அஷரதுல் முபஷ்ஷரா

அஷரத்துல் முபஷ்ஷரா (சுவர்க்கவாசிகள்)
என நபிகளால் அறிவிக்கப்பட்டோர் பத்து பேர். 

குலஃபாவுர் ராஷிதீன்களான…

01. அபூ பக்ர் இப்னு அபீ குஹாஃபா (ரலி), 
பிறப்பு: மக்கா, 
இறப்பு: மதீனா,
தலைநகர்: மதீனா.
ஆட்சி செய்த காலம் ஹி 11-13 கி.பி 632-634 (2 ஆண்டுகளும் 7 மாதங்களும்) 
வயது: 60
அடக்கம்: மதீனவில் (ரவ்லாவில்) பெருமானார்( ஸல்) அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

02. உமர் இப்னுல் கத்தாப் (ரலி)
பிறப்பு: மக்கா, 
இறப்பு: மதீனா,
தலைநகர்: மதீனா, 
ஆட்சி செய்த காலம்: ஹி13-23 கிபி 634-644 (பத்தாண்டுகள்),
வயது: 61,
அடக்கம்: மதீனா(ரவ்லா)வில் பெருமானார்(ஸல்) அவர்களுக்கும் அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

03 உத்மான் இப்னு அஃப்பான் (ரலி) 
பிறப்பு: மக்கா,
இறப்பு: மதீனா,
தலைநகர்: மதீனா,
ஆட்சி செய்த காலம்: ஹி 23-35 கிபி 644-656 (பன்னிரண்டரை ஆண்டுகள்)
வயது: 82
அடக்கம்: ஜன்னத்துல் பகீஃயில் கடைசியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

04 அலி இப்னு அபீ தாலிப் (ரலி),
பிறப்பு: மக்கா,
இறப்பு: மதீனா
தலைநகர்: கூஃபா
ஆட்சி செய்த காலம்: ஹி 35-40 கிபி 656-661 .(நாலரை ஆண்டுகள்)
வயது: 60
அடக்கம்: கூஃபாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

…ஆகிய நான்கு பேருடன் கீழ் வரும் ஆறு பேரும் அஷரத்துல் முபஷ்ஷராவை சேர்ந்தவர்கள்.

05 தல்ஹது இப்னு உபைதுல்லாஹ் (அஷ்ஷஹீதுல் ஹை) 60 வது வயதில் ஹி-36ல் ஜமல் போரில் கொல்லப்பட்டார்) இடம்: பஸரா. (ஷத்துல் கல்லாஃ)

06 ஸுபைர் இப்னு அவாம் (ரலி) (ஹவாரிய்யுன்னபி)
67 வது வயதில் ஹி- 36ல் ஜமாதுல் ஆகிர் 10 வியாழன் ஜமல் போரில் கொல்லப்பட்டார்) இடம்: பஸரா.(வாதிஸ்ஸிபாஃ)

07 அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (தாஜிருர் ரஹ்மான்) ஹி-31ல் 75 வது வயதில் மரணம். அடக்கவிடம்: ஜன்னத்துல் பகீஃ.

08 ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) (முஜாபுத்தஃவத்)
ஹி 55ல் -60 வயதில் மரணம். அடக்கவிடம்: ஜன்னத்துல் பகீஃ.

09 ஸயீது இப்னு ஸைது (ரலி) (மின் அஹிப்பாயிர் ரஹ்மான்) ஹி 50 ல் -70 வயதில் மரணம். அடக்கவிடம் : அகீக், மதீனா

10 அபூ உபைதா ஆமிர் இப்னுல் ஜர்ராஹ் (ரலி) (அமீனுல் உம்மத்) 58 வது வயதில் கிபி639ல் மரணம். அடக்கவிடம் : அம்வாஸ்.
أحدث أقدم