1. ஆஷூறாஃ தினத்தில் முதல் முதலாக நோன்பு நோற்றது கீச்சான் பறவை தான் என்ற ஹதீஸ்.
2. ஆஷூறாஃ தினத்தில் சுருமா போட்டால் கண் நோய் வராது என்ற ஹதீஸ்.
3. ஆஷூறாஃ தினத்தில் குடும்பத்திற்கு செலவு செய்வதன் சிறப்பு சம்பந்தமான ஹதீஸ்.
4. ஆஷூறாஃ தினத்தில் நோன்பு நோற்றால் அறுபது வருட இபாதத்தின் நன்மை எழுதப்படும் என்ற ஹதீஸ். இது இட்டுக்கட்டப்பட்டதாகும்.
5. ஆஷூறாஃ தினத்தில் ஆதம் நபியின் தவ்பஹ் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், நூஹ் நபி காப்பாற்றப்பட்டதாகவும், இப்றாஹீம் நபி நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டதாகவும், யூனுஸ் நபி மீன் வயிற்றில் இருந்து காப்பாற்றப்பட்டதாகவும், யஃகூப் நபி யூசுப் நபியுடன் ஒன்று சேர்ந்ததாகவும், தவ்றாத் இறங்கியதாகவும் வருகின்ற ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவையாகும். (குறிப்பு: இந்த நாளில் மூஸா நபியவர்கள் ஃபிர்அவ்னிடம் இருந்து காப்பாற்றப்பட்ட சம்பவம் மாத்திரமே ஆதாரபூர்வமானதாகும்)
6. ஆஷூறாஃ நோன்பிற்கு பத்தாயிரம் மலகுகளின் நன்மைகள் கிடைப்பதாகவும், பத்தாயிரம் ஷஹீத்களின் நன்மைகள் கிடைப்பதாகவும், ஏழு வானங்களின் நன்மைகள் கிடைப்பதாகவும், அந்த நாளில் நோன்பு திறக்க வைத்தவருக்கு உம்மத்தில் உள்ள அனைத்து ஏழைகளுக்கு உணவளித்த நன்மை கிடைப்பதாகவும், அனாதையின் தலையைத் தடவி விடுபவருக்கு அத்தலையின் ஒவ்வொரு முடிக்கும் சொர்க்கத்தில் ஒவ்வொரு அந்தஸ்து உயர்த்தப்படுவதாகவும், அந்த நாளில் வானங்களையும் பூமியையும் பேனாவையும் லவ்ஹுல் மஹ்பூல் ஏட்டையும், வானவர் ஜிப்ரீலையும், மலக்குகளையும், ஆதம் நபியையும் படைத்ததாகவும், தாவூத் நபியின் பாவத்தை மன்னித்ததாகவும்... வருகின்ற
ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.
7. ஆஷூறாஃ நாளில் ஏழை குடும்பத்திற்கு உணவளித்தவர் ஸிறாதுல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடப்பார் என்றும், அந்த நாளில் ஸதகஹ் கொடுத்தவர் ஒரு போதும் எந்தவொரு யாசிப்பவரையும் திருப்பி அனுப்பாதவர் போன்றவர் என்றும், அந்த நாளில் குளித்து கொண்டவருக்கு மரண நோயைத் தவிர வேறு எந்த நோயும் ஏற்படாது என்றும் வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.
8. ஆஷூறாஃ தினத்தில் ஹுஸைன் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களின் மரணத்திற்காக அழுகின்றவர் உலுல்அஸ்ம் என்றழைக்கப்படும் இறைத்தூதர்களுடன் மறுமையில் இருப்பார் என்ற ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.
9. ஆஷூறாஃ தினத்தில் அழுவது மறுமையில் முழு ஒளியாக இருக்கும் என்ற ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.
10. ஆஷூறாஃ தினத்தில் கப்ருகளை ஸியாறத் செய்வதன் சிறப்பு பற்றி வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
11. ஆஷூறாஃ தினத்தில் விஷேடமான தொழுகை இருப்பதாக வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவையாகும்.
மேற்படி செய்திகளை ஹதீஸ் துறை அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அறபியில் சற்று விரிவாக தொகுத்தவர்: அபூ ஹுதைபஹ் அஸ்லீமிய்யஹ்
சுருக்கமான தமிழ் மொழிபெயர்ப்பு:ஸுன்னஹ் அகாடமி:
Sunnah Academy:
facebook.com/Sunnah.Acad
instagram.com/sunnah_academy
youtube.com/@Sunnah_academ
Telegram:
t.me/sunnah_academy
WhatsApp:
chat.whatsapp.com/E1aiTCVMAzL9u1N1vGRKdp