நறுமணப் புகையிட்டல்

قال الإمام مسلم رحمه الله (2254) : حَدَّثَنِي هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، وَأَبُو طَاهِرٍ، وَأَحْمَدُ بْنُ عِيسَى ، قَالَ أَحْمَدُ: حَدَّثَنَا، وَقَالَ الْآخَرَانِ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي مَخْرَمَةُ ، عَنْ أَبِيهِ ، عَنْ نَافِعٍ قَالَ: « كَانَ ابْنُ عُمَرَ إِذَا اسْتَجْمَرَ اسْتَجْمَرَ بِالْأَلُوَّةِ غَيْرَ مُطَرَّاةٍ، ‌وَبِكَافُورٍ ‌يَطْرَحُهُ ‌مَعَ ‌الْأَلُوَّةِ، ثُمَّ قَالَ: هَكَذَا كَانَ يَسْتَجْمِرُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم ».

இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸ் 2254 (ஸஹீஹ் முஸ்லிம் 4539):

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் நறுமணப் புகையிட்டால், அகில் கட்டையால் நறுமணப் புகையிடுவார்கள். அதில் வேறெந்த நறுமணப் பொருளையும் சேர்க்கமாட்டார்கள். 
(சில வேளைகளில்) அகிலுடன் கற்பூரத்தையும் போடுவார்கள். பிறகு "இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நறுமணப் புகையிடுவார்கள்" என்று கூறினார்கள். 

-------
இந்த ஹதீஸில் பயனுள்ள தகவல்கள் உள்ளன:

 நபி (ஸல்) அவர்கள் ஒரு சில நேரங்களில் நறுமணக்குச்சியை மட்டும் பயன்படுத்தியுள்ளார்கள். மற்ற சில நேரங்களில் நறுமணக்குச்சியுடன் கற்பூரத்தையும் சேர்த்துள்ளார்கள். இது நறுமணத்தை இன்னும் தூக்கலாக்கும். அகில் குச்சி சொர்க்கவாசிகளின் நறுமணப் புகையாகும். இது குறித்து ஹதீஸ் ஒன்றும் வந்துள்ளது.

 நபிகளார் (ஸல்) அவர்கள் சொர்க்கவாசிகள் துய்க்கும் இன்பங்கள் குறித்துப் பேசுகையில்,"அவர்களுடைய நறுமணப் புகையிடும் தூபகலசங்கள் அகிலால் எரிக்கப்படும்"என்று கூறினார்கள்.முஸ்லிம் 2834 (5450:ஆலம்:5063)

இந்த ஹதீஸில் இப்னு உமர் (ரலி) அவர்கள் நபி வழியைப் பின்பற்றுவதில் வைத்திருந்த பேராவல் தெளிவுபடுகிறது. 

இங்கு இரண்டு முக்கிய விஷயங்களை உணர்த்துகிறேன்:

1. நறுமணம், நறுமணப் புகை ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் நபிவழியைப் பின்பற்றுவதாக எண்ணம் (நிய்யத்து) கொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்கு நற்கூலி கிடைக்கும். ஏனெனில், நறுமணம், நறுமணப் புகை ஆகியவை மக்களின் நுகர்வு கலாச்சாரத்தில் உள்ளவை. 

ஆயினும் நுகர்வு, வழக்கம் ஆகியவை அவற்றின் மூலம் நபிவழியில் நடப்பதை நாட்டம் கொண்டால் அதுவே வழிபாடாகவும் மாறிவிடும். நல்வாய்ப்பு (தவ்ஃபீக்) இறைவனிடம். 

2.நறுமணம், நறுமணப் புகை ஆகியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தற்பெருமை தம்பட்டம் போன்றவற்றிலிருந்து விலகியிருப்பது அவசியம். 

ما قاله القرطبيّ رحمه الله تعالى: وهذه الأحاديث كلّها تدلّ عَلَى أن ‌استعمال ‌الطيب، ‌والبَخور مُرغّبٌ فيه، مندوبٌ إليه، لكن إذا قصد به الأمور الشرعيّة، مثل الجماعات، والجمعات، والمواضع المعظّمات، وفعل العبادات عَلَى أشرف الحالات، فلو قصد بذلك المباهات، والفخر، والاختيال، لكان ذلك منْ أسوأ الذنوب، وأقبح الحالات. انتهى "المفهم" 5/ 559.

இமாம் குர்துபீ  (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

நறுமணம் பூசுவது, நறுமணப் புகையிடுவது ஆகியவை (மார்க்கத்தில்) ஆர்வப்படுத்தப்பட்ட தூண்டப்பட்ட நற்காரியமாகும். ஆயினும், கூட்டுத் தொழுகைகள், ஜுமுஆகள்,  புண்ணியஸ்தலங்கள், நல்ல இடங்களில் வழிபாடுகள் மேற்கொள்ளல் ஆகிய மார்க்கம் சார்ந்த காரியங்களைக் கருத்தில் கொண்டு செய்ய வேண்டும். 

தம்பட்டம் அடிப்பது, பகட்டுக் காட்டுவது, தற்பெருமை கொள்வது போன்றவை நோக்கமாக இருந்தால் அது மிக மோசமான பாவமாகவும் அருவருப்பான செயலாகவும் ஆகிவிடும்.(அல்முஃப்ஹிம்  5/559)

 குறிப்பு:

இந்தியக் குச்சி (அல்ஊதுல் ஹிந்தீ INDIAN OUD) இருவகைப்படும்: 
1.மருந்துகளில் பயன்படுத்தப்படுவது. இதற்கு கோஷ்டக்கட்டை (குஸ்த்) என்பர்.

 2. நறுமணங்களுக்காகப் பயன்படுத்துவது. இதற்கு ‘அலுவ்வா’  (அகில் கட்டை) என்பர்.

-------
மொழிபெயர்ப்பு : அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மொழிபெயர்ப்பு குழு.

நூல் தகவல் விரைவில் இன்ஷா அல்லாஹ்.
أحدث أقدم