அர்கானுல் ஈமான் - ஈமானின் சட்டங்கள்

அர்கானுல் ஈமான் - ஈமானின் சட்டங்கள்

தீனின் படித்தரங்கள் அல்லது இஸ்லாமிய மார்க்கத்தின் படித் தரங்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு நாள் நாங்கள் முஹம்மது (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்து கொண்டிருந்தோம், அப்பொழுது ஒரு மனிதர் மிகத் தூய்மையான வெண்மை நிறம் கொண்ட ஆடை அணிந்தவராகவும், கருமை நிறம்கொண்ட தலை முடியைக் கொண்டவராகவும் எங்கள் முன் தோன்றினார். அவர் ஒரு பயணியைப் போன்றும் தோற்றமளிக்கவில்லை. இருந்த போதிலும், எங்களில் அவரை எவரும் புரிந்து கொள்ள இயலவில்லை. வந்த அந்த மனிதர் முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கி உட்காந்தார். அவரது இரண்டு முழங்கால்களும் முஹம்மது (ஸல்) அவர்களுடைய முழங்கால்களுடன் ஒட்டிக் கொண்டிருந்தன, மேலும், அவரது இரண்டு கைகளையும் முஹம்மது (ஸல்) அவர்களின் தொடையின் மேல் வைத்துக் கொண்டு இவ்வாறு கேட்டார். முஹம்மது அவர்களே! இஸ்லாம் என்றால் என்ன? என்று சொல்லுங்கள் என்றார். இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது அவர்கள் அந்த அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்று சான்று பகர்ந்து, தொழுகை, ஜகாத், ரமளான் மாதத்தில் நோன்பு இருப்பது, இயலுமானால் அல்லாஹ்வின் இல்லமான மக்காவுக்குச் சென்று ஹஜ்ஜுச் செய்வது ஆகும் என்று கூறினார்கள். அதற்கு நீர் உண்மையையே கூறினீர் என்று அந்த மனிதர் கூறினார். அவர் அவ்வாறு வினவியது குறித்தும், அவரே உண்மைப்படுத்தியது குறித்தும் நாங்கள் ஆச்சரியமடைந்தோம.

மேலும் அந்த மனிதர் கேட்டார் : ஈமான் என்றால் என்ன? எனக்குச் சொல்லுங்கள். அதற்கு, அல்லாஹ்வை (இறைவனாக) நம்பி ஏற்றுக் கொண்டு, மேலும், அவனது மலக்குமார்கள் (வானவர்கள்), அவனது வேதங்கள், அவனது தூதர்கள், மற்றும் மறுமை நாளையும் நம்பி, மற்றும்  நன்மையும், தீமையும் இறைவனின் நாட்டத்தின் பால் அமைந்தவை என்பதையும் (களா கத்ர்) நம்பி (அதில் உறுதியாக) இருப்பது என்று கூறியவுடன், கேள்வி கேட்ட அந்த மனிதர், (முஹம்மதே) நீர் உண்மையையே சொன்னீர் என்று கூறினார். மேலும் அவர், இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு, நீர் அல்லாஹ்வைப் பார்க்கா விட்டாலும், அவனை நாம் பார்ப்பதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு இபாதத் (வணக்கம் அல்லது நற்செயல்கள்) செய்வது என்றும், நீங்கள் அவனைப் பார்க்காத போதும், மெய்யாகவே அவன் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று கூறினார்கள்.

மேலும், அந்த மனிதர் இறுதி நாள் எப்பொழுது என்பது குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்று கூறினார். இதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர் என்றார்கள். (அல்லாஹ் அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். பெருமானார் (ஸல்) சொன்னதாவது: அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். அப்போது காலணிகளில்லாத, ஆடைகளற்ற, ஆதரவற்ற கூட்டத்தினர் ஆடம்பரமான கட்டிடங்களை கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதை பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு பெருமானார் (ஸல்) அவர்கள், உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள் என்றேன் நான். பெருமானார் (ஸல்) அவர்கள், அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுக் தருவதற்காக வந்தார்கள் என்று கூறினார்கள். - முஸ்லிம்.

மேலே நாம் பார்த்த அந்த ஹதீஸானது, இஸ்லாமிய மார்க்கத்தில் தீனில் மூன்று வித படித்தரங்கள் அல்லது நிலைகள் இருப்பதை நமக்கு அறிவிக்கின்றது. அவையாவன : இஸ்லாம், ஈமான், இஹ்ஸான் ஆகியவைகளாகும். ஒவ்வொரு நிலையும் அவற்றிற்கே உரிய தனித்தனி கொள்கைகள் அல்லது விதிமுறைகள் அல்லது பிரிவுகளைக் கொண்டுள்ளன.

முதல் படித்தரமான இஸ்லாம் என்பது, 

5 தூண்களை அல்லது படித்தரங்களை அல்லது விதிமுறைகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. அதாவது, ஈமான் கொள்வதற்கு அவசியமான சத்தியப் பிரமாணமானது, 

1. லாயிலாஹ இல்லல்லாஹ் (அதாவது, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றார் சாட்சியமளித்து சத்தியம் செய்து ஈமான் கொண்டு) மொழிவதன் மூலம் ஒருவர் இஸ்லாத்தில்நு ழைகின்றார். இந்த அடிப்படை ஒருவர் இஸ்லாத்தில் நுழைவதற்குத் தேவையானதொன்றாக இருக்கின்றது. 

2. பின் அவர் ஐங்காலத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும், 

3. தன்னுடைய வருமானத்திலிருந்து ஏழை வரியாகிய ஜகாத்தைக் கொடுக்க வேண்டும், 

4. ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றும், 

5. தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையாவது (பணம், உடல்நலம்) இயலுமானால் ஹஜ்ஜுச் செய்ய வேண்டும்.

இரண்டாவது படித்தரம் ஈமான் என்பது :

இது 6 விதிமுறைகளைக் கொண்டது. இது பற்றி நாம் பின்பு விரிவாகப் பார்ப்போம்.

மூன்றாவது படித்தரம் இஹ்ஸான் என்பது:

ஒருவர் அல்லாஹ்வைப் பார்க்கா விட்டாலும், அவனைப் பார்ப்பது போல் அவனுக்கு வணக்கம் செலுத்துவது, அதாவது, ஒரு முஸ்லிமானவன் தன்னுடைய இறைவனைத் தன்னுடைய கண்களால் காணா விட்டாலும், அல்லாஹ்வினுடைய அந்த அச்சம் அவனது உள்ளத்தில் எப்பொழுதும் குடி கொண்டிருக்க வேண்டும், மேலும், அவன் தன்னுடைய மனதில் தான் அல்லாஹ்வைப் பார்க்கா விட்டாலும், தான் எங்கிருந்தாலும் அல்லாஹ் தன்னுடைய அனைத்து அலுவல்களையும் கவனித்துக் கொண்டிருக்கின்றான் என்றும் எண்ணம் கொள்ள வேண்டும். இத்தகைய எண்ணம் தான் ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய அதிகபட்ச பண்பாக, மிக உயர்ந்த நிலையில் காணப்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

இவ்வாறு இதனடிப்படையில் இந்த மூன்று நிலைகளையும் ஏற்றுக் கொண்டதன் விளைவாக மட்டும், ஒரு முஸ்லிம் முஃமினாக (நம்பிக்கையாளராக) ஆகி விடுவதில்லை. மேலும், ஒவ்வொரு நம்பிக்கையாளரும் முஹ்ஸின் (அதிக உள்ளச்சமுடையோராக) ஆகி விடுவதுமில்லை.

ஈமானின் நிலைகள் : 

ஒரு முஸ்லிம் சொர்க்கச் சோலையில் நுழைவதற்கு, ஈமானின் அடிப்படைகளாக அமைந்துள்ள கீழ்க்கண்ட இந்த 6 நிலைகளையும், எந்தவித சந்தேகங்களுக்கும் இடங்கொடமல் ஏற்றுக் கொண்டு, அதனைத் தன் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்திக் கடைபிக்கவும் வேண்டும். அவையாவன :

1.      அல்லாஹ்வை நம்புதல்

2.     மலக்குமார்களை (வானவர்களை) நம்புதல்

3.     வேதங்களை நம்புதல்

4.     இறைத்தூதர்களை நம்புதல்

5.     இறுதி (மறுமை) நாளை நம்புதல்

6.     விதியை நம்புதல்

ஆகியவைகளாகும்.


1.    அல்லாஹ் என்பவன் யார்?

அல்லாஹ் என்ற பெயரானது உண்மையான இறைவனாக இருக்கின்றவனான அந்த இறைவனாகிய அல்லாஹ்வுக்குரிய பெயராகும். அவனை யாரும் படைக்காமலேயே, அவனாகவே எழுந்தருளியிருப்பவன். அவன் தன்னை (மக்கள்) அழைப்பதற்கென்றே அனைத்துத் தகுதிகளையும், அதில் எந்தவித குறைகளுமற்ற, மிகச் சரியான பண்புப் பெயர்களைக் கொண்டே அந்த அல்லாஹ் தனக்குப் பெயரிட்டுள்ளான். அல்லாஹ் அவன் தனித்தவன். அவனுக்கு மனைவிகள் இல்லை, மக்கள் இல்லை, அவனுக்குத் துணைகள் இல்லை, அவனுக்கு இணைகளும் (சமமானவர்களும்) இல்லை. அவன் தனித்தவன். அவனே இந்த அகில உலகத்தையும், பிரபஞ்சங்களனைத்தையும் படைத்துப் பரிபாளித்து, இரட்சித்து, உணவளித்து, பாதுகாத்துவரக் கூடியவனான ஏக இறைவன் (ரப்) ஆவான்.

ஒவ்வொரு உயிரியும் அந்த அல்லாஹ்வினுடைய தனித்துவத்தையும், அவனது தெய்வீகத் தன்மைiயும், மேலும் ரூபூபிய்யா என்று சொல்லக் கூடிய அவனது தனித்துவத்தை, அவனது பண்புகளை, அவனது தன்மைகளைப் பிரதிபளிக்கக் கூடிய பண்புப் பெயர்களையும் உள்ளார்ந்த விதத்தில் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றன. அவனை சந்ததியாக யாரையும்  பெறவும் இல்லை, அவனும் யாரையும் சந்ததியாகப் பெற்றிருக்கவும் இல்லை. அவனைப் போல எதுவும் இல்லை. அவன் ஒருவன், அவன் தனித்தவன், அவன் கண்களுக்குப் புலப்படாதவன். அவன் அனைத்திலும் ஆற்றல் பெற்ற எல்லாம் வல்ல இறைவன். மேலும் அவன் அனைத்தின் மீதும் பேராற்றல் பெற்றவன் அனைத்தையும் - அவற்றின் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் அறியக் கூடியவன்.

அவனது ஞானம் அனைத்தையும் சூழ்ந்திருக்கின்றது, அதாவது வெளிப்படையாகத் தெரிகின்ற மற்றும் மறைவாக இருக்கின்ற அனைத்தையும் அது சூழ்ந்திருக்கின்றது. அவன் தன்னுடைய ஞானத்தைக் கொண்டு, தன்னுடைய படைப்பினங்களைக் குறித்து அதனைச் சுற்றிச் சூழ இருந்து அறிகின்ற மகா வல்லவனாகவும் இருக்கின்றான்.

இந்த உலகில் கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரிகின்ற அல்லது மறைவாக இருக்கின்ற அத்தனையும் அவனது முடிவு, அவனது திட்டம், அவனது தீர்ப்பு ஆகியவற்றைக் கொண்டே அல்லாமல், வேறு எதுவும் அதன் மீது நிகழ்வதில்லை. அவன் எதனைக் கொண்டு தீர்ப்புச் செய்கின்றானோ அது அங்கே அதன் மீது நிகழ்ந்து விடும், எதன் மீது அவனது தீர்ப்பு இறங்கவில்லையோ, அதன் மீது எதுவும் அங்கே நடைபெறாது. அவனது கட்டளைகளை எதுவும் மாற்றியமைக்க முடியாது அல்லது அதன் மீது தன்னுடைய தீர்ப்பைச் செலுத்தி விடவும் முடியாது. அவன் மிகப் பெரும் கருiணாயாளன், அவனது கருணையும், நீதியும் அனைத்து வஸ்துக்களின் மீதும் சூழ்ந்திருக்கின்றது. மேலும், இந்தப் பிரபஞ்சம் அமைதியாக இயங்குவதற்கு அவனது கருணை துணை நிற்கின்றது. அதில் எதுவும் அவனது கட்டளையை மீறிச் செயல்படுவதில்லை. இந்த பிரபஞ்சமனைத்திலும் உள்ள அவனது நிர்வாகத்தில், அவனது ஆட்சியில் யாருக்கும் பங்குமில்லை, அவனது படைப்பினங்களிடமிருந்து எந்தவிதத் தேவையுமற்றவனாக அவன் இருக்கின்றான்.

அவன் தான் இந்த உலகமனைத்திற்கும் ரப் (படைத்துப் பரிபாளித்து, இரட்சித்து, காத்து, உணவளிப்பவன்)ஆவான். எப்பொழுதெல்லாம் ஒரு நம்பிக்கையாளர் இடுக்கனில் அல்லது துன்பத்தில் தத்தளிக்கின்றாரோ அல்லது தேவையுடையவராக இருக்கின்றாரோ அப்பொழுது, அவன் தன்னுடைய ரப்பாகிய அல்லாஹ்வை அழைக்கட்டும், அப்பொழுது அந்த அல்லாஹ் தன்னுடைய அடியானுக்குப் பதிலளிக்கின்றான். அவன் ஏழு வானங்களுக்கும் அடுத்து, அர்ஷ் என்றழைக்கக் கூடிய தன்னுடைய ஆசனத்தில், தனக்கே உரிய பெருமை அல்லது மாட்சிமை மிக்க அந்த ஆசனத்தில் கம்பீரமாக நிலைபெற்றிருக்கின்றான்.

இமாம் அபு ஜஃபர் அத் தகவி அவர்கள் கூறுகின்றார்கள் :

அல்லாஹ்வினுடைய தனித்துவத்தை - ஓரிறைக் கொள்கையைப் பற்றி நாம் சொல்வது என்னவென்றால்,

அல்லாஹ் என்பவன் அவன்தனித்தவன், அவனுக்கு இணையாகவோ அல்லது துணையாகவே யாரும் இல்லை.

அபுல்-இஸ்ஸ் அல் ஹனஃபி என்பவர் இதைப் பற்றிய கருத்துத் தெரிவிக்கும் போது:

தவ்ஹீது என்பது இறைத்தூதர்களாக வந்தவர்கள் அனைவரும் தங்களது தூதுத்துவப் பணியை ஆரம்பிக்கும் பொழுது, தங்களுடைய பணியை தவ்ஹீது என்ற இந்த கொள்கையிலிருந்து தான் ஆரம்பித்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இது தான் ஒரு முஸ்லிமாக இருக்கக் கூடியவன், இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, முஸ்லிமாக வாழ ஆரம்பிக்கும் பொழுது தன்னுடைய இஸ்லாமிய வாழ்க்கையை இந்தத் தவ்ஹீது என்ற கொள்கையில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.

இந்த மனித சமுதாயத்திற்கு முதன் முதல் தூதராக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவரான நூஹ் (அலை) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

திண்ணமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார் : என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனைத்தவிர வேறு இறைவன் உங்களுக்கில்லை. (7:59)

இவ்வாறே அவரை அடுத்து வந்த அத்தனை நபிமார்களும், ரசூல்மார்களும் இந்த அழைப்பைத் தன்னுடைய மக்களுக்கு முதன் முதலாக விடுத்தார்கள். இதை அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :

நாம் ஒவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கின்றோம். (அத்தூதர் அச்சமூகத்தவர்களிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள். (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் ஷைத்தான்களாகிய அனைத்து) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்). (16:36)

மேலும் இறைவன் கூறுகின்றான் :

மேலும் (நபியே!) உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நிச்சயமாக என்னைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு நாயனில்லை| எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள் என்று அவர் பால் நாம் வஹீ அறிவித்தே தவிர நான் அனுப்பவில்லை. (21:25)

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வைத் தவிர வணங்கத்தக்க இறைவன் வேறு இல்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதராக  இருக்கின்றார்கள் என்றும் உறுதிப்படுத்தும் வரை, இந்த மக்களுடன் போர் புரிவதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன். (புகாரி, முஸ்லிம் இன்னும் பல)

ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் பொழுது, அவனது உள்ளுணர்வின் அடிப்படையில், தன்னைப் படைத்த இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவனாகவே படைக்கப்படுகின்றான். ஆனால் அவனது பெற்றோர்கள் தான் அவனை யூதர்களாகவோ அல்லது கிறிஸ்த்தவர்களாகவோ அல்லது நெருப்பு வணங்கிகளாகவோ மாற்றி விடுகின்றார்கள். (புகாரி, முஸ்லிம், இன்னும் பல)

மேலே உள்ள இந்த ஹதீஸில், (பிறந்த பின் தான்) மனிதர்கள் முஸ்லிம்களாக மாறுகின்றார்கள் என்று கூறவில்லை, ஏனென்றால், இறைவனது படைப்பிலேயே அனைவரும் முஸ்லிம்களாகவே பிறக்கின்றனர். ஆகவே, இறைவன் தன்னுடைய ஹதீஸ் குத்ஸியிலே இவ்வாறு கூறுகின்றான் :

நான் என்னுடைய படைப்பினங்களை என்னுடைய ஓரிறைத் தத்துவத்தை (அல்லாஹ்வைத் தவிர வணங்கத்தக்க இறைவன் வேறு யாரும் இல்லை என்பதை) ஏற்றுக் கொண்டு, நம்பிக்கை கொண்டவைகளாகவே படைக்கின்றேன். ஆனால், ஷைத்தான்கள் தான் அவர்களை வழிகெடுத்து விடுகின்றான். (முஸ்லிம்)

நிச்சயமாக, திருமறைக் குர்ஆன் முழுவதிலும் இறைவனின் ஓரிறைத் தத்துவத்தை மெய்ப்பிப்பதாகவும், அதனைக் சுட்டிக் காட்டுவதாகவுமே அமைந்துள்ளது. திருமறைக் குர்ஆனில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் அல்லாஹ்வின் திருப்பெயர்களையும், அவனது தன்மைகளையும் அல்லது அவனை வணங்குவதற்காக மக்களை நோக்கிய அழைப்பாகவும் மற்றும் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காது இருப்பதற்காகவும் மற்றும் அவனுக்கு இணை தெய்வங்களாகக் கருதக் கூடியவற்றை முற்று முழுவதுமாக தகர்த்தெறிந்து விட்டு, வணக்க வழிபாடுகளை அவனுக்கு மட்டுமே தனித்துவப்படுத்துவதற்காகவுமே அமைந்துள்ளன. அல்லது குர்ஆனானது தவ்ஹீதை முற்று முழுதாக கடைபிடித்தொழுகுவதற்குத் தேவையான ஏவல் மற்றும் விலக்கல்களை (ஹராம் மற்றும் ஹலால்) ஆகியவற்றைக் கொண்ட உத்தரவுகள் அல்லது தடைகள் ஆகியவற்றைப் பெற்றதாகவும் மற்றும் அந்த ஏக இறையோனாகிய அல்லாஹ்வைத் தன்னுடைய ரப்பாக ஏற்றுக் கொண்ட அடியார்களுக்கு இறைவன் தரக் கூடிய வெகுமதிகளை அறிவிக்கக் கூடிய வசனங்களைக் கொண்டதாகவும், மற்றும் யார் யாரெல்லாம் தன்னுடைய ஏகத்துவத்தை மறுத்து பல தெய்வ வணக்கக் காரர்களாக மாறிவிட்டார்களோ, நிராகரிப்பவர்களாக ஆகி விட்டார்களோ அவர்களுக்கான தண்டனைகளைக் குறித்து எச்சரிக்கக் கூடிய வசனங்களைக் கொண்டதாகவோ அமைந்திருக்கின்றன.

ஈமான் குறித்த சத்தியப்பிரமாணம் ஆனது, இஸ்லாம் என்ற மாளிகையின் வாசலில் நுழைவதற்கு அதன் கதவுகளைத் திறப்பதற்குண்டான திறவுகோள் போன்றதாகும் என்று குறிப்பிடப்படுகின்றது. எனவே, யாரொருவர் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றாரோ அவர் முதலில் மேலே உள்ள ஈமானின் அனைத்துப் பிரிவுகளையும் ஏற்றுக் கொண்டவராக சத்தியப் பிரமாணம் செய்தல் வேண்டும்.

தவ்ஹீதின் வகைகள் :

தவ்ஹீத் என்ற சொல்லானது, இஸ்லாத்தின் அதன் அடிப்படைகளில் பல்வேறு பொருள்களைக் குறிக்கக் கூடியதாக இருக்கின்றது. சுருக்கமாக, அதன் அர்த்தம் என்னவெனில், அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் மீது, அதாவது அவன் தனித்தவன், ஏகன், அவனுக்கு இணைதுணை ஏதுமில்லை என்ற தத்துவத்தின் அடிப்படையின் கீழ் அவனை ஏற்றுக் கொள்வது அல்லது நம்பிக்கை - ஈமான் கொள்வது. இந்த பிரபஞ்சத்தை ஆள்வதற்கு தான் (அல்லாஹ்) ஒருவனைத் தவிர வேறு இணை கடவுள்கள் அல்லது ஒன்றுக்கு அதிகமான கடவுள்கள் இருக்க இயலாது என்பதையும், அது உண்மையாகவும் இருக்க இயலாது என்பதையும், பகுத்தறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அதற்கான உண்மையான ஆதாரங்களையும் தன்னுடைய திருமறையிலே தந்திருக்கின்றான்.

அதனை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான் :

(வானங்கள், பூமி ஆகிய) அவை இரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், அவை இரண்டும் சீர்குலைந்து (அழிந்து) போயிருக்கும். (21:22)

இறைநம்பிக்கை கொள்வதற்கு, அல்லாஹ் ஒருவனே உண்மையான இறைவன் என்று ஏற்றுக் கொண்டும் மற்றும் அத்தகைய தனித்தவனான அந்த அல்லாஹ் தான் வணங்கப்படுவதற்குத் தகுதிவாய்ந்தவன் என்றும், அவனைத் தவிர வேறு யாருக்கும் தன்னுடைய வணக்க வழிபாடுகளைச் செலுத்தி விடாதவாறு, அவனுக்கே அனைத்து விதமான வணக்க வழிபாடுகளையும் தனித்துவமான முறையில் அர்ப்பணிக்க வேண்டும். மேலும் இவ்வாறு நாம் அவனைத் தனித்துவப்படுத்தி ஏற்றுக் கொள்வதற்குண்டான அர்த்தம் என்னவெனில், அவன் தான் இந்த உலகத்தையும், அதில் இருக்கின்ற அனைத்து வஸ்துக்களையும் படைத்து, பாதுகாக்கின்ற ஒரே இறைவன். இது மட்டுமல்ல இதற்கு மேலதிகமாக, அவன் அனைத்துத் தகுதிகளையும், பண்புகளையும், தன்மைகளையும் முழுமையாகப் பெற்றவன் என்றும், இஸ்லாத்தில் நுழையக் கூடியவர் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.

தவ்ஹீத் உலுஹிய்யா

ஒருவர் ஈமான் கொள்வதற்கு, அனைத்துப் படைப்பினங்களை விடவும், அல்லாஹ் என்ற ஒரே இறைவன் மட்டும் தான் உலுஹி;ய்யாவை (தெய்வீகத் தன்மை) பெற்றுக் கொள்வதற்குத் தகுதி வாய்ந்தவன் என்பதின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அவன் படைத்திருக்கின்ற எந்த படைப்பினடமும் தெய்வீகத்தன்மை என்பது கிடையாது. அல்லாஹ்வுக்கு மகனோ, மனைவியோ கிடையாது அல்லது அவனுக்கு இணைதுணை எதுவும் கிடையாது. அவன் அவனது படைப்பினங்களிடமிருந்து எந்தவிதத் தேவையும் அற்றவன். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :

அல்லாஹ் ஒருவன். அல்லாஹ் ஸமத் (எந்தத் தேவையுமற்றவன்) (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன). அவன் (எவரையும்) பெறவில்லை. (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை. மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை. (திருமறைக்குர்ஆன் : அத்தியாயம் - 112)

அவன் ஒருவனே நம்முடைய வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன். இதைத் தவிர எந்த வணக்க வழிபாடுகளையும், அர்ப்பணிப்புகளையும், அந்த ஏகனான அல்லாஹ்வையன்றி வேறு எவருக்கும் செலுத்தக் கூடாது. அவ்வாறன்றி, அல்லாஹ்வையன்றி வேறு யாருக்காவது தன்னுடைய வணக்க வழிபாடுகளையும், அர்ப்பணிப்புகளையும் யாராவது செலுத்துவாரேயானால், அவர் இறைவனுக்கு இணை வைத்த மிகப் பெரிய பாவமான - ஷிர்க்கைச் செய்து விட்டான் என்பதாகும்.

இந்த வகைத் தவ்ஹீது தான், முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அந்த மக்கத்துக் குறைஷிகளுக்கும் இடையே வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தக் கூடிய முக்கியமானதொரு கொள்கையாக இருந்தது. இருந்த போதிலும், அந்த காபிர்கள் அல்லாஹ் ஒருவன் தான் இந்த உலகத்தையும், அதில் உள்ளவற்றையும் படைத்த படைப்பாளன் என்பதை ஏற்றுக் கொண்டார்கள், ஆனால் அதே நேரத்தில், வணங்கப்படுவதற்குத் தகுதியானவனாக ஏக இறைவனாகிய அல்லாஹ்வை ஏற்றுக்  கொள்வதனின்றும் அவர்கள் பிடிவாதமாக மறுத்தார்கள். அவர்கள் அவ்வாறு ஏற்றுக் கொள்ள மறுத்ததோடு மட்டுமல்ல, வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ் ஒருவன் தான் என்பதில் அவர்கள் ஆச்சரியமும் அடைந்தார்கள். அல்லாஹ், கண்ணியமிக்கவனானவன், தன்னுடைய தூதர் (ஸல்) அவர்கள் மூலமாக, இறைவனுடைய ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளும்படி அந்த இறைமறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த பொழுது, அதை அவர்கள் மறுத்ததோடல்லாமல், இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எத்தகைய பதிலைத் தந்தார்கள் என்பதைத் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு விவரிக்கின்றான் :

(என்ன!) இவர் (நம்முடைய வணக்கத்திற்குரிய) தெய்வங்களை (நிராகரித்து விட்டு) ஒரே ஒரு வணக்கத்திற்குரிவனாக ஆக்கி விட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம் தான் (என்றும் கூறினர்). (38:5)

தவ்ஹீத் அர் ருபூபிய்யா

எல்லாவற்றின் மீதும் ஆட்சியும் அதிகாரமும் மிக்கவனான அல்லாஹ்வை ரப்பாக நம்பிக்கை கொள்வது, அதாவது, அல்லாஹ்வை படைப்பவனாகவும், பரிபக்குவப்டுத்துபவனாகவும், உணவளிப்பவனாகவும், வாழ்வாதாரம் வழங்குபவனாகவும் மற்றும் எல்லா விதமான செயல்களும் அவனது முடிவின் கீழ் தான் உள்ளது அல்லது தீர்ப்பின் அல்லது அதிகாரத்தின் கீழ் தான் உள்ளது என நம்பிக்கை கொள்வதாகும். அவன் அனைத்துப் பொருள்களின் மீதும் அதிகாரம் மிக்கவன். அவனே வாழ்வையும், மரணத்தையும் வழங்குகின்றான், அவனே கௌரவத்தையும், மற்றும் வெற்றி தோல்வியையும் வழங்குகின்றான்.

இங்கே இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற ரப் என்ற மூலச் சொல்லானது, வளர்த்தல் அல்லது உயர்த்துதல் என்ற வினைச் சொல்லிருந்து பெறப்பட்டதாகும். அல்லாஹ் தான் தன்னுடைய அருட்கொடையிலிருந்து மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்படுத்தித் தரக்கூடியவனாக இருக்கின்றான். மேலும், அவன் தன்னுடைய படைப்பினங்களை வளர்த்தெடுப்பதற்கும், அதன் வளர்ச்சிக்குத் தேவையான உணவையும் தன்னுடைய கருணையையும் மற்றும் அருட்கொடையையும் வழங்குபவனாகவும் இருக்கின்றான். இதற்குக் கைமாறாக மனிதன், தன்னைப் படைத்தவனை தனித்துவமாக வணங்கி, அவனுடன் வேறு யாரையும் இணையாக்காமல் (தன்னுடைய வணக்கத்தை அல்லது நன்றியை அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருக்கும் செலுத்தாமல்) இருக்க வேண்டும்.

இந்த தவ்ஹீத் ருபூபிய்யா என்பது, தவ்ஹீத் என்ற இந்த அம்சத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்ததொரு கோட்பாடாகும். இருப்பினும் இந்த தவ்ஹீத் ருபூபிய்யாவை ஏற்றுக் கொண்டு, அதே நேரத்தில் மற்ற இரண்டையும் விட்டு விடுவது, ஒருவரை நரக நெருப்பில் இருந்து பாதுகாப்பதற்குப் போதுமானதாக இருக்காது. முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த அந்த மக்கத்துக் காபிர்கள், அல்லாஹ்வை வானம் மற்றும் பூமியைப் படைத்தவனாகவும், இன்னும் வாழ்வாதாரம் வழங்குபவனாகவும் உறுதிப்படுத்தினார்கள். ஆனால் இது ஒன்றே அவர்களை அந்த மறுமை நாளிலே நரக நெருப்பில் இருந்து, அவர்களைப் பாதுகாப்பதற்குப் போதுமானதாக அல்லது பயன்தரத்தக்கதாக அமையவில்லை.

அல்லாஹ் அதைத் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று (நபியே!) நீர் அவர்களைக் கேட்பீராயின் அ(தற்க)வர்கள் அல்லாஹ் என்று நிச்சயமாக கூறுவார்கள், (அது பற்றி) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவீராக! (31:25)

தவ்ஹீத் அஸ்மா வ ஸிஃபாத்.

அல்லாஹ்விற்கென தனிப்பட்ட புனிதமான, மகத்துவமிக்க பெயர்களும், பண்புகளும் இருக்கின்றன. அவற்றை அவனே அவனுக்குப் பெயராகச் சூட்டிக் கொண்டும், அத்தகைய அதன் பண்புகளுக்குத் தகுதியானவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களினாலும் இனங்காட்டப்பட்டுள்ள அல்லாஹ்வின் பெயர்களையும், அவனது பண்புகளையும், வேறு எந்த படைப்பினங்களின் பெயர்களிலோ அல்லது பண்புகளிலோ தொடர்புபடுத்தியோ அல்லது அவற்றுடன் ஒப்புவமைப்படுத்தியோ பார்க்காமலும், அவற்றை மறுக்காமலும், அந்தப் பெயர்களின் அர்த்தங்களையும் மற்றும் பண்புகளையும் சிதைக்காமலும் ஏற்றுக் கொண்டு நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

அவனைப் போல எப்பொருளும் இல்லை, அவனே (யாவற்றையும்) செவியேற்கிறவன், பார்க்கிறவன். (42:11)

தவ்ஹீத் ருபூபிய்யா என்பதை நம்புவது என்பது தவ்ஹீதுல் உலுஹிய்யாவை நம்பிக்கை கொள்வதிலும் தொடர்புடையதாக இருக்கின்றது. அதாவது, மேலே நாம் விவரித்திருக்கின்றவாறு, யாரை நாம் அல்லாஹ் என்று நம்பி, அவனை ரப்பாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோமோ, அத்தகைய அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குத் தகுதியானவராக இல்லை என்பதை உறுதிப்படுத்துவதும் அவசியமாக இருக்கின்றது. எனவே அவன் அல்லாஹ்விடம் மட்டுமே இறைஞ்ச வேண்டும், அவனிடம் மட்டுமே உதவி கோர வேண்டும், அவனிடம் மட்டுமே நம்பிக்கை கொள்ள வேண்டும் மற்றும் அவனுக்கு மட்டுமே தன்னுடைய அனைத்து வழிபாடுகளையும் உரித்தானதாக ஆக்கி விட வேண்டும்.

அல்லாஹ்வின் புனிதப் பெயர்கள் மற்றும் பண்புகளைக் குறித்த சட்டங்கள்:

ஷேக் இப்னு உதைமீன், (அல்லாஹ் அவருடைய ஆத்மாவைப் புனிதப்படுத்தி, அவனது சொர்க்கச் சோலைகளில் புகுத்துவானாக) அவர்கள் அரபியில் இது குறித்து ஒரு முக்கியமான நூல் ஒன்றை எழுதி உள்ளார்கள் : அல் கவாயித் அல்-முதலா ஃபீ ஸிஃபத் அல்லாஹ் வ அஸ்மாஉல் ஹுஸ்னா - அல்லாஹ்வினுடைய அழகிய பெயர்கள் மற்றும் பண்புகள் குறித்த தீர்க்கமாக சட்டங்கள் என்ற அந்த நூலின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்:

அல்லாஹ்வினுடைய பெயர்களையும் மற்றும் பண்புகளையும் நம்பிக்கை கொள்வது என்பது, ஈமான் கொள்வதற்கு அவசியமானதொரு சட்ட வழிமுறையாக இருக்கின்றது. அதாவது, அல்லாஹ்வை நம்பி, அவனுடைய ருபூபிய்யா, உலுஹிய்யா மற்றும் அவனுடைய திருநாமங்கள் மற்றும் அவனுடைய பண்புகளையும் ஏற்றுக் கொள்வதாகும். எனவே தான், நாம் சுட்டிக் காட்டக் கூடிய மேலே உள்ள அம்சங்கள் இஸ்லாத்தில் குறிப்பிடத்தக்கதொரு, கட்டாயம் பின்பற்றியாக வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும்  இருக்கின்றது. அந்த மிகத் தூய்மையானவனான அல்லாஹ்வையும் அவனது திருப்பெயர்களையும், அவனது பண்புகளையும் தெளிவாக அறிந்து கொள்ளாமல், ஒருவர் சரியான முறையில் அவனுக்கு வணக்கம் செலுத்த இயலாது. அவனைப் பற்றியும் அவனது பெயர்கள் பற்றியும், அவனது பண்புகள் பற்றியும் முஸ்லிமாக இருப்பவன் முற்று முழுதாக அறிந்து, அதன் அடிப்படையில் தன்னுடைய வணக்கத்தைப் பூரணமாகச் செய்ய வேண்டும். அதுவல்லாமல் செய்யப்படும் வணக்கங்கள் முழுமையானதாக இருக்காது.

அல்லாஹ்வின் பண்புகளின் வகைகள் :

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது என்பது, அவனது திருநாமங்களையும் அவனது பண்புப் பெயர்கiளையும் நம்பிக்கை கொள்வதில் அடங்கியுள்ளது. அல்லாஹ் என்ற அந்த இறைவனுடைய முழு அம்சமும் அவன் தனக்கு இட்டுக் கொண்ட பெயர்களில் உள்ள பெயர்களிலும் மற்றும் அவனது தகுதியில் அவன் தகுதியானவானாகவும் இருக்கின்றான். அவனது முழுமைத்துவமானது அவனது பண்புகளில் தான் இருக்கின்றது. அத்தகைய பண்புகளன்றி அந்த முழமைத்துவத்தை அல்லாஹ்வினுடைய பண்புகளாக எவையெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளனவோ, அவை யாவும் மறைவான உலகத்திற்குச் சொந்தமானவை. இதன் அர்த்தம் என்னவென்றால், இறைவனுடைய பண்புகளாகவும், பெயர்களாகவும் குர்ஆனிலும், ஸஹீஹான ஹதீஸிலும் குறிப்பிடப்பட்டுள்ளவை யாவற்றையும், அவை எவ்வெவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளனவோ அவ்வாறே அவற்றை நம்புவது அவசியமாகும்.

முதலாவது சட்டம் :

இறைவனது பெயர்கள் அனைத்தும் முழுமையானவை, உயர்ந்த தன்மை கொண்டவை, அழகானவை, ஏனென்றால், அவை அனைத்தும் அவனது பண்புப்பெயர்களை முழுமையாகக் குறித்துக் காட்டுகின்றன. மேலும், அவை அனைத்து வித குறைபாடுகளினின்றும் நீங்கி, அவனது பண்புகளை முழுமையாகக் குறித்து நிற்கின்றன.

உதாரணமாக : அவன் நித்திய ஜீவன், (கைய்யுல் கைய்யூம்) என்பது அல்லாஹ்வைக் குறித்து அழைக்கப்படக் கூடிய ஒரு பெயராகும். இதன் அர்த்தம் என்னவெனில், அல்லாஹ் நித்திய ஜீவனாக என்றுமே நிலைத்திருக்கக் கூடியவனாக அதாவது, அவனது வாழ்க்கையானது முடிவு என்பதை நோக்கியோ அல்லது அவனது வாழ்வு முடிந்து இல்லாமை என்பதை நோக்கியோ அல்லாமல், அவன் என்றுமே நிலைத்திருக்கக் கூடியவனாக, அழிவே இல்லாதவனாக இருக்கின்றான். இந்த வாழ்க்கைக்கு இன்னும் மிக உன்னதமான ஞானமும், கேட்கும் திறனும், பார்வைத் திறனும் மற்றும் இன்னும் உள்ள தெய்வீகக் குணங்களும், மாசுமறுவில்லாத பண்புகளும் அவனுக்கு அவசியமாக இருக்கின்றன.

இன்னுமொரு உதாரணம் :

அல்லாஹ் ஞானமிக்கவன் - இது அல்லாஹ்வினுடைய இன்னுமொரு பெயராகும். இது அவனுடைய முழுமையான, தீர்க்கமான அறிவு ஞானத்தைக் குறிப்பதோடு, இது எப்பொழுதும் அறியாமை என்னும் இயலாமை அவனைப் பீடிப்பதில்லை மேலும் மறதி, அசட்டை போன்றவையும் அவனைப் பீடிப்பதில்லை என்பதையும் குறிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இன்னுமொரு உதாரணம் :

அல்லாஹ் ஆட்சி அதிகாரமிக்கவன், நீதிமிக்கவன், இந்த இரண்டு பண்புப்  பெயர்களும் திருமறைக் குர்ஆனில் பல இடங்களில் வருகின்றன. இது ஒவ்வொன்றும் அவனுடைய முழுமையைக் குறித்துக் காட்டுகின்றன. அதாவது, முழுமையான அதிகாரம், எண்ணில் அடக்க முடியாத ஞானம் ஆகியவற்றைக் குறித்துக் காட்டுகின்றது. அவனது அதிகாரத்தின் மூலமாக அவன் அடக்குமுறையில் ஈடுபடுவதும் இல்லை மற்றும் நீதி தவறுவதும் இல்லை. இது அவனது படைப்பினங்களின் பண்புகளோடு முரண்படுகின்றதொரு செயலாகும், அவனது படைப்பினங்களில் எதனது கையில் அதிகாரம் இருக்கின்றதோ, அந்த அதிகாரத்தை தங்களது மன இச்சைகளுக்குத் தகுந்தவாறு பயன்படுத்தி, பிறரை அடக்குமுறைக்குள்ளாக்குவதாக இருக்கின்றது. அந்த இறைவனின் ஞானம் எப்பொழுதும் அவனது அதிகாரத்தினுடன் தொடர்புடையதாகவும் இருக்கின்றது.

இரண்டாவது சட்டம் :

அல்லாஹ்வினுடைய பெயர்கள்  தனிச்சிறப்பிற்குரியதாகவும் மற்றும் புனைப்பெயர்களாகவும் ஆகிய இரு பண்புகளைக் கொண்டதாகும்| தனிச்சிறப்பிற்குரிய பெயர்கள் அவனது முழுமையான அம்சத்தையும், புனைப்  பெயர்கள் அதனுடைய அர்த்தம் அல்லது உள்ளடக்கம் மற்றும் அதைப் பற்றிய குறிப்பையும் உணர்த்துவதாகவும் இருக்கின்றது.

அல்லாஹ்வினுடைய தனிச்சிறப்புப் பெயர்களாவன: அவன் நித்திய ஜீவன், அவன் ஞானமிக்கவன், அவன் அனைத்தையும் சூழ்ந்தறியக் கூடியவன், அவன் அனைத்தையும் பார்க்கக் கூடியவன், அவன் கருணைமிக்கவன், அவன் அதிகாரமிக்கவன், அவன் நீதி செலுத்துபவன், இவை யாவும் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வைக் குறிக்கக் கூடிய அவனது தனிச்சிறப்புப் பெயர்களாகும்.

அதே போல அவனது புனைப் பெயர்களாக, அவனுக்கு இருக்கக் கூடிய அத்தனை பெயர்களும் ஒன்று மற்றதை விட அதன் பண்புகளிலும், அதன் அர்தத்திலும் வித்தியாசமானதாக, வெவ்வேறு பண்புகளைக் குறிப்பால் உணர்த்தக் கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக, அவன் நித்திய ஜீவனாக இருக்கின்றான் என்ற அவனது தனிச்சிறப்புப் பெயர், இன்னொரு பெயரான அவன் அனைத்தையும் சூழ்ந்தறியக் கூடியவனாக இருக்கின்றான் மற்றும் அவன் ஞானமிக்கவன் என்பன போன்ற பெயர்களோடு, அதன் அர்த்தத்திலும் அதனது பண்பிலும் வித்தியாசமாக, ஒவ்வொரு பெயரும் அதனது பண்புகளைக் குறிப்பால் உணர்த்தக் கூடியதாகவும் இருக்கின்றது.

மூன்றாவது சட்டம் :

அல்லாஹ்வினுடைய பெயர்கள் கீழ்க்கண்ட மூன்று விதிகளையும் பெற்றுள்ளதாக இருக்க வேண்டும் :

அவையாவன:

1) அந்தப் பெயர் அல்லாஹ்வினுடைய பெயர்களில் ஒன்றாக இருக்கின்றது என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

2) அவனைக் குறித்து அழைக்கக் கூடிய அவனது பண்புப் பெயர்கள், அல்லாஹ்வைக் குறித்து அழைக்கக் கூடிய பண்புப் பெயர்கள் தான் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.

3) அல்லாஹ்வைக் குறித்து அழைக்கக் கூடிய அவனது பெயர்கள், அதற்குரிய அளவுகோல்களை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். உதாரணமாக, அல்லாஹ் மிகப் பெரும் கருணையாளன் (அர்ரஹ்மானிர் ரஹீம்). இதன் அர்த்தம் என்னவெனில், பாவம் செய்து விட்ட ஒருவன், தன்னுடைய பாவத்திற்காக வருந்தி, பச்சாதாபப்பட்டு இறைவனிடம் மன்னிப்புக் கோரும் பொழுது, அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றான கருணையைக் கொண்டு அவனைப் பார்க்கின்றான், மன்னிக்கின்றான், அந்த மிகப் பெருங் கருணையாளனான அல்லாஹ்வின் பெயருக்கு கருணை என்பது தேவையானதொரு அம்சமாக இருக்கின்றது. எனவே, அவன் மிகப் பெருங் கருணையாளனாக இருக்கின்றான் என்ற பண்புப் பெயரையும் அவன் பெற்றிருக்கின்றான்.

நான்காவது சட்டம்:

அல்லாஹ்வைக் குறித்து அழைக்கக் கூடிய அவனது பெயர்கள் மீது, நம்முடைய கருத்துக் கூறல்களுக்குள் உட்படுத்தக் கூடியதல்ல. இதை வேறுவிதமாகச் சொல்ல வேண்டும் என்றால், அல்லாஹ்வும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் குறிப்பிட்டுக் கூறாத எந்தப் பெயரைக் கொண்டும் நாம் அல்லாஹ்வைப் பெயரிட்டு அழைக்க முடியாது.

ஐந்தாவது சட்டம் :

அல்லாஹ்வினுடைய பெயர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் நாம் உட்படுத்தி விட முடியாது. முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறியதாக சில ஹதீஸ்களில் குறிப்பிட்டிருப்பதைப் போல, அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஹதீஸ் குறிப்பிடுவதைப் போல அல்லாஹ்வுக்கு 99 பெயர்கள் தான் இருக்கின்றன என்ற அர்த்தமாகாது. இத்தனை பெயர்கள் தான் இருக்கின்றன என்பதைக் காட்டிலும், அவன் குர்ஆனில் குறிப்பிடாத அல்லது தன்னுடைய எந்தப்படைப்பினத்திற்கும் கற்றுக் கொடுக்காத எத்தனையோ பெயர்கள் அவனுக்கு இருக்கின்றன என்பதே மிகச் சிறந்ததொரு, முடிவாக இருக்கும்.

ஆறாவது சட்டம் :

அல்லாஹ் தனக்கு இருப்பதாக அறிவித்திருக்கின்ற பெயர்களின் பண்புகளை, இடைநிறுத்தி வைக்கவோ அல்லது அவற்றிற்கு மாற்று வகையில் அர்த்தம் புனைவதோ கூடாது. இத்தகைய செயல்பாடுகள் வழிகேடுகளில் சிக்கி விட்ட சமுதாயங்களில் காணப்படுகின்றன.

அந்த வழிகேடர்கள் :

அல்லாஹ்வின் சில பெயர்களை மறுக்கின்றார்கள், அந்தப் பெயர்கள் குறிப்பிட்டுக் கூறும் பண்புகளையும் அல்லது உட்பொருள்கள் அல்லது அர்த்தங்களையும் மற்றும் அது குறிப்பிடும் அளவுகோல்களையும் அவர்கள் மறுக்கின்றார்கள்.

அல்லாஹ்வுக்கு இருக்கின்ற பண்புகளை மனிதர்களுக்கு இருக்கின்ற பண்புகளோடு ஒப்புவமைப்படுத்துகின்றார்கள்.

அல்லாஹ் தனக்குத் தானே பெயரிட்டுக் கொள்ளாத அல்லது தன்னுடைய படைப்பினங்களுக்குக் கற்றுக் கொடுக்காததொரு பெயரைக் கொண்டு அவனை அழைக்கின்றார்கள். அதாவது, கிறிஸ்த்தவர்கள் அந்த அல்லாஹ்வை பிதாவே என்றழைக்கின்றார்கள். இந்த பிதா என்ற வார்த்தை இறைவன் தனக்கிட்டுக் கொள்ளாததொரு பெயராகும்.

2.  மலக்குமார்களை நம்புவது :

நாம் எவ்வாறு இந்தப் பூமியில் வசிக்கின்றோமோ, அதே போன்றதொரு இறைவனின் இன்னொரு படைப்பினமாக மலக்குகள் இருக்கின்றார்கள். இவர்கள் மனிதர்களைப் போன்ற உருவமைப்பு உடையவர்கள் அல்லர்.

இந்த மலக்குகள் இருக்கின்றார்கள் என்பதை நம்புதல் வேண்டும், மேலும் அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள், மற்றும் அவர்கள் வான மண்டலத்தில் வசிப்பவர்கள் என்பதன் மீதும் நம்பிக்கை கொள்வது அவசியமாகும். முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

வான மண்டலத்தில் ஒருவரின் உள்ளங்கையின் அளவு கூட எந்த இடைவெளியும் கிடையாது என்ற அளவுக்கு அந்த வானமண்டலங்கள் மலக்குமார்களினால் நிரப்பப்பட்டிருக்கின்றது, அந்த மலக்குகளான (வான)வர்கள் ஒன்று இறைவனுக்கு தன் சிரம் தாழ்த்தி குனிந்த நிலையிலும் அல்லது அவனை முழந்தாழிட்டு சிரவணக்கம் செய்த நிலையிலும் இருப்பார்கள். (இப்னு மாஜா மற்றும் பல ஹதீஸ் நூல்களில்.. ..).

ஆயிஷா (ரலி) அவர்களும், அவர்களுடைய தந்தையாராகிய அபுபக்கர் (ரலி) அவர்களும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் :

மலக்குகள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள், மற்றும் ஜின்கள் நெருப்பினால் படைக்கப்பட்டவர்கள் மற்றும் ஆதம் எவ்வாறு படைக்கப்பட்டார் என்பதை உமக்கு நாம் முன்னரே அறிவித்திருக்கின்றோம் (அதாவது மண்ணால் படைக்கப்பட்டவர்). (முஸ்லிம்)

மலக்குகள் என்பவர்கள் அல்லாஹ்வினுடைய கண்ணியமிக்க அடியார்கள், அல்லாஹ் அவர்களுக்கு இட்ட கட்டளையை எந்த மறுப்பும் இன்றி, மிக கனகச்சிதமாக நிறைவேற்றக் கூடியவர்கள் மேலும், எந்தவித களைப்போ அல்லது ஓய்வோ இன்றி அல்லது இடைவெளியின்றி அவனை இரவும் பகலும் அவனை நோக்கித் துதித்துக் கொண்டும், அவனது பெருமைகளைக் குறித்துப் புகழ்ந்து கொண்டும் அவர்கள் இருப்பார்கள். அவர்கள் இந்த மனித வர்க்கத்தைப் போல ஆண்களும் அல்ல அல்லது பெண்களும் அல்ல. மேலும் அவர்கள் உணவு உட்கொள்வதுமில்லை அல்லது எதையும் பானமாக அருந்துவதுமில்லை. அவர்கள் இறைவனை இரவும் பகலும் எந்தவிதக் களைப்பும் இன்றி அல்லது சலிப்படையாமல் போற்றிப் புகழ்ந்து அவனுக்கு வணக்கம் செய்த வண்ணமே இருப்பார்கள். இவர்கள் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக வான மண்டலத்திலிருந்து பூமிக்கு இறங்குகின்றார்கள், அதாவது இறைநம்பிக்கையாளர்களுடன் இணைந்து போர் புரிவதற்காகவும் மற்றும் புனித இரவின் கண்ணியத்தின் பொருட்டுமே அவர்கள் இந்த பூமிக்கு வருகை தருகின்றார்கள்.

அவர்களது எண்ணிக்கை:

அவர்களது எண்ணிக்கை எவ்வளவு என்பதை அல்லாஹ் தான் மிக அறிந்தவன், அவர்களை எண்ணிக்கைக்குள் நாம் உட்படுத்தி விட முடியாத அளவுக்கு அவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள்.

இறைவனுடைய படையினரின் எண்ணிக்கையை யாரும் அறிய மாட்டார்கள், அனைத்துலகையும் படைத்துப் பரிபாலிக்கின்ற ரப்பாகிய, அவன் (அல்லாஹ்) ஒருவனைத் தவிர!

இது உங்களது கணிப்பிற்காக மட்டும், அதாவது முஹம்மது (ஸல்) அவர்கள், வான மண்ணடலத்தின் ஏழாவது வானத்தில் இருக்கின்ற பைத்துல் மஃமூர் (----) பற்றிக் குறிப்பிடும் பொழுது, ஒவ்வொரு நாளும் அந்த பைத்துல் மஃமூரினுள்ளே எழுபதினாயிரம் மலக்குள் நுழைகின்றார்கள், அதனுள் நுழைந்த மலக்குகளுக்கு அதனுள் மீண்டும் நுழைய சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. (புகாரி மற்றும் முஸ்லிம்).

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகமானது ஒரு நாளில் 70,000 மலக்குகளைக் கொண்ட படையினரால் முன்னோக்கிக் கொண்டு வரப்படுப்படும், ஒவ்வொரு படையிலும் 70,000 மலக்குகள் இருப்பார்கள். அதாவது, நரகத்தை முன்னோக்கிக் கொண்டு வருவதற்காக மட்டும் 4,900,000,000 மலக்குள் இருக்கின்றார்கள். மேலும் அந்த மலக்குகளின் மிகப் பெரும் எண்ணிக்கையைப் பற்றி இன்னும் நாம் சற்றுச் சிந்திப்போம் என்றால், மனிதன் உற்பத்தியாவதற்குத் தேவையான ஒரு துளி விந்தைக் கையாண்டு, அதனை ஒரு மனிதப் படைப்பாக உருவாக்குவதற்கு என ஒரு மலக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையை மட்டும் கருத்தில்  கொண்டோமானால் அவர்களுடைய எண்ணிக்கை நமக்கு விளங்கும், இன்னும் இரண்டு மலக்குகள் ஒவ்வொரு மனிதனுடனும் நியமிக்கப்பட்டுள்ளார்கள், மலக்குகளின் ஒரு குழுவானது மனிதனுக்குப் பாதுகாப்பாகவும் மற்றும் இந்த இரண்டு மலக்குமார்களுக்குப் பாதுகாப்பாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் அல்லது அவர்களுக்கு இணையாக இருக்கக் கூடிய மலக்குகள், யாருக்குத் தோழர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களை நேர்வழியில் செலுத்தக் கூடியதற்காகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

மலக்குகளின் பெயர்களும் அவர்களுடைய பணிகளும்:

ஒவ்வொரு மலக்குகளுக்கும் பெயர்கள் இருக்கின்றன, அவற்றில் சில மலக்குகளின் பெயர்களைத் தான் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவன் தன் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான் :

யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார் அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான். (2:97-98)

நரகத்தின் காவலாளிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் மலக்குகள் கூறுவதாக அல்லாஹ் கூறுகின்றான் :

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.

அல்லாஹ்வின் ஆசனத்தை (அர்ஷை) சுமந்து கொண்டிருப்பவர்களான மலக்குகளின் உருவ அமைப்புகள் :

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

இறைவனுடைய அர்ஷைச் சுமந்து கொண்டிருக்கின்ற மலக்குகளின் உருவ அமைப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை உங்களுக்கு விளக்க நான் அனுமதிக்கப்பட்டிருக்கின்றேன்| அவர்களுடைய கால்கள் இந்தப் பூமியின் கீழ்பாகத்தில் இருக்க அவர்களின் கொம்புகளின் மீது அர்ஷைச் சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய காது மடல்களுக்கும், தோள் புஜங்களுக்கும் இடைப்பட்ட தூரம், ஒரு பறவையின் 700 வருட பறக்கும் தூரமாக இருக்கும். நீ எங்கிருந்தாலும் குறைபாடுகளிலிருந்து முற்றிலும் நீங்கியவனாக இருக்கின்றாய். அல்லது நீ எங்கிருந்தாலும் அனைத்து வித முழுமையற்ற தன்மையிலிருந்தும் நீங்கியவனாக இருக்கின்றாய் யா அல்லாஹ்! என்றும் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்கள், முஹம்மது (ஸல்) அவர்கள். (தபரானி மற்றும் அல் முஃஜம் அல் அவ்ஸத்)

மனிதனுக்கும் மலக்குகளுக்கும் இடையே ஒரு அசைக்க முடியாததொரு இணைப்பும், தொடர்பும் இருக்கின்றது. மனிதனது படைப்பின் பொழுதும் அவர்கள் அவனுடன் இருந்தார்கள், அவன் படைக்கப்பட்டு விட்டதன் பின்பும் அவனுக்குக் காவலாக இருந்தார்கள். அல்லாஹ்விடம் இருந்து அவனுக்கு வேதத்தைக் கொண்டு வந்தார்கள், அதன் மூலம்) அவனை (நரக நெருப்பில் இருந்து) பாதுகாத்தார்கள், அவனது செயல்களைப் பதிவு செய்து வந்தார்கள் மற்றும் அவனது இறப்பின் பொழுது அவனது உயிரை இறுதியாகக் கைப்பற்றவும் செய்கிறார்கள்.

ஜிப்ரீல் (அலை) : இவர் மலக்குகளிலேயே அல்லாஹ்வினிடத்தில் மிகவும் நன்னம்பிக்கையைப் பெற்ற மலக்கு ஆவார். அல்லாஹ் தன்னுடைய நபிமார்களுக்கு வேதங்களையும் கட்டளைகளையும் கொண்டு சேர்க்கக் கூடிய பணியை இவர் மூலமாகத் தான் நிறைவேற்றினான். இவர் தான் அல்லாஹ்வினால் மர்யம் (அலை) அவர்களுக்கு அனுப்பி வைத்த ரூகூம் ஆவார். இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனிலே குறிப்பிடுகின்றான் :

(மர்யமிடம்) நம்முடைய ரூஹானவரை அனுப்பி வைத்தோம்.

இது பற்றி அப்துல்லா பின் மஸ்ஊது (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :

முஹம்மது (ஸல்) அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களின் அசலான உருவத்தை இவ்வாறு கண்டார்கள், ஜிப்ரீல் (அலை) அவர்கள் 600 இறக்கை கொண்டவராக இருந்தார்கள்.|அவை ஒவ்வொன்றும் வானத்தின் முகட்டை மறைத்துக் கொண்டிருந்தது. (இமாம் அஹ்மது)

மேலும் அவர்கள் (ஸல்) கூறினார்கள் :

ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்திலிருந்து இறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்| அவர்களது மிகப் பெரிய உருவமானது வானத்தையும், பூமியையும் மறைத்துக் கொண்டிருந்தது. (அத்திர்மிதி).

ஜிப்ரீல் (அலை) அவர்கள் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :

நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர். (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர். (81:19-21)

இஸ்ராஃபீல் (அலை) என்றொரு மலக்கு இருக்கின்றார், அவர் இந்த உலகத்தின் இறுதி நாளன்று, அந்த நாளின் வருகையை அறிவிப்பதற்காக முதன் முதலாக சங்கை ஊதக் கூடியவராக இருப்பார்.

மாலிக் (அலை), இவர் தான் நரகத்தின் காப்பாளர். நரகத்தில் இருக்கக் கூடிய மக்கள் தங்களது வேதனைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்குமாறு இவரை அழைத்துக் கூறுவார்கள். இதனைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான் :

அவர்கள் (நரகத்தில்) ''யா மாலிக்"" உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!"" என்று சப்தமிடுவார்கள்;. அதற்கு அவர் ''நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே"" என்று கூறுவார். (43:77)

ரிழ்வான் (அலை), இவர் தான் சொர்க்கத்தின் காப்பாளர். முஹம்மது (ஸல்) அவர்கள் இவரைப் பற்றி பல்வேறு ஹதீஸ்களில் குறிப்பிட்டுக் கூறி இருக்கின்றார்கள்.

முன்கர் - நக்கீர், இந்த இரண்டு மலக்குமார்கள் தான் மண்ணறையில் வைக்கப்பட்டிருக்கும் இறந்தவரைக் கேள்வி கணக்குக் கேட்பவர்கள்.

மலக்கல் மவ்த், இந்த மலக்கு தான், மனிதனது உயிர் பிரியும் தருவாயில், அவனது உயிரைக் கைப்பற்றக் கூடியவர்கள்.

ஹாரூத் மற்றும் மாரூத், சூரா அல் பகறா, வசன எண் 103 ன் படி இந்த இரண்டு மலக்குகளும், பூமிக்கு அனுப்பப்பட்டு மனிதர்களுக்கு வசியத்தைப் பற்றி கற்றுக் கொடுப்பதற்காக அனுப்பப்பட்டவர்களாவார்கள்.

ரக்கீப் மற்றும் அதீத், இந்தப் பெயர்கள் மலக்குகளின் பெயர்கள் அல்ல, மாறாக இந்த இரண்டு பெயர்களும், இரண்டு மலக்குகளின் பணிகளைக் குறித்து, பெயர்ச் சொல்லாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே குறிப்பிடுகின்றான் :

கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது. (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்) (50:18-19)  

மனிதர்கள் மற்றும் ஜின் வர்க்கத்தினரைப் போலவே மலக்குகளும் இறந்து போகக் கூடியவர்களே என்று இறைவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு குறிப்பிடுகின்றான் :

ஸர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள். பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள். (39:68)

மலக்குமார்களின் பணிகள்:

கரு வளர்ச்சியின் பொழுது :

அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டிருக்கின்றேன் :

(பெண்ணின்) கர்பப் பையில் ஒரு துளி இந்திரியமானது நிலை கொண்டு விட்ட 120 நாட்களுக்குப் பின், கண்ணியமிக்க மேலோனாகிய அல்லாஹ், ஒரு வானவரை (மலக்கை) அனுப்பி, அந்த கருவை வடிவமைக்கவும் மற்றும் அதன் கேட்கும் திறனையும், பார்வையையும், தோல், சதை மற்றும் எலும்புகளையும் வடிவமைக்கவும் பணிக்கின்றான். (அந்த வானவர் இறைவனின் கட்டளையைக் கொண்டு அந்த கருவை வடிவமைத்து முடித்த பின்), இறைவனை நோக்கி, என்னுடைய ரப்பாகிய இறைவனே! இது ஆணா அல்லது பெண்ணா? என்று வினவுகின்றார். அதன் பின்) அல்லாஹ்! (அதன் மீது) எதனை விரும்புகின்றானோ அதனை எழுதிக் கொள்ளுமாறு அந்த வானவருக்கு உத்தரவு பிறப்பிக்கிறான். (முஸ்லிம்)

மனிதனுக்குப் பாதுகாவலர்களாக..!

இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

மனிதனுக்கு முன்னாலும், பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்;. (13:11)

குர்ஆனுக்கு விரிவுரை வழங்குவதில் வல்லவராகிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்கண்ட இறைவசனத்தைப் பற்றி விளக்கமளிக்கும் பொழுது கூறுகின்றார்கள் : மனிதனுக்கு முன்னும் பின்னும் இறைவனால் நியமிக்கப்பட்டிருக்கும் மலக்குகள், அவனுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களிலிருந்து அவனைப் பாதுகாக்கின்றார்கள். இறைவன் அந்த மனிதனின் மீது, விபத்துக்கள் ஏற்பட நாடி விட்டானென்றால், இவனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற அந்த மலக்குகள், இவன் மீது அந்த விபத்து நிகழ்ந்து, விபத்தின் பாதிப்பு இவன் மீது நிகழ்ந்து விடுவதற்காக, இவனைக் கை விட்டு விடுகின்றார்கள். (இப்னு கதீர், தஃப்ஸீர் அல் குர்ஆனுல் அளீம், சூரா அர்ரஃது).

இறைத்தூதை கொண்டு வருவது :

அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் : அல்லாஹ்வுக்கும், அவனது திருத்தூதர்களுக்கும் இடையே (இறைத்தூதுச் செய்தியைக் கொண்டு செல்லும்) கண்ணியமிக்க தூதராக ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருக்கின்றார்கள் என்று கூறுகின்றான். அல்லாஹ், தன்னுடைய செய்திகளைக் கொண்டு செல்லும்  இந்த வானவத் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் பற்றிச் சிறப்பித்துக் கூறும் பொழுது, அவர் நன்னம்பிக்கை மிக்க ரூஹானாவர் என்று குறிப்பிட்டுக் கூறுகின்றான். இவரைத் தவிர்த்து இன்னும் பல வானவர்கள் இவருக்கு அடுத்திருந்து மற்ற பல பணிகளையும் கையாளுகின்றார்கள்.

போர்முனையில் இருக்கும் நம்பிக்கையாளர்களுக்கு உதவுவது :

இன்னும் சில வானவர்கள் இருக்கின்றார்கள், இறைநிரகாரிப்பாளர்களுக்கு எதிராகப் போராடும் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆதரவாகப் களத்திலே போராடி உதவுகின்றார்கள். ஒவ்வொரு மனிதனுடனும், அம் மனிதனை கெட்ட வழியிலே இழுத்துச் செல்லும் ஷைத்தான் நியமிக்கப்பட்டிருப்பது போல, ஒவ்வொரு மனிதனையும் நல்வழியிலே நடத்திச் செல்வதற்கு மலக்குகளும் - வானவர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

மனிதர்களது செயல்களைப் பதிவு செய்வதற்காக :

இன்னும் சில வானவர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் மனிதனது நற்செயல்கள், அவனது செயற்பாடுகள், அவன் வெளிப்படுத்தக் கூடிய வார்த்தைகள் ஆகியவற்றைப் பதிவு செய்வதற்காகப் பணிக்கப்பட்டிருக்கின்றார்கள். அல்லாஹ் தன் திருமறைக் குர்ஆனில் கூறுகின்றான் :

(மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை.(50:17-18).

மனிதனது வலப்பக்கத்திலே இருக்கும்  வானவர் மனிதனது நற்செயல்களையும்| மற்றும் இடப்பக்கத்திலே இருக்கும் வானவர் மனிதனது கெட்ட செயல்களையும் பதிவு செய்பவர்களாக இருக்கின்றார்கள்.

மனிதனைச் சோதிப்பதற்காக :

இன்னும் சில வானவர்கள் இருக்கின்றார்கள், மனிதர்களைச் சோதனை செய்வதற்காகவே பூமிக்கு இறைவானால் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள், மனிதர்களுக்கு நல்ல வாழ்வாதாரங்களை வழங்கி, அந்த வாழ்வாதரங்களை அனுபவிக்கக் கூடிய அவர்கள், அதற்காக தங்களுடைய இறைவனுக்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றார்களா? என்பதையும் அல்லது ஹாரூத் மற்றும் மாரூத் என்ற இரண்டு மலக்குகள் மக்களுக்கு சூனியத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை வழிகெடுத்தது போல, மக்களை கெட்ட வழிகளில் செல்வதற்கு கற்றுக்  கொடுப்பதற்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றார்கள். இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு குறிப்பிடுகின்றான் :

இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; ''நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்"" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை. (2:102)

மரணத்தின் பொழுது உயிரைக் கைப்பற்றும் வானவர்களும் மற்றும் மண்ணறையில் கேள்வி கணக்குக் கேட்கும் வானவர்களும் ..:

மனிதர்களுக்கு விதியாக்கப்பட்ட இறுதி நேரம் வந்து விட்டால், அவனது மரணத்தின் பொழுது அவனது ஆன்மாவைக் கைப்பற்றுவதற்காகவும், அவர்களுக்கு உதவி செய்வதற்காகவும், அல்லாஹ்வினால் மலக்குல் மவ்த் என்று சொல்லக் கூடிய உயிரைக் கைப்பற்றக் கூடிய வானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மலக்கல் மவ்த் வானவர்கள், மனிதனது ஆன்மாவைக் கைப்பற்றியவுடன், அந்த மனிதனது வாழ்வுக்கு முற்றுப் புள்ளியும் வைத்து விடுகின்றார்கள்.

''உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், ''மலக்குல் மவ்து"" தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்"" என்று (நபியே!) நீர் கூறும். (32:11).

இன்னும் முன்கர் மற்றும் நக்கீர் என்னும் இரண்டு வானவர்கள் இருக்கின்றார்கள் : இவர்கள் மண்ணறையில் வைக்கப்படும் இறந்தோர்களை (அவர்களது மார்க்கம், நம்பிக்கை, வணக்க வழிபாடுகள் மற்றும் வாழ்க்கை குறித்து) கேள்வி கணக்குக் கேட்கப்படுவதற்காக நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் மற்றும் இறைவனை நிராகரித்த மக்களை நோவினை செய்வதற்காகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள், இறக்கும் தருவாயில், இந்த உலகத்தை விட்டுப் பிரிய இருக்கும் மனிதனது நிலை எவ்வாறிருக்கும் என்பது பற்றி இவ்வாறு விவரிக்கின்றார்கள்:

இறைவன் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல்களைப் புரிந்த நல்லடியார் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து, மறுமை என்னும் மறு உலகத்தினுள் காலடி எடுத்து வைக்க இருக்கின்ற அந்த தருணத்தில், வெண்மையான நிற முகத்தை உடைய வானவர், வானத்திலிருந்து அவனருகே இறங்குவார். அந்த வானவர்களுடைய முகமானது சூரியனைப் போன்று பிரகாசமாக இருக்கும். அவர்கள் ஜன்னத் என்று சொல்லக் கூடிய சொர்க்கத்திலிருந்து தங்களுடன் (அந்த நல்லடியாரின் ஆன்மாவைக் கைப்பற்றி எடுத்துச் செல்வதற்காக போர்வைகளையும், வாசனைத் திரவியங்களையும் கொண்டு வந்து அந்த நல்லடியாரின் அருகே (அதிக எண்ணிக்கை கொண்ட) அவனது பார்வை படும் தூரம் வரையும் மலக்குகள் இறங்கி வந்தமர்வார்கள். ஆன்மாவைக் கைப்பற்றக் கூடியவரான மலக்குல் மவ்த் (அலை) அவர்கள் அந்த நல்லடியாரின் அருகே அமர்ந்து, ஓ நல்ல ஆன்மாவே! இறைவனின் மன்னிப்பின் பாலும் மற்றும் அவனது விருப்பத்தின் பாலும் நீ வெளிப்படுவாயாக என்று கூறுவார். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பாத்திரத்திலிருந்து வழிந்து உருண்டோடி வரும் நீர்த் துளியைப் போல அந்த ஆன்மாவானது அவரது உடலிலிருந்து வெளிக் கிளம்பி வரும். அந்த நல்லடியாரின் உடலிலிருந்து வெளிக்கிளம்பி வந்து விட்ட அந்த ஆன்மாவைக் கைப்பற்றிய அந்த மலக்குல் மவ்த் என்ற வானவர்கள், கண்ணிமைக்கும் நேரத்திற்குக் கூட தங்களது கரங்களிலே வைத்திருக்க மாட்டார்கள். அந்த ஆன்மாவை எடுத்து, வானுலகத்திலிருந்து அந்த ஜன்னத் என்ற சொர்க்கச் சோலைகளில் இருந்து கொண்டு வந்திருந்த அந்தத் துணியில் வைத்து, அதில் நறுமணமும் இடுவார்கள். இந்த உலகத்திலே நாம் நுகரக் கூடிய மிகச் சிறந்த வாசனைத் திரவியமாகிய மஸ்க்கைப் போன்றதொரு வாசம் அந்த ஆன்மாவிலிருந்து வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கும். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:| உயிரைக் கைப்பற்றிய அந்த வானவர்கள், தாங்கள் கைப்பற்றிய அந்த நல்லடியாரின் ஆன்மாவுடன் வான் நோக்கி உயர்ந்து செல்வார்கள். அந்த உயிரைக் கைப்பற்றிச் செல்லும் வானவர்களைக் கடந்து செல்லும் எந்த வானவரும், அந்த உயிரிலிருந்து வரக் கூடிய வாசனையை நுகர்ந்து விட்டு, யார் இந்த நல்ல (டியார்?) ஆன்மா? என்று வினவாமல்  இருக்க மாட்டார்கள். அப்பொழுது, இவர் இன்ன இன்ன நபர், இன்ன இன்ன நபரின் மகன் என்றும், எனவே, அவர் வாழ்ந்த அந்த உலக வாழ்க்கையில் அவரைக் குறித்து மிகச் சிறப்பாக அழைக்கப்பட்ட பெயரைக் குறித்தே அவரை அழையுங்கள் என்று கூறப்படும். ஆந்த ஆன்மாவைக் கொண்டு செல்லும் வானவர்கள், அந்த ஆன்மாவுடன் மிகத் தாழ்வான வானத்திற்குச் சென்று, அந்த வானத்தின் கதவுகளைத் திறக்குமாறு (அதன் காவலர்களை) வேண்டுவார்கள். அந்தத் தாழ்வான வானத்தின் கதவுகள் திறக்கப்பட்டவுடன், அதன் அருகில் இருக்கும் வானவர் அவருக்கு அடுத்திருக்கும் வானத்தின் வாயில்கள் வரை அந்த ஆன்மாவுடன் துணைக்கு வருவார். இவ்வாறாக, அந்த ஆன்மாவானது ஒவ்வொரு வானங்களாகக் கடந்து, இறுதியாக ஏழாவது வானம் வரைக்கும் மலக்குமார்களால் எடுத்துச் செல்லப்படும். ஆப்பொழுது, மிகத் தூய்மையானவனும், உயர்ந்தோனுமாகிய அல்லாஹ்! என்னுடைய அடிமையின் நன்மையின் ஏடுகளை மிக உயர்ந்த அந்தஸ்திலே (இடத்திலே) வையுங்கள், ஆனால் இப்பொழுது, இந்த ஆன்மாவை பூமிக்கு எடுத்துச் சென்று, ஏனென்றால் நான் அவனை அதிலிருந்து தான் படைத்தேன், அதிலேயே அவனைத் திருப்பி அனுப்புகின்றேன், பின் மீண்டும் அதிலிருந்தே அவனை நான் எழுப்புவேன் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் சொல்லி விட்டு, மீண்டும் தொடர்ந்தார்கள், அவரது உடலுடன் அவரது ஆன்மாவைச் சேர்க்கப்படும், பின் இரண்டு மலக்குமார்கள் அவரது மண்ணறையின் அருகிலே வந்தமர்ந்து, அதனிடம் கேட்பார்கள், உன்னைப் படைத்து பரிபாலித்த உன்னுடைய ரப் (இறைவன்) யார்? அதற்கு, என்னுடைய ரப் (இறைவன்) அல்லாஹ் என்று பதில் தருவான், பின், உன்னுடைய மார்க்கம் (தீன்) எது? என்று கேட்கப்பார்கள்? அதற்கு என்னுடைய மார்க்கம் (தீன்) இஸ்லாம் என்று பதில் தருவார். பின், உங்களுக்காக (உங்களிலிருந்து) அனுப்பப்பட்ட, அந்த மனிதர் யார்? என்று கேட்க, அதற்கு இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்றும்| இறுதியாக, இவற்றை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய் என்று கேட்கப்படும் பொழுது, அல்லாஹ்வினுடைய வேதத்தின் மூலமாகவும் அறிந்து, அதன் பால் நான் நம்பிக்கையும் கொண்டு, அதில் உண்மையாகவும், வாய்மையாகவும் நடந்து கொண்டேன் என்று பதிலிறுப்பார். வானத்திலிருந்து ஒரு வானவர், என்னுடைய அடியான் உண்மையையே கூறினார், என்று அறிவிப்பார். பின்னர் அவருக்கு ஜன்னத் என்று சொல்லக் கூடிய சொர்க்கத்திலிருந்து படுக்கையையும், ஜன்னத்திலிருந்து ஆடையையும் அணிவியுங்கள் என்று கூறி விட்டு, அவருக்காக சொர்க்கத்துக் கதவுகளை அவரை நோக்கித் திறந்து வையுங்கள் என்றும் கூறப்படும். பின் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கத்திலிருந்து நறுமணம் வீசக் கூடிய தென்றல் காற்று இனிய நறுமணத்துடன் அவரை நோக்கி வீசும் என்றும் கூறினார்கள். அவரது பார்வைபடும் தூரம் வரையிலும் அவரது மண்ணறை விரிவாக்கம் செய்யப்படும். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அழகிய மனிதர் ஒருவர், அழகிய ஆடைகள் அணிந்து நறுமணம் பூசியவராக அந்த நல்லடியாரின் அருகே வந்து கூறுவார், உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அருட்கொடைகளைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருங்கள், இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். அந்த மனிதரைப் பார்த்து, இந்த நல்லடியார், நீங்கள் யார்? என்று வினவி, உங்களது முகம் நல்லனவற்றைக் குறித்து முன்னறிவிப்புச் செய்கின்றனவே என்று கூறியவுடன், நான் தான் உங்களது நல்லமல்கள் என்று பதில் கூறுவார் அந்த மனிதர். அந்த நேரத்தில் இந்த நல்லடியார் இறைவனை நோக்கி விளித்து, என்னுடைய இறைவனே, அந்த இறுதி நேரம் (மறுமைநாள்) எப்பொழுது வரும்?! என்னுடைய ரப் (இறைவனே!) இறுதிநேரம் (மறுமைநாள்) எப்பொழுது வரும்?! அந்த நேரம் விரைவாக வரட்டும், அதன் மூலமாக நான் என்னுடைய குடும்பத்தார்களுடனும் மற்றும் என்னுடைய சொத்துக்களுடனும் நான் சேர்ந்து கொள்ளலாமே என்று கூறுவார்.

மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் : 

ஒரு இறைவனை நிராகரித்தவன் இந்த உலகத்தை விட்டு விட்டு இறப்பெய்திக் கொண்டிருக்கும் தருணத்தில், கரிய நிற முகமுடைய ஒரு வானவர் மிகவும் கடினமானதொரு போர்வையைக் கொண்டு, வானத்திலிருந்து இறங்கி வருவார். அவருடன் சேர்ந்து இறப்பெய்திக் கொண்டிருக்கும் அந்த மனிதனின் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மலக்குகளானவாகள் அவனக்கு அருகில் வந்தமர்வார்கள். மலக்குகள் மவ்த் (அலை) அல்லது உயிரை எடுக்கக் கூடிய வானவர், அந்த மனிதனது தலைமாட்டின் அருகே உட்கார்ந்து கொண்டு, ஓ! தீய ஆன்மாவே! அல்லாஹ்வினுடைய தண்டனையின் பக்கம் வா! என்று கூறுவார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் மேலும் கூறினார்கள்: இறைவனுடைய தண்டனைக்குப் பயந்த அந்த ஆன்மாவது உடலுக்குள் சிதறி ஓடும், அப்பொழுது, அவனது உயிரை வாங்கக் கூடிய அந்த வானவர், தையல்காரன் எவ்வாறு ஈரமான பட்டுத்துணியில் கோர்த்த நூலை எவ்வாறு நூல் வாங்கியைக் கொண்டு பிடித்திழுப்பானோ, அதே போல அந்த ஆன்மாவைப் பிடித்திழுப்பார். உடலிலிருந்து ஒரு முறை ஆன்மா கைப்பற்றப்பட்டு விட்டதென்றால், அதைக் கண் விழித்து மூடும் நேரம் வரைக்கும் கூட வானவர்கள் தங்கள் கைகளிலே வைத்திருக்க மாட்டார்கள். வான மண்டலத்திலிருந்து தங்களுடன் கொண்டு வந்திருந்த அந்த கடினமான ஆடையில், அந்த உயிரை சுற்றுவார்கள். அந்த சுற்றப்பட்ட ஆடையில் இருக்கும் உடலிலிருந்து, இந்த உலகத்தில் அழுகிய பிணத்திலிருந்து எவ்வாறானதொரு துர்நாற்றம் வருமோ, அதே போலத் துர்நாற்றம்  அந்த ஆன்மாவிலிருந்து வந்து கொண்டிருக்கும். இந்த நிலையிலேயே அந்த உயிரை எடுத்துக் கொண்டு வானவர்கள், வானுலகத்திற்கு உயர்வார்கள். அந்த உயிரை எடுத்துச் செல்லும் வானவர்களைக் கடக்கும் எந்த வானவரும், அந்த உயிரைப் பற்றி வினவாமல் இருக்க மாட்டார், அவர்கள், இந்த தீய ஆன்மா யாருடையது? அதற்கு வானவர்கள் கூறுவார்கள், இன்னின்ன மனிதனுடைய ஆன்மா என்று பதில் கூறுவார்கள். அந்த ஆன்மாவைக் குறித்து,மிகவும் கெட்டதொரு பெயரைக் கொண்டு, இந்த உலகத்தில் அவன் எவ்வாறு அழைக்கப்பட்டனோ அதே போல அவனை வானவர்கள் பெயரிட்டு அழைப்பார்கள். அந்த ஆன்மாவைக் கொண்டு சென்ற வானவர்கள், வானமண்டலத்தின் தாழ்வான முதல் வானத்தின் பக்கம் சென்று, அதனது கதவுகள் இந்த ஆன்மாவுக்காக திறக்கப்படுவதற்காக வேண்டுகோள் விடுப்பார்கள், ஆனால் கீழ் வானத்தின் எந்தக் கதவுகளும் அந்த ஆன்மாவுக்காகத் திறக்கப்பட மாட்டாது. மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட இந்த வசனத்தை ஓதினார்கள் :

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.(7:40)

மேலும், அல்லாஹ் கூறுவான், அவனது இந்த பதிவுப்புத்தகத்தை ஸிஜ்ஜீன் என்று சொலலக் கூடிய பூமியின் தாழ்வான பகுதியில் அதனை வையுங்கள். அவனது அந்த பதிவுப் புத்தகம் எதுவும் பயனற்ற குப்பையைப் போல அதனுள் தூக்கி எறியப்படும். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட வசனத்தை ஓதினார்கள் :

அல்லாஹ்வுக்கும் எதையும் இணைவைக்காது அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக இருங்கள்; இன்னும் எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறானோ, அவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் அவனை வாரி எடுத்துச் சென்றது போலும் அல்லது பெருங் காற்றடித்து, அவனை வெகு தொலைவிலுள்ள ஓரிடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றது போலும் ஆகிவிடுவான். (22:31)

அவனது ஆன்மாவை அவனது உடலுடன் சேர்ந்து விடும். அடுத்து, இரண்டு வானவர்கள் அவனிடத்தில் வந்து, அவனை உட்கார வைத்து, அவனிடம், உன்னுடைய ரப் யார்? ஏன்று கேட்க, அதற்கு பதில் சொல்லத் தெரியாத அவன், ஆஹ்! ஆஹ்! என்று சத்தமிட்டு, எனக்குத் தெரியாது என்று கூறுவான். மீண்டும் அவனிடம், உன்னுடைய மார்க்கம் எது என்று கேட்படும் பொழுது, அப்பொழுதும், பதில் தெரியாமல், ஆஹ்! ஆஹ்! என்று சத்தமிட்டு, எனக்குத் தெரியாது என்று கூறுவான். மேலும், உன்னிடம் தூதுச் செய்தியை கொண்டு வருவதற்காக அனுப்பப்பட்ட அந்த மனிதர் யார்? (உனக்கு இறைச் செய்தியைக் கொண்டு வந்த தூதர் யார்?) என்று கேட்கப்படும் பொழுதும், ஆஹ்! ஆஹ்! எனக்குத் தெரியாதே! என்றே பதில் கூறுவான். வானமண்டலத்திலிருந்து ஒரு அழைப்பாளர், என்னுடைய அடிமை பொய் சொல்லி விட்டான் என்று அறிவிப்பார். மேலும் அவனுக்கு நெருப்பினாலான படுக்கையையும், அவனுக்கு நரக நெருப்பின் ஜுவாலை படும்படியாக, நரக  நெருப்பின் ஜன்னல்களை அவனது மண்ணறையை நோக்கித் திறந்து வைக்கும்படி கட்டளையிடப்படும். அந்த நரக நெருப்பிலிருந்து, கருக்கி எடுக்கக் கூடிய கொடும் அனல்காற்றானது அவனை நோக்கி வீசும் மற்றும் அவனது விலா எலும்புகளை உடைத்து நொறுக்கக் கூடிய அளவுக்கு, மண்ணறையானது அவனை நெருக்கும். அப்பொழுது, அழுக்கடைந்த தூநாற்றம் வீசக் கூடிய ஆடை அணிந்தவராக ஒரு மனிதர் அவர் முன் தோன்றி, இப்பொழுது நீ அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பற்றி வருத்தப்படு! இது தான் உனக்காக வாக்களிக்கப்பட்ட நாளாகும். அப்பொழுது, அந்த மனிதன் தன்னை நோக்கி உரையாடும் அந்த மனிதனைப் பார்த்து, நீ யார் என்று கேட்பான்? உன்னுடைய முகம் எனக்கு கெட்டதை அல்லவா முன்னறிவிக்கின்றது என்றும் கூறுவான்? அப்பொழுது, அந்த மனிதர் கூறுவார், நான் தான் உன்னுடைய தீய செயல்கள். அப்பொழுது தான் அந்த மனிதன், என்னுடைய ரப்பே! என்னுடைய இறைவனே! இறுதி நேரமானது இப்பொழுது என்னை நோக்கி வந்து விடாதா! (நான் மரணமடைந்து விடக் கூடாதா?) என்றும் கூறுவான். (அஹ்மது)

இன்னும் சில வானவர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் நல்லடியார்கள் நல்லவழிகளிலே செலுத்தப்படுவதற்காக இறைவனிடம் பிரார்த்தித்த வண்ணமிருப்பார்கள் மற்றும் யார் யாரெல்லாம் கூட்டுத் தொழுகைக்காக பள்ளியில் இருந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்கும் மற்றும் அத்தகைய கூட்டுத் தொழுகையின் வரிசையில் முன்னணயில் நிற்கின்றார்களே அவர்களுக்கும், வானவர்கள் பிரார்தித்த வண்ணமிருக்கின்றார்கள்.

அல்லாஹ்வை நினைவு கூறும் சபையில் இருக்கக் கூடிய வானவர்கள் :

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சில வானவர்கள் இருக்கின்றார்கள், அவர்கள் சாலை நெடுகிலும் நின்று கொண்டு, இறைவனைத் துதிக்கின்ற குழுவினர் யாரும் இருக்கின்றார்களா? என்பதைத் தேடிய வண்ணமிருக்கின்றார்கள். அல்லாஹ்வைக் குறித்து நினைவு கூறக் கூடிய மக்களின் ஒரு கூட்டத்தை அவர்கள் கண்டு கொண்டு விட்டார்கள் என்றால், அவர்களில் ஒருவர் மற்றவரை அழைத்து, வாருங்கள்! நீங்கள் எதைக் குறித்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றீர்களோ, அந்தக் குழு இங்கிருக்கின்றது வாருங்கள் என்றழைப்பார்கள். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அவர்கள் அந்தக் கூட்டத்தை ஒருவர் மற்றவரின் மேல் இறக்கையைத் தாழ்த்தியவராக, வானத்தின் கீழ்ப்பகுதியை அடையும் வரையும் அணிவகுத்து தங்களுடைய இறக்கைகளினால் அந்தக் கூட்டத்தைச் சூழ்ந்து கொண்டு நிற்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

இன்னும் சில மலக்குகள் இருக்கின்றார்கள், அவர்கள் ஜும்மா தினத்தன்று ஜும்ஆத் தொழுகைக்காக வருபவர்களைக் கணக்கெடுப்பதற்காக, பள்ளிவாசலின் ஒவ்வொரு வாயிலிலும் நிற்பார்கள். அவர்கள், வருகின்ற மனிதர்களின் வருகையை அதன் நேரத்தையும் குறித்து பதிவு செய்த வண்ணமிருப்பார்கள். ஜும்ஆ பிரசங்கத்திற்காக இமாம் அவர்கள் வந்து விட்டார் என்றால், அந்த வானவர்கள் தங்களது பதிவுப் புத்தகத்தை மூடி விட்டு, இமாமின் உரையைக் கேட்பதற்காக அமர்ந்து விடுகின்றார்கள். அதாவது, இமாமினுடைய வருகைக்குப் பின் வருபவர்களுடைய வருகையைக் கணக்கிலெடுக்க மாட்டார்கள்.

இமாம் அவர்கள் ஜும்ஆ உரையை நிகழ்த்துவற்காக, ஜும்ஆவின் பிரசங்க மேடையில் ஏறி விட்டார்கள் என்றால், அதன் பிறகு வருபவர்களின் வருகையானது வானவர்களின் வருகைப் பதிவில் இருக்காது என்பதன் கருத்து, தாமதமாக வந்தவர்களும் ஜும்ஆத் தொழுதவர்களாகத் தான் கணக்கிலெடுக்கப்படுவார்கள், இமாமின் ஜும்ஆ பயானுக்கு முன்பு வந்தவர்களின் கூலி, அதற்குப் பின் வந்தவர்களுக்குக் கிடைக்காது. அல்லாஹ் மிக அறிந்தவானாக இருக்கின்றான்.

வானவர்களும் மற்ற படைப்பினங்களும் :

அல்லாஹ்வினுடைய அர்ஷைச் சுமந்த வண்ணம் எட்டு வானவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தான் இறைவனுடைய படைப்பினங்களிலேயே மிகப் பெரும் படைப்பாவார்கள்.  அவர்களுடைய உருவ அமைப்பு இந்த வானங்களையும் பூமியையும் சூழ, பரந்து விரிந்து நிற்க, அவர்களுக்கு மேலாக அல்லாஹ் வீற்றிருக்கின்றான்.

இன்னும் சில மலக்குகள் இருக்கின்றார்கள், அவர்கள் மலைகளை நிர்வகிப்பதற்காகவே நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள், இன்னும் சிலர் மழைக்காகவும், இன்னும் சிலர் பூமி வெளிப்படுத்தக் கூடிய அதன் உற்பத்திக்காகவும் (பயிர் பச்சைகளை வெளிப்படுத்துவதற்காக), இன்னும் சிலர் மேகத்தை ஓட்டி, அதனைக் குவித்து மழை பெய்விப்பதற்காகவும், இன்னும் சிலர் இடிகளை உற்பத்தி செய்வதற்காகவும் ஆகியவை போன்ற நிர்வகித்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் சொர்க்கத்தின் காவலர்களாகவும், இன்னும் சிலர் நரகத்தின் காவலர்களாகவும் இருக்கின்றார்கள். இவர்கள் அன்றி இன்னும் சில வானவர்கள் இருக்கின்றார்கள், அவர்களுடைய பணிகள் மற்றும் எண்ணிக்கை பற்றி இறைவனே மிக அறிந்தவனாக இருக்கின்றான்.

ஒரு முஸ்லிம் அனைத்து வானவர்களின் மீதும் அன்பு செலுத்தக் கடமைப்பட்டவன், அவர்களில் எவரையும் பிரித்துப் பார்ப்பது மற்றும் அவர்களுக்கிடையே அன்பு செலுத்துவதில் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துவது கூடாது, ஏனென்றால், அவர்கள் அனைவரும் அல்லாஹ்வினுடைய நன்னம்பிக்கையைப் பெற்ற, அவனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடிய அவனுடைய அடிமைகளாவார்கள். எனவே, அவர்களில் எந்த ஒரு வானவரையேனும் ஒருவர் வெறுப்பாராகில், அவர் அனைத்து வானவர்களையும் அவர் வெறுத்தொதுக்கின்றவராவார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, வானவர்கள் இறைவன் மீது பூரண நம்பிக்கை கொண்டுள்ள நல்லடியார்களை விரும்புகின்றார்கள், அவர்கள் மீது அன்பு கொள்கின்றார்கள், அவர்களது இம்மை மறுமை நலன்களுக்காக பிரார்த்தனையும் புரிகின்றார்கள். இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறும் பொழுது :

உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே. இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான். (33:43)

மதினாவைப் பாதுகாக்கும் வானவர்கள் :

தஜ்ஜால் என்பவன் அல்லது தன்னை மஸீஹ் என்று பொய் சொல்லக் கூடியவன், ஒருவன் தோன்றுவான், அவன் 40 நாட்களில் இந்த உலகத்தின் அத்தனை பாகங்களையும் கடந்து வரக் கூடிய தன்மை பெற்றவனாக வருவான். அவனது அந்த பயணத்தில் மக்கா, மதினா ஆகிய இரண்டு புனித நகரங்களும் அவன் நுழைவதிலிருந்தும் வானவர்களால் பாதுகாக்கப்படும். தமீம் அத்தாரி என்ற ஸஹாபி இந்த தஜ்ஜால் என்பவனைச் சந்தித்து விட்டு, அவனுடன் ஏற்பட்ட சந்திப்பைப் பற்றி இவ்வாறு விவரிக்கின்றார்:

நான் தான் தஜ்ஜால் என்று சொல்லக் கூடிய பொய்யன் (பொய் மஸீஹ்). நான் இன்னும் சில காலங்களில் விடுவிக்கப்பட இருக்கின்றேன். விடுபட்டவுடன் மக்கா மற்றும் மதினா ஆகிய இரு நகரங்களைகத் தவிர, இந்தப் பூமியில் இருக்கும் எந்த நகரத்தையும், 40 நாட்களுக்குள் நான் கடந்து விடுவேன். இந்த இரண்டு நகரங்களிலும் நான் நுழைவதனின்றும் தடுக்கப்பட்டுள்ளேன். இந்த இரண்டு நகரங்களில் ஏதாவது ஒன்றில் நுழைய நான் முற்படும் போதெல்லாம், வாளைத் தன் கையிலே வைத்திருக்கக் கூடியதொரு வானவர் என்னை எதிர்கொள்வார், நான் அந்நகரத்தில் நுழைவதனின்றும் என்னைத் துரத்தி விடுவார். ஆதன் அத்தனை நுழைவாயில்களிலும் வானவர்கள் காவலுக்காக நிற்பார்கள். (முஸ்லிம், அபூதாவூது மற்றுத் திர்மிதி)

3.  வேதங்களின் மீது நம்பிக்கை கொள்வது :

இறைவன் தன்னுடைய திருத்தூதர்கள் மற்றும் நபிமார்கள் மூலமாக இந்த மனித குலத்திற்கு வழங்கிய வேதங்கள் என்னும் வழிகாட்டுதல்களின் மீதும் ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்வது, ஈமானின் அல்லது நம்பிக்கையின் அடிப்படை விசயமாக இருக்கின்றது. மேலும், அந்தத் தூதர்கள் தாங்கள் எந்த இன மற்றும் குல மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ, அந்தத் தூதர்களையும், அவர்கள் யாருக்காக அந்த வேதத்தைக் கொண்டு வந்தார்களோ, அந்த வேதத்தையும் சேர்த்து நம்பிக்கை கொள்ள வேண்டியதும் அவசியமாக இருக்கின்றது. அல்லாஹ் இதற்கு முன் வாழ்ந்த சமுதாயத்தை அழித்து விட்டதன் காரணம் என்னவெனில், அவர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவர்களையும், நபிமார்களையும் அந்த மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தது தான் காரணமாகும். ஏனவே, நாம் இதற்கு முன் வந்த நபிமார்களையும், அவர்கள் கொண்டு வந்த வேதத்தையும், இவற்றில் எந்தவித பாகுபாடோ அல்லது பிரிவினையோ அல்லது உயர்வு தாழ்வு காட்டாமல், அவற்றின் மீதும் நாம் ஈமான் அல்லது நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

(முஃமின்களே!)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும், இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்;. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்"" என்று கூறுவீர்களாக. (2:136)

வேதங்களின் மீது நம்பிக்கை கொள்வது:

இறைவன் தன்னுடைய தூதர்களுக்கு வழங்கிய செய்திகள் அது எந்த வடிவமாக இருப்பினும், அதாவது மூஸா (அலை) அவர்களுக்கு எழுதப்பட்ட வேதமாக அருளப்பட்ட  தவ்ராத் - ஆக இருக்கட்டும் அல்லது சிறிது சிறிதாக, கொஞ்சம் கொஞ்சமாக முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட நூல் வடிவில் இன்று காணப்படும் குர்ஆனாக இருக்கட்டும் அல்லது இப்றாஹிம் (அலை) அவர்களுக்கு அருளப்பட்ட ஆகமங்களாக இருக்கட்டும் இவை அனைத்தையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொண்டு, அதன் மீது ஈமான் அல்லது நம்பிக்கை கொள்ள வேண்டும். இவை யாவுமே இஸ்மாயீல் (அலை), யாக்கூப் (அலை) மற்றும் அஸ்பாத் (அலை) ஆகியோர்களுக்கு வழங்கி வேதங்களைப் போன்றே, மேலே நாம் பார்த்த நபிமார்களுக்கு வழங்கப்பட்டிருந்த வேதங்களும் இருந்திருக்கின்றன.

மேலும், அல்லாஹ் தன்னுடைய திருத்தூதர்களுக்கும் மற்றும் நபிமார்களுக்கும் அருட்செய்த அனைத்து வேதங்களையும், ஒரு முஸ்லிம் அதில் எதையும் மறுக்காமல் அதன் மீது நம்பிக்கை கொள்வது கட்டாயக் கடமையாக இருக்கின்றது. அதைத் தன்னுடைய திருமறையிலே இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :

(முஃமின்களே!)''நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும், இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்;. இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்"" என்று கூறுவீர்களாக. (2:136)

இறைவனால் அருள் செய்யப்பட்ட வேதங்களை நாம் எவ்வாறு நம்புவது அல்லது நம்பிக்கை கொள்வது?

இறைவன் தன்னுடைய முந்தைய தூதர்களுக்கு வழங்கிய வேதங்களையும், அந்த வேதங்களில் உள்ளவற்றையும், அந்த வேதங்களை எந்த சமுதாயத்தார்களுக்காக அனுப்பினானோ அந்த சமுதாயத்தவர்கள், அதனை முற்றுமுழுதாக மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டியது அந்த சமுதாயத்தவர்கள் கட்டாயக் கடமையாக இருந்தது போல, நாமும் அவற்றை ஏற்று நம்பிக்கை கொள்வது கடமையாக இருக்கின்றது.

இதற்கு முன் இறைவன் அருளிய வேதங்களில் உள்ளவற்றையும், யாருக்கு அந்த வேதங்கள் அருள் செய்யப்பட்டனவோ அவர்களின் மீது அவற்றைப் பின்பற்றுவது அல்லது அவற்றின் மீது நம்பிக்கை கொள்வது என்பது அந்த சமுதாயங்களின் மீது கடமையாக இருந்ததோ, அவற்றின் மீதும் நாம் நம்பிக்கை கொள்வது அவசியமாக இருக்கின்றது. மேலும் இறைவனால் அருள் செய்யப்பட்ட வேதங்கள் யாவும் ஒன்றுக்கொன்று (ஆதாரங்களிலும், அவற்றின் வெளிப்பாடுகளிலும், அதன் உண்மைத்துவத்திலும்) ஒத்துழைப்பு நல்கி வருவதையும், அதன் நம்பிக்கைக்கு வாய்மைக்கு சாட்சி சொல்லக் கூடியதாகவும் இருப்பதைக் காண முடிகின்றது. இறைவனால் அருள் செய்யப்பட்ட வேதங்களில், எந்த வேதத்தையாவது யாராகிலும் வெறுப்பாராகில், அவர் இறைவனை நிராகரித்தவராகின்றார்.

இருப்பினும், ஒரு வேதம் அருள் செய்யப்பட்ட பின்பு, அதற்குப்பின் அருள் செய்யப்பட்ட வேதமானது முந்தைய வேதத்தில் உள்ள சட்டங்களை ஓரளவோ அல்லது முழுவதுமாகவோ, வழக்கொழிந்து போகச் செய்தல் அல்லது நீக்கி இருப்பதைக் காண முடிகின்றது என்பதில் நம்பிக்கை கொள்கின்றோம். இதனடிப்படையில், இறைவனால் இறுதியாக அருள்செய்யப்பட்ட வேதமான திருமறைக் குர்ஆனானது, இதற்கு முன் இறைவானல் அருள் செய்யப்பட்ட வேதமான அல்லது காலத்தால் குர்ஆனை விட முந்தியதுமான தவ்ராத் மற்றும் புதிய ஆகமங்கள் ஆகியவற்றில் உள்ள சட்டங்கள் பலவற்றைத் தடை செய்தும், அவற்றை வழக்கில் இருந்து நீக்கியும் உள்ளதைக் காண முடிகின்றது.

இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் கூற வேண்டும் என்றால் : ஆதம் (அலை) அவர்கள் தங்களது மகள்களை தங்களுடைய மகன்மார்களுக்குத் திருமணம் செய்விப்பதற்கு அனுமதியளித்திருந்தார், இந்தச் சட்டம் பின் வந்த சமுதாயத்தவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தில் தடை செய்யப்பட்டிருந்து. அல்லது பின்பு அருள் செய்யப்பட்ட வேதங்கள் இந்தச் சட்டத்தை தடை செய்து, வழக்கில் இருந்து நீக்கி விட்டன. யாக்கூப் (அலை) அவர்களது காலத்தில் ஒரே சமயத்தில் இரண்டு சகோதரிகளை திருமணம் செய்யலாம், என்ற சட்டமானது பின்பு வந்த வேதங்களால் தடை செய்யப்பட்டன. மேலும் பழைய ஏற்பாட்டில் ஆகுமாக்கப்பட்டிருந்த பல சட்டங்கள், புதிய ஏற்பாட்டினால் பின்பு தடை செய்யப்பட்டன. ஈஸா (அலை) இஸ்ராயீலின் சந்ததிகளைப் பார்த்து இவ்வாறு கூறினார் :

''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;. (3:50)

இதைப் போன்றே, திருமறைக் குர்ஆனும், அதற்கு முன் அருள்செய்யப்பட்ட பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் இருக்கும் சட்டங்களைத் தடையும் செய்திருக்கின்றது என்பதைக் காண முடிகின்றது.

இறைவன் தன்னுடைய திருமறையிலே இதைப் பற்றிக் கூறும் பொழுது :

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார். பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார். தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார். கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். அவர்களுடைய பழுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிழுவார். எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (7:157)

வேத வெளிப்பாட்டின் வழிமுறைகள் :

அனைத்து வேதங்களுக்கும் ஒரே ஒரு வழி முறை மட்டும் தான் இருக்கின்றது. இதைப் பற்றித் தன் திருமறையில் இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :

அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன். (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான். இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களேர் அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான். (3:2-4)

இறைவன் இத்தகைய வேதவெளிப்பாடுகளை மனிதகுலத்திற்கு அருள் செய்ததற்கு ஒரே ஒரு காரணம் மட்டும் தான் இருந்தது, அதாவது, இந்த மனித குலத்திற்குத் தன்னுடைய ஏகத்துவத்தை அறிவுறுத்தி, வணக்கம் மற்றும் வழிபாடுகளை அந்த அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தனித்துவப்படுத்தி, அதன் மூலம் இந்த மனித சமுதாயத்தை இந்த உலக வாழ்க்கையின் சுபிட்சத்திற்கும் மற்றும் வரவிருக்கின்ற அதாவது அவன் இறந்து மண்ணோடு ஆன பின், அவன் செல்லவிருக்கின்ற மறுமை வாழ்க்கையிலும் சுபிட்சத்தை வழங்குவதற்காகவுமே, ஆகிய நேர்வழியைப் பின்பற்றுவதற்காகவுமே, அத்தகைய நேரான பாதையில் மனிதகுலத்தைச் செலுத்துவதற்காகவுமே, தன்னுடைய திருத்தூதர்கள் மூலமாக இறைவன் வேதங்களை அருள் செய்தான். (நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு) முன் அருள் செய்யப்பட்ட வேதங்கள் யாவும், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு மற்றும் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதிக்கு மட்டுமே அருள் செய்யப்பட்டன. அந்த வேதங்களை எல்லாம் அதன் மூலத்திலேயே பாதுகாப்பதாக இறைவன் வாக்களிக்கவில்லை, மாறாக, அவற்றை மதபோதகர்கள் என்று சொல்லக் கூடிய ரப்பீஸ் மற்றும் மார்க்க அறிஞர்கள் மூலமாக அவற்றை மனனமிட்டு வைத்திருக்குமாறு, அந்த அந்த சமுதாயங்களில் உள்ளவர்களுக்கு இறைவன் கட்டளை பிறப்பித்தான்.

இது வரை அருள் செய்யப்பட்ட வேதங்கள் யாவும் பல்வேறு வகைப்பட்டனவாகவும் இருந்தன என்று திருமறைக் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளபடி, அதாவது, இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு அருள் செய்யப்பட்ட சுஹுஃபுகள் என்று சொல்லக் கூடிய ஆகமங்கள்|மூஸா (அலை) அவர்களுக்கு அருள்செய்யப்பட்ட தவ்ராத்|தாவூத் (அலை) அவர்களுக்கு அருள் செய்யப்பட்ட ஸபூர் (சங்கீதங்கள்)|ஈஸா (அலை) அவர்களுக்கு அருள் செய்யப்பட்ட கோஸ்பல் என்று சொல்லக் கூடிய நற்செய்திகள்| மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருள் செய்யப்பட்ட குர்ஆன்|இவையாவும் பல்வேறு சமுதாயங்களுக்கு பல்வேறு காலநிலைகளில் வழங்கப்பட்ட வேதங்களாகும். இது தவிர தன்னுடைய மற்ற தூதர்களுக்கு இறைவன் வேதங்களை வழங்கியே இருக்கின்றான், ஆனால் அவற்றை திருமறைக் குர்ஆனில் அவன் குறிப்பிட்டிருக்கவில்லை. எனவே, அவன் தான் அல்லாஹ், இறைவனாகிய அவன் தன்னுடைய படைப்பினங்களில் ஒன்றாகிய இந்த மனித சமுதாயம் பின்பற்றி நடப்பதற்காக வேண்டிய வாழ்க்கைச் சட்டங்களை அல்லது வழிமுறைகளை தன்னுடைய வேதவெளிப்பாடுகள் மூலமாக வழங்கி, அதன் மூலமாக எதற்காக இந்த மனித சமுதாயத்தை இந்த பூமிக்குக் கொண்டு வந்தானோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவுமேயாகும். 

ஒரு தனிப்பட்ட அல்லது சுய அதிகாரம் பெற்ற ஒருவனால் வகுத்தளிக்கப்பட்ட சட்டங்கள், அந்தச் சட்டங்கள் அவனது நன்மை தீமைகளைப் பொறுத்து, அவன் வாழும் இந்த உலகிலும், அவன் வந்து சேரவிருக்கின்ற மறுமை வாழ்விலும் நன்மை தீமைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய, நன்மை என்றால் பரிசுகளும், தீமை என்றால் தண்டனைகளும் வழங்கக் கூடிய, அத்தகைய தனித்துவம் வாய்ந்த அதிகாரம் பெற்ற ஒரே இறைவனால் வகுத்தளிக்கப்பட்ட சட்டங்களைப் பின்பற்றி தன்னுடைய வாழ்க்கையை சீராகவும், நிலையாகவும், அமைதியாகவும் அவன் நடத்த முடியுமே அன்றி, இத்தகைய வழிமுறையல்லாத ஒன்றினால் தன்னுடைய வாழ்க்கையை இந்த மனிதனால் ஒரு நிலையான மற்றும் நாகரீகமான வாழ்க்கையாக வாழ இயலவே இயலாது. இருப்பினும், அவர்கள் பல்வேறு அதிகாரம் பெற்றவர்களால் வழங்கப்பட்ட பல்வேறு சட்டங்களைப் பின்பற்றும் பொழுது,  அத்தகையவர்களால் இந்த உலகத்தில் மட்டுமே வெகுமதிகள் மற்றும் தண்டனைகளை வழங்க இயலுமாக இருக்கும்| இத்தகைய நிலையில் மனிதன் இரண்டு விதமான வழிமுறைகளில் செல்ல வேண்டி இருக்கின்றது மற்றும் இரண்டு விதமான அதிகாரம் பெற்றவர்களின் அதிகாரத்திற்கு உட்பட வேண்டி இருக்கின்றது. (அதாவது, இந்த உலக வாழ்க்கையில் வேண்டுமென்றால் தங்களின் மீது அதிகாரம் செலுத்திய அல்லது தான் கீழ்ப்படிந்த அதிகாரம் பெற்றவர்களிடம் வெகுமதிகளோ அல்லது தண்டனைகளோ பெற்றுக் கொள்ளலாம்| ஆனால் இந்த உலகத்தில் அதிகாரம் பெற்றவர்கள் மற்றும் அந்த அதிகாரத்தைப் பின்பற்றிய இருவருமே, இறந்து மரித்த பின் எழுப்பக் கூடிய அந்த மறுமைநாளில் முழு முதல் அதிகாரம் பெற்றவனாகி இறைவனாகிய அல்லாஹ்விடமே, தண்டனைகளுக்கும் மற்றும் வெகுமதிகளுக்காகவும் செல்ல வேண்டியதிருக்கின்றது. இந்த உலகத்தில் அதிகாரம் பெற்றவர்களின் சட்டங்களுக்கும், மறு உலகத்தில் இறைவனுடைய சட்டங்களுக்கும் உட்படுவது, இரண்டு வித வழிமுறை| இந்த வழிமுறைக்குப்பதிலாக இந்த உலகத்திலும், மறுஉலகத்திலும் அந்த ஏக இறைவனது சட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்படுவது ஒரே வழிமுறையாகும், இது தான் நேரான வழிமுறையாகவும் இருக்கின்றது).

இருவித வழிமுறைகளுக்கு உட்படும் பொழுது, மனித வாழ்வு தகர்ந்தும் மற்றும் ஒழுங்கின்மை, மனித வாழ்வு உருக்குலைந்தும் போகும் மற்றும் எங்கும் ஊழலும் பிறரைச் சுரண்டுதலும், ஏமாற்றுதலுமே மிகுந்து நிற்கும்.

(வானம், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன். (21:22).

(இங்கு அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் என்பது, இரண்டு வித தெய்வங்களையும் குறிக்கலாம். அல்லது இரு வேறு அதிகாரம் பெற்றவர்களையும் குறிக்கலாம். அல்லது இரண்டு வித சட்டமுறைகளையும் குறிக்கலாம்.)

இந்த ஒரு உண்மையின்படி, கால நெடுகிலும் இருந்து வந்த ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களுக்குப் பொருந்துகின்ற அளவில் மற்றும் அவர்களுடைய நோக்கத்திற்குப் பயன்படுகின்ற விதத்தில் அமைந்த சட்டங்களையும் மற்றும் வணக்கவழிபாடுகளுக்குத் தேவையான திட்டங்களையும் அல்லாஹ் அந்தந்த சமுதாயங்களுக்கு வழங்கி, அவற்றை நிறுவியும் வந்திருக்கின்றான். இந்தவொரு உண்மையின் பிரகாரம், அல்லாஹ், ஆதம் (அலை) அவர்கள் முதல், மறுமை நாள் வரை மனிதன் ஏற்றுப் பின்பற்றுகின்ற சட்டமாக, ஒரே ஒரு, ஒரே சீரான கொள்கைகளைக் கொண்ட சட்டமான (இஸ்லாமிய அகீதாவை) இந்த மனிதன் மீது கடமையாக்கி இருக்கின்றான் என்பது தெளிவாகின்றது.

இந்த உலகத்தில் உள்ள படைப்பினங்கள் அத்தனையும் அல்லாஹ் ஒருவனையே தன்னைப் படைத்தவனாக ஏற்றுக் கொண்டு, தங்களுடைய வண்க்க வழிபாடுகளை செலுத்துவதற்குத் தகுதியானவனாக ஏற்றுக் கொள்வதற்காகவே அன்றி வேறு எதற்காக இந்த படைப்பினங்களை இறைவன் படைக்கவில்லை. இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :

மனித மற்றும் ஜின் வர்க்கத்தாரை என்னை வணங்குவதற்காகவே அன்றி நான் படைக்கவில்லை. (51:56).

மனித குலத்திற்கு அருள் செய்யப்பட்ட புனித வேதங்களாவன :

1. தௌராத் - இது மூஸா (அலை) அவர்களுக்கு அருள் செய்யப்பட்டது.

2. ஸபூர் - இது தாவூது (அலை) அவர்களுக்கு அருள் செய்யப்பட்டது

3. இன்ஜீல் அல்லது புதிய ஏற்பாடு - இது ஈஸா (அலை) அவர்களுக்கு அருள் செய்யப்ட்டது.

மேலே உள்ள அனைத்து வேதங்களும், வேதம் வழங்கப்பட்டவர்களாகிய யூத மற்றும் கிறிஸ்த்தவர்களிடம், தவ்ராத் அல்லது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்ற பெயரில் இருக்கின்ற இவைகள், இறைவன் எவ்வாறு அருளினானோ அத்தகைய நிலையில் இல்லை அதாவது, அவற்றின் புனிதத்தன்மைகளை அவைகள் இழந்து விட்டன, ஏனென்றால், அவைகள் எவ்வாறு அருள்செய்யப்பட்டனவோ அதன்படி இல்லாமல் அதன் மூலத்தை இழந்து விட்டன, அவைகள் மாற்றம் செய்யப்பட்டு விட்டன மற்றும் இடைச்செறுகல்கள் பல இடம் பெற்றும் விட்டன. இதன் காரணமாக, புதிய மற்றும் பழைய ஏற்பாடு, மற்றும் பைபிள் ஆகிய அனைத்து வேத புத்தகங்களும், திருமறைக் குர்ஆனால் தடை செய்யப்பட்டு விட்டன.

4.  திருமறைக் குர்ஆன் : இறைவன் தானே பாதுகாப்பதாக வாக்குறுதியளித்துள்ள திருமறைக் குர்ஆனானது இந்த மனித குலத்திற்கு இறைவன் வழங்கிய இறுதி வேதமாக இருக்கின்றது, இதைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகின்றான் :

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

இது தான் (திருமறைக்குர்ஆன்) இறைவனுடைய வாக்குமாகும், இது இறைவனுடைய இறுதி வேதமுமாகும், இதைத் தான் அல்லாஹ், முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கி, இந்த உலகில் வாழக் கூடிய அனைத்து சமுதாயத்திற்குமான, பொதுவாக மனிதகுலம் அத்தனைக்கும் எடுத்துரைப்பதற்காக வழங்கினான். இந்த திருமறைக் குர்ஆன் தான் இஸ்லாமிச் சட்டமுறைகளுக்கான (ஷரீஆத்திற்கு) மூல மற்றும் அடிப்படை ஆதாரமுமாகும். ஆல்லாஹ் அருள் செய்திருக்கின்ற இந்த திருமறைக்குர்ஆன் என்னும் வேதத்தின் மூலமாக அனைத்தையும் விளக்கப்படுத்தவும், மற்றும் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதாகவும் மற்றும் இதன் மூலம்  மனித மற்றும் ஜின் வர்க்கத்தினருக்கு ஒரு கருணையாகவுமே, திருமறைக் குர்ஆனை இறைவன் அருளியிருக்கின்றான்.

திருமறைக் குர்ஆனின் உன்னதத்தை எடுத்துரைப்பதற்கு மேற்கொண்ட சான்றளிப்புகள் மற்றும் போதுமானதாகாது. இதைக் காட்டிலும், அவற்றின் கட்டளைகளை நம்முடைய வாழ்க்கையிலே அமுல் செய்து, அவற்றை ஏற்று நடந்து, அத்துடன் அவற்றின் விலக்கல்களையும் அதாவது அது தடை செய்திருப்பவற்றிலிருந்து தவிர்ந்தும் வாழ்வது ஒன்றே அதன் வாய்மைக்கு நாம் அளிக்கக் கூடிய உண்மையான சாட்சியமாக இருக்கும். இன்றைக்கு இருக்கின்ற வேதங்களிலேயே குர்ஆன் ஒன்றே ஒன்று தான் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே உள்ள உறவுக்குப் பாலமாகச் செயல்படக் கூடியதொன்றாக இருக்கின்றது. இதைப் பற்றி முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

மகிழ்வுறுங்கள்! நிச்சயமாக! குர்ஆனின் ஒரு முனையானது அல்லாஹ்வின் கரங்களில் உள்ளது, அதன் மறுமுனையானது உங்களது கரங்களில் உள்ளது. அதனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு, நீங்கள் அழிவுக்கு உட்படவும் மாட்டீர்கள் மற்றும் வழிகெடவும் மாட்டீர்கள். (அத் தபரானீ).

இறைவன் தன்னுடைய இறுதி வேதமாகிய திருமறைக் குர்ஆனை நிலைப்படுத்தி வைக்கவும் மற்றும் திரிபுகள், அடித்தல், திருத்தல்களிலிருந்து பாதுகாப்பதாகவும், அதில் மனிதக் கைகள் புகந்து அதன் வாய்மைக்கு கலங்கம் விளைவதலிருந்தும், மற்றும் அடித்தல், திருத்துதல், சேர்த்தல் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாப்பதாக அல்லாஹ் வாக்களித்துமிருக்கின்றான். இதைத் தன்னுடைய திருமறைக்குர்ஆனிலேயே இறைவன் தெளிவாக்கியுமிருக்கின்றான் :

நிச்சயமாக நாம் தான் (நினைவூட்டும்-திக்ரு என்னும்) இவ்வேதத்தை (உம்மீது) இறக்கி வைத்தோம்; நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம். (15:9)

இங்கே நினைவூட்டும் - திக்ரு என்பது, குர்ஆனையும், சுன்னா என்று சொல்லக் கூடிய முஹம்மது (ஸல்) அவர்களின் சொல் செயல் அங்கீராம் ஆகியவற்றையும் குறிக்கும்.

இந்த திருமறைக் குர்ஆனானர், முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பகுதி பகுதியாக, சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு, அதற்கு ஏற்றவாறான வழிகாட்டுதல்களைக் கொண்ட அறிவுரையாக, ஏவல்கள் மற்றும் விலக்கல்கள் அமைந்த கட்டளைகளாக 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக இறக்கியருள் செய்யப்பட்டன| முஹம்மது (ஸல்) அவர்களின் 13 வருட மக்கா வாழ்க்கையிலும், மற்றும் 10 வருட மதினா வாழ்க்கையிலும் இறக்கியருளப்பட்டன. புல்வேறு பட்ட அளவுகளைக் கொண்ட பாகங்களாக (சூராக்களாக), மொத்தம் 114 பாகங்களாக இந்தத் திருமறைக் குர்ஆன் பிரிக்கப்பட்டுள்ளது.

இதைப் போன்தொரு புனிதமிக்க குர்ஆனை கொண்டு வருமாறு, அரபுக்கள் மற்றும் அரபு அல்லாத மக்களுக்கு, உயர்ந்தோனாகிய ஞானமிக்கவனாகிய அல்லாஹ் தன்னுடைய திருமறையின் மூலமாக அறைகூவல் விடுத்துள்ளான். இந்த அறைகூவலானது, 10 சூராக்களையாவது, அதாவது பத்து அத்தியாயங்களையாவது உருவாக்கிக் கொண்டு வாருங்கள் என்று குறைக்கப்பட்ட போதிலும், இது வரை அந்த அறைகூவலை யாராலும் நிறைவேற்ற முடியாத நிலையிலேயே உள்ளது. இறுதியாக, குர்ஆனைப் போன்றதொரு ஒரே ஒரு சூராவையேனும் உருவாக்கிக் கொண்டு வாருங்கள் என்ற என்ற அவனது அறைகூவலும், இன்றளவும் எவராலும் எதிர்கொள்ளப்பட முடியாமலேயே உள்ளது. இத்தனைக்கும் இந்த அறைகூவலை எதிர்கொள்ளக் கூடியவர்கள் திறமைமிக்க சொல்வன்மை மிக்க மற்றும் வாதத்திறமை மிக்கவர்களாக இருந்த போதிலும், அல்லாஹ்வின் இந்த அறைகூவலை எதிர்கொள்ள இயலாமல் தோற்றுத் தான் போயுள்ளனர். இந்த திருமறைக் குர்ஆனானது, இந்த அகில உலகங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் வல்லோனாகிய அல்லாஹ்வினால் அருளப்பட்டது என்பதையும், அவனையன்றி வேறு யாராலும், இவ்வளவு மகத்துவமிக்கதொரு வேதத்தை இறக்கியருளியிருக்க முடியாது என்பதை, அவர்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கின்றார்கள்.

இதற்கு முன் வந்த இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களுக்கும்| அவர்களது வாய்மைக்குச் சான்றாக விளங்கியதற்கும் மற்றும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கிய அற்புதங்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்றால், முந்திய தூதர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்கள் யாவும், அந்த இறைத்தூதர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டும் தான் அவை அற்புதங்களாகத் திகழ்ந்தன (அவர்கள் வாழ்ந்த காலத்தோடு முடிவு பெற்று விட்டன), இங்கே முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமான திருமறைக் குர்ஆனோ இன்றும் தன்னுடைய தாக்கத்தை (அற்புதத்தை) வெளிப்படுத்திக் கொண்டும், இறுதிக் காலம் வரைக்கும் மற்றும் அந்த மறுமை நாள் வரைக்கும் தன்னுடைய வாய்மைக்கும், அற்புதத்திற்குமொரு சவாலாகவே விளங்கிக் கொண்டிருக்கும்.

திருமறைக் குர்ஆன் ஒரு விரிவான சட்ட நூல் :

இஸ்லாத்தின் அடிப்படை சட்டங்களாகிய ஷரீஅத் சட்டங்கள் அல்லது இறைவனது புனிதச் சட்டங்கள் மற்றும் சட்டவரையறைகளுக்கு மூல ஊற்றாக இருக்கக் கூடிய திருமறைக்குர்ஆனானது, இஸ்லாத்தின் சட்டங்களை (அனைத்து மக்களின்) வாழ்க்கையிலே நடைமுறையில் பின்பற்றக் கூடிய அளவில் மிக விரிவான சட்டங்களை அல்லது அதன் கருத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த ஷரீஅத் சட்டங்கள் யாவும் மிக விரிவானது, ஏனென்றால் அது சட்டதிட்டங்களையும், அதனைப் பின்பற்ற வேண்டியதன் நோக்கத்தையும் அல்லது கடமையாக்கப்பட்டதன் நோக்கத்தையும் மற்றும் ஒழுக்க மாண்புகளையும் மற்றும் ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் தங்கள் வாழ்க்கையிலே பின்பற்றி ஏற்று நடக்கக் கூடிய சமயச் சட்டங்களையும் கொண்டதாக அமைந்திருக்கின்றது. மேலும், இந்த இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் என்று சொல்லக் கூடிய இந்தச் சட்டங்கள் முஸ்லிம்கள் மட்டும் ஏற்று, அதனைத் தங்கள் வாழ்க்கையிலே பின்பற்றக் கூடியதானதொன்றாக மட்டும் அமைக்கப்படவில்லை, மாறாக மனித குலம் அத்தனையும் மற்றும் அனைத்துக் காலத்து மக்களும் ஏற்றுப் பின்பற்றக் கூடிய அளவில் இறைவனால் அருள் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் மனிதர்களுக்குத் தேவையான அனைத்து சட்டங்களை உள்ளடக்கியதாகவும்| மனித குலத்திற்கும் மற்றும் அல்லாஹ்வுக்கும் அதாவது இந்த மனிதனைப் படைத்த இறைவனுக்கும் மற்றும் அவன் படைத்திருக்கின்ற படைப்புகள் அத்தனைக்கும், தனிப்பட்ட அளவிலும் அல்லது சொந்த வாழ்வு மற்றும் பொதுவாழ்வு என்ற அளவிலும் இந்த மனிதன் மீது இருக்கின்ற கடமைகள் குறித்து விவரிப்பதாகவும் இந்த ஷரீஅத் சட்டங்கள் இருக்கின்றன.

மேலும் இன்று மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் யாவும், அதை உருவாக்கிய மனிதனின் தனிப்பட்ட விருப்பு வெருப்புக்களை உள்ளடக்கிய கொள்கை அல்லது கோட்பாடுகளாகும். எப்பொழுதெல்லாம் கொள்கைகளை உருவாக்கக் கூடிய புதிய மனிதர்கள் வருகின்றார்களோ அல்லது எப்பொழுதெல்லாம் புதிய கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றனவோ, அப்பொழுதெல்லாம் ஏற்கனவே அமுலில் இருக்கக் கூடிய சட்டங்கள் புதிய சட்ட அமுல் செய்யப்பட்டதன்படி, பழைய சட்டங்கள் மாற்றமடைகின்றன. ஆனால், இறைவனால் அருள்செய்யப்ட்டிருக்கும் இறைச்சட்டங்கள் (குர்ஆனிய ஷரிஅத் சட்டங்கள்) என்றைக்கும் மாற்றங்கள் செய்யப்பட முடியாததும் மற்றும் நிலையானதுமாகும், ஏனெனில் இந்த ஷரீஅத் சட்டங்களை இந்த மனித சமுதாயத்திற்கு வழங்கியவன் நிலையான நித்திய ஜீவனாக, முடிவே இல்லாதவனாக இருக்கக் கூடிய அந்த வல்ல இறைவனாகிய அல்லாஹ்வால் அருள் செய்யப்பட்டதாகும். அவன் தான் அகில உலகங்களையும்  அதில் உள்ளவற்றையும் படைத்து பரிபக்குவப்படுத்திய படைப்பாளனாகிய அல்லாஹ், அவன் தான் இந்த மனிதனையும் படைத்து, அவனது இறுதி நாள் வரை அவனது வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துச் சட்டங்களையும் இயற்றி வழங்கி இருக்கின்றான். இந்த மனித வாழ்க்கைக்கு வழிகாட்டுவதற்காகவே அருள் செய்யப்பட்ட இறைவனது திருமறையாகிய திருக்குர்ஆன், அது தான் இந்த மனித சமுதாயம் ஏற்றுப் பின்பற்றுவதற்கு அருள் செய்யப்பட்ட இறுதி வேதமும், இதுவரை இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்துத் தூதர்களுக்கும் இறுதித் தூதராக வந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருள் செய்யப்பட்டதும் மற்றும் இதற்கு முன் வந்த அனைத்துத் தூதர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து புனித நூல்களையும் தடை செய்யக் கூடியதாகவும், இவற்றிற்கெல்லாம் அதன் தனித்துவம் காரணமாகவும் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதமாகிய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:

இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்; ''நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்;. அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!"" என்று. (10:37-38)

முஸ்லிம் சமுதாயமானது இறைவன் தனக்கு வழங்கிய இறைவேதமாகிய குர்ஆனைப் போற்றி, அதில் எந்த இடைச் செறுகலையும் செய்திடாது அவற்றைப் பாதுகாத்து வருவது போல், வேறு எந்தச் சமுதாயமும் இறைவன் தனக்கு வழங்கிய வேதத்தைப் போற்றிப் பாதுகாத்து வந்ததாகவோ அல்லது அவற்றைப் பின்பற்றி வந்ததாகவோ கிடையாது மற்றும் எந்த  இடைச்செறுகல்களுக்கும் இடம் கொடாமல் பாதுகாத்து வந்திருக்கவுமில்லை. மற்ற இறைவேதங்களைப் போலல்லாமல், இறைவேதமாகிய திருக்குர்ஆனானது ஒரு குறிப்பிட்ட வகுப்பாரிடமோ அல்லது ஒரு குறிப்பிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களிடமோ இருந்திடாமல் இருந்திட்ட காரணத்தினால் தான், அது எந்த வித சந்தேகங்களுக்கோ அல்லது இடைச் செறுகல்களுக்கோ அல்லது அந்தக் குறிப்பிட்ட குழு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களினால் (தங்கள் தங்கள் வசதிக்குத் தக்கவாறு) இடைச்செறுகல்களைச் செய்ய முடியாததாகப் பாதுகாக்கப்பட்டதாக இருந்து வந்து கொண்டிருக்கின்றது. ஒரு தனிப்பட்ட நபர் அல்லது குறிப்பிட்ட குழுவினரிடம் இருந்து வந்ததில்லை என்பது மட்டுமல்லாமல், எந்தவொரு முஸ்லிமும் வெகு இலகுவாக, எப்பொழுதும் அதனை அடைந்து கொள்ளக் கூடியதாக அல்லது அதன் வழிகாட்டுதல்களைத் தானே பெற்றுக் கொள்ளக் கூடியதாகவும் திருமறைக் குர்ஆன் இருந்து வந்துகொண்டிருக்கின்றது. இதன் காரணமாகவும் மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைகளுக்கிணங்கவும் முஸ்லிம்கள் ஒவ்வொரு நேரத் தொழுகையின் பொழுது, ஏதாவதொரு குர்ஆனிய வசனங்களை தங்களுடைய தொழுகையிலே ஓதக் கூடியவர்களாக, அதன் சட்ட திட்டங்களை நினைவு கூறுக் கூடியவர்களாக  இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் நடைமுறையிலே கண்டு வருகின்றோம். மேலும், முஸ்லிம்களுக்கிடையே ஏற்படக் கூடிய எந்தப் பிரச்னையாக இருந்தாலும், அந்தப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்வதற்குரிய இறுதி முடிவாக, குர்ஆனின் வழிகாட்டுதல்களை அணுகுமாறு அல்லாஹ் கட்டளை பிறப்பித்துள்ளான். இன்று ஒரே தொகுப்பாக தொகுக்கப்பட்டுக் காணப்படும் இந்தத் திருமறைக் குர்ஆன் இறங்கியருளிய அந்த நேரத்தில் அதனை மனனமிட்டு வைத்திருந்த முதல் முஸ்லிம் எந்த அளவுள்ள குர்ஆனை மனனமிட்டு வைத்திருந்தார்களோ, அதே அளவுள்ள திருக்குர்ஆன் தான் இன்றளவும் இருந்து வருகின்றது. கால மாற்றங்களினால் எந்த இடைச்செறுகல்களுக்கும் அடித்தல், திருத்தல்களுக்கும் இடங்கொடாமல் முஸ்லிம்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இறைவன் இந்த உலகு முடியும் நாள் வரையிலும் அதே தன்மையோடு தானே அதனைப் பாதுகாப்பதாக வாக்களித்திருக்கின்றான். முஹம்மது (ஸல்) அவர்களும், அவர்களுடன் இருந்த அவரது கண்ணியமிக்க தோழர்களும் எந்தக் குர்ஆனை ஓதினார்களோ அதே குர்ஆன் தான் இன்றுள்ள முஸ்லிம்களாலும் ஓதப்பட்டு வருகின்றது. இந்த திருமறைக் குர்ஆனில் எந்த ஒரு எழுத்தும், மற்றும் அதில் உள்ள எந்த ஒரு சிறு புள்ளியும் இது வரை சேர்க்கப்படவுமில்லை மற்றும் அதிலிருந்து நீக்கப்படவுமில்லை. அதன் புனிதத் தன்மை இன்றளவும் பாதுகாப்பாக இருந்து வருகின்றது.

4. இறைத்தூதர்கள் மீது நம்பிக்கை (ஈமான்) கொள்வது :

இறைத்தூதர்களை நம்புவது என்பது, இறைவன் அனைத்து மக்களுக்கும் தன்னுடைய தூதர்களை அனுப்பி, அதன் மூலம் தன்னைத் தனித்துவமாக வணங்க வேண்டும் என்ற அழைப்பிற்கு சான்று பகர்வதாகவும் இருக்கின்றது. இந்த வித நம்பிக்கையானது இறைவனுக்கு அடுத்ததாக வணங்கிக் கொண்டிருக்கின்ற அனைத்துக் கடவுள்களையும் விட்டு விட்டு அல்லது இறைவனைத் தவிர்த்து வேறெதனையும் வணங்குவதனின்றும் தவிர்ந்து கொண்டு, (இதுவரை வந்த) அனைத்து இறைத்தூதர்களையும் நம்பி மற்றும் அவர்கள் மக்களுக்குத் தெரிவித்த செய்திகள் யாவும் இறைவன் அந்த இறைத்தூதர்களுக்கு வழங்கியவைகள் என்பதன் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இறைவன் பல்வேறு சமுதாயங்களுக்கு நபிமார்களை அனுப்பி உள்ளான், அப்படி அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இறைவன் மட்டுமே அறிந்தவனாக இருக்கின்றான்.

இறைவனின் கருணையினாலும் அவனது ஞானத்தாலும் தன்னுடைய தூதர்கள் மூலமாக இந்த மக்களுக்கு வழங்கிய செய்திகள் யாவும், அந்த ஏக இறைவனை தனித்துவப்படுத்தி வணங்க வேண்டும் என்பதைத் தான் இந்த மக்களிடம் வேண்டி நிற்கின்றது. அவன் இந்த பூவுலகத்தில் படைத்திருக்கின்ற, அதில் நிலைபெற்றிருக்குமாறு வைத்திருக்கின்ற அத்தனை ஜீவராசிகளையும் ஏதோ வீணுக்காகப் படைக்கவில்லை. மேலும், இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதன் மீது நம்பிக்கை வைப்பது என்பது அவன் அனுப்பி தூதர்களின் மீதும் விசுவாசங் கொள்வதிலும் அடங்கியுள்ளது. இறைவன் தன் மீது நம்பிக்கை வைத்து விட்டு, தன்னுடைய தூதர்கள் மீது நம்பிக்கை கொள்ளாதிருப்பதை வன்மையாகத் தன்னுடைய திருமறைக்குர்ஆனிலே இவ்வாறு கண்டித்துள்ளான் :

நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, ''நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்"" என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையை~; சித்தப்படுத்தி வைத்துள்ளோம். யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (4:150-152).

மேலும், இதுவரை அல்லாஹ் பல்வேறு காலங்களில் பல்வேறு மக்களுக்கு இது வரை அனுப்பி உள்ள அனைத்து இறைத்தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்வது, ஒவ்வொரு முஸ்லிமின் மீது கட்டாயக் கடமையாக இருக்கின்றது. இவர்கள் யாரையாவது ஒருவரை ஒருவன் மறுத்தாலும், மற்ற அனைத்து இறைத்தூதர்களையும் மறுத்தவானகவும் அவன் ஆகி விடுகின்றான். இந்த அனுப்பப்பட்ட இறைத்தூதர்களில் முதலாமவர், நூஹ் (அலை) ஆவார்கள் மற்றும் இறுதியாக அனுப்பப்பட்டவர் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் ஆவார்கள். இறைவன் அவர்களை நினைவு கூர்வதை சிறப்பித்துக் கூறி இருக்கின்றான் மற்றும் அனைத்து வித தீங்குகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கின்றான்.

இறைத்தூதர்களை இந்த மக்களுக்கு அனுப்பியதன் நோக்கமென்னவெனில், இந்த மக்களை ஓரிறைக் கொள்கையின் பால் அழைப்பதற்கே! முற்றும் அனைத்து வித தாக்கூத்துகளில் இருந்து, அதாவது அனைத்து வித வழிகேடுகளில் இருந்தும் மற்றும் அனைத்து வித பொய்க் கடவுள்களில் இருந்தும் மக்களை விடுவித்து, நேர்வழியின் பால் இட்டுச் செல்வதற்கேயாகும் : இறைவன் தன்னுடைய திருமறைக் குர்ஆனிலே கூறுகின்றான் :

மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், ''அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்"" என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்;. (16:36).

இவர்களில் எந்த இறைத்தூதரும் தன்னிடம் கடவுள் தன்மைகள் இருப்பதாக வாதிட்டதுமில்லை, அவர்களிடம் தெய்வீகத் தன்மைகள் இருந்ததுமில்லை. அவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களே! அவர்களை இறைவன் தன்னுடைய நபிமார்களாகவும், தூதுவர்களாகவும் ஆக்கி, அதன் மூலம் சாதரண மனிதர்களில் இருந்து வேறுபடுத்தி, தான் அவர்களுக்கு வழங்கிய அற்புதங்கள் மூலம் அவர்களது தூதுத்துவத்திற்குரிய மதிப்பை வழங்கினான். ஆல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்கு செய்திகளாக அறிவித்துக் கொடுத்ததைத் தவிர்த்து, மறைவானவற்றை எவற்றைப் பற்றியும் அவர்கள் அறிய மாட்டார்கள். அவர்களால் யாருக்கும் எந்த நன்மையையோ அல்லது தீமையையோ வரவழைத்து விடவும் முடியாது, இறைவனுடைய அதிகாரத்தில் எதனையும் பங்காகப் பெற்றுக் கொள்ளவும் முடியாது. ஆல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்கு இட்ட பணிகள் எல்லாம், அவர்கள் எந்த சமுதாயத்திற்குத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுக்கு, தன்னுடைய தூதுத்துவச் செய்திகளை எடுத்துச் சொல்வதும், அதற்குப் பகரமாக சொர்க்கம் உண்டு என்பதை இறைவனால் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டது. மேலும், இறைத்தூதர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட செய்திகளை, அவற்றில் எந்தவித மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே மக்களுக்கு வழங்கினார்கள், அவற்றில் நேர்மை மற்றும் வாய்மையுடனும் நடந்து கொண்டார்கள்.

ஒவ்வொரு சமூகத்தவருக்கும் ஒரு நேர்வழி காட்டியுண்டு. (13:7)

(இதற்கு முன் வந்த நபிமார்கள், இறைத்தூதர்கள் அனைவரும் ஒவ்வொரு குறிப்பிட்ட சமுதாயத்தவருக்காக அனுப்பப்பட்டார்கள். ஆனால்) முஹம்மது (ஸல்) அவர்களோ முழு மனித சமுதாயத்தவர்களுக்காகவும் அனுப்பப்பட்டவர்கள். இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு குறிப்பிடுகின்றான் :

(நபியே!) நீர் கூறுவீராக் ''மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்;. (7:158)

முஹம்மது (ஸல்) அவர்கள் இதற்கு முன் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களிலும், இறைத்தூதர்களிலும் இறுதியானவராகவும், அவர்கள் அனைவரிலும் மிகச் சிறப்பானவராகவும் இருக்கின்றார்கள். அவருடைய பெயர் முஹம்மது பின் அப்துல்லா பின் அப்துல் முத்தலிப் (ஸல்). முஹம்மது (ஸல்) அவர்களுடைய தலைமுறை நபி இப்றாஹிம் (அலை) அவர்களில் இருந்து வந்ததாக அறியப்பட்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் கி.பி. 570 ல் பிறந்தார்கள்.

அவர் வாழ்ந்த காலத்தில், அந்த மக்களின் நன்மதிப்பைப்  பெற்றவராகத் திகழ்ந்த காரணத்தால், மக்கள்  அவரை நன்னம்பிக்கையாளர் - அல் அமீன் என்ற பட்டப் பெயருடன் அவரை அழைத்தார்கள். முஹம்மது (ஸல்) அவர்களின் 40 வது வயதில் இறைவன் தன்னுடைய திருத்தூதராகத் தேர்ந்தெடுத்து, தன்னுடைய வானவத் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலமாக தன்னுடைய தூதுச் செய்திகளைக் குர்ஆன் வசனங்களாக அனுப்பி, மக்களை ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பு விடுப்பதற்குப் பணித்து, மக்களை இணைவைப்பிற்கு எதிராக அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப் பணித்தான்.

முஹம்மது (ஸல்) அவர்களை விடுத்து, யாராவது ஒரு தூதரையோ அல்லது நபியையோ பின்பற்றி, அதன் மூலம் மறுமையின் வெற்றியை அடைந்து கொள்ளலாம் என்றதொரு நினைப்பைக் கொண்டிருக்கின்றார்கள் அல்லது முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வராத ஏதாவதொரு மார்க்கத்தை அல்லது இஸ்லாம் அல்லாத ஒரு மார்க்கத்தைப் பின்பற்றி அதன்மூலம் மறுமையில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் இந்த எண்ணம் உண்மையல்ல. முதல் தூதராக நூஹ் (அலை) அவர்களும், இவரை அடுத்து வந்தவர்கள் தான் நபி இப்றாஹீம் (அலை) மற்றும் இவருக்குப் பின் வந்த நபிமார்களான, அதாவது மூஸா (அலை), ஈஸா (அலை) மற்றும் முஹம்மது (ஸல்) ஆகியோர்களும் ஆவார்கள். இவர்கள் வாழும் காலத்தில், முஹம்மது (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டால், அவர்களது தூதுத்துவத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று, இவர்கள் அனைவரிடமும் இறைவன் ஒரு சத்தியப்பிரமாணம் ஒன்றை வாங்கி இருக்கின்றான். அதனைப் பற்றி தன்னுடைய திருமறையிலே இறைவன் இவ்வாறு குறிப்பிடுகின்றான் :

(நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, ''நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக"" (எனக் கூறினான்). ''நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?"" என்றும் கேட்டான்; ""நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்"" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) ''நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்"" என்று கூறினான். (3:81). 

இதன் உண்மைத்துவம் அல்லது அர்த்தம் என்னவெனில், ஒவ்வொரு மனிதனும் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றக் கடமைப்பட்டிருக்கின்றார், ஏனென்றால், இவருக்கு முன் வந்த அத்தனை தூதர்களும் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதுவராக வருகை தரவிருக்கின்றார் என்ற அவரது வருகையைப் பற்றிய நற்செய்தியை தங்களது சமூகத்து மக்களுக்கு தெரிவித்திருந்தார்கள். இந்த வகை அறிவிப்பைச் செய்த இறுதித் தூதராக நபி ஈஸா (அலை) அவர்கள் இருக்கின்றார்கள். அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனிலே இதைப் பற்றி

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா ''இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது" என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்"" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) (61:6)

இறைவனுடைய கட்டளை இவ்வாறிருக்கையில், யாரெல்லாம் ஈஸா (அலை) அவர்களின் தோற்றம் வரை மூஸா (அலை) அவர்களைப் பின்பற்றினார்களோ,  அவர்கள் மீது ஈஸா (அலை) அவர்களைப் பின்பற்றுவது என்பது கட்டாயக் கடமையாக இருக்கின்றது. அதைப் போல முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித் தூதராக இருக்கும் பொழுது, அனைத்து மனிதர்கள் மீதும் அவரைப் பின்பற்றுவது என்பது கட்டாயக் கடமையாகவும், அவரது வழிகாட்டுதலைப் பின்பற்றி நடக்கவும், மற்றும் அவரது தூதுத்துவத்திற்கு ஆதரவாக நடப்பதும் கட்டாயக் கடமையாக இருக்கின்றது. இதன்படி, இந்த உலகத்திலும் மற்றும் வரவிருக்கின்ற மறுமையிலும் நாம் அடையக் கூடிய அல்லது பெற்றுக் கொள்ளக் கூடிய உண்மையான சந்தோசம் என்பது முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதில் தான் இருக்கின்றது. இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு விவரிக்கின்றான் :

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

அல்லாஹ் அனுப்பி இருக்கின்ற இறைத்தூதுவர்களைப் பின்பற்றுவது என்பதன் அர்த்தம் என்னவெனில், அவர்கள் தங்களது மக்களுக்குத் தெரிவிக்கின்ற அல்லது எவற்றை இந்த மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்களோ அவற்றில் அந்தத் தூதுத்துவத்தில் உண்மையாளர்களாக இருக்கின்றார்கள் மற்றும் அல்லாஹ் தன்னுடைய  தூதுவர்களை எந்தப் பணிக்காக அனுப்பி உள்ளானோ அந்தப் பணியைப் பாதிக்கக் கூடிய அனைத்துச் செயல்களை விட்டும் அவர்களைப் பாதுகாக்கக் கூடியவானகவும் இருக்கின்றான். இறைவன் அனுப்பிய தூதர்களில் நன்னம்பிக்கையாளர்களாகவும், நேர்மையுடையவர்களாகவும் இருந்தவர்களில் சிலரைத்  தன்னுடைய திருமறையிலே குறிப்பிட்டும் காட்டியுள்ளான். ஆவர்களாவன : நூஹ் (அலை), இப்றாஹீம் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), மற்றும் முஹம்மது (ஸல்) அவார்கள். இவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற மனிதர்களும் மற்றும் அல்லாஹ்வினுடைய அடிமையுமாவார்கள். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு முன் அனுப்பப்பட்ட அத்தனை தூதர்களும் குறிப்பிட்டதொரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டவர்களாவார்கள், ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களோ, இந்த முழு மனித சமுதாயத்திற்கும் அனுப்பப்பட்டவர்காளாவார்கள்.  

ஈஸா (அலை) அவர்களின் பிறப்பும், இஸ்லாத்தில் அவர்களது அந்தஸ்தும் :-

இறைவனால் அனுப்பப்பட்ட எந்தத் தூதரும் தனக்கு இறைத்தன்மை இருப்பதாகவோ அல்லது இறைத் தன்மைகளில் சிலவற்றைப் பெற்றிருப்பதாகவோ எப்பொழுதும் உரிமை கொண்டாடியதில்லை. இறைவன் இதைப்ப ற்றி தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :

அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன். (23:91).

இறைவனால் அனுப்பப்பட்ட அத்தனை நபிமார்களும், இறைத்தூதர்கள் அனைவர்களும், மனித சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்காக அனுப்பப்பட்ட தூதர்கள் என்பதின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை (ஈமான்)கொண்டிருக்கின்றார்கள். இன்னும் அதிகமாக, அவர்கள் ஈஸா (அலை) (இயேசு) அவர்களின் மீதும் ஈமான் கொண்டு ஏற்றுக் கொண்டு, ஈஸா (அலை) (இயேசு) விற்கு இறைத்துவம் அல்லது தெய்வீகத் தன்மை இருக்கின்றது அல்லது கடவுளின் குமாரராக இருக்கின்றார் என்று கிறிஸ்த்தவர்கள் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்களே அவ்வாறில்லாமல், ஈஸா (இயேசு) (அலை) அவர்களை நம்பி இறைத்தூதராக ஏற்றுக் கொண்டும், கிறிஸ்த்தவர்கள் போலல்லாமல், ஆனால், அவரை இறைவனுடைய அடிமையாகவும் மற்றும் அல்லாஹ்வுடைய தூதராகவும் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். 

மேலும், ஈஸா (அலை) அவர்களது பிறப்பு இயற்கைக்கு மாற்றமானதாக இருந்த போதிலும் அல்லது அதிசயத்தக்க வகையில் இருந்த போதிலும், அவர்கள் ஒரு கன்னிக்கு மகனாகப் பிறந்திருந்தும், அவர் முஸ்லிம்களால் ஈஸா (அலை) – மர்யம் (அலை) அவர்களின் குமாரர் என்று தான் அழைக்கின்றார்கள். மேலும், இஸ்லாத்தில் அவரை ஒரு உன்னதமான மனிதராக முஸ்லிம்கள் மதிப்பதோடு, கிறிஸ்த்தவர்கள் போல அவரை இறைவனின் மகனாக அல்லது அவருக்கு தெய்வீகத் தன்மை உண்டென்றென்ற கொள்கைக்கு இஸ்லாம் என்றுமே இணங்கிப் போவதில்லை. இதைப் போலவே, ஈஸா (அலை) அவர்கள் மீது இட்டுக் கட்டப்படுகின்ற முத்தெய்வக் கொள்கை அல்லது அது போல அவர் ஒரு கடவுளின் அவதாரமாக இருக்கின்றார் என்பது போன்ற கொள்கைகளையும் இஸ்லாம் வன்மையாக மறுக்கின்றது.

இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறும் பொழுது :

(நபியே!) இவ்வேதத்தில் மர்மமைப் பற்றியும் நினைவு கூர்வீராக் அவர் தம் குடம்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது, அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார். (அப்படி அவரைக் கண்டதும்,) ''நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)"" என்றார். ''நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான பதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்"") என்று கூறினார். அதற்கு அவர் (மர்யம்), ''எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?"" என்று கூறினார். ''அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்" என்று உம் இறைவன் கூறுகிறான்"" எனக் கூறினார். அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார். பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிர~வ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது; ''இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா"" என்று கூறி(அரற்றி)னார். (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து ''(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்"" என்று அழைத்து கூறினான். ''இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும். ''ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்"" என்று கூறும். பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; ''மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"" ''ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை; உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை"" (என்று பழித்துக் கூறினார்கள்). (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; ''நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?"" என்று கூறினார்கள். ''நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். ''இன்னும, நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறே வேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். ''என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. ''இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்"" என்று (அக்குழந்தை) கூறியது. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை; அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், ''ஆகுக!"" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது. ''நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்"" (என்று நபியே! நீர் கூறும்). (19:16-36).

பொதுவாக கிறிஸ்த்தவர்கள் நம்பிக் கொண்டிருப்பது போல ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்படவில்லை, மாறாக, இறைவன் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான். அவருக்குப் பதிலாக இன்னொருவர் தான் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டார். இறைவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :

இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்"" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)

மற்ற நபிமார்களைப் போலவே, அவரது தூதுத்துவத்திற்குச் சான்றாக, அவரது தூதுத்துவம் வாய்மையானது இறைவனால் அருளப்பட்டது என்பதை மெய்ப்பிப்பதற்காக, இறைவன் சில அற்புதங்களை செய்வதற்கு இயலுமானவராக ஆக்கினான் என்பதை கீழ்க்கண்ட வசனம் மூலம் இறைவன் தெரிவிக்கின்றான் :

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது"" (என்று கூறினார்). (3:49)

ஈஸா (அலை) அவர்களின் வருகை :

ஈஸா (அலை) அவர்கள் தற்பொழுது சொர்க்கத்தில் இருக்கின்றார்கள். இந்த உலக அழிவுநாள் மிக நெருக்கத்தில் இருக்கின்றது என்பதற்கு அடையாளமாக, ஈஸா (அலை) அவர்கள்; இந்த பூமிக்கு மீண்டும் வருகை தருவார்கள். இதைப்பற்றி இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான் :

அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம். (43:59)

மேலும் இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான் :

நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார்;. (43:61)

குர்ஆனினால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட ஈஸா (அலை) அவர்களது வருகையைப் பற்றிய முன்னறிவிப்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களின் பல்வேறு பொன் மொழிகளான ஹதீஸ்களும் குறிப்பிட்டுக் கூறியுள்ளன. (இப்னு கதீர், தஃப்ஸீர் அல் குர்ஆன் அல் அழீம், பாகம் : 139-140).

5. மறுமை நாளை நம்புவது :

மரணத்தைப் பற்றியும், அந்த மரணத்திற்குப் பின்னால் மண்ணறையில் கேட்கப்படும் கேள்விகள் பற்றியும், அதில் உள்ள தண்டனைகள் பற்றியும், இறப்பிற்குப் பின் மனிதர்களை உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாள் குறித்தும், அந்த மறுமை நாளின் பொழுது மக்கள் அனைவரையும் ஒன்று கூட்டுவது பற்றியும், கேள்வி கணக்குகளுக்கு அனைவரும் உட்பட்டே ஆக வேண்டும் என்பது பற்றியும், நரகத்தின் மேல் இருக்கும் பாலத்தை அனைவரும் கடந்தே ஆக வேண்டும் என்பது பற்றியும், மீஸான் என்ற தராசில் (நன்மை, தீமைகள்) நிறுக்கப்படும் என்பதையும், ஜன்னத் என்றழைக்கப்படும் சொர்க்கம் என்பதும்,  மற்றும் ஒவ்வொருவரும் தப்பித்து விட்டால் போதும் என்ற மனநிலையைத் தோற்றுவிக்கின்ற உயிர் கொடுத்து எழுப்பப்பட இருக்கின்ற மறுமை நாளைக் குறித்தும் இறைவனும், மற்றும் இறைத்தூதரும் என்னென்ன கூறியிருக்கின்றார்களோ, அவை அத்தனையும் வாய்மையானது, உண்மையானது என நம்புவது மறுமை என்ற ஒன்று இருக்கின்றது என்பதற்கு சான்று வழங்குவதாக இருக்கின்றது. 

மண்ணறையின் கேள்விகள் :

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், மண்ணறையில் வைத்து மனிதனிடம் கேள்விகள் கேட்கப்படும் மற்றும் அந்தக் கேள்விகள் இவ்வாறு இருக்கும் என்றும் கூறினார்கள் :

உன்னுடைய ரப் யார்? ஏன்றும் உன்னுடைய தீன் (மார்க்கம்) எது? என்றும், உன்னுடைய இறைத்தூதர் யார்? ஏன்றும் கேட்கப்படும். கண்ணியமிக்கவனான அல்லாஹ், இவற்றிற்குச் சரியான விடைகளை அளிக்க தன்னுடைய நல்லடியார்களுக்கு நல்லுணர்வுகளை ஏற்படுத்தி விடுவான். இவ்வாறு கேட்கப்படும் கேள்விகளுக்கு, அதாவது, என்னுடைய ரப் அல்லாஹ் என்றும், என்னுடைய தீன் - மார்க்கம் இஸ்லாம் என்றும், என்னுடைய இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்றும் நல்லடியார்கள் கூறுவார்கள். அதே நேரத்தில் இறைவனை நிராகரித்தவர்கள் அல்லது அவனை மறுத்தவர்கள் குழப்பத்தில் அவர்கள், ஆ! ஆ! எனக்கு ஒன்றும் தெரியாதே என்று கூறுவார்கள். மக்கள் ஒன்றைச் சொல்ல, அதையே நான் திருப்பிச் செய்து வந்தேன் என்று கூறியவுடன், சூடான பலுக்கக் காய்ச்ச இரும்பைக் கொண்டு அவனை வேதனை செய்யப்படும், அப்பொழுது அவன் வேதனையின் காரணமாக வெளியிடும் அலறல் சத்தம் மனித மற்றும் ஜின் வர்க்கத்தாரைத் தவிர மற்ற மற்ற அனைவரும் கேட்பார்கள். நிராகரிப்பவனது இந்த அலறலைக் கேட்பவர்கள், அந்த சப்தத்தைக் கேட்ட மாத்திரத்திலேயே மரணத்திற்குப் பலியாகி விடுவார்கள் அல்லது மூர்ச்சையுற்று விழுந்து விடுவார்கள்.  

மண்ணறையில் நிராகரிப்பாளர்களுக்குக் கொடுக்கப்படும் வேதனையானது உண்மையானது என்பதை இறைவனது வேதமானது என்பதை இவ்வாறு குறிப்பிட்டுக் கூறுகின்றது :

காலையிலும், மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டுவரப்படுவார்கள்; மேலும் நியாயத் தீர்ப்பு காலம் நிலைபெற்றிருக்கும் நாளில் ''ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள்"" (என்று கூறப்படும்).(40:46)

இறுதி நாளின் அடையாளங்கள் :

இறுதி நாள் எப்பொழுது வரும் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அல்லாஹ் தன்னுடைய திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான் :

(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளையை பற்றி மக்கள் உம்மைக் கேட்கின்றனர்; ''அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது"" என்று நீர் கூறுவீராக. அதை நீர் அறிவீரா? அது ~மீபத்திலும் வந்து விடலாம். (33:63)

மிகப் பெரிய மற்றும் சிறிய ஆகிய இரண்டு விதமான இறுதி அடையாளங்களைக் குறித்து முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவையாவன :

சிறிய அடையாளங்கள் :

இறுதித் தீர்ப்பு நாளைப் பற்றிய ஏராளமான சிறிய அடையாளங்கள் உள்ளன. ஆவையாவன: அவற்றில் ஒன்று முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் மார்க்கம், மக்கா மற்றும் மதினா ஆகிய ஹிஜாஸ் பகுதிகளில் தோன்றவிருக்கக் கூடிய நெருப்பு, நேரம் சுரங்குதல், அசையாத பொருள் பேசுதல், விலங்கினங்கள் பேசுதல், ஒரு அடிமைப்பெண் தன் தலைவியைப் பெற்றெடுத்தல், ஆடை அணிகலன்களற்ற ஆடுமேய்ப்பவர்கள் மிக உயர்ந்த கட்டடங்களை எழுப்புதல், தங்கள் பள்ளிவாசல்களை அலங்கரித்து அதன் மூலம் பெருமைப்படக் கூடிய மக்களின் தோற்றம், எங்கும் குழப்பம் நிலவுதல், படுகொலைகள் அதிகம் நிகழ்தல், விபச்சாரம் பெருகுதல், மற்றும் மதுபானங்களை அதிகம் உபயோகித்தல் ஆகியவை இறுதித் தீர்ப்பு நாளைப் பற்றிய சிறிய அடையாளங்களாகும்.

பெரிய அடையாளங்கள் :

1. தன்னைக் கடவுள் என்ற வாதிடக் கூடிய - தஜ்ஜால் என்ற பொய்யன் தோன்றுவான். ஆவனைப் பின்பற்றுபவர்களில் அதிகமானோர் யூதர்கள் இருப்பார்கள். அவன் மக்கா மதினாவைத் தவிர மற்ற அனைத்து இடங்களுக்கும் சென்று வருவான், மக்காவும், மதினாவும் வானவர்களால் பாதுகாக்கப்பட்டு அவன் அதனுள் நுழைவதனின்றும் மலக்குகள் தடுத்து விடுவார்கள். ஆந்த தஜ்ஜால் என்பவனுக்கு மிகப் பெரிய அற்புதங்கள் புரியக் கூடிய சக்தியும் இருக்கும், அவனது கட்டளையின் பிரகாரம் மழையும் பெய்யும், மற்றும் பூமியில் அவன் விரும்பியதை விளைவிக்க நாடும் பொழுது, அது அவ்வாறே அதனை முளைப்பிக்கும். அவனைப் பின்பற்றுவது அல்லது அவனை நம்பி ஈமான் கொள்வதனின்றும் முஸ்லிம்களை முஹம்மது (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

2. ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து, சிரியாவின் தலைநகராக இருக்கக் கூடிய டமாஸ்கஸ் நகரில் இறங்குவார்கள். ஆவர் தஜ்ஜாலைக் கொலை செய்வார், மக்களை இஸ்லாத்தின் பால் அழைப்பார், சிலுவையை முறிப்பார், பன்றிகளைக் கொல்வார், முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஜிஸ்யா என்னும் வரியை வசூல் செய்வார், இறுதியாக அவர் இறப்பெய்திய பின் முஸ்லிம்கள் அவரை அடக்கம் செய்யுமன் அவரது உடலுக்கு ஜனஸாத் தொழுகையை வைப்பார்கள்.

3. இந்தப் பூமியில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடிய யஃஜுஜ் மற்றும் மஃஜுஜ் என்ற இரண்டு குலத்தவர்கள் தோன்றுவார்கள். ஈஸா (அலை) அவர்களும், அவரைப் பின்பற்றுகின்றவர்கள் மறைவிடத்தினில் இருந்து கொண்டு, இந்த இரண்டு கூட்டத்தாரின் படுபாதகச் செயல்களில் இருந்து தங்களைப் பாதுகாக்கும்படி இறைவனிடம் பிரார்த்திப்பார்கள், இறைவனும் இரண்டு கூட்டத்திற்காக இவர்கள் செய்த பிரார்த்தனையை அங்கீகரித்து விடுவான்.

4. இறுதி நேரத்திற்குச் சற்று முன் ஒரு மிகப் பெரிய விலங்கு ஒன்று தோன்றும். ஆது விரைவில் வரவிருக்கக் கூடிய தண்டனை குறித்தும் , மிகப் பெரிய அழிவு குறித்தும் மக்களை எச்சரிக்கும். இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையில் இவ்வாறு கூறுகின்றான் :

அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். (27:82)

5. சூரியன் கிழக்கில் இருந்து உதிக்காமல், மேற்கில் இருந்து உதிக்கக் கூடியதாக இருக்கும். அந்த நேரத்தில் இந்த பூமியில் இருக்கக் கூடிய அத்தனை முஸ்லிம் அல்லாதவர்களும் அல்லாஹ் வின் மீது தங்களது ஈமானை – நம்பிக்கையை வெளிப்படுத்துவார்கள். ஆனால், அது அவர்கள் ஈமான் - இறைநம்பிக்கை கொள்வதற்கு மிகவும் தாமதமானதொரு நேரமாகும். ஆப்பொழுது அவர்கள் வெளிப்படுத்தக் கூடிய அவர்களது அந்த இறைநம்பிக்கையானது, அந்த நேரத்திற்கு முன் இறைநம்பிக்கை கொண்டவர்களைத் தவிர மற்றவர்களுக்கு எந்தவிதத்திலும் அவர்களுக்கு பயனைத் தராது.

6. இது தவிர்த்து இன்னும் ஏராளமான இறுதி நாளில் அடையாளங்களை முஹம்மது (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறித்தி விட்டுச் சென்றுள்ளார்கள்:

கீழ்க்கண்ட பத்து அடையாளங்களை நீங்கள் பார்க்கும் வரை, இறுதி நாள் தோன்றாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிச் சென்றுள்ளார்கள் : மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது, புகை மண்டலம் தோன்றுவது, மிகப் பெரிய விலங்கு தோன்றுவது, யஃஜுஜ் மற்றும் மஃஜுஜ் கூட்டத்தாரின் வருகை, ஈஸா (அலை) அவர்கள் வானத்திலிருந்து பூமிக்கு இறங்குதல், தஜ்ஜாலின் தோற்றம், மூன்று முக்கியமான பூகம்பங்கள் : ஒன்று கிழக்கில் இருந்தும், ஒன்று மேற்கிலிருந்தும், மூன்றாவதாக அரேபியத் தீபகற்பத்திலும் தோன்றும், ஒரு பெரும் நெருப்பு ஒன்று தோன்றி, ஆதன் நகரத்தில் உள்ள அத்தனை மக்களையும் ஒரு பொது இடத்தில் ஒன்று கூட்டும்.

மறுமையில் மீண்டும் எழுப்புதல் :

இறுதித் தீர்ப்பு நாளின் நெருக்கத்தில், ஒரு மிகப் பெரிய ஓசை ஒன்று எழும்பும், அது தான் இந்த உலகத்தினுடைய இயக்கத்தின் இறுதி நேரமாக இருக்கும். இந்த நேரத்தைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு விவரிக்கின்றான் :

ஸர் (எக்காளம்) ஊதப்பட்டால் உடன் வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்;. பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து, எதிர் நோக்கி நிற்பார்கள். மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு பிரகாசிக்கும்; (அவர்களுடைய) குறிப்பேடு (அவர்கள் முன்) வைக்கப்படும்;. இன்னும், நபிமார்களும், சாட்சிகளும்ழூ கொண்டுவரப்படுவார்கள்; அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அன்றியும் அவர்கள் (சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனும் தான் செய்ததற்குரிய கூலியை முழமையாகப் பெறுவான்; மேலும், அவன், அவர்கள் செய்தவற்றை நன்கறிந்தவன். (39:68-70) 

ழூமனிதர்களின் செயல்களை எடுத்தெழுதக் கூடிய மலக்குமார்களைத் தான் இங்கு சாட்சிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் மனிதர்கள் அனைவரும் தங்களது மண்ணறைகளிலிருந்து, அச்சமுற்றவர்களாக பயந்து நடுங்கியவர்களாக வெளியேறி, அனைவரும் ஒரு இடத்தில் ஒரு நாளினுடைய நேரத்தின் அளவுக்கு ஒன்று கூட்டப்படுவார்கள், அந்த ஒரு நாளின் அளவு என்பது 50 ஆயிரம் வருட அளவு நீளமானதாக இருக்கும், அப்பொழுது மக்கள் நிர்வாணமாகவும், செருப்புகள் அணியாத வெற்றுக் காலுடனும், ஆண்களின் பிறப்புறுப்பு கத்திரிக்கப்படாமலும் (கத்னா செய்யப்படாமலும்), எந்தவித ஆகாரமும், குடிப்பும் இல்லாமல் தன்னுடைய இறைவனின் இறுதித் தீர்ப்புக்காக மக்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்.

அந்த நேரத்தில் இறைநிராகரிப்பாளனுடைய நிலை எவ்வாறு இருக்குமெனில், அவனுடைய காதுமடலை மூடும் அளவுக்கு அவன் வியர்வையால் மூழ்கியிருப்பான். (புகாரி).

பரிந்துரை :

இறுதித்தீர்ப்பு தன்னை வந்தடைந்து விட்டதன் விளைவாக, இந்த மனித வர்க்கமானது மிகப் பெரியதொரு துயரை சந்திக்க இருக்கின்றது, மேலும் அது தனக்காக யாரும் அந்த நேரத்தில் பரிந்துரை செய்ய மாட்டார்களா என்றும், அந்தப் பரிந்துரையின் காரணமாக தன்னுடைய செயல்கள் கணக்கெடுப்பிற்கு விரைவாக எடுத்துக் கொள்ளப்படுமே என்று எண்ணிக் கொண்டிருக்கும். ஆப்பொழுது, இந்த உம்மத் முதலில் ஆதம் (அலை) அவர்களிடம், ஆதி பிதாவாகிய அவர்களிடம் செல்லும், அவர்களிடம் தனக்காகப் பரிந்து பேச வருமாறு அழைப்பார்கள், அப்பொழுது அவர் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுமாறு கூறிவிடுவார்கள், நூஹ் (அலை) அவர்களோ இப்றாஹீம் (அலை) அவர்களிடம் செல்லுமாறு கூறிவிடுவார்கள். இப்றாஹீம் (அலை) அவர்களோ மூஸா (அலை) அவர்களிடம் செல்லுமாறு கூறிவிடுவார்கள். மூஸா (அலை) அவர்களோ ஈஸா (அலை) அவர்களிடம் செல்லுமாறு கூறிவிட, அவரும் மற்ற நபிமார்களைப் போலவே, தனக்கு அந்தத் தகுதிகள் இல்லை எனச் சொல்லி, இறைவன் இப்பொழுது போல் எப்பொழுதும் கோபடைந்திருந்தவனாக இல்லை, இனி எப்பொழுதும் அவன் இது போல் கோபப்படவும் மாட்டான். இந்த நிலையில் என்னால் பரிந்துலை செய்ய இயலாது எனக் கூறிவிட்டு, முஹம்மது (ஸல்)அவர்களிடம் செல்லுமாறு கூறுவார்கள். எந்த மனிதருடைய முன் பின் பாவங்களைத் தான் இறைவன் மன்னித்திருக்கின்றானோ அத்தகையவர் தான் பரிந்துரை செய்வதற்குத் தகுதியானவர் என்று ஈஸா (அலை) அவர்கள் கூறி விடுவார்கள். ஆவர் தான் இந்த உம்மத்திற்காக இறைவனிடம்  பரிந்துரை செய்வதற்கான பொறுப்பையும் ஏற்றிருக்கின்றார். ஆவருடைய பரிந்துரைத்து விட்ட பின்பு, இறைவன் தன்னுடைய அடிமையாகிய இந்த மனிதனின் கணக்குகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பிப்பான். (புகாரி – ல் உள்ள ஹதீஸில் இருந்து எடுக்கப்பட்டது)

(இறைவன் முன்னிலையில்) அணிவகுப்பும் மற்றும் (நியாயத் தீர்ப்புக்காக) கணக்கிடுதலும் !!

அந்த இறுதித் தீர்ப்பு நாளன்று அனைத்து மக்களும் அணிஅணியாக தன்னுடைய ரப்பாகிய இறைவன் முன்னிலையில் நிறுத்தி வைக்கப்படுவர், இதைப் பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :

அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிi~யாகக் கொண்டு வரப்படுவார்கள்; ''நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்"" (என்று சொல்லப்படும்). (18:48)

அந்த நிமிடத்தைப் பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள்  இவ்வாறு கூறினார்கள் :

மகத்துவமிக்கவனான அல்லாஹ், அன்றைய தினம் அனைத்து மனிதர்களிடமு; நேரடியாக, எந்தவித மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுமின்றிப் பேசுவான். (புகாரி, முஸ்லிம்).

முகத்துவமிக்கவனான அல்லாஹ், அன்றைய தினம் தன்னுடைய அடிமைகளுடைய செயல்பதிவேட்டின் கணக்குகளைச் சரிபார்ப்பதற்காக, அந்த நியாயத் தீர்ப்பு நாளின் அன்று அவர்களை அழைப்பான். யார் தன்னுடைய வலது கையில் தங்களது செயல்பதிவேட்டிக் கணக்குகளுக்கான தீர்ப்பை வாங்குகின்றார்களோ, அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள், யார் தங்களது செயல்பதிவேட்டின் கணக்குகளை இடது கையில் பெற்றுக் கொண்டார்களோ அவர்களும் மற்றும் முதுகுக்குப் பின்புறமாகவும் பெற்றுக் கொண்டார்களோ அவர்களது நிலை கைசேதத்திற்குரியதாகவும், அவர்கள் இறைவனால் மிகவும் கடுமையாக வேதனை செய்யப்படுவார்கள். இதைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையினிலே இவ்வாறு குறிப்பிடுகின்றான் :

நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது. (88:25-26) 

அந்த இறுதித் தீர்ப்பு நாளின் பொழுது அனைத்து மனிதர்களும் கேள்வி கணக்கிற்காக அழைக்கப்படுவார்கள், ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களது உம்மத்தினர்களில் ஒரு சிலரைத் தவிர! ஆவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்களில் 70 ஆயிரம் பேர்களாவார்கள். அவர்கள் எந்த வித கேள்வி கணக்கிற்கும் அழைக்கப்படாமல், கேள்வி கணக்கிற்கு உட்படுத்தப்படாமல், எந்தவித தண்டனைகளும் இல்லாமல், சொர்க்கச் சோலைகளிலே அனுமதிக்கப்படுவார்கள்.

அந்த இறுதித் தீர்ப்பு நாளின் பொழுது, முதன் முதலில் கேள்வி கணக்கிற்காக அழைக்கப்படும் உம்மத்தாக இருப்பது எதுவென்றால், உம்மத்தே முஹம்மது (ஸல்) அவர்களின் உம்மத்தாகிய இந்த உம்மத்துத்தான் முதன் முதலில் கேள்வி கணக்கிற்காக அழைக்கப்படுவார்கள். அப்பொழுது, இந்த உம்மத்திடம் முதன் முதலாக இறைவன் கேட்கும் கேள்வி எதைப் பற்றி இருக்கும் எனில், தொழுகையைப் பற்றித் தான் இருக்கும். ஒரு முஸ்லிமினுடைய தொழுகையானது இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதெனில், அவனுடைய மற்ற அனைத்துச் செயல்களும் இலகுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விடும். ஆவனது தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட வில்லை எனில், அவனது மற்ற எந்த நற்செயல்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.

அல் கவ்தர் என்னும் தடாகம் :

அல் கவ்தர் என்பது, அல்லாஹ் தன்னுடைய திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பிரத்யேகமாக அன்பளிப்புச் செய்ததொரு தடாகம். ஆந்த மறுமை நாளின் பொழுது, இந்த உம்மத்தினர் அனைவரும் அதன் பக்கம் செல்லக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். யார் முஹம்மது (ஸல்) அவர்களுடைய சுன்னத் என்னும் நடைமுறையைப் பின்பற்றவில்லை அவர்கள், அந்தத் தடாகத்தின் அருகில் வருவதனின்றும் விரட்டப்படுவார்கள், தடுக்கப்படுவார்கள்.  ஆந்தத் தடாகத்தின் நீரானது, இந்த உலகத்தில் நாம் காணக் கூடிய வெண்மையான பாலை விட மிகவும் வெண்மையாக இருக்கும் மற்றும் தேனை விட மிகவும் இனிப்பாக இருக்கும். ஆந்த கவ்தர் தடாகத்தின் நீரை அள்ளிப்பருகுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் கின்னங்கள், வானில் இருக்கும் நட்சத்திரத்தைப் போன்று கணக்கிலடங்காததாக இருக்கும். ஆந்த தாடகத்தின் நீள அகலங்கள், ஒரு மாதப் பயண தூரத்தின் அளவில் இருக்கும். இது ஏற்கனவே முஹம்மது (ஸல்) அவர்களுக்காகத் தயார் செய்து வைக்கப்பட்டிருக்கின்றது. யார்ரொருவர் ஒரு முறை அதில் நீரந்தினாரோ, அவருக்கு எப்பொழுதும் தாகம் என்பதே எடுக்காது.

மீஸான் என்ற தராசு :

அந்த மறுமை நாளின் பொழுது, மனிதனுடைய செயல்களின் அளவை நிறுப்பதற்காக மீஸான் என்ற தராசு நிலைநிறுத்தப்படும். இந்தத் தராசு மிகத் துல்லியமானது மற்றும், இரண்டு பக்கமும் மிகச் சரியான அளவைக் கொண்ட தட்டுக்களைக் கொண்டது, அந்தத் தராசானது இறைவனது அந்த தீர்ப்பை மிகச் சரியான முறையில் நீதமான முறையில் மக்களிடம் தீர்ப்புச் செய்வதற்காக, இறைவனுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அமைந்திருக்கும். யார் நன்மையின் எடைகள் தீமைகளின் எடையை விட கனமானதாக இருக்குமோ அத்தகையவர்கள் வெற்றிபெற்றவர்களாக சொர்க்கச் சோலைகளிலே அனுமதிக்கப்படுவார்கள். யாருடைய தீமைகளின் எடைகள் நன்மையின் எடைகளை விடக் கனமானதாக இருக்கின்றதோ அவர்கள் கைசேத்திற்குரியவர்களாக இருப்பார்கள், அவர்கள் நரக நெருப்பிலே தூக்கி வீசப்படுவாகள். இதைப் பற்றி மகத்துவமிக்கவனாக அல்லாஹ் கூறுகின்றான் :

அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள். யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விறைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள. (7:8-9)

யாருடைய நன்மை மற்றும் தீமைகளின் எடைகள் சரிசமமானதாக இருக்கின்றதோ, அவர்கள் அல் அஃராஃப் என்றழைக்கக் கூடிய கூட்டத்தினருக்குத் தோழர்களாக இருப்பார்கள். ஆதாவது, இவர்களுடைய நன்மை மற்றும் தீமைகளின் எடைகள் சரிசமமானதாக இருக்கின்ற காணரத்தால், அவர்கள் முன்னையவர்கள் போல சொர்க்கத்திற்குள் செல்வதற்கு தகுதியற்றவர்களாகவும், பிந்தையவர்கள் போல நரகத்திற்கோ அனுப்பப்படுவதற்கு தகுதி இழந்தவர்களாக இருக்கின்றார்கள். இருப்பினும், இந்த உலகத்தில் அவர்கள் செய்த பாவங்களை இறைவன் மன்னித்து, இத்தகையவர்களை இறுதியாக சொர்க்கச் சோலைகளிலே புகுத்தி விடுவான்.

மேலும், இறைவனை நிராகரித்தவர்களின் எந்த நற்செயல்களும் அவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. குற்றுக் காலத்தில், காற்றுப்பட்டவுடன் பறக்கும் சாம்பல் பொடி போல அவர்களது நற்செயல்களை இறைவன் அழித்து விடுவான்.

ஸிராத் பற்றி இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரித்திருக்கின்றார்கள் :

ஆஸ் ஸிராத் என்பது நரகத்தின் மத்திய பாகத்தில் நிலைகொள்ளாமல் ஆடிக் கொண்டிருக்கும் ஒரு பாலமாகும். ஆந்தப் பாலமானது அஸ் ஸிஃதன் மரத்தைப் போல கொக்கிகளையும், முட்களையும் கொண்ட முள் மரத்தைப் போன்றதாக இருக்கும்.

ஆதன் முட்கள் வாளின் முனையை விட மிகக் கூர்மையானதாக இருக்கும். ஆதன் இரு பக்கமும் இருக்கக் கூடிய அதன் கொக்கிகள், யார் மீது அதன் கட்டளை இறங்குகின்றதோ அவர்களைப் பிடித்திழுத்து கீழே தள்ளி விடுவதற்குத் தயாராக இருக்கும். சிலர் அந்தப் பாலத்தை வெகு இலகுவாகக் கடப்பவர்களாகவும், சிலர் மிகத் தாமதமாகக் கடக்கக் கூடியவர்களாகவும், மேலும் இன்னும் சிலர் சிறாய்ப்புகளுடனும், வெட்டுக் காயங்களுடனும், இன்னும் சிலர் நரகப் படுகுழியில் வீழ்ந்து விடக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். (அல் ஹாக்கிம்)

இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களும் அந்தப் பாலத்தைக் கடந்தே ஆக வேண்டும். நுன்னம்பிக்கையாளர்கள், அந்தப் பாலத்தைக் கடந்தவுடன் சொர்க்கச் சோலைகளிலே அனுமதிக்கப்படுவார்கள். இதைப் பற்றி அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :

மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது; இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும். (19:71)

இப்னுல் கய்யும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

நரகத்தின் மேல் உள்ள அந்தப் பாலத்தினைக் கடக்கும் பொழுது, ஒரு மனிதனுடைய பாதங்கள் எந்தளவு உறுதியானதாக தடுமாற்றமில்லாமல் இருக்கும் என்பதை அவனது இந்த உலகத்தினுடைய செயல்களை வைத்து, அதாவது அவன் இந்த உலகத்தில் நேர்வழியினைப் பின்பற்றி அதில் எந்தவித தடுமாற்றமல்லாமல் அந்த நேர்வழியின் மீது அவனது பாதங்கள் எந்தளவு உறுதியானதாக இருந்ததோ அதை வைத்தே, அவனது பாதங்கள் மறுமையில் அந்த பாலத்தினில் உறுதியானதாக இருக்கும் என்பதைக் கண்டு கொள்ள முடியும். (அத் தப்ஸீர் அல் கய்யும் பக்கம் 9-10)

அந்தப் பாலத்தை முதன் முதலில் கடக்கக் கூடியவர்களாக முஹம்மது (ஸல்) அவர்களும் மற்றும் அவர்களைப் பின்பற்றியவர்களுமாக இருப்பார்கள். ஆதன் பின்பு மற்ற முஸ்லிம்கள் அந்தப் பாலத்தைக் கடக்கும் பொழுது, எவ்வாறு அவர்களது நிலை இருக்கும் என்பது, அவர்கள் இந்தப் பூமியில் செய்து கொண்ட நற்செயல்களைப் பொருத்து அமையும். சிலர் அந்தப் பாலத்தை கண் மூடி, கண் திறப்பதற்குள் கடந்து விடக் கூடியவர்களாகவும், சிலர் ஒளி போலவும், சிலர் காற்றுப் போலவும், சிலர் பறவையைப் போலவும், சிலர் மிகச் சிறந்த குதிரையின் ஓட்டத்தைப் போலவும், சிலர் மிக விரைவாகவும், சிலர் நடந்தபடியும், சிலர் தவழ்ந்தும், சிலர் தங்களது பாதங்களை தரையில் இழுத்துக் கொண்டே செல்லக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இத்தகையோர் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகத்தினுள் வீழ்ந்து விடுவார்கள்.

முஸ்லிம்களில் யார் அல்லாஹ்வையும், அவனது தூதர் (ஸல்) அவர்களையும் பின்பற்றினார்களோ அவர்கள் சொர்க்கத்திற்குள் புகுவதற்கு முன் இந்தப் பாலத்தை வெகு விரைவாகக் கடந்து விடுவார்கள். இத்தகைய நல்லடியார்கள் கூட்டத்தில் நம் அனைவரையும் இறைவன் சேர்த்தருள இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

சுவனமும் அதன் வர்ணனைகளும் !!

சுவனம் என்பது, கேள்வி கணக்குக் கேட்கப்பட்டு தீர்ப்புக் கூறப்படவிருக்கின்ற அந்த நாளிலே தன்னைப் பின்பற்றிய தன்னுடைய நல்லடியார்களுக்காக இறைவன் தயாரித்து வைத்திருக்கின்றதொரு சிறப்புமிக்கதொரு இடமாகும். இது வரை எந்த மனிதனுடைய கண்களும் பார்த்திராத, அவன் கேட்டிராத ஏன் அவன் நினைத்துக் கூடப்பார்த்திராததொரு, அனைத்து வித இன்பங்களும் நிறைந்திருக்கின்றதொரு இடமாக அது இருக்கும்.

ஓவ்வொருவரின் தகுதி, ஈமான் - இறைநம்பிக்கை, கீழ்ப்படிதல் ஆகியவற்றின்படி நன்னம்பிக்கையாளர்களின் தராதரத்திற்கு ஏற்றவாறு பல தரங்களில் சொர்க்கமாக தயாரித்து வைக்கப்பட்டுள்ளது. ஆந்த சுவனச் சோலைகளில் மிகவும் பரிசுத்தமான துணைகள் - கண்ணுக்கு மிகவும் அழகான கன்னியர்களான கூருலீன்கள்  என்று சொல்லக் கூடிய பெண்கள், மிகவும் இளவயதுடைய பச்சை புடவைகள் அணிந்தவர்களாக இருப்பார்கள், அங்கே எப்பொழுதும் வற்றி விடாத நின்று விடாத நீர் நிறைந்திருக்கக் கூடிய ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், பரிசுத்தமான தேனைக் கொண்ட தேனாறுகளும், திரிந்து விடாத பால் கொண்ட பாலாறுகளும், அருந்தியவுடன் உற்சாகத்தைத் தரக் கூடிய மதுவைக் கொண்ட மது ஆறுகளும், சுவனத்துச் சொந்தக் காரர்கள் விரும்பிய கனிகளும், அவர் தேர்வு செய்யக் கூடிய பறவைகளின் இறைச்சியும், அவர்கள் விரும்பக் கூடிய அணிகலன்களும், தங்கத்தாலும், வெள்ளியாலும் கட்டப்பட்ட அரண்மனைகளிலும் அவர்கள் இருப்பார்கள். ஆந்தச் சுவன மாளிகையின் கற்கள் முத்துக்களாலும், சிப்பிகளாலும் ஆன கற்களைக் கொண்டும், மணமூட்டப்பட்ட மஸ்கைக் கொண்ட மண்ணாலும் அது கட்டப்பட்டிருக்கும். ஆந்த சுவனச் சோலைகளில் இருக்கக் கூடிய பொருட்கள் யாவும், அதைப் பார்க்கக் கூடியவர் விரும்பக் கூடியதாகவும், அதி உற்சாகத்தை ஊட்டக் கூடியதாகவும் இருக்கும். ஆந்த சுவனத்தின் சொந்தக் காரர்கள் அதில் என்றென்றும் நிலையாக இருப்பார்கள். பேண்களில் உள்ள நன்னம்பிக்கையாளர்கள், இதுவரை அவர்கள் இல்லாத அளவு இளமையாகவும், தங்களது துணைகளை உற்சாகப்படுத்துவதற்காக அந்த சுவனச் சோலைகளிலே நுழையக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இந்த உலகத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்து நல்லமல்கள் செய்த நல்லடியார்களாக இருக்கும் பட்சத்தில், அந்த சுவனத்திலும் அவர்கள் ஜோடிகளாகவே எழுப்பப்படுவார்கள். ஆனால் ஒரு பெண்மணி ஒன்றுக்கும்அதிகமான கணவர்களைத் திருமணம் செய்திருந்தால், யாரொருவரை அவர் இறுதியாகத் திருமணம் செய்திருந்தாரோ அவருடனும், அல்லது அவர் விரும்பிய கணவருடனும் சுவனத்தில் இருப்பார். இறைவன் மிக அறிந்தவன். (அல் பைஹக்கி)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :

ஒரு பெண் ஐந்து வேளையும் தவறாது தொழுது, தன்னுடைய கற்பைப் பாதுகாத்து, தன்னுடைய கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பாளேயானால், அவள் விரும்பும் வாசல் வழியே சுவனத்தில் நுழைந்து கொள்ளட்டும் என்று முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு ஹிப்பான்).


6.  விதி:

அல்லாஹ் தன் ஆழமான அறி்வாற்றலால் ‌ அனைத்துப் படைப்பினங்களினதும்‌ விதிகளை நிர்ணயித்துள்ளான்‌, அவற்றை லவ்ஹுல்மஹ்‌ஃபூல்‌ எனும் பதிவேட்டில்‌ எழுதி, தன் நாட்டப்படி அவற்றை அமுல்படுத்துகிறான்‌. தனது ஆற்றலால் ‌அவற்றை தோற்றுவிக்கிறான்‌ என நாம்‌ உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

அல்லாஹ் கூறுகிறான் ‌”நாம்‌ ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக(குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்‌." (அல்குர்ஆன் 54:49)‌ 

அவனே எல்லாப் பொருட்களையும்‌ படைத்து, அவற்றை அதனதன்‌ அளவுப்‌ படிஅமைத்தான்‌.” (அல்குர்‌ஆன்‌ 25:02).

விதியைப்‌ பற்றி நம்பிக்கை கொள்ளும்‌ விடயத்தில்‌ பின்வரும்‌ விடயங்கள்‌ உள்ளடங்குகின்றன. அவை வருமாறு:

1.அல்லாஹ்வின் ‌அறிவாற்றல் பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டும்‌:

அல்லாஹ்வின்‌ அறிவாற்றலுக்கு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அவன்‌ அனைத்துப்‌ படைப்பினங்களினதும்‌ செயற்பாடுகளுடன்‌ சம்பந்தப்பட்ட கால நிர்ணயம்‌, சம்பாத்திய நிர்ணயம்‌ போன்றவற்றையும்‌, தன் ‌அடியார்களின்‌ செயற்பாடுகளுடன்‌ சம்பந்தப்பட்ட வணக்கவழிபாடுகள்‌, பாவகாரியங்கள்‌ போன்றவற்றையும்‌ நுணுக்கமாகவும்‌, விரிவாகவும்‌ அறிந்தவன்‌. அல்லாஹ்‌ கூறுகிறான்‌ :“அன்றியும்‌ அவனே ஒவ்வொரு பொருளையும்‌ நன்கறிபவனாக இருக்கிறான்‌."(அல்குர்‌ஆன்‌02:29)

“இவையாவும் வல்லமையில்‌ மிகைத்தோனும்‌, எல்லாம்‌ அறிந்தோனுமாகிய (இறைவனின்‌) ஏற்பாடாகும்‌.” (அல்குர்‌ஆன்‌06:96). 

தன்னை யார் ‌வழிபடுவார்‌, தனக்கு யார்‌ மாறு செய்வார்‌ என்பதையும்‌, யாருக்கு வாழ்வை நீடிக்க வேண்டும்‌, யாரின் வாழ்வை குறைக்க வேண்டுமென்பதையும்‌ நன்கறிந்தவன்‌.

2.லவ்ஹுல்மஹ்‌ஃபூலில்‌ அனைத்து விதிகளையும் ‌அல்லாஹ்‌ எழுதி வைத்துள்ளான்‌ என நம்பிக்கை கொள்ள வேண்டும்‌:

அல்லாஹ் கூறுகிறான்‌: “பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச்‌ சம்பவமும்‌-அதனை நாம்‌ உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல்மஹ்‌ஃபூள்‌) ஏட்டில் ‌இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்‌." (அல்குர்‌ஆன்‌57:2) 

அவன் மறைவான(யா)வற்றையும்‌ அறிந்தவன்‌; வானங்களிலோ, பூமியிலோ ஓர்‌ அணுவளவும் ‌அவனைவிட்டு மறையாது; இன்னும் அதைவிடச் சிறியதோ  சிறியதோ, இன்னும்‌ பெரியதோ ஆயினும்‌ தெளிவான (லவ்ஹுல்‌ மஹ்‌ஃபூல்‌) ஏட்டில் பதிவுசெய்யப்படாமல்‌ இல்லை என்று கூறுவீராக." (அல்குர்‌ஆன்‌34:03).

நபி (ஸல்) அவர்கள்‌ கூறினார்கள்‌: “அல்லாஹ்‌, வானங்களையும்‌ பூமியையும்‌ படைப்பதற்கு ஐம்பதாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான்‌ (அப்போது) அவனது அரியணை(அர்ஷ்) ‌தண்ணீரின் மேல் ‌இருந்தது." (முஸ்லிம் 2653)

“முதன்‌ முதலில்‌ அல்லாஹ்‌ எழுதுகோலைப்‌ படைத்து, அதற்கு 'எழுது' என கட்டளையிட்டான்‌. 'இறைவா, நான் ‌எதை எழுதுவது?' எனக்கேட்க, 'யுகமுடிவு நாள் வரும் வரைக்குமான அனைத்தினதும் விதிகளை எழுது' எனக் கூறினான்‌." (அபூதாவூத் 4700, திர்மிதி 2155)

அல்லாஹ் தனது அறிவாற்றல் பற்றியும்‌, விதிகளை எழுதி வைத்துள்ளது குறித்தும் பின்வரும்‌ அல்குர்‌ஆன்‌ வசனத்தில்‌ குறிப்பிடுகிறான்‌ “நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும்‌, பூமியிலும்‌ உள்ளவற்றை நன்கறிகிறான்‌ என்பதை நீர் ‌அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்‌) ஒரு புத்தகத்தில்‌ (பதிவுசெய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும்‌ சுலபமானது." (அல்குர்‌ஆன்‌ 22:70).

3.அமுலாக்கப்படும்‌ அல்லாஹ்வின் நாட்டத்தை நம்பிக்கை கொள்ள  வேண்டும்‌:

அல்லாஹ் நாடியவை நிச்சயம் நடந்தே தீரும்‌. அவன் நாடாதவைகள்‌ என்றும்‌ நடைபெறாது. அவன்‌ ஒன்றைக் கொடுக்க நினைத்தால்‌ அதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுக்கவேண்டுமென நினைத்தால்‌ அதை யாராலும் கொடுக்கவும்‌ முடியாது. அவனின் முடிவுகளை யாருக்கும் மாற்றிட முடியாது. அவனின் ஆட்சியில்‌ அவனுக்கு விருப்பமில்லாத எதுவும்‌ நடைபெறாது. தனது அருளால்‌ தான்‌
நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுவான்‌. தனது நீதத்தால் தான்‌ நாடியவர்களை வழிகெடச்‌ செய்வான்‌. அவனது சட்டத்தில்‌ கையடிப்பவர்‌ எவருமில்லை. அல்லாஹ் கூறுகிறான்‌:”அல்லாஹ் நாடியிருந்தால்‌, தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும்‌, அத் தூதுவர்களுக்குப் பின்வந்த மக்கள்‌(தங்களுக்குள்‌) சண்டை செய்து கொண்டிருக்கமாட்டார்கள் ஆனால் அவர்கள்‌ வேறுபாடுகள் கொண்டனர்‌; அவர்களில்‌ ஈமான்‌ கொண்டோரும்‌ உள்ளனர்‌; அவர்களில்‌
நிராகரித்தோரும் ‌(காஃபிரானோரும்‌) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால்‌ அவர்கள்‌ (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்கமாட்டார்கள்‌; ஆனால்‌ அல்லாஹ்தான்‌ நாடியவற்றைச் செய்கின்றான்‌." (அல்குர்‌ஆன்‌02:253),

“உங்களில் நின்றும் யார்‌ நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்‌). ஆயினும்‌, அகிலங்களுக்கெல்லாம்‌ இறைவனாகிய அல்லாஹ்‌ நாடினாலன்றி நீங்கள்‌ (நல்லுபதேசம்‌ பெற) நாடமாட்டீர்கள்‌” (அல்குர்‌ஆன்‌ 81:28-29).

 4. அல்லாஹ்வே அனைத்துப்‌ படைப்பினங்களையும்‌ உருவாக்குகிறான்‌, படைக்கிறான்‌ என நம்பிக்கை கொள்ளவேண்டும்‌:

அல்லாஹ்‌ மாபெரும்‌ படைப்பாளன்‌. அவனைத்‌ தவிர இப்பிரபஞ்சத்தில்‌ இருக்கும் ‌அனைத்தும் படைப்பினங்கள்‌. ஒவ்வொரு பொருளினதும் தன்மைகள்‌, பண்புகள்‌, அசைவுகள்‌ போன்றன யாவும்‌ அவனால்‌ உருவாக்கப்படுபவை, படைக்கப்பட்டவை.
அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “அல்லாஹ்தான்‌ அனைத்துப்‌ பொருட்களையும்‌ படைப்பவன்‌; இன்னும்‌, அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்‌." (அல்குர்‌ஆன்‌39:62), 

உங்களையும்‌, நீங்கள் செய்த(இ)வற்றையும்‌, அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்‌." (அல்குர்‌ஆன்‌37:96), 

அடியார்களின் செயற்பாடுகளைப்‌ பொறுத்தவரை அல்லாஹ் படைத்தவைகளும்‌ இருக்கின்றன. அவர்கள் சம்பாதித்துக்‌ கொள்பவைகளும் ‌இருக்கின்றன. அல்லாஹ் கூறுகிறான்‌: ”அது சம்பாதித்ததின்‌
நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும்‌ அதற்கே!" (அல்குர்‌ஆன்‌ 02:286).

5.அல்லாஹ்வின் விருப்பமும்‌, நாட்டமும் வெவ்வேறானதென நம்பிக்கை கொள்ள வேண்டும்‌:

சில சமயம் நுணுக்கமான காரணத்துக்காகவும்‌, உயரிய நோக்கத்திற்காகவும்‌ அல்லாஹ்தான் விரும்பாதவற்றை நாடுவான்‌. தான் நாடாதவற்றை விரும்புவான்‌. அல்லாஹ்வின் நாட்டத்தையும்‌, அவனது விருப்பத்தையும் ‌ஒருபோதும் சமனாக மதிப்பிட முடியாது. அல்லாஹ் கூறுகிறான்‌: மேலும் நாம் நாடியிருந்தால்‌, ஒவ்வோர்‌ ஆத்மாவுக்கும்‌
அதற்குரிய நேர்வழியை நாம்‌ கொடுத்திருப்போம்‌; ஆனால்‌ “நான் ‌நிச்சயமாக நரகத்தை ஜின்களையும் (தீய)மனினதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்‌" என்று என்னிடமிருந்து (முன்னரே)வாக்கு வந்துள்ளது. (அல்குர்ஆன்‌ 32:13).

“(அவனை)நீங்கள் நிராகரித்தாலும்‌ (அவனுக்குக் குறையேதுமில்லை)-நிச்சயமாக அல்லாஹ் ‌உங்களிடம் ‌தேவையற்றவன் எனினும் தன்‌ அடியார்களின்(நன்றி மறக்கும்‌) நிராகரிப்பை குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின்‌, உங்களைப் பற்றி அவன் திருப்திகொள்வான்‌..."
(அல்குர்‌ஆன்‌ 39:07).

6.விதியும்‌, மார்க்கம் கூறுபவைகளும்‌ என்றும் முரணாகாது என நம்பிக்கை கொள்ள வேண்டும்‌:

அல்லாஹ் கூறுகிறான்‌: ”நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்‌. எனவே எவர்‌ (தானதருமம்‌) கொடுத்து, (தன்‌ இறைவனிடம்‌) பயபக்தியுடன்‌ நடந்து, நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்‌. ஆனால் ‌எவன் ‌உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ, இன்னும்‌, நல்லவற்றை பொய்யாக்குகிறானோ, அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்‌) வழியைத்‌ தான்‌ இலேசாக்குவோம்‌.” (அல்குர்‌ஆன்‌ 92:04-10).

விதி என்பது படைப்பினங்களது அனைத்து விடயங்களையும் நிர்ணயித்தவனான அல்லாஹ் மாத்திரம்‌ அறியக் கூடிய வகையில்‌ மறைவாக இருக்கும்‌ ஒன்றாகும்‌. மார்க்கம் ‌என்பது படைப்பினங்கள் தமது வாழ்வை சீரான பாதையில் ‌எவ்வாறு செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் ‌எனும்‌ என அனைவரும்‌ அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ அனைவர்‌ மீதும்‌ கடமையாக்கப்பட்ட ஒன்றாகும்‌. அல்லாஹ்‌. அடியார்களின் விதிகளை நிர்ணயித்து, அவர்களை விட்டும்‌ அதனை மறைத்து வைத்துள்ளான்‌. அவர்களுக்கு சில விடயங்களை ஏவி, சிலதைத் தடுத்து. தனது ஏவல்களுக்குக் கட்டுப்படவும்‌, விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளவும்‌ அவர்களை அவன்‌ தயார்படுத்தி, உதவியும்‌ புரிந்துள்ளான்‌. அந்த ஏவல்‌, விலக்கல்களை அமுல்படுத்துவதில்‌ ஏதும்‌ தடைகள்‌ வரும்போது அவர்களுக்கு சலுகையும்‌ வழங்கியுள்ளான்‌. எனவே ஏவல்களை விடுவதற்கோ, பாவங்களைச் செய்வதற்கோ யாரும்‌ அல்லாஹ்வின்‌ விதியைக்‌ காரணம்‌ காட்ட முடியாது.
அல்லாஹ்‌ கூறுகிறான்‌:“(அல்லாஹ்வுக்கு இணைவைக்கும்‌) முஷ்ரிக்குகள்‌ “அல்லாஹ்‌ நாடியிருந்தால்‌, நாங்களும்‌ எங்கள்‌ மூதாதையர்களும்‌ இணை வைத்திருக்கமாட்டோம்‌; நாங்கள் ‌எந்தப் பொருளையும்‌(எங்கள் விருப்பப்படி)
ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்‌' என்று கூறுவார்கள் ‌- இப்படித்தான் ‌இவர்களுக்கு முன் ‌இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம்‌ ஏதாவது ஆதாரம் ‌உண்டா?இருந்தால் ‌அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்‌;(உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள்‌ பொய்வாதமே புரிகின்றீர்கள்‌"என்று (நபியே!)நீர்கூறும்‌. “நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ்விடமேயுள்ளது; அவன் நாடியிருந்தால்‌ உங்கள் யாவரையும் ‌அவன்‌ நல்வழியில்‌ செலுத்தியிருப்பான” என்று நீர் கூறும்" (அல்குர்‌ஆன்‌ 6:1‌48-”149). ‌

மேற் குறிப்பிட்ட வசனத்தில் கவனிக்கத்தக்க மூன்று விடயங்கள்‌ இருக்கின்றன:

1.இவர்களின்‌ வாதம்‌ பொய்யானதாகும்‌.

2.பொய்யான வாதத்தை முன்வைத்ததன் காரணமாக அவர்களுக்கு அல்லாஹ்வின்‌ தண்டனை வந்திறங்கியது. விதி விடயத்தில்‌ அவர்கள் கூறுபவற்றுக்கு ஏதேனும்‌ ஆதாரம் வைத்திருந்தால்‌ அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்காது. அவர்களின்‌ வாதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களை அவர்கள்‌ ஒரு போதும் சரியாக வாசித்து, ஆய்வுக் கண்கொண்டு விளங்கிக் கொள்ளவில்லை. அவ்வாறு விளங்கியிருந்தால்‌ அறிவியல் ரீதியாகப் பேசி அது அவர்களுக்கு சார்பான ஆதாரமாக அமைந்திருக்கும்‌. மாறாக வெறும்‌ அனுமானங்களையும்‌, ஊகங்களையும் வைத்தே அவர்கள் தமது வாதத்தை வைக்கின்றனர்‌. அதனால் நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ்வின் பக்கம்‌ வந்துவிட்டது.

'இத்தகைய விதி விடயத்தில்‌ இரு பிரிவினர்‌ வழிதவறிச் சென்றுள்ளனர்‌. அவர்கள்‌ வருமாறு:

அ. கத்ரிய்யாக்கள்‌:

இவர்கள்‌ மனிதர்களின்‌ செயற்பாடுகள்‌ மாத்திரமே உண்மையானது எனும்‌. கொள்கையைக் கொண்டவர்கள்‌. அல்லாஹ்வின் விதியை மறுப்பவர்கள்‌. இவர்கள்‌ இரு தரப்பினராக நோக்கப்படுகின்றனர்‌:

1.எல்லைமீறியவர்கள்‌(குலாத்‌): இக்கொள்கைக்கு இவர்களே முன்னோடிகள்‌. இவர்கள் ஸஹாபாக்களின்‌ இறுதிக் காலத்தில் தோற்றம் பெற்றார்கள்‌. காரியங்கள்‌ அனைத்தும் முன்னேற்பாடின்றி அவ்வப்போது தானாகவே நடைபெறுகின்றன
என்பது இவர்களது வாதம்‌. அதனால்‌ அல்லாஹ்வின்‌ அறிவு, எழுதப்பட்ட விதி, அவனின் நாட்டம் அவனின் ‌படைப்பு போன்ற அனைத்தையும் மறுத்தார்கள்‌. இவர்களுக்கு அந்நேரமே இப்னு அப்பாஸ்‌, இப்னுஉமர்‌ போன்றோர் மறுப்பும்‌
தெரிவித்துள்ளனர்‌.

2.முஃதஸிலாக்கள் இவர்கள்‌ அல்லாஹ்வின் ‌‌அறிவு, எழுதப்பட்ட விதி ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் நாட்டம்‌, அவனின் படைப்பு ஆகிய இரண்டையும்‌ மறுக்கின்றனர்‌. மனிதர்கள்‌ தமது செயல்களை அவர்களே படைத்துக் கொள்கின்றனர்‌ என்பதே இவர்களின்‌ முக்கிய வாதமாகும்‌.

ஆ. ஜபரிய்யாக்கள்‌:

இவர்கள்‌ அல்லாஹ்வின்‌ செயற்பாடுகள் மாத்திரமே உண்மையானது எனும்‌. கொள்கையைக் கொண்டவர்கள்‌. மனிதன் சுதந்திரமற்றவன்‌. அவனின்‌ அனைத்து செயல்களும்‌ அல்லாஹ்வின்‌ நாட்டப்படியே நடைபெறுகின்றது. மனிதனும்‌, ஜடங்களும் ‌ஒன்றே. ஜடப் பொருட்களை நாம் ‌எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அவ்வாறே இறைவனும் நம்மை செயல்படவைக்கிறான்‌ எனக் கூறுகின்றனர்‌.

இவர்களும்‌ இரு தரப்பினராக நோக்கப்படுகின்றனர்‌:

1. சூபிஸஸனாதிகாக்கள்‌: உலகில்‌ மனிதன்‌ ஜடப்பொருள்‌ போன்றே நடாத்தப்படுகிறான்‌. அவனுக்கென செயல் சுதந்திரம் கிடையாது என நம்புபவர்கள்‌.

2.அஷாஇராகள்: மனிதன் செய்கின்ற எதையும் ‌குற்றம் பிடிக்க முடியாதுஎ‌னும்‌ கொள்கையுடையவர்கள்‌. அதாவது எந்தவொரு தாக்கமும்‌ செலுத்தமுடியாத பெயரளிவலான சக்திதான்‌ மனிதனுக்கு இருப்பதாகக்‌ கூறுபவர்கள்‌.

மேற்கூறப்பட்ட இரு முக்கிய பிரிவினர்களின்‌ வாதங்களும்‌ அல்குர்‌ஆன்‌, ஸுன்னாவின்‌ அடிப்படையிலும்‌, நடைமுறை வாழ்விலும்‌ செல்லுபடியற்று போகின்றன.

1. விதியின் நான்கு படித்தரங்களில் சிலதையோ, அனைத்தையுமோ மறுப்பவர்களுக்கு, விதி என்று ஒன்று இருக்கின்றது என அதிகமான அல்குர்‌ஆன் வசனங்களும்‌, சரியான நபிமொழிகளும் நிரூபித்து, பதிலடி கொடுக்கின்றன. மனிதன்‌ ஒரு விடயத்தை செய்ய ஆரம்பிக்கும்‌ போது, அதை செய்ய முடியாமல்‌ ஏதோ ஒரு தடை ஏற்படுவதை நடைமுறை வாழ்வில்‌ அவர்களுக்கான பதிலடியாக நாம்‌ நோக்கலாம்‌.

2. விதியை மாத்திரம்‌ ஏற்றுக் கொள்பவர்களுக்கு, மனிதனுக்கு நாட்டம்‌, ஓர்செயலை செய்யும்திறன்‌, ஆற்றல் போன்றன அவனிடமே காணப்படுகிறது எனஅதிகமான அல்குர்‌ஆன்‌ வசனங்களும்‌, சரியான நபிமொழிகளும்‌ நிரூபித்து, பதிலடிகொடுக்கின்றன. மனிதன்‌ தனக்கு தேர்வுச்‌ சுதந்திரம்‌ இருக்கும்‌ விடயங்களையும்‌, நிர்ப்பந்தமாக்கப்படும் விடயங்களையும் நன்கு பிரித்து நோக்கி, எதை எப்படி செய்யவேண்டும்‌ எனும் திறன் கொண்டவன் ‌என்பதை நடைமுறை வாழ்வில்‌ அவர்களுக்கான பதிலடியாக நாம்‌ நோக்கலாம்‌. காரணங்களின்றி அல்லாஹ்வின்‌ எச்செயல்களும்‌ இருக்காது என்பதை உறுதிப்படுத்தும்‌ பல இறைவசனங்கள்‌, நபிமொழிகள்‌ உள்ளன.


ஈமானின் யதார்த்தங்கள்:

1. இறை நம்பிக்கையானது சொல்‌, செயல்‌ ஆகிய இரண்டையும்‌ உள்ளடக்கியதாகும்‌:

உள்ளம்‌, நாவு முதலியவற்றுடன் தொடர்புபட்ட சொல்‌; உள்ளம்‌, நாவு, உடல்‌ உறுப்புக்கள்‌ முதலியவற்றுடன்‌ தொடர்புபட்ட செயல்‌ ஆகியவற்றில்‌ இறை நம்பிக்கையானது பிரதிபலிக்கும்‌.

உள்ளத்துடன்‌ தொடர்புபட்ட சொல்‌: 
நம்புதல்‌, உண்மைப்படுத்தல்‌, ஏற்றுக்கொள்ளல்‌.

நாவுடன்‌ தொடர்புபட்ட சொல்‌: 
இஸ்லாத்தின்‌ நாமத்தை மொழிதல்‌, இரு கலிமாக்களையும்‌ பகிரங்கமாக கூறுதல்‌.

உள்ளத்துடன் தொடர்புபட்ட செயல்‌: செயற்பாடுகளுக்கான எண்ணங்களையும்‌, நாட்டங்களையும்‌ வகைப்படுத்திக் கொள்ளல்‌. 

உதாரணம்‌: அல்லாஹ்வின்‌ மீது அன்புகொள்ளல்‌, அவனை அஞ்சுதல்‌, அவனிடம்‌ எதிர்பார்த்தல்‌, அவனிடமே முழுதையும்‌ ஒப்படைத்தல்‌.

நாவுடன் தொடர்புபட்ட செயல்‌: 
அல்லாஹ்வை நினைவுகூறல்‌, அவனிடமே பிரார்த்தனை புரிதல்‌, அல்குர்‌ஆனை ஓதுதல்‌.

உடல்‌ உறுப்புக்களுடன்‌ தொடர்புபட்ட செயல்‌: உடலால் செய்யவேண்டிய வணக்க வழிபாடுகளுக்கமைய உடல்‌ உறுப்புக்கள்‌ இசைவாக்கமடைதல்‌.

அல்லாஹ் கூறுகிறான்‌ “உண்மையான முஃமின்கள் யார்‌ என்றால்‌ அல்லாஹ்‌(வின்‌ திருநாம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் ப‌யந்து, நடுங்கிவிடும்‌; அவனுடைய வசனங்கள்‌ அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால்‌. அவர்களுடைய ஈமான்‌ அதிகரிக்கும்‌; இன்னும் ‌தன்‌ இறைவன்‌ மீது அவர்கள்‌ முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்‌. அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்‌; அவர்களுக்கு நாம்‌ அளித்த (செல்வத்‌)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்‌. இத்தகையவர்‌தாம்‌ உண்மையான முஃமின்கள்‌ ஆவார்கள்‌; அவர்களுடைய இறைவனிடம்‌ அவர்களுக்கு உயர் பதவிகளும்‌, பாவமன்னிப்பும் சங்கையான உணவும்‌ உண்டு.” (அல்குர்‌ஆன்‌ 08:02-04).

“நிச்சயமாக (உண்மையான) முஃமின்கள் யார்‌ என்றால்‌ அவர்கள்‌அல்லாஹ்வின்‌' மீதும்‌, அவனுடைய தூதர் மீதும்‌, ஈமான்கொண்டு, பின்னர் ‌(அதுபற்றி அவர்கள்‌ எத்தகைய) சந்தேகமும்‌ கொள்ளாது, தம்‌ செல்வங்களைக்‌ கொண்டும்‌, தம்‌ உயிர்களைக்‌ கொண்டும்‌ அல்லாஹ்வின்‌ பாதையில்‌ தியாகம்‌ செய்வார்கள்‌ - இத்தகையவர்கள்‌ தாம்‌ உண்மையாளர்கள்‌.” (அல்குர்‌ஆன்‌ 49:15).

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்‌: "ஈமான் ‌எனும் ‌இறைநம்பிக்கை எழுபதுக்கும்‌ மேற்பட்ட கிளைகளாக உள்ளது அதில்‌ சிறந்தது லாஇலாஹ இல்லல்லாஹ் ‌- உண்மையாக வணங்கப்படுவதற்கு தகுதியான இறைவன்‌ அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும்‌ இல்லை - என்று மொழிவதாகும்‌. அதில்‌ அந்தஸ்த்து குறைந்தது நோவினை தருபவற்றை பாதையை விட்டும்‌ நீக்குவதாகும்.‌ வெட்கம்‌‌ இறை நம்பிக்கையின்‌ ஒரு கிளையாகும்‌" (புகாரி 09, முஸ்லிம் 35)

சொல்லும்‌, செயலும்‌ சேர்ந்த கலவையே இறை நம்பிக்கையாகும்‌. இது, இவை இரண்டையும் வேண்டி நிற்கும் ‌உண்மைப்படுத்துதலாகும்‌. இவை இரண்டும்‌ ஒருவரிடம்‌ பிரதிபலிக்காமல்‌ போனால்‌ உண்மைப்படுத்தல்‌ எனும்‌ விடயம்‌ அவரை விட்டும்‌ நீங்கிவிட்டதாகவே கருதப்படும்‌.


2. ஈமானும்‌ இஸ்லாமும் தனித்துப் பயன்படுத்தப்படும் போது அவை ஒவ்வொன்றும்‌ மற்றதைக்‌ குறிக்கும்‌. ஈமான்‌ எனும்‌ வார்த்தை இஸ்லாம்‌ எனும் வார்த்தையுடன் சேர்த்து பயன்படுத்தப்படும் போது வெவ்வேறான இரு அர்த்தங்கள்‌ அவற்றுக்கு வழங்கப்படும்‌: 

ஈமான்‌ என்பது உள்ளத்துடன் தொடர்புபட்ட நம்பிக்கையையும்‌, இஸ்லாம்‌ என்பது வெளிப்படையாக நாம்‌ செய்யும்‌ இஸ்லாமிய
செயற்பாடுகளையும் குறிக்கும்‌ என்பதே அவ்‌விரு அர்த்தங்களாகும்‌.

இவ்‌ அர்த்தத்தின்‌ அடிப்படையில்‌ ஒவ்வொரு முஃமினுக்கும்‌ முஸ்லிம்‌ எனும்‌ பெயர்‌ சூட்டப்படும்‌. ஆனால்‌ ஒவ்வொரு முஸ்லிமுக்கும்‌ முஃமின்‌ எனும்‌ பெயர்‌ சூட்டப்படாது. 

அல்லாஹ் கூறுகிறான்‌: “நாங்களும்‌ ஈமான் கொண்டோம்‌” என்று (நபியே! உம்மிடம்‌) நாட்டுப்புறத்து அரபிகள் கூறுகிறார்கள்‌,“நீங்கள்‌ ஈமான் கொள்ளவில்லை. எனினும்‌. "நாங்கள்‌ வழிபட்டோம்‌" (இஸ்லாத்தைத்‌ தழுவினோம்‌) என்று (வேண்டுமானால்‌), கூறுங்கள் (என நபியே அவர்களிடம்‌) கூறுவீராக“ ஏனெனில் உங்களுடைய இதயங்களில்‌ (உண்மையான) ஈமான் நுழையவில்லை; மேலும்‌ நீங்கள் ‌அல்லாஹ்வுக்கும் ‌அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின்‌ அவன் ‌உங்களுடைய நற்செய்கைகளில்‌, எதையும் ‌உங்களுக்குக் குறைக்கமாட்டான்‌" நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்‌; மிக்க கிருபையுடையவன்‌.. (அல்குர்‌ஆன்‌ 49:14).


3.ஈமான்‌ கூடுதல் குறைவை சந்திக்கும்‌: 

அல்லாஹ்வை அறிதல்‌, அவன் ‌இவ் ‌உலகில் நிகழ்த்தியிருக்கும் ‌அத்தாட்சிகளைப் பற்றி சிந்தித்தல்‌, வணக்கவழிபாடுகளை சரிவர செய்தல் போன்றவற்றின்‌ மூலம்‌ இறைநம்பிக்கை அதிகரிக்கும். ‌அதேவேளை அல்லாஹ்வைப்‌ பற்றிய தெளிவின்மை, அவனது அத்தாட்சிகளை மறந்து வாழ்தல்‌, வணக்க வழிபாடுகளில்‌ பொடுபோக்கைக்‌ கையாள்தல்‌, பாவகாரியங்களில்‌ ஈடுபடுதல்‌ போன்றவற்றின்‌ மூலம்‌ குறைவடைந்தும்‌ போகும்‌.

அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “உண்மையான முஃமின்கள்‌ யார்‌ என்றால்‌, அல்லாஹ்‌(வின்‌ திருநாமம்‌ அவர்கள்‌ முன்‌) கூறப்பட்டால்‌, அவர்களுடைய இருதயங்கள்‌ பயந்து நடுங்கிவிடும்‌; அவனுடைய வசனங்கள்‌ அவர்களுக்கு, ஓதிக் காண்பிக்கப்பட்டால்‌ அவர்களுடைய ஈமான்‌ அதிகரிக்கும்‌; இன்னும் தன்‌ இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்‌. அல்குர்‌ஆன்‌08:02).

மேலும்‌ அவர்களுடைய ஈமானுடன் பின்னும் ஈமானை அதிகரித்துக் கொள்வதற்காக முஃமின்களின்‌ இதயங்களில்‌, அவன்தாம் ‌அமைதியும்‌(ஆறுதலும்) அளித்தான்‌.” (அல்குர்‌ஆன்‌ 48:04).


4. இறை நம்பிக்கையில் பல ரகங்கள் ‌உள்ளன. அதன் சிலபண்புகள்‌ சில பண்புகளை விடவும்‌ உயரியதாக இருக்கும்‌: 

நபி (ஸல்) அவர்கள்‌ கூறினார்கள்‌ :“ஈமான்‌ எனும்‌ இறைநம்பிக்கை எழுபதுக்கும்‌ மேற்பட உள்ளதுடன் அதில் சிறந்தது லாஇலகாஹஇல்லல்லாஹ் ‌- அல்லாஹ்வைத்‌ தவிர வேறு கடவுள்‌ இல்லை- என்று மொழிவதாகும்‌. அதில்‌ அந்தஸ்த்து குறைந்தது நோவினை தருபவற்றை பாதையை விட்டும் நீக்குவதாகும்‌. வெட்கம்‌ ஈமான்‌ எனும்‌ இறைநம்பிக்கையின்‌ ஒரு கிளையாகும்‌" . (புகாரி 09, முஸ்லிம் 35)


5. இறை நம்பிக்கையாளர்களிலும் பலரகத்தினர்‌ இருக்கின்றனர்‌. சிலர் பூரண இறை நம்பிக்கையாளர்களாக இருப்பார்கள்‌. சிலர்‌ அவர்களை விடவும்‌ தரம்‌ குறைந்தவர்களாக இருப்பார்கள்‌:

அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “பின்னர்‌ நம்‌ அடியார்களில்‌ நாம்‌ எவர்களைத்‌ தேர்ந்தெடுத்தோமோ, அவர்களை அவ்வேதத்திற்கு வாரிசாக்கினோம்‌; ஆனால்‌ அவர்களிலிருந்து தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டவர்களும்‌ உண்டு, அவர்களிலிருந்து நடுநிலையாக நடந்துகொண்டவர்களும்‌ உண்டு, இன்னும்‌ அவர்களிலிருந்து, அல்லாஹ்வின் ‌அனுமதிகொண்டு நன்மைகள் செய்வதில் முந்திக்‌ கொண்டவர்களும் ‌உண்டு. இதுவே மாபெரும் பாக்கியமாகும்‌." (அல்குர்‌ஆன்‌35:32).

இரு ஷஹாதாக்களையும்‌ பொருளுணர்ந்து நம்பிக்கை கொள்பவர்‌ இறைநம்பிக்கையின்‌ அடிப்படையை அடைந்திடுவார்‌. இஸ்லாம் கடமையாக்கிய விடயங்களை செய்து, தடுத்துள்ளவற்றை தவிர்ந்து நடப்பவர் ‌அவசியம்‌ இருக்க வேண்டிய இறைநம்பிக்கையை அடைந்திடுவார்‌. இஸ்லாம்‌ கடமையாக்கியவற்றையும்‌, விரும்பியவற்றையும்‌ செய்து, தடுத்தவற்றையும்‌, வெறுத்தவற்றையும் தவிர்ந்து நடப்பவர் பூரண இறைநம்பிக்கையை அடைந்திடுவார்‌.


6. 'அல்லாஹ் நாடினால் நான் முஃமினாக இருப்பேன்‌' என இறை நம்பிக்கையில் விதிவிலக்கைப்பு குத்துவது மூன்றுநிலைகளில்‌ அவதானிக்கப்படும்‌.

அ. இறை நம்பிக்கையின் அடிப்படை அம்சத்தில் சந்தேகம் கொண்டவராக‌ இவ்‌ வார்த்தையைக் கூறுவது ஹராமாகும்‌. அது அவரை இறைநிராகரிப்பின் பக்கம்‌ கொண்டு போய்விடும்‌. ஏனெனில்‌ இறைநம்பிக்கையின்‌ அடிப்படையே உறுதியாக நம்புதல்‌ என்பது தான்‌.

ஆ. தனக்கு அவசியமானளவு அல்லது பரிபூண ஈமான்‌ இருப்பதாகத் தன்னைத்தானே சுத்தப்படுத்தும்‌ நிலை ஏற்படுமென அஞ்சினால்‌ இவ்வாறு கூறுவது
அவசியமானதாகும்‌.

இ. அல்லாஹ்வின்‌ நாட்டத்தை மையப்படுத்தும்‌ நோக்கில்‌ இவ்வாறு கூறுவது ஆகுமானதாகும்‌.


7. பாவங்கள்‌ செய்வதன்‌ மூலம்‌ இறை நம்பிக்கை எனும் ‌பண்பு ஒருவரை விட்டும்‌ முழுமையாக அழிந்து போய்விடாது மாறாக இறைநம்பிக்கை குறைவடைந்திடும்‌. 

பெரும்பாவம் செய்பவர்‌. இறைநம்பிக்கையில்‌ குறையுள்ள ஓர்‌முஃமினாகவே கருதப்படுவார்‌. அவரிடம்‌ அடிப்படை இறைநம்பிக்கை இருப்பதால்‌ முஃமின்‌ எனவும்‌, பெரும்பாவம்‌ செய்ததற்காக பாவி எனவும்‌ பெயர்‌ சூட்டப்படுவார்‌. இதற்காக வேண்டி அவர்‌ இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றப்படவோ, நரகத்தில் ‌நிரந்தரமாக தங்கிடவோ மாட்டார்‌. மாறாக அல்லாஹ்வின்‌ நாட்டத்தின்‌ கீழ் ‌கொண்டு வரப்படுவார்‌. அவன்‌ நாடினால்‌ இவரை மன்னித்து சுவனத்தில்‌ நுழைவிப்பான்‌. அல்லது அவரின்‌ பாவத்தின்‌ அளவுக்கான தண்டனையை நரகில் வழங்கிவிட்டு, பரிந்துரை மூலமோ, அல்லாஹ்வின் கருணை மூலமோ மீண்டும் சுவனத்தில் நுழைத்திடுவான்‌.

அல்லாஹ் கூறுகிறான்‌: 'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்‌; இதைத்தவிர,(மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு, மன்னிப்பான்‌; யார்‌ அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள்‌ நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்‌.” (அல்குர்‌ஆன்‌ 04:48).

நபி (ஸல்) அவர்கள்‌ கூறினார்கள்‌: “சுவனவாதிகள்‌ சுவனம்‌ சென்று, நரகவாதிகள் நரகம் சென்ற பின்‌ அல்லாஹ்தஆலா "தன்னுடைய உள்ளத்தில்‌
கடுகளவாவது ஈமானுள்ளவர்களை நரகிலிருந்து வெளியேற்றுங்கள்‌" என்று கூறுவான்‌. அவர்கள் கருகிய நிலையில்‌ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு,
நஹ்ருல்‌ ஹயாத்‌ எனும்‌ ஆற்றில்‌ போடப்படுவார்கள்‌." (புகாரி 22)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்‌, “தம் ‌உள்ளத்தில்‌ ஒரு வாற் கோதுமையின்‌ அளவு நன்மை இருக்கும் நிலையில் ‌'லாயிலாஹ இல்லல்லாஹ்‌' என்று கூறியவர் நரகிலிருந்து வெளியேறிவிடுவார்‌. மேலும்‌, தம்‌ இதயத்தில்‌ ஒரு கோதுமையின்‌ அளவு நன்மை இருக்கும்‌ நிலையில்‌ 'லாயிலாஹ இல்லல்லாஹ்‌' சொன்னவரும் நரகிலிருந்து வெளியேறிவிடுவார்‌. மேலும்‌, தம் ‌உள்ளத்தில் ‌ஓர்‌ அணு அளவு நன்மை இருக்கும் நிலையில் ‌'லாயிலாஹ இல்லல்லாஹ்‌' கூறியவரும்‌ நரகிலிருந்து வெளியேறி விடுவார்‌'. (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), புகாரி 44)

நபி (ஸல்) 'நன்மை' என்று கூறினார்கள்‌ என மேற்கண்ட நபி மொழியில்‌ குறிப்பிட்டிருக்கும்‌ இடங்களிலெல்லாம்‌ ஈமான்‌ எனும்‌ நம்பிக்கை என்று குறிப்பிட்டதாக அனஸ்‌ (ரலி) அறிவிக்கும் மற்றோர்‌ அறிவிப்பில் காணப்படுகிறது.
أحدث أقدم