இறைத் தூதர்களின் அடிப்படைப் போதனைகளுக்கு மாறாக மனிதர்களால் தோற்றுவிக்கப்படுகின்ற போதனைகள் அவர்களின் பின் வரும் தூதர்களால் உணர்த்தப்படும் .
இது தூதுத்துவத்தின் இயல்புப் பண்புகளில் ஒன்றாகும்.
இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் இறையிற் கோட்பாடுகளை நபித் தோழர்களின் மரணத்தின் பின்னால் வந்த பல குழுக்கள் பல கோணங்களில் சிதைத்துள்ளன.
அவற்றிற்கான தெளிவை நல்வழி நடந்த நபித்தோழர்கள், இமாம்களின் வழியில் நின்று ஒரு முஸ்லிம் தேட வேண்டும்.
அவர்களின் வழியில் இருந்து நெறிபிறழ்ந்தோரின் வழிகளில் நின்று நேர்வழி தேடுவது இருளில் நின்று கொண்டு பிரகாசம் தேடுவதை ஒத்ததாகும்.
உதாரணமாக வானங்கள் பூமியைப் படைப்பதற்கு முன்பிருந்தே அல்லாஹ் தனது அர்ஷ் எனும் சிம்மாசனத்தின் மீதிருந்தவாறு ஆட்சி செய்வதை நபித்தோழர்கள் ஒருவர் கூட மனித இருப்புடன் ஒப்பிட்டு விளங்கியது கிடையாது; மாறாக அதனை வந்திருப்பது போன்றே வெளிப்பாடையாக நம்பிக்கை கொண்டனர்.
இது போலவே அஸ்மா ஸிஃபாத் தொடர்பான அனைத்து பெயர்கள் பண்புகளிலும் நடந்து கொண்டனர்.
அந்த வழிமுறையைத்தான்இமாம்களான இமாம் மாலிக், ஷாஃபிஈ , அஹ்மத், புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா அபூசுர்ஆ, இப்னு கஸீர் போன்ற ஆரம்ப கால மற்றும் பிற்கால அறிஞர்கள் பலர் சரி கண்டனர் .
வஹ்ததுல் உஜூதின் நுழைவாயிலாக அமைந்த அஷ்அரிய்யாக்கள்
இமாம் ஷாஃபிஈ (ரஹி) வின் ஃபிக்ஹ் சிந்தனையை (மத்ஹபை) பின்பற்றும் அஷ்அரிய்யா என்ற அகீதா பிரிவினர் அகீதாவில் இமாம் ஷாஃபி (ரஹி) அவர்களை பெயர் கூறாத வஹ்ஹாபியாக நோக்குகின்றனர். அவர்களை அவர்கள் பின்பற்றுவதில்லை.
மாறாக ஜஹ்மிய்யா,
குல்லாபிய்யா என்ற சிந்தனைப் பிரிவினரையே பின் பற்றுகின்றனர்.
அவர்கள் அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளில் வழிதவறிய பிரிவினராகும்.
அவர்களே தமது கற்பனை மூலம்
அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளை அழித்தொழித்தவர்கள்.
அவர்களின் சிந்தனையைப் பிரதிபலிப்பதன் காரணமாகவே உலகிலுள்ள அஷ்அரிய்யாக்கள் அல்லாஹ் அர்ஷிலும் இல்லை; அரிசியிலும் இல்லை எனக் கூறி அல்லாஹ்வை எங்கும் உள்ளவனாகவும் எங்கும் இல்லாதவனாகவும் மாற்றினர்.
இது இமாம் ஷாஃபிஈ ரஹி அவர்களின் அகீதாக் கோட்பாட்டை அடியோடு வேரறுப்பதாகும்.
அதன் மறு அங்கமாகவே
وحدة الوجود
என்ற கோட்பாடு அதில் இருந்து சற்று வேறு பட்டு படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ், அனைத்தும் அவனது வெளிப்பாடு என முழக்கமிட்டது.
எல்லாம் அவனே கோட்பாடும் அதன் சொற் பிரயோகங்களும் ஸஹாபாக்கள், அவர்கள் வழிநடந்த இமாம்கள், சரியான சுன்னத் ஜமாத் கொள்கை நடக்கின்ற முஸ்லிம்களின் கொள்கைக்கு மாற்றமான கோட்பாடாக இருப்பதோடு மாத்திரமின்றி, இஸ்லாமிய வரலாற்றில் மிகவும் பிற்பட்ட காலங்களில்
கிரேக்க, மற்று இந்து நாகரீக கோட்பாடுகளில் இருந்து காப்பி செய்யப்பட்ட ஒரு நாஸ்தீக கொள்கையாக துறவரம், சூஃபித்துவம் என்ற பெயரில் மார்க்க அறிவில் குறைந்த ஈராக், எகிப்திய பாமரர்கள் மத்தியில் ஆரம்ப காலங்களில் பரவி இருக்கின்றது என்ற உண்மையை அது பற்றிய வாசிப்பு நமக்கு உணர்த்துகின்றது.
எல்லாம் அவனே! அனைத்தும் அவனே என்ற கோட்பாட்டை இஸ்லாமிய கோட்பாடாக முன்வைப்போர் தமக்கென சில குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களை பிழையான விளக்கம் தந்து,
ஆதாரமாக காட்டியே மக்களை வழிகெடுக்கின்றனர்
என்பதை அவதானிக்க முடிகின்றது.
இவர்களின் இந்த போக்கை ஆரம்ப காலங்களில் பிரச்சாரம் செய்த அபூ யஸீத் அல்பிஸ்தாமி, இப்னு அரபி, அபூதாலிப் அல்மக்கி, அஷ்ஷஃரானி, மன்சூர் அல்கல்லாஜ் போன்றவர்களின் காலத்தில் நரகவாதிகளான ஃபிர்அவ்ன், ஷைத்தான், ஹாமான் போன்றோரும் முஃமின்களே என்ற விபரீத முடிவில் முடிந்துள்ளது .
இதற்கு பிரபலமான சூஃபிகளின் கூற்றுக்கள் பல சுன்னா அறிஞர்களால் ஆதாரமாக முன்வைக்கப்பட்டுள்ளன.
அல்லாஹ்வை குரங்காக, கருப்பு நிற மனிதனாக, குட்டை மனிதனாக, நினைக்கும் படி இலங்கை சூஃபி ஒருவர் ஆற்றிய உரையின் வீடியோவை நீங்கள் அவதானித்திருக்கலாம்.
ஆம்! முற்கால சூஃபிகளின் ஞானிகளில் ஒருவரகிய பஹாவுத்தீன் அல்பைத்தார் என்ற அத்வைதியின் பின்வரும் பாடல் வரிகள் அல்லாஹ்வை எவ்வாறு கேவலப்படுத்தி சித்திரிக்கின்றது என்பதை பார்த்து அத்வைதத்தை தூர ஒதுக்கிக் கொள்ளுங்கள் .
يقول محمد بهاء الدين البيطار أحد مشايخ الصوفية:
وما الكلب والخنـزير إلا إلهنا *** وما الله إلا راهب في كنيسة" (النفحات القدسية) .
நாயும் பன்றியும் நமது -இலாஹு - தெய்வங்- களே!
கோவில் பூசாரி என்பவரும் அல்லாஹ் தவிர இல்லை.
அதாவது அவரும் அல்லாஹ்தானாம்.
أعوذ بالله من الشيطان الرجيم.
.
மேலதிக தகவல்களுக்கு பின்வரும் இணைய
தளத்தில் வாசிக்கவும்.
கவனிக்க :
இலங்கையில் ஞானபிதாக்கள் பேசுகின்ற இது போன்ற குஃப்ரை பொதுமக்கள் தெளிவாகப் பேச இன்னும் சில ஆண்டுகள் போகலாம்.
சிந்தனைக்கு:
அல்லாஹ் அல்குர்ஆனில்
"فَلِلَّهِ الْحَمْدُ رَبِّ السَّمَوَاتِ وَرَبِّ الْأَرْضِ رَبِّ الْعَالَمِينَ (36) (الجاثية).
வானங்களுக்கும் இரட்சகனான - பூமிக்கும் இரட்சகனான - அகிலத்தாருக்கெல்லாம் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தானது. ( அல்ஜாஸியா-36 )
எனக் குறிப்பிட்டு தன்னை அகிலங்களின் அதிபதி,
படைப்புக்களில் கண்ணுக்குத் தெரியாத உள்ளத்தால் நம்பப்படும் தனித்தவன் எனக் கூறி விட்டான்.
அந்த அல்லாஹ் படைப்புகள் அல்ல; மாறாக அவன் தனித்துவமான உயர்ந்த பண்புகளைக் கொண்ட அர்ஷின் இரட்சகனாவான்.
குர்ஆனில் அவனைப் பற்றி இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதைப் பற்றி நிதானமாக சிந்திக்கின்ற சீரான சிந்தனை உள்ள அத்வைத சித்தாந்த சகதியில் புகுந்தவர்கள் கூடிய கதியில் தெளிவு பெறுவர். இன்ஷா அல்லாஹ்.
எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி