தர்க்கவியல் துறையில் பேர் போன இமாம் ஸைஃபுத்தீன் அல் ஆமிதியின் இறுதி நிலை நாஸ்தீகம் என்றால் நம்ப முடிகின்றதா?
ஷாம் தேசத்தின் ஊர்களில் ஒன்றான தியார் பனீபக்ர் மாகாண ஆமித் கிராமத்தில் (ஹிஜ்ரி 551- 631) பிறந்து வாழ்ந்து வந்த இவர் முரண்பாடான தனது கருத்துக்களால் அங்கிருந்து தப்பியோடி இறுதியில் எகிப்தில் வாழ்ந்து மரணித்தார்.
இவர் அரபு மொழி, தர்க்கவியல், ஆய்வு போன்ற துறைகளில் ஒரு விற்பன்னராக விளங்கிய ஒருவர்.
ஆரம்ப காலங்களில் ஹன்பலி மத்ஹப் சார்பாளராகவும், பிற்பட்ட காலங்களில் ஷாஃபிஈ மத்ஹப் சார்பாளராவும் வாழ்ந்த இவர், அக்கால அறிஞர்களிலேயே மிகவும் சிறந்த மதி நுட்பம் கொடுக்கப்பட்ட ஒருவர் என்றும் போற்றப்படுகின்றார்
20 ற்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய இவரின் தொகுப்புரைகளில் பல أصول الفقه ஃபிக்ஹ் சட்டவாக்கம் சார்ந்ததாகவும் சில நூல்கள் தவறான இறையியல் பார்வை கொண்டவையாகவும் காணப்படுகின்றன.
இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் இவரது நூல்களில் உள்ள ஃபிக் சட்டத்துறைக்கான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுவது உண்மையே.
இவர் பற்றிய இமாம்களான இப்னுஸ் ஸலாஹ்,
அத்தஹபி, இப்னு ஹஜர் போன்ற அறிஞர்களில் கருத்துக்கள் நம்மைத் தூக்கி வாரிப்போடுவதாக இருக்கின்றன.
அதைப் படித்த பின்னர் பீ.ஜே. ரவூஃப் தாத்தா, ஜமாலீ, பின் நவீனத்துவோர் போன்றோர் எம்மாத்திரம் என சிந்திக்கத் தூண்டுகின்றன.
அவர் தொடர்பான இமாம்களின் சில கருத்துக்கள் படிப்பினைக்காக இங்கு தரப்படுகின்றன.
இமாம் தஹபீ ரஹி
وقال عنه الحافظ الذهبي في "المغني في الضعفاء" (1\ 293): "تارك للصلاة، شاكٌّ في دينه. نفوه من دمشق من أجل اعتقاده».
தனது الضعفاء என்ற நூலில் ஆமிதி
தொழுகையை விடுபவர்,
மார்க்கத்தில் சந்தேகத்தோடு இருந்தவர்,
அவரது தீய நம்பிக்கை கோட்பாட்டிற்காக திமஷ்கில் இருந்து நாடு கடத்தப்பட்டார். (அள்ளுஅஃபா).
ஸியர் என்ற தனது நூலில் ; இமாம் தஹபி அவர்கள் தனது உஸ்தாதுகளில் ஒருவர் வழியாக அறிவிக்கின்ற போது:
ذكر الذهبي في السير (22/ 366) عن شيخه تقي الدين سليمان بن حمزة عن شيخه ابن ابي عمر (ابن قدامة صاحب الشرح الكبير) قال:كنا نتردد إلى السيف فشككنا هل يصلي أم لا؟ فنام فعلّمنا على رجله بالحبر فبقيت العلامة يومين مكانها فعلمنا أنه ما توضأ نسأل الله السلامة في الدين.
நாம் சைஃப் ஆமிதியிடம் சென்றுவரும் வழக்கம் உடையவர்களாக இருந்தோம். அவர் தொழபவரா என்பது பற்றி எமக்கு சந்தேகம் ஏற்பட்ட போது ஒரு நாள் அவரது காலில் பேனா ஒன்றினால் கீறி விட்டுப் பார்த்த போது இரண்டு தினங்கள் அந்த அடையாளங்கள் அழியாது அதில் இருந்தன, அப்போது நாம் அவர் தொழுவதில்லை என அறிந்து கொண்டோம். அல்லாஹ்தான் மார்க்கத்தில் நமக்கு ஈடேறத்தைத் தர வேண்டும் எனக் குறிப்பிடுகின்றார்கள். (அஸ்ஸியர்)
இமாம் இப்னு ஹஜர் ரஹி அவர்கள் ஸைபுல் ஆமிதி பற்றி தனது லிஸானுல் மீஸானில்:
وقال عنه في الميزان (3\ 358): «قد نفي من دمشق لسوء اعتقاده. و صَحّ عنه أنه كان يترك الصلاة. نسأل الله العافية».
அவரது நம்பிக்கையில் உள்ள கோளாறினால் அவர் திமஷ்கில் இருந்து நாடு கடத்தப்பட்டார் என்றும் அவர் தொழுகையை விடுபவர்(தொழாதவர்) என்ற செய்தி சரியானதுதான், அல்லாஹ்விடம் ஈடேற்றத்தைத் கேட்கின்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.(லிஸானுல் மீஸான்)
இப்னு கல்லிகான் போன்ற அறிஞர்கள் ஆமிதியின் நம்பிக்கை கோட்பாடு நல்லதாகவே இருந்தது எனக் கூறியது “நகைப்புக்கு இடமானது” என்ற கருத்தோடு,
மேற்படி கருத்துக்கள் ஆமிதீ மீதான பொறாமை காரணமாக கூறப்படுவது என்பது வழமை போல மத்ஹபு வெறி தலைக்கேறியோரின் வாதங்கள் என்பதோடு நாம் எழுதிய கருத்துக்கள் பற்றி அன்பர்கள் கவனத்தில் கொள்வதோடு அது பற்றியும் தேட வேண்டும் என்பது நமது அவாவாகும்.
குறிப்பு:
குர்ஆன் ஹதீஸைப் படிக்காமல்
தர்க்கவியலை மாத்திரம் படிப்போரை செருப்பால் அடித்து, பொதுமக்களின் சந்தைகள் தோறும் சுற்றி வலம்வர வேண்டும் என இமாம் ஷாஃபிஈ ரஹி கூறியதன் பொருள் தர்க்கவியலால் ஏற்படும் இவ்வாறான விளைவுகளை எதிர்பார்த்தே .
இஸ்லாமிய சான்றாதாரங்களில் சந்தேகங்களை பகுத்தறிவிற்கும் நடைமுறைக்கும் முரணாக இருப்பதாக காரணம் கூறி இறைத்தூதரும் அவர்களின் அருமைத் தோழர்களும் நம்பியவைகளை மறுப்போர் அல்லது அவற்றிற்கு தவறான விளக்கம் தருவோர் இறுதியில் ஏதோ ஒருவகையில் நாஸ்தீக வாசலில் நின்று பிறரையும் அழைத்த நிலையில் மரணிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். (அல்லாஹ் ஹிதாயத் நாடியோரைத் தவிர)
نسأل الله السلامة والثبات في دينه سبحانه وتعالى.
எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி