அத்தியாயம் - 9 குற்றங்கள்

புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 9 குற்றங்கள்


குற்றங்கள்

1188 ''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவர். வேறெவருமில்லை என்றும் என்னை அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி சொல்லும் மனிதரை, அவர் திருமணத்திற்குப் பின்பு விபச்சாரம் புரிந்தவராக இருந்தாலோ, (நியாயமின்றி) எவரையேனும் அவர் கொலை செய்திருந்தால் அதற்குப் பழிவாங்கும் விதத்திலோ, தன் மார்க்கத்தை விட்டு, ஜமாஅத் அமைப்பை விட்டுப் பிரிந்து சென்றவராக இருந்தாலோ - ஆக, இந்த மூன்றில் ஏதாவது ஒரு காரணத்திற்காகவே தவிர கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1189 ''திருமணத்திற்குப் பின்பு விபச்சாரம் செய்பவன் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டும். ஒரு முஸ்லிமை வேண்டுமென்றே கொல்பவன், (பதிலுக்குக்) கொல்லப்பட வேண்டும். மேலும் இஸ்லாத்தில் இருந்து வெளியேறி அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போரிடுபவன் கொல்லப்பட வேண்டும்; அல்லது தூக்கிலிடப்படவேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும்; அல்லது நாடு கடத்தப்பட வேண்டும். இந்த மூன்று குற்றங்களில், ஏதேனும் ஒன்றைச் செய்த முஸ்லிமைத் தவிர மற்ற முஸ்லிமைக் கொல்வது அனுமதிக்கப்பட்டதல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ. இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1190 ''மறுமை நாளில் மக்கள் மத்தியில் (மனித) உயிர்க்கொலை பற்றிய தீர்ப்பு தான் முதலில் வழங்கப்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1191 ''எவன் தன்னுடைய அடிமையைக் கொல்கிறானோ, அவனை நாம் கொல்வோம். எவன் தன்னுடைய அடிமையின் காது, மூக்கை அறுக்கிறானோ, அவனது காது, மூக்கை நாம் அறுப்போம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஸமுரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னுமாஜா

இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1192 ''மகனைக் கொன்தற்காகத் தந்தையிடம் பழிவாங்கக் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ இப்னு மாஜா

இது இப்னுல் ஜாரூத் மற்றும் பைஹகீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திர்மிதீ இதை முழ்தாரிப் (பலவீனமானது) என்று குறிப்பிட்டுள்ளார்.

1193 ''இறைச் செய்தியில் குர்ஆனைத் தவிர வேறு எதுவும் தங்களிடம் உள்ளதா?'' என்று நான் அலீ(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, ''இல்லை. தானியத்தைப் பிளந்து உயிரைப் படைத்தவன் மீது சத்தியமாக! அல்லாஹ் குர்ஆனில் ஒரு மனிதனுக்கு அளித்திருக்கும்விளக்கத்தையும் இந்த ஏட்டில் (எழுதி வைக்கப்பட்டு) இருப்பவற்றையும் தவிர, ''என்று அவர்கள் பதிலளித்தார்கள். நான், ''இந்த ஏட்டில் என்ன (எழுதி வைக்கப்பட்டு) உள்ளது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''உயிரிட்டுத் தொகை பற்றிய விளக்கம், எதிரி நாட்டவரிடம் சிறைப்பட்டுள்ள போர்க்கைதியை விடுவிப்பது தொடர்பான சட்டம்'' என்று கூறினார்கள் என அபூ ஜுஹைஃபா அறிவிக்கிறார். புகாரி

1194 அலீ(ரலி) வாயிலாக அஹ்மத், அபூதாவூத் மற்றும் நஸயீயில் மற்றொரு அறிவிப்பின் படி ''இறை நம்பிக்கையாளர்களின் உயிர்கள் ஒன்றுக் கொன்று சமமானவை. அவர்களில் கடை நிலையில் உள்ளவர் கொடுக்கும் அபயத்தைக் கூட அவர்கள் அனைவரும் பாதுகாத்து நிறை வேற்றிட முயல வேண்டும். பிறருக்கு எதிராக அவர்கள் அனைவரும் ஒரே கையாக (ஒன்றுபட்டு) நிற்பார்கள். ஓர் இறைமறுப்பாளனைக் கொன்றதற்கு தண்டனையாக ஓர் இறை நம்பிக்கையாளன் கொல்லப்படக் கூடாது. ஒப்பந்தம் குடுத்தவன் ஒப்பந்தக் காலத்தில் கொல்லப்படக் கூடாது'' என்று இடம் பெற்றுள்ளது.

1195 இரண்டு கற்களுக்கும்டையில் தலையை வைத்து நசுக்கப்பட்டவளாக ஓர் அடிமைப் பெண்ணை கண்டனர். ''யார் உன்னை இவ்வாறு செய்தது? இன்னரா? இன்னாரா?'' என்று மக்கள் வினவிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு هதனுடைய பெயர் வந்ததும், அவள் தன் தலையை அசைத்து ''ஆமாம்'' என்றாள். அந்த هதன் பிடித்து வரப்பட்டான். அவன் குற்றத்தையும் ஒப்புக் கொண்டான். இரண்டு கற்களுக்கு இடையில் அவனது தலையை வைத்து நசுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1196 ஏழை மக்களைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பணக்காரக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனின் காதை அறுத்து விட்டான். அவர்கள் (இச்செய்தியுடன்) நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்காக இழப்பீட்டுத் தொகை எதையும் நிர்ணயிக்கவில்லை என்று இம்ரான் இப்னு ஹீஸைன்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1197 ஒருவர் ஒருவருடைய முழங்காலில் கொம்பால் குத்திவிட்டார். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ''எனக்காகப் பழி வாங்குங்கள்'' என்று கேட்டுக் கொண்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''காயம் நன்றாக ஆறிய பின்னர் வா!'' என்று கூறினார்கள். அவர் மறுபடியும் வந்து பழி வாங்குமாறு கேட்டுக் கொண்டார். நபி(ஸல்) அவர்களும் பழி வாங்கினார்கள். அதற்குப் பின்னர் அவர் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நொண்டியாகிவிட்டேன்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''நான் உன்னைத் தடுத்தும் நீ கேட்கவில்லை; மாறு செய்தாய். அதனால் தன் கருனையிலிருந்து அல்லாஹ் உன்னை தூரமாக்கி விட்டான். உமது ஊனம் வீணாம் விட்டது'' அதற்கு பின் காயங்கள் குணமாகாதவரை பழிதீர்ப்பதை நபி(ஸல்) அவர்கள்தடை செய்தார்கள். அஹ்மத், தாரகுத்னீ

1198 ஹுதைல் கோத்திரத்தைச் சேர்நத் இரணடு பெண்கள் சண்டையிட்டுக் கொண்டனர். அவர்களில் ஒருத்தி மற்றொருத்தி மீது கல் எறிந்து அவளையும் வயிற்றிலிருந்து சிசுவையும் கொன்று விட்டாள். இது தொடர்பான வழக்கை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். அடிபட்டவருக்கு அடித்தவர் ஓர் அடிமையையோ ஓர் அடிமைப் பெண்ணையோ ஈடாகக் கொடுக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். அதன் முடிவை அடிபட்டவர் வசம் ஒப்படைத்தார்கள். மேலும் அந்த அடிமையை அவரது வாரிசுகளுக்கு உரியதாக்கினார்கள். அப்போது ஹமல் இப்னு நாபிகா அல் ஹுதலீ என்பவர் ''அல்லாஹ்வின் தூதரரே! சாப்பிடாத, குடிக்காத, பேசாத, அழுகைச் சத்தம் எழுப்பாத ஒன்றுக்கு நான் எவ்வாறு உயிரிட்டுத் தொகை கொடுப்பது?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவர் பேசிய அடுக்கு மொழி நடையின் காரணத்தால், ''இவர் குறிகாரர்களின் சகோதரர் போலும்'' என்று கூறனார்கள். என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1199 இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக அபூதாவூத் மற்றும் நஸயீயில் ஹுனைன் சம்பந்தமாக நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்த போது, அங்கிருந்த ஒருவரிடம் (அந்நிகழ்வு பற்றி) உமர்(ரலி) அவர்கள் கேட்டதற்கு, ''ஹமல் இப்னு நாபிகா என்பவர் எழுந்து, ஒருவர் மற்றவர் மீது கல் எறிந்த போது நான் அந்த இரண்டு பெண்களுக்கும் நடுவில் இருந்தேன்'' என்று (சாட்சி) கூறினார் என்று அவர் தெரிவித்தார். (இப்னு அப்பாஸ்(ரலி) பின்னர் இந்த ஹதீஸை சுருக்கமாகக் கூறினார். இது இப்னு ஹிப்பான் மற்றும்  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1200 என்னுடைய அத்தை ரூபய்யிஉ பின்த்து நள்ர் என்னும் அன்ஸாரிப் பெண், ஒருவருடைய பல்லை உடைத்து விட்டார். இதற்காக ருபய்யிஉவின் குலத்தார். (அதாவது எங்கள் குலத்தார்) அவரிடம் மன்னிப்புக் கோரினர். அவர் அதை ஏற்றுக் கொள்ளாததால் இழப்பீட்டுத் தொகை சமர்ப்பித்தனர். ஆனால், அவர் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து பழிவாங்கும்படி கோரினர். நபி(ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி கட்டளையிட்டார்கள். அப்போது, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாங்கள் ருபய்யிஉவின் பல்லை உடைக்கப் போகிறீர்களா? இல்லை. தங்களை சத்தியத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவளது பல் உடைக்கப்பட்டது!'' என்று (என் தந்தையின் சகோதரர்) அனஸ் இப்னு நள்ர் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''அனஸே! அல்லாஹ்வின் கட்டளை பழிவாங்குதல் தான்'' என்றார்கள். அப்போது அந்த மக்கள் சமாதானமாம் மன்னித்து விட்டார்கள். அதன் பின்னர் நபி(ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வின் நல்லடியார்களில் சிலர் எத்தகையவர்களாயிருக்கின்றனர் எனில், அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்தால் அல்லாஹ் அதை உண்மையாக்கி விடுகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

1201 ''கொன்றவர் யார் என்று அறிய முடியாத வகையில் ஒரு கலவரத்திலோ கல்லெறிக்கு ஆளாகியோ, தடியடிபட்டோ கொல்லப்பட்டால் அவருக்கு (அவருடைய வாரிசுகளுக்கு) தவறிச் செய்யும் கொலைக்கான உயிரிட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும். எவரேனும் வேண்டுமென்றே கொல்லப்பட்டால் அதற்காகப் பழி வாங்கப்பட வேண்டும். இந்நிலையில் அதை (தீர்ப்பு வழங்குவதை) எவரேனும் தடுத்துவிட்டால், அவர் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜா

இதன் வரிசைத் தொடர் பலமானது.

1202 ஒருவன் மற்றவனைப் பிடித்துக் கொள்ள இன்னொருவன் அந்த மற்றவனைக் கொன்று விட்டால், கொன்றவனைக் கொன்று விடவேண்டும். பிடித்துக் கொண்டிருந்தவனைச் சிறையிலடைக்க வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.

இது தாரகுத்னீயில் மவ்ஸூல் எனுத் தரத்திலும், இப்னு கத்தானில் ஸஹீஹ் எனும் தரத்திலும் உள்ளது. இன்னும் அதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். இன்னும் இது பைஹகீயில் முர்ஸல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1203 நபி(ஸல்) அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டு வாழும் ஒர் இறை நிராகரிப்பாளருக்காக ஒரு முஸ்லிமைக் கொன்று விட்டு, ''தாங்கள் பாதுகாப்புப் பொறுப்பை நிறைவேற்றியவர்களில் நானே மேலானவன்'' என்று கூறினார் என அப்துர் ரஹ்மான் இப்னு பைலமானீ(ரலி) அறிவிக்கிறார்.

இது அப்துர் ரஸ்ஸாக்கில் முர்ஸல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. உமர்(ரலி) வாயிலாக தாரகுத்னீயில் மவ்ஸூல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு பலவீனமாக உள்ளது.

அடிமை ஒருவன் கொல்லப்பட்டால், ''அந்தக் கொலையில் ஸன்ஆவைச் சேர்ந்தோர் அனைவரும் ஈடுபட்டிருந்தாலும் கூட நான் அவர்கள் அனைவரையும் அதற்கு பதிலாகக் கொன்றிருப்பேன்'' என்று உமர்(ரலி) கூறினார்கள். இது மேற்கண்ட ஹதீஸ் சம்பந்தமாகக் கூறப்பட்டது.

1204 ''என்னுடைய இந்த உரைக்குப் பின் எவரேனும் ஒருவர் மற்றவரைக் கொன்றுவிட்டால், இறந்தவருடைய குடும்பத்தினர் இரண்டு விஷயங்களில் தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கும் கொள்ளலாம், விரும்பினால் உயிரிட்டுத் தொகை பெற்றுக் கொள்ளலாம்; அல்லது கொலையாளியைப் பழிக்கும் பழியாகக் கொன்றுவிடலாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் ஓர் உரையில் கூறினார்கள் என அபூஷுரைஹ் அல் குஸாயீ(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத் நஸயீ

1205 இதே பொருளில் அபூஹுரைரா(ரலி) வாயிலாக இதன் மூலம் புகாரி, முஸ்லிமில் உள்ளது.



இழப்பீடு மற்றும் உயிரிட்டுத் தொகை

1206 நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு (ஒரு கடிதம்) எழுதினார்கள். (ராவீ ஹதீஸ் முழுவதையும் அறிவிக்கிறார்) அதில், எவரேனும் குற்றமற்ற ஒரு முஃமினைக் கொன்று விட்டால், அதற்கு ஆதாரமும் இருந்தால் அதற்காகப் பழிவாங்குவது கடமையாகும். கொலை செய்யப்பட்டவனின் பொறுப்பாளர்கள் (உயிரிட்டுத் தொகை பெற்றுக் கொண்டு) மன்னித்து விட ஒப்புக் கொண்டாலே தவிர. உயிருக்கான நஷ்டஈடு 100 ஒட்டகங்களாகும். மேலும், மூக்கை அடியோடு அறுத்துவிட்டால் முழு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். இரண்டு கண்கள், நாக்கு, உதடுகளுக்கு பதிலாக முழு நஷ்ட ஈடு தரப்பட வேண்டும். ஒரு கால் வெட்டப்பட்டால் அரைப்பங்கு நஷ்ட ஈடாகும். மூளை மற்றும் வயிற்றுக் காயங்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நஷ்ட ஈடாகும். முதுகெலும்பைக் காயப்படுத்தியதற்கு பதினைந்து ஒட்டகங்களாகும். கை, கால்களின் ஒவ்வொரு விரலுக்கும் நஷ்ட பத்து ஒட்டகங்களாகும். ஒரு பல்லுக்குரிய நட்ஷஈடு ஐந்து ஒட்டகங்களாகும். எலும்பு தெரியும் அளவிற்குள்ள காயங்களுக்கு ஐந்து ஒட்டகங்கள் நஷ்ட ஈடாகும். பெண்ணுக்குப் பதிலாக ஆணை கொலை செய்பவர்களுக்குரிய நஷ்ட ஈடு அவரிடம் தங்கம் இருந்தால் ஆயிரம் தீனார்கள் ஆகும் என்று எழுதப்பட்டிருந்தது. என அபூ பக்கர் இப்னு முஹம்மத் இப்னு அம்ர் இப்னு ஹஜம் தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். நஸயீ, இப்னு குஸைமா, இப்னு ஸ்ஜாரூத், இப்னு ஹிப்பான், அஹ்மத். இது ஸஹீஹ் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

1207 1. மூன்று வருடங்கள் பூர்த்தியான ஒட்டகங்கள் இருபது 2. நான்கு வருடங்கள் பூர்த்தியான ஒட்டகங்கள் இருபது 3. ஒரு வருடம் பூர்த்தியான பெண் ஒட்டகங்கள் பத்து 4 இரண்டு வருடங்கள் பூர்த்தியான ஒட்டகங்கள் இருபது 5. இரண்டு வருடங்கள் பூர்த்தியான ஒட்டகங்கள் இருபது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ

திர்மீதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூத் ஆகிய நூல்களில் ''இரண்டு வருடங்கள் பூர்த்தியான ஒட்டகங்கள் என்பதற்குப் பதிலாக ஒரு வருடம் பூர்த்தியான ஒட்டகங்கள்'' என்றுள்ளது. இருப்பினும் முதற் கூற்றே பலமானது. இப்னு அபீ ஷைபா இதை மற்றொரு வகையில் மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்துள்ளார். இன்னும் இது மர்ஃபூஉவை விட அதிகமாக ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1208 அம்ர் இப்னு ஷுஐபு தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக மர்ஃபூஉ என்னும் தரத்தில் ''உயிரிட்டுத் தொகை மூன்று வருடங்கள் பூர்த்தியான முப்பது ஒட்டகங்களும், நான்கு வருங்கள் பூர்த்தியான முப்பது ஒட்டகங்களும், இன்னும் வயிற்றில் குட்டியிருக்கும் நாற்பது கர்ப்பிணி ஒட்டகைகள்'' என அபூதாவூத் மற்றும் திர்மிதீயின் மற்றொரு அறிவிப்பில் உள்ளது.

1209 மூன்று விதமான மக்கள் அல்லாஹ்விடத்தில் அதிகம் வரம்பு மீறியவர்களாவர். 1. அல்லாஹ் புனிதமாக்கிய இடத்தில் கொலை செய்பவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.இப்னு ஹிப்பான். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1210 ''மக்களே! தவறுதலாக செய்யப்பட்ட கொலைக்கும் வேண்டுமென்றே செய்யப்பட்டதற்கு ஒப்பாக உள்ள தவறிச் செய்த கொலைக்கும் - அதாவது கசை மற்றும் கம்பால் அடிக்கப்பட்டு நிகழ்ந்த கொலைக்கும் உரிய ஒட்டகங்களாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ மற்றும் இப்னு மாஜா. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1211 ''இதுவும் இதுவும் அதாவது பெருவிரலும் கண்டு விரலும் சமமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி

விரல்கள் மற்றும் முன் பற்கள், பின் வரிசைப் பற்களுக்கான நஷ்டயீடு சமமானதாகும்'' என்று அபூதாவூத் மற்றும் திர்மிதீயிலும் உள்ளது.

''இரு கரங்களின் விரல்கள் மற்றும் இரு கால்களின் விரல்களுக்கான நஷ்டயீடு சமமாகும். ஒவ்வொரு விரலுக்கும் பத்து ஒட்டகங்கள் (நஷ்ட ஈடு) ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு ஹிப்பானில் உள்ளது.

1212 ''ஒருவர் மருத்துவத் துறையில் அறியப்பட்டவராக (தேர்ச்சியும் அனுபவமும் அற்றவராக) இல்லாத நிலையில் அவர் எவருக்காவது சிம்ச்சையளித்து சிம்ச்சை பெற்றவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி விட்டால், அதற்கான (இழப்பீடு தரும்) பொறுப்பை அவரே ஏற்க வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு தம்முடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக மர்ஃபூஉ எனும் தரத்தில் அறிவிக்கிறார். தாரகுத்னீ

இது  ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூதாவூத் நஸயீயிலும் உள்ளது.

ஆனால் இதை முர்ஸலாக அறிவித்தவர்களே மவ்ஸூலாக அறிவித்தவர்களை விட பலமானவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

1213 ''எலும்புகள் வெளியில் தெரியும் அளவுள்ள காயங்களுக்கு நஷ்டயீடு ஐந்து, ஐந்து ஒட்டகங்களாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

''விரல்கள் எல்லாம் சமமாகும். அவற்றிற்கான நஷ்டஈடு பத்து பத்து ஒட்டகங்களாகும்'' என்று அஹ்மதில் அதிகப்படியாக உள்ளது. இது இப்னு குஸைமா மற்றும் இப்னுல் ஜாரூதில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1214 ''திம்மிகளுக்கான இழப்பீட்டுத் தொகை முஸ்லிம்களுக்கான இழப்பீட்டுத் தொகையிலிருந்து பாதியாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா

''ஒப்பந்தம் செய்து வாழ்பவர்களுக்கான நஷ்டயீடு சுதந்திரமான அசல் குடிமக்களுக்கான நஷ்டயீட்டிலிருந்து பாதியாகும்'' என்று அபூதாவூதில் உள்ளது.

''பெண்ணுக்குரிய நஷ்டஈடு ஆணுக்குரியது போன்றே ஆகும். அதில் மூன்றில் ஒரு பகுதி மையத்திற்குச் சாரும்'' என்று நஸயீயில் உள்ளது. இன்னும் இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1215 'வேண்டுமென்றே செய்யப்பட்டதற்கு ஒப்பான தவறுதலாக நிகழ்ந்த கொலைக் குற்றத்திற்குரியது போல் கடுமையானது தான். இரண்டிற்குமிடையிலுள்ள வேறுபாடு என்னவென்றால், தவறுதலாக நிகழ்ந்த கொலைக்குற்றத்தில் குற்றவாளி கொல்லப்படமாட்டார். வேண்டுமென்றே செய்யும் கொலைக்கு ஒப்பானது என்பது எதுவெனில் குரோதம் எதுமின்றியும் ஆயுதமேந்தாமலிருக்கும் நிலையிலும் (தாக்கும் எண்ணமின்றியும்) இருக்கும் போது ஷைத்தானின் தூண்டுதலால் மக்கள் தமக்கிடையே ஒருவரையொவருவர் அடித்துக் கொண்டு உயிரைப் போக்கடிப்பதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ர் இப்னு ஷுஐபு(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1216 நபி(ஸல்) அவர்களது காலத்தில் ஒரு மனிதர் மற்றொரு மனிதரைக் கொலை செய்துவிட்டார். கொல்லப்பட்டவருக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையாக நபி(ஸல்) அவர்கள் பனிரெண்டு ஆயிரம் திர்ஹம் விதித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

நஸயீ மற்றும் அபூஹாதிம் இதை முர்ஸல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

1217 நான் என்னுடைய மகனுடன் நபி(ஸல்) அவர்களிடம் ஆஜரானேன். அப்போது, ''இவர் யார்?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''இவன் என்னுடைய மகன்! தாங்கள் இதற்கு சாட்சியாக இருங்கள்!'' என்று நான் கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''அவன் உனக்கு ஏதும் தீங்கு விளைவிக்க மாட்டான். நீயும் அவனுக்கு ஏதும் தீங்கு விளைவிக்கமாட்டாய்'' என்று கூறினார்கள். நஸயீ, அபூதாவூத்

இப்னு குஸைமா மற்றும் இப்னுல் ஜாரூத்தில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.



கொலைக்குற்றம் சாட்டுவதும் கஸாமத் என்னும் அறியாமைக்கால சத்தியமும்

1218 அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் மற்றும் முஹய்யிஸா இப்னு மஸ்ஊத் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட சில பிரச்சினைகளின் காரணமாக கைபரின் பக்கம் சென்றனர். ஒரு நாள் முஹய்யிஸாவிடம் ஒருவர் வந்து அப்துல்லாஹ் இப்னு ஸஹ்ல் கொல்லப்பட்டு விட்டார். அவரது உடல் ஓர் ஊற்றில் போடப்பட்டு விட்டது என்ற செய்தியைத் தெரிவித்தார். முஹய்யிஸா هதர்களிடம் சென்று, ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் அவரைக் கொன்று விட்டீர்கள்'' என்று கூறினார். அவர்கள் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரை நாங்கள் கொல்லவில்லை'' என்று கூறினார். பின்னர் அவரும் அவரது சகோதரர் ஹுவய்யிஸாவும் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்லும் (இதைப் பற்றி பேசுவதற்காக) நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். முஹய்யிஸா நபி(ஸல்) அவர்களிடம் பேசப்போனார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''பெரியவரைப் பேசவிடுங்கள்'' என்று கூறினார்கள். நபி(ஸல்) வயதுக்கு மரியாதை தர நாடி இப்படிக் கூறினார்கள். உடனே ஹுவய்யிஸா பேசத் தொடங்கினர். பின்னர் முஹய்யிஸா பேசினார். அவர்கள் விஷயத்தைச் சொல்லி முடித்த பின் நபி(ஸல்) அவர்கள் ''அவர்கள் உங்கள் சகோதரருக்கான நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இல்லை என்றால் யுத்த பிரகடனத்தைப் பெறுவார்கள்'' என்று கூறிவிட்டு அவர்களுக்கு அது பற்றி ஒரு கடிதம் எழுதினார்கள். அதற்கு அவர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக அவரை நாங்கள் கொலை செய்யவில்லை'' என்று பதில் எழுதினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் ஹுவய்யிஸா, முஹய்யிஸா மற்றும் அப்துர் ரஹ்மான் இப்னு ஸஹ்ல் ஆகியோரிடம், ''நீங்கள் சத்தியம் செய்து உங்களுடைய நண்பரின் இரத்தத்திற்கு நீங்கள் உரிமை பெறுவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''இல்லை'' என்று கூறினார். ''உங்கள் மீது யூதர்கள் சத்தியம் செய்கிறார்களே?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, ''அவர்கள் முஸ்லீம்கள் இல்லையே'' என்று (பதில்) கூறினர். அதனால் நபி(ஸல்) அவர்கள் தமது தரப்பிலிருந்து அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுத்தார்கள். அவர்களுக்கு நூறு ஒட்டகங்களை அனுப்பினார்கள். அவற்றில் ஓர் ஒட்டகம் என்னை மிதித்து விட்டது'' என ஸஹ்ல் கூறினார். இச்சம்பவத்தை ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா(ரலி) அவர்கள் தமது குலத்தின் பெரியவர்களிடமிருந்து அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1219 ''அறியாமைக் காலத்தின் ஒரு சத்தியத்தை நபி(ஸல்) அவர்கள் அப்படியே அங்கீகரித்து அதன் அடிப்படையில் அன்சாரிகளில் சிலரிடையே யூதர்களால் கொல்லப்பட்டு விட்டதாக அவர்கள் சொன்னவரின் விஷயத்தில் தீர்ப்பளித்தார்கள். சிலருக்கு மத்தியில் கொலை செய்யப்பட்டவன் பால் தீர்ப்பளித்தார்கள் என அன்ஸாரிகளில் ஒருவர் அறிவிக்கிறார். முஸ்லிம்



கலகக்காரர்கள் மற்றும் துரோகிகளுடனான போர்
1220 ''எவன் நமக்கெதிராக ஆயுதம் தூக்குகிறானோ, அவன் நம்மைச் சேர்ந்தவன் அல்லன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

1221 ''எவர் தலைமைக்குக் கட்டுப்படுவதை விட்டு வெளியேறி, இன்னும் கூட்டமைப்பை விட்டே பிரிந்து விடுகிறாரோ அவரது மரணம் அறியாமைக் கால (இறை நிராகரிப்பாளரது) மரணமாக ஆகிவிடுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1222 ''துரோகிகளின் ஒரு கூட்டம் அம்மாரைக் கொலை செய்யும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்

1223 ''உம்மு அப்துடைய மகனே! இந்த சமுதாயத்திலிருந்து துரோகியாக மாறி விடுபவாகளுக்கான இறைச் சட்டம் என்னவென்பதை நீர் அறிவீரா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு, ''அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிவர்'' என்று அவர் பதில் கூறினார். அவர்களில் காயமுற்றவனைத் தீர்த்துக் கட்டக்கூடாது ஆற விடக் கூடாது.'' இன்னும் அவர்களில் கைதானவரைக் கொல்லக் கூடாது. அவர்களில் ஓடிப் போனவனைத் தேடிப் போகலாகாது. இன்னும் அவர்களின் போர்ச் செல்வங்களை பங்கிடவும் கூடாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். பஸ்ஸார்,  ஹாகிம்

இது ஸஹீஹ் எனும் தரத்தில் உள்ளதாக  ஹாகிம் சொன்னது தவறு, ஏனெனில், இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹதீஸ் கலை அறிஞர்களால் கைவிடப்பட்ட கௌஸர் இப்னு ஹம்கி என்பவர் இடம் பெறுகிறார்.

இது அலீ(ரலி) வாயிலாக மற்றோர் அறிவிப்பில் ஸஹீஹ் என்றிருந்தாலும், இப்னு அபீ ஷைபா மற்றும்  ஹாகிமில் இது மவ்கூஃப் எனும் தரமே பெற்றுள்ளது.

1124 ''ஒன்றுபட்டு இருக்கும் உங்கள் கூட்டமைப்பைப் பிரித்து விடும் எண்ணத்தோடு எவரேனும் உங்களிடம் வந்தால், ''அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அர்ஃபஜ் இப்னு ஷுரைஹ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்



குற்றவாளியுடன் போர் மற்றும் மதம் மாறி துரோகம் புரிந்தவனை கொலை செய்தல்

1225 ''எவர் தனது சொத்தைப் பாதுகாப்பதற்காக இறந்து விடுகிறாரோ அர் ஷஹீத் ஆவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ, மற்றும் திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1126 யஃலா இப்னு உமையா ஒருவருடன் சண்டையிட்டார். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரைத் தனது பல்லால் கடித்தார். உடனே மற்றவர் தனது கையை அவரது வாயிலிருந்து உருவிக் கொண்டார். அதனுடன் அவரது முன்பல்லையும் (உடைத்துக்) கழற்றி விட்டார். இந்த வழக்கு நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. ''உங்களில் ஒருவர் தனது சகோதரனை பலமான ஒட்டகம் கடிப்பது போன்று கடிப்பதா? இதற்கெல்லாம் நஷ்டஈடில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.

1227 ''அனுமதியின்றி ஒருவர் உங்கள் மீது (வீட்டின் ஜன்னல் வழியாக) எட்டிப் பார்த்ததற்காக நீங்கள் அவரைக் கல்லால் அடித்து, அவரது கண்ணைத் தோண்டியெடுத்து விட்டாலும் அது உங்கள் மீது குற்றமாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

அஹ்மத் மற்றும் நஸயீயின் மற்றோர் அறிவிப்பில், ''அதற்கு நஷ்ட ஈடோ, பழி வாங்குதலோ இல்லை'' என்று உள்ளது. இன்னும் இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1228 ''பகலில் தோட்டங்களைப் பாதுகாத்துக் கொள்வது அதன் எஜமானின் பொறுப்பாகும். இரவில் கால் நடைகளைப் பாதுகாப்பது அவற்றின் எஜமானன் மீதே பொறுப்பாகும். இன்னும் இரவில் அவற்றிற்கு ஏதேனும் தீங்குகள் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பு உரிமையாளனையே சாரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.

இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இதன் அறிவிப்பாளர் தொடரில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

1229 இஸ்லாத்தை ஏற்றுப் பின்னர், யூதனாம்ப் போனவனைப் பற்றிக் கூறுகையில், ''அவன் கொல்லப்படும் வரை நான் அமர மாட்டேன். ஏனெனில், அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்பு இது தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அதற்கான கட்டளையிடப்பட்டது. உடனே அவன் கொல்லப்பட்டான் என முஆத் இப்னு ஐபல்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்

அபூதாவூதின் மற்றோர் அறிவிப்பில் கொல்லப்படுவதற்கு முன்பு பாவமன்னிப்புக் கோருமாறு அவனிடம் சொல்லப்பட்டது என்றும் உள்ளது.

1230 ''எவன் (இஸ்லாத்திலிருந்து கொண்டு) தனது மார்க்கத்தை மாற்றிக் கொள்கிறானோ அவனைக் கொன்று விடுங்கள்.'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.

1231 பார்வையற்ற ஒரு நபித்தோழாரிடம் ஓர் உம்முவலத் இருந்தாள். அவள் நபி(ஸல்) அவர்களை ஏசிக் குறை பேசிக் கொண்டிருந்தாள். அவர் அவனைத் தடுத்தும் கூட அவள் திருந்தவில்லை. ஒரு நாள் இரவு கோடாரியை எடுத்து அவளது வயிற்றில் பாய்ச்சி அவள் மீது சாய்ந்து அவளைக் கொன்று விட்டார். இச்செய்தி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அதற்கு ''அறிந்து கொள்ளுங்கள்! அவளது இரத்தம் வீணாம் விட்டது. (அவள் கொலையுண்டதற்காக உயிரிட்டுத் தொகை தரத் தேவையில்லை) என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்

Previous Post Next Post