குர்ஆன் ஸுன்னாவின் பார்வையில் நான்கு மத்ஹபு இமாம்களின் குனூதுன் நாஸிலா

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை இறைத்தூதர் ﷺ அவர்கள் சோதனைகள் ஏற்படும்  காலகட்டங்களில்  ஓதியுள்ளார்கள்.

و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ عُصَيَّةُ عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் 'உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்'என்றும் கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 1201

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ الْقُنُوتِ‪….‬ إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلًا إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி  அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்'' என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

 நூல்: புகாரி 1002

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து கடமையான தொழுகைகளில் ஒரு மாத காலம் குனூத் ஓதியுள்ளார்கள்.
நபியவர்கள் ஒருமாத காலம் ஓதினார்கள் என்பது ஒரு செய்தியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் ஓத வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்த எல்லையாக கட்டளையாகக் குறிப்பிடப்படவில்லை.
எனவே பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்து நீங்கும் கால அளவிற்கு நாம் இந்த சோதனைக் கால குனூத்தினை ஓதிக் கொள்ளலாம்.
கடமையான தொழுகை அனைத்திலும் சோதனைக்கால குனூத் ஓதலாம்
சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள்.
கடமையான தொழுகைகளில் கடைசி இரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஒதியுள்ளார்கள்.
 இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி அவர்களின் காலத்தில்) இருந்தது.

நூல்: புகாரி 798, 1004.

அதிகமான நபி தோழர்கள் குனூதுன் நாஸிலா (ஐவேளை தொழுகையில் துன்பங்கள் ஏற்படும் போது செய்யப்படும் பிரார்த்தனை) தங்களின் காலங்களில் செய்ததாக பல அறிவிப்புகள் வருகின்றன.

 இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு லைது பின் ஸஃது ரஹிமஹுல்லாஹ் போன்ற ஸலஃபுகள் நபியவர்களின் காலத்திற்கு பிறகு குனூதுன் நாஸிலா ஐவேளை தொழுகையில் ஓதவில்லை,
காரணம் நபி அவர்கள் ஒரு மாத காலம் மட்டும்தான் துன்ப காலங்களில் ஓதினார்கள் பிறகு ஓதவில்லை விட்டுவிட்டார்கள் என்பதாக கூறுகிறார்கள்.

பார்க்க -
انظر: المفهم (2/ 301).

இந்த அடிப்படையில்தான் மாலிகி மத்ஹபின் பிரபலமான ஒரு கருத்து குனூதுன் நாஸிலா இல்லை .

பார்க்க -
قال الخرشي في شرحه على متن الخليل (1/ 554): "الظاهر أنَّ حكم القنوت في غير الصبح الكراهة"، وانظر: شرح الرسالة لزروق (1/ 173)، ومواهب الجليل (2/ 244)، وحاشية الدسوقي (1/ 248).

இமாம் தஹாவி போன்ற சில ஹனபிஃ இமாம்கள் பஃஜ்ரு தொழுகையை தவிர்த்து ஏனைய சப்த்தமிட்டும் ஓதும் தொழுகைகளில் (மஃரீப் & இஷா) துன்பங்கள் நிகழும் போது ஓதிக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.

قال الطحاوي في شرح معاني الآثار (1/ 254): "ثبت بما ذكرنا أنَّه لا ينبغي القنوت في الفجر، في حال حرب ولا غيره، 
رواه ابن أبي شيبة (2/ 317)، حدثنا وكيع قال: حدثنا سفيان عن عبدالأعلى: ((أنَّ أبا عبدالرحمن السلمي قنت في الفجر يدعو على قطري))؛ وإسناده حسن.

عبدالأعلى بن عامر الثعلبي توسط فيه الحافظ ابن حجر فقال: "صدوق يهم"، وبقية رواته ثقات، وقطري هو ابن الفجاءة.

முஸ்னது இப்னு அபீ ஷைபாவில் 2/317 ல்
அபூ அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமி ரஹிமஹுல்லாஹ் (பல சஹாபாக்களிடம்  ஹதீஸ் கலையை பயின்ற முதல் நூற்றாண்டை சேர்ந்த தாபிஈ) இப்னு புஃஜாஆ என்ற கத்ரி என்பவருக்கு எதிராக பஃஜ்ரு தொழுகையில் குனூத் ஓதிய ஒரு அதர்- اثر  - வந்திருக்கிறது , இதன் தரம் ஹஸன் என்ற அங்கீகாரமான செய்தி ஆகும்.

இந்த அடிப்படையில் குனூத் செய்வது
ஹனபிஃ மத்ஹபில்  இருக்கிறது 
பார்க்க -பஃத்ஹுல் கதிர்  - 1/379 மற்றும் சில  புத்தகங்கள்....

ஹனபிஃ பிஃக்ஹு துறையில் தலை சிறந்த இமாம் ஆகிய இப்னுல் ஹுமாம்
கூறுகிறார்கள் குனூத்துன் நாஸிலா தொடர்ந்து அமலில் இருந்து வந்திருக்கிறது அது சட்டத்திலிருந்து அகற்றப்படவில்லை,
இவ்வாறு தான் ஹதீஸ் கலை வல்லுனர்களும் கூறுகின்றனர். நபியவர்கள் காலத்துக்கு பின் குலபாஃகளும் ரழியல்லாஹு அன்ஹும் தொடர்ந்து செய்து வந்திருக்கின்றனர் என்பது நமக்கு ஆதாரமாக இருக்கிறது.

قال ابن الهمام في فتح القدير (1/ 379): "هذا ينشئ لنا أنَّ القنوت للنازلة مستمر لم ينسخ، وبه قال جماعة من أهل الحديث ... وما ذكرنا من أخبار الخلفاء رضي الله عنهم يفيد تقرره؛ لفعلهم ذلك بعده صلى الله عليه وسلم، فيجب كون بقاء القنوت في النوازل مجتهدًا ... فتكون شرعيته مستمرة، وهو محمل قنوت من قنت من الصحابة رضي الله عنهم بعد وفاته صلى الله عليه وسلم

இந்த அடிப்படையில் குனூத் செய்வது
ஷாஃபி மத்ஹபில் இருக்கிறது
பார்க்க -அல் - உம் - 1/205 மற்றும் சில  புத்தகங்கள்....

انظر: الأم (1/ 205)، والحاوي (2/ 152)، ونهاية المطلب (2/ 187)، وروضة الطالبين (1/ 254)، والمجموع (3/ 494)، وأسنى المطالب (1/ 158)

ஹம்பளி மத்ஹபிலும் இருக்கிறது
பார்க்க -அல் - புஃரூஃ- 1/543 மற்றும் சில  புத்தகங்கள்....

انظر: الفروع (1/ 543)، والمبدع (2/ 13)، وكشاف القناع (2/ 421)، ومعونة أولي النهى (2/ 266).

இந்த கருத்தில் இமாம் இப்னு ஹஸ்ம்,ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா, இமாம் ஷௌகானி, இப்னுல் கையிம், சமகால சவுதியைச் சேர்ந்த மார்க்க அறிஞரான முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் போன்றோரும் தங்கள் புத்தகங்களில் குனூதுன் நாஸிலா ஐவேளை தொழுகையில் ஓதுவதற்கு ஆதாரமாக
கூறியிருக்கிறார்கள்.

பார்க்க - 
انظر: المحلى (4/ 138).

 انظر: الاختيارات، ص: (64).

 انظر: زاد المعاد (1/ 273)، والصلاة، ص: (211).

 انظر: نيل الأوطار (2/ 346).

 انظر: مجموع فتاوى ورسائل العثيمين (14/ 174)

குனூத்துன் நாஸிலா என்பது சோதனையான காலகட்டங்களில் முஸ்லிம்களுக்கு இறையுதவியை வேண்டியும், எதிரிகளுக்கு எதிராக இறைவனின் சாபத்தை வேண்டியும் நபி (ஸல்) அவர்கள் ஓதிய குனூத் ஆகும். இதனை இறைத்தூதர் ﷺ அவர்கள் சோதனைகள் ஏற்படும்  காலகட்டங்களில்  ஓதியுள்ளார்கள்.

و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى وَاللَّفْظُ لِابْنِ مُعَاذٍ حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي مِجْلَزٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا بَعْدَ الرُّكُوعِ فِي صَلَاةِ الصُّبْحِ يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَيَقُولُ عُصَيَّةُ عَصَتْ اللَّهَ وَرَسُولَهُ

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் ருகூவிற்குப் பின்னால் ஒரு மாத காலம் குனூத் (சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். அதில் ரிஅல், தக்வான் ஆகிய குலத்தாருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும் 'உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார்கள்'என்றும் கூறினார்கள்

நூல்: முஸ்லிம் 1201

حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنْ الْقُنُوتِ‪….‬ إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلًا إِلَى قَوْمٍ مِنْ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் ருகூவிற்குப் பிறகு ஒரு மாதம் தான் குனூத் ஓதினார்கள். நபி அவர்கள் குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை இணை வைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த முஷ்ரிகீன்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர். அவர்களுக்கும் நபி  அவர்களுக்குமிடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது. (அந்த முஷ்ரிகீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் முஷ்ரிகீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்'' என்று அனஸ் (ரலி) விடையளித்தார்கள்.

 நூல்: புகாரி 1002

குர்ஆனை மனனம் செய்த எழுபது ஸஹபாக்களை, இணை வைப்பாளர்கள் கொன்ற காரணத்தினால் தான் நபியவர்கள் அவர்களைச் சபித்து கடமையான தொழுகைகளில் ஒரு மாத காலம் குனூத் ஓதியுள்ளார்கள்.
நபியவர்கள் ஒருமாத காலம் ஓதினார்கள் என்பது ஒரு செய்தியாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் ஓத வேண்டும் என்று நபியவர்கள் நிர்ணயித்த எல்லையாக கட்டளையாகக் குறிப்பிடப்படவில்லை.
எனவே பாதிப்பின் தாக்கம் மனதில் இருந்து நீங்கும் கால அளவிற்கு நாம் இந்த சோதனைக் கால குனூத்தினை ஓதிக் கொள்ளலாம்.
கடமையான தொழுகை அனைத்திலும் சோதனைக்கால குனூத் ஓதலாம்
சோதனையான கால கட்டங்களில் ஓதக்கூடிய இந்தக் குனூத்தை நபியவர்கள் சுப்ஹுத் தொழுகையில் மட்டுமல்லாது அனைத்து கடமையான தொழுகைகளிலும் ஓதியுள்ளார்கள்.
கடமையான தொழுகைகளில் கடைசி இரக்அத்தில் ருகூவிற்குப் பிறகு ஒதியுள்ளார்கள்.
 இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الْأَسْوَدِ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: மஃரிப், ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளில் குனூத் ஓதுதல் (நபி அவர்களின் காலத்தில்) இருந்தது.

நூல்: புகாரி 798, 1004.

ஆக குனூதுன் நாஸிலா ஐவேளை தொழுகையில் ஓதுவதற்கு சங்கையான இமாம்களின் குர்ஆன், ஸுன்னாவின் பார்வையில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆதாரங்களே போதுமான ஒன்று பிறகு
ஏன் இன்னும் இந்த நபி வழியை பின்பற்றாமல் இருக்கிறோம்!!!

 வாருங்கள் நாமும் குனூதுன் நாஸிலா ஐவேளை தொழுகையில் நமது பள்ளிவாயில்களில் இன்று முதல் ஓதி 
பாலஸ்தீன நமது சகோதரர்களுக்கு ஆதரவாக அக்கிரமக்கார ஜியோனிஸ இஸ்ரேலுக்கு எதிராக துஆ செய்வோம்.
Previous Post Next Post