவி செய்வது மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
1. ( கடனை ) நிறைவேற்ற நாடுகின்ற விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுக்கப்பட்ட அடிமை.
2. கற்பைக் காப்பதற்காகத் திருமணம் செய்ய முனைபவர்
3. அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் என நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்
நூல் : ஸஹீஹ் நஸாயீ ( 3120)  தரம் :ஹஸன்


இறை செய்தியை மட்டும் கடைப்பிடிப்போம்

أَبشِروا أليس تشهدون أن لا إله إلا اللهُ ، و أني رسولُ اللهِ ؟ قالوا : بلى : قال : إنَّ هذا القرآنَ سببٌ طرفُه بيدِ اللهِ ، و طرفُه بأيديكم ، فتمسَّكوا به ؛ فإنكم لن تضِلُّوا ولن تهلِكوا بعده أبدًا

الراوي : أبو شريح العدوي الخزاعي الكعبي | المحدث : الألباني | المصدر : صحيح الترغيب | الصفحة أو الرقم : 38 | خلاصة حكم المحدث : صحيح | التخريج :أخرجه ابن أبي شيبة في ((المصنف)) (10/481)، وابن حبان (1/329) (122)، والطبراني (22/188) (491)

நபி ஸல் அவர்கள் எங்களிடம் வந்து “ அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குறியவன் வேறு எவருமில்லை என்றும் , நான் இறைத்தூதர் என்றும் சான்று பகரவில்லையா ?” என்று கேட்டதற்கு ஆம் பகர்கிறோம் என நபித்தோழர்கள் கூறினர் “ நிச்சயமாக இந்த குர் ஆன் அதன் ஒரு பகுதி அல்லாஹ்வின் கையிலும் அதன் மறுபகுதி உங்களின் கையில் உள்ளது இதை நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள் நிச்சயமாக நீங்கள் அதன் பிறகு எக்காலமும் வழிகெடவோ அழிந்து விடவோ மாட்டீர்கள் “ என்று நபி ஸல் கூறினார்கள் .

அறிவிப்பவர் : அபூ ஷுரைஹ் ( ரலி ) நூல் : தப்ரானீ (491 ) தரம் : ஸஹீஹ்


பாவமன்னிப்பு துஆக்கள்

سبحانَ اللهِ وبحمدِهِ، سبحانَكَ اللهمَّ وبحمدِكَ، أشهدُ أنْ لا إلهَ إلَّا أنتَ أستغفرُكَ وأتوبُ إليكَ، ...

الراوي : جبير بن مطعم | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 81 | خلاصة حكم المحدث : صحيح على شرط مسلم

அல்லாஹ்விற்க்கே புகழ் அனைத்தும் அவனையே துதிக்கிறேன்.இறைவா உன்னை புகழ்ந்து துதிக்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாரும் இல்லை. உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன் உன் பக்கமே மீளுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்தார்கள் என ஜுபைர் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 81 தரம் : ஸஹீஹ்


பாவமன்னிப்பு துஆக்கள்

اللَّهمَّ اغفِرْ ذنبَه وطهِّرْ قلبَه وحصِّنْ فرْجَه

الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 370 | خلاصة حكم المحدث : إسناده صحيح

என் இறைவா ! எனது குற்றத்தை மன்னித்தருள் ! எனது உள்ளத்தை தூய்மைப்படுத்து ! எனது கற்பைப் பாதுகாத்துக் கொள் என்று நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 370 தரம் : ஸஹீஹ்


எழுதுகோல் உயர்த்தப்பட்ட மூவர்..?

رُفِعَ القلمُ عن ثلاثةٍ : عَن المَجنونِ المَغلوبِ على عَقْلِهِ حتى يَبْرَأَ ، و عن النائِمِ حتى يَستيقِظَ ، و عنِ الصبِيِّ حتى يَحْتَلِمَ

الراوي : علي بن أبي طالب و عمر بن الخطاب | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 3512 | خلاصة حكم المحدث : صحيح

தூங்குபவர் விழிக்கின்ற வரையிலும், சிறுவன் பெரியவராகும் வரையிலும், பைத்தியக்காரர் பைத்தியத்தில் இருந்து தெளிவாகும் வரையிலுமாகிய மூன்று பிரிவினரை விட்டும் எழுதுகோல் (பாவங்களை பதிவு செய்யாதபடிக்கு) உயர்த்தப்பட்டு விட்டது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அலீ (ரலி)
அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹுல் ஜாமி 3512 தரம் : ஸஹீஹ்


குர் ஆன் ஓதும் ஓசையை நீட்டி ஓதவேண்டும்.

عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كَانَ يَمُدُّ صَوْتَهَ مَدًّا

நான் அனஸ் பின் மாலிக் ( ரலி ) அவர்களிடம் “ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் குர் ஆன் ஓதல் எவ்வாறு அமைந்திருந்தது ?” என்று வினவினேன். அதற்கு அவர்கள்,” நபி ஸல் அவர்கள் தாம் ஓதும் குர் ஆன் ஓசையை நன்கு நீட்டி ஓதிவந்தார்கள் என்று விடையளித்தார்கள்.

இதை கத்தாதா பின் தி ஆமா ( ரஹ் ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : நஸாயீ ( 1014 ) ஸஹீஹ்

இமாம் புஹாரி தமது  கல்கு அஃப் ஆலில் இபாது என்னும் நூலில் 195 நபிமொழியாக பதிவு செய்து உள்ளார்கள்.


பாவமன்னிப்பு துஆக்கள்

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي ؛ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ. 

حكم الحديث: صحيح

என் இறைவா.. நிச்சயமாக நீ ஒருவன்; தனித்தவன்; முழுமையானவன்;எவருடையத் தேவையுமற்றவன்; நீ யாரையும் பெற்றெடுக்கவுமில்லை; யாருக்கும் பிறந்தவனுமில்லை; உனக்கு நிகராக எதுவும் இல்லை என்று கூறி உன்னிடம் கேட்கிறேன் 

என் இறைவா ! எனக்கு என்னுடைய குற்றங்களைப் பொறுத்தருள் ! நிச்சயமாக நீதான் மிக்க மன்னிப்பாளன் நிகரற்ற அன்புடையவன் .

நூல் : நஸாயீ 1301 தரம் : ஸஹீஹ்

குறிப்பு : நபி ஸல் பள்ளிவாசலில் நுழைந்த போது மேல் உள்ள வாசக அமைப்புடன் ஒருவர் பிரார்த்தித்தார் அதை கேட்ட நபி ஸல் அவர்கள் " இவர்க்கு மூன்று முறை பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது என்று கூறியதாக மிஃஜான் ( ரலி) அறிவிக்கிறார்கள்


உபரியான தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும்

سَمِعَ ابْنَ عُمَرَ ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : " صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى ".

حكم الحديث: صحيح

இரவிலும் பகலிலும் ( உபரியான) தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும் என நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னுமாஜா 1322 தரம் : ஸஹீஹ்


குர்ஆன் வசனங்களை அலங்கரிப்போம்

 عَنِ الْبَرَاءِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ ".

حكم الحديث: صحيح

உங்கள் குரல்வளங்களால் குர் ஆனை அலங்கரியுங்கள் என நபி ஸல் கூறியதாக பராஉ பின் ஆஸிப் ரலி அறிவிக்கிறார்கள்

நூல் : நஸாயீ 1015 தரம் : ஸஹீஹ்


பாவமன்னிப்பு துஆக்கள் 

اللَّهمَّ ربَّ جَبرائيلَ وميكائيلَ ، وربَّ إسرافيلَ ، أعوذُ بِك من حرِّ النَّارِ ، ومن عذابِ القبرِ

الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 5534 | خلاصة حكم المحدث : صحيح

என் இறைவா ! ஜிப்ரயீல் மற்றும் மீக்காயீலுடைய இறைவனே ! இஸ்ராஃபீலுடைய இறைவனே ! நரகத்தின் உஷ்ணத்தை விட்டும் ,கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்து வந்ததாக முஃமீன்களின் அன்னை ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் :  ஸஹீஹ் நஸாயீ 5534 தரம் : ஸஹீஹ்


மக்களில் சிறந்தவரும் & கெட்டவரும்.

‏عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَفَ عَلَى نَاسٍ جُلُوسٍ فَقَالَ : " أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِكُمْ مِنْ شَرِّكُمْ ؟ " قَالَ : فَسَكَتُوا. فَقَالَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ رَجُلٌ : بَلَى يَا رَسُولَ اللَّهِ، أَخْبِرْنَا بِخَيْرِنَا مِنْ شَرِّنَا. قَالَ : " خَيْرُكُمْ مَنْ يُرْجَى خَيْرُهُ وَيُؤْمَنُ شَرُّهُ، وَشَرُّكُمْ مَنْ لَا يُرْجَى خَيْرُهُ وَلَا يُؤْمَنُ شَرُّهُ ". هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

حكم الحديث: صحيح

 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் மக்களுக்கு முன்னால் வந்து நின்று, உங்களில் சிறந்தவர் யார்? கெட்டவர் யார்? என்பதை உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். 

அதற்கு அவர்கள் (மக்கள்) அமைதியாக இருந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் அதையே மூன்று முறை மீண்டும் கூறினார்கள். 

அப்போது ஒரு மனிதர், நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிறந்தவர் யார், கெட்டவர் யார் என்பதை எங்களுக்கு அறிவியுங்கள் என்று கூறினார்.

 அதற்கு, நபி (ஸல்) அவர்கள் உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்க்கப்படுமோ, தீமையான காரியங்கள் குறித்து பயப்படப்படாதோ அவர்தான் உங்களில் சிறந்தவர்.

 மேலும், உங்களில் எவரிடம் இருந்து நன்மையான காரியங்கள் (மக்களிடம்) எதிர்பார்க்கப்படாதோ, தீமையான காரியங்கள் பயப்படப்படுமோ அவர்தான் உங்களில் கெட்டவர் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ 2263 தரம் : ஸஹீஹ்


ஆரோக்கியத்தை விட வேறு சிறந்தது எது?

  عَنْ أَبِي بَكْرٍ قَالَ: قَامَ أَبُو بَكْرٍ بَعْدَ وَفَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَامٍ، فَقَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ أوَّلَ، فَقَالَ: «إِنَّ ابْنَ آدَمَ لَمْ يُعْطَ شَيْئًا أَفْضَلَ مِنَ الْعَافِيَةِ، 
فَاسْأَلُوا اللَّهَ الْعَافِيَةَ، وَعَلَيْكُمْ بِالصِّدْقِ وَالْبِرِّ فَإِنَّهُمَا فِي الْجَنَّةِ، وَإِيَّاكُمْ وَالْكَذِبَ وَالْفُجُورَ فَإِنَّهُمَا فِي النَّارِ»

حكم الحديث : صحيع لغيره

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் இறந்து ஒரு வருடத்திற்குப் பின் அபூபக்ர் ( ரலி ) அவர்கள் ( எங்களிடையே ) எழுந்து உரை நிகழ்த்தினார்கள். அப்போது,” அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் ( மதீனாவுக்கு வந்த ) முதலாம் ஆண்டில் எங்களிடையே நின்று உரையாற்றினார்கள். அதில்,’ ஆதமின் மகனுக்கு உடல் நலத்தைவிட மிகச் சிறந்த ஒன்று வழங்கப்படவில்லை.எனவே , நீங்கள் அல்லாஹ்விடம் உடல் நலத்தைக் கேளுங்கள் உண்மை பேசுவதையும் நன்மை புரிவதையும் கடைப்பிடியுங்கள், அவ்விரண்டும் சொர்க்கத்தில் சேர்க்கும் பொய் பேச வேண்டாமென்றும் தீமைகள் புரியவேண்டாமென்றும் உங்களை நான் எச்சரிக்கிறேன் ( பொய் , தீமை ஆகிய ) அவ்விரண்டும் நரகத்தில் தான் சேர்க்கும் என்று கூறினார்கள் .என அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 66 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


பாவமன்னிப்பு துஆக்கள் 

" اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ". 

حكم الحديث: حديث صحيح رجاله ثقات

என் இறைவா ! என்னை மன்னித்தருள் எனக்கு கருணை காட்டு ,என் தவறை மன்னித்து அருள்செய் , நிச்சயமாக நீ தான் பாவங்களை மன்னிக்கக் கூடியவன் பெரும் கருணையாளன் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள் ( ஹதீஸ் சுருக்கம்)

நூல் : முஸ்னத் அஹ்மத் 5354 தரம் : ஸஹீஹ்


தந்தை தன் பிள்ளையின் செல்வத்தை எடுத்து செலவழித்தல்

عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ أَطْيَبَ مَا أَكَلْتُمْ مِنْ كَسْبِكُمْ، وَإِنَّ أَوْلَادَكُمْ مِنْ كَسْبِكُمْ ". 

حكم الحديث: صحيح

நீங்கள் உண்ணும் உணவிலேயே மிகவும் தூய்மையானது உங்கள் சொந்த உழைப்பிலிருந்து நீங்கள் உண்ணும் உணவே ஆகும்.

உங்களுடைய பிள்ளைகளும் உங்கள் உழைப்பின் ஒர் அங்கமே ஆவர் என நபி ஸல் கூறியதான ஆயிஷா ( ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல் : திர்மிதீ 1358 தரம் : ஸஹீஹ்


மக்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதின் சிறப்பு

ألَا أُخبِرُكم بأفضَلَ مِن درجةِ الصِّيامِ والقيامِ ؟ ) قالوا: بلى يا رسولَ اللهِ قال: ( إصلاحُ ذاتِ البَيْنِ، وفسادُ ذاتِ البَيْنِ هي الحالقةُ )

الراوي : أبو الدرداء | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 5092 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

தொழுகை, நோன்பு ,தான தர்மம் ஆகியவற்றிற்குக் கிடைக்கும் அந்தஸ்ததை விடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா ? என்று நபி ஸல் கேட்ட போது அறிவியுங்கள் என  நபி தோழர்கள் கூறினார்கள்.

" அது தான் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது ஆகும்" ஏனெனில் நல்லிணக்கத்தைக் கெடுப்பது என்பது மார்க்கத்தைக் கெடுத்துவிடக்கூடியதாகும் என நபி ஸல் கூறியதாக அபுத்தர்தா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னுஹிப்பான் 5092 தரம் : ஸஹீஹ்


மீஸானை கனமாக்கும் ஜந்து செயல்கள்

 عَنْ أَبِي سَلَّامٍ ، عَنْ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " بَخٍ بَخٍ، خَمْسٌ مَا أَثْقَلَهُنَّ فِي الْمِيزَانِ : لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَسُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَالْوَلَدُ الصَّالِحُ يُتَوَفَّى فَيَحْتَسِبُهُ وَالِدَهُ "....

حكم الحديث: حديث صحيح، رجاله ثقات رجال الصحيح

ஜந்து காரியங்கள் மிகச் சிறந்தவை ! நன்மையின் எடையில் அவை எத்தணை பாரமானவை ! அவை :

1.லாயிலாஹ இல்லல்லாஹு

2. வசுப்ஹானல்லாஹி

3. வல்ஹம்து லில்லாஹி

4. வல்லாஹு அக்பர் ( என்று கூறுவது )

5. ஒரு முஸ்லிமுக்கு நல்லொழுக்கமுள்ள பிள்ளை மரணித்து விட்டால் அதற்காக ( அல்லாஹ்வின் ) நற்கூலியை எதிர்பார்ப்பது என்று நபி ஸல் கூறியதாக அபூ ஸல்மா ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 15662 தரம் : ஸஹீஹ்


தன்னுடைய பொறுப்பின் கீழ் உள்ளவர்களிடம் நலம் நாட வேண்டும்

كفى بالمرءِ إثمًا أنْ يُضيِّعَ مَن يقُوتُ

الراوي : عبدالله بن عمرو | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 4240 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

தான் உணவளிக்கக் கடமைப் பட்டவர்களை ( சரிவர உணவளிக்காமல்) பாழ்படுத்துவதே ஒரு மனிதனுக்கு பாவம் நேரப் போதுமானதாகும் என நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 4240 தரம் : ஸஹீஹ்


கடன் கொடுத்தவர்க்கு கிடைக்கும் நற்கூலிகள்

مَنْ أنظرَ مُعْسِرًا ، فلَهُ بكُلِّ يومٍ مثلُهُ صدَقَةٌ ، قبلَ أنْ يحِلَّ الدينُ ، فإذا حلَّ الدينُ فأنظَرَهُ فلَهُ بِكُلِّ يومٍ مثلاهُ صدَقَةٌ

الراوي : بريدة بن الحصيب الأسلمي | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 6108 | خلاصة حكم المحدث : صحيح

கடனால் சிரமப்படுபவருக்கு யாரேனும் ( கூடுதல்) அவகாசம் அளித்தால் அக்கடனை நிறைவேற்றும் காலம் வருவதற்கு முன் ( அவர் அளிக்கும்) ஒவ்வொரு நாளுக்கு பகரமாக அவர் கொடுத்த கடன் போன்றதை தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு.

அக்கடனை நிறைவேற்றும் காலம் நெருங்கி வந்து பிறகு மீண்டும் அவருக்கு அவகாசம் அளித்தால் ( அவர் அளிக்கும்) ஒவ்வொரு நாளுக்குப் பகரமாக அவர் கொடுத்த கடன் போன்று இரண்டு மடங்கை தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என நபி ஸல் கூறியதாக புரைதா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 6108 தரம் : ஸஹீஹ்


ஒவ்வொரு காலடிக்கும் பாவங்கள் மன்னிக்கப்படும்

 عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ أَتَى الْمَسْجِدَ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ لَمْ يَخْطُ خَطْوَةً إِلَّا رَفَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ ".

حكم الحديث: صحيح

ஒருவர் நல்ல முறையில் அங்கத் தூய்மை செய்து பிறகு அவர் தொழுகையைத் தவிர வேறு எந்த நோக்கமுமின்றி பள்ளிவாசலை நோக்கி வந்தால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் பகரமாக அல்லாஹ் ஒர் அந்தஸ்தை உயர்த்தி அவருடைய ஒரு பாவத்தை மன்னிக்காமல் இருப்பதில்லை அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும் வரை என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னுமாஜா 281 தரம் : ஸஹீஹ்


நல்வழியில் உறுதியாக முடிந்த வரை நிற்க்க வேண்டும்

 عَنْ ثَوْبَانَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " اسْتَقِيمُوا، وَلَنْ تُحْصُوا ، وَاعْلَمُوا أَنَّ خَيْرَ أَعْمَالِكُمُ الصَّلَاةُ، وَلَنْ يُحَافِظَ عَلَى الْوُضُوءِ إِلَّا مُؤْمِنٌ ".

حكم الحديث: حديث صحيح، وهذا إسناد رجاله ثقات رجال الصحيح

நல்வழியில் உறுதியாக நில்லுங்கள் ( ஆயினும் நல் வழியில் நிலையாக நிற்க) உங்களால் இயலாது.

அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் நல்லறங்களில் சிறந்தது தொழுகையாகும்.

இறை நம்பிக்கையாளரைத் தவிர ( வேறெவரும் உரிய முறையில்) அங்கத்தூய்மையைப் பேணி காக்கமாட்டார் என நபி ஸல் கூறியதாக ஸவ்பான் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 22378 தரம் : ஸஹீஹ்


நபி ஸல் அவர்களுக்கு பிரியமானவர்கள் இவர்களே

عَنْ جَابِرٍ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ، وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا، 

حكم الحديث: صحيح

உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரும் மறுமையில் எனக்கு மிக நெருக்கமான இடத்தில் இருப்பவரும் நற்குணமுடையவரே என்று நபி ஸல் கூறியதாக ஜாபிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : திர்மிதீ 2018 தரம் : ஸஹீஹ்


ஜமாஅத்துடன் தொழுவதின் சிறப்பு

مَن صلَّى العشاءَ في جماعةٍ كانَ كقيامِ نِصْفَ ليلةٍ ومَن صلَّى العِشاءَ والفجْرَ في جماعةٍ كان كقيامِ ليلةٍ

الراوي : عثمان بن عفان | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 408 | خلاصة حكم المحدث : إسناده صحيح

இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு தொழுதவர் போலாவார்.

இஷாவையும், பஜ்ரையும் ஜமா அத்துடன் தொழுதவர் முழு இரவும் தொழுதவர் போலாவார் என நபி ஸல் கூறியதாக உஸ்மான் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 408 தரம் : ஸஹீஹ்


இறைவனுக்காக தன்னுடைய கோபத்தை அடக்கி கொள்ளுவது

مَنْ كتَمَ غيظًا ، وهو قادِرٌ علَى أنْ يُنْفِذَهُ ، دعاه اللهُ علَى رؤوسِ الخلائِقِ ، حتَّى يخيِّرَهُ مِنَ الحورِ العينِ يُزَوِّجُهُ منها ما يشاءُ

الراوي : معاذ بن أنس الجهني | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 6518 | خلاصة حكم المحدث : صحيح

கோபத்தை செயல்படுத்தும் சக்தி இருந்தும் யார் அதனை மென்று விழுங்குகிறாரோ மறுமையில் அல்லாஹ் படைப்பினங்களுக்கு மத்தியில் அவரை ( மட்டும்) அழைத்து ஹுருல் ஈன் எனும் சொர்க்கத்து மங்கைகளில் தான் விரும்புவரைத் தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்குவான் என நபி ஸல் கூறியதாக மு அத் பின் அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல்  ஜாமிஃ 6518 தரம் : ஸஹீஹ்


முஸ்லிமின் தன்மானத்தைக் காயப்படுத்துவது கூடாது

عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " إِنَّ مِنْ أَرْبَى الرِّبَا الِاسْتِطَالَةَ فِي عِرْضِ الْمُسْلِمِ بِغَيْرِ حَقٍّ ".
حكم الحديث: صحيح

ஒரு முஸ்லிமின் தன்மானத்தை அநியாயமாகக் காயப்படுத்துவது மிகப் பெரிய வட்டியாகும் என நபி ஸல் கூறினார்கள் என ஸயீத் பின் ஸைத் ரலி அறிவிக்கிறார்கள்

நூல் : அபூதாவூத் 4876 தரம் : ஸஹீஹ்


மறைவிலும் இறைவனை அஞ்சி தொழுவதினால் கிடைக்கும் நன்மை

 عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الصَّلَاةُ فِي جَمَاعَةٍ تَعْدِلُ خَمْسًا وَعِشْرِينَ صَلَاةً، فَإِذَا صَلَّاهَا فِي فَلَاةٍ فَأَتَمَّ رُكُوعَهَا وَسُجُودَهَا بَلَغَتْ خَمْسِينَ صَلَاةً ". 

حكم الحديث: صحيح

ஜமாஅத்துடன் தொழும் ஒரு தொழுகை " இருபத்தைந்து தொழுகைக்கு" நிகரானதாகும். 

அவர் பாலைவனத்தில் ( தனியாகத்) தொழுதால் அதன் ருகூவையும், ஸுஜுதையும் பரிபூர்ணமாகத் செய்தால் அது " ஜம்பது தொழுகையின்" நன்மையை அடைந்துவிடும் என நபி ஸல் கூறியதாக அபூ ஸயீத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அபூதாவூத் 560 தரம் : ஸஹீஹ்


கண்ணியத்தை கொடுப்பது இறைவன் கைவசமே 

قال : والميزانُ بيدِ الرَّحمنِ يرفَعُ قومًا ويخفِضُ آخَرينَ إلى يومِ القيامةِ 

الراوي : النواس بن سمعان | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 943 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

மீஜான் ( தராசு ) அளவற்ற அருளாளனாகிய இறைவனின் கையிலேயே உள்ளது . மறுமை நாள்வரை ( அதன் மூலம்) அவன் சிலரை உயர்த்திக் கொண்டு சிலரைத் தாழ்த்திக் கொண்டும் இருக்கிறான் என்று நபி ஸல் கூறியதாக நவ்வாஸ் பின் சம்ஆன் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 943 தரம் : ஸஹீஹ்


ஜந்து விஷயங்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்

 عَنْ أَبِي مُوسَى ، قَالَ : قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَمْسِ كَلِمَاتٍ، فَقَالَ : " إِنَّ اللَّهَ لَا يَنَامُ، وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ : يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ، حِجَابُهُ النُّورُ لَوْ كَشَفَهُ لَأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ ".

حكم الحديث: صحيح

( ஒரு நாள்) நபி ஸல் அவர்கள் எங்களிடையே நின்று ஜந்து விஷயங்களைக் கூறினார்கள் அவை

1. அல்லாஹ் உறங்கமாட்டான் ; உறங்குவது அவனுக்குத் தகாது

2. அவன் தராசைத் தாழ்த்துகிறான் ; உயர்த்தவும் செய்கிறான்

3. ( மனிதன் ) இரவில் செய்த செயல், பகலில் செய்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது

4. ( மனிதன் ) பகலில் செய்த செயக் இரவில் செய்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது

5.ஒளியே ( அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது முகத்திலுள்ள ஒளிச் சுடர் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள படைப்பினங்களைச் சுட்டெரித்துவிடும் என நபி ஸல் கூறியதாக அபூ மூஸா அல் அஷ் அரீ (ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னுமாஜா 195 தரம் : ஸஹீஹ்


நபி மொழிகளை பிறருக்கு எடுத்து உரைப்பவர்களின் சிறப்பு

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " نَضَّرَ اللَّهُ عَبْدًا سَمِعَ مَقَالَتِي فَوَعَاهَا، ثُمَّ بَلَّغَهَا عَنِّي، فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرُ فَقِيهٍ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ ".

حكم الحديث: صحيح

என் சொல்லைக் கேட்டு அதை மனனமிட்டு பின்னர் அதை என்னிடமிருந்து ( பிறருக்கு) எடுத்துரைத்தவரின் முகத்தை அல்லாஹ் செழிப்பாக்குவானாக

மார்க்க அறிவைல் பெற்றிருக்கக் கூடிய எத்தனையோ பேர் மார்க்க அறிஞர்கள் இல்லை

மார்க்க அறிவைப் பெற்றிருக்கக் கூடிய எத்தனையோ பேர் தம்மைவிட மிகவும் அறிந்த வரிடம் எடுத்துரைக்கின்றனர் என நபி ஸல் கூறியதாக அனஸ் பின் மாலிக் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னுமாஜா 236 தரம் : ஸஹீஹ்


ஜமாஅத் தொழுகையின் சிறப்பு

 عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَنْ سَمِعَ النِّدَاءَ فَلَمْ يَأْتِهِ فَلَا صَلَاةَ لَهُ، إِلَّا مِنْ عُذْرٍ ".

حكم الحديث: صحيح

பாங்கொலியைச் செவியுற்றும் ( பள்ளிவாசலுக்குச்) செல்லாதவருக்கு எந்தத் தொழுகையுமில்லை; தகுந்த காரணம் இருந்தால் தவிர என்று நபி ஸல் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : இப்னுமாஜா 793 தரம் : ஸஹீஹ்


சிலரை கண்டு இறைவன் பெருமிதம் கொள்ளுகிறான்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَغْرِبَ فَرَجَعَ مَنْ رَجَعَ وَعَقَّبَ مَنْ عَقَّبَ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْرِعًا قَدْ حَفَزَهُ النَّفَسُ، وَقَدْ حَسَرَ عَنْ رُكْبَتَيْهِ، فَقَالَ : " أَبْشِرُوا ؛ هَذَا رَبُّكُمْ قَدْ فَتَحَ بَابًا مِنْ أَبْوَابِ السَّمَاءِ يُبَاهِي بِكُمُ الْمَلَائِكَةَ، يَقُولُ : انْظُرُوا إِلَى عِبَادِي قَدْ قَضَوْا فَرِيضَةً وَهُمْ يَنْتَظِرُونَ أُخْرَى ".

حكم الحديث: صحيح

( ஒரு நாள்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களுடன் மஃக்ரிப் தொழுகையைத் தொழுதோம்.( தொழுகை முடிந்ததும்) திரும்பிச் செல்வோர் சென்றுவிட்டனர்.

மற்ற சிலர் ( பள்ளிவாசலிலேயே ) எஞ்சி இருந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் ( பள்ளிவாசலை நோக்கி) வேகமாக வந்தார்கள்.

( வேகமாக வந்ததால்) அவர்களுக்கு மூச்சு வாங்கியது அவர்களின் ஆடை முழுங்கால்களை விட்டு விலகி இருந்தது.

அப்போது அவர்கள் " நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள் இதோ உங்கள் இறைவன் வானத்தின் கதவுகளுள் ஒன்றைத் திறந்து விட்டு , என் அடியார்களைப் பாருங்கள் 

கடமையான தொழுகையொன்றை முடித்துவிட்டு மற்றொரு தொழுகைக்காகக் காத்திருக்கிறார்கள்" என்று பெருமிதத்துடன் உங்களைப் பற்றி வானவர்களிடம் பேசுகின்றான் என்று நபி ஸல் சொன்னார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னுமாஜா 801 தரம் : ஸஹீஹ்


பள்ளிவாசலுக்குள் நுழையும் போது செய்ய வேண்டிய பிரார்த்தனை

فَاطِمَةَ بِنْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْمَسْجِدَ يَقُولُ : " بِاسْمِ اللَّهِ، وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي، وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ ". وَإِذَا خَرَجَ قَالَ : " بِاسْمِ اللَّهِ، وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوبِي، وَافْتَحْ لِي أَبْوَابَ فَضْلِكَ ".

حكم الحديث: صحيح

நபி ஸல் அவர்கள் பள்ளிவாசலுக்குள் நுழையும் போது

 " பிஸ்மில்லாஹி வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹி, 

அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ துனூபீ வஃப்தஹ் லீ அப்வாப ரஹ்மத்திக".

[அல்லாஹ்வின் திருப்பெயரால்..அல்லாஹ்வின் தூதர் மீது இறை சாந்தி பொழியட்டும்.எங்கள் இறைவா என் பாவங்களை மன்னிப்பாயாக உனது அன்பின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக ) என்று கூறுவார்கள்

பள்ளிவாசலிருந்து வெளியேறும்போது "பிஸ்மில்லாஹி வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹி, 

அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ துனூபீ வஃப்தஹ்லீ அப்வாப் ஃபள்லிக "

(அல்லாஹ்வின் திருப்பெயரால்..அல்லாஹ்வின் தூதர் மீது இறை சாந்தி பொழியட்டும் .எங்கள் இறைவா என் பாவங்களை மன்னிப்பாயாக உனது அருள் செல்வங்களின் வாசல்களை எனக்குத் திறந்திடுவாயாக ) என்று நபி ஸல் கூறுவார்கள் என ஃபத்திமா ரலி அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னுமாஜா 771 தரம் : ஸஹீஹ்


சொந்த கருத்துகள் மார்க்க ஆதாரங்கள் ஆகாது

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ أُفْتِيَ بِفُتْيَا غَيْرِ ثَبَتٍ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى مَنْ أَفْتَاهُ ".

حكم الحديث: حسن

( மார்க்க ) ஆதாரம் ஏதுமின்றி ( தவறான) தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவர் ( அந்தத் தீர்ப்பின்படி செயல்பட்டால்) அதற்குரிய பாவம் அந்தத் தீர்ப்பை வழங்கிய வரையே சாரும் என நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : இப்னுமாஜா 53 தரம் : ஹஸன்


தனியாக உபரியான வணக்கங்கள் செய்வதின் சிறப்பு

صلاة الرجل تطوعا حيث لا يراه الناس تعدل صلاته على أعين الناس خمسا وعشرين 

الراوي: صهيب بن سنان الرومي القرشي المحدث: الألباني - المصدر: صحيح الجامع - الصفحة أو الرقم: 3821

خلاصة حكم المحدث: صحيح

மக்கள் தன்னைக் காணாத வகையில் ஒரு மனிதர் உபரியாக ( ஒர் தொழுகையை) தொழுவது மக்கள் பார்க்கின்ற விதத்தில் அவர் " இருபத்தைந்து தடவை தொழுவதற்கு" நிகரானதாகும் என்று நபி ஸல் கூறியதாக சுஹைப் அர் ரூமி ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமி 3821 தரம் : ஸஹீஹ்


எந்த தர்மம் சிறந்தது...?

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ : يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ ؟ قَالَ : " جُهْدُ الْمُقِلِّ ، وَابْدَأْ بِمَنْ تَعُولُ ".

حكم الحديث: صحيح

அல்லாஹ்வின் தூதரே ! எந்த தர்மம் சிறந்தது என்று அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி ஸல் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :

சிறிதளவு செல்வமுடையவர் தனது சக்திக்கேற்ப செய்யும் தர்மமாகும்.

உன் நெருங்கிய உறவினர்களிலிருந்து கொடுக்கத் துவங்கு என்று கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அபூதாவூத் 1677 தரம் : ஸஹீஹ்


நீதியான முறையில் ஸகாத்தை ஒப்படைப்பது

عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " الْعَامِلُ عَلَى الصَّدَقَةِ بِالْحَقِّ، كَالْغَازِي فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ ". 

حكم الحديث: حسن صحيح

உண்மையான முறையில் ஸகாத்தை வசூல் செய்பவர் தமது வீடு திரும்பி வரும் வரை " அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவரைப் போல் " ஆவார் என நபி ஸல் கூறியதாக ராஃபிஃ பின் கதீஜ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : திர்மிதீ 645 தரம் : ஹஸன் ஸஹீஹ்


குழப்பமான காலத்தில் மார்க்கபற்று உடன் வாழ்ந்தால் நமக்கு கிடைக்கும் நற்கூலி

إِنَّ مِنْ ورائِكُم زمانُ صبرٍ ، لِلْمُتَمَسِّكِ فيه أجرُ خمسينَ شهيدًا منكم

الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2234 | خلاصة حكم المحدث : صحيح

உங்களுக்குப் பின்னால் பொறுமையை மேற்கொள்ள வேண்டிய ஒர் காலம் வரும் அப்போது மார்க்கத்தைக் கடைபிடிப்பவருக்கு " ஜம்பது உயிர்த்தியாகிகளுடைய கூலி " கிடைக்கும் என நபி ஸல் கூறியதாக இப்னு மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 2234 தரம் : ஸஹீஹ்


குணத்தால் சிறந்தவரே ஈமானால் சிறந்தவர்

أفضلُ المؤمنينَ إسلامًا من سَلِمَ المسلمونَ من لسانِه و يدِه ، وأفضلُ المؤمنينَ إيمانًا أحسنُهم خُلقًا ؛ وأفضلُ المهاجرين من هجر ما نهى اللهُ تعالى عنه ، و أفضلُ الجهادِ من جاهد نفسَه في ذاتِ اللهِ عزَّ و جلَّ

الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 1129 | خلاصة حكم المحدث : صحيح

முஃமின்களில் எவரது நாவிலிருந்தும், கையிலிருந்தும் பிற முஸ்லிம் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவரே இஸ்லாத்தில் சிறந்தவர்கள்.

முஃமின்களில் குணத்தில் சிறந்தவரே ஈமானால் சிறந்தவர்.

அல்லாஹ் விலக்கியவற்றைத் துறந்தவரே முஹாஜிர்களில் சிறந்தவர்.

அல்லாஹ்வின் வழியில் தன் மனதுடன் போராடுபவரே அறப்போர் வீரன் ஆவான் என நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 1129 தரம் : ஸஹீஹ்


இவர்களே சிறந்த தம்பதியர்கள்

أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ ، قَالَا : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنِ اسْتَيْقَظَ مِنَ اللَّيْلِ وَأَيْقَظَ امْرَأَتَهُ، فَصَلَّيَا رَكْعَتَيْنِ جَمِيعًا ؛ كُتِبَا مِنَ الذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ ".

حكم الحديث: صحيح

இரவில் ஒருவர் எழுந்து தமது மனைவியையும் எழுப்பி இருவரும் சேந்து இரண்டு ரக் அத் தொழுவார்களானால் அவர்கள் " அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களில் பதிவு செய்யப்படுவார்கள்" என நபி ஸல் கூறியதாக அபூ ஸயீத் ( ரலி ) மற்றும் அபூஹுரைரா ( ரலி ) ஆகியோர் அறிவிக்கிறார்கள்

நூல் :  அபூதாவூத் 1451 தரம் : ஸஹீஹ்


மக்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் சிறந்த செயல் ஆகும்

ما عمِلَ ابنُ آدمَ شيئًا أفضلَ من الصلاةِ ، وصلاحِ ذاتِ البَيْنِ ، وخُلُقٍ حَسَنٍ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 5645 | خلاصة حكم المحدث : صحيح

தொழுகை,மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், நற்குணம் ஆகியவற்றை விட சிறந்த ஒன்றை ஆதமுடைய மகன் செய்துவிட முடியாது என நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 5645 தரம் : ஸஹீஹ்


இறைவசனங்களை மனனம் செய்து ஏராளமான நன்மைகளை அடைவோம்

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ، وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِينَ، وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ مِنَ الْمُقَنْطِرِينَ ". 

حكم الحديث: صحيح

பத்து வசனங்களை ஒதி இரவுத் தொழுகை தொழுதவர் அலட்சியம் செய்தவர்களில் பதிவு செய்யப்பட மாட்டார்.

நூறு வசனங்களை ஒதி இரவு தொழுகை தொழுதவர் இரவில் நின்று வணங்கியவர்களில் ஒருவராக பதிவு செய்யப்படுவார்.

ஆயிரம் வசனங்களை ஒதி இரவு தொழுகை தொழுதவர் ஏராளமான நன்மைகளை பெற்றவர்களில் ஒருவராக பதிவு செய்யப்படுவார் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத் 1398 தரம் : ஸஹீஹ்


கோபம் கொண்ட மனிதர் இறைவனுக்காக அந்த கோபத்தை அடக்கி கொண்டால்

عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَا مِنْ جُرْعَةٍ أَعْظَمُ أَجْرًا عِنْدَ اللَّهِ، مِنْ جُرْعَةِ غَيْظٍ كَظَمَهَا عَبْدٌ ؛ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ ".

حكم الحديث: صحيح

ஒரு அடியான் அல்லாஹ்வின் திருப்தியை நாடி தன் கோபத்தை விழுங்குவதை விட வேறு எதை விழுங்குவதும் அல்லாஹ்விடம் மகத்தான நற்கூலியை உடையதாக இருக்க முடியாது என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னுமாஜா 4189 தரம் : ஸஹீஹ்


மனிதருடைய புகழ்க்காக செய்யப்படும் நற்காரியங்களின் நிலை

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ : جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَا لَهُ ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا شَيْءَ لَهُ ". فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا شَيْءَ لَهُ ". ثُمَّ قَالَ : " إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ ".
حكم الحديث: حسن صحيح

ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து  ஒருவன் நற்கூலியையும்,புகழயும் நாடி ( இறைவழியில் ) போரிட்டால் அவனுக்கு கிடைப்பது என்ன ? என்று கேட்டார்.

அதற்கு நபி ஸல் அவர்கள் " அவனுக்கு எந்த நன்மையும் கிடையாது "என்றார்கள் பிறகு அவர் அதே கேள்வியை அவர் திரும்ப திரும்ப மூன்று முறை கேட்டார் .

அதற்கு நபி ஸல் அவர்கள் " அவனுக்கு எந்த நன்மையும் கிடையாது "என்று பதிலளித்துவிட்டு பிறகு ( கூறினார்கள் )

நற்செயல்களில் எது அல்லாஹ்வுக்காக என " தூய எண்ணத்துடனும் அவனது திருமுகத்தை நாடியும் " செய்யப்பட்டதோ அதைத்தான் அல்லாஹ் ஏற்றுகொள்கிறான் என்று கூறினார்கள் என அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : நஸாயீ 3140 தரம் : ஹஸன் ஸஹீஹ்


நன்மையான செயல்களுக்கு மட்டுமே நாவை பயன்படுத்துவோம்

قلتُ : يا رسولَ اللهِ أَوصِني قال : املُك يدَك قال : فما أملِكُ إذا لم أملكْ يدي ؟ قال : املِكْ لسانَك قال : قلتُ : فما أملِكُ إذا لم أملكْ لساني ؟ قال : لا تبسطْ يدَك إلا إلى خيرٍ ولا تقُلْ بلسانِك إلا معروفًا

الراوي : أسود بن أصرم المحاربي | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 2/553 | خلاصة حكم المحدث : إسناده صحيح رجاله كلهم ثقات

 நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே, எனக்கு அறிவுரை கூறுங்கள்!'' என்று கூறினேன், உன்னுடைய கையை உன்னுடைய கட்டுப்பாட்டில் வைப்பாயாக'' (கைகளால் பிறருக்குத் தீங்கு விளைவிக்காதே) என்று சொன்னார்கள்.

என் கையே என் கட்டுப்பாட்டில் இல்லை எனில், வேறு எதுதான் என் கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?'' (கையை என் கட்டுப்பாட்டில் வைக்கமுடியும்) என்று சொன்னேன்.

 உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், எனது நாவு என் கட்டுப்பாட்டில் இல்லையெனில், வேறு எதுதான் என் கட்டுப்பாட்டில் இருக்க முடியும்?'' என்றேன். 

உமது கையை நன்மையான காரியங்களுக்கேயன்றி வேறு எதற்கும் பயன்படுத்தாதீர், உன்னுடைய நாவால் நன்மையான சொல்லையே சொல்லும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அஸ்வத் பின் அஸ்ரம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,

நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 2/553 தரம் : ஸஹீஹ்


சுவனத்திலும் நரகத்திலும் சேர்க்கும் அந்த இரண்டு விஷயங்கள்

سُئِلَ رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم عن أكثرِ ما يُدْخِلُ الناسَ الجنةَ ؟ فقال : تَقْوَى اللهِ وحُسْنُ الخُلُقِ، وسُئِلَ عن أكثرِ ما يُدْخِلُ الناسَ النارَ، قال : الفَمُ والفَرْجُ

الراوي : أبو هريرة | المحدث : الترمذي | المصدر : سنن الترمذي | الصفحة أو الرقم : 2004 | خلاصة حكم المحدث : صحيح 

மக்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைய வைக்கக் கூடிய காரியங்கள் எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, தக்வா, (அல்லாஹ்வை அஞ்சுவது) மற்றும் நற்குணம்'' என்று சொன்னார்கள்.

மக்களை அதிகமாக நரகத்தில் நுழைய வைக்கக் கூடிய செயல் எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, நாவு மற்றும் மர்மஸ்தானத்தைத் தவறாக உபயோகித்தல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: ஸுனன் திர்மிதீ 2004 தரம் : ஸஹீஹ்


இவைகளுக்கு என்று கல்வி கற்க கூடாது

لا تَعلَّموا العِلمَ لِتُباهوا به العُلماءَ ولا تُماروا به السُّفهاءَ ولا تَخيَّروا به المجالِسَ فمَن فعَل ذلك فالنَّارَ النَّارَ

الراوي : جابر بن عبدالله | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 77 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

அறிஞர்களிடத்தில் தற்பெருமை கொள்ளவும், அறிவீனர்களுடன் தர்க்கம் செய்யவும்,   மக்களை ஒன்று கூட்டவும் கல்வியை கற்றுக் கொள்ளாதீர்கள். எவரேனும் இவ்வாறு செய்தால் அவருக்கு நரகம் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னுமாஜா 77 தரம் : ஸஹீஹ்


நம்மில் மிகச் சிறந்தவர் யார் ...?

خيرُكم أحاسنُكم أخلاقًا إذا فقُهوا

الراوي : أبو هريرة | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 91 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

எவர் மார்க்க ஞானத்துடன் நற்குணமும் பெற்றிருக்கிறாரோ, அவரே உங்களில் மிகச் சிறந்தவர்'' என்று அபுல் காஸிம் (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக  அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 91 தரம் : ஸஹீஹ்


கல்விக்கு ஒருபோதும் எல்லை இல்லை

لن يشبَعَ المؤمنُ من خيرٍ يسمعُهُ حتَّى يكون منتهاه الجنَّةَ

الراوي : أبو سعيد الخدري | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 7372 | خلاصة حكم المحدث : صحيح

உண்மையான இறை நம்பிக்கையாளர் (கல்வி ஞானத்தை)க் கொண்டு ஒருபோதும் மன நிறைவு அடையமாட்டான். கல்வி ஞானங்களை  கற்றுக் கொண்டே இருப்பான், எதுவரை என்றால், அவனுக்கு மரணம் வந்து சுவர்க்கத்தில் நுழையும் வரை!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஜாமிஃ அல்- ஸகீர் 7372 தரம் : ஸஹீஹ்


பிறர் நேசத்தை பெற இறைவனிடத்தில் பிரார்த்திப்போம்

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :  .....(اللهم إني)أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ

حكم الحديث: صحيح

( என் இறைவா ) உன் அன்பை ,உன்னை விரும்புவோரின் அன்பை, உனது அன்பிற்கு என்னை நெருக்கி வைக்கும் செயல்களின் ஆசையை உன்னிடம் நான்  வேண்டுகிறேன் என நபி ஸல் கூறியதாக முஆத் பின் ஜபல் ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : திர்மிதீ 3235 தரம் : ஸஹீஹ்


அனைத்து தீங்கை விட்டு இறைவனிடம் பாதுகாவல் தேடுவோம்

اللهمَّ إنِّي أعوذُ بك من العجزِ والكسلِ ، والجبنِ والبخلِ ، والهرمِ ، والقسوةِ ، والغفلةِ ، والعيْلةِ ، والذلةِ ، والمسكنةِ . وأعوذُ بك من الفقرِ والكفرِ ، والفسوقِ والشقاقِ والنفاقِ ، والسمعةِ والرياءِ . وأعوذُ بك من الصممِ ، والبُكمِ ، والجنونِ ، والجُذامِ ، والبَرَصِ ، وسيِّئِ الأسقامِ

الراوي : أنس بن مالك | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 1483 | خلاصة حكم المحدث : صحيح

என் இறைவா ! பலவீனம்,சோம்பெறித்தனம்,கோழைத்தனம்,கஞ்சத்தனம்,வயோதிகம், உள்ளம் இறுகுதல், அலட்சியம்,வறுமை,இழிவு, பிறரிடம் தேவையாகுதல் ஆகிய அனைத்தையும் விட்டு நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

ஏழ்மை, நிராகரித்தல்,பாவம், முரண்படுதல், நயவஞ்சகத்தனம்,புகழை விரும்புதல், முகஸ்துதி ஆகிய அனைத்தையும் விட்டு உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

செவிட்டுத்தனம், ஊமையாகுதல்,பைத்தியமாகுதல்,குஷ்டம், வெண்குஷ்டம்,கெட்ட நேய்கள் அனைத்தையும் விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி ஸல் கூறினார்கள் என அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஜாமிஃ அல்- ஸகீர் 1483 தரம் : ஸஹீஹ்


பாவமன்னிப்பு தேடுதல்

من قال : أستغفرُ اللهَ العظيمَ الذي لا إلهَ إلَّا هو الحيَّ القيومَ وأتوبُ إليه ...

الراوي : زيد بن حارثة مولى رسول الله صلى الله عليه وسلم | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 3577 | خلاصة حكم المحدث : صحيح

மகத்துவமிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்கிறேன் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை.

அவன் என்றும் உயிருள்ளவன் அனைத்தையும் நிர்வகிப்பவன் அவன் பக்கமே நான் திரும்புகிறேன் என நபி ஸல் கூறியதாக ஜைத் பின் ஹாரிஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 3577 தரம் : ஸஹீஹ்


மகிழ்ச்சி மற்றும் துக்கமான செய்திகளை கேட்டும் பொழுது

كانَ إذا أتاهُ الأمرُ يَسُرُّه قال : الحمدُ للهِ الذي بنعمتِهِ تتمُ الصالحاتِ، و إذا أتاهُ الأمرُ يكرهُهُ قالَ : الحمدُ للهِ على كلِّ حالٍ

الراوي : عائشة أم المؤمنين | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 6510 | خلاصة حكم المحدث : صحيح

நபி ஸல் அவர்கள் மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டால் " எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே ! அவனுடைய அருட்கொடையைக் கொண்டே நல்ல காரியங்கள் முழுமை அடைகின்றன" என்று கூறுவார்கள் அதைபோல் வெறுப்பான செய்திகள் வந்தால் " எல்லா நிலைமையிலும் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுவார்கள் என அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஜாமிஃ அல்- ஸகீர் 6510 தரம் : ஸஹீஹ்


முஸ்லிம் சகோ பிற முஸ்லிம் சகோதரிடம் நடந்து கொள்ள வேண்டிய ஒழுங்குகள்

المسلمُ أخو المسلمِ لا يخونُهُ ولا يَكذِبُهُ ، ولا يخذلُهُ ، كلُّ المسلمِ علَى المسلمِ حرامٌ : عِرضُهُ ومالُهُ ودمُهُ . التَّقوَى ههُنا . بِحسبِ امرئٍ منَ الشَّرِّ أن يحتقِرَ أخاهُ المسلمَ

الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 1927 | خلاصة حكم المحدث : صحيح

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிமின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் திர்மிதீ 1927 தரம் : ஸஹீஹ்


மூன்று அன்பளிப்புகளை மறுக்க கூடாது

عَنِ ابْنِ عُمَرَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلَاثٌ لَا تُرَدُّ : الْوَسَائِدُ، وَالدُّهْنُ، وَاللَّبَنُ ". 

حكم الحديث: حسن

மூன்றை மறுக்கக் கூடாது அவை : தலையணை, நறுமணம், மற்றும் பால் என நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : திர்மிதீ 2790 தரம் : ஹசன்


நபியின் பெயர் நம் காதில் விழும்போது ஸலவாத் கூறவேண்டும்

عَنْ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ ". 

حكم الحديث: صحيح

உண்மையில் கஞ்சன் யாரென்றால் எவருக்கு முன்னால் என்னைப் பற்றி கூறப்பட்டு அவர் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவர்தான் என நபி ஸல் கூறியதாக ஹுஸைன் பின் அலி ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல் : திர்மிதீ 3546 தரம் : ஸஹீஹ்


மறுமை விசாரனை எளிதாக

اللَّهمَّ حاسِبْني حسابًا يسيرًا...

الراوي : عائشة | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 7372 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

என் இறைவா ! என் ( மறுமை ) விசாரனையை எளிதாக்குவாயாக என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 7372 தரம் : ஸஹீஹ்


தூய்மையான சம்பாத்தியம்

عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - سُئِلَ: أَيُّ الْكَسْبِ أَطْيَبُ? قَالَ: «عَمَلُ الرَّجُلِ بِيَدِهِ, وَكُلُّ بَيْعٍ مَبْرُورٍ»

صحيح. رواه البزار (2/ 83 )

எவ்வகை சம்பாத்தியம் மிகத்தூய்மையானது ? என்று நபி ஸல் அவர்களிடம் கேட்கபட்டது அதற்கு " மனிதன் தன் கையினால் உழைத்துச் சம்பாதிக்கும் சம்பாத்தியமும் 

ஏமாற்றமில்லாமல் ( நியாயமாகச் ) செய்யும் வியாபார( த்தின் மூலம் கிடைக்கும் லாப)மும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என ரிஃபாஆ இப்னு ராஃபிஃ ( ரழி ) அறிவிக்கிறார்

நூல் : பஸ்ஸார் 2/83 தரம் : ஸஹீஹ்


இன்மை மறுமை நெருக்கடியை விட்டு பாதுகாவல் தேடுவோம்

...اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ ضِيقِ الدُّنْيَا وَضِيقِ يَوْمِ الْقِيَامَةِ

 ‏حكم الحديث: حسن صحيح

என் இறைவா ! உலகத்தின் நெருக்கடியை விட்டும் மறுமை நாளின் நெருக்கடியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்து வந்ததாக அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அபூதாவூத் (5085) தரம் : ஹஸன் ஸஹீஹ்


இரக்கம் காட்டப்பட்ட சமூகம்

 عَنْ أَبِي مُوسَى قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ، لَيْسَ عَلَيْهَا عَذَابٌ فِي الْآخِرَةِ، عَذَابُهَا فِي الدُّنْيَا الْفِتَنُ وَالزَّلَازِلُ وَالْقَتْلُ ".

حكم الحديث: صحيح

எனது உம்மத் ( அல்லாஹ்வினால் ) இரக்கம் காட்டப்பட்ட உம்மத்தாகும். கொலைகள், நில நடுக்கங்கள்,குழப்பங்கள் என்பவற்றை இவ்வுலகத்தில் வேதனையாகக் கொடுப்பதன் மூலம் மறுமையில் பல வேதனைகளை நீக்கி விடுகின்றான் என நபி ஸல் கூறியதாக அபூ மூஸா அல் அஷ் அரி ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அபூதாவூத் 4278 தரம் : ஸஹீஹ்


பயன் உள்ள கல்வியை இறைவனிடத்தில் கேட்ப்போம்

كانَ يقولُ إذا صلَّى الصُّبحَ حينَ يسلِّمُ اللَّهمَّ إنِّي أسألُكَ عِلمًا نافعًا ورزقًا طيِّبًا وعملًا متقبَّلًا

الراوي : أم سلمة هند بنت أبي أمية | المحدث : الألباني | المصدر : صحيح ابن ماجه | الصفحة أو الرقم : 762 | خلاصة حكم المحدث : صحيح

என் இறைவா ! நிச்சயமாக நான் உன்னிடம் பயனுள்ள கல்வியை,தூய்மையான ( ஆகுமான) உணவை ,ஏற்றுக் கொள்ளப்பட்ட அமலைக் கேட்கிறேன் என நபி ஸல் கூறியதாக உம்மு ஸலமா ( ரலி) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு மாஜா (762) தரம் : ஸஹீஹ்


இஸ்லாத்தில் உறுதியாக இருக்க பிரார்த்திப்போம்

كان النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم يقولُ يا وليَّ الإسلامِ وأهلِه ثبِّتْني به حتَّى ألقاك

الراوي : أنس بن مالك | المحدث : الهيثمي | المصدر : مجمع الزوائد | الصفحة أو الرقم : 10/179 | خلاصة حكم المحدث : رجاله ثقات

இஸ்லாமையும் முஸ்லிம்களையும் பாதுகாப்பவனே! 

நான் உன்னை சந்திக்கும் நாள் வரை என்னை இஸ்லாமில் உறுதியாக இருக்க செய்.என நபி ஸல் கூறியதாக அனஸ் பின் மாலிக் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : முஃஜமுத் தப்ரானி 10/179 தரம் : ஸஹீஹ்


தற்பெருமை கொள்ளாதே!

 مَنْ تعَظَّمَ في نفسِهِ ، واختال في مِشْيَتِهِ ، لَقِيَ اللهَ و هو عليْهِ غضبانٌ

الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع

الصفحة أو الرقم: 6157 | خلاصة حكم المحدث : صحيح
 
தன்னைத் தானே பெரியவன் என்று எண்ணிக் கொண்டும்,பெருமையாக பூமியில் நடந்து கொண்டு இருப்பவன் ( மறுமையில் ) அவன் மீது கோபமாயிருக்கும் நிலையில் அல்லாஹ்வைச் சந்திப்பான் 
என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் ( ரழி ) அறிவிக்கிறார்கள்

 நூல் :  ஸஹீஹ் அல்ஜாமி 6157 தரம் : ஸஹீஹ்


நேர்வழியை இறைவனிடத்தில் கேட்கவேண்டும்

اللَّهمَّ إنِّي أستهديكَ لِأرشَدِ أموري وأعوذُ بكَ مِن شرِّ نفسي 

الراوي : عثمان بن أبي العاص وامرأة من قريش | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 901 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

என் இறைவா! எனது காரியங்களில் மிக நேரானதை அடைவதற்கு உன்னிடம் நான் நேர்வழி தேடுகிறேன்.

என் ஆன்மாவின் தீங்கிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என நபி ஸல் கூறியதாக உஸ்மான் பின் அபீ அல் ஆஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (901) தரம் : ஸஹீஹ்


உறுதியான இறை நம்பிக்கையை இறைவனிடத்தில் கேட்க வேண்டும்

اللَّهمَّ إنِّي أسألُك إيمانًا لا يرتَدُّ ونعيمًا لا ينفَدُ ومرافقةَ محمَّدٍ صلَّى اللهُ عليه وسلَّم في أعلى جنَّةِ الخُلدِ

الراوي : عبدالله بن مسعود | المحدث : ابن حبان | المصدر : صحيح ابن حبان | الصفحة أو الرقم : 1970 | خلاصة حكم المحدث : أخرجه في صحيحه

என் இறைவா ! தடுமாறாத நம்பிக்கையும் ,தீர்ந்துவிடாத அருட்கொடையையும் " குல்த்" என்ற உயர்ந்த சொர்க்கத்தில் முஹம்மத் ( ஸல்) அவர்களுடன் தோழமை கொள்வதையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கிறேன் என நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (1970) தரம் : ஸஹீஹ்


குணத்தை அழகுபடுத்த இறைவனிடத்தில் பிரார்த்திப்போம்

اللَّهمَّ كما حَسَّنتَ خَلقي ، فحسِّن خُلُقي
 
 خلاصة حكم المحدث : صحيح 
 
என் இறைவா ! எனது உருவத்தை அழகுபடுத்தினாய் எனது குணத்தையும் ( அதையே போன்று ) அழகுப்படுத்து என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலி அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னு ஹிப்பான் (959) தரம் : ஸஹீஹ்


குர் ஆனை கற்றுகொண்டு அதை செம்மையாக ஒதிவர வேண்டும்

سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ....  فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ - لَهُوَ أَشَدُّ تَفَلُّتًا مِنَ الْمَخَاضِ فِي الْعُقُلِ ".

حكم الحديث: إسناده صحيح

குர் ஆனை கற்று கொள்ளுங்கள் ! அதை அழகான குரலில் ஒதுங்கள் ! அதை பதிவு செய்து கொள்ளுங்கள்!

எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக இந்த குர் ஆன் கயிற்றில் கட்டப்பட்ட சூல் ஒட்டகையை விட விரைந்து ஒடி விடக் கூடியதாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என உக்பத் இப்னு ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : தாரமி (3391) தரம் : ஸஹீஹ்


குர் ஆனை அவசரமாக ஓதி முடிக்க கூடாது

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَمْ يَفْقَهْ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي أَقَلَّ مِنْ ثَلَاثٍ ".

حكم الحديث: صحيح

மூன்று நாட்களுக்கு குறைவாக குர் ஆனை ( முழுமையாக ) ஒதுபவர் அதனை சிந்திக்க மாட்டார் என நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னுமாஜா 1347 தரம் : ஸஹீஹ்


தந்தை மகன் உறவு

وَعَنْ أَبِي رِمْثَةَ قَالَ: { أَتَيْتُ اَلنَّبِيَّ ‏- صلى الله عليه وسلم ‏-وَمَعِي اِبْنِي .‏ فَقَالَ: "مَنْ هَذَا?" قُلْتُ: اِبْنِي.‏ أَشْهَدُ بِهِ.‏ قَالَ: "أَمَّا إِنَّهُ لَا يَجْنِي عَلَيْكَ, وَلَا تَجْنِي عَلَيْهِ }

صحيح.‏ رواه أبو داود (4495)‏، والنسائي (8 /53)‏، وابن الجارود (770)‏

நான் என்னுடைய மகனுடன் நபி ஸல் அவர்களிடம் ஆஜரானேன் அப்போது " இவர் யார் ?" என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்.

"இவன் என்னுடைய மகன் ! தாங்கள் இதற்க்கு சாட்சியாக இருங்கள் !" என்று நான் கூறினேன்.

அதற்கு நபி ஸல் அவர்கள் " அவன் உனக்கு ஏதும் தீங்கு விளைவிக்க மாட்டான் நீயும் அவனுக்கு ஏதும் தீங்கு விளைவிக்க மாட்டாய் " என்று கூறினார்கள் என அபூரிம்ஸா ( ரழி ) அறிவிக்கிறார்.

அபூதாவூத்(4495) தரம் : ஸஹீஹ்

இதே செய்தி நஸயீ,இப்னு குஸைமா ஆகிய நூல்களிலும் பதிவாகி உள்ளது


இறைவனிடத்தில் கேட்டால் அவன் கொடுக்கிறான்

ما من مؤمِنٍ ينصِبُ وجهَه إلى اللهِ ، يَسألُ مسألةً إلَّا أعطاهُ إيَّاها...

خلاصة حكم المحدث : صحيح لغيره

ஒர் இறை நம்பிக்கையாளர் தம் முகத்தை அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி ஒரு விஷயத்தை அவனிடம் வேண்டினால் அதை அல்லாஹ் அவருக்கு கொடுத்தே தீருவான்.... என நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அல் அதபுல் முஃப்ரத் (711) தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


நற்குணமும் இஸ்லாமிய சட்டங்களையும் அறிந்தவரின் சிறப்பு

سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ‏:‏ سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ خَيْرُكُمْ إِسْلاَمًا أَحَاسِنُكُمْ أَخْلاَقًا إِذَا فَقِهُوا‏.‏

இஸ்லாத்தில் உங்களிள் சிறந்தவர்கள் உங்களிள் குணங்களால் அழகியவர்களே அவர்கள் மார்க்க விளக்கமுடையவர்களாக இருந்தால் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அல் அதபுல் முஃப்ரத் (285) தரம் : ஸஹீஹ்


எந்த செயலாக இருந்தாலும் அது இறைவனுக்காக மட்டுமே இருக்க வேண்டும்.

" إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا اتِّقَاءَ اللَّهِ إِلَّا أَعْطَاكَ اللَّهُ خَيْرًا مِنْهُ ".

....நபி ஸல் அவர்கள் ஒரு மனிதருக்குச் சொன்னார்கள் : 

நீ அல்லாஹ்வுக்காக அஞ்சி எந்த ஒரு பொருளை விட்டுவிட்டாலும் அதனை விடச்சிறந்த ஒன்றை அல்லாஹ் உனக்கு வழங்காமல் இருக்கமாட்டான் 

இந்த செய்தி முஸ்னத் அஹ்மத் [ 20214] ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது.


நபி ( ஸல் ) எதனை கண்டு அஞ்சினார்களோ அதை கண்டு நாமும் அஞ்சிவோம் :

المعجم الكبير للطبراني (18 / 237):
 عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَخْوَفَ مَا أَخَافُ عَلَيْكُمْ بَعْدِي كُلُّ مُنَافِقٍ عَلِيمِ اللِّسَانِ»

எனக்குப் பிறகு உங்களிடம் நான் அஞ்சுவதில் மிகவும் அஞ்சுவது ; 

நாவண்மை மிக்க அனைத்து நயவஞ்சகர்களைத்தான் என்று நபி ( ஸல் ) கூறினார்கள்.என இம்ரான் இப்னு ஹுஸைன் ( ரலி ) அறிவிக்கிறார்கள்  

நூல் :தப்ரானீ ( 593 ) தரம்: ஸஹீஹ்  

மேலும் முஸ்னத் அஹ்மத் ( 144 ) உமர் ( ரலி ) அறிவித்ததாகவும் ஸஹீஹ் லி ஹைரிஹி தரத்தில் பதிவாகி உள்ளது.


தாம் மனம் விரும்பிய படி மார்க்கத்தை வளைப்பதற்க்கு அனுமதி கிடையாது 

 عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: لَوْ كَانَ الدِّينُ بِالرَّأْيِ لَكَانَ أَسْفَلُ الْخُفِّ أَوْلَى بِالْمَسْحِ مِنْ أَعْلَاهُ، وَقَدْ «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ عَلَى ظَاهِرِ خُفَّيْهِ»

[حكم الألباني] : صحيح

மார்க்கம் மனித அபிப்பிராயத்தின்படி அமைந்திருப்பின் காலுறையின் அடிப்பாகமே அதன் மேல்பாகத்தை விட மஸஹ் செய்வதற்கு தகுதியானதாகும்.

ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தனது காலுறைகளின் மேல்பாகத்தின் மீதே மஸஹ் செய்யக் கண்டுள்ளேன் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலி ( ரலி ) அவர்கள்.

நூல் : ஸுனன் அபூதாவூத் ( 162 ) தரம் : ஸஹீஹ்


அல்லாஹ் நாம் குறைகளை பின் தொடர்ந்தால் ?

عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَا مَعْشَرَ مَنْ آمَنَ بِلِسَانِهِ وَلَمْ يَدْخُلِ الإِيمَانُ قَلْبَهُ لاَ تَغْتَابُوا الْمُسْلِمِينَ وَلاَ تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ فَإِنَّهُ مَنِ اتَّبَعَ عَوْرَاتِهِمْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ وَمَنْ يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ فِي بَيْتِهِ ‏"‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூ பர்ஸா அஸ்லமீ ( ரலி ) அறிவிக்கிறார்கள் :

நாவால் மட்டும் முஸ்லிமானவர்களே ! உள்ளங்களில் ஈமான் நுழையாத மக்களே !

நீங்கள் முஸ்லிம்களை புறம் பேசாதீர்கள் ! அவர்களுடைய குறைகளைத் தேடித் திரியாதீர்கள் !

ஏனெனில் , எவர் அவர்களுடைய குறைகளைத் தேடித்திரிகிறாரோ அல்லாஹ் அவருடைய குறைகளை பின் தொடர்கிறான்.

அல்லாஹ் எவருடைய குறைகளைப் பின் தொடர ஆரம்பித்து விடுவானோ அவனை வீட்டில் இருக்க வைத்தே கேவலப்படுத்துவான்.

நூல் : அபூதாவூத் ( 4880 ) தரம் : ஹஸன் ஸஹீஹ்


அகீதாவை முதலில் கற்பதின் சிறப்பு

عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا

ஜூன்துப் பின் அப்துல்லாஹ் ( ரலி )அறிவிப்பதாவது :

நாங்கள் பருவ வயதை நெருங்கிய இளைஞர்களாக இருக்கும் நிலையில் நபி ஸல் அவர்களுடன் (தங்கி) இருந்தோம். நபி ஸல் அவர்கள் எங்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கு முன் இறைநம்பிக்கையை பற்றி கற்றுத்தந்தார்கள். பிறகே குர்ஆனை கற்றுத்தந்தார்கள். இதன் மூலம் எங்களது இறைநம்பிக்கையை நாங்கள் அதிகரித்துக் கொண்டோம்.

நூல் : இப்னு மாஜா ( 61 ) தரம் : ஸஹீஹ்


நல்ல விசயங்களை கற்றுகொடுப்பவர்க்கு கிடைக்கும் நற்கூலி

عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ قَالَ : ذُكِرَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلَانِ : أَحَدُهُمَا عَابِدٌ، وَالْآخَرُ عَالِمٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " فَضْلُ الْعَالِمِ عَلَى الْعَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ". ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِنَّ اللَّهَ، وَمَلَائِكَتَهُ، وَأَهْلَ السَّمَاوَاتِ، وَالْأَرَضِينَ، حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا، وَحَتَّى الْحُوتَ ؛ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِ النَّاسِ الْخَيْرَ

حكم الحديث: صحيح

ஒருவர் வணக்கசாலி ; மற்றொருவர் அறிஞர் இவ்விருவர் பற்றி நபி( ஸல் ) அவர்களிடம் கூறப்பட்ட போது ,

வணக்க சாலியை விட அறிஞனின் சிறப்பு ,உங்களில் மிக தாழ்ந்து உள்ளவரை விட எனக்குரிய சிறப்பு போன்றதாகும்.என்று நபி ( ஸல் ) கூறினார்கள் . பின்பு “ நிச்சயமாக அல்லாஹ் மக்களுக்கு நல்லவற்றை கற்றுக் கொடுப்பவனுக்கு அருள் புரிகிறான். வானவர்களும் ,வானில் ,பூமியில் உள்ளோரும் ,பொந்தில் உள்ள எறும்பும் ,மீன்களும் அவனுக்கு அருள் கிடைக்க து ஆ ச் செய்கின்றார்கள் என்று நபி ( ஸல் ) கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : திர்மிதீ ( 2685) தரம் : ஸஹீஹ்


சிறுவர்கள் மீது இரக்கம் காட்டவேண்டும்

وعن عبد الله بن عمرو رضي الله عنهما يبلغ به النبي صلى الله عليه وسلم قال ليس منا من لم يرحم
صغيرنا ويعرف حق كبيرنا

رواه الحاكم وقال صحيح على شرط مسلم

 நம்மில் சிறுவருக்கு இரக்கம் காட்டாதவரும் நம்மில் பெரியவரின் உரிமையை அறியாதவரும் நம்மை சார்ந்தவரில்லை என்று நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஹாகிம் ( 195  ) தரம் : ஸஹீஹ்


பெரியவர்களுக்கு கண்ணியத்தை வழங்கவேண்டும்

وعن ابن عباس أن رسول الله صلى الله عليه وسلم قال
البركة مع أكابركم

رواه الطبراني في الأوسط والحاكم وقال صحيح على شرط مسلم

உங்களில் பெரியவர்களிடம் பரக்கத் உள்ளது என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : தப்ரானீ (   8991  )  தரம் : ஸஹீஹ்


முஸ்லிம்களின் உரிமைகளை பற்றி பேசும் அழகிய நபிமொழிகளில் இதுவும் ஒன்று

عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم

 நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூதர் ( ரலி ) அறிவிக்கிறார்கள் :

لاَ يَحْقِرَنَّ أَحَدُكُمْ شَيْئًا مِنَ الْمَعْرُوفِ وَإِنْ لَمْ يَجِدْ فَلْيَلْقَ أَخَاهُ بِوَجْهٍ طَلِيقٍ

உங்களில் எவரும் ஒரு சிறிய நன்மையையும் சாதாரணமாகக் கருத வேண்டாம், எவ்வித நன்மையும் செய்ய இயலவில்லை என்றால் தன் சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதும் நன்மைதான்.

وَإِنِ اشْتَرَيْتَ لَحْمًا أَوْ طَبَخْتَ قِدْرًا فَأَكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ

சமைக்க நீங்கள் இறைச்சி வாங்கினாலோ அல்லது ஏதேனும் குழம்பு சமைத்தாலோ அதன் அளவை அதிகப்படுத்துங்கள் அதில் சிறதளவு உங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுங்கள்.

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

இமாம் திர்மிதீ அவர்கள் இந்த ஹதீஸை ஹஸன் ஸஹீஹ் என்று கூறிப்பிடுகிறார்கள்.

 நூல் : திர்மிதீ ( 1833 ) தரம் : ஸஹீஹ்


நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? என்பதை அறிந்துகொள்ள

عَنْ عَبْدِ اللَّهِ 

அப்துல்லாஹ் இப்னு மஸ் ஊத் ( ரலி ) அறிவித்தார்கள் :

قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ , كَيْفَ لِي أَنْ أَعْلَمَ إِذَا أَحْسَنْتُ

ஒர் மனிதர் நபி ஸல் அவர்களிடம் ( அல்லாஹ்வின் தூதரே ) நான் மற்றவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறேனா அல்லது தீய முறையில் நடந்துகொள்கிறேனா என்பதை எப்படி நான் அறிந்து கொள்வது ? என்று கேட்டார்

قَالَ : " إِذَا سَمِعْتَ جِيرَانَكَ يَقُولُونَ : أَحْسَنْتَ ، فَقَدْ أَحْسَنْتَ 

அல்லாஹ்வின் தூதர் ( அவர்க்கு பதில் கூறினார்கள் ) நீர் நல்ல முறையில் நடந்து கொண்டீர் என்று உமது அண்டைவீட்டார் சொல்லச் செவியுற்றால் நீர்  நிச்சயமாக நல்லது செய்தீர் ! 

وَإِذَا سَمِعْتَهُمْ يَقُولُونَ : قَدْ أَسَأْتَ ، فَقَدْ أَسَأْتَ

நீர் தீய முறையில் நடந்து கொண்டீர் என உமது அண்டைவீட்டார் சொல்லச் செவியுற்றால் நிச்சயமாக நீர் தீயது செய்தீர் என்று கூறினார்கள்.

நூல் : பைஹகீ ( 18778) தரம் : ஸஹீஹ்


அல்லாஹ் உடைய பொருத்ததிற்காகவே கல்வி கற்க வேண்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ تَعَلَّمَ عِلْمًا مِمَّا يُبْتَغَى بِهِ وَجْهُ اللَّهِ عَزَّ وَجَلَّ لاَ يَتَعَلَّمُهُ إِلاَّ لِيُصِيبَ بِهِ عَرَضًا مِنَ الدُّنْيَا لَمْ يَجِدْ عَرْفَ الْجَنَّةِ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏ يَعْنِي رِيحَهَا 

رواة ابواؤد

[ حكم : صحيع ]

 நபி ( ஸல் ) கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் பொருத்த த்திற்காக கற்கவேண்டிய கல்வியை உலகத்துடைய சொத்து, செல்வங்களைப் பெற வேண்டும் என்பதற்காக எவர் கற்பாரோ அவர் கியாமத் நாளன்று சொர்க்கத்தின் நற்வாசனையை கூட சுவாசிக்க முடியாது.

 நூல் : அபூதாவூத் ( 3664 ) தரம் : ஸஹீஹ்

இதே செய்தி இப்னுமாஜா மற்றும் அஹ்மத்யில் பதிவாகி உள்ளது.


நட்பு வைப்பதிலும் இறைவனுக்காகவே இருக்க வேண்டும்.

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم   

நபி ( ஸல் ) கூறியதாக உமர் பின் அல்ஹத்தாப்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ لأُنَاسًا مَا هُمْ بِأَنْبِيَاءَ وَلاَ شُهَدَاءَ يَغْبِطُهُمُ الأَنْبِيَاءُ وَالشُّهَدَاءُ يَوْمَ الْقِيَامَةِ بِمَكَانِهِمْ مِنَ اللَّهِ تَعَالَى

அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் இருக்கிறார்கள். 
அவர்கள் நபிமார்களும் அல்ல. இறைவனின் பாதையில் உயிர் நீத்தவர்களும் அல்ல. 

இவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் அந்தஸ்த்தைப் பார்த்து நபிமார்களும் தியாகிகளும் பொறாமைப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

قَالُوا يَا رَسُولَ اللَّهِ تُخْبِرُنَا مَنْ هُمْ

 மக்கள் அவர்கள் யார் என எங்களுக்குக் கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். 

قَالَ ‏"‏ هُمْ قَوْمٌ تَحَابُّوا بِرُوحِ اللَّهِ عَلَى غَيْرِ أَرْحَامٍ بَيْنَهُمْ وَلاَ أَمْوَالٍ يَتَعَاطَوْنَهَا فَوَاللَّهِ إِنَّ وُجُوهَهُمْ لَنُورٌ وَإِنَّهُمْ عَلَى نُورٍ لاَ يَخَافُونَ إِذَا خَافَ النَّاسُ وَلاَ يَحْزَنُونَ إِذَا حَزِنَ النَّاسُ

அதற்கு நபியவர்கள் தங்களுக்கிடையே இரத்த உறவிற்காகவோ, கொடுத்து வாங்கிக் கொள்ளும் செல்வங்களுக்காகவோ அல்லாமல் அல்லாஹ்விற்காக ஒருவரையொருவர் நேசித்துக் கொண்டவர்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக அவர்களுடைய முகங்கள் ஒளியாக இருக்கும். அவர்கள் ஒளியின் மீது இருப்பார்கள். மக்கள் அஞ்சும் போது அவர்கள் அஞ்சமாட்டார்கள். மக்கள் கவலைப்படும் போது அவர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்று கூறி விட்டு .

وَقَرَأَ هَذِهِ الآيَةَ ‏{‏ أَلاَ إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُونَ ‏}‏

அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்ற வசனத்தை படித்துக்காட்டினார்கள். 

رواة أبي داود

حكم : صحيح

 நூல் : அபூதாவூத் ( 3527 ) தரம் : ஸஹீஹ்


கடைசி வார்த்தை லா இலாஹ இல்லல்லாஹ் இருந்தால்...?

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ كَانَ آخِرُ كَلاَمِهِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ دَخَلَ الْجَنَّةَ

رواة أبي داود

حكم : صحيح   

 நபி ( ஸல் ) கூறியதாக முஆத் பின் ஜபல்( ரலி ) அறிவிக்கிறார்கள் 

யாருடைய கடைசி வார்த்தை லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாக இருக்கிறதோ அவர் சுவனத்தில் நுழைவார்.

நூல் : அபூதாவூத் ( 3116 ) தரம் : ஸஹீஹ்

இதே செய்தி ஹாகிம் யில் பதிவாகி உள்ளது.


தொழுகை ஏற்றுகொள்ளபடாதவர்கள் மூவர் !

ثَلاَثَةٌ لاَ تُجَاوِزُ صَلاَتُهُمْ آذَانَهُمُ

மூவரின் தொழுகை அவர்களின் காதுகளைத் தாண்டாது. 

الْعَبْدُ الآبِقُ حَتَّى يَرْجِعَ

தனது எஜமானை விட்டோடிய அடிமை தனது எஜமானிடம் மீளும் வரைக்கும்

وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ

தனது கணவர் தன் மீது கோபமடைந்திருந்த நிலையில் இரவைக் கழித்த பெண்மணி

وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ

மக்களின் வெறுப்புக்குள்ளான (நிலையில் அவர்களுக்குத் தொழுகை நடாத்திய) இமாம்

 நூல் : திர்மிதீ ( 360 ) தரம் : ஹஸன்


நன்மைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்...!!!

عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ قَالَ ‏:‏ ‏"‏ لأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا ‏"‏ ‏.‏ قَالَ ثَوْبَانُ ‏:‏ يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا جَلِّهِمْ لَنَا أَنْ لاَ نَكُونَ مِنْهُمْ وَنَحْنُ لاَ نَعْلَمُ ‏.‏ قَالَ ‏:‏ ‏"‏ أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ وَمِنْ جِلْدَتِكُمْ وَيَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا ‏"

حكم الحديث : صحيع

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் திஹாமா மலைகள் போன்ற நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான் என்று நபியவர்கள் கூறினார்கள். 

அல்லாஹ்வின் தூதரே அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள் அவர்களை எங்களுக்குத் தெரியாது என்றோம். 

அதற்கு நபியவர்கள் ‘அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள் ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள் அவர்களே அக்கூட்டத்தினர்’ என்று கூறினார்கள்.

இதை ஸவ்பான் ரலி அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னுமாஜா ( 4245 ) தரம் : ஸஹீஹ்


கொடுக்கல் வாங்கலில் பெருந்தன்மை

غَفَرَ اللَّهُ لِرَجُلٍ كَانَ قَبْلَكُمْ

உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்தான்.

كَانَ سَهْلًا إِذَا بَاعَ

அவர் விற்கும்போது மென்மையாக நடந்துகொண்டார்.

سَهْلًا إِذَا اشْتَرَى

வாங்கும்போதும் மென்மையாக நடந்துகொண்டார்.

سَهْلًا إِذَا اقْتَضَى

கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கும் போதும் மென்மையாக நடந்துகொண்டார்.

நூல் : திர்மிதீ ( 1320) தரம் : ஸஹீஹ்


உறங்கும் முன் திக்ர் செய்வதால் கிடைக்கும் நற்பாக்கியம்

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " مَا مِنْ مُسْلِمٍ يَبِيتُ عَلَى ذِكْرٍ طَاهِرًا فَيَتَعَارُّ مِنَ اللَّيْلِ، فَيَسْأَلُ اللَّهَ خَيْرًا مِنَ الدُّنْيَا وَالْآخِرَةِ إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ ". 

حكم الحديث: صحيح

ஒரு முஸ்லிம் இரவில் அங்க தூய்மையுடன் இறைவனை திக்ரு செய்தவாறு உறங்கி பிறகு இரவில் ஏதேனுமொரு நேரத்தில் இடையே கண்விழிக்கும் போது அவர் இறைவனிடம் இம்மை மற்றும் மறுமையின் நன்மையானவற்றில் எதை கேட்டாலும் அவருக்கு நிச்சியமாக அதை இறைவன் வழங்கி விடுவான் என்று நபி ( ஸல் ) கூறியதாக மு ஆத்ப்னு ஜபல் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

தரம் : ஸஹீஹ்

நூல் : அபூதாவூத் ( 5042)

இதே செய்தி சற்று வாசகங்கள் மாற்றத்துடன் இப்னுமாஜா மற்றும் அஹ்மத்யில் ஸஹீஹ் தரத்தில் பதிவாகி உள்ளது.


அல்மு அவ்விதத்தைன் சூராகளின் சிறப்பு 

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ اتَّبَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ رَاكِبٌ فَوَضَعْتُ يَدِي عَلَى قَدَمِهِ فَقُلْتُ أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ سُورَةَ هُودٍ وَسُورَةَ يُوسُفَ ‏.‏ فَقَالَ ‏"‏ لَنْ تَقْرَأَ شَيْئًا أَبْلَغَ عِنْدَ اللَّهِ مِنْ ‏{‏ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ‏}‏ وَ ‏{‏ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ ‏}‏ ‏"‏

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில் அவர்களது பாதத்தில் எனது கையை வைத்து “ அல்லாஹ்வின் தூதரே அவர்களே ! 

’ ஹூத் ( 11 ஆவது அத்தியாயம் ) யூஸுஃப் ( 12 ஆவது அத்தியாயம் ) இவைகளை எனக்குக் கற்றுத் தாருங்கள் என்று கேட்டேன்”.

அதற்கு அவர்கள் ,’ குல் அ ஊது பிரப்பில் ஃபலக்,குல் அ ஊது பிரப்பின்னாஸ் ‘ ஆகிய அத்தியாயங்களை ஓது வதைவிட அல்லாஹ்விடம் மிக உயர்ந்ததாக எந்த அத்தியாயத்தையும் நீர் ஒதமாட்டீர் “ என்று சொன்னார்கள் 

இதை உக்பா பின் ஆமிர் ( ரலி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல் :  நஸாயீ ( 953 ) ஸஹீஹ்


இன்ஷா அல்லாஹ் என்று கூறி சத்தியம்  செய்தால் ?

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَقَالَ إِنْ شَاءَ اللَّهُ فَقَدِ اسْتَثْنَى

யார் சத்தியம் செய்யும்போது இன்ஷா அல்லாஹ் ( அல்லாஹ் நாடினால் ) என்று கூறினாரோ அவர் விதிவிலக்குப் பெற்றுவிட்டார் என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : நஸாயீ ( 3855 ) ஸஹீஹ்

சத்தியம் செய்யும் போது “ இன்ஷா அல்லாஹ் “ என்று விதிவிலக்கோடு சத்தியம் செய்தல்.” அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! அல்லாஹ் நாடினால் நான் தர்மம் செய்வேன் என்று ஒருவர் சத்தியம் செய்து அவர் தர்மம் வழங்குவதைத் தவிர்த்தால் அவர் சத்தியத்தை முறித்தவர் ஆகமாட்டார்.

ஏனெனில் அல்லாஹ்வுடைய நாட்டத்துடன் தமது சத்தியத்தைத் தொடர்புபடுத்தும்போது அங்கு சத்தியமே உண்டாகாது.

இதுவே பெரும்பான்மை அறிஞர்களின் நிலைப்பாடாகும் .( அல்லாஹ் மிக அறிந்தவன் )


இரண்டு நன்மைகளை பெற்று தரும் தர்மம்

إِنَّ الصَّدَقَةَ عَلَى الْمِسْكِينِ صَدَقَةٌ

ஏழைக்கு தர்மம் செய்வது ஒரு நன்மை மட்டுமே.

وَعَلَى ذِي الرَّحِمِ اثْنَتَانِ : صَدَقَةٌ وَصِلَةٌ

அதையே உறவினருக்குச் செய்தால் தர்மம் ,உறவைப் பேணுதல் ஆகிய இரண்டு நன்மை ஆகும். 

என நபி ஸல் கூறியதாக சல்மான் பின் ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : நஸாயீ ( 2582) தரம் : ஸஹீஹ்

இதே செய்தி திர்மிதீ,இப்னுமாஜா, தாரமீ மற்றும் அஹ்மத் யில் பதிவு செய்யபட்டு உள்ளது.


ஜனாஸாவை எடுத்து கொண்டு செல்லும் போது கவணிக்க வேண்டியவை

عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ ‏"‏ ‏.‏

(இறுதி ஊர்வலம் செல்லும் போது ) வாகனத்தில் செல்பவர், ஜனாஸாவுக்குப் பின்னால் செல்வார். நடந்து செல்பவர் ஜனாஸாவின் ( முன் , பின், வலப்பக்கம் , இடப்பக்கம் என ) அவர் விரும்பியவாறு செல்வார் , பிறந்த குழந்தைக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்பட வேண்டும் என நபி ஸல் கூறியதாக முஃகீரா பின் ஷு அபா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : நஸாயீ ( 1942 ) ஸஹீஹ்


கற்பை காப்பதற்காகத் திருமணம் செய்துகொள்பவருக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும்.

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَزَّ وَجَلَّ عَوْنُهُمُ

மூன்று பேருக்கு உதவி செய்வது மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

الْمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الْأَدَاءَ

1. ( கடனை ) நிறைவேற்ற நாடுகின்ற விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுக்கப்பட்ட அடிமை.

وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ الْعَفَافَ

2. கற்பைக் காப்பதற்காகத் திருமணம் செய்ய முனைபவர்

وَالْمُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ

3. அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் 

என நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : நஸாயீ ( 3218) ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்

மேலும் இதில் இடம்பெற்ற அறிவிப்பாளர்கள் யாவும் புஹாரி மற்றும் முஸ்லிம்யில் இடம்பெற்றவர்களே.

இதே கருத்தில் திர்மிதீ,இப்னுமாஜா மற்றும் அஹ்மத் யில் பதிவாகி உள்ளது.


மீசையைக் கத்திரித்து கொள்ளுவது ஸுன்னத் ஆகும்

عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ لَمْ يَأْخُذْ شَارِبَهُ فَلَيْسَ مِنَّا

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள் :

“ எவர் தமது மீசையைக் கத்திரிக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவரல்லர்”.

இதை ஸைது பின் அர்க்கம் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் :  நஸாயீ ( 13 ) ஸஹீஹ்

 நம்மை சார்ந்தவரல்லர் -   فَلَيْسَ مِنَّا          என்ற கடுமையான சொல்லைப் பயன்படுத்தி இருப்பதால் அவர் இஸ்லாத்தைவிட்டு வெளியேறிவிட்டார் என்பது கருத்தன்று , மாறாக நமது வழிமுறையைக் கைவிட்டுவிட்டார் என்றே இதற்குப் பொருள் (அல்லாஹ் மிக அறிந்தவன்)


இரக்கம் காட்டப்பட்ட சமூகம்

 عَنْ أَبِي مُوسَى قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أُمَّتِي هَذِهِ أُمَّةٌ مَرْحُومَةٌ، لَيْسَ عَلَيْهَا عَذَابٌ فِي الْآخِرَةِ، عَذَابُهَا فِي الدُّنْيَا الْفِتَنُ وَالزَّلَازِلُ وَالْقَتْلُ ".

حكم الحديث: صحيح

எனது உம்மத் ( அல்லாஹ்வினால் ) இரக்கம் காட்டப்பட்ட உம்மத்தாகும். கொலைகள், நில நடுக்கங்கள்,குழப்பங்கள் என்பவற்றை இவ்வுலகத்தில் வேதனையாகக் கொடுப்பதன் மூலம் மறுமையில் பல வேதனைகளை நீக்கி விடுகின்றான் என நபி ஸல் கூறியதாக அபூ மூஸா அல் அஷ் அரி ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அபூதாவூத் 4278 தரம் : ஸஹீஹ்


அழகிய முன்மாதிரி

 عَنْ عَائِشَةَ ، أَنَّهَا قَالَتْ : لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاحِشًا، وَلَا مُتَفَحِّشًا، وَلَا صَخَّابًا فِي الْأَسْوَاقِ، وَلَا يَجْزِي بِالسَّيِّئَةِ مِثْلَهَا، وَلَكِنْ يَعْفُو وَيَصْفَحُ.

حكم الحديث: إسناده صحيح، رجاله ثقات

நபி ஸல் அவர்கள் கெட்டவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ இருக்கவில்லை.

மேலும் கடைவீதியில் சண்டையிடமாட்டார்கள்

தீயதை தீயதைக் கொண்டு பரிகாரம் செய்யமாட்டார்கள். மாறாக மன்னிப்பார்கள் பொறுத்துக் கொள்வார்கள் என அன்னை ஆயிஷா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : முஸ்னத் அஹ்மத் 25417 தரம் : ஸஹீஹ்


இறை நம்பிக்கையாளரின் பண்பு

وعن أَبي الدَّرداءِ : أَن النبيَّ ﷺ قالَ: مَا مِنْ شَيءٍ أَثْقَلُ في ميزَانِ المُؤمِنِ يَومَ القِيامة مِنْ حُسْنِ الخُلُقِ، وإِنَّ اللَّه يُبْغِضُ الفَاحِشَ البَذِيَّ

 رواه الترمذي وقال: حديثٌ حسنٌ صحيحٌ.

மறுமை நாளில் இறை நம்பிக்கையாளரின் தராசில் மிகக்கனமான பொருள் நற்குணமாகும்.

தரக்குறைவாகப் பேசுகின்ற ,ஆபாசமாகப் பேசுகின்றவர்களைத் அல்லாஹ் வெறுக்கிறான் என நபி ஸல் கூறியதாக அபுத்தர்தா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ 2002 தரம் : ஸஹீஹ்


உறுதியாக கடைபிடிக்க வேண்டிய செயல்...?

عَنِ الْحَارِثِ بْنِ هِشَامٍؓ اَنَّهُ قَالَ لِرَسُوْلِ اللهِ ﷺ: اَخْبِرْنِيْ بِاَمْرٍ اَعْتَصِمُ بِهِ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَمْلِكْ هذَا وَاَشَارَ اِلي لِسَانِهِ.

خلاصة حكم المحدث : صحيح 

நான் உறுதியாக கடைப்பிடிக்கும் படியான ஒரு செயலை எனக்குச் சொல்லித் தாருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தமது நாவைக்காட்டி, இதை உமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என  ஹாரிஸிப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் 2864 தரம் : ஸஹீஹ்


நற்குணத்தை அழகிய முறையில் எடுத்துரைக்கும் நபிமொழி

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: اِنَّ اَنْسَابَكُمْ هذِهِ لَيْسَتْ بِسَبَابٍ عَلَي اَحَدٍ، وَاِنَّمَا اَنْتُمْ وُلْدُ آدَمَ طَفُّ الصَّاعِ لَمْ تَمْلَؤُوْهُ لَيْسَ لِأَحَدٍ فَضْلٌ اِلاَّ بِالدِّيْنِ، اَوْ عَمَلٍ صَالِحٍ حَسْبُ الرَّجُلِ اَنْ يَكُوْنَ فَاحِشًا بَذِيًّا بَخِيْلاً جَبَانًا.

خلاصة حكم المحدث : صحيح لغيره

வம்சப் பரம்பரை பிறரைத் தூற்றுவதற்காகவோ அல்லது குறை கூறுவதற்காகவோ ஏற்படுத்தப்படவில்லை.

 நீங்கள் அனைவரும் ஆதமுடைய மக்கள்.

 நீங்கள் நிரப்பப்படாத (தானியங்களை அளிக்கும்) மரக்காலைப் போன்றவர்கள்.

 உங்களில் எவரும் முழுமை பெற்றவர் இல்லை. 

ஒவ்வொருவரிடத்திலும் ஏதேனுமொரு குறை உண்டு (உங்களில்) ஒருவர் இன்னோருவரைவிட எவ்விதத்திலும் சிறப்புடையவரல்ல.

 இருப்பினும் மார்க்கப் பற்று அல்லது நற்செயலின் காரணமாக ஒருவர் மற்றவரை விடச் சிறப்புப் பெற்றவர் ஆவர். 

ஒருவன் வெட்கக் கேடான தீய பேச்சுக்களைப் பேசுபவராகவும், கருமியாகவும், கோழையாகவும் இருப்பதே (அவர் தீயவர் என்பதற்கு) போதுமானது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் 2962 தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


ஜந்து காரியங்கள் முடிவு செய்யப்பட்டு விட்டன

عَنْ أَبِي الدَّرْدَاءِ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " فَرَغَ اللَّهُ إِلَى كُلِّ عَبْدٍ مِنْ خَمْسٍ : مِنْ أَجَلِهِ، وَرِزْقِهِ، وَأَثَرِهِ، وَشَقِيٍّ، أَمْ سَعِيدٍ ".

حكم الحديث: إسناده صحيح.

அல்லாஹ் ஒவ்வொரு அடியானுக்கும் (கீழ்க்காணும்) ஐந்து விஷயங்களை முடிவு செய்து விட்டான். 

1. அவனது மரண நேரம்

 2. அவனது (நல்ல, தீய) செயல்கள்

 3. அவனது தங்குங்மிடம், 

4. அவனால் ஏற்படிவிருக்கும் விளைவுகள்

 5. அவனது வாழ்வாதாரங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக  அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் ( 21723) தரம் : ஸஹீஹ்


அவை நடவடிக்கைகளும் அமானிதமே

إِذَا حَدَّثَ الرَّجُلُ الْحَدِيثَ ثُمَّ الْتَفَتَ فَهِيَ أَمَانَةٌ

ஒருவர் ஒர் செய்தியைச் சொல்லி விட்டு பிறகு ( இங்கும் அங்கும் ) திரும்பிப்பார்த்தாலே அது அமானிதமாகும் என நபி ஸல் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ ( 1959) தரம் : ஹஸன்


பிறர் மானத்தை காப்போம்

عَنْ أَبِي الدَّرْدَاءِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ رَدَّ عَنْ عِرْضِ أَخِيهِ رَدَّ اللَّهُ عَنْ وَجْهِهِ النَّارَ يَوْمَ الْقِيَامَةِ ‏"‏ ‏.‏ 
யார் தம் சகோதரரின் மானத்தைக் காக்கிறாரோ அவருடைய முகத்தை மறுமை நாளில் நரகத்திலிருந்து அல்லாஹ் காப்பான் என நபி ஸல் கூறியதாக அபுத்தர்தா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ ( 1931) தரம் : ஹஸன்


பிறர் மீது இட்டுக்கட்டுதல் என்றால் என்ன ...?

وَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ أَتَدْرُونَ مَا الْعَضْهُ‏؟‏ قَالُوا‏:‏ اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ‏:‏ نَقْلُ الْحَدِيثِ مِنْ بَعْضِ النَّاسِ إِلَى بَعْضٍ، لِيُفْسِدُوا بَيْنَهُمْ‏.

இட்டுக்கட்டுதல் என்றால் என்னவென்று நீங்கள் அறிவீர்களா ? என்று நபி ஸல் அவர்கள் ( தோழர்களிடம் ) கேட்க அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிந்தவர்கள் என்று கூறினர்

அதற்க்கு நபி ஸல் பின்வருமாறு கூறினார்கள் :

மக்களுக்கு மத்தியில் குழப்பம் ஏற்படுத்த ஒருவரிடமிருந்து கேட்டு வேறு ஒருவரிடம் செய்தியைச் சொல்வது ஆகும். இதை அனஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : அல் அதபுல் முஃப்ரத் (425) தரம் : ஸஹீஹ்


இறை நம்பிக்கையாளர் சூழ்ச்சி செய்ய மாட்டார்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‏:‏ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم‏:‏ الْمُؤْمِنُ غِرٌّ كَرِيمٌ، وَالْفَاجِرُ خَبٌّ لَئِيمٌ‏.‏

இறை நம்பிக்கையாளர் அப்பாவியாகவும் சங்கைமிக்கவனாகவும் உள்ளான்.

பாவி மோசடிக்காரனாகவும் பழிப்பிற்குரியவனாகவும் உள்ளான் என்று நபி ஸல் கூறினார்கள் என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : அல் அதபுல் முஃப்ரத் ( 418)
தரம் : ஸஹீஹ்


இறை நம்பிக்கையாளன் நடந்துகொள்ளும் விதம்

عَنْ عَبْدِ اللهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ، وَلاَ اللِّعَانِ، وَلاَ الْفَاحِشِ وَلاَ الْبَذِي‏.‏

இறை நம்பிக்கையாளன் குறைபேசித்திரிபவனாகவும், சாபமிடுபவனாகவும்,அருவருப்பாகச் செயல்படுபவபாகவும்,வெட்கமின்றிப் பேசுபவனாகவும் இருக்கமாட்டான் என்று நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : அல் அதபுல் முஃப்ரத் (312) தரம் : ஸஹீஹ்


நற்குணம் உள்ளவர்களின் சிறு பிழைகளை மன்னிப்போம்

قَالَتْ عَائِشَةُ‏:‏ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم‏:‏ أَقِيلُوا ذَوِيِ الْهَيْئَاتِ عَثَرَاتِهِمْ‏.‏

அழகிய குணங்கள் உடையவர்களின் சிறு குறைகளை நீங்கள் மன்னித்துவிடுங்கள் என்று நபி ஸல் கூறினார்கள் என ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : அல் அதபுல் முஃப்ரத் ( 465) தரம் : ஸஹீஹ்


இறை நம்பிக்கையாளர் பிறரை சபிக்கமாட்டார்

عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ لاَ يَكُونُ الْمُؤْمِنُ لَعَّانًا ‏"‏

இறை நம்பிக்கையாளர் ( எடுத்த தற்கெல்லாம் ) சபிப்பவராக இருக்க மாட்டார் என நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ (2019)
தரம் : ஹஸன்


தர்மங்களை முதலில் தம் வீட்டாரிலிருந்தே ஆரம்பம் செய்ய வேண்டும்

قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَا ابْنَ آدَمَ إِنَّكَ إِنْ تَبْذُلِ الْفَضْلَ خَيْرٌ لَكَ وَإِنْ تُمْسِكْهُ شَرٌّ لَكَ وَلاَ تُلاَمُ عَلَى كَفَافٍ وَابْدَأْ بِمَنْ تَعُولُ وَالْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى ‏"‏ ‏.

ஆதமின் மகனே ! உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்தால் அது உனக்கு நன்மையாகும்.

அதை இறுக்கிவைத்துக்கொண்டால் அது உனக்குத் தீமையாகும்.

தேவையுள்ள அளவு சேமித்துவைத்தால் நீ பழிக்கப்பட மாட்டாய்.

உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு.

மேல் கைதான் கீழ்க் கையைவிடச் சிறந்ததாகும். என நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ ( 2343) தரம் : ஹஸன் ஸஹீஹ்


நபியுடன் மறுமையில் நாம் அருகாமையில் இருக்க வேண்டுமா ?

عَنْ جَدِّهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ أُخْبِرُكُمْ بِأَحَبِّكُمْ إِلَيَّ، وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ الْقِيَامَةِ‏؟‏ فَسَكَتَ الْقَوْمُ، فَأَعَادَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، قَالَ الْقَوْمُ‏:‏ نَعَمْ يَا رَسُولَ اللهِ، قَالَ‏:‏ أَحْسَنُكُمْ خُلُقًا‏.‏

ஒருமுறை நபி ஸல் அவர்கள் ," உங்களில் எனக்கு மிக விருப்பமானவரும் மற்றும் மறுமை நாளில் எனக்கு மிகவும் சமீபமாக இருப்பவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா ?" என்று கேட்க அங்கு இருந்த தோழர்கள் மெளனம் காத்தார்கள் இருமுறையோ மூன்று முறையோ திரும்பத்திரும்ப நபியவர்கள் கேட்டார்கள்.

அதற்க்கு தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே அறிவியுங்கள் எனக் கேட்டனர்.

உங்களுள் அழகிய நற்குணமுள்ளவர்கள் தான் என்று நபி ஸல் கூறினார்கள் என ஷுஜப் அவர்கள் தம் தந்தை வழியாக அறிவிக்கிறார்கள்.

நூல் : அல் அதபுல் முஃப்ரத் ( 272) தரம் : ஸஹீஹ்


ஒருவரை ஒருவர் திட்டிகொள்ளுவது

، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْمُسْتَبَّانِ مَا قَالاَ فَعَلَى الْبَادِي مِنْهُمَا مَا لَمْ يَعْتَدِ الْمَظْلُومُ ‏"

ஒருவரையொருவர் திட்டிக்கொள்ளும் இருவரின் திட்டுதலுக்கான பாவம் முதலில் ஆரம்பித்தவரையே சாரும்;

அ நீதிக்குள்ளான மற்றொருவர் எல்லை மீறாமல் இருக்கும் வரை என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ ( 1981) தரம் : ஸஹீஹ்


அழகிய குணம் உடைய முஸ்லிம்

إِنَّ الْمُسْلِمَ الْمُسَدِّدَ لَيُدْرِكُ دَرَجَةَ الصَّوَّامِ الْقَوَّامِ بِآيَاتِ اللَّهِ، بِحُسْنِ خُلُقِهِ وَكَرَمِ ضَرِيبَتِهِ ".

حكم الحديث: صحيح لغيره

மார்க்க முறைப்படி செயல்படும் ஒரு முஸ்லிம், தன்னுடைய கண்ணிய மான இயல்பாலும், அழகிய குணத்தாலும், இரவில் தொழுகையில் சங்கைமிக்க குர்ஆனை ஓதும், அதிகமாக நோன்பு நோற்கும் மனிதரின் பதவியை அடைந்துவிடுவார் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : அஹ்மத் ( 6648) தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


பேச்சில் பேணுதல் இல்லாதவர் தீயவர்கள்..

عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ شِرَارُ أُمَّتِي الثَّرْثَارُونَ، الْمُشَّدِّقُونَ، الْمُتَفَيْهِقُونَ، وَخِيَارُ أُمَّتِي أَحَاسِنُهُمْ أَخْلاقًا‏.

பேணுதலின்றிப் சிந்திக்காமல் அதிகம் பேசுபவர்களே என் சமுதாயத்தில் தீயவர்கள் ஆவர். என் சமுதாயத்தின் நல்லோர்கள் நற்குணமுடையவர்களே என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
தரம் : ஸஹீஹ்

நூல் : அல் அதபுல் முஃப்ரத் ( 1308)


முஸ்லிம் பொறுமையை கடைபிடித்தால் அவர்க்கு கிடைக்கும் நற்பாக்கியங்கள் சில.....

سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ - قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا ابْتَلَى اللَّهُ الْعَبْدَ الْمُسْلِمَ بِبَلَاءٍ فِي جَسَدِهِ قَالَ اللَّهُ : اكْتُبْ لَهُ صَالِحَ عَمَلِهِ الَّذِي كَانَ يَعْمَلُهُ، فَإِنْ شَفَاهُ غَسَلَهُ وَطَهَّرَهُ، وَإِنْ قَبَضَهُ غَفَرَ لَهُ وَرَحِمَهُ ".

حكم الحديث: صحيح لغيره، وهذا إسناد حسن

அல்லாஹ் ஒரு முஸ்லிம் அடியானுக்கு உடலில் நோயைக் கொடுத்து சோதித்தால் 
 
இறைவன் ( வானவர்களுக்கு ) கட்டளையிடுவான் :

இந்த அடியானுக்கு அவர் ( நல்ல நிலையில் செய்துவந்த ) அனைத்து நற்செயகளையும் பதிவு செய்யுங்கள் என்று கட்டளையிடுவான்.
 

பிறகு அவருக்கு உடல் ஆரோக்கியத்தைக் கொடுத்துவிட்டால் அவரை ( பாவங்களை விட்டும் ) கழுவிச் சுத்தம் செய்கிறான்.

அவரது உயிரைக் கைப்பற்றிவிட்டால் அவரது பாவங்களை மன்னித்து அவர் மீது அருள்பொழிகிறான்.

நூல் : அஹ்மத் ( 12503 ) தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


பிற முஸ்லிம் வீட்டுக்கு செல்லும் போது கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகள்

 إِذَا دَخَلْتُمْ بَيْتًا فَسَلِّمُوا عَلَى أَهْلِهِ 

 நீங்கள் யார் வீட்டுக்கேனும் சென்றால் அந்த வீட்டாருக்கு ஸலாம் கூறுங்கள்.

وَإِذَا خَرَجْتُمْ فَأَوْدِعُوا أَهْلَهُ السَّلَامَ . 

(அந்த வீட்டைவிட்டு) வெளியேறும் போதும் அவ்வீட்டாருக்கு ஸலாம் சொல்லி விடைபெறுங்கள்.

நூல் : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் ( 19450 ) தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


நல்ல செயல்கள் யாவும் இறை பொருத்தத்தை பெறவே இருக்க வேண்டும்

إِنَّ اللهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا ، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ . 

إسناد جيد 
فتح الباري شرح صحيح البخاري: (6 / 33) 

நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய முகத்துக்காக மட்டும் செய்யப்பட்ட நல்ல செயலை மட்டுமே ஏற்றுகொள்ளுவான்.

நூல் : நஸாயீ ( 3140 ) தரம் : ஹசன்


குர் ஆனுடைய பரிந்துரை நமக்கு கிடைக்க 

الْقُرْآن شَافِع مُشَفع

குர்ஆன் செய்யும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும். 

وَمَاحِل مُصَدَّقٌ

மேலும், ஒருவருக்காகக் குர்ஆன் வாதிட்டால் அதனுடைய வாதம் ஏற்றுக்கொள்ளப்படும். 

مَنْ جَعَلَهُ إِمَامَهُ قَادَهُ إِلَى الْجَنَّةِ

தனக்கு முன்னால் அதை வைத்துக் கொள்பவரை, (அதன்படி அமல் செய்பவரை) அது சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும்.

وَمَنْ جَعَلَهُ خَلْفَ ظَهْرِهِ سَاقَهُ إِلَى النَّارِ

முதுகுக்குப் பின்னால் அதைப் போட்டுவிடுபவரை, (அதன்படி அமல் செய்யாதவரை) நரகத்தில் தள்ளிவிடும்.

நூல் : இப்னு ஹிப்பான் ( 124) தரம் : ஸஹீஹ்


இறைவனிடத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ள அமல்

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ...

"என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்;

திருக்குர்ஆன்  40:60

لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ

இறைவனிடத்தில் பிரார்த்தனையை விடக் கண்ணியமான அந்தஸ்துள்ள அமல் வேறில்லை.

நூல் : திர்மிதீ ( 3370) தரம் : ஹஸன்


பணிவே உயர்வு தரும்

مَنْ تَوَاضَعَ لِلَّهِ رَفَعَهُ اللَّهُ

எவர் ஒருவர் அல்லாஹ்வின் திருபொருத்தத்தை மட்டுமே நாடி பணிவை மேற்கொள்வாரோ அவரை அல்லாஹ் ( தகுதியில் ) உயர்த்தி விடுவான்.

فَهُوَ فِي نَفْسِهِ صَغِيرٌ

அதன் காரணமாக அவர் தன்னைத் தாழ்வாக கருதுவார் 

وَفِي أَعْيُنِ النَّاسِ عَظِيمٌ

மக்களின் பார்வையில் உயர்ந்து விடுவார்.

وَمَنْ تَكَبَّرَ وَضَعَهُ اللَّهُ

எவர் பெருமையடிக்கிறாரோ அவரை அல்லாஹ் தாழ்த்திவிடுவிறான்.

، فَهُوَ فِي أَعْيُنِ النَّاسِ صَغِيرٌ

 மக்களின் பார்வையில் தாழ்ந்துவிடுகிறார்.

وَفِي نَفْسِهِ كَبِيرٌ

அவர் தன்னை உயர்வாக கருதுவார்

حَتَّى لَهُوَ أَهْوَنُ عَلَيْهِمْ مِنْ كَلْبٍ أَوْ خِنْزِيرٍ

பிறருடைய பார்வையில் அவர் நாய் மற்றும் பன்றியைவிடவும் தாழ்ந்துவிடுகிறார்.

நூல் : பைஹகீ ( 8140 ) தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


நேரத்தை இறை நினைப்போடு கழிப்போம்

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَيْسَ يَتَحَسَّرُ أَهْلُ الْجَنَّةِ إِلَّا عَلَى سَاعَةٍ مَرَّتْ بِهِمْ لَمْ يَذْكُرُوا اللهَ فِيهَا " .

رواه الطبراني ورجاله ثقات وفي شيخ الطبراني محمد بن إبراهيم الصوري خلاف
مجمع الزوائد ومنبع الفوائد: (10 / 73) 

உலகில் அல்லாஹ்வை திக்ரு செய்யாமல் கழிந்த நேரத்தைப் பற்றியே தவிர வேறு எதைப் பற்றியும் சொர்க்கவாசிகள் கைசேதப்பட மாட்டார்கள் என்று நபி ஸல் கூறியதாக மு ஆத் பின் ஜபல் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
 
நூல் : தப்ரானி ( 182 ) தரம் : ஸஹீஹ்


குர் ஆனை நீங்கள் எப்படி ஓத வேண்டும் என்று ஆசைகொள்ளுகிறீகள் ?

الْجَاهِرُ بِالْقُرْآنِ كَالْجَاهِرِ بِالصَّدَقَةِ

குர் ஆனை ( உரத்து ) பகிரங்கமாக ஒதுபவர் பகிரங்கமாகத் தர்மம் செய்தவர் போன்றவராவார்.

وَالْمُسِرُّ بِالْقُرْآنِ كَالْمُسِرِّ بِالصَّدَقَةِ 

குர் ஆனை மெளனமாக ஒதுபவர் இரகசியமாகத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்

நூல் : நஸாயீ ( 2561) தரம் : ஸஹீஹ்


நிரந்த நற்செயல் எது தெரியுமா ?

عن عثمان عن النبي قل فَمَا الْبَاقِيَاتُ يَا عُثْمَانُ ؟ قَالَ : هُنَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَسُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ.

حكم الحديث: إسناده حسن

உஸ்மானே நிரந்த நற்செயல் எது தெரியுமா ? என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள் அது " லாயிலாஹ இல்லல்லாஹு சுப் ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர் வலாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் " என்பதாகும் என்று அவர்கள் கூறினார்கள்.

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை அல்லாஹ் தூயவப் அல்லாஹ் புகழுக்குரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ்வின் உதவியின்றி ( தீங்குகளிலிருந்து ) விலகிக் கொள்ளவோ ( நல்லறங்கள் புரிய ) ஆற்றல் பெறவோ முடியாது .

அறிவிப்பவர் : உஸ்மான் (ரழி)

நூல் : அஹ்மத் (513 ) தரம் : ஹஸன்


இறை நினைவை பெறும் இரண்டு வழிகள்

 عَلَيْكَ بِتِلاوَةِ الْقُرْآنِ، وَذِكْرِ اللَّهِ، فَإِنَّهُ نُورٌ لَكَ فِي الأَرْضِ، وَذُخْرٌ لَكَ فِي السَّمَاءِ 

குர் ஆன் ஒதுவதையும் அல்லாஹ்வை திக்ர் செய்வதையும் பேணுதலாகச் செய்து விருவீராக இந்த நற்காரியங்கள் மூலம் வானத்தில் உம்மைப் பற்றி நினைவு கூரப்படும் மேலும் இது பூமியில் உமக்கு நேர்வழியின் ஒளியாகும் என்று நபி ஸல் எனக்கு ( அறிவுரை ) கூறினார்கள் என அபூதர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : இப்னு ஹிப்பான் ( 361 ) தரம் : ஸஹீஹ் லி கைரிஹி


விமர்சிக்கிறோம் என்ற பெயரில் முஸ்லிம்களை துன்புறுத்தாதீர்கள்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ (12)

 நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள் சில ஊகங்கள் பாவமாகும்.

துருவித் துருவி ஆராயாதீர்கள் ! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள் 

உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா ? அதை வெறுப்பீர்கள் 

அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன் நிகரற்ற அன்புடையோன். 

அல் குர் ஆன் (49 :12 )

 لا تُؤْذُوا الْمُسْلِمِينَ ، وَلا تُعَيِّرُوهُمْ ، وَلا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ

حكم الحديث : واسناده قوي

முஸ்லிம்களை துன்புறுத்தாதீர்கள் அவர்களை குறை கூறாதீர்கள் அவர்களுடைய தவறுகளைத் தேடித் திரியாதீர்கள் என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : இப்னு ஹிப்பான் ( 5882 ) தரம் : ஹஸன்

ساب المؤمن كالمشرف على الهلكة

முஸ்லிமைத் திட்டுபவன் அழிந்தொழிந்து நாசத்தின் பால் செல்லும் மனிதனைப் போன்றவன் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : ஸஹீஹ் ஜாமிஉ ( 3199 ) தரம் : ஹஸன்


குர் ஆனை முதலில் தானும் கற்று பிறகு கற்பிப்போரின் சிறப்பு

عَنْ عُثْمَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ

உங்களில் மிகச் சிறந்தவர் குர் ஆனைக் கற்றுக் கொள்பவரும் கற்றுக் கொடுப்பவரும் ஆவார் என்று நபி ஸல் கூறியதாக உஸ்மான் இப்னு அஃப்பான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : அபூதாவூத் ( 1452 ) தரம் : ஸஹீஹ்


அமல்கள் ஏதுவாயினும் பித்அத்தாக இருப்பின் அவை அங்கீகரிக்கபடாது

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ 

  நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள் :

 لِكُلِّ عَمَلٍ شِرَّةٌ، 

”ஒவ்வொரு (நற்) செயலுக்கும் ஆர்வம் வேண்டும். 

وَلِكُلِّ شِرَّةٍ فَتْرَةٌ

(நற்காரியங்களில் கொள்ளும்) அனைத்து ஆர்வத்திற்கும் ஒரு வரையறை உள்ளது. 

فَمَنْ كَانَتْ فَتْرَتُهُ إِلَى سُنَّتِي

யாருடைய வரையறை எனது வழிமுறையைச் சார்ந்ததாக உள்ளதோ

فَقَدْ أَفْلَحَ

அவர் வெற்றி பெற்று விட்டார்

وَمَنْ كَانَتْ إِلَى غَيْرِ ذَلِكَ 

எவருடைய வரையறை மற்றதைச் சார்ந்ததாக இருக்கின்றதோ

فَقَدْ هَلَكَ 

அவர் அழிந்து விட்டார்.

நூல் : அஹ்மத் ( 6919 ) ஸஹீஹ்


திருமணத்தின் போது மணமகனுக்கு எவ்வாறு பிரார்த்தனை செய்யப்படும் ?

عَنِ الْحَسَنِ، قَالَ تَزَوَّجَ عَقِيلُ بْنُ أَبِي طَالِبٍ امْرَأَةً مِنْ بَنِي جُشَمٍ فَقِيلَ لَهُ بِالرِّفَاءِ وَالْبَنِينِ ‏.‏ قَالَ قُولُوا كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ بَارَكَ اللَّهُ فِيكُمْ وَبَارَكَ لَكُمْ ‏"‏ ‏.‏

அக்கீல் பின் அபீதாலிப் அவர்கள் பனூ ஜுஷம் குலத்திலிருந்து ஒரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். அப்போது ,வளமோடு நல்ல ஆண் குழந்தைகளை பெற்றும் ( வாழுங்கள் ) என்று அவருக்கு வாழ்த்துக் கூறப்பட்டது.

“ ( அவ்வாறு கூறாதீர்கள் ) பாரக்கல்லாஹு ஃபீகும் வபாரக்க லகும் “ 

பொருள் : அல்லாஹ் உங்களிலும் உங்களுக்காகவும் அருள் வளம் பொழியட்டும் 

என்று அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறியதைப்போன்று கூறுங்கள் எனச் சொன்னேன்.

என ஹஸன் பின் அபில் ஹஸன் யசார் ( ரஹ் ) அறிவிக்கிறார்கள்.

நூல் : நஸாயீ ( 3371 ) தரம் : ஸஹீஹ், தப்ரானீ ( 516 )

அறியாமைக்கால மக்கள் மணமக்களை வாழ்த்தும் போது   بِالرِّفَاءِ وَالْبَنِينِ     - இணைக்கத்தோடும் ஆண் குழந்தைகளைப் பெற்றும் வாழ்வீராக என்று கூறிவந்தனர்

நபி ஸல் அவர்கள் இதை மாற்றி “ பாரக்கல்லாஹு லக்கும் வ பாரக்க அலைக்கும்” என மணமக்களை வாழ்த்த சொன்னார்கள்

சில தருணங்களில் மணமகனை நோக்கி “ பாரக்கல்லாஹு லக்க வ பாரக்க அலைக்க வ ஜமஅ பைனக்குமா ஃபீ கைர் என நபி ஸல் அவர்கள் வாழ்த்தியுள்ளார்கள் ( இப்னு மாஜா 1905 தரம் : ஸஹீஹ் )

ஈமான் என்றால் என்ன ?

أَبِي أُمَامَةَ ، قَالَ : قَالَ رَجُلٌ : يَا رَسُولَ اللَّهِ، مَا الْإِيمَانُ ؟ قَالَ : " إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ، وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ "

حكم الحديث: حديث صحيح، رجاله ثقات رجال الصحيح

ஒரு நபர் நபி ஸல் அவர்களிடம் வந்து இறைத்தூதர் அவர்களே " ஈமான் என்றால் என்ன ?" என்று கேட்டார்

உமது நற்காரியங்கள் உன்னை மகிழ்ச்சியடையச் செய்து உனது தீய செயல்கள் உனக்கு கவலையை உண்டாக்குமேயானால் நீரே முஃமீன் என்று நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : அஹ்மத் ( 22199) தரம் : ஸஹீஹ் 

இதே கருத்தில் இப்னு ஹிப்பான் மற்றும் ஹாக்கி்ம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யபட்டு உள்ளது.


அல்லாஹ்வை முன் நிறுத்தி உதவி கேட்டால்

وَعَنْ اِبْنِ عُمَرَ ‏-رَضِيَ اَللَّهُ عَنْهُمَا‏- قَالَ: عَنِ النَّبِيِّ ‏- صلى الله عليه وسلم ‏-قَالَ: { مِنْ اسْتَعَاذَكُم بِاَللَّهِ فَأَعِيذُوهُ, وَمَنْ سَأَلَكُمْ بِاَللَّهِ فَأَعْطُوهُ, وَمَنْ أَتَى إِلَيْكُمْ مَعْرُوفًا فَكَافِئُوهُ, فَإِنْ لَمْ تَجِدُوا, فَادْعُوا لَهُ }  

‏ صحيح.‏ رواه البيهقي (4 / 199)‏، 

எவரோருவர் அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் பாதுகாப்புக் கோருகிறாரோ அவருக்கு பாதுகாப்பு அளியுங்கள்.

மேலும் எவரொருவர் உங்களிடம் அல்லாஹ்வின் பெயரால் ( தன் தேவையைக்) கேட்கிறாரோ அவருக்குக் கொடுங்கள்.

மேலும் எவர் உங்களுக்கு நன்மை செய்கிறாரோ ,நீங்களும் பதிலுக்கு அவருக்கு நன்மை செய்யுங்கள்

உங்களிடம் எதுவும் இல்லை எனில் அவருக்காக துஆ செய்யுங்கள்

என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் ( ரழி ) அறிவிக்கிறார்கள்

நூல் : பைஹகீ (4/199) தரம் : ஸஹீஹ்


தூய எண்ணம்

7- عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَالَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ»
•حسن صحيح
7. அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது:

 ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, நன்மையையும் புகழையும் எதிர்பார்த்துப் போராடிய மனிதருக்கு என்ன (நன்மை அல்லாஹ்விடம்) உண்டா? என்று வினவினார். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவருக்கு (அல்லாஹ்விடம்) ஒன்றும் இல்லை” எனக் கூறினார்கள். 

அவர் அதை மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், “அவருக்கு (அல்லாஹ்விடம்) ஒன்றும் இல்லை” எனக் கூறிவிட்டு, பிறகு

 “திண்ணமாக அல்லாஹ், அவனுடைய திருப்தியை நாடி அவனுக்காகவே செய்யப்பட்ட (நல்ல) செயல்பாட்டைத்தான் ஏற்றுக்கொள்வான்” என்று கூறினார்கள். 

(நஸாயீ: 3140) 

இது 'ஹஸன் ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 7)


மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் அல்லாஹ்வின் தூதர் ﷺ  மக்களுக்கு ஆற்றிய உபதேசங்கள் சில...
عَنْ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللهِ ﷺ  خَطَبَ النَّاسَ يَوْمَ فَتْحِ مَكَّةَ، فَقَالَ: « يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ اللهَ قَدْ أَذْهَبَ عَنْكُمْ عُبِّيَّةَ الجَاهِلِيَّةِ وَتَعَاظُمَهَا بِآبَائِهَا، فَالنَّاسُ رَجُلَانِ: بَرٌّ تَقِيٌّ كَرِيمٌ عَلَى اللهِ، وَفَاجِرٌ شَقِيٌّ هَيِّنٌ عَلَى اللهِ، وَالنَّاسُ بَنُو آدَمَ، وَخَلَقَ اللهُ آدَمَ مِنْ تُرَابٍ «، قَالَ اللهُ: {يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوْبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللهِ أَتْقَاكُمْ إِنَّ اللهَ عَلِيْمٌ خَبِيْرٌ} [الحجرات: 13].   
- صحيح.
மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் அல்லாஹ்வின் தூதர் ﷺ  மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்:
மக்களே! அறியாமைக் காலத்தில் உங்களிடத்தில் இருந்த ஆணவத்தையும் , குலப்பெருமை பேசுதலையும் அல்லாஹ் உங்களிடமிருந்து அகற்றிவிட்டான். 
மக்கள் இரு வகையினர்தாம். ஒருவர் நன்மை புரிகின்றவர்; இறையச்சமுள்ளவர்; அல்லாஹ்விடம் மரியாதைக்குரியவர் ஆவார். 
மற்றொருவர் தீமை புரிகின்றவர்; நற்பேறற்றவர்; அல்லாஹ்விடம் மரியாதை இழந்தவர் ஆவார். 
மக்கள் அனைவரும் ஆதமின் மக்களே. அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை மண்ணிலிருந்தே படைத்துள்ளான். 
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம்; பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும்பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம். (உண்மையில்) அல்லாஹ்விடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் அதிக இறையச்சம் கொண்டவர்தாம். 
நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும் ஆவான் (49: 13) எனும் வசனத்தில் அல்லாஹ் இது குறித்தே பேசுகிறான். 
இதை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
 நூல் : திர்மிதீ: 3270/ 3183
இந்த ஹதீஸ் ‘ஸஹீஹ்’ தரத்தில் உள்ளது. 


கல்விக்கு கொடுக்கும் மரியாதை...

416- عَنْ عَلِيٌّ تَعَلَّمُوا الْعِلْمَ فَإِذَا عَلِمْتُمُوهُ فَاكْظِمُوا عَلَيْهِ وَلَا تَشُوبُوهُ بِضَحِكٍ وَلَا بِلَعِبٍ فَتَمُجَّهُ الْقُلُوبُ .
إسناده صحيح.●

416. அலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது: 

கல்வியைக் கற்றுக்கொள்ளுங்கள். அதைக் கற்றுக்கொண்டால் அதனோடு அடக்கமாக இருங்கள். 

அதனைச் சிரிப்போடும் விளையாட்டோடும் கலந்துவிடாதீர்கள். (அவ்வாறு செய்தால் கற்ற) அந்த உள்ளம் அதனைத் துப்பிவிடும். 

(தாரமீ: 602) 

இது 'ஸஹீஹ்' தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.

(மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா - 416)


நான்கு கலீபாக்கள் பற்றிய முன்னறிவிப்புகள்

இஸ்லாம் எனும் திருகையின் சுழற்சியானது ( இன்றிலிருந்து ஹிஜ்ரீ ) முப்பத்தைந்து அல்லது முப்பத்தாறு அல்லது முப்பத் தேழாம் ஆண்டின் தொடக்கம்வரை ( சீராக) இருந்துகொண்டிருக்கும்.

பின்னர் ( முஸ்லிம்களாகிய ) அவர்கள் அழிவி(ற்கு வழிவகுக்கும் பாவங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளி)ல் உழலும்போது,அ(வர்களின் வழியான)து ( முன்னர் ) அழிவிற்கு ஆளானோரின் வழியாகவே இருக்கும்.

அவர்கள் ( சீர்குலையாமல் மார்க்கத்தில் ) நிலையாக இருந்தால் அவர்களது மார்க்க ( சுழற்சியு)ம் அவர்களிடம் எழுபது ஆண்டுகள் வரை நீடிக்கும்.என நபி ﷺ கூறினார்கள் என்று அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 3758 / 4315 , ஸுனன் அபூதாவூத் 4254 

தரம் : ஹசன்


உங்களுடைய குறை உங்களைத் தடுக்கட்டும்

عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: أَحِبُّوا الْفُقَرَاءَ وَجَالِسُوهُمْ، وَأَحِبَّ الْعَرَبَ مِنْ قَلْبِكَ، وَلْتَرُدَّ عَنِ النَّاسِ مَاتَعْلَمُ مِنْ قَلْبِكَ. 

رواه الحاكم وقال: صحيح الاسناد ووافقه الذهبي:٤/٣٣٢ 11

ஏழைகளை நேசியுங்கள் அவர்களுடன் அமருங்கள், அரபுகளை உள்ளத்தால் நேசியுங்கள், மற்றவர்களைக் குறை கூறுவதை விட்டும் உங்களுடைய குறை உங்களைத் தடுக்கட்டும்'' என்று  நபி  ﷺ அவர்கள் கூறினார்கள் என  அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

 நூல்  : முஸ்தத்ரக் ஹாகிம் 8042

இது ஸஹீஹ் தரத்தில் உள்ளது என இமாம் தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள்.

*அல்லாஹ் மிக அறிந்தவன்


அல்லாஹ் ஒரு கூட்டத்தாரை  நேசித்தால்...

  عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ ؓ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ: إِذَا أَحَبَّ اللهُ قَوْماً اِبْتَلاَهُمْ، فَمَنْ صَبَرَ فَلَهُ الصَّبْرُ وَمَنْ جَزِعَ فَلَهُ الْجَزَعُ.
    رواه احمد  إسناده جيد     

ஏதேனும் ஒரு கூட்டத்தாரை அல்லாஹ் நேசிக்க நாடினால் அவர்களைச் சிரமங்களில் ஆழ்த்திச் சோதிப்பான்.

எவர் பொறுமை மேற்கொள்வாரோ அவருக்குப் பொறுமை (யின் கூலி) எழுதப்படுகிறது; எவர்( சிரமத்தின் போது ) பொறுமை மேற்கொள்ளவில்லையோ  அவருக்குப் பொறுமையின்மை எழுதப்படுகிறது'' (பிறகு அவர் அழுது புலம்பிக் கொண்டிருப்பார்) என்று  நபி ﷺ அவர்கள் கூறியதாக  மஹ்மூதுப்னு லபீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

 நூல் : முஸ்னத் அஹ்மத் 23641 / 23633

இதன் அறிவிப்பாளர் தொடர் தரமானது.



Previous Post Next Post