தவறாக புரியப்பட்ட ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ்

-உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ்வைப் பற்றி தவறான கருத்துக்களை மக்கள் மன்றங்களிலே ஒவ்வொரு காலத்திலும் அவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள் பரப்புவது வழக்கம்,
அவர்கள் ஷிர்க்கையும் (அல்லாஹ்விற்கு இணை கற்பித்தல்) பித்அத்தையும் (மார்க்கத்தில் சொல்லப்படாததை மார்க்கமாக ஆக்குதல்) கடுமையாகச் சாடினார்கள் என்பது தான் அவர்களை எதிர்த்தவர்களின் முக்கிய காரணம்...

ஏனைய ஃபிக்ஹு துறை இமாம்களைப் போன்றே இமாம் அவர்கள் புரியும் இஜ்திஹாதில் கருத்து முரண்பாடுகள் இருக்க வாய்ப்பிருக்கிறது,
ஏன் பிழையாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது,
 ஆனால் அவர்களின் கல்வி அறிவு இன்னும் சீரிய சிந்தனைகள் மிக உயர்ந்தது என்று அந்த காலத்தில் பல அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள், 
சிலர் அவர்களைப் பற்றி தவறாக புரிந்துகொண்டு அவரை வழிகேடர் நிராகரிப்பாளர் என்றும் கூறியிருக்கின்றனர்...

அதற்கு உதாரணம் ஷாஃபி மத்ஹபின் பிரபல்யமான இமாம் ஆகிய இப்னு ஹஜர் அல் ஹைதமி அவர்கள் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) காஃபிர் என்று கூறியிருக்கிறார்,
அல்லாஹ்வின் பண்புகளை உருவ அமைப்புடன் (تجسيم) இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறிவிட்டார்கள் என்று தவறுதலாக விளங்கி இந்த மார்க்க தீர்ப்பை வழங்கி இருக்கிறார்,

இவரின் தவறான இந்த விளக்கத்திற்கு அன்றைய  மிகச்சிறந்த அறிஞர் பெருமக்கள் மறுப்பு அளித்தனர்...
ஷாஃபி மத்ஹபின் தலைசிறந்த இமாம் ஆகிய ஸஹிஹுல் புகாரி என்ற சிறந்த நபிமொழிகள் தொகுப்பின் விளக்க உரை எழுதிய இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் (மரணம்-ஹி854) அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள்...
நான் நாஸிருத்தீன் திமிகஸ்கி என்ற அறிஞரின் கீழ்க்கண்ட புத்தகத்தைபடித்தேன்,

புத்தகத்தின் பெயர்
 "யார் ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமியா அவர்களை காபிர் என்று தவறாக கருதுகிறாரோ அவருக்கு ஒரு மிகப்பெரிய மறுப்பு"

"الرد الوافر على من زعم أن من سمى ابن تيمية شيخ الإسلام كافر"
நாஸிருத்தீன் திமிகஸ்கி அவர்கள் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களை யாரெல்லாம் காபிர் என்று கூறினார்களோ அது தவறு,
 என்று கண்டித்து அவர்களுடைய காலத்தில் தலைசிறந்த 85 இமாம்கள் பெயர்களை குறிப்பிட்டு இவர் "ஷேகுல் இஸ்லாம்", என்ற பெயருக்கு தகுதியானவர் என்று எழுதியதை,
அறிஞர் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் படித்துவிட்டு இந்த புத்தகத்திற்கு மிக நீண்ட ஒரு முன்னுரையை எழுதுகிறார்கள்...

 அதில் இமாம் இப்னு தைமியா அவர்கள் தவறுதலாக புரியப்பட்டவர்கள்...
அன்றைய காலத்து தலைசிறந்த அறிஞராக அல்லாமாவாக இருந்தார்கள் என்று அவர்களை மதிப்பீடு செய்கிறார்கள்.

மிகப்பெரிய அறிஞராக விளங்கிய ஜலாலுத்தீன் சுயூதி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் தங்களின் புத்தகமான
தபகாத்துல் ஹுப்பாழ்-ல்
طبقات الحفاظ " ( ص 516 ، 517 ) .
இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஷேகுல் இஸ்லாம் ஆகவும் மிகவும் பாரிய அறிவாற்றலையும் பெற்றிருந்தார்கள் என்று அவர்களை புகழ்ந்து கூறுகிறார்கள்.

அதேபோன்று இமாம் தஹபி,
 இமாம் இப்னு ரஜப் ஹம்பலி,
அல்லாமா முல்லா அலீ காரி,
 ஹாபிழ் இமாதுத்தின் அல்வாசிதி (ரஹிமஹுமுல்லாஹ்) 
போன்ற
நூற்றுக்கும் அதிகமான உலமாக்கள் இப்னு தைமியா அவர்களை 
"ஷேகுல் இஸ்லாம்", என்று ஏற்றும் அவரின் கல்வி திறன் இன்னும் அறிவாற்றலை ஏற்று
அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கையான இரட்சகனின் பண்புகளை அல்குர்ஆன் எவ்வாறு விளக்கி இருக்கிறதோ அவ்வாறே ஈமான் கொள்ள வேண்டும்,
இறைப்பண்புகளுக்கு மாற்று விளக்கம் அளிப்பது கூடாது என்ற ஒரு சரியான சிந்தனையை அவர் கொண்டிருந்தார் என்பது அவர்களுடைய பிரபலமான மார்க்கத் தீர்ப்பு புத்தகத்தில் நாம் பெறலாம் என்று கூறுகிறார்கள்.

பார்க்க- பஃதாவா ஷேகுல் இஸ்லாம் (27-5/26)

கூடுதலான தகவலுக்கு கீழ்க்காணும் காணொளியைக் காணவும்

Previous Post Next Post