யாசிப்போரின் நிலையில் உள்ளவர்கள் யார்....

مسند أحمد بن حنبل - 3920

حَدَّثَنَا مُعَاوِيَةُ  ، حَدَّثَنَا زَائِدَةُ  ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ  ، عَنْ زِرٍّ  ، عَنْ عَبْدِ اللَّهِ  ، قَالَ : لَحِقَ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدٌ أَسْوَدُ فَمَاتَ ، فَأُوذِنَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : " انْظُرُوا هَلْ تَرَكَ شَيْئًا ؟ " ، فَقَالُوا : تَرَكَ دِينَارَيْنِ ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " كَيَّتَانِ "  .
شعيب الأرنؤوط: إسناده حسن
مسند أحمد تخريج شعيب الأرنؤوط: (393/6)

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

நபி ( ஸல் ) அவர்களின் தொடர்பில் ( திண்ணைத் தோழர்களில் ஒருவராக ) இருந்த கறுப்பு நிற அடிமை ஒருவர் இறந்து போனார் . அது குறித்து நபி ( ஸல் ) அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நபி ( ஸல் ) அவர்கள்," அவர் ஏதேனும் விட்டுச்சென்றுள்ளாரா பாருங்கள் ?" என்று கூற,"( ஆம்;) இரு பொற்காசுகளை ( தீனார்கள்) விட்டுச்சென்றுள்ளார்" என்று தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது நபி ( ஸல் ) அவர்கள்," அவை ( நரகத்தின் ) இரு கொள்ளிகள் ஆகும் " என்றார்கள்.

நூல் : முஸ்னத் அஹ்மத் 3920 

ஹதீஸ்யின் தரம் :

மேற்கண்ட செய்தியை ஹதீஸ் துறை வல்லுநர் ஷுஜப் அல் – அர்னாவூத் ( ரஹ் )  தங்களுடை மேலாய்வில் ஹசன் தரத்தில் அமைந்த செய்தி என்று பதிவு செய்து உள்ளார்கள்.

 

ஹதீஸ்யின் விளக்கம் :

அதாவது, திண்ணைத் தோழர்களில் ஒருவராக இருந்த அந்த அடிமை நண்பர், ஸகாத் எனும் கட்டாய தர்மம் பெறுவதற்கு அனுமதிக்கப்பெற்ற ஏழைகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர் ஆவார்.

இந்நிலையில் அவர் யாசிக்காவிட்டாலும்,யாசிப்போரின் நிலையில் உள்ளாவர் தான்.

அப்படியிருக்க  2 பொற்காசுகளை அதாவது 8.5 கிராம் தங்கத்தை கையில் வைத்திருப்பவர் எப்படி யாசிக்கலாம் ?

காரணம், ஒருநாள் உணவுக்கு வேண்டிய பணமோ, பொருளோ வைத்திருப்பவர் பிறரிடம் யாசகம் கேட்பதோ வாங்குவதோ கூடாது.

இவ்வாறுதான்,ஒருநாள் சோற்றுக்கு வழியிருக்க ,ஏழைபோல் பிச்சைக்கார வேடத்தில் வந்து மக்களிடம் வாங்கிச் சாப்பிடுவதும் ' ஹராம் ' ஆகும்.

எனவேதான்,அந்த நண்பர் வைத்திருந்த இரு பொற்காசுகளை நபி ( ஸல் ) அவர்கள், நரகக் கொள்ளிகள் எனக் குறிப்பிட்டார்கள்.

நூல் : மிர்காத்துல் மஃபாத்தீஹ்
Previous Post Next Post