குடும்ப வாழ்க்கையில் நாம் மறந்த நபி வழிகள்

மனைவியின் முகத்தை புன்முறுவலுடன் பார்த்தல். 
- ஸஹீஹ் அத் திர்மிதி 1956

அவளுக்கு உணவை ஊட்டி விடுவது.
- புஹாரி / முஸ்லிம்
 
அவள்  வாய்வைத்து குடித்த பகுதியில் இருந்து நாம் அருந்துவது. 
- முஸ்லிம் 

அவளின் மடியில் சாய்வது. 
- புஹாரி / முஸ்லிம் 

ஒரே பாத்திரத்தில் அவளுடன் குளிப்பது. 
- புஹாரி / முஸ்லிம்
 
அவளுடன் கொஞ்சி குழாவுவது . 
- அஸ் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 1/254

வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவியாக இருப்பது. 
- அல் அதபுல் முப்ரத் 4996 

அவளுக்காக எமது வாயை சுத்தப்படுத்தி கொள்வது. 
- முஸ்லிம் 

அவளுக்காக நம்மை அலங்கரித்து மணம் பூசிக்கொள்வது. 
-முஸன்னப் இப்னு அபீ ஷய்பா 

அவளுக்கு விருப்பமான பெயர்களைக் கொண்டு அவளை அழைப்பது. 
- புஹாரி / முஸ்லிம் 

அவளிடம் குறையைக் கண்டால், காணதவன் போல நடந்து கொள்வது. 
- முஸ்லிம் 

அவளுடன் அன்பாக  இருத்தல், அவள் அழுதால் கண்ணீரைத் துடைத்து விடுதல். 
- ஸஹீஹுன் நஸாஈ
 
அவளின் பிடிவாதத்தை சகித்துக் கொள்வது. 
- புஹாரி 

அவள் சமைத்த சாப்பாட்டை குறை கூறாமல் இருப்பது. 
- புஹாரி 

அவளின் பணிகளுக்கு நன்றி தெரிவிப்பது. 
- அத் தர்கீப் வதர்ஹீப் 976 

அவளின் குடும்பத்தினரையும் தோழிகளையும் சங்கைப் படுத்துவது. 
- திர்மிதி 

அவளுடனே வாழ்வேன் என்பதை வாயால் சொல்வது. 
- புஹாரி 

அவளின் தேவைகளை கவனிப்பது, அவள் நோயுற்றால் அவளுக்கு ஓதி ஊதுவது. 
- புஹாரி / முஸ்லிம் 

அல்லாஹ்வை வணங்க நாம் உதவியாக இருப்பது. 
- அபூ தாவூத் 

அவளை நம்புவது, அவளுக்கு மோசடி செய்யாமல் இருப்பது. 
- முஸ்லிம் 

நாம் வெளியில் செல்லும் போது அவளை முத்தமிடுவது. 
- அபூ தாவூத்
أحدث أقدم