தப்லீக் ஜமாஅத்தின் இஜ்திமாக்களில் கலந்து கொள்ளலாமா?

பொது மக்களிடத்தில்‌ தப்லீக்‌ ஜமாஅத்தைப்‌ பற்றிக்‌ கேட்டால்‌ அதற்கவர்கள்‌ அந்த இயக்கம்‌ நல்ல காரியங்களில்தான்‌ ஈடுபடுகிறது என்று கூறுகிறார்கள்‌. தப்லீக்‌ ஜமாஅத்தின்‌ இஜ்திமாவில்‌ அவர்கள்‌ வார்த்தைக்கு வார்த்தை தீன்‌ என்று கூறுவார்கள்‌. ஆனால்‌ அவர்களின்‌ உரையில்‌ தீனைப்‌ பற்றி எதுவும்‌ பேசமாட்டார்கள்‌. ஏனென்றால்‌ தீனைப்‌ பற்றிப்‌ பேசுவதாகக்‌ கூறிவிட்டு அல்‌ குர்‌ஆனையும்‌ சுன்னாவையும்‌ பேசாமல்‌ அவர்களின்‌ முகவரியில்லாத பெரியார்களின்‌ கதைகளைக்‌ கூறிக்‌ கொண்டிருப்பார்கள்‌.

எனவே, இவர்கள்‌ அல்லாஹ்வின்‌ தீனுக்காக (மார்க்கத்துக்காக) எதனையும்‌ செய்யவில்லை. மாறாக, தீனுக்கு முரணாகவுள்ள ரித்‌அத்துகளையும்‌ ஷிர்க்குகளையும்‌ வளர்ப்பார்கள்‌. இதுதான்‌ தப்லீக்‌ ஜமாஅத்‌ என்ற இயக்கத்தில்‌ தீனை வளர்க்கும்‌ அவர்களின்‌ வழிமுறையாகும்‌.

இவர்கள்‌ தீன்‌ என்று கூறினாலும்‌ குர்‌ஆனையும்‌ சுன்னாவையும்‌ மக்களுக்குக்‌ கற்றுக்‌ கொடுக்க மாட்டார்‌கள்‌. தீனின்‌ பெயரால்‌ இவர்கள்‌ மக்களை  ஏமாற்றுகிறார்கள்‌. அது மட்டுமின்றி இவர்கள்‌ பள்ளிவாசல்களில்‌ அல்லாஹ்வின்‌ தீனைச்‌ சொல்ல யாருக்‌கும்‌ இடமளிக்க மாட்டார்கள்‌. பள்ளிவாசல்களில்‌ அல்லாஹ்வின்‌ வேதத்தைத்‌ திறந்து மக்களுக்கு அதன்‌ விளக்கத்தைக்‌ கற்றுக்‌ கொடுக்கும்போது அதனைத்‌ தடுப்பவர்களில்‌ முன்னணியில்‌ நிற்பவர்கள்‌ தப்லீக்‌ ஐமாஅத்தைச்‌ சேர்ந்தவர்‌கள்தான்‌ என்பது நாம்‌ அனைவரும்‌ அறிந்தவிடயமாகும்‌.

அதே போன்று ஒரு இடத்தில்‌ நபியின்‌ சுன்னா உயிர்ப்‌பிக்கப்படும் போது அதைத் தடுப்பதற்கு வெறியோடு செயற்படுபவர்களும் இவர்கள்தான். இத்தகைய போக்குள்ள தப்லீக்‌ ஜமாஅத்‌ நாங்கள்‌ தீனைப் பிரச்சாரம்‌ செய்ய வருகிறோம்‌ என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. பூமியில்‌ அல்லாஹ்வின்‌ தீன்‌ உயிர்ப்‌பிக்கப்‌டுவதைத்‌ தடுக்கும் ‌கூட்டம் ‌எவ்வாறு தீனை வளர்க்கும்‌ கூட்டமாக முடியும்‌?

குர்‌ஆனும்‌ சுன்னாவையும்‌ மக்களுக்குக்‌ கற்றுக்‌ கொடுப்பதை இவர்கள்‌ தடுப்பதன்‌ மூலம்‌ இவர்கள்‌ பிரச்சாரம்‌ செய்யும்‌ தீன்‌ குர்‌ஆனுக்கும்‌ சுன்னாவுக்கும்‌ அப்பாற்பட்டதொரு தீனாகத்தான்‌ இருக்க வேண்டும்‌. அனைத்து இடங்களிலும்‌ தீனைத்‌ தடுப்பதுதான்‌ தப்லீக்‌ ஜமாஅத்தின்‌ வரலாறாகும்‌.

இவர்கள்‌ தீனைக்‌ கற்றதுமில்லை, அதனைத்‌ தெரிந்ததுமில்லை, அதனைப்‌ பிரச்சாரம்‌ செய்ததுமில்லை, தீனின்‌ பிரச்சாரத்தைச்‌ செவிமடுத்து மெளனமாக இருந்ததுமில்லை. இவர்கள்‌ தீனைக்‌ குழப்ப வந்த தீனின்‌ எதிரிகள்‌. இவர்கள்‌ தீனைச்‌ சுமந்தவர்கள்‌ என்பதை நாம்‌ எவ்வாறு ஏற்றுக்‌ கொள்ள முடியும்‌?

இவர்கள்‌ சுமந்துள்ள தீன்‌ நாம்‌ சுமந்திருக்கும்‌ தீனல்ல. நாம்‌ சுமந்திருக்கும்‌ தீன்‌ குர்‌ஆனும்‌ சுன்னாவுமாகும்‌. குர்‌ஆனையும்‌ சுன்னாவையும்‌ நாம்‌ பகிரங்கமாக மக்களிடம்‌ பிரச்சாரம்‌ செய்வோம்‌. அதனைப்‌ பற்றிய தெளிவை மக்களிடம்‌ எத்தி வைப்போம்‌. குர்‌ஆன்‌, சுன்னா ஆகியவற்றைக்‌ கொண்டு நாம்‌ செயற்படுவோம்‌. அவ்வாறு செயற்பட வைத்தற்காக நாம்‌ அல்லாஹ்வை புகழ்வோம்‌.

இன்னும்‌, குர்‌ஆனுக்கும்‌ சுன்னாவுக்கும்‌ எதிராக வருகின்ற கருத்துக்களுக்கு நாம்‌ மறுப்பை முன்வைப்போம்‌. அதில்‌ நாம்‌ அர்ப்பணிப்போம்‌ எமது முழு வாழ்வையும்.‌ ஆனால்‌ இதற்கு மாற்றமான தப்லீக்‌ ஜமாஅத்‌ குர்‌ஆனுக்காகவும்‌ சுன்னாவுக்காகவும்‌ தங்களின்‌ வாழ்வில்‌ எதனை அர்ப்பணித்தார்கள்‌?

தப்லீக்‌ ஜமாஅத்‌ என்ற கூட்டத்தைப்‌ பொருத்தவரை அவர்களின்‌ கூட்டத்தை வளர்ப்பதுதான்‌ அவர்களின்‌ தீனாகும்‌. நாங்கள்‌ அல்லாஹ்வின்‌ பாதையில்‌ செல்கிறோம்‌ என்று அவர்கள்‌ கூறுகிறார்கள்‌. வீடுகளுக்கும்‌ காடுகளுக்கும்‌ சுற்றுவது அல்லாஹ்வின்‌ பாதையில்‌ செல்வதாகுமா? கால்நடைகளும்‌ அவ்வாறுதான்‌ சுற்றித்‌திரிகின்றன. அல்‌ குர்‌ஆனையும்‌ சுன்னாவையும்‌ பின்பற்றுவதும்‌ அதன்‌ விளக்கங்களை மக்களுக்குக்‌ கற்றுக்‌ கொடுப்பதுமே அல்லாஹ்வின்‌ பாதையில்‌ செல்வதாகும்‌. இதில்‌ எதனையும்‌ விளங்காத இவர்கள்‌ எவ்வாறு அல்லாஹ்வின்‌ பாதையில்‌ செல்வதாக அமையும்‌?

தாடியை வளர்த்து ஜுப்பாவை அணிந்து நபியின்‌ தோற்றத்தைக்‌ காட்டி நபியின்‌ சுன்னாவை இழிவாக்கும்‌ கூட்டமே தப்லீக்‌ ஜமாஅத்‌ என்ற கூட்டமாகும்‌. அல்லாஹ்வின்‌ தூதரையும்‌ அவரது சுன்னாவையும்‌ இழிவாக்க வந்தவர்களுக்கு நாம்‌ ஆதரவளிக்க முடியாது.

நபியின்‌ தோற்றத்தைக்‌ காட்டுபவர்கள்‌ அந்த நபியின்‌ பண்புகளைக்‌ கொண்டவர்களாக இருக்க வேண்டும்‌. மாறாக, நபியின்‌ தோற்றத்தைக்‌ காட்டி நபியின்‌ எதிரிகளாக வாழக்‌ கூடாது.

இஸ்லாத்தின்‌ ஐந்து தூண்களைப்‌ புறக்கணித்து ஈமானின்‌ ஆறு தூண்களைப்‌ புறக்கணித்து தங்களின்‌ ஜமாஅத்தின்‌ ஆறு நம்பரை நம்பியவர்கள்தான்‌ நேர்வழியில்‌ இருப்பவர்கள்‌ என்று ஒரு புதிய மார்க்கத்தையே இவர்கள்‌ உருவாக்கி விட்டார்கள்‌. யார்‌ அந்த ஆறு நம்பர்களை நம்பினார்களோ அத்தகையவர்களுக்கு தப்லீக்‌ ஜமாஅத்‌ என்ற கூட்டத்தில்‌ அந்தஸ்தும்‌ மதிப்பும்‌ வழங்கப்படும்‌.

அல்லாஹ்வின்‌ வேதத்தை ஒருபுறம்‌ ஒதுக்கித்‌ தள்ளிவிட்டு தங்களுக்கென தஃலீம்‌ என்ற நூலை இவர்கள்‌ வேத நூலாக அமைத்துக்‌ கொண்டார்கள்‌.

இவ்வாறு மார்க்கத்துக்கு பல அநியாயங்கள்‌ செய்கின்ற தப்லீக்‌ ஜமாஅத்‌ என்ற இயக்கத்தின்‌ எந்தவொரு நடவடிக்கைக்கும்‌ நாம்‌ ஒத்துழைப்பை வழங்குவது கூடாது என்ற வகையில்‌ அவர்களின்‌ இஜ்திமாவில்‌ கலந்து கொள்வதும்‌ அனைத்து முஸ்லிம்களுக்கும்‌ ஹராமாகும்‌.

பாவத்துக்கும்‌ பகைமைக்கும்‌ ஒத்துழைப்பை வழங்க வேண்டாம்‌ என்ற இறைவசனத்தின்‌ அடிப்படையில்‌ இஜ்திமாவிற்கு ஒத்துழைப்பை வழங்குவது ஹறாமாகும்‌.

தாடியும்‌ ஜுப்பாவும்‌ மாத்திரமே எமது மார்க்கத்தின்‌ அடயாளமாகாது. அன்று அபூ ஜஹ்லும்‌ கூட தாடி வைத்திருந்தான்‌. ஜுப்பா அணிந்திருந்தான்‌. எங்கள்‌ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்‌ அவர்களின்‌ அடையாளமாகவே தாடியும் ‌ஜுப்பாவும்‌ அமைந்துள்ளதே தவிர மார்க்கத்தினுள்‌ அட்டகாசங்கள்‌ புரிவதற்கல்ல.

-அஷ்ஷெய்க் அபூ அப்துர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி

أحدث أقدم