بسم الله الرحمن الرحيم
ஆசிரியர்: அப்துல்லாஹ் மன்பஈ, வெளியிடு : புர்கான் டிரஸ்ட்பிரார்த்தனை (துஆ) பற்றி திருக்குர்ஆன்
(இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்து வாயாக. (திருக்குர்ஆன் 1-4, 5)
என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள். நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதில் அளிக்கிறேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டு இருக் கிறார்களோ, அவர்கள் சிறுமை அடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்''. (திருக்குர்ஆன் 40-60)
என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான். ஒவ் வொரு தொழுகையின் போ தும் உங்கள் முகத்தை அவன் பக்கமே நிலைப்படுத்திக் கொள்ளுங்கள். வணக்கத்தை அவனுக்கே தூய்மை யாக்கியவர்களாக அவனை அழையுங்கள். உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்'' என்று நீர் கூறும். (திருக்குர்ஆன் 7-29)
(ஆகவே, இறைவிசுவாசிகளே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. திருக்குர்ஆன் 7-55
(நபியே!) எவர் தம் இறை வனுடைய திருப்பொருத்தத்தை நாடியவர்களாகக் காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்களோ அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டு இருப்பீராக. திருக்குர்ஆன் 18-28) (6-52)
துஆக்களைப் பற்றி தூதர் மொழிகள்...
நிச்சயமாக உங்களுடைய இறைவன் நாணம் உள்ளவனும், அருள்புரிபவனும் ஆவான். தன்னுடைய அடியான் தன்னிடம் அவனுடைய இரு கைகளையும் ஏந்தி இறைஞ்சிடும்போது, அவன் (அல்லாஹ்) அவனை வெறுமனே திருப்பிவிட நாணுகிறான். அறிவிப்பாளர் ஸல்மான் (ரழி)நூல்கள்: அபூதா வூது, திர்மிதி
துஆக்களில் இறைவனிடம் ஏற்கப்பட முதல் தகுதியானது எது என நபி (ஸல்) அவர்களிடம் வினவியபோது; கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரழி)நூல்: திர்மிதி
எவன் திருக்குர்ஆனை ஓதி இறைவனைத் துதித்து, என் மீது ஸலவாத் ஓதி இறைவனிடம் பாவமன்னிப்பு கோரினானோ, அவன் நன்மையை வேண்டியவனாவான்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்: பைஹகீ
நபி (ஸல்) அவர்கள் மீது சலவாத் கூறாமல், செய்யப்படும் பிரார்த்தனை (துஆ) வானத்திற்கும், பூமிக்கும் இடையில் (அந்தரத்தில்) நிற்கும். அறிவிப்பாளர்: உமர் (ரழி)நூல்: திர்மிதி
உங்களில் ஒவ்வொருவரும் தமது தேவையை அல்லாஹ்விடமே கேட்க வேண்டும். அவனுடைய காலணிகளின் வார் அறுந்து போனாலும், இறைவனிடம் தான் கேட்க வேண்டும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரழி)நூல்: திர்மிதி
மனதிற்குள் அடக்கமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் செவிடனையோ, மறைவானவனையோ பிரார்த்திக்க வில்லை. எல்லாவற்றையும் உங்களுடன் இருந்து கேட்டுக்கொண்டு இருக்கின்ற அருகில் இருக்கின்ற இறைவனிடம்தான் பிரார்த்தனை செய்கின்றீர்கள். அறிவிப்பாளர்: அபூமூஸா அல்அஷ்அரி (ரழி) நூல்கள்: புகாரி
அப்பாவியின் (அநீதி இழைக்கப்பட்டவரின்) சாபத்தைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவனுடைய கோரிக்கைக்கும், இறைவனுக்கும் இடையே எத்திரையும் இருப்பதில்லை! என ஆதுப்னு ஜபல் (ரழி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பும்போது நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: புகாரி
துஆவை (இறைவனிடம் வேண்டுவதை)த் தவிர வேறு எதுவாக இருந்தாலும் விதியை மாற்ற இயலாது. நற்செயல்கள் இறையச்சம் ஆகியவைத் தவிர, வேறு எந்தச் செயலும் ஆயுளை (வயதை) அதிகமாக்காது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: ஸல்மான் பார்ஸீ (ரழி) நூல்: பைஹகீ
'துஆ செய்வது ஒரு வணக்கமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, என்னிடமே பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்! நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதில் அளிக்கிறேன்!' என்று உங்கள் இறைவன் கூறுகிறான் என்ற (40-60)வது வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள். அறிவிப்பாளர்: நூஃமான் இப்னு பஷீர் (ரழி) நூல்கள்: அஹ்மத், திர்மிதீ, அபூதா வூத், நஸயீ,
இப்னுமாஜா, இப்னுஹிப்பான், ஹாகிம்
துஆ என்பதே ஒரு வணக்கமாகும்!' (நபிமொழி) அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்கள்: அபூதா வூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா
பிரார்த்தனை (துஆ) ஏற்கப்படாத மர்மம்!
ஒரு மனிதன் நீண்ட பயணம் செய்து, புழுதி படிந்தவனாக - பரட்டைத்தலையுடன் - இரண்டு கைகளையும் உயர்த்தி, இறைவா! இறைவா!!' என்று பிரார்த்திக்கிறான். ஆனால், அவனது உணவும் ஹராமான! (மார்க்கத்தில் விலக்கப் பட்ட)தாக உள்ளது. அவன் அருந்திய பானமும் ஹராமானதாக உள்ளது. அவன் அணிந்துள்ள ஆடையும் ஹராமானதாக உள்ளது. இந்நிலையில் அவனது பிரார்த்தனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படும்?' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்
துஆ (பிராத்தனை) செய்யும் முன் இறைவனைப் புகழ்ந்தும், நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்தும் கூறிக்கொள்ள வேண்டும்.
இறை புகழ் எப்படிக் கூற வேண்டும்?
ஒரு மனிதர், அல்லா ஹும்ம இன்னீ அஸ்அலுக பி அன்னக அன்தல்லா ஹுஸ்ஸமலுல்லதீ லம்யலித். வலம்åலத். வலம் யகுன்ல ஹு குஃபுவன் அஹத்' என்று கூறி பிரார்த்தனை (துஆ) செய்தார். இதனை நபி (ஸல்) அவர்கள் செவியுற்ற போது, இவர் அல்லாஹ்வின் மகத்தான திருநாமத்தால் அல்லாஹ்விடம் கேட்டுள்ளார். அந்தத் திருநாமத்தால் கேட்கப்படும்போது அந்த துஆ ஏற்கப்படும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: புரைதா (ரழி) நூல்: இப்னுமாஜா
இன்னொரு மனிதர், அல்லா ஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்ன லகல் ணும்து, லா இலாஹ இல்லா அன்த வஹ்தக லாஷரீக லகல் மன்னான் பப்வுஸ்ஸமாவாதி வல் அர்ழி துல் ஜலாலி வல் இக்ராம்' என்று கூறி துஆ (பிரார்த்தனை) செய்வதை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றபோது, அல்லாஹ்வின் மகத்தான திருநாமத்தால் இவர் (துஆ) கேட்டுள்ளார். இதன் மூலம் கேட்கும்போது கொடுக்கப்படும்! என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரழி) நூல்: இப்னுமாஜா
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் எப்படிக் கூற வேண்டும்?
அல்லா ஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத். அல்லா ஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத்' என்று நபி (ஸல்) அவர்கள் ஸலவாத் கூறக் கற்றுத்த ந்தார்கள்.
நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயி
ஸலவாத்களில் இதுவே சிறந்த ஸலவாத் என்பதால் தொழுகையில் ஓதக்கூடிய இந்த ஸலவாத்தினையே ஓதி துஆ கேட்க வேண்டும்.
பிரார்த்தனை ஏன் செய்ய வேண்டும்?
இறைவன் அனைத்தையும் அறிந்தவன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. இருப்பினும் இறைவனுக்குத்தான் எல்லாம் தெரியுமே! பிறகு எதற்கு நமது தேவைகளைக் கேட்க வேண்டும் என்று (துஆ) பிரார்த்தனை செய்யாமல் இருக்கக் கூடாது. ஏனெனில், பிரார்த்தனை என்பது, நாம் அடிமை; இறைவன் மன்னனுக்கு எல்லாம் மன்னன்! என உணர்த்தி, அவனை மகத்துவப்படு த்துகின்ற செயலில் மிகச் சிறந்த வணக்கமாகும்.
எல்லா இறைத்தூதர்களும், இறைவனிடம் துஆ கேட்டிருக்கின்றனர். அவைகளை குர்ஆன் அழகாக எடுத்துரைக்கிறது. இறைவனுக்கு எல்லாம் தெரியும் என இறைத்தூதர்கள் பிரார்த்தனை செய்யாமல் இருந்ததில்லை. தங்களின் பலவீனம், இயலாமை அனைத்தும் வெளிக்காட்டி, தாம் அடிமைகள், இறைவனே மாபெரும் மன்னன் என்று உணர்த்திட தங்களுடைய பல தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறார்கள்.
நபி ஆதம் (அலை) அவர்கள் தவறு செய்த பிறகு இறைவனிடம் பிரார்த்தனை (துஆ) செய்தார்கள்.
(திருக்குர்ஆன் 7-23)
நபி அய்யூப் (அலை) அவர்கள் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை இறைவனிடமே முறையிட்டார்கள்.
(திருக்குர்ஆன் 21-83)
நபி யூனூஸ் (அலை) தாம் செய்த தவறுக்கு மன்னிப்புக் கோரினார். நபி ஈஸா (அலை) தனது தேவையை அல்லாஹ்விடமே கேட்டார்கள்.
(திருக்குர்ஆன்5-114)
நபி ஜக்காரியா (அலை) தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று இறைவனிடம் முறையிட்டார்கள்.
(திருக்குர்ஆன்3-38)
நபி நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்திற்கு எதிராக இறைவனிடம் வேண்டினார்கள்.
(திருக்குர்ஆன்21-76)
நபி யாகூப் (அலை) அவர்கள் தம் மகன் யூசுப் நபி (அலை) அவர்களைப் பிரிந்த வேதனையை அல்லாஹ்விடம்தான் முறை யிட்டார்கள். (திருக்குர்ஆன்12-86)
நபி சுலைமான் (அலை) அவர்கள் தமக்கு மிகப் பெரும் ஆட்சி அதிகாரம் வேண்டும் என துஆ செய்தார்கள். (திருக்குர்ஆன்38-35)
நபி லூத் (அலை) அவர்கள் தன் சமுதாயத்தினரின் தீய செயல்களில் இருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் காத்திடும்படி பிரார்த் தனை செய்தார்கள்.
(திருக்குர்ஆன்26-169)
நபி ஷுஐபு (அலை) அவர்கள் தமது சமுதாயத்திற்கு எதிராக பிரார்த்தனை செய்தார்கள்.
(திருக்குர்ஆன் 7-89)
நபி மூஸா (அலை) அவர்கள் தனக்கு விரிவான ஞானம் வேண்டியும், மேலும் பல தேவைகளை இறைவனிடம் கேட்டும் பெற்றுக்கொண்டார்கள்.
(திருக்குர்ஆன்20-25 முதல் 32 வரை)
இவ்வாறு எல்லா நபிமார் களும் இறைவனிடம் தங்கள் தேவைகளைக் கேட்டுப் பெற்று ள்ளார்கள். தனது அடிமைகளாகிய மனிதர்கள் தன்னை எஜமானனாகக் கருதி, தம்மிடம் மட்டுமே கேட்பதை இறைவன் விரும்புகிறான். இறைவனிடம் பிரார்த்தனை செய்வதை விட உயர்ந்த வணக்கம் இருக்க முடியாது.
திருக்குர்ஆன் (40-60), (7-29), (7-55), (18-28) (6-52) போன்ற வசனங்கள் இறைவனிடம் துஆ செய்ய வலியுறுத்துகின்றன. தாம் அதிக ஞானம் பெற்றவர்கள் என்று கருதி இறைவனிடம் துஆ கேட்காமல் இருப்பதோ, இறைவனை விட்டும் அவனுடைய நல்லடியார்கள் சமாதிகளில் கேட்பதோ இறைவனின் கோபத்தைப் பெற்றுத்தரும் செயலாகும்.
செருப்பின் வார் அறுந்து விட்டாலும் இறைவனிடமே கேளுங்கள்!' என்பது நபிமொழி.
நூல்: திர்மிதி
துஆ என்பதே வணக்கமாகும்!' என்பதும் நபிமொழி.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழி)
நூல்கள்: அபூதா வூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா
துஆ (பிரார்த்தனை) என்பதும் ஒரு வணக்கமாகும். இதனைப் புறக்கணிப்பவர்கள் நரகில் இழிந்த நிலையில் புகுவார்கள் என்பதை திருக்குர்ஆன் (40-60) வசனம் எச்சரிக்கிறது.
எவன் அல்லாஹ்விடம் தன் தேவைகளைக் கேட்கவில்லையோ, அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்' என நபி (ஸல்) கூறினார்கள்.
நூல்: ஹாகிம்
துஆ கேட்காமல் இருப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இத்தகையவர்களை இறைவன் கோபிக்கிறான் எனும்போது துஆ கேட்காமல் இருப்பது பெரும் பாவம்தானே?
(நபியே!) சொல்வீராக.
உங்களுடைய பிரார்த்தனை (துஆ) இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்கமாட்டான். ஆனால், நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக்கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும். (திருக்குர்ஆன் 25:77)
(1) அனைத்துப் புகழும் அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் அல்லா ஹுவுக்கே. (அவன்) அளவற்ற அருளாளன். நிகரற்ற அன்புடையோன். (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி. (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக. நீ எவர்களுக்கு அருள்புரிந்தாயோ அவ்வழி (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியும் அல்ல. நெறி தவறியோர் வழியும் அல்ல. (திருக்குர்ஆன் 1:1-7)
(2) (இறைவா!) இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கிவைப்பாயாக. இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பலவகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக. திருக்குர்ஆன் 2:126
(3) (இறைவா!) எங்களிடம் இருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக. நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிவிப்பவனாகவும் இருக்கின்றாய். திருக்குர்ஆன் 2:127
(4) (இறைவா!) எங்களை உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக ஆக்குவாயாக. எங்கள் சந்ததியி னரிடம் இருந்தும் உன்னை முற் றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை ஆக்கிவைப்பாயாக. நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித் தருள்வாயாக. எங்களை மன்னிப் பாயாக. நிச்சயமாக நீயே மிக மன் னிப்போனும் அளவிலா அன்புடை யோனாகவும் இருக்கின்றாய். (திருக்குர்ஆன் 2:120)
(5) எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக் எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக. நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக் எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப் பாயாக் நிச்சயமாக நீயே மிக்க மன்னிப் போனும், அளவிலா அன் புடையோனாகவும் இருக்கின்றாய்''. திருக்குர்ஆன் 2:128
(6) எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை, வர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடை யோனாகவும் இருக்கின்றாய்''. திருக்குர்ஆன் 2:129
(7) ஆகவே, உங்களுடைய ஹஜ்ஜு கிரியைகளை முடித்ததும், நீங்கள் (இதற்கு முன்னர்) உங்கள் தந்தை யரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப் போல் - இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், எங்கள் இறைவனே! இவ்வுல கிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு'' என்று கூறுகிறார்கள்: இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. திருக்குர்ஆன் 2:200
(8) (இறைவா!) எங்களுக்கு இந்த உலகிலும், மறுமையிலும் நற்பாக்கி யங்களைத் தந்தருள்வாயாக. மேலும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையில் இருந்தும் காத்தருள்வாயாக. (திருக்குர்ஆன் 2:201)
(9) (இறைவா!) எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக. எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக. உன்னை நிராகரிக்கும் இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றி பெற) உதவி செய்வாயாக. (திருக்குர்ஆன் 2:250)
(10) (இறைவா!) நாம் இறைத் தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேறுபடுத்தி வேற்றுமை பாராட்டுவதில்லை. மேலும், நாங்கள் செவிமடுத்தோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் வழி பட்டோம். இறைவா! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம். (நாங்கள்) மீளுவதும் உன்னிடம்தான் (உள்ளது) (திருக்குர்ஆன் 2:285)
(11) (இறைவா!) நாங்கள் மறந்துபோய் இருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்து இருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காது இருப்பாயாக. இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையைப் போன்று எங்கள் மீது சுமத்தாது இருப்பாயாக.
(இறைவா!) எங்கள் சக்திக்கு அப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாது இருப்பாயாக. எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக. எங்களை மன்னித்தருள்வாயாக. எங்கள் மீது கருணை புரிவாயாக. நீயே எங்கள் பாதுகாவலன். உன்னை நிராகரிக்கும் கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக. (திருக்குர்ஆன் 2:286)
(12) (இறைவா!) நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டிய பின் எங்கள் இதயங்களை (அதில் இருந்து) தவறுமாறு செய்துவிடாதே! இன்னும் நீ உன்புறத்தில் இருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக. நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி ஆவாய். திருக்குர்ஆன் 3:8
(13) (இறைவா!) நிச்சயமாக நீ மனிதர்களை எல்லாம் எந்த சந்தேகமும் இல்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான். திருக்குர்ஆன் 3:9
(14) (இறைவா!) நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம். எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக. (நரக) நெருப்பின் வேதனையில் இருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக. (திருக்குர்ஆன்3-16)
கர்ப்பிணிகளின் துஆ
(15) (இறைவா!) என் கர்ப்பத்தில் உள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நிச்சயமாக நான் நேர்ந்துகொள்கிறேன். எனவே (இதை) என்னிடம் இருந்து நீ ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறு வோனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கின்றாய். (திருக்குர்ஆன் 3:35)
மலடிகளின் துஆ
(16) (இறைவா!) உன்னிடம் இருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். திருக்குர்ஆன் 3:38
(17) (இறைவா!) நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம். (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே (சத்தியத்திற்கு) சாட்சி சொல் வோருடன் சேர்த்து எழுதுவாயாக. திருக்குர்ஆன் 3:53
(18) (இறைவா!) எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக. எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக. காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக. திருக்குர்ஆன் 3:147
(19) (இறைவா!) (வானங்கள், பூமி) இவற்றை எல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகா தூய்மையானவன். (நரக) நெருப்பின் வேதனையில் இருந்து எங்களைக் காத்தருள்வாயாக. திருக்குர்ஆன் 3:191
(20) (இறைவா!) நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய். மேலும், அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இல்லை! திருக்குர்ஆன் 3:192
(21) (இறைவா!) உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று இறைவிசுவாசத்தின் (ஈமான்) பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவியேற்று நாங்கள் உறுதியாக நம்பிக்கைக் கொண்டோம்.
(இறைவா!) எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றிவிடுவாயாக. இன்னும் எங்க(ளுடைய ஆன்மாக் க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக் களு)டன் கைப்பற்றுவாயாக. திருக்குர்ஆன் 3:193
(22) (இறைவா!) இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக. மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக. நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. திருக்குர்ஆன் 3:194
(23) (இறைவா!) அக்கிரமக்காரர்கள் இருக்கும் இந்த ஊரை விட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடம் இருந்த (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடம் இருந்து ஓர் உதவியாளனையும் அளித் தருள்வாயாக. திருக்குர்ஆன் 4:75
(24) (இறைவா!) நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்துகொள்வாயாக. திருக்குர்ஆன் 5:83
(25) மேலும், அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தின் மீதும், நாங்கள் நம்பிக்கை கொள்ளாதிருக்க எங்களுக்கு என்ன (தடை) இருக்கின்றது? எங்களுடைய இறைவன் எங்களை நல்லோர் கூட்டத்துடன் சேர்த்து வைக்கவே நாங்கள் ஆசை வைக்கிறோம்'' (என்றும் அவர்கள் கூறுவர்) (திருக்குர்ஆன்5:84)
(26) (இறைவா!) மேலும், எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவு அளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய். திருக்குர்ஆன் 5:114
(27) (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னு டைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவா யானால், நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத் தோனாகவும் ஞானம் மிக்கோ னாகவும் இருக்கின்றாய். திருக்குர்ஆன் 5:118
(28) (இறைவா!) எங்களுக்கு நாங்களே தீங்கு இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யா விட்டால், நிச்சயமாக நாங்கள் நட்டம் அடைந்தவர்களாகி விடுவோம். திருக்குர்ஆன் 7:23
(29) (இறைவா!) எங்களை (இந்த) அக்கிரமக்காரர்களுடனே ஆக்கிவிடாதே! திருக்குர்ஆன் 7:47
(30) (ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது; எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்துவிட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்துவிடுகிறோம். திருக்குர்ஆன் 7:51
(31) (இறைவா!) எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்கும் இடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக. தீர்ப்பு அளிப்ப வர்களில் நீயே மிகவும் மேலானவன். திருக்குர்ஆன் 7:89
(32) (இறைவா!) எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக. முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்ட வர்களாக எங்களை ஆக்கி) எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக. திருக்குர்ஆன் 7:126
(33) (இறைவா!) எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நட்டம் அடைந்தவர்களாகி விடுவோம். திருக்குர்ஆன் 7:149
(34) (இறைவா!) என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக. உன் (ரஹ்மத்) நற்கிருபையில் பிரவேசிக்கச் செய்வாயாக. ஏனெனில், நீயே கிருபையாளர்களில் எல்லாம் மிக்க கிருபையாளன். திருக்குர்ஆன் 7:151
பூகம்பம் ஏற்படும்போது துஆ
(35) (இறைவா!) நீ நாடி இருந்தால் இதற்கு முன்பே அவர்களையும், என்னையும் நீ அழித்திருக்கலாமே. எங்களில் உள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக எங்கள் யாவரையும் நீ அழித்து விடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி, வேறு இல்லை. இதைக்கொண்டு நீ நாடியவர்களை நேர்வழியில் நடத்துகிறாய். நீதான் எங்களுடைய பாதுகாவலன். எனவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக. எங்களுக்குக் கிருபை செய்வாயாக. மன்னிப்ப வர்களில் எல்லாம் நீதான் மிக்க மேன்மை யானவன். (திருக்குர்ஆன் 7:155)
(36) இன்னும் இந்த உலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக. நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம். திருக்குர்ஆன் 7:156
(37) (இறைவா!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றி உள்ளவர்களாக இருப்போம். திருக்குர்ஆன் 7:189
(38) எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்கு உரிய) நாயன் அவனை அன்றி (வேறு யாரும்) இல்லை. அவன் மீதே நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். அவன்தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி திருக்குர்ஆன் 9:129
(39) (இறைவா!) அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே. (திருக்குர்ஆன் 10:85)
(40) (இறைவா!) இந்த (காஃபிர்) இறை நிராகரிப்பாளர்களான மக்களிடம் இருந்து உன் அருளினால் எங்களைக் காப்பாற்றுவாயாக. திருக்குர்ஆன் 10:86
(41) (இறைவா!) அவர்கள் உன் பாதையை விட்டு வழிகெடுக் கிறார்கள். இறைவா! அவர்களுடைய செல்வங்களை அழித்து, அவர்க ளுடைய இதயங் களை கடினமாக்கி விடுவாயாக. நோவினை தரும் வேதனையை அவர்கள் பார்க்காத வரையில் அவர்கள் விசுவாசம் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். திருக்குர்ஆன் 10:88
(42) (இறைவா!) உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மை யானது. நீதி வழங்குவோர்களில் எல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய். (திருக்குர்ஆன் 11:45)
(43) (இறைவா!) எனக்கு எதைப் பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள்புரியவில்லையானால் நட்டமடைந்தோரில் நான் ஆகிவிடுவேன். (திருக்குர்ஆன் 11:47)
(44) என்னுடைய சஞ்சலத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். (திருக்குர்ஆன் 12:86)
(45) (இறைவா!) வானங்களையும், பூமியையும் படைத்தவனே, இம்மையிலும், மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக்கொள்வாயாக. இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக. (திருக்குர்ஆன் 12:101)
(46) (இறைவா!) இந்த ஊரை அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக. என்னையும் என் மக்களையும் சிலைகளை வணங்குவதில் இருந்து காப்பாற்றுவாயாக. திருக்குர்ஆன் 14:35
(47) எங்கள் இறைவனே (நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாய மில்லாத (இப்) பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநிறுத்துவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!'' (திருக்குர்ஆன் 14:37)
(48) (இறைவா!) நாங்கள் மறைத்துவைத்திருப்பதையும், பகிரங்கப்படுத்துவதையும் நிச்சயமாக நீ அறிகிறாய். இன்னும் பூமியிலோ, மேலும் வானத்திலோ எந்தப் பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இல்லை. திருக்குர்ஆன் 14:38
(49) எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன். திருக்குர்ஆன் 14:39
(50) (இறைவா!) தொழுகையை நிலை நிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியில் உள்ளோ ரையும் ஆக்குவாயாக. (இறைவா!) என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக. ஆமீன்! (திருக்குர்ஆன் 14:40)
(51) (இறைவா!) என்னையும், என் பெற்றோர்களையும், இறை நம்பிக்கை யாளர்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக. (திருக்குர்ஆன் 14:41)
(52) எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னு டைய அழைப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், (உன்னுடைய) தூதர் களையும் பின் பற்றுகிறோம்'' என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்) உங்களுக்கு முடி வேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக் கவில்லையா?'' (என்றும்) (திருக்குர்ஆன் 14:44)
(53) (இறைவா!) நான் சிறுபிள் ளையாக இருந்தபோது, என்னை(ப் பரிவோடு) அவ்விருவரும் (பெற் றோர்கள்) வளர்த்தது போன்று நீயும் அவர்கள் இருவருக்கும் கிருபை செய்வாயாக. (திருக்குர்ஆன் 17:24)
(54) (இறைவா!) என்னைச் சிறந்த முறையில் நுழையச் செய்வாயாக. மேலும், சிறந்த முறையில் என்னை வெளிப்படுத்துவாயாக. மேலும் உன் புறத்தில் இருந்து எனக்கு உதவி செய்யும் ஒரு சக்தியை ஆக்குவாயாக. (திருக்குர்ஆன் 17:80)
(55) (இறைவா!) நீ உன்னிடம் இருந்த எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக. மேலும் நீ எங்களு க்காக எங்கள் காரியத்தை(ப் பலனுள் ளதாக)ச் சீர்திருத்தித் தருவாயாக. (திருக்குர்ஆன் 18:10)
(56) மாஷா அல்லா ஹு லா குவ்வத்த இல்லா பில்லாஹ் அல்லாஹ் நாடியதே நடக்கும். அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கே அன்றி வேறு இல்லை. (திருக்குர்ஆன் 18:39)
முதியோர் ஓதும் துஆ
(57) (இறைவா!) நிச்சயமாக என் எலும்புகள் பலவீனம் அடைந்துவிட்டது. என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. இறைவா! (இது வரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. (திருக்குர்ஆன் 19;4)
(58) உன் புறத்தில் இருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக. (திருக்குர்ஆன் 19:5)
(59) (இறைவா!) அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப் பட்டவராகவும் ஆக்கிவைப்பாயாக. திருக்குர்ஆன் 19:6
(60) (இறைவா!) என் இதயத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கித் தருவாயாக திருக்குர்ஆன் 20:25
(61) என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக திருக்குர்ஆன் 20:26
(62) என் நாவில் உள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக. திருக்குர்ஆன் 20:27
(63) என் சொல்லை அவர்கள் விளங்கிக்கொள்வதற்காகத்தான். திருக்குர்ஆன் 20:28
(64) என் குடும்பத்தில் இருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக. திருக்குர்ஆன் 20:29
(65) நாங்கள் உன்னை மிக அதிகமாகத் துதிப்பதற்காக (திருக்குர்ஆன் 20:33)
(66) உன்னை மிக அதிகம் நினைப்பதற்காகவும் (இவற்றை எல்லாம் அருள்வாயாக) திருக்குர்ஆன் 20:34
(67) நிச்சயமாக நீ எங்களை நோக்கியவனாகவே இருக்கிறாய். திருக்குர்ஆன் 20:35
(68) (இறைவா!) கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக. திருக்குர்ஆன் 20:114
நோயாளிகள் ஓதும் துஆ
(69) (இறைவா!) நிச்சயமாக என்னை (நோயால்) துன்பம் தீண்டிவிட்டது. (இறைவா!) கிருபை செய்பவர்களில் எல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய். திருக்குர்ஆன் 21:83
(70) (இறைவா!) நீ என்னை (சந்ததி இல்லாமல்) ஒற்றையாக விட்டுவிடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன். திருக்குர்ஆன் 21:89
(71) (இறைவா!) சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக. திருக்குர்ஆன் 21:112
(72) அநியாயக்காரரான சமூகத் தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (திருக்குர்ஆன் 23:28)
பிரயாணத்தில் ஓதும் துஆ
(73) (இறைவா!) நீ மிகவும் பாக்கியம் உள்ள இறங்கும் தலத்தில் என்னை இறக்கிவைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கிவைப்பவர்களில் மிக்க மேலானவன். (திருக்குர்ஆன் 23:29)
(74) (இறைவா!) அவர் (காபிர்) களுக்கு வாக்க ளிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாக இருப்பின் (இறைவா!) அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்கா திருப்பாயாக. (திருக்குர்ஆன் 23:93,94)
(75) (இறைவா!) சைத்தானின் தூண்டுதல்களில் இருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன். மேலும், அவை என்னிடம் நெருங்காமல் இருக்கவும் இறைவா! உன்னிடம் காவல் தேடுகிறேன். (திருக்குர்ஆன் 23;97,98)
(76) (இறைவா!) நாங்கள் உன் மீது விசுவாசம் (ஈமான்) கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக. கிருபையாளர்களில் எல்லாம் நீ மிகவும் மேலானவன். (திருக்குர்ஆன் 23:109)
(77) (இறைவா!) நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக. நீதான் கிருபையாளர்களில் எல்லாம் மிக மேலானவன். (திருக்குர்ஆன் 23:118)
(78) (இறைவா!) எங்களை விட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்பு வாயாக. நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும். (திருக்குர்ஆன் 25:65)
(79) (இறைவா!) எங்கள் மனைவி யரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக. இன்னும் பயபக்தி உடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக. (திருக்குர்ஆன் 25:74)
(80) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம்தான் திரும்பிச் செல்வோம். (திருக்குர்ஆன் 26:50)
(81) இறைவிசுவாசிகளில் நாங்கள் முதலாமவர்களாக இருப்பதினால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னித்து விடுவான் என்று நாங்கள் ஆதரவு வைக்கின்றோம். (திருக்குர்ஆன் 26:51)
(82) (இறைவன்!) என்னைப் படைத்தான். பின்னும் அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான். (திருக்குர்ஆன் 26:78)
(83) அவனே எனக்கு உணவு அளிக்கிறான். அவனே எனக்கு அருந்தச் செய்கிறான். (திருக்குர்ஆன் 26:79)
(84) நான் வியாதியில் வீழ்ந்தபோது அவனே என்னைக் குணப்படுத்துகிறான். (திருக்குர்ஆன் 26:80)
(85) மேலும், அவனே என்னை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே என்னை உயிர்ப்பிக்கிறான். திருக்குர்ஆன் 26:81
(86) நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன், அவனே என்று நான் ஆதரவு வைக்கின்றேன். திருக்குர்ஆன் 26:82
(87) (இறைவா!) நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக. மேலும், ஸாலிஹான (நல்ல)வர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயக. (திருக்குர்ஆன் 26:83)
(88) இன்னும் பின்வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத் துவாயாக. (திருக்குர்ஆன் 26:84)
(89) இன்னும் பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிசுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கி வைப்பாயாக. (திருக்குர்ஆன் 26:85)
(90) என் தந்தையாரையும் மன்னிப்பாயாக. (திருக்குர்ஆன் 26:86)
(91) இன்னும் (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள் ஆக்காதி ருப்பாயாக. (திருக்குர்ஆன் 26:87)
(92) அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனும் அளிக்கமாட்டா. (திருக்குர்ஆன் 26:88)
(93) (இறைவா!) என்னையும் என் குடும்பத்தாரையும் இவர்கள் செய்து கொண்டு இருக்கிற (தீய)வற்றில் இருந்து காப்பாயாக. (திருக்குர்ஆன் 26:169)
(94) புகழ் அனைத்தும் அல்லாஹ் வுக்கே உரியது. அவன் தான் முஃமின்களான தன் நல்லடி யாளர்களில் அநேகரை விட நம்மை மேன்மையாக்கினான். (திருக்குர்ஆன் 27:15)
(95) (இறைவா!)நீ என் மீதும், என் பெற்றோர் மீதம் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு அருள் செய்வாயாக. இன்னும் உன் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக. (திருக்குர்ஆன் 27:19)
(96) (இறைவா!) நிச்சயமாக எனக்கு நானே அநியாயம் செய்து கொண்டேன். அகிலங்களுக்கு எல்லாம் இறைவனான அல்லாஹ் வுக்கு நானும் முற்றிலும் (வழிபட்டு) முஸ்லிமாகிறேன். (திருக்குர்ஆன் 27:44)
(97) (இறைவா!) நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்துவிட்டேன். ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக. (திருக்குர்ஆன் 28:16)
(98) என் இறைவனே! என் மீது நீ அருள்புரிந்ததன் காரணமாக, நான் இனி ஒருபோதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்'' என்று கூறினார். (திருக்குர்ஆன் 28:17)
(99) (இறைவா!) இந்த அக்கிரமக் கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக. (திருக்குர்ஆன் 28:21)
(100) (இறைவனே!) என்னை நேரான பாதையில் செலுத்தக்கூடும். (திருக்குர்ஆன் 28:22)
(101) (இறைவா!) நீ எனக்கு இறக்கி அருளும் நல்லவற்றின் பக்கம் நிச்சயமாக நான் தேவை உள்ளவனாக இருக்கிறேன். திருக்குர்ஆன் 28:24
(102) (இறைவா!) குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக. திருக்குர்ஆன் 29:30
(103) (அதற்கு அவர்): என் இறைவா! நிச்சயமாக, நான் அவர்களில் ஒருவனைக் கொன்று விட்டேன்; ஆகையால் அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என்று பயப்படுகிறேன்'' என்று கூறினார். (திருக்குர்ஆன் 28:33)
(104) மேலும், இக்குற்ற வாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய் எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக்கொண்டோம், கேட்டுக் கொண்டோம் - ஆகவே. நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற் கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகி விட்டோம்'' என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்துகொள்வீர்) (திருக்குர்ஆன் 32:12)
(105) எங்களை விட்டும் (எல்லாக்) கவலைகளையும், போக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியதாகும். நிச்சயமாக எங்கள் இறைவன் மிக மன்னிப்பவன், நன்றியை ஏற்றுக் கொள்பவன். திருக்குர்ஆன் 35:34
(106) அவன் தன் அருளில் இருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான். அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டு வதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை. (திருக்குர்ஆன் 35-35)
(107) நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன், திட்டமாக அவன் எனக்கு நேர்வழியைக் காண்பிப்பான். (திருக்குர்ஆன் 37:99)
(108) இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக. (திருக்குர்ஆன் 37:100)
(109) (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். திருக்குர்ஆன் 38:29
(110) (இறைவா!) என்னை மன்னித்தருள்வாயாக. அன்றியும் பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடை அளிப்பாயாக. நிச்சய மாக நீயே மிகப் பெரும் கொடை யாளியாவாய். (திருக்குர்ஆன் 38:35)
(111) (இறைவா!) நீ ரஹ்மத்தாலும், ஞானத்தாலும் எல்லாப் பொருட் களையும் சசூழ்ந்து இருக்கிறாய். எனவே, பாவமீட்சி கோரி, உன் வழியைப் பின்பற்றுபவர்களுக்கு நீ மன்னிப்பாயாக. இன்னும் அவர்களை நரக வேதனையில் இருந்தும் காத்தருள்வாயாக. திருக்குர்ஆன் 40:7)
(112) (இறைவா!) நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கும், நிலையான சுவனத்தில் அவர்களையும், அவர்கள் மூதாதையர்களிலும் அவர்கள் மனைவி யர்களிலும், அவர்கள் சந்ததியர்களிலும் நன்மை செய்தோரையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ தான் (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன். (திருக்குர்ஆன் 40:8)
(113) இன்னும் அவர்களைத் தீமை களில் இருந்து காப்பாயாக. அந்நாளில் நீ யாரை தீமைகளில் இருந்து காத்துக் கொள்கிறாயோ, அவர்களுக்கு நிச்சய மாக நீ அருள்புரிந்து விட்டாய். அதுவே மகத்தான வெற்றியாகும். (திருக்குர்ஆன் 40:9)
பயணத்தின்போது துஆ
(114) இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்த அ(வ்விறை)வன் மிக பரிசுத்தமானவன். (திருக்குர்ஆன் 43:13)
(115) மேலும், நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள். (திருக்குர்ஆன் 43:14)
(116) (இறைவா!) நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த அருட் கொடைகளுக்காக நன்றி செலுத் தவும், உன்னுடைய திருப்தியை அடையக்கூடிய நற்செயல்களைச் செய்யவும் எனக்கு அருள்பாலிப் பாயாக. (இதில் எனக்கு உதவு வதற்காக) என்னுடைய சந்ததி யையும், நல்லதைச் செய்பவர்களாக சீர்படுத்தி அருள்வாயாக. நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன். அன்றியும், நான் முஸ்லிம்களில் உள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கிறேன். (திருக்குர்ஆன் 46:15)
(117) (இறைவா!) எங்களுக்கும், விசுவாசம் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களாக எங்கள் சகோதரர்களுக்கும், மன்னிப்பு அருள்வாயாக. அன்றியும், விசுவாசம் (ஈமான்) கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காது இருப்பாயாக. இறைவா! நிச்சயமாக நீ மிக்க இரக்க முடையவன். கிருபைமிக்கவன். (திருக்குர்ஆன் 59:10)
(118) (இறைவா!)இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக் கின்றோம். (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம். மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது. (திருக்குர்ஆன் 60:4)
(119) (இறைவா!) காபிர்களுக்கு எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே. இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள் வாயாக. நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன், ஞானம் மிக்கவன். (திருக்குர்ஆன் 60:5)
(120) (இறைவா!) எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக. எங்களுக்கு மன்னிப்பும் அருள் வாயாக. நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன். (திருக்குர்ஆன் 66:8)
(121) (இறைவா!) எனக்காக உன்னிடத்தில், சுவனத்தில் ஒரு வீட்டைக் கட்டித்தருவாயாக. இன்னும் அநியாயக்கார சமூகத் தாரிடம் இருந்தும் என்னைக் காப் பாற்றுவாயாக. (திருக்குர்ஆன் 66:11)
(122) (எங்களைக் காப்பவன்) அவனே. அர்ரஹ்மான். அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம். மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம். (திருக்குர்ஆன் 68:29)
(123) (இறைவா!) பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டுவிடாதே. (திருக்குர்ஆன் 71:26)
(124) நிச்சயமாக, நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள். அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள். (திருக்குர்ஆன் 71:27)
125. (இறைவா!) எனக்கும், என் பெற்றோர்க்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக. மேலும், அநியாயக் காரர்களுக்கு அழிவையே அல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே. திருக்குர்ஆன் 71:28
(126) அதிகாலையின் இறைவனிடம் நான் காவல் தேடுகிறேன். அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும், இருள் பரவும்போது ஏற்படும் இரவில் தீங்கை விட்டும் இன்னும் முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும்போது உண்டாகும் தீங்கை விட்டும் (காவல்தேடுகிறேன்) திருக்குர்ஆன் 113:1-5
(127) மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். மனிதர்களின் அரசன், மனிதர்களின் நாயன், பதுங்கி இருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்) அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகின்றான். (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர். திருக்குர்ஆன் 114:1-6