முஃதஸிலா கொள்கை

முஃதஸிலா என்பது ‘இஃதிஸால்’ என்ற அரபுப் சொல்லிலிருந்து பிறந்த வார்த்தையாகும். இவ்வார்த்தைக்கு பிரிந்து செல்லுதல் ஒதுங்கிக் கொள்ளுதல் போன்ற கருத்துக்கள் உள்ளன. பரிபாஷையில்  முஃதஸிலா எனப்படுவோர்‌ ஹிஜ்ரி இரண்டாம்‌. நூற்றாண்டின்‌ ஆரம்பத்தில்‌
தோன்றிய ஒரு இஸ்லாமிய பிரிவினரைக்‌ குறிக்கும்‌.

இவர்கள்‌ அறிஞர்‌ ஹஸன்‌ அல்‌ பஸரீ(ரஹ்‌) அவர்களிடம்‌ கல்வி கற்று வந்தனர்‌. இந்நிலையில்‌ இமாம்‌ ஹஸன்‌ அல்பஸரீ அவர்களிடம்‌ ஒருவர்‌
வந்து பெரும்பாவிகள்‌ விஷயத்தில்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னாவின்‌ நிலைப்பாடு பற்றி வினா எழுப்பினார்‌.
இமாம்‌ ஹஸன்‌ அல்‌-பஸரீ(ரஹ்‌) அவர்கள்‌ இக்கேள்விக்கு பதிலளிக்க முன்னர்‌, சபையில்‌ அமர்ந்திருந்த மாணவர்களில்‌ ஒருவரான வாஸில்‌ பின்‌ அதா (ஹிஜ்ரி 80ஆம்‌ ஆண்டு பிறந்து ஹிஜ்ரி 131ஆம்‌ ஆண்டு மரணித்தவர்‌) என்பவர்‌ குறுக்கிட்டு, 'பெரும்பாவிகள்‌ முஃமின்களுமல்ல அதேநேரம்‌ காஃபிர்களும்‌ அல்ல ஈமான்‌, குஃப்ர்‌ இரண்டுக்கும்‌ இடைப்பட்ட நிலையில்‌ உள்ளனர்‌” எனப்‌ பதிலளித்தார்‌. இதனைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த இமாம்‌ ஹஸன்‌ அல்பஸரீ (ரஹ்‌) அவர்கள்‌ உடனடியாக வாஸில்‌ பின்‌ அதாவை தமது சபையிலிருந்து விரட்டிவிட்டார்‌. விரட்டிவிடப்பட்ட வாஸில்‌ பின்‌ அதாவும்‌, அவரது ஆதரவாளர்களும்‌ அப்பள்ளி வாசலின்‌ மற்றொரு மூலையில்‌ ஒதுங்கிக்‌ கொண்டனர்‌. மேலும்‌, தமக்கென்று சில அடிப்படைக்‌ கோட்பாடுகளையும்‌ உருவாக்கிக்கொண்டனர்‌.

இவ்வாறு, ஹிஜ்ரி 105ஆம்‌ ஆண்டுக்கும்‌ 110ஆம்‌ ஆண்டுக்கும்‌ இடைப்பட்ட காலத்தில்‌, பெரும்பாவிகள்‌ பற்றிய இஸ்லாத்தின்‌ நிலைப்பாட்டில்‌ ஏற்பட்ட சர்ச்சையின்‌ பின்னணியில்‌ உருவானவர்கள்‌ என்பதே மிகச்சரியான கருத்தாகும்‌. இவ்வாறு உருவான முஃதஸிலாக்கள்‌ சில கருத்துக்களை ஜஹமிய்யாக்களிடமிருந்தும்‌, இன்னும்‌ சில கருத்துக்களை கதரிய்யாக்களிடமிருந்தும்‌ எடுத்துக் கொண்டு, தமது கொள்கைகளை வகுத்துக்‌ கொண்டனர்‌.
அவைகளாவன:

1. தெளஹீத்‌: அல்லாஹ்வுக்குக்‌ கட்டாயம்‌ இருக்க வேண்டிய பண்புகள்‌, இருக்கக்கூடாத பண்புகள்‌ பற்றி ஆய்வு செய்வதையே முஃதஸிலாக்கள் தெளஹீத்‌ என்று கருதுகின்றனர்

மேலும்‌ அல்லாஹ்வுக்குப்‌ பண்புகள்‌ இருப்பதாக விசுவாசம்‌ கொள்வது, அவனுக்கு இணை, துணை, அவனுடன்‌ பல கடவுள்கள்‌ இருப்பதாக விசுவாசம்‌ கொள்வது போன்றதாகும்‌ என்கின்றனர்‌. முஃதஸிலாக்கள்‌ இவ்வாறுகூறி அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ அனைத்தையும்‌ மறுத்துரைகின்றனர்‌.

2. அத்ல்: அல்லாஹ்வின் செயல்கள் பற்றி ஆய்வு செய்வதற்கு இவர்கள்‌ இந்த வார்த்தையைப்‌ பயன்படுத்துகின்றனர்‌. அவனுடைய செயல்கள்‌ அனைத்தும்‌ அழகானவை. கெட்ட, நியாயமற்ற செயல்களை அல்லாஹ்‌ செய்வதில்லை. அவ்வாறு மனிதன்மீது அவைகளை விதியாக்கவும்‌ இல்லை. அவைகளைப்‌ பொருந்திக்‌ கொள்ளவும்‌ இல்லை. மனிதனுடைய செயல்கள்‌ அனைத்தையும்‌ மனிதன்‌ படைக்கிறானேதவிர, அல்லாஹ்‌ அவைகளைப்‌ படைக்கவோ, விதியாக்கவோ இல்லை. எனவே, அநியாயமான கெட்ட செயல்கள்‌ அனைத்தையும்‌ கற்பனை செய்தல்‌, பொருந்திக்‌ கொள்ளுதல்‌, படைத்தல்‌ போன்ற பண்புகள்‌ அனைத்திலிருந்தும்‌ அல்லாஹ்‌ பரிசுத்தமானவ்ன்‌ என்ற கருத்துக்களைக்‌ கூறுகின்றனர்‌. மேலும்‌, முஃதஸிலாக்களின்‌ தலைவர்களில்‌ ஒருவரான காழி அப்துல்‌ ஜப்பார்‌ என்பவர்‌, மனிதனின்‌ நடவடிக்கைகள்‌, எழும்புதல்‌, உட்காருதல்‌ போன்ற அனைத்தும்‌ மனிதனின்‌ புறத்திலிருந்து புதிதாக ஏற்படுபவைகள்‌. இவைகளைச்‌ செய்கின்ற ஆற்றலை மாத்திரமே அல்லாஹ்‌ மனிதனுக்கு வழங்கியுள்ளான்‌. எனவே, எவராவது மனிதனுடைய செயல்களை அல்லாஹ்‌ படைக்கிறான்‌ என்று கூறினால்‌, அவர்‌ பெரும்பாவம்‌ செய்தவராவார்‌” எனக்கூறுகின்றார்‌. (பார்க்க: பிரக்‌ அல்முஆஸிரா: 1175).

3. அல்வஃத்‌ - அல்வஈத்‌: முஃதஸிலாக்களின்‌ அறிஞர்களில்‌ ஒருவரான காழி அப்துல்‌ ஜப்பார்‌ கூறுவதாவது: வஃது என்பது ஒரு மனிதனுக்கு எதிர்காலத்தில் நன்மை செய்வதாக அல்லது அவருக்கு ஏற்படவிருக்கின்ற தீமையை தடை செய்வதாக கூறும் செய்தியாகும் மேலும் இச்செயலுக்கு அவர் தகுதியானவராகவோ, தகுதியற்றவராகவோ இருக்கலாம்‌.

அல்லாஹ்‌ சில கடமைகளை மனிதன் மீது விதியாக்கி, அவைகளை நிறைவேற்றுவோருக்கு வெகுமதிகளைத்‌ தருவதாகவும்‌ வாக்களித்துள்ளான்‌. எனவே, மனிதன்‌ தன்மீது விதியாக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றினால்‌ அல்லாஹ்‌ வாக்களித்த நற்கூலிக்கு உரித்தானவன்‌ ஆகிறான்‌. எனவே, அவன்‌ வாக்களித்த
நற்கூலியைக்கொடுத்து, தனது வாக்கை நிறைவேற்றுவது அல்லாஹ்வின் மீது கடமை. அவ்வாறு கொடுக்காவிடின்‌ அல்லாஹ்‌ கூலி கொடுக்காத அநியாயக்காரனாகவும்‌ ஆவான்‌ என்று முஃதஸிலாக்கள்‌ கூறுகின்றனர்‌. (இவர்கள்‌ கூறுவது போன்று வாக்கு மீறியவனாகவும்‌, மனிதன்‌ செய்த கடமைக்குக்‌ வாக்குக்கு மாறு செய்தல்‌, அநீதியிழைத்தல்‌ போன்றவற்றை விட்டும்‌ அல்லாஹ்‌ மிக்க பரிசுத்தமானவன்‌).

அல்வஈத்‌: அல்வஈத் ‌ என்பது, பெரும்பாவிகள்‌ தாம்‌ செய்த பாவங்களுக்கு பாவமன்னிப்புக்‌ கேட்காமல்‌ மரணித்தால்‌, அவ்வாறு மரணிப்பவர்களுக்கு அல்லாஹ்‌ வாக்களித்துள்ள தண்டனைகளை நிறைவேற்றுவது பற்றி ஆய்வு செய்வதையே முஃதஸிலாக்கள் ‌ அல்வஈத் என்கின்றன‌ர்‌.

பெரும்பாவிகள்‌ தாம்‌ புரிந்த பாவச்‌ செயல்களுக்குப்‌ பாவமன்னிப்புச்‌ செய்யாமல்‌ மரணித்தால்‌, இறைநிராகரிப்பாளர்‌களைப் போன்று இவர்களையும்‌ நரகத்தில்‌ போட்டுவிடுவான்‌. எனினும்‌, இறை நிராகரிப்பாளர்களுக்குக்‌ கொடுக்கப்படுகின்ற
தண்டனையை விடக்‌ குறைவாகவே இவர்கள்‌ தண்டிக்கப்படுவர்‌. இதுவே பெரும்பாவம்‌ செய்பவர்களுக்கும்‌, காபிர்களுக்கும்‌ இடையிலுள்ள வித்தியாசமாகும்‌ என்று கூறுகின்றனர்‌. (பார்க்க:
பிரக்‌ அல்முஆஸிரா).

4. ஈமானுக்கும்‌, இறைநிராகரிப்பிற்கும்‌ இடைப்பட்ட நிலை:- பெரும்பாவத்தில்‌ ஈடுபடுவோர்‌ முஃமின்களும்‌ அல்லர்‌. அதேவேளை அவர்கள்‌ காஃபிர்களுமல்லர்‌. இருசாராருக்கும்‌ இடைப்பட்ட 'ஃபாஸிக்‌' என்ற நிலையில்‌ உள்ளனர்‌. உலகத்தில்‌ இவர்கள்‌ 'ஃபாஸிக்‌' 'நெறிதவறியவர்‌' என்ற பெயரில்‌ அழைக்கப்படுவர்‌. அல்லாஹ்விடம்‌ பாவமன்னிப்புச்‌ செய்யாமல்‌ மரணித்தால்‌, மறுமையில்‌ காஃபிர்களுடன்‌ நிரந்தரமாக நரகத்தில்‌ தங்கிவிடுவர்‌.

 5. நன்மையை ஏவித்‌ தீமையைத்‌ தடைசெய்தல்‌: நன்மையை ஏவித்‌ தீமையைத்‌ தடைசெய்ய முன்வருகின்ற ஒவ்வொருவரும்‌ எது நன்மை, எது தீமை என்பதை ஆதாரத்துடன்‌ தெரிந்திருக்க வேண்டும்‌. இது ஃபர்ளு கிபாயா வகையைச்‌ சார்ந்த கடமைகளுள்‌ ஒன்று, எனவே, சிலர்‌ மாத்திரம்‌ இப்பணியில்‌ ஈடுபட்டால்‌ போதுமானது. ஏனையோர்‌ மீது எந்தக்குற்றமும்‌ இல்லை.

நன்மையை ஏவித்‌ தீமையைத்‌ தடுத்தல்‌ எனும்‌ நற்பணி பர்ளு கிபாயா என்பதே அனைத்து அஹ்லுஸ்‌ ஸான்னாவினதும்‌ கருத்தாகும்‌. ஆனால்‌, இதனை நடைமுறைப்படுத்துகின்றபோது கீழ்வரும்‌ அம்சங்களில்‌ அஹ்லுஸ்‌ ஸான்னாவினருக்கும்‌, மற்ற சாராருக்குமிடையில்‌ முரண்பாடுகள்‌ உள்ளன. அவைகளாவன:

அ) பாவங்களைத்‌ தடை செய்யும்‌ வழிமுறை.
ஆ)அநியாயக்கார ஆட்சியாளனுக்கு (அமீருக்கு) எதிராகப்‌ போராடுதல்‌.
இ) முஃமின்கள்‌, காஃபிர்கள்‌ என்ற
எந்தவித வேறுபாடுமின்றி தமக்குப்‌ பாதகமானவர்களுக்கு எதிராக ஆயுதம்‌ ஏந்திப்‌ போராடுதல்‌.

எனவே, மேற்கூறப்பட்ட ஐந்து வகையான அடிப்படைக்‌ கொள்கைகளையும்‌ நம்பி ஏற்றுக்கொள்பவர்கள்‌ முஃதஸிலாக்கள்‌ ஆவர்‌. மேற்படி ஐந்து அடிப்படைகளிலும்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினருடைய நிலைப்பாட்டிலிருந்து முரண்பட்டு விலகிக்கொண்டதால்‌ இவர்கள்‌ முஃதஸிலாக்கள்‌ என்று அழைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌, முஃதஸிலாக்கள்‌ கீழ்வரும்‌ அம்சங்களிலும்‌ அஹ்லுஸ்‌ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினருடன்‌ முரண்படுகின்றனர்‌:

1. அல்லாஹ்‌ எல்லா இடத்திலும்‌ இருக்கின்றான்‌ என முஃதஸிலாக்களில்‌ பெரும்பாலானோர்‌ கருதுகின்றனர்‌. அவர்களில்‌ சிலர்‌ மாத்திரம்‌ 'அவன்‌ ஒரு இடத்திலும்‌ இல்லை: மாறாக, அவன்‌ தனது ஆரம்ப நிலையில்‌ இருக்கின்றான்
என்கின்றனர்‌.

2. அவன்‌ அர்ஷின்‌ மீது இல்லை மாறாக அர்ஷையும்‌ அவன் ஆக்கிரமித்து, அதிலும்‌ அவன்‌ ஆட்சி செய்கிறான்‌.

3. மனிதன்‌ தனது கண்களால்‌
அல்லாஹ்வை மறுமையில் காணமுடியாது.

4. அல்லாஹ்‌ பேச மாட்டான்‌ என்று சிலரும்‌, பேசுவான்‌ என்று வேறுசிலரும்‌ கருதுகின்றனர்‌.

5. அல்லாஹ்வுடைய பண்புகள்‌ அனைத்தையும்‌ மறுத்து, அவற்றை பாழ்படுத்துகின்றனர்‌.

6. மறுமையில்‌ நிகழவுள்ள ஷஃபாஅத்தை மறுக்கின்றனர்‌.

முஃதஸிலாக்கள்‌ கீழ்‌வரும் வெவ்‌வேறு
பெயர்களிலும்‌ இவ்‌ உலகில்‌ உள்ளனர்‌:
1) அஹ்லுல்‌ அதல்‌ வத்தெளஹீத்‌ 
2) அத்லிய்யா
3) அஹ்லுல்‌ ஹக்‌ 
4)அல்பிர்கதுல்‌ நாஜியா
5) அல்முனஸ்ஸிஹுன லில்லா 
6) அல்கதரிய்யா.
(நூல்‌: அவ்வாத்‌ அல்முஃதிக்‌: அல்முஃதஸிலா :22)

- மெளலவி. எம்‌. எம்‌. ஸக்கி, B.A(Hons) மதினா

أحدث أقدم