குழந்தைகளை மக்ரீப் (சூரியன் மறையும் போது) நேரத்தில் வீட்டினுள்ளேயே வைத்திருப்பது

கேள்வி:
நம்பிக்கையாளர்கள் மக்ரீ்புக்கு பின்னர் வெளியே இருப்பதின் சட்டம் என்ன? அது விரும்பத்தகாததா?

விடை அளித்தது 
ஃபத்வா துறை ஆராய்ச்சி குழு - ஷேய்க் ‘அப்த் அல்-வஹாப் அல்-துரைர் அவர்கள் தலைமையில் விடையளிக்கப்பட்டுள்ளது. 

நம்பிக்கையாளர்களுக்கு மக்ரீப் நேரம் வெளியே செல்வதற்கு தடைவிதிக்கப்படவில்லை. நிச்சயமாக அவர்கள் மக்ரீப்  தொழுவதற்கு பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும் பின்னர் தொழுகை முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்பி செல்ல அவர்கள் வெளியே வர வேண்டும் என்பதால் அந்நேரத்தில் வெளியில் செல்வது தேவையானதாகும்.

இருப்பினும் அந்நேரத்தில் நம் குழந்தைகளை வீட்டினுள்ளே வைத்திருக்க வேண்டும் என நமக்கு ஊக்குவிக்கப்பட்டுள்ளது, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

”இரவின் இருள் படரத் தொடங்கிவிட்டால் உங்கள் குழந்தைகளை (வெளியே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போதுதான் (பூமியெங்கும) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்துவிட்டால் அவர்களை (வெளியே செல்ல)விட்டு விடுங்கள்.” 
[ஸஹீஹ் அல் புகாரி (3280,5623) மற்றும் ஸஹீஹ் முஸ்லிம் 2012)]

நபி صلى الله عليه وسلم அவர்கள் மேலும் கூறினார்கள்:

“மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். ”
[ஸஹீஹ் அல்-புகாரி (3316)]

மேலே உள்ள ஹதீஸில் “இரவு வேளையில் சிறிது நேரம்” என்ற வார்த்தையின் பொருளை பின்வரும் ஹதீஸில் விளக்கப்பட்டுள்ளது, நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்:

 “சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை உங்கள் கால்நடைகளையும் குழந்தைகளையும் வெளியே விடாதீர்கள். ஏனெனில், ஷைத்தான்கள் சூரியன் மறைந்துவிட்டால் இரவின் (ஆரம்பநேர) இருள் விலகும்வரை கிளம்பிச் செல்கின்றனர்.”
[ஸஹீஹ் முஸ்லிம்(2013)]
أحدث أقدم