அலி காம்னாயி - ஷியா ஆதரவாளர்களும் அறிய வேண்டியவை...

ஈரானில் கொல்லப்பட்ட அலி காம்னாயி அவர்களை 'ஷஹீத் என்றும் இன்றைய காலகட்டத்தின் முஸ்லிம்களின் தலைவர் இமாம் என்றும் சிலர் அடையாளப்படுத்துகிறார்கள்.

இதற்குக் காரணம் அவர் முஸ்லிம்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் பேசியுள்ளார். இன்னும் ஏகாதிபத்தியத்தின் அக்கிரமங்களை துணிவுடன் எதிர்த்து நின்ற வீரராக இருந்தார் என்பதானால் தான்.

பாமர மக்களுக்கைப் பொறுத்தவரையில்  யார் இந்த சமுதாயத்திற்கு பாதுகாவலர் என்று தன்னை அடியாளப்படுத்தினாலும் அவர்கள் யார் ? நம்பிக்கைக்குறியவர்களா? இல்லையா? என்பதையெல்லாம் பார்க்காமல் அவர்களுக்குப் பின்னால் கண்மூடித்தனமாக அணி வகுப்பதை காணமுடிகிறது

அதே நேரத்தில் மார்க்கத்தின் அளவு கோளில் இவரைப் பற்றிய ஒரு முஸ்லிமின் பார்வை எப்படி இருக்க வேண்டும் என்பதையே நாம் இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

இந்த மார்க்கம் அல்லாஹ்வின் மார்க்கம். இதில் மனிதர்களின் சுய விருப்பு வெறுப்பிற்கு இடமில்லை. அல்குர்ஆனும் சுன்னாவும் தான் இதன் மூலாதாரம். அனைத்துச் செயல்களையும் 
அதனுடன் தான் உரசிப்பார்க்க வேண்டும்.

ஒருவரை முஸ்லிம்களின் தலைவராக வழிகாட்டியாக முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதாக இருந்தால், அவர் சரியான கொள்கை உடையவரா? இல்லையா? என்பதைப் பொறுத்துத் தான் தீர்மானிக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் அலி காம்னாயி என்பவர் பல்வேறு வழிகேடுகளை சுமந்தவராக இருந்தார். இதற்கான சில எடுத்துக்காட்டுகளை அவர் எழுதிய நூலில் இருந்து பார்ப்போம்.

அல்லாஹ்வின் வசனங்களை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடமிருந்து நேரடியாகக் கற்று, இந்த மார்க்கத்தை எவ்விதக் கூடுதல் குறைவின்றி அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துரைத்த மகான்களே ஸஹாபாக்கள் ஆவர். அவர்களை நேசிப்பதும் கண்ணியப்படுத்துவதும் இஸ்லாமிய அகீதாவின்  பிரிக்க முடியாத அங்கமாகும். அந்த முன்னோர்களை யாராவது இழிவுபடுத்தினால், அவர்கள் இஸ்லாத்தின் அடித்தளத்தையே தகர்க்க முயல்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை, அவர்கள் இஸ்லாத்தின் கொடிய எதிரிகள்.

இத்தகைய இழி செயலை அலி காம்னாயி அவர்கள் அவரது 'அல்-கவாஸ் வல்-லஹ்தாதுல் மஸ்வீரிய்யா' என்ற புத்தகத்தில் பல்வேறு இடங்களில் செய்துள்ளதை பார்க்கலாம்.

 ஸஹாபாக்களை அதிகார மோகம் கொண்டவர்களாகவும், உலக ஆதாயம் தேடுபவர்களாகவும் சித்தரிப்பதன் மூலம், அவர் நபியின் போதனைகளையும் அல்லாஹ்வின் வசனங்களையும் கேலி செய்துள்ளார். சில உதாரணங்கள்:

1. அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களைப் பிளவை உண்டாக்கியவராகச் சித்தரித்தல்:
முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையின் சின்னமான அபூபக்கர் (ரலி) அவர்களை, குழப்பத்தை (ஃபித்னா) உருவாக்கியவராகக் கூறுகிறார் கம்னாயி
والعجيب من ابي بكر انه يتهم الآخرين بالفرقة وقد تناسى انه اول من شق عصا المسلمين بذهابه للتشاور مع جماعته بأمر الخلافة وسعى لحياكه المؤامرات خلف الاستار .".

"அபூபக்கர் விஷயத்தில் ஆச்சரியமாக இருக்கிறது... கிலாஃபத் விஷயத்தில் தனது ஆட்களுடன் ஆலோசிக்கச் சென்றதன் மூலம் முஸ்லிம்களின் ஒற்றுமையைத் தகர்த்த முதல் ஆள் அவர்தான் என்பதையும், திரைமறைவில் சூழ்ச்சிகளைச் செய்தார் என்பதையும் அவர் மறந்துவிட்டார்." (பக்கம் 57).

2. உமர் பின் கத்தாப் (ரலி) நபியின் வஸிய்யத்தைத் தடுத்ததாகக் குற்றம் சாட்டல்:
நபி ﷺ அவர்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உமர் (ரலி) கூறிய வார்த்தைகளைத் திரித்துக் கூறுகிறார்:

"فقال عمر بن الخطاب وبدون تردد : ان النبي قد غلب عليه الوجع وعندكم القرآن حسبنا كتاب الله ... وهكذا أفسد بعض الصحابة الذين يجهلون حقيقة الاسلام ما أراد الرسول ﷺ ان يوصي به بخصوص استمرار خط النبوة في ولاية علي واقامة صرح العدالة بين افراد المجتمع الاسلامي"
"உமர் பின் கத்தாப் தயக்கமின்றி கூறினார்: 'நபியை வேதனை மிகைத்துவிட்டது, உங்களிடம் குர்ஆன் உள்ளது...' இவ்வாறு இஸ்லாத்தின் எதார்த்தம் அறியாத சில ஸஹாபாக்கள், அலிக்கு அதிகாரம் வழங்கி நீதியை நிலைநாட்ட நபி ﷺ நினைத்த வஸிய்யத்தை அழித்துவிட்டனர்." (பக்கம் 52).

3. ஆயிஷா (ரலி) மற்றும் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) மீது அவதூறு:

فلما اصبحا إذا عبد الله بن الزبير وقد أتى بخمسين رجلاً يشهدون عندها ان هذا الماء ليس بماء الحواب وانهم قد جازوا ماء الحوأب بليل ، فكانت هذه الشهادة أول شهادة زور شهد بها في الاسلام

"அப்துல்லாஹ் பின் ஜுபைர் 50 ஆட்களுடன் வந்து, அது 'ஹவ்அப்' நீர்நிலை அல்ல என்று பொய் சாட்சி சொன்னார். இதுவே இஸ்லாத்தில் சொல்லப்பட்ட முதல் பொய் சாட்சியாகும்." (பக்கம் 65).

4. ஸஅத் பின் அபீ வக்காஸ் உட்பட பலரை உலக மோகம் கொண்டவர்களாகக் கூறல்:
"وكان على رأس هذه المجموعة سعد بن ابي وقاص ، أبو سعيد الخدري ، ابو موسى الاشعري ، عبد الله بن عمر ... نعم ، انهم يعرفون علي ومنزلته وفضائله في القرآن وفي احاديث الرسول لكن حب الدنيا وزخارفها حال بينهم وبين الاعتراف بالحقيقة"

ஸஅத் பின் அபீ வக்காஸ், அபூ ஸயீத் அல் குத்ரி, அபூ மூஸா அல் அஷ்அரி, அப்துல்லாஹ் பின் உமர் போன்றோர் அலியின் சிறப்புகளை அறிந்திருந்தும், குர்ஆனிலும் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் ஹதீஸ்களிலும் உள்ள அவரின் சிறப்புகளை அறிந்திருந்தும் உலக ஆசையினால் உண்மையை மறைத்தார்கள் என்று கூறுகிறார். (பக்கம் 67, 68).

5. அம்ரு பின் ஆஸ் (ரலி) மற்றும் அவரது தாயார் மீது விபச்சார அவதூறு:
எகிப்தை வெற்றி கொண்ட மாபெரும் தளபதி அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்களின் தாயார் ஒரு விபச்சாரி என்றும், அம்ரு பின் ஆஸ் ஒரு விபச்சாரப் புதல்வர் என்றும் மிக மோசமான அவதூறைக் காம்னாயி எழுதியுள்ளார். (பக்கம் 74, 75).

6. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களை வஞ்சகராகச் சித்தரித்தல்:
சுவனவாசி என்று நற்செய்தி சொல்லப்பட்ட அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), அலிக்கு எதிராக வஞ்சகத்திலும் சூழ்ச்சியிலும் ஈடுபட்டதாகக் கூறுகிறார். (பக்கம் 63).

7. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களைத் திருடராகக் கூறல்:
'குர்ஆனின் விரிவுரையாளர்' என்று போற்றப்படும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், பஸ்ராவின் கருவூலத்திலிருந்து நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றதாகக் கம்னாயி பழி சுமத்துகிறார்.
சிந்தியுங்கள்!

நம்பிக்கையாளர்களே, மேற்கண்ட ஆதாரங்களில் இருந்தே அலி காம்னாயி என்ற இந்த 'ராஃபிதி'யின் உண்மை முகம் எந்தவொரு  முஸ்லிமுக்கும் விளங்கும். நபியின் நெருங்கிய தோழர்களான அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) போன்றோரை இழிவுபடுத்துபவர்கள் ஒருபோதும் இஸ்லாத்தின் நண்பர்கள் அல்ல! மாறாக கொடிய எதிரிகளாவர்.

அரசியல் நிகழ்வுகளுக்காக, நமது முன்னோர்களைப் பழித்தவர்களையும் அல்லாஹ்வின் வசனங்களைத் திரித்தவர்களையும் மகத்துவப்படுத்துபவர்கள் தங்களின் மறுமையை நாசமாக்கிக் கொள்கிறார்கள். நாளை மறுமை நாளில்  அபூபக்கர், உமர் (ரலி) அவர்களுக்கு முன்னால் இவர்களால் எப்படி நிற்க முடியும்? 

அல்லாஹ்வும் அவனது தூதரும் நேசித்தவர்களை வெறுத்தவனை நாம் எப்படி நேசிக்க முடியும்?

நமது அகீதாவும் ஈமானும் உலகியல் இலாபங்களுக்காக அடகு வைக்கப்பட வேண்டியவை அல்ல. 

அல்லாஹ் நம்மை நேர்வழியில் உறுதிப்படுத்துவானாக.

அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் அன்புத் தோழர்களையும், மனைவியரையும் 'விபச்சாரிகள்' என்றும் 'நயவஞ்சகர்கள்' என்றும் பழிப்பவர்களுக்காக, தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படிக் கண்ணீர் வடிக்க முடிகிறது? ஸியோனிச யூத தேசத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட அலி கமேனி என்ற ஈரானின் 'ராஃபிதி' தலைவரை 'ஷஹீத்' என்று புகழ்ந்து தள்ளும் சிலரை இன்று நாம் காண்கிறோம்!!

வெளிப்படையாக இஸ்லாமிய ஒற்றுமையைப் பற்றி பேசிக்கொண்டு, தனது நூல்கள் மற்றும் சொற்பொழிவுகள் வழியாக இஸ்லாமிய வரலாற்றைத் திரித்து, சிறந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஸஹாபாக்களைப் பரவலாக இழிவுபடுத்தியவர்தான் அஹ்லுஸ் சுன்னாவின் எதிரியான கம்னாயி என்பதை அவரது நூல்களைப் பார்த்தால் விளங்கும்!

தற்போது நடந்து வருகின்ற இஸ்ரேல் - ஈரான் போரில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும் எனில், இந்த போர் அதிகாரத்திற்கான மத்திய கிழக்கு பகுதியில், இஸ்ரேல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கிரேட்டர் இஸ்ரேல் என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான போராகும்.

இதில் இஸ்ரேலை நேரடியாக எதிர்த்துக் கொண்டிருக்கின்ற ஈரனை முடித்துவிட்டு அரபு நாடுகளை வேட்டையாடுவதற்காக வேண்டி அவர்கள் தயாராகிக் வருகிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் அடிபணிய மாட்டோம் என்கிற முழக்கத்துடன் ஈரான் இவர்களை எதிர்த்து போர் புரிந்து கொண்டிருக்கிறது. தனது நாட்டையும் உரிமைகளையும் பாதுகாக்க இஸ்ரேலுடைய சதிகளை முறியடிக்க ஈரான் செய்யக்கூடிய போர் நியாயமானது தான்.

இந்த போரில் ஈரான் வெற்றி பெற்றால் அது இஸ்ரேலின் அழிவாக இருக்கும் என்பது நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும் அரபு நாடுகளுக்கு ஈரான் அச்சுறுத்தலாக அமையும் என்பதையும் நாம் இங்கே மறந்துவிடக்கூடாது.

ஷியாயிஸம் என்பது இஸ்லாமிய கொள்கைக்கு முரணான வழிகேடு என்பதை நாம் சரியாக புரிந்து கொள்ளும்  வேளையில் ஈரானில் வாழும் ஷியாக்களுக்கும் அவர்களின் ஆட்சியாளர்களுக்கும் நேர்வழி கிடைக்க பிரார்த்திப்போம்

அரபு நாடுகளின் தலைவர்கள் சிலர் ஸியோனிசத்துடன் சமரசம் செய்து தங்களது சுகபோக வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும் காலம் வரை அவர்களுக்கும் இழிவு தான் மிஞ்சும்.

அரபு நாடுகளின் தலைவர்கள் நேர் வழியில் பயணிப்பதற்கும் ஈமானிய உணர்வுடன் இருப்பதற்கும் வேண்டி அல்லாஹ்விடம் அவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வோம்.
.....

M.பஷீர் ஃபிர்தௌஸி
أحدث أقدم