இறைவனை மறுப்போர் அவர்களைப் படைத்த இறைவன் கேட்கும் இக்கேள்விகளுக்கு பதில்
சொல்லக் கடமைப் பட்டுள்ளார்கள்:
52:35. அல்லது, அவர்கள் எந்தப்
பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனரா? அல்லது அவர்கள்
(எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:36. அல்லது, வானங்களையும் பூமியையும்
அவர்கள் படைத்தார்களா?
56:57. நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை)
நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம்
படைக்கின்றோமா?
56:60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது.
56:61. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு
வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
56:62. முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள்
அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
56:63. (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
56:64.அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம்
முளைக்கச் செய்கின்றோமா?
56:65. நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால்
நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
56:66. ''நிச்சயமாக நாம் கடன்
பட்டவர்களாகி விட்டோம்.
56:67. ''மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்'' (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
56:68. அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக்
கவனித்தீர்களா?
56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
56:70.நாம் நாடினால், அதைக் கைப்புள்ள
தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள்
நன்றி செலுத்த வேண்டாமா?
56:71. நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
56:72. அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு
பண்ணுகிறோமா?
29:19. இறைவன் எவ்வாறு முதலில் படைப்பைத் துவங்கிப் பிறகு (அதனை எவ்வாறு)
தன்பால் மீட்டுகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இது இறைவனுக்கு மிகவும் சுலபம்.
29:20.''பூமியில் நீங்கள் பிரயாணம்
செய்து, இறைவன் எவ்வாறு (முந்திய)
படைப்பைத் துவங்கிப் பின்னர் பிந்திய படைப்பை எவ்வாறு உண்டு பண்ணுகிறான் என்பதைப்
பாருங்கள்; நிச்சயமாக இறைவன் எல்லாப்
பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன்'' என்று (நபியே!) நீர்
கூறுவீராக.