இபாழிய்யாக்கள் யார்?

அல்லாஹுவிற்கே எல்லா புகழும்…அவனது சாந்தியும்,சமாதானமும் நபிகள் நாயகம்(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…


முதலாவது:

அறிமுகம்:

இபாழிய்யாக்கள் என்போர் ஹவாரிஜ்களின் ஒரு கூட்டத்தினர் ஆவர்.அதன் ஸ்தாபகர் அப்துல்லாஹ் இப்னுஇபாழ் அத்தமீமி என்பவராவர். 

இவர்கள் தம்மை ‘ஹவாரிஜ்கள் அல்ல’ என்று வாதிடுகின்றனர். மேலும் ஹவாரிஜ்களின் பக்கம் இணைக்கப்படுவதை மறுக்கின்றனர். 

ஆனாலும் உண்மையில் அவர்கள் அஸாரிகாக்கள் போன்ற தீவிர ஹவாரிஜ்கள் அல்லாவிட்டாலும் ஹவாரிஜ்களுடன் அதிக விடயங்களில் உடன்படுகின்றனர்.

அல்லாஹ்வுடைய பண்புகளை மறுத்தல்,அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்று கூறுதல், அநியாயக்காரஆட்சியாளர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதை ஆகுமாக்குதல் போன்ற பல விடயங்களில் ஹவாரிஜ்களுடன் உடன்படுகின்றனர்…

இரண்டாவது:யாரின் பக்கம் இவர்கள் இணைக்கப்படுகின்றனர்

இவர்களின் ஸ்தாபகர்: முர்ரா இப்னு உபைத் இப்னு தமீம் என்ற கோத்திரத்தைச் சேர்ந்த அப்துல்லாஹ் இப்னு இபாழ் ஆவார்.

யமாமா என்ற இடத்தில் உள்ள ஆரிழ் என்ற கிராமத்தில் இபாழ் என்ற இடத்தின்பால் அவரது வம்சம் மீளுகின்றது. அப்துல்லாஹ் என்பவர் முஆவியா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் சம காலத்தில் வாழ்ந்து, அப்துல்மலிக் இப்னு மர்வானுடைய கடைசிக் காலத்தில் மரணித்தார்.

மூன்றாவது: இவர்களின் மிக முக்கியமான நம்பிக்கைகள்

1- இவர்கள் அல்லாஹ்வுடைய பண்புகளை மறுக்கிறார்கள் என்பது அவர்களின் புத்தகங்களிலிருந்துதெளிவாகின்றது.

மேலும் இவர்கள் அல்லாஹ்வுடைய பண்புகளை திரிபுபடுத்தும் விடயத்தில் பெருமளவில் முஃதஸிலாக்கலுடன் உடன்படுகின்றனர்.

என்றாலும் அவர்கள் தாம் இது விடயத்தில் அகீதாவை அடிப்படையாகக் கொண்ட நிலைப்பாட்டையே எடுப்பதாக வாதிடுகின்றனர்.

அல்லாஹ்வுடைய பண்புகள் விடயத்தில் உவமையின்பால் இட்டுச் செல்லும் என்பதற்காக அப்பண்பை மறுத்துகுறித்த அப்பண்பின் மூலம் வேறொரு நோக்கத்தை, கருத்தை நாடுகின்றனர்.

(உதாரணமாக ‘ஸமீஃ : அல்லாஹ் செவிமடுப்பவன்’ என்பது இதன் கருத்து. இவர்கள் ‘அல்லாஹ் ஸமீஃ’ என்றுகூறுகின்றனர்.ஸமீஃ எனும் சொல் பொதிந்துள்ள ‘செவிமடுத்தல்’ என்ற பண்பை உவமையின்பால் இட்டுச்செல்லும் என்பதற்காக அச்சொல் பொதிந்துள்ள பண்பை மறுத்து வேறொரு கருத்தை நாடுகின்றனர்)

ஆனால் அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவைப் பொருத்தவரை அவர்கள் அல்லாஹ் ஸமீஃ. ‘செவிமடுப்பவன்’ என்றபெயரையும் உறுதிப்படுத்துகின்றனர் அச்சொல் பொதிந்துள்ள ‘செவிமடுத்தல்’ என்ற பண்பையும் உறுதிப்படுத்துகின்றனர்

அஹ்லுஸ் ஸுன்னா வல்ஜமாஆவைப் பொருத்தவரை அவர்கள் அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களையும்,மிகஉயர்ந்த பண்புகளையும் உறுதிப்படுத்தும் விடயத்தில் எவ்வித திரிபுபடுத்தல், மறுத்தல், முறை கற்பித்தல், உவமித்தல் இன்றி அல்லாஹ் தனக்கு உறுதிப்படுத்தியவாரே உறுதிப்படுத்துகின்றனர் (இதுவே சரியானநிலைப்பாடு)

2- மறுமையில் முஃமின்கள் அல்லாஹ்வை பார்ப்பார்கள் என்பதை மறுக்கின்றனர்

3- அல்லாஹ்வின் பண்புகள் அல்லாஹ்வை விட மேலதிகமான ஒன்றல்ல. மாறாக அல்லாஹ்வின் பண்புகள்என்பது அதுவே அல்லாஹ்வாகும்.

4- தராசு, பாலம் போன்ற மறுமை விடயங்களில் சிலவற்றை அவர்கள் திரிபுபடுத்தி உண்மை நிலையைமறுக்கின்றனர்.

5- அவர்களிடம் ‘அல்குர்ஆன் படைக்கப்பட்ட ஒன்றாகும்’. இது விடயத்தில் இவர்கள் ஹவாரிஜ்களுடன்உடன்படுகின்றனர் ‘மகாலாத்துல் இஸ்லாமிய’ என்ற புத்தகத்தில் அஷ்அரி என்பவர் கூறும் போது ‘ஹவாரிஜ்கள்அனைவரும் அல்குர்ஆன் படைக்கப்பட்டது என்று கூறுகின்றனர். (1/203)

6- பெரும் பாவம் செய்பவர்கள் இவர்களிடம் (இஸ்லாத்தை விட்டு வெளியேரிய காபிர் கிடையாது மாறாக) அல்லாஹ்வின் அருளை மறுத்த காபிர்கள் அல்லது நயவஞ்சகத்தன காபிர்கள்

7- இவர்களின் பார்வையில் மக்கள் மூன்று வகையினர்

1-தங்கள் ஈமான் பூர்த்தியான முஃமின்கள்
2-தங்களுடைய இணைவைப்பு தெளிவான இணைவைப்பாளர்கள்
3-ஏகத்துவத்தை நம்பி இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஆனாலும் அவர்கள் நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களைகடை பிடிக்காதவர்கள். இவர்கள் ஏகத்துவத்தை ஏற்றதன் காரணமாக இணைவைப்பாளர்கள் கிடையாது. அதேபோன்று ஈமான் பொதிந்த விடயங்களை கடைபிடிக்காததன் காரணமாக முஃமின்களும் அல்லர்அவ்வாறாயின் இவர்கள் ஏகத்துவத்தை ஏற்றதன் காரணமாக உலகத்துடன் சம்பந்தப்பட்ட தீர்ப்புகளில்முஸ்லிம்களுடன் சேர்க்கப்படுவார்கள். நடைமுறை மட்டும் வழிபாடுகளை கடைபிடிக்காததன் காரணமாகமறுமையுடன் சம்பந்தப்பட்ட தீர்ப்புகளில் இணைவைப்பாளர்களுடன் சேர்க்கப்படுகின்றனர்

8- கிப்லாவை முன்னோக்குவோரில் இவர்களுக்கு முரண்படுபவர்கள் காபிர்கள், இணைவைப்பாளர்கள்அல்ல. இவ்வகையினரை திருமணம் செய்யவது ஹலாலாகும். அவர்களின் அனந்தரச் சொத்துகள் ஹலாலாகும் அவர்களின் ஆயுதங்கள்,குதிரைகள் ஆகிய சொத்துக்கள்,யுத்த உபகரணங்கள் ஹலாலாகும் ஏனையவைகள்ஹராமாகும்.

9- பெரும் பாவம் செய்தவர் காபிர்.அவர் பாவமீட்சி செய்யாவிட்டால் பாவம் செய்த நிலையில் சுவனம் நுழையமுடியாது. ஏனெனில் பெரும்பாவம் செய்தவர்கள் மரணிப்பதற்கு முன்னால் பாவமீட்சி பெற்றாலே தவிரஅல்லாஹுத்தஆலா அவர்களை மன்னிக்க மாட்டான் என்று கூறுகின்றனர்.
அஹ்லுஸ்ஸுன்னாக்கள் ‘பாவிகள், கெட்டவர்கள்’என்ற சொல்லை யாருக்குப் பயன்படுத்துகிறாரோ அப்படியானவர்களுக்கு இவர்கள் ‘காபிர்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.
இப்படியானவர்கள் அஹ்லுஸ்ஸுன்னாக்களிடம் (மறுமையில்) அல்லாஹுத்தஆலா நாடினால் அவர்களை கிருபையால் மன்னிப்பான். நாடினால் நீதத்தினடிப்படையில்பாவத்திலிருந்து தூய்மையாகும் வரை அவனைத் தண்டிப்பான். பின்பு அவரை சுவனத்திற்கு மாற்றுவான்
ஆனால் இபாழியாக்களைப் பொருத்தவரை அவர்கள் பெரும்பாவம் செய்தவன் நரகத்தில் நிரந்தரமாகஇருப்பார்கள் என்று கூறுகின்றனர். பாவிகள் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்ற ஹவாரிஜ்கள், முஃதஸிலாக்களுடைய கொள்கையில் இவர்களும் உடன்படுகின்றனர்.

10-ஏகத்துவவாதிகளில் பெரும் பாவம் செய்தவர்களுக்குறிய ஷபாஅதை மறுக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள்பாவிகள் அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் அவர்கள் நரகத்தில் இருந்து வெளியேறும் வரைஅவர்களுக்கு எவ்வித பரிந்துரையும் கிடையாது.

11-முஃமின்களின் தலைவர்களான உஸ்மான் இப்னு அப்பான்,முஆவியா இப்னு அபீஸுப்யான்,அம்ர் இப்னுல்ஆஸ் போன்றோரை இவர்களின் சிலர் கடிந்துகொள்கின்றனர்…
 
(இது போன்ற வழிகேடுகளில் இருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக)

மூலம்:islamqa.info

மொழிபெயர்ப்பு:அஹ்ஸன் அல்கமி(ஆசிரியர்:மர்கஸு அல்கமா,இலங்கை)
 
أحدث أقدم