بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்விடம் ஓர் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அதற்கு இரண்டு நிபந்தனைகள் அவசியமாகின்றன.
முதலாவது நிபந்தனை:
உளத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட இபாதத்தாக அது இருக்க வேண்டும்.
அதற்கான ஆதாரம்: அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘நேரிய வழி நின்று, கலப்பற்றவர்களாக அவனுக்கே கட்டுப்பட்டு, அல்லாஹ்வை வணங்குமாறும், தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தையும் கொடுத்துவருமாறும் தவிர, அவர்கள் ஏவப்படவில்லை.” (அல்பய்யினா: 5)
இவ்வசனத்தில் அல்லாஹ் வணக்க வழிபாட்டை உளத்தூய்மையுடன் நிறைவேற்ற வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கின்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே உள்ளதாகும்.” (புஹாரீ:1, முஸ்லிம்: 1907)
அதாவது, வணக்க வழிபாடுகளை யார் அல்லாஹ்வுக்காக மாத்திரம் செய்கின்றார்களோ அவர்களுக்கு அதனுடைய கூலி வழங்கப்படும். யார் வேறு நோக்கங்களுக்காக அவைகளைச் செய்கின்றார்களோ அந்நோக்கங்கள் அவர்களுக்குக் கிடைத்துவிடும். ஆனால், அல்லாஹ்விடம் அவ்வணக்கங்கள் அங்கீகரிக்கப்படமாட்டாது என்பதே இந்த ஹதீஸின் விளக்கமாகும்.
இவ்வாதாரங்கள் உளத்தூய்மையின்றி வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை எமக்கு உணர்த்துகின்றன.
இரண்டாவது நிபந்தனை:
நாம் செய்யும் வணக்க வழிபாடுகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். யார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தராத அமைப்பில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்களோ அவ்வணக்கங்கள் அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
செயல்கள் முறையாகச் செய்யப்பட வேண்டும் நாம் செய்கின்ற அமல்கள் தூய
எண்ணத்துடன் அமைந்திருத்தல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே அவை முறையாகவும்
செய்யப்பட வேண்டும். நல்லெண்ணத்துடன் செய்கின்ற செயல் முறையற்றதாக
இருந்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இதே போல முறையாகச்
செய்யப்பட்டாலும், நல்லெண்ணத்துடன் செய்யப்பட வில்லையானால் அது
நிராகரிக்கப்படும். நல்லெண்ணத்துடனும் முறையாகவும் செய்யப்படும் செயல்
மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். நல்லெண்ணம் என்பது அல்லாஹ்விற்காக மட்டும்
செய்யப்படும் செயலாகும்.
முறையான செயல் என்பது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலின்படி செய்யப்பட்ட
செயலாகும். இதன் அவசியத்தை கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம்
வலியுறுத்துகின்றது:
எவர் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படிகிறாரோ அவர் அல்லாஹ்விற்குக் கீழ்ப்படிகிறார்...(4 : 80). மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும்
(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ, அதை எடுத்துக் கொள்ளுங்கள்.
இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக்
கொள்ளுங்கள். (59 : 7)
இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை நுழைக்க முடியாது. நாயகம் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: ‘நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும்
உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்” (ஆதாரம் புகாரி, முஸ்லிம்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘யார் எமது மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலைச் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்.” (முஸ்லிம்)
நபிவழிக்குப் புறம்பாக செய்யப்படும் செயல்கள் அல்லாஹ்விடம் மறுக்கப்படும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
ஆகவே ஒருவனது அனைத்து நற்கிரியைகளும் அல்லாஹ்விற்காகச் செய்கின் றோம் என்ற
தூய எண்ணத்துடன் நபியவர்களின் வழிகாட்டலில் செய்யப்பட்டாலே அது
அங்கீகரிக்கப்படும்.