தர்காஹ் கலாச்சாரம்


-உஸ்தாத் SM. இஸ்மாயீல் நத்வி

உஸுலுல்  ஃபிக்ஹில் (மார்க்கச் சட்ட அடிப்படை கலை) வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வும், அவனுடையதூதரும் எதை நமக்கு மார்க்கமாக ஆக்கி  வைத்திருக்கிறார்களோ அது தான் மார்க்கம், சடங்கு சம்பிரதாயங்கள் மஹல்லா வழக்கு குல வழக்கு என்பது மார்க்கத்தில் இல்லை.

الأصل في العبادات التوقف 

وقد نص على هذه القاعدة الجليلة كثير من أهل العلم، وبنى الشاطبي كتابه المبارك الاعتصام عليها فانظره فإنه نفيس.

 قال ابن حجر في الفتح وهو شافعي: الأصل في العبادة التوقف. انتهى.

 وقال في موضع آخر، التقرير في العبادة إنما يكون عن توقيف. انتهى.

 وقال ابن دقيق العيد وهو مالكي شافعي: الغالب على العبادات التعبد ومأخذها التوقيف. انتهى.

 وقال النسفي من الحنفية: ولا مدخل للرأي في معرفة ما هو طاعة الله، ولهذا لا يجوز إثبات أصل العبادة بالرأي. انتهى.

அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இந்த சட்டம் மிகத் தெளிவாக கூறப்பட்டிருப்பதை மேல் காணும் வரிகளில் பல இமாம்களின் பெயர்களில் (இமாம் ஷாஃபி,இமாம் ஷாதிபி,இமாம் நஸபிஃ அல்ஹனஃபி)காணலாம் இதை அரபு மொழி தெரிந்த உலமாக்கள் அறிவார்கள்.

 اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِيْنَكُمْ وَاَ تْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِىْ وَرَضِيْتُ لَكُمُ الْاِسْلَامَ دِيْنًا‌ 

இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம். (அங்கீகரித்துக் கொண்டோம்) 
(அல்குர்ஆன் : 5:3)

என்ற வசனத்தின் அடிப்படையில் இந்த சட்டம் இமாம்களால் வரையறுக்கப்பட்டிருக்கிறது.

الأصل في العبادة التوقيف

دراسة وتحقيق قاعدة الأصل في العبادات المنع
என்ற புத்தகத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அல்லாஹ்வும் தூதரும் காட்டித்தராத வணக்க வழிபாடுகள் பெயரில் பின் வந்தவர்கள் ஏற்படுத்திய அனைத்து காரியங்களும் வழிகேடுகளே பித்அத்துகளே அனாச்சாரங்களே

عن أم المؤمنين عائشة رضي الله عنها قالت : قال رسول الله صلى الله عليه وسلم : ( من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ) رواه البخاري ومسلم ، وفي رواية لمسلم : ( من عمل عملاً ليس عليه أمرنا فهو رد ) .

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள் "யார் நமது மார்க்கத்தில் நூதனமாக( மார்க்கமாக) ஒரு விடயத்தை புதியதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியது

நூல் ஸஹீஹுல் புகாரி
தரம் :(ஸஹீஹ்)ஆதாரமிக்கதுது

فالحديث رواه البخاري ومسلم وغيرهما عن أبي هريرةرضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال: "لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام، ومسجد الرسول صلى الله عليه وسلم، ومسجد الأقصى."

ஸஹீஹுல் புஹாரியிலும்  முஸ்லிமிலும் இடம்பெறும் ஆதாரபூர்வமான நபிமொழி அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஊடாக அறிவிக்கப்படுகிறது (நன்மைகளை நாடி வணக்க வழிபாடுகள் சிந்தனையில்) மஸ்ஜிதுல் ஹராம் ,மஸ்ஜிதுன் நபவி மஸ்ஜிதுல் அக்ஸா, இந்த மூன்று பள்ளிகளிலத் தவிர உங்களது வாகனங்களை தயார் செய்துகொண்டு பயணிக்காதீர்கள்

இந்த நபிமொழியிலிருந்து காலம்காலமாக அறிஞர் மக்களிடத்திலே கருத்து வேறுபாடு நிலவிக் கொண்டிருக்கிறது இஸ்லாத்திற்கு முரணாக கப்ருகள் உயர்த்தப்பட்டு , பூச்சு பூசப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டு ,கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வணக்க ஸ்தலமாக ஆக்கப்பட்டு இருந்தால், சங்கையான நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களின் கூற்றின் அடிப்படையில் அங்கு செல்வது கூடாது கபுரு என்ற ரீதியில் மறுமையின் நினைவு ஏற்படுத்திக் கொள்வதற்காக அனாச்சாரங்கள் இல்லாத கபுருகளுக்கு ஸியாரத் செய்வது தடை இல்லை, 

மேல் கூறப்பட்ட நபி மொழி ஸஹீஹுல் புகாரியில் இடம் பெற்று இருக்கிறது அதற்கு விளக்கம் எழுதும் விதத்தில் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் , இமாம் அபூ முஹம்மத் அல் ஜுவைனை, இமாம் காழி இயாழ் போன்ற ஷாபி ,மாலிகி மத்ஹப் உடைய இமாம்களும் தனிநபர் கபுருகள் மார்க்கம் சொல்லப்படாத விதத்தில் அமைக்கப்பட்டு இருந்தால் அங்கு செல்வது கூடாது என்ற கருத்தையே தெளிவாக சொல்கிறார்கள்,

இந்த விளக்கத்தை கூறும் இமாம் அஸ்கலானி அவர்கள் ஷாபி மத்ஹபில் நன்மையை நாடி வேற ஒரு பள்ளியில் தொழுதாலும் நன்மைகள் கிடைக்கும் ஆனால் மேல் கூறப்பட்ட இந்த மூன்று பள்ளிகளில் நன்மைகளை அதிகம் என்ற கருத்தை குறிப்பிடுகிறார்கள்

இதைத்தான் தர்கா ஸியாரத் கூடும் என்று சொல்பவர்கள் தவறாக புரிந்து கொண்டு தர்கா ஸியாரத் கூடும் என்று இமாம்கள் கூறுகிறார்கள் என்ற தவறான கருத்தை குறிப்பிடுகிறார்கள்,

மேல் கூறப்பட்ட நபிமொழியின் விளக்க தொடரில் அபூ பஸரா அல்கஃப்பாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து மூசா நபியின் தூர் மலைக்கு சென்று ஸியாரத் செய்தேன் என்று அபூஹுரைரா அவர்கள் கூறிய பொழுது எனக்கு முன்பு தெரிந்து இருந்தால் உங்களை தடுத்து இருப்பேன் என்று மேற்கூறிய ஹதீஸை முன்வைத்து சொன்னதாக அபூதாவூத் திர்மிதி போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இமாம் இப்னு தைமியா அவர்கள் காலத்திலும் அவர்களின் கொள்கையில் பயணித்த அவர்களின் மாணவர்களாகிய இமாம் இப்னுல் கையும் இமாம் தஹபி இமாம் இப்னு கஸீர் இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி (ரஹிமஹுமுல்லாஹ்) அவர்களும் தங்கள் காலத்தில் மார்க்கத்திற்கு முரணாக இருந்த கப்ருகளின் அளவை சரி செய்தார்கள்,

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு எமன் தேசம் சென்று ஒரு ஜானுக்கு மேல் உயர்த்தப்பட்டிருக்கும் கபுருகளை அனைத்தையும் இடிக்க வேண்டும் என்ற கட்டளையையும் இட்டிருந்தார்கள் அதேதான் சங்கையான இமாம்களும் செய்தார்கள்,

இந்தத் தூய எண்ணத்தில்தான் சவூதி அரேபிய அரசாங்கமும் அமைந்திருக்கிறது,

இதைப் பிடிக்காத ஷீஆக்கள் தான் பல சூழ்ச்சிகளை செய்து மக்களிடம் மீண்டும் தர்ஹா கலாச்சாரத்தை வளர்க்க முயற்சி செய்கிறார்கள்.

ஹனபி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் மாலிகி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் ஹம்பலி மத்ஹபைச் சேர்ந்த இமாம்களும் மார்க்கத்திற்கு முரணாக இருந்த கப்ருகளின் அளவை சரி செய்து இதே கருத்தைத்தான் முன்வைக்கிறார்கள்,

சங்கையான இமாம்கள் கீழ்க்காணும் குர்ஆன் வசனத்தின் அடிப்படையில்

وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِى الْكِتٰبِ اَنْ اِذَا سَمِعْتُمْ اٰيٰتِ اللّٰهِ يُكْفَرُ بِهَا وَيُسْتَهْزَاُبِهَا فَلَا تَقْعُدُوْا مَعَهُمْ حَتّٰى يَخُوْضُوْا فِىْ حَدِيْثٍ غَيْرِهٖۤ‌ ‌  اِنَّكُمْ اِذًا مِّثْلُهُمْ‌ اِنَّ اللّٰهَ جَامِعُالْمُنٰفِقِيْنَ وَالْكٰفِرِيْنَ فِىْ جَهَـنَّمَ جَمِيْعَاۨ ۙ‏

நிச்சயமாக (அல்லாஹ்) இவ்வேதத்தின் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்: அல்லாஹ்வுடைய வசனங்களை (எவரும்) நிராகரிப்பதையோ அல்லது பரிகசிப்பதையோ நீங்கள் செவியுற்றால் அவர்கள் இதனைத் தவிர்த்து வேறு விஷயத்தில் ஈடுபடும் வரையில் நீங்கள் அவர்களுடன் உட்கார வேண்டாம். (அவ்வாறு உட்கார்ந்தால்) அந்நேரத்தில் நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் (ஆவீர்கள்.) நிச்சயமாக அல்லாஹ் இந்நயவஞ்சகர்களையும் அந்நிராகரிப்பவர்களுடன் நரகத்தில் ஒன்று சேர்த்துவிடுவான்.
(அல்குர்ஆன் : 4:140)

தர்காக்களில் அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுகின்றன பரிகசிக்கப்படுகின்றன, அதனால் அங்கு உண்மையாகவே ஸாலிஹான நல்லடியார்கள் அடங்கியிருந்தாலும் அங்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் இவைகள் அனாச்சாரங்கள் தான் என்ன செய்ய முடியும், அதை தடுக்க வேண்டும் அதே நேரத்தில் ஸியாரத் செய்யாமல் இருக்க முடியுமா  என்று சொல்லி சென்றால் அந்தப் பாவத்தில் நமக்கும் பங்கு உண்டு,

மண்ணறைகளை ஸியாரத் செய்ய நபியவர்கள் தடுக்க வில்லையே என்று நீங்கள் கேட்டால் முஸ்லிம் கிரந்தத்தில் இடம் பெற்றிருக்கும் ஸஹீஹான நபி மொழியான ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
அவர்கள் இறை தூதரிடம் கேட்கிறார்கள் மண்ணறைகளை கடந்து சென்றால் என்ன செய்வது, நபியவர்கள் ஸலாம் சொல்லி கடந்து செல் என்றார்கள்,

ஏதாவது சொந்த வேலைக்காக இதுபோன்ற தர்ஹாக்கள் இருக்கும் இடங்களை கடந்து செல்வதாக இருந்தால் கடந்து செல்லும்போது சலாம் சொல்லி செல்வது ஸுன்னத்தாகும், அங்கு இறங்கி அனாச்சாரங்களை கொண்ட தர்ஹாவில் நுழைந்து சலாம் சொல்வது வழிகேடாகும்.

இந்த அனைத்து உண்மைகளையும் அறிந்த சில மார்க்க அறிஞர்கள் கூட தங்களது முகநூல்களில் மிகப் பெருமையாக நாங்கள் இந்த தர்கா சென்றோம் என்று செல்பிகளை எடுத்து பதிவிட்டு மக்களை தவறான பாதையில் அழைப்பது மிகவும் வருத்தமான விடயம்,

உமையாக்கள் ஆட்சிக்கு பின்பு வந்த ஷீஆக்கள் தலைமையில் கிலாஃபத்தை பிடித்த பாதிமியா அரசர்கள் தான், எகிப்தில் முதல் முதலில் தர்கா கலாச்சாரத்தையும் மீலாது மௌலூது ஃபாத்திஹா போன்ற பல வழிகேடுகளுக்கு வித்திட்டார்கள்,

இமாம் இப்னு கஸீர் அவர்கள் தங்களது புத்தகமான பிதாயாயாவில் குறிப்பிடுகிறார்கள்,

வரலாற்று நாயகர் எதிரியிடமிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவை மீட்டு முஸ்லிம்களிடத்தில் தந்த ஸலாஹுதீன் அய்யூபி ரஹிமஹுல்லாஹ் அவர்களும் அவரின் அமைச்சரும் முதன்முதலில் இந்த வழிகேடுகளை எதிர்த்து முற்றுப்புள்ளி வைக்கிறார்கள்
என்பது வரலாறு,

இந்த வழிகேடை மார்க்கமாக மாற்றிய ஷீஆக்களை பின்தொடர்ந்து இந்தியாவில் பரேல்விய சிந்தனை உடைய நபர்கள் அனாச்சாரங்களை கட்டமைத்தனர்,

இதனை எதிர்ப்பதற்காக தான் வட இந்தியாவில் தாய் மதரஸாவாக கருதப்படக் கூடிய தாருல் உலூம் தேவ்பந்து, அரபு நாட்டில் தோன்றிய இமாம் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி ஆகியோரின் முயற்சியினால் தர்காஹ் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இதை பொறுத்துக்கொள்ள முடியாத வழிகெட்ட ஷீஆக்களும் அவர்கள் வழியில் நடைபோடும் பரேல்விகளும் உண்மையானஅஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் பயணிக்கும் இந்த தர்கா கலாச்சாரத்தை எதிர்க்கும் உலமாக்களுக்கு வஹாபிகள் என்ற பெயரை புனைந்து மக்களிடத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்,

ஆனால் வஹாபிகள் என்ற ஒரு பெயரை சூட்டியது சத்தியத்தை எடுத்துக் கூறும் அஹ்லுஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் தான் அந்தக் காலத்தில் மொரோக்கோவில் வழிகெட்ட இபாலியா கொள்கையைச் சேர்ந்த கொடுங்கோல் அரசன் அப்துல் வஹ்ஹாப் பின் ருஸ்தும் என்பவன் ஹஜ்ஜை தடை செய்த காரணத்தினால் நமது உலமாக்கள் இவர்களுக்கு "வஹ்ஹாபி" என்று அழைத்தார்கள்,

இது உண்மையான வரலாறாகும்
"வஹாபிகள் பற்றிய தவறான ஒரு வரலாறு" 

تصحيح خطأ التاريخي حول الوهابية 
என்ற புத்தகத்தில் மொரோக்கோ நாட்டிற்கு சென்று ஆய்வு செய்து எழுதிய மிகப்பிரபலமான மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் முஹம்மத் அஷ்ஷுவைஅர் அவர்கள் மேற்கூறப்பட்ட தங்களின் புத்தகத்தில் இந்த வரலாற்றை குறிப்பிடுகிறார்கள்.

தர்கா கலாச்சாரம் போதிக்கும் போதனைகள்...

1-"இஸ்திகாஸா பி ஹைரில்லாஹ்"
அல்லாஹ் அல்லாதவர்களிடம் (மரணித்தவர்கள் இடம்) துஆ கேட்பது 

அல்லாஹ் அல்லாதவர்களிடம்
(மரணித்தவர்களிடம்) உதவி கேட்பது கூடாது ,

اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُ‏

(அல்லாஹ்வே!) நாங்கள் உன்னையே வணங்குகிறோம்; உன்னிடமே உதவி தேடுகிறோம்.
(அல்குர்ஆன் : 1:5)

2-மறைமுகமான விடயங்கள் அல்லாஹ் அல்லாதவர்களுக்கும் தெரியும் என்று கருதுவது .

3- மரணித்தவர்களிடம் வசீலா கேட்பது கூடும்.

4- மரணித்தவர்கள் வருகை தருகிறார்கள் நம்மை பார்க்கிறார்கள் என்று கருதுவது

5- இஸ்லாத்துக்கு முரணான பித்அதுகளான சந்தன கூடு எடுப்பது கொடி ஏற்றுவது கப்ரின் மீது போர்வை போற்றுவது கபூரை ஒரு ஜானுக்கு மேல் உயர்த்துவது விளக்கு ஏற்றுவது ஆண்கள் பெண்கள் மார்க்கம் சொல்லாத முறையில் ஒன்றிணைவது, அங்கு சென்று நேர்ச்சை செய்வது சஜ்தா செய்வது

6-பாத்திஹா மௌலிது மீலாது போன்ற அனாச்சாரங்களை மார்க்கமாக கருதுவது

இவைகள் அனைத்தும் வழிகேடுகளே
இதைப் பற்றி பல வருடங்களாக வழிகெட்ட பரேல்விகளிடத்தில் நாம் பல தடவை விவாதம் செய்தும் அதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை உள்ளங்கள் உடைந்தன ஒற்றுமைகள்  சிதைந்தன ,வார்த்தைகள் தடித்தன காபிர் என்று ஃபத்வா நமக்கு வழங்கினார்கள் பரேள்விகள்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹிதாயத்தை வழங்குவானாக !!
أحدث أقدم