இப்னு தைமிய்யா, முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் போன்ற அறிஞர்கள் புதிய கொள்கைகளை உருவாக்கினார்களா?

- அஷ்ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி

இதனை அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஅத்தினரின் அகீதாவிற்கு (கொள்கைக்கு) மாறுபடுபவர்களிலுருந்து உள்ள சிலர் (மக்களுக்கு மத்தியில்) பரப்புகின்றனர். அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆத்தினரின் கொள்கையை, வஹ்ஹாபியக் கொள்கை என்றும், மேலும் இவர்கள் 'வஹ்ஹாபிய்யா' என்றும் (மக்களுக்கு மத்தியில் தவறான கண்ணோட்டத்தில்) வர்ணிக்கின்றனரோ, அதைப்போன்று அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆத்தினர் இருக்கும் கொள்கையானது, ஸலஃபுகளின் (முன்சென்ற நல்லவர்களின்) கொள்கை கிடையாது, (மாறாக) அது இப்னு தைமிய்யாவின் கொள்கையாகும். அதனை இப்னு தைமிய்யா தோற்றுவித்தார் என்று இவர்கள் (மக்களிடம்) சொல்லிவருகின்றார்கள்.

(இவர்கள் மக்களுக்கு மத்தியில் பரப்புகின்ற இந்த) இரு சந்தேகங்களுமே பொய்யான அசத்தியமான சந்தேகங்களிருந்து உள்ளவை என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. 

மேலும் (அவர்கள் கூறுவது போன்று) இப்னு தைமிய்யா இந்த அகீதாவை (கொள்கையை) தோற்றுவித்தவராக இருக்கவில்லை. மேலும் அகீதாவானது இப்னு தைமிய்யாவிடம் இருந்தோ அல்லது அவருக்கும் மேலானவர்களிடமிருந்தோ எடுக்கப்படமாட்டாது. 

(மாறாக) அகீதாவானது அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் ﷺ, மேலும் எவற்றில் ஸலஃபுகள் ஏகோபித்து இருந்தார்களோ அதிலிருந்தும் மட்டுமே எடுக்கப்படும்.

இதன் காரணமாகவே, நீதமான உலமாக்களிடத்தில் இருக்கும் ஒரு அடிப்படையானது என்னவென்றால் உலமாக்களானவர்கள் சத்தியத்தைத் தெளிவுபடுத்துபவர்கள், அதை தோற்றுவிப்பவர்கள் அல்ல. 

அதை தெளிவுபடுத்துவார்கள், விளக்குவார்கள், மக்களை அதனை நோக்கி அழைப்பார்கள், சந்தேகங்களை அதனை விட்டு அகற்றுவார்கள், வழிகேடர்கள் மட்டும் பித்அத்வாதிகள் அதை (சத்தியத்தை) நோக்கிச் சித்தரிக்கும் அசத்தியத்தை தடுப்பார்கள். 

ஆனால் சத்தியம் அவர்களிடத்தில் (உலமாக்களிடத்தில்) இருந்துதான் வரும் (தோன்றும்) என்பது சரியானது அல்ல. இதன் காரணமாகவே, இப்னு தைமிய்யா மற்றும் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் ஆகியோர், அவர்களின் கப்ருகளிலிருந்து வெளிவந்து, "நாங்கள் எந்த கொள்கையின் மீது இருந்தோமோ அதிலிருந்து மீண்டுவிட்டோம்" எனக் கூறுவார்கள் என்றால், நிச்சயாமக அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் " இது (இவ்வாறு மீள்வது) உங்கள் இருவரின் விடையமாகும். ஆனால் நாங்களோ அல்லாஹ்வின் வேதம் மற்றும் அவனுடைய தூதரின் ﷺ ஸுன்னாஹ் காட்டிய சத்தியத்திலிருந்து ஒருபோதும் மீளமாட்டோம் " என ஒரே நாவுடன் கூறுவார்கள். இதனை அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்திலிருந்து எவரும் ஒருபோதும் சந்தேகிப்பதிலில்லை. 

இது (மக்களின்) கவனத்திற்குக் கொண்டுவரப்படவேண்டியது ஆகும்.  இத்தோடு நாம் (இந்த அசத்தியவாதிகளுக்குக்) கூறுவதாவது: சத்தியத்திற்கு ஈடேற்றம் அளிக்கப்பட்டு இருப்பது, அல்லாஹ் அவருக்கு சத்தியத்தை அடைய நேர்வழி  காட்டியது (இவை) ஒன்றும் ஷைகுல் இஸ்லாம் (இப்னு தைமிய்யா) அவர்களின் பாவம் கிடையாது. (அல்லாஹ் அவருக்கு அளித்த ஈடேற்றம்) எந்த அளவிற்க்கென்றால், அகீதாவின் விடயத்தில் அவருக்கு எந்தவொரு பிழையும் (இருப்பதாக) அறியப்படவில்லை. இது (ஒன்றும்) அவரது பாவமில்லை. இது அவருக்கு அல்லாஹ்வின் ஈடேற்றத்திலிருந்து உள்ளதாகும். 

மேலும் இந்த கொள்கையை அவர் தோற்றுவித்தார், அவர் கூறினார் என்பதற்காக ஒன்றும் நாங்கள் அவரிடமிருந்து எடுக்கவில்லை, மாறாக, அவரல்லாத மற்ற அறிஞர்களிடமிருந்து பயன்பெறுவது போல அவரிடமிருந்தும் நாங்கள் பயன்பெறுகிறோம்.

அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஅத்தினர் உலமாக்களின் பக்கம் நோக்குவதாவது, அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை நோக்குவதற்கு ஒப்பானதாகும். எவ்வாறென்றால், நட்சத்திரங்கள் கிப்லாவின் திசையை அறிந்து கொள்வதற்கான ஒரு வழி (மட்டுமே) ஆகும். நாம் (இந்த) நட்சத்திரங்களை நோக்கித் தொழுவதில்லை. (மாறாக) கிப்லாவை அறிந்துகொள்ள, அல்லாஹ்விற்குப் பிறகு இந்த நட்சத்திரங்களைக் கொண்டு உதவி மட்டுமே தேடுகிறோம். அதாவது, நாம் கிப்லாவை அறிந்து, அதைப் பார்த்து, அதை உறுதிகொண்டுவிட்டோம் என்றால் அதற்குப் பின்பு நிச்சயமாக நமக்கு இந்த நட்சத்திரங்களின் பக்கம் தேவை இருக்காது. 

உலமாக்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள். அவர்களைக் கொண்டு சத்தியத்தை நோக்கிப் பயணிப்பவர்களை அல்லாஹ் வழிநடத்துகிறான். 


- மக்தபாஹ் அஸ்ஸுன்னாஹ் வ அஸ்ஸலஃபிய்யாஹ், மேலப்பாளையம்.
Previous Post Next Post